Advertisement

                    துருவங்கள் 13

 

”மயக்கதில் இருக்கும் வள்ளியை பார்த்துகொண்டே இருந்தான் பாண்டியன்… அவனுக்கும்,வள்ளிக்கும் புதிதாகவும்,அவர்களின் இத்தனை வருடக் காதலுக்கு மிகப்பெரிய பரிசாகவும்,வரப்போகும் அவன்(ள்) குழந்தையை சுமக்கும், வள்ளியை காணும் போது அவனுக்குள் இருக்கும் மகிழ்ச்சியை மிகைப்படுத்தியது…,. ‘வள்ளியம்மா நீங்க எனக்கு கிடைச்ச வரம், நமக்குனு ஒரு குழந்தை வரப்போகுது, என்னை அப்பாவும், உங்களை அம்மாவும் சொல்லிக்கூப்பிட குழந்தை வரப்போகுது வள்ளியம்மா…, என் சந்தோஷத்துக்கு அளவே இல்லைங்க வள்ளியம்மா…, நம்ம காதலோட பரிசு வள்ளியம்மா…, நம்ம குடும்ப வாரிசுங்க வள்ளியம்மா… இந்த சேதுபதிபிள்ளையோட பரம்பரையில் பிறக்க போற அடுத்த வாரிசு வள்ளியம்மா.. எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க வள்ளியம்மா…’பாண்டியன் பேசிகொண்டிருக்கும் போதே வள்ளியின் விழி அசைய ஆரம்பித்தது…. அதை உணர்ந்த பாண்டியன்… அவள் கண்விழிப்பதற்க்காக பேச்சை நிறுத்தி அவன் காத்திருந்தான்… மெதுவாக கண்களை திறந்தாள் வள்ளி… “வள்ளியம்மா இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு, பார்த்து மெதுவா எழுந்திரிங்க வள்ளியம்மா..” வள்ளி எழுந்து அமர்வதற்க்காக உதவி செய்தான்… “அத்தான்.. என்னாச்சு… எதுக்கு மெத்தையில படுத்து இருக்கேன்…” வள்ளி கேட்க..

‘வள்ளியம்மா… நீங்க, அம்மா ஆகப்போறீங்க…, நான் அப்பா ஆகப்போறேன்… வள்ளியம்மா, வள்ளிக்கு ஏற்கனவே தெரிந்த விசயத்தை இவன் மிகவும் மகிழ்ச்சியாக அவளிடம் கூறினான்…, வள்ளியோ அவனுக்காக… “ என்ன அத்தான் சொல்றேங்க… நான் அம்மா…அம்மா.. ஆகப்போறேனா… நீங்க அப்பா அத்தான் எனக்கு எவ்வளோவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… அத்தான் உங்களுக்கு சந்தோஷ்ம் தானே…, சந்தோஷமா இருக்கேங்கீளா…, அத்தான்.., “ அவனிடம் கொஞ்சம் பொய்யாகவும், கொஞ்சம் உண்மையாகவும் அவனிடம் பேசினால்…. ‘வள்ளியம்மா… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, அவளின்  நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.., “அத்தான்.. உங்க கையை கொடுங்க அத்தான்…” பாண்டியனின் கையை எடுத்து அவளின் சேலை மறைவில் இருக்கும் வயிற்றில் மெதுவாக அவனின் கையுடன் சேர்த்து அவளின் கையையும் வைத்தால்… “அத்தான் நம்ம குழந்தை, உங்க காதலுக்கு பிற்க்கப்போற” வள்ளி அவனின் காதலை மட்டும் தனித்து கூற… வள்ளியின் வாயில் விரல் வைத்து… “நம்ம காதலுக்கு பிறக்கப்போற குழந்தை வள்ளியம்மா..” அவளின் காதலையைம் சேர்த்து கூறினான்… “உங்களைவிட என் காதல் உசந்தது இல்லை அத்தான்…, என்னைக்குமே என் அத்தான் என்மேல வச்சிருக்க காதல் தான் உசந்தது அத்தான்… அதுக்கு ஈடா என் காதல் இல்லை அத்தான்…,” வள்ளி, அவனின் காதலை உயர்ந்த இடத்தில் வைத்து பேசினால்… ’என்னங்க வள்ளியம்மா… உன் காதல், என் காதல்னு பிரிச்சு பேசுறேங்க… என்னைக்குமே நம்ம காதல் தான் உயர்ந்தது…,’ அவன் இருவரின் காதலும் உயர்ந்தது தான்  அவளுக்கு கூறினான்..

“அத்தான்… இந்த இடத்துல தான் குழந்தை இருக்கும்” வள்ளி அடிவயிற்றில் அவனின் கையோடு, அவளின் கையையும் வைத்து அவனுக்கு சொன்னாள்.. “அத்தான்.. குழந்த்தை இதயத்துடிப்ப கேக்குறீங்களா…,”.. அவனுக்குமேல.. மிகவும் மகிழ்ச்சியாக அவனிடம் பேசினால் வள்ளி,.. ஒருவாரத்திற்க்கு முன்பு அவனுக்காக காத்திருந்து இந்த மகிழ்ச்சியாக தருணத்தை கூறவேண்டும், வள்ளி காத்திருந்தாள்…, ஆனால் இங்கு நடந்த வேறு சில விசயங்கள், அவளை சொல்லவிடாமல் தடுத்துவிட்டது… ஆனால் அதற்க்கும் சேர்த்து வைத்து இன்று அவனுக்கும், இந்த சந்தோஷத்தை அதிகமாக வெளிப்படுத்தினால் வள்ளி…”

”வள்ளியம்மா… இப்போ எல்லாம் குழந்தையோட துடிப்பு கேக்காது… நாமா நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம் வள்ளியம்மா.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க வள்ளியம்மா…, நான் உங்களுக்கு குடிக்க கொண்டுவரேன்… பாண்டியன் அவளிடம் சொல்லிவிட்டு மெத்தையில் இருந்து எழும் போது வெடி சத்தம் காதை பிளந்தது…, அந்த சத்ததில் வள்ளி பயந்துகொண்டு எழ நினைத்த பாண்டியனை இறுக்கி அணைத்துக்கொண்டால்…, பாண்டியனுக்கோ வள்ளி கட்டிகொண்டது மகிழ்ச்சி என்றாலும்…, திடீரென்று பக்கத்தில் இருந்து வெடி சத்தம் கேட்க்கிறது… அவனுக்கு கோவமாகவும், இதனால் வள்ளிக்கும், குழந்தைக்கும் இந்த வெடி சத்தத்தினால் அதிர்வு ஏற்படுமோ என, அவன், வள்ளியின் காதை இறுக்கி மூடிக்கொண்டான்…, வெடியின் சத்தம் நின்றதும் “வள்ளியம்மா நீங்க இங்கவே இருங்க… நான் இப்போ வரேன்…”.. அவன் கோவத்தை அவள் முன் காட்டாமல்… அவளிடம் சொல்லிவிட்டு சென்றான்.., ஆனால் வள்ளிக்கு தான் அவனின் பற்றி தெரியுமே… தன் முன் கோவத்தை காட்டாமல்… பாண்டியன் இப்படி சென்றால்.. அவர்களை சும்மா விடமாட்டான் என்று… அதனால் அவளும் அவன் பின் சென்றால்…, இல்லையென்றால் அவன் கையால் அடிவாங்கும் போகும் அந்த நபர் இந்த உலகிலே இல்லை என்று அர்த்தம்….வள்ளி பின்னாடி வருவதை, பாண்டியன் கவனிக்கவில்லை..”

‘ஆனால், பாண்டியனுக்கும், வள்ளிக்கும் முன் அங்கு முத்தையா,மீனாட்சி, செல்வி,முருகவேல்… அனைவரும் இருந்தனர்…, வாசலில் நின்றிருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.. ஏனென்றால் வந்தது முத்தையா,மீனாட்சியின் பிள்ளைகள்.., கார்த்திகேயன்.., அந்த நேரம் பார்த்து…. அவனது செல்போனில் ஒரு பாட்டு பாட ஆரம்பித்தது…

கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட

வந்துருக்கிற உங்க நண்பன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

நாளை என்ன ஆகுமுன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கட்டுல சேவிங் இல்ல

கால நேரம் பாத்து காத்து வீசவில்ல
கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவர் தொல்ல

கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிசிடாத கிங்கு கிங்கு

கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்”

பாட்டு முடிந்ததும்… சிவகார்த்திகேயன் ஸ்டைலில் வணக்கம் வைத்து நின்றிருந்தான் கார்த்திகேயன்“அம்மாமாமா…. அப்பாபாபா… அவர்களை நோக்கி ஓடினான்.., எப்படி இருக்கேங்கமா.. மீனாட்சியை கட்டிபிடித்துகொண்டு கேட்டான்…., அப்பா… நீங்க எப்படி இருகேங்க, அவரையும் கட்டிபிடித்து கேட்டான்..”

‘நாங்க நல்லா இருக்கோம்… கார்த்தி, நீ எப்படி இருக்க…கார்த்தி…. படிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா….,தம்பி..’முத்தையா கேட்க…

“எல்லாம் எக்‌ஷாமும் நல்லபடியா முடிஞ்சதுப்பா…,அம்மா.. ஏன் என்னை பார்த்து முறைக்குறேங்க…,”

‘நீ மட்டும் வந்திருக்க… எங்க டா கீர்த்தி,… அவளைவிட்டுட்டு வந்துட்டயா…, தம்பிக்கு மட்டும் நீ கீர்த்தியவிட்டு நீ ஊருக்கு வந்தது தெரிஞ்சது உன்னை திருப்பி மும்பைக்கே அனுப்பிடுவான்…,’மீனாட்சி அவனை கோபமாக பேச..

“அந்த பயந்தாங்கோழி… அங்க ஒளிஞ்சுருக்கா பாருங்க…, கீர்த்திக்கு வரபோற வருங்கால மாமானாரே, மாமியாரே.. கொஞ்சம் அந்த வேப்பமரத்துக்கு பின்னாடி இருக்குற.. உங்க வருங்கால மருமகளை நல்லா பாருங்க…,” கார்த்திக், கீர்த்தி இருக்கும் இடத்தை காட்டினான்…

“அவ ஏன் டா அங்க இருக்குறா…” மீனாட்சி கேட்க..

’எல்லாம் , நான் போட்ட வெடிக்காகதான்மா…,’ கார்த்தி சொன்னதும், நால்வரும் அவனை பார்த்து முறைக்க தொடங்கினர்…

“நன்றாக காதை இறுக்கி பொத்திகொண்டு, வேப்பமரத்துக்கு பின்னே இருந்த கீர்த்தி… வெடி சத்தம் நின்றதும்… கொஞ்சம் கொஞ்சமாக, வெடி சத்தம் நின்றுவிட்டாதா.. கண்களை திறந்துகொண்டு பார்த்துவிட்டு… மரத்தின் பின்னாடி இருந்து வெளியே வந்தாள்…,அங்கு அம்மா,அப்பா,மாமா, அத்தை என அனைவரும் இருந்தை பார்த்ததும், அதிலும் கார்த்திக் அவர்களிடம் தன்னை பற்றி எதையோ கூறுவது போல்… தெரிய வேகமாக அவர்களை நோக்கி சென்றாள்”

‘அவள் கையில் வைத்திருந்த, பையை கொண்டு அவனை அடித்தாள் கீர்த்தி, “எருமை, எருமை… சொன்னேல…,எனக்கு வெடி சத்தம் ஆகாது, எனக்கு பயமுனு சொன்னேல கேட்டயா… சொல்ல, சொல்ல கேட்க்காம…, நீ ஊருல இருந்து வருவதற்க்காக… வெடி போட்டு நீயே உன்னை பெரிய இவனாட்டம் வரவேற்பு கொடுக்குற…,” அங்கு நின்றிருந்தவர்களை சுற்றி கார்த்திக் ஓட, அவனை அடிப்பதற்காக கீர்த்தியும் ஓடினால்…, ‘கீரி… எனக்கு மட்டுமா வெடி போட்டேன்… உன்க்கும் தானே சேர்த்து வெடிப்போட்டேன்… இதுக்காக என்னை அடிக்க வர்ர…, பாவம் அண்ணன்… விடுமா.. ஓடிக்கொண்டே அவளிடம் சமாதான செய்ய… “ நான் கேட்டேனா…, நானும் ஊருக்கு வரேன்… எனக்கு சேர்த்து வெடிப்போடுனு நான் கேட்டேனா.., பஸ் திண்டுகல் நிக்கும் போது… டீ குடிச்சுட்டு வரேனு தான போனா.. எப்போ எனக்கு தெரியாம வெடி வாங்குன… சொல்லு…ஆமா நீ எப்போ இருந்து எனக்கு அண்ணன் ஆனா…, நீ எனக்கு தம்பி.. நான் தான் உனக்கு அக்கா… அதை புரிஞ்சுக்கோ…” அவனைவிடாமல் துரத்தினால்… ‘அது… நீ ஒரு பாட்டிக்கும் உதவி செய்யப்போகும் போது நான் வெடி வாங்கிட்டு… பையில வச்சுட்டேன்…, ஓய் கீரி… ரெண்டு நிமிசத்துக்கு பின்னாடி நான் பிறந்தா, உனக்கு தம்பியா… இல்லை…இல்லை, நீதான் என் தங்கச்சி…, நான் தான் அண்ணன்…’ அவன் சொல்லிகொண்டே பாண்டியன் மீது மோதிவிட்டான்… “அய்யோ அண்ணா…, போச்சு… கீர்த்து.. எஸ்க்கேப் டி.. அவள்.. மீனாட்சியின் பின் ஒளிந்துகொண்டால்.., ‘டேய்.. கார்த்தி… சில்வண்டுகிட்ட இருந்து சிங்கத்துகிட்ட மாட்டிகிட்டயே… கார்த்தி..,.., எங்க என் அண்ணிய காணோம்…, அண்ணி இருந்தா இந்த சிங்கத்துகிட்ட இருந்த ஈசியா தப்பிக்கலாம்…. கார்த்தி நினைத்துகொண்டிருக்க…., வள்ளியும் வந்தாள்…, எங்கள் அண்ணி வாழ்க,வள்ளி அண்ணி வாழ்க. கார்த்தி, பாண்டியனை மோதிவிட்டு, இவ்வளவு நேரம் மனசுகுள்ளேயே பேசிக்கொண்டிருந்தான்…

“கார்த்தி… எப்படி இருக்க…, இப்போ தான் வந்தியா…, எங்க கீர்த்திமா…,” வெடி வெடித்தவன் மீது ஏற்ப்பட்ட கோபம், தன் தம்பியை பார்த்ததும்… அதை மறந்து ஊரில் இருந்த வந்த கார்த்திக்கை பார்த்ததும்  மகிழ்ச்சியில் அவனை வரவேற்றான்…,”

‘நல்லா இருக்கேன் அண்ணா… நீங்க எப்படி இருக்கேங்க…, கீர்த்தியும் என்கூட தான் வந்தா…’. அவனிடம் கூறினான்..

“கீர்த்திமா…, பாண்டியன் அழைக்க மீனாட்சியை பார்க்க…, அவளோ, மீனாட்சியின் பின்னிருந்து வெளியே வந்தாள்…,  “ கீர்த்திமா… எப்படி இருக்க…, நல்லபடியா படிப்ப முடிச்சுட்டியா,… ஏன் உடம்பு மெலிஞ்சு போயிருக்க… அங்க நல்ல சாப்பாடு கிடைக்கலையா.., என்னமா.. ஏன் அமைதியா இருக்குற…., அண்ணா.. உன்னை படிக்க மும்பை படிக்க அனுப்பினதுக்கு கோபமா… இல்லை அண்ணா… படிப்பு முடியும் வரை ஊரு பக்கம் வரக்கூடாதுனு சொன்னதுக்கு கோபமா… சொல்லுமா கீர்த்தி…. சரி அந்த கோபம் போக கீர்த்திகிட்ட அண்ணே சாரி கேக்குறேன்… “சாரி கீர்த்திமா” அவன் காதுகளை பிடித்துகொண்டு கீர்த்தியிடம் மன்னிப்பு கேட்டான்… பாண்டியனின் செயலை பார்த்து… அனைவரும் வியந்தனர்…, செய்த தவறுக்கு மட்டுமே மன்னிப்பு கேட்ப்பானே தவிர…, அவன் கோபத்துக்கும், தங்கை பேசாமல் இருந்தற்க்கும் சேர்த்து மன்னிப்பு கேட்பது இதுவே முதல் முறை…., அதுவரை பாண்டியன் முன் தலை குனிந்து நின்றவள்…., தன் அண்ணன்.., தன்னிடம் மன்னிப்பு கேட்பதை பார்த்ததும்…, பாண்டியனின் கையை காதில் இருந்து எடுத்துவிட்டு “என்ன அண்ணா…, நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்குறேங்க…, எனக்கு உலகம் தெரியனும், வெளி ஆட்களோட பழகனும், எனக்குள்ள ஒரு தைரியம் வரனும் தானே… என்னை படிக்க அனுப்பினேங்க… நானும்  நல்லபடியா படிப்பு முடிச்சுட்டு வந்துட்டேன்…அதுவும் இல்லாம என்னை மட்டுமா அங்க படிக்க அனுப்பினேங்க… கார்த்திக்கையும் சேர்த்து தானா அனுப்புனேங்க…” பாண்டியனிடம் சகஜமாக பேசினால்…

“எப்படி இருக்கேங்க அண்ணா…,”

‘நல்லா இருக்கேன்மா…., நீ எப்படி இருக்க’

(கார்த்திகேயன்,கீர்த்திகா இருவரும் முத்தையா, மீனாட்சியின் பிள்ளைகள், இரட்டை பிறவிகள், இருவருக்கும் பாண்டியன் என்றால், அதிக பயம், கடலளவு அன்பு, அதிலும் வள்ளி என்றால் கீர்த்திகாவின் இரண்டாவது அன்னைப்போல்…,மீனாட்சியின் கண்டிப்பு செல்லுபடியாகவில்லை என்றால், வள்ளியின் அன்பு கண்டிப்பு சொல்லுபடியாகும், பள்ளி படிப்பை முடித்த இவர்கள் இருவரையும் கல்லூரி படிப்பிற்க்காக… பாண்டியன் தனக்கு தெரிந்த நண்பர் மூலம் மும்பை யுனிவெர்சிட்டியில் இவர்களுக்கு சீட் வாங்கிகொடுத்து படிக்க அனுப்பியவர்கள் படிப்பு முடிந்த பின் தான் இந்த ஊருக்கு வரவேண்டும் என்று கட்டளையும் இட்டான் பாண்டியன்…, இதில் கீர்த்தி மட்டும் படிக்க போகமாட்டேன் என அடம்பிடிக்க, வள்ளி தான் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள் பாண்டியனின் கல்யாணத்திற்க்கு கூட கார்த்தியும்,கீர்த்தியும் வரவில்லை… ஆனால் பிரகாஷ் தான் பாண்டியன், வள்ளியின், கல்யாணத்தை வீடியே மூலம் அவர்களுக்கு ஒளிபரப்பினான்…)

“நல்லா இருக்கேன்மா..,”கீர்த்தியை பார்த்ததும் அவனுள் இருக்கும் தங்கையின் பாசம் கண்களில் இருந்து கண்ணீரால் வெளிவந்தது… இதை பார்த்த வள்ளி… பாண்டியனின் பக்கம் வந்தாள்.

“ஹ்ம்ம்…. வந்ததில்ல இருந்து…. ரெண்டு பேருக்கும் அண்ணா தான் நினைப்புல இருக்கு போல…, வீட்டுக்கு வந்திருக்கவங்களையும், இனி புதுசா வரப்போகிறவங்களை கவனிக்கமாட்டாங்க…, இல்லைம்மா…” வள்ளி, அவள் அன்னையிடம் கூறினால்..

‘ஆமா… ஆமாம் வள்ளி.., கீர்த்திக்கு இந்த செல்வி அத்தைகூட நினைவு இல்லை போல…,’ செல்வியும் சேர்த்து கேலி செய்ய…,

“அண்ணி….. நாங்க உங்களை மறப்போமா….,” கீர்த்தியும், கார்த்தியும் ஒரு சேர்ந்தா போல் பேசிகொண்டே வள்ளியை நோக்கி சென்றனர்…. “எப்படி இருக்கீங்க அண்ணி…”

“நல்லா இருக்கேன், கீர்த்து, கார்த்தி, நீங்க எப்படி இருக்கீங்க…, நல்லா சாப்பிடுறேங்கல…, ”

‘அந்த ஊரு சாப்பாடு சாப்பிட்டு, நாக்குல உணர்ச்சியே இல்லை அண்ணி, நீங்க காரமா, வைப்பேங்கள…குழம்பு, சாதாம், அது செஞ்சு தாங்க அண்ணி…,’ கார்த்தி கேட்க…

“டேய்.. வந்தவுடனே அண்ணிய வேலை வாங்குற..,இருடா யாரோ புதுசா வரபோறாங்களா… அது யாருனு கேட்ப்போம்… அண்ணி யாரு புதுசா வரபோறாங்க… சொல்லுங்க அண்ணி”

“வள்ளி மாசமா இருக்கா, கீர்த்தி…,” செல்வி சொல்ல…

“அண்ணீஈஈஈஈ…., கீர்த்தி கத்திகொண்டே வள்ளியை கட்டியணைத்தால்…, கார்த்தியோ பாண்டியனை கட்டியணைத்து வாழ்த்து கூறினான்…., அப்போ நான் அத்தையாக போறேன்…., நான் சித்தப்பா ஆகப்போறேன்…., இருவரும் சொல்லிகொண்டே.. கார்த்தி ”அண்ணா இந்த பாட்டு உங்களுக்காக நான் டெடிகேட் பண்ணுறேன்” பாண்டியனுக்கும்,வள்ளிக்கு ஒரு பாட்டை தனது செல்போனில் போட்டுவிட்டான்..

ஜூன் ஜூலை மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்
ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
ப்ரீ கே ஜி பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்
இனிஷியல் கேட்டுத்தான் ஆது மெல்ல சிரிக்கும்

ஜூன் ஜூலை மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்

வானதின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில்
நீ என்ன தொட்டாக்கா பொன்னு பொறப்பா

பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போர நேரத்தில்
நான் உன்ன தொட்டாக்கா பையன் பொறப்பான்

மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில்
நாம செய்தா அட ரெட்ட புள்ளதான்

சீனத்து பொன்னும்தான் அடி ஒரே நேரத்தில்
அஞ்சாறு பெத்தாலாம் அத தாண்ட வேண்டாமா

ஜூன் ஜூலை மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்

கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்
பொன்னுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்

மீனுக்கு மீனுக்கு பாசிகண்டா சந்தோஷம்
ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்

தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்

ஏட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்

தாய்பாலு தரம்போது இந்த ஜென்மம் சந்தோஷம்

இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்

ஜூன் ஜூலை மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்
ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
ப்ரீ கே ஜி பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்
இனிஷியல் கேட்டுத்தான் ஆது மெல்ல சிரிக்கும்”

அந்த பாடலில் சில வரிகள்.. பாண்டியன், வள்ளியை குறிப்பது போல் இருக்கின்றது…, என பாண்டியன் நினைக்க… வள்ளியோ…. என்றும் இவர்களின் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் கீர்த்திகாவும்,கார்த்தியும், பற்றி நினைத்துகொண்டால்

’கார்த்திக்,கீர்த்திகாவும் ஊருக்கு வந்தது மகிழ்ச்சி என்றாலும்.., இன்று தான் பஞ்சாயத்து முடிந்தது் அதை பற்றி இவர்கள் கேள்விப்பட்டால்…என்ன செய்வது என முத்தையாவும்,மற்ற மூவரும் சிந்தனைக்கொள்ள…., முத்தையாவின் முகத்தை பார்த்த வள்ளி.. அவரின் அருகே சென்று “எதை பற்றியும் இப்போ நினைக்காதிங்க மாமா… அவங்ககிட்ட நேரம் பார்த்து நானே எடுத்து சொல்லுறேன்… இப்போ தான் ஊருக்கு வந்திருக்காங்கா.. கீர்த்திக்கு நடக்கபோற நல்ல காரியத்தை நாமா ஆரம்பிக்கனும் மாமா.., அதுல இவங்களோட கவனம் இருந்தா…. மற்றதை இவங்க கவனத்துக்கு சென்றாலும் அதை கண்டுக்கமாட்டாங்க மாமா.., கவலைப்படாம இருங்க…’ வள்ளி, முத்தையாவுக்கும் எடுத்து சொன்னால்…

“சரிமா…, இனி கீர்த்தி,மாறன் கல்யாணத்தை ஆரம்பிக்கனும், அதுக்கான வேலையை பார்க்கிறேன்…. நாளைக்கு திருமூர்த்தி ஐயாவும் வராங்க அதுனால அவர் முன்னாடியே இந்த நல்ல விசயத்தை பேசலாம்…” அவர் வெளியே சென்றார்..

’ஓய் வாலுங்கலா… போதும் உங்க அன்பு மழையில நனைஞ்சது… முதல போய் உங்களை சுத்தம் பண்ணிட்டு வாங்க  சாப்பிடலாம்..’ வள்ளி அவர்களை அனுப்ப..

“இருங்க அண்ணி, என் அத்தையும், மாமாவும்  இருக்காங்கா… அவங்ககிட்ட பேசவேயில்ல… பேசிட்டு வந்திரேன்” கீர்த்தி சொல்ல… “உங்க அத்தையும், மாமாவு எங்கயும் போகமாட்டாங்க… இங்க தான் சாய்ந்திரம் வரை இருப்பாங்க போங்க போய் குளிச்சிட்டு வாங்க….” அனுப்பி வைத்தாள்.

” வாம்மா…, வந்து உக்காரு…, நீ சாப்பிடுவதற்க்கு நான் வகை, வகையா செஞ்சுருக்கேன்… வாம்மா.. இப்படி வந்து உட்க்காரு… “ ப்ரியாவை அழைத்து வந்து டைனிங் டேபிளின் சேரை இழுத்து போட்டு அவளை அமர வைத்தார்… ‘ஏன் மா தயங்குற… இது தான் உன்வீடு…, நீ பிறந்த வீடுனா அது இது தான்… உன் அம்மா வாக்கப்பட்டு வந்த வீடு, உன் அப்பா பிறந்த வீடுனா.. உன் வீடும் தானே…’ அவளின் தயக்கதை போக்கினார்..

‘அவள் முன் தட்டை வைத்து… கொஞ்சம் சாதம் வைத்து, குழம்பு ஊற்றி, காய் பொரியல் வைத்து அவரின் கையால் பிசைந்து… ஒரு கவளம் எடுத்து அவளின் அருகில் கொண்டு சென்றார்.., அவளும் அதை மறுக்காமல் வாங்கி கொண்டால்…. ஒவ்வொரு முறையும் திருமூர்த்தி ஊட்டுவிடும் போதும், ப்ரியாவிற்க்கு தந்தையின் பாசம் கிடைத்தது….. இதை பார்த்த பிரகாஷ்…, முதன் முதலாய் தந்தையிடம்  இருந்து விலகியது தவறோ எனத் தோன்றியது….ஏனென்றால் பிரகாஷ்க்கு இது நாள் வரை அவனுக்கு சாப்பாடு ஊட்டியதும் இல்லை, இப்படி பாசமாக பார்த்ததும் இல்லை.. பிரகாஷிற்க்கு நினைவு தெரிந்த நாள் முதல் இது போல் திருமூர்த்தி அவனிடம் நெருக்கமாக பழகியதும் இல்லை… அதனால் தான் பிரகாஷ் இன்று ப்ரியாவிற்க்கு சாப்பாடு ஊட்டுவதை பார்த்ததும் அவனுள் இருக்கும் ஏக்கம் வெளியே தெரிய ஆரம்பித்தது…. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தானும் அவரிடம் சென்று “எனக்கும் ஊட்டிவிட வேண்டும்” எனக் கேட்டுவிடுவோமோ என பிரகாஷ்க்கு தோன்றிவிட்டது… அதை தவிர்க்க வந்த வழியே சென்றான்…

“எனக்கே ஒரு நிமிசம் இந்த பொண்ணு தாமரை பெரியம்மா பொண்ணு தானு கொஞ்சம் சந்தோஷ்மாவும், கொஞ்சம் பயமாகவும் இருந்துச்சுண்ணே…., அப்புறம்.. அங்கு பஞ்சாயத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லிமுடித்தாள் மலர்… அப்புறம் என மலர் அடுத்து பேச ஆரம்பிக்கும் போது அவளது செல்போனுக்கு அழைப்பு வந்தது…. அதில், ”மை மாமு”  பிரகாஷின் அழைப்பை பார்த்ததும் மலருக்கு பக்கத்தில் தென்னவனை பார்த்தாள்.. “சரி பிரகாஷ்கிட்ட பேசு நான் கிளம்புறேன்…” அவன் மலரிடம் சொல்லிவிட்டு கிளம்ப…, மலருக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது…”

“சொல்லுங்க மாமா… இன்நேரத்துல போன் பண்ணிருக்கீங்க, எதாவது முக்கியமான விசயமா…” அவள் கேட்க… அந்த பக்கம் இருந்து அமைதியே பதிலாக கிடைத்தது…. “மாமா.. போன் போட்டுட்டு இப்படி அமைதியா இருக்கேங்க… சொல்லுங்க மாமா…”மலர் பேச… அவனோ ஒரு பதிலும் பேசாமல் இருந்தான்… “மாமா ஏன் இப்படி போன் போட்டு அமைதியா இருக்காங்க.., ஒரு வேலை அவங்க மனசுல ஏதோ ஒன்னு இருக்கு… இப்படி கேட்டா மாமா சொல்லமாட்டாங்க” மலர் நினைக்க… அந்த பக்கம் இருந்திருந்து பேசினான் பிரகாஷ்… “எனக்கு சாப்பாடு ஊட்டுவிடுவியா தங்கம்…” அவன் கேட்டதும் அவளுக்கு புரியவில்லை…  “என்ன மாமா, என்ன சொல்லுறீங்க எனக்கு புரியலை..”.. ‘எனக்கு இப்பவே நீ சாப்பாடு ஊட்டிவிட வரனும் தங்கம்..’ கொஞ்சம் கொஞ்சமாக மலருக்கு புரிய ஆரம்பித்தது… “எங்க இருக்கீங்க மாமா”.. மலர் கேட்டால்.. “மாங்கா தோப்புல இருக்கேன்” பிரகாஷ் சொன்னது தான் தாமதம் மலரோ, போனை அணைத்துவிட்டு…, சமையல் அறைக்கு சென்று பிரகாஷ்க்கு பிடித்த உணவுகளை அறை மணி நேரத்தில் சமைத்து எடுத்துகொண்டு் மாங்கா தோப்புக்கு சென்றாள்.

’வீட்டில் இருந்து வெளியே வந்தவன்.. அவனுக்கு மிகவும் பிடித்த மாந்தோப்புக்கு சென்றான்… அங்கு இருந்தால் அவனின் அன்னை கூடவே இருப்பது போல் ஒரு உணர்வு…, அங்கு வந்தவன்.. திருமூர்த்தி பிரியாவிற்கு ஊட்டியதை நினைத்துகொண்டிருந்தவன்.., மலருக்கு உடனே போன் செய்து அவளிடம் கேட்டால் தன் நிலைமையை புரிந்துகொள்வாளா. என்று தான்… நினைத்தான்.. ஆனால் தன் முன் தூக்கு வாலியுடன் நிற்பாள் என கனவிலும் அவன் நினைக்கவில்லை…. “எழுந்திரிங்க மாமா…, எழுந்து வாங்க சாப்பாடு கொண்டுவந்திருக்கேன்..”.. ‘ஏய் இந்த நேரத்துக்கு ஏன் டி இங்க வந்த…’ பிரகாஷ் தன் வருத்ததை மறைத்துகொண்டு அவளை திட்டினான்… “நீங்க இப்படி சொன்னா கேட்கமாட்டீங்க…  எழுந்திருங்க…” மலர், பிரகாஷின் கையை பிடித்து இழுத்துகொண்டு அந்த மாந்தோப்பின் வீட்டுக்குள் சென்றாள்…, “மலரு இந்த நேரத்துல நீ இங்க இருக்குறதை யாரவது பார்த்தா நம்ம குடும்பத்துக்கு தான் பிரச்சனை… சொன்னா கேளுடி… வீட்டுக்கு போ…” அவன் சொல்ல, அவளோ, கையோடு கொண்டுவந்த சாப்பாட்டு வாலியில் இருந்து ஒவ்வொரு பதார்த்தையும் எடுத்து வைத்தால்.. இலையில்… “மலரு.. ஏதோ நினைப்புல உன்கிட்ட பேசிட்டேன் … இங்க இருந்து கிளம்புமா…, உன் அப்பா பார்த்தாங்கனா என்னை தான் தப்பா நினைப்பாருடி” அவன் பாட்டு பேசிகொண்டிருந்த போது இலையில் சாப்பாட்டை போட்டு அதை பிசைந்து கையில் எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்…, தான் பேசுவதை பொருட்படுத்தாமல் இவள் செய்வதை பார்த்தவன்… மீண்டும் அவளை பேச ஆரம்பிக்க அந்த இடைவேளையை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு அவனுக்கு ஊட்டிவிட்டாள்…, அவள் பாங்காய் ஊட்டுவதையும், தனக்கு பிடித்த சாம்பார்,சாதம்,கேரட் பொரியல், என அவனுக்கு பிடித்த சமையல் செய்து அவனுக்காக அந்த இரவு நேரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இவன் ஏக்கத்தை போக்க தன்னால் முடிந்த அளவு அவனுக்கு ஆறுதல் தந்தாள் மலர்… அவனுக்கு ஊட்டிவிட்டு முடித்ததும், கைகளை கழுவி விட்டு, தண்ணீர் கொண்டு அவனின் வாயை துடைத்துவிட்டு, தன் தாவணி முந்தானையை கொண்டு அவனின் வாயை துடத்துவிட்டாள்…., இந்த செயலால் பிரகாஷுக்கு தன் தாய் இருந்திருந்தால் இவ்வாறு தான் தனக்கு செய்திருப்பார்… என நினைத்துகொண்டான்..

“சரிங்க மாமா…நான் கிளம்புறேன் வீட்டுக்கு போங்க, இனி எப்போ உங்களுக்கு என் கையால ஊட்டிவிடனும் மனசுல நினைச்சா நான் உங்க முன்னாடி இருப்பேன்.. எதை பற்றியும் நினைக்காம வயிறு நிறைஞ்சதுல மனசும் நிறைஞ்சுருக்கும், அதுனால நல்ல தூக்கம் வரும்…, போய் தூங்குங்க.. மாமா.., நான் இருக்கேன் மாமா, அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வருத்தம்…, எதுனாலும் மாமாகிட்ட மனசுவிட்டு பேசுங்க எல்லாம் சரியாகிடும் மாமா.. நான் கிளம்புறேன் அண்ணா இன்நேரம் வந்திருக்கும்,” மலர் பேசிமுடிக்க வெளியில் பைக்கின் ஹாரன் சத்தம் கேட்டது…, மலரோ வருகிறேன் என்பது போல் பார்க்க… பிரகாஷோ.., மலரின் கையை பிடித்துகொண்டு “என் அம்மா இருந்திருந்தா என் ஏக்கத்தை புரிஞ்சுருப்பாங்க, அதே மாதிரி தான் நீயும், என் அம்மாவோட முகத்தை இன்னைக்கு தான் உன் மூலமா பார்க்குறேன் தங்கம், பார்த்து போயிட்டு வா… சீக்கிரமே நம்ம கல்யாணம் நடக்கும்…” அவளிடம் சொன்னான்…, அவளும், ”அந்த நாளுக்காக தான் காத்திருக்கேன் மாமா” சொல்லிவிட்டு, அவனை பார்த்துகொண்டே வெளியே சென்று, தென்னவன் கூடவே வீட்டுக்கு சென்றால்..’

“இது தான் உன் அறை, இங்க உன்னோட எல்லா பொருளையும் வைக்க இடம் அதிகமா இருக்கு, நாமா, நாளைக்கு முத்தையா வீட்டுக்கு போறோம் அப்படியே உன் பொருளையும் எடுத்துட்டு வரலாம்… அதுவரை இதோ இங்க இருக்குற துணியை போட்டுக்கோ.. இதெல்லாம் வள்ளி தான் வாங்கி கொடுத்துச்சுமா… நேரமாச்சு நீ படுத்து தூங்குமா தெய்வா… நாளைக்கு பேசலாம்.” அவளிடம் சொல்லிவிட்டு திருமூர்த்தி சென்றுவிட்டார்.. ஆனால் இவளுக்கு தான் தூக்கமே வராமல் புரண்டு, புரண்டு படுத்துகொண்டிருந்தால்.., இடையில் ஏதோ சத்தம் கேட்டு அவளின் அறையைவிட்டு வெளியே வந்தால்.., அங்கு பிரகாஷ் அவனது அறைக்கு செல்வதை பர்த்ததும்.. அவனை நோக்கி சென்றால்…, “பிரகாஷ்… இந்த நேரத்துல எங்க இருந்து வர்ர… சாப்பிட்டயா…எனக்காக நீ இருப்பேனு சொன்னேல… ஆனா நீ என்னை வந்து பார்க்கவேயில்லை…”.. பின்னிருந்து பிரியாவின் குரல் கேட்டதும் திடீரென்று திரும்பி பார்த்தான்… அதற்க்குள் அவள் பேச ஆரம்பித்துவிட்டாள்…

‘நீ இருந்த வீடு முத்தையா மாமா வீடு, அப்படி இருக்க… உனக்கு எந்த குறையுமில்லாம பார்த்துக்க வள்ளி இருக்கும் போது நான் வந்து உன்னை பார்த்தா அது நல்லா இருக்காது, அதான்…, வேற ஒன்னுமில்லை பிரியா.., நீ சாப்பிட்டயா…”

‘ம்ம்.. சாப்பிட்டேன்.. நீ”

” ம்ம்ம் சாப்பிட்டேன்…, சரி நீ போய் தூங்கு, நாளைக்கு பார்க்கலாம்”

‘சரி பிரகாஷ்..’..அவள்சொல்லிகொண்டு சென்றால், போவதையே பார்த்தான்…, “இவள் என் சித்தாப்பாவின் மகள் எனத்தெரியாமல், அவரிடம் என்னவெல்லாம் பேசிவிட்டேன்…, தாமரை சித்தி மட்டும் இருந்திருந்தால்.. இன்நேரம் நன்றாக இருந்திருக்கும்.., முதலில் இருவரிடமும் நாளை மன்னிப்பு கேட்க வேண்டும்…” பிரகாஷ் மனதுக்குள் நினைத்துகொண்டு அவன் அறைக்கு சென்று படுத்து தூங்கிவிட்டான்…

“முத்தையாவின் வீட்டில்… அனைவரும் அமைதியாக இருந்தனர்…, ஏனென்றால், கீர்த்தி,மாறன் கல்யாணம் பற்றி பேசிமுடித்தவர்கள் அடுத்து தெய்வாவின் கல்யாணத்திலும், பிரகாஷின் கல்யாணத்திலும் வந்து நிறுத்தினர் அவர்களின் பேச்சு…., ஆனால் அதற்க்கு முன் வள்ளி தெய்வாவிடம் வாங்கிய சத்தியம்.. அப்பொழுது தான் முத்தையாவுக்கு நினைவு வந்தது…., அதை பற்றி வள்ளியிடம் முத்தையா கேட்க… வள்ளியோ ஒரு பெரிய அதிர்ச்சியை அவருக்கு வைத்தாள்…, வள்ளை சொன்னதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ந்தார்கள், ஆனால் ஒருவருக்கும் மட்டும் இதுவும் எனக்கு ஏற்கனவே தெரிந்த விசயம் என்பது போல் அங்கு நடந்தை, நடக்க போவதையும் விறுவிறுப்பாக பார்த்துகொண்டிருந்தார்.”

 

                                           துருவங்கள் தொடரும்……….

 

Advertisement