Advertisement

                துருவங்கள் 12

 

”புயல் வந்தால் கூட இவ்வளவு அமைதியாக இருக்காது…. ஆனால் அந்த பஞ்சாயத்தில் அனைவருமே அமைதியாக இருந்தனர்….தாமரைசெல்வியின் உண்மையும், தெய்வப்ரியா யாரென்றும்….அவள் யாருடைய சொந்தம் என்றும், அவளுக்கும், இந்த ஊருக்கும் சம்மந்தம் இருக்கிறது….., என்றும், பாண்டியன் கொஞ்சம், கொஞ்சமாக கூறிக்கொண்டு வந்தான்…”

‘பாண்டியா…. உன் பக்கம் இன்னும் வேற எதாவது சொல்ல வேண்டியது இருக்கா… இல்லை அவ்வளவு தானா…’ திருமூர்த்தி, பாண்டியனிடம் கேட்க…

“இருக்குங்க ஐயா… சொல்லுறேன்… ப்ரியாவோட அம்மாக்கு, நான் தான் கடைசியா கொல்லி வச்சேன்…, அதுகடுத்து… நானும்,பிரம்மாவும், ப்ரியாவ கூப்பிட்டு நம்ம ஊருக்கு வந்துட்டேம்….ஐயா…. நான்…  சென்னைக்கு போனதுல இருந்து.. நம்ம ஊருக்கு வந்தது வரை நடந்த அத்தனையும் இந்த பஞ்சாயத்துல சொல்லிட்டேன் ஐயா…. இனி ஊருக்காரவங்க எல்லோரும், பஞ்சாயத்துல எந்த முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் பாண்டியன் சொல்ல வரும்போதும்…. “நாங்கனு… என்னையும் சேர்த்து சொல்லுங்க அத்தான்” வள்ளி பாண்டியனை பார்த்து சொன்னால்…..பாண்டியனோ வள்ளி கூறியதை கேட்டு.. அவளை பார்த்துக்கொண்டு ‘அதுக்கு நாங்க சம்மதிக்குறோம்….. ஐயா.

‘என்னப்பா… பாண்டியன் பக்கம் இந்த நியாயத்தை சொல்லி முடிச்சாச்சு, இனி அந்த பொண்ணு.. தெய்வப்ரியா பக்கம் இருக்கும் நியாயத்தையும் கேட்டுட்டு… வள்ளிவோட முடிவும் என்னனு கேட்டுட்டு பஞ்சாயத்தோட தீர்ப்பு சொல்லிடலாம் என்னப்பா….. அந்த பொண்ணுகிட்ட இருக்க நியாயத்தை கேக்கலாமா…’ திருமூர்த்தி ஊர்மக்களிடம், கேட்டார்..’

“கேக்கலாம் ஐயா…..”

‘ தெய்வப்ரியா….. இங்க பாரும்மா… இது கிரமத்து பஞ்சாயத்து… பயப்படாம உண்மைய மட்டும் பேசனும், சரியா…சென்னையில என்ன நடந்தது….தெய்வப்ரியா, சொல்லுமா…’

“நான், என் அம்மா, சென்னைக்கு  வந்து நாலு வருசம் ஆச்சு….., நாங்க சென்னை வரதுக்கு முன்னாடி என் அப்பா எங்க போனாருனு தெரியலை…. அம்மாக்கிட்ட கேட்டா… வெளியூர்க்கு வேலை விசயமா போயிருக்காங்க… இன்னும் கொஞ்சம் நாளுல அப்பா வந்திருவாங்கனு சொல்லி என்கிட்ட சமாளிச்சாங்க….., ஆனா உண்மையில என் அப்பா எங்க போனாருனு எனக்கு தெரியாது……, நானும் என் அப்பாவ பற்றி கேக்குறதை விட்டுட்டேன்….., என் அம்மா சொந்தமா நர்ஸரி வச்சு அதில இருந்து வந்த பணத்துல தான் என்னை படிக்க வச்சாங்க…. படிச்சு முடிச்சதும், எனக்கு ஐ.டி. கம்பெனில வேலை கிடைச்சது…, அங்க தான் பாண்டியம் சாரையும்,பிரகாஷையும் பார்த்தேன்…, சொந்தம்,பந்தம்,ஃப்ரண்ட்ஸ், யாருமில்லாம வளர்ந்த எனக்கு… பிரகாஷ பார்த்ததும்… ஒரு நட்பு உணர்வு வந்தது….., நானும், பிராகாஷும்… நல்ல நணபர்கள் ஆனோம்… தினமும்… என் பொழுது பிரகாஷ்கூட போச்சு… அப்படி சந்தோஷமா இருந்த என் வாழ்க்கையில… திடீர்னு….ஒரு நாள், ஆபீஸ் கிளம்பும் போது… என் வீட்டுக்குள்ளயே வந்து என் அம்மா கழுத்துல கத்தி வச்சு… என்னை மிரட்டி…., என்னையும், என் அம்மாவையும், கடத்திட்டு போனான்… அவன்…, எனக்கு பேர்ரெல்லாம் தெரியலை ஐயா…, எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை…. யாருமில்லாம… இருந்த எங்களுக்கு, யாரும் காப்பாத்த மாட்டாங்கனு நினைச்ச நேரம்….என்னை ஒருத்தன்… கட்டையால அடிச்சதுல… நான் மயக்கம் ஆனேன்… அதுகடுத்து…. நான் முழிச்சு பார்த்தா ஹாஸ்பிட்டல இருந்தேன்… அங்க என்ன நடந்துச்சு… என் அம்மா எப்படி இறந்தாங்க, எனக்கு தாலி போட்டது பாண்டியன் சார்னு, என் அம்மாவுக்கு கொல்லி வச்சது, அங்க நடந்த அத்தனையும் எனக்கு பிரகாஷ் சொல்லி தான்…. தெரியும்….., ஐயா…”

‘அம்மா இல்லாத வலி எனக்கும் தெரியும்மா…, ஆனா உன்னை ஒரு நல்லவன் கையில ஒப்படைச்சுட்டு உன் அம்மா இறந்துட்டாங்க… ஆனா அவங்களுக்கு தெரியாதுல, நல்லவனு நினைச்சு… பாண்டியனை கல்யாணம் செஞ்சு வச்ச உன் அம்மாவுக்கு… அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனா விசயம் தெரியாது… உன்மேலையும், உன் அம்மா மேலையும், தவறு இல்லைனு தெரியுது,’

“ஊர் மக்களுக்கு ஒரு விசயம் சொல்லுறேன்…. இரண்டு கல்யாணம் ஏன் அந்த காலத்துல இருந்து இப்போ வரை செஞ்சுகிறாங்கனா… முதல் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாம,… இறந்தாலும், அவங்களுக்கு… குழந்தை பாக்கியம் இல்லனாலும், முதல் குழந்தை பிறந்து அந்த பொண்ணு இறந்தாலும்… தான் இரண்டாவது கல்யாணம், செய்வாங்க….அதுவும், முதல் மனைவி சம்மத்தோட… அந்த இரண்டாவது கல்யாணம் நடக்கும்…., இதுவரை நம்ம ஊருக்குள்ள… இரண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க… ஒன்னு முத்தையாபிள்ளையும், கந்தாசாமியும், தான் இரண்டாவது கல்யாணம் செஞ்சுகிட்டாங்க…., முத்தையாவும், கல்யாணம் செஞ்சது… காமாட்சியோட சம்மத்தோட தான்…, அதே மாதிரி தான்.. கந்தசாமியும்… கல்யாணம் செஞ்சுகிட்டாங்க… இப்போ பாண்டியன்.. யாரோட சம்மதமும் இல்லாம… கல்யாணம் பண்ணிட்டான்…. அதுக்காக… பாண்டியன் செய்யது சரினு சொல்லல…., இப்போ நான் எடுக்க போற முடிவ விட, அந்த பொண்ணு, தெய்வப்ரியா என்ன முடிவு பண்ணிருக்குனு கேட்கலாம்…. என்னப்பா.. நான் சொல்லுறதுல எதுவும் தவறு இருந்தா சொல்லுங்கப்பா…” திருமூர்த்தி இரண்டு கல்யாணத்தினை ஆதரிக்கவும், எதிர்க்கவும் இல்லை என்ற முடிவை கூறினார்  ஊர்மக்களின் முடிவையும் கேட்டார்..

‘ஐயா… என்னைக்கு, உங்க முடிவை நாங்க எதிர்த்தோம்,… நீங்களும், முத்தையா ஐயாவும்… சொல்லுற முடிவு என்னைக்குமே தப்பாகாதுங்க ஐயா… அந்த பொண்ணோட முடிவை கேக்கலாம் ஐயா….’

“ தெய்வப்ரியா… நான் இப்போ சொன்னதை எல்லாம் கேட்டுருப்ப… நல்லா யோசிச்சு, தெளிவா ஒரு முடிவு நீ எடுக்கனும், நீ சொல்லுற முடிவுல தான்.. நான் பஞ்சாயத்தோட தீர்ப்ப சொல்லப்போறேன்… சொல்லுமா… உன் முடிவு என்ன, பாண்டியன் கூட சேர்ந்து வாழ முடிவு செஞ்சுருக்கியா… எதுனாலும் சொல்லுமா…” திருமூர்த்தி, தெய்வப்ரியாவிடம் கேட்க…

‘தெய்வப்ரியாவோ… ஒரு நிமிடம் கண்களை மூடிகொண்டு… யோசித்தால்.. “என்னை அரவணைச்சு அழைச்சுட்டு போன.. அந்த வள்ளியக்காவுக்கு என்னால முடிஞ்சது, பாண்டியன் சார விட்டு விலகிப்போறது தான் சரியான முடிவு, என் அம்மாக்கு தெரியாது, பாண்டியன் சார்க்கு,கல்யாணம் ஆனது, அப்படி தெரிஞ்சிருந்தா… பாண்டியன் சார் அஹ.. கட்டாயப்படுத்திருக்க மாட்டாங்க… என் ஒருத்தியால… அந்த, குடும்பத்துக்குள்ள எந்த பிரச்சனையும் வரக்கூடாது.. எனக்கு வள்ளி அக்காவோட வாழ்க்கை ரொம்ப முக்கியம், அவங்க வாழ்க்கையில நான் இடையில இருக்க கூடாது…. நான் விலகிப்போறது தான் சரி….தீர்க்கமாக முடிவெடுத்துகொண்டு, கண்களை திறந்தால்… நேராக… திருமூர்த்தி ஐயாவை பார்த்து… பேச ஆரம்பித்தால் “எனக்கு அவரோட வாழ முடியாதுங்க ஐயா…, இந்த கல்யாணம் நான் சுயநினைவு இல்லாம நடந்த கல்யாணம்… இதுல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை…. என் முடிவு இது தான் ஐயா”… பாண்டியனைவிட்டு முழுமையாக பிரிய தயரானால் ப்ரியா…, ப்ரியாவின் முடிவை கேட்டு… ஊர் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும்,. ப்ரியாவின் முடிவை கேட்டதும் சந்தோஷப்படுவதா… இல்லை.. சொந்த தங்கை மகள் தங்களைவிட்டு பிரிய தயராக இருக்கிறாளே… என அங்கிருந்த முத்தையாவின் குடும்பம்… நினைக்க…, பிரகாஷிற்க்கு ப்ரியாவின் முடிவும் சரி என்றாலும், அவளுக்கு இருக்கும் சொந்தத்தைவிட்டு பிரியாமல இருக்க வேண்டும் அவன் நினைக்க…வள்ளியின் மனநிலையோ வேறு சிந்தனையில் இருந்தது…. பாண்டியனுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வில் இருந்து தப்பியது போல் இருந்தது…..இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, திருமூர்த்தி ஐயா பேச ஆரம்பித்தார்..

’நல்லா யோசிச்சு தான் இந்த முடிவ எடுத்துருக்கியாம்மா… இதில எந்த மாற்றமும் இல்லையே…., பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லிட்டா உன் வாழ்க்கைய எங்க யாருலும் திருப்பி கொடுக்க முடியாதும்மா… இது தான் உன் முடிவாம்மா..’

”ஆமாங்க ஐயா… என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை….இந்த பஞ்சாயத்து தீர்ப்புல எனக்கு எந்தவிதமான மாற்றமும், இல்லைங்க ஐயா… என் முடிவ இந்த ஊர் மக்களுக்கும், உங்களுக்கும், தெரிவிச்சுட்டேன்.. ஐயா….”

‘சரிம்மா… உன் முடிவுல மாற்றம் இல்லைனா… எனக்கும், இந்த ஊர் மக்களும், இந்த முடிவ, நாங்க… ஏத்துகிறோம்… என்னப்பா… அந்த பொண்ணே சொல்லிருச்சு… இந்த கல்யாண வாழ்க்கையில விருப்பம் இல்லைனு… இப்போ பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லலாம…’திருமூர்த்தி ஊர்மக்களிடம் கேட்க…

“சரிங்க…. ஐயா..”

‘ஒரு நிமிசம் ஐயா…’வள்ளி,திருமூர்த்தியின் தீர்ப்பு வழங்கும் முன் இடையே குறுக்கிட்டால்..

“சொல்லும்மா…வள்ளி”

‘மன்னிச்சுக்கோங்க ஐயா…. உங்க தீர்ப்புல நான் குறுக்கிட்டதுக்கு,… நான், தெய்வாகிட்ட பேசனும்….’

“தீர்ப்பு சொல்லப்போற நேரத்துல…., அந்த பொண்ணுகிட்ட என்னமா பேசப்போற…, ‘உங்க முன்னாடி தான் ஐயா பேசப்போறேன்..’  ”சரி பேசும்மா…”

‘வள்ளியோ தெய்வப்ரியாவை நோக்கி சென்றால்…. “தெய்வா… உண்மையில என் அத்தான் கூட வாழ விருப்பம் இல்லையா… என் கண்ணப்பார்த்து சொல்லு,உனக்கு இந்த கல்யாணத்துல உடன்பாடு இல்லனு..” வள்ளி, ப்ரியாவை பார்த்து கேட்க.

“எனக்கு விருப்பம் இல்லைக்கா,…. இந்த கல்யாணத்துல உடன்பாடும் இல்லைக்கா…. ப்ரியா, வள்ளியின் கண்களைப்பார்த்து சொன்னால்… ‘அப்போ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தருவியா.. ப்ரியா…..’. “என்ன சத்தியம் அக்கா… சொல்லுங்க கண்டிப்பா நான் செய்யுறேன்..”… ‘தெய்வாவின்,  முன் வள்ளி தன் கையை நீட்டி, நான் பார்த்த மாப்பிள்ளைய நீ கல்யாணம் பண்ணிக்கனும்…. பண்ணிக்குவியா… சத்தியம் செய்வியா தெய்வா. எனக்கு, நீ சத்தியம் செஞ்சுகொடுத்தான் இந்த பஞ்சாயத்து தீர்ப்பு செல்லுபடியாகும்… தெய்வா,”ஒரு அதிர்ச்சியை வைத்தால் வள்ளி… திருமூர்த்திக்கே வள்ளியின் சத்தியம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது… ஆனால் தெய்வா… அதிர்ச்சியாகமல்…. வள்ளியின் கையில்… தன் கையை வைத்து… நீங்க பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் செஞ்சுக்க தயார் வள்ளியக்கா…. என சத்தியம் செய்து கொடுத்தால்… தெய்வா….”… ‘இந்த சத்தியத்தை நீ மீறினால்..’…. வள்ளி முடிக்கும் முன்… “என் உயிர் இருக்காது அக்கா…. நான் தாமரைசெல்வியோட பொண்ணு….. உங்களுக்கு செஞ்சுகொடுத்த சத்தியத்தை மீறமாட்டேன்.. அக்கா….”… தெய்வாவின் உறுதியான வார்த்தையில் வள்ளி ஒரு நிமிடம் திகைத்து தான் போனால்… வள்ளி.. திருமூர்த்தியிடம் தீர்ப்பை  வழங்குமாறு… அவரிடம் கூறிவிட்டு… தெய்வாப்ரியாவின் அருகிலேயே நின்றுகொண்டால் வள்ளி…’

“இரண்டு பக்கமும் தீர விசாரிசாச்சு….., பாண்டியன் பக்கம் முதல் தவறு இருக்கு, முதல் மனைவிக்கே தெரியாம கல்யாணம் செய்தது…,அதுக்கான தண்டனை… தெய்வப்ரியா கழுத்துல பாண்டியன் போட்ட தாலியை, பாண்டியனே கழட்டனும்…., அப்பறம் இந்த ஊர் மக்கள் உங்க முன்னாடி நான் மன்னிப்பு கேட்கனும்,..”

‘ஐயா… நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கனும்… உங்க தவறு இதுல என்ன இருக்குங்க ஐயா…’ ஒரு பெரியவர் கேட்க…

“என் பக்கம் தவறு இருக்க போயிதான் உங்க முன்னாடி மன்னிப்பு கேட்கிறேன்…”

‘அப்படி என்ன தவறுங்க ஐயா…??, ஊருக்கே நல்ல தீர்ப்பு வழங்குற நீங்க, ஊர் மக்கள் நலன் கருதி எது செஞ்சாலும், அதுல உங்க தவறுனு எதுவும் இல்லை… இப்போ முத்தையா ஐயாவ பஞ்சாயத்துக்கு அழைச்சது கூட எங்களுக்கு மனவருத்தம் தான் அதிகமா இருக்குங்க ஐயா… அப்படி இருக்க நீங்க எங்ககிட்ட மன்னிப்பு கேட்டா.. அது அந்தா சாமிக்கே பொருக்காதுங்க ஐயா…’

“ம்ம்ம்… என்மேல இவ்வளவு தூரம் நம்பிக்கை வச்ச உங்களுக்கு என்னைக்கு நல்லதுமட்டும் தான் செய்வேன்… ஆனா.. பஞ்சாயத்துல என் குடும்பமும் சம்மந்தப்பட்டு இருக்கே… அதுனால தான்… மன்னிப்பு கேட்க்கிறேன்… என் குடும்பமுனு நான் சொன்னது…. என் தம்பி குடும்பத்தை தான்…,” ஊர் மக்களுக்கு தெரியும் திருமூர்த்தி ஐயா யாரை தன் குடும்பம் என குறிப்பிடுகிறார் என்று…. “ என் தம்பி குருமூர்த்தியோட மனைவிதான், தாமரைசெல்வி, என் தம்பிக்கும்,தாமரைக்கும் பிறந்த பொண்ணு தான் இதோ நிக்குற பொண்ணு தெய்வப்ரியாகுருமூர்த்தி…, பாண்டியன், நடந்ததை சொல்லி முடிச்ச பின்னாடி… என் தம்பி குடும்பத்தை பேசலாம் நினைச்சேன்… ஆனா என்மேலையும், நான் வழங்குற தீர்ப்புமேலையும், நம்பிக்கை வச்சுருக்க உங்களுக்கு என்னால மனவருத்தம் உண்டாகக்கூடாது…. அதுனால தான் பாண்டியனுக்கு தண்டனையை வழங்கிட்டு உங்ககிட்ட உண்மையை சொன்னேன்… என்னை மன்னிச்சுருங்க மக்களே…..,.” திருமூர்த்தி ஐயா ஊர் மக்கள் அனைவரின் முன் எழுந்து நின்று, கைகூப்பி மன்னிப்பு கேட்டார்…

‘அதை பார்த்த ஊர்மக்களும், முத்தையாவின் குடும்பமும், திகைத்து, “அய்யோ ஐயா… என்ன செய்யுறேங்க….., தம்பி தான் அந்த பொண்ணு  தாமரைசெல்விகுருமூர்த்தியோட பொண்ணுனு… சொல்லிட்டாங்களே.., பின்ன என்னங்க ஐயா… இப்படி எங்க முன்னாடி கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்குறேங்க… ஐயா.. கையை இரக்குங்க…. என்னப்பா பார்த்துட்டு இருக்கேங்க… ஐயாக்கிட்ட சொல்லுங்கப்பா…”  பெரியவர்களும்,மக்களும் திருமூர்த்தி செயலை பார்த்து பதறிப்போனார்கள்….

”என்ன தான் பஞ்சாயத்துல நான் தீர்ப்பு வழங்குறவனாலும் இருந்தாலும், என் தம்பி குடும்பமும் என் குடும்பம் தானே… அப்போ நானும் உங்ககிட்ட மன்னிப்பு கேக்குறது தானே சரி…”

‘ஐயா…, உங்க மன்னிப்ப நாங்க ஏத்துகிறோம்… முதல… கையை கீழ இரக்குங்க ஊர் மக்கள், வருத்தப்படுறாங்க.., ஐயா… இப்போ நாமா பஞ்சாயத்தை பார்க்கலாம் ஐயா… நேரம் போகுதுங்க ஐயா…’ அந்த பெரியவர், திருமூர்த்தி ஐயாவை பஞ்சாயத்தின் பக்கம் திசை திருப்பினார்…

“சரியென்று அவர், பாண்டியா.. அந்த பொண்ணு கழுத்துல இருந்து… நீ போட்ட தாலிய உன் கையால எடுக்கனும், போப்பா பாண்டியா… பொண்ணு கழுத்துல இருக்க தாலிய எடுத்துட்டு வா….” திருமூர்த்தி ஐயாவும், பெரியவரும் கூறினார்கள்.

‘பாண்டியன்… அவர்கள் சொன்னதை கேட்டுவிட்டு, ப்ரியாவை நோக்கி சென்றான்…., ப்ரியாவோ.. அவனின் கையால் தாலியை எடுக்க போகும் நிகழவுக்காக காத்திருந்தாலோ என்னவோ… சுடிதாரின் உள்ளே இருந்த தாலியை வெளியே எடுத்துப்போட்டால்… அவளின் செய்கையை பார்த்திருந்த அனைவரும்… கொஞ்சம் அதிர்ச்சியாக பார்த்துகொண்டிருந்தனர்…, ஒரு பெண்ணோ… “இந்த பொண்ணுக்கு தைரியம் அதிகம் போல…, என்னதான் ஒருத்தன், இரண்டாவதா கல்யாணம் பண்ணிருந்தாலும், அவளுக்கும் புருசன் தானே… எந்த பொண்ணும் தான் கழுத்துல எப்படிப்பட்ட சூழ்நிலையில தாலி ஏறியிருந்தாலும், அந்த தாலியை விட்டுக்கொடுக்க மாட்டா…, தம்பி மூலமா தாலிய எடுக்க போறாங்க… ஆனா.. இந்த பொண்ணு அதுவே உள்ள இருக்குற தாலிய  வெளிய எடுத்து போட்டுயிருக்கு… உண்மையில ஐயாவோட பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை போல… எப்படியோ.. வள்ளி தாயி வாழ்க்கையில இந்த பொண்ணு இல்லையே அதுவே எனக்கு போதும்…” அந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்மனி பக்கதில் இருக்கும் ஒரு பெண்ணிடம் கூறிகொண்டிருந்தால்… ‘ப்ரியாவின் முன் பாண்டியன் நின்றிருந்தான்…, ப்ரியாவொ.. பாண்டியனை நேருக்கு நேராய் பார்த்துகொண்டு இருந்தால்… பாண்டியன், ப்ரியாவின் கழுத்தில் இருந்த தாலியை மெதுவாக எடுத்தான்…அன்று ப்ரியாவின் கழுத்தில், தாலியை போடும் போது அவனின் நுனி விரல்கூட படாமல் அந்த தாலியை போட்டுவிட்டான்… இன்றும்.. அவள் கழுத்தில் அந்த தாலியை எடுக்கும் போது அவளை நுனி விரல் தீண்டாமல் அவள் கழுத்தில் இருந்து தாலிய எடுத்தான்.., ‘பாண்டியா.. அந்த தாலியை, மீனாட்சிக்கிட்ட கொடுத்துருப்பா…இந்த தாலி பிறந்தவீட்டு சீதனம்…, அதுனால அங்க இருக்குறது தான் நல்லது..’ திருமூர்த்தி பாண்டியனிடம் இருந்த தாலியை அவன் அன்னையிடம் ஒப்படைக்க சொன்னார்…

’பாண்டியா… இனி உனக்கும், தெய்வப்ரியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அதாவது, நீ அந்த பொண்ணுக்கு புருசனும், இல்லை, அந்த பொண்ணு உனக்கு இரண்டாவது மனைவியும் இல்லை… , இன்னையில இருந்து நீ, வள்ளியோட புருசன், வள்ளி, உனக்கு மனைவி தான், இது என்னைக்கு மாறாது… பாண்டியா…, தெய்வப்ரியா என் குடும்பத்து பொண்ணு, அதுனால அந்த பொண்ணு என் வீட்டுக்கு அழைச்சுட்டு போறேன்… இது தான் இந்த பஞ்சாயத்தோட தீர்ப்பு, என்னப்பா… , என் தீர்ப்புல எதுவும் மாற்றம் இருக்கா, இல்லை, தீர்ப்பு மாற்றம் செய்யலாமா…. சொல்லுங்கப்பா…’ திருமூர்த்தி, மக்களிடம் தன் தீர்ப்பில் மாற்றம் இருக்கிறாத, எனக்கேட்டார்…

“இல்லைங்க ஐயா… உங்க தீர்ப்புல, என்னைக்கும் மாற்றம் இருக்க கூடாது, நீங்க சொன்ன தீர்ப்புல எங்களுக்கு முழு சம்மதம் ஐயா….., இதில மாற்றம் இல்லைங்க ஐயா..” ஊர் மக்களும், பெரியவர்களும்… ஒரு சேர கூறி்னார்கள்..

‘சரிப்பா… இத்தோட இந்த பஞ்சாயத்து முடிஞ்சது… ஊர் மக்களு, நீங்களும், பஞ்சாயத்து நடக்க ஒத்துழைப்பு கொடுத்ததுக்கு நன்றி… இனி அவங்க, அவங்க வேலைய பார்க்க போகலாம்… பஞ்சாயத்து கலைஞ்சுருச்சு,…போங்கப்பா.., முத்தையா… நாளைக்கு நான் என் பொண்ணோட உன் வீட்டுக்கு வரேன்…, பாண்டியா… எல்லோரையும் கூட்டிகிட்டு போப்பா…., நானும் கிளம்புறேன்….. வரேன்ங்க ஐயா…..’ பெரியவர்களும், மக்களும்… பஞ்சாயத்தின் நல்ல தீர்ப்பால் தங்களுக்குள் பேசிகொண்டே கலைந்தனர்…, முத்தையாவிடம், திருமூர்த்தி, நாளை வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டு, ப்ரியாவை அழைக்க சென்றார்….., பாண்டியன்.. முத்தையாவையும், மீனாட்சியையும், செல்வி,முருகவேல்,வள்ளி இவர்களை எல்லாம் அழைத்துகொண்டு சென்றான்…,

“திருமூர்த்தி, ப்ரியாவின் அருகில் சென்று, அவளை பார்த்தார்… “ப்ரியா… நம்ம வீட்டுக்கு போகலாமா…” அவளிடம் கேட்டார்.. ‘போகலாம்… என தலையசைத்து அவருக்கு பதில் சொன்னால்…..’.. “என்னை பெரியப்பானு கூப்பிடும்மா…. நீ என் தம்பி பொண்ணு, என் பொண்ணு மாதிரிம்மா…சரியா..”.. ‘சரிங்க பெரியப்பா….’.. அவரை உறவுமுறை சொல்லி அழைத்தால்… “வாம்மா… போகலாம்.” அவளை வீட்டுக்கு அழைத்து சென்றார்… திருமூர்த்தி… இதையெல்லா… அங்கு நின்று பார்த்துகொண்டிருந்த பிரகாஷ்க்கு, ப்ரியா தன்னுடைய, சித்தாப்பா மகளா.. அவனால் நம்பமுடியவில்லை….., அவனும், ப்ரியாவை காண வீட்டிற்கு சென்றான்…

’என் சொந்த தங்கச்சி பொண்ணு தான் தெய்வப்ரியானு தெரியாம இருந்திருக்கேனே…., பாண்டியா இதை ஏன் ஊருக்கு வந்த முதல் நாளே என்கிட்ட சொல்லல…, மீனா… என் தங்கச்சி தீடீர்னு எங்க போனானு தெரியாம நாம இருந்தோம்…, ஆனா.. அவ பொண்ணு மூலமா.. இங்க வந்திருக்கா.., அவ முகத்தை கடைசிவரை என்னால பார்க்க முடியாம போயிட்டேனே…., செல்வியையும்,தாமரையும் எந்த பாகுபாடு பார்க்கமா, வளர்த்தேன்…, அவளுக்கு மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளைய பார்த்து கல்யாணமும் பண்ணிவச்சேன் ஆனா… தாமரை கடைசிவரை நம்ம குடும்பத்தை பார்க்கமலேயே போய் சேர்ந்துட்டா…., வள்ளி.. நீ அந்த பொண்ணுமேல காட்டுன பாசத்தை கூட, நான் ப்ரியாமேல காட்டலையே… , இந்த பஞ்சாயத்துல தான் ப்ரியாவோட, குடும்பத்தை பற்றி எனக்கு தெரியவேண்டி இருக்கு,… இதுக்கு தான் கடவுள் என் தங்கச்சி பொண்ண.. என் வீட்டுல தங்க வச்சாறா…..’ முத்தையா…தாமரையின் பிரிவில் இவ்வளவு வருசம் இருந்த்தை அங்கிருந்த ஒவ்வொருவரிடம் சொல்லி வருத்தப்பட்டுகொண்டிருந்தார்….

“முத்தையா வருத்தப்பட்டுகொண்டிருக்கும் போது, முருகவேலு,செல்வியும் ‘என்னை மன்னிச்சுருங்க மாப்பிள்ளை, உங்கமேல தப்பு இருக்குனு நானும், என் மனைவியும் உங்களை பேசிட்டோம்…., வள்ளி உங்கமேல நம்பிக்கை வச்ச அளவுக்குகூட நாங்க வைக்கல…., மாப்பிள்ளை…. அதுக்கு எங்களை மன்னிச்சுருங்க மாப்பிள்ளை…”செல்வியும்,முருகவேலும்… பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்… ‘ஐய்யோ என்ன, மாமா… என்கிட்ட போய் மன்னிப்பு கேட்டுகிட்டு, நீங்க பெரியவங்க… நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்டா… அது எனக்கு மனசு சங்கடமா இருக்கு மாமா, அத்தை.. நீங்களும் தான்.., பாண்டியன் அவர்களை, சமாதானம் செய்தான்…

‘மாமா.. இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகலை…., ப்ரியா.. உங்க தங்கச்சி பொண்ணு தானு தெரிஞ்சிருச்சு…, நாளைக்கு திருமூர்த்தி ஐயா.. வீட்டுக்கு வரேனு சொல்லிருக்காரு… அப்போ… உங்க தங்கச்சி பொண்ண.. பக்கத்துல வச்சு பார்த்துக்கோங்க… அவ… இந்த ஊரல தான் இருக்க போறா… வருத்தப்படாதேங்க மாமா… காலையில சாப்பிட்டதோட இருக்கேங்க… இன்னும் யாரும் சாப்பிடலை…, நீங்க சாப்பிட்டாதான்.. நாங்களும் சாப்பிடுவோம்.. மாமா.. அத்தை நீங்களும் தான்… எதுக்கு இப்போ வருத்தப்படுறீங்க…., வாங்க அத்தை  நீங்க, மாமாவ சாப்பிட கூப்பிடுங்க.. அத்தை…,’ வள்ளி அனைவரின் மனநிலையை மாற்ற…. பேசிகொண்டிருக்க… அவளுக்கு லேசாக மயக்கம் வருவது போல் இருந்தது… இதை பார்த்துவிட்ட பாண்டியன்… “வள்ளியம்மா… உங்களுக்கு என்ன செய்யுது… ஏன் ஒரு மாதிரி இருக்கேங்க…”.. பாண்டியன்… வள்ளியிடம் கேட்டுகொண்டே அவள் அருகில் வர… அதற்க்குள்… வள்ளிக்கு மயக்கம்… வந்துவிட்டது…., தலையை பிடித்துகொண்டு தரையில் விழுந்தால்…. பாண்டியனோ… “வள்ளியம்மா…” கத்திகொண்டு… அவளை மடியில் வைத்துகொண்டு கன்னதில் தட்டினான்… ‘முத்தையா, மீனாட்சி,செல்வி,முருகவேல்..’ அவர்கள் மூவரும்,  வள்ளி கீழே விழுந்ததில்… திகைத்து… அவர்களுக்கருகில் சென்றனர்…. மீனாட்சி,செல்வி, “வள்ளி, வள்ளி, என்னாச்சுமா…வாணி.. தண்ணீர் கொண்டு வா…சீக்கிரம் வாணி..” அனைவரும் பதறி, என்னவென்று பார்த்தனர்….. ”அண்ணே பக்கத்துல மருத்துவச்சி இருப்பாங்க… போய் அவங்களை கூப்பிட்டு வாங்க…”செல்வி, முத்தையாவிடம் சொல்லிவிட்டார்.. “இதோ போறேன்… , மாமா.. நீங்களும் வாங்க…” முத்தையா, முருகவேலையும் துணைக்கு அழைத்து சென்றார்.

”மருத்துவச்சி, தாயம்மா வந்ததும் வள்ளியின் முகத்தை பார்த்தார்… ஐயா… வள்ளிதாய… மெத்தையில படுக்க வையுங்க…” மருத்துவச்சி சொன்னதும், வள்ளியை தூக்கிகொண்டு, அவர்களின் அறைக்கு சென்று படுக்க வைத்தான் பாண்டியன்,… “ஐயா…. நீங்களெல்லாம் வெளிய இருங்க…, அம்மா நீங்க மட்டும் இங்க இருங்க…”, ஆண்கள் மூவரையும் வெளியில் அனுப்பிவிட்டு, பெண்கள் இருவரும், மருத்துவச்சியும் உள்ளே இருந்தார்கள்.., மருத்துவச்சி, வள்ளியை முழுதாக சோத்தித்துப்பார்த்தார்…., வள்ளியின் கையை பிடித்து பார்த்ததும், மருத்துவச்சியின் முகத்தில் சிறுப்புன்னகை, இருந்தாலும், வள்ளியின் வயிற்றில் கை வைத்துப்பார்த்தார்… அதில் இன்னும் உறுதி செய்துவிட்டு, பக்கத்தில் இருக்கும், செல்வியிடமும்,மீனாட்சியிடமும், மகிழ்ச்சியாய், “அம்மா, எல்லாம் நல்ல விசயம்,விசேஷம் தான்…, உங்க வீட்டுக்கும், உங்க பரம்பரைக்கு, அடுத்த ராஜா… வரப்போறாங்க…., ஆமா அம்மா, வள்ளி தாயி அறுபது நாள், கருவ சுமந்துட்டு இருக்காங்க….” மருத்துவச்சி இனிப்பான விசயம் சொன்னதும், அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது… ‘என்ன சொல்லுற…தாயம்மா… உண்மை தானா… என் பொண்ணு மாசமா இருக்காளா…,  “ஆமாம் அம்மா… உங்க பொண்ணு, ஒரு குழந்தைக்கு தாயாக போறா…. மறுபடியும் அவர் சொல்ல…, மீனாட்சிக்கு இது ஏற்கனவே தெரிந்த விசயம் என்பதால் மனதுக்குள் இப்போதாவது அவர்களுக்கு உண்மை தெரியட்டும்….அவர் நினைத்துகொண்டார்…,இந்த மகிழ்ச்சியான விசயத்தை முதல மாப்பிள்ளைக்கிட்ட சொல்லனும், வெளியே நின்றிருக்கும் ஆண்களுக்கு தெரியப்படுத்த செல்வி வெளியே சென்றார்… அவரின் பின் மீனாட்சியும்,மருத்துவச்சியும் வந்தனர்…

“வெளிய வந்த, செல்வியை பார்த்து பாண்டியன், அவரிடம் சென்றான்,, ‘அத்தை வள்ளியம்மாக்கு என்னாச்சு, இப்போ மயக்க தெளிஞ்சுட்டாங்களா… நான் பார்க்கலாம… அத்தை…’ அவன் பதட்டத்துடன் கேட்க… செல்வியோ “ மாப்பிள்ளை.. நீங்க பயப்படற மாதிரி வள்ளிக்கு ஒண்ணுமில்லை,.. எல்லாம் நல்ல செய்தி தான்… நீங்க அப்பாவாக போறீங்க… அண்ணா… நீங்க தாத்தாவாக போறீங்க, என்னங்க நீங்களும் தான் தாத்தாவாக போறீங்க…வள்ளி, மாசமா இருக்கா…” வள்ளி கரு உண்டாகியிருப்பதை செல்வி சொன்னதும்… பாண்டியனுக்கு தலைகால் புரியவில்லை… மருத்துவச்சிக்கு… நன்றி சொல்லி, அவருக்கு தேவையானவை கொடுத்து…. வழியனுப்பி வைத்தார் முத்தையா… “என் வீட்டுக்கும்,என் பரம்பரைக்கும்… இன்னொரு வாரிசு வரப்போகுது மாமா..” ‘ஆமாம், மாப்பிள்ளை…, நாம ரெண்டு பேரும் தாத்தாவாகிட்டோம்..’ அவர்கள் இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்….பாண்டியன் வள்ளியை பார்க்க உள்ளே சென்றான்….’

“முத்தையாவின் வீட்டு வாசலில் வெடிச்சத்தம் கேட்டது… அந்த சத்ததை கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் வாசுலுக்கு சென்று பார்த்தனர்…. ஆனால் அங்கு இருந்தவர்களை பார்த்ததும்… முத்தையாவுக்கும்,மீனாட்சிக்கும் அதிர்ச்சி என்றால்.., செல்விக்கும், முருகவேலுக்கும் அதிர்ச்சியாக இருந்தது…., கடவுள் சோதனைக்கு மேல, சோதனையா ஐயா குடும்பத்துக்கு கொடுக்குறாரே… எனக்கு வேதனையா… இருக்கு நல்லத்தம்பியண்ணே….., இனி வள்ளியம்ம தான் இவங்களை சமாளிக்கனும்… ஏன்னா… அவங்களுக்கு மட்டும் தான் இவங்களை சமாளிக்குற திறமை இருக்கு….,”

 

Advertisement