Advertisement

            என்னை தந்திடுவேன் 1

 

”காலைப்பொழுது அழகாக விடிந்தது…. சிறு சினுங்களுடன் ஹீரா எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த ரோஹித்தை இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தாள்… இரவு முழுவதும் அவளை தூங்கவிடாமல் செய்துவிட்டு, அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் ரோகித்தை பார்க்க பார்க்க அவளுக்கு அவனின் மீது இன்னும் காதல் அதிகமானது.”

“என்ன தவம் செய்தேன் இவனை காதலிக்க” அவள் நினைத்துகொண்டிருக்க.

“மெதுவாக அவளின் இடையில் கை போட்டு தன் பக்கம் இழுத்து விடியலில் விட்டதை மீண்டும் தொடர போனான் அந்த காதல் கள்வன். அவனின் தொடுவுணர்வை அறிந்தும், அறியாமல் அவனின் காதலுக்காக அவனுடன் மீண்டும் இசைந்தால்”

“அவனின் காதல் லீலை முடிந்ததும், அவளின் முகத்தை பார்த்துகொண்டே இருந்தான்…”

“என்ன ரோஹித் ஏன் பார்த்துட்டே இருக்க…, அழகா இருக்கேனா” அவனின் கன்னத்தை கையால் தடவிகொண்டே மெல்லிய குரலில் கேட்க.”

“அழகுக்கே அழகு சேர்க்குற முகமும், உன் குரலும் எனக்கு தெவிட்டாத ஒன்று ஹீரா.., உன்னை பார்த்துட்டே இருக்கும் ஜென்மம் முழுதும் எனக்கு சலிக்காது ஹீரா”

“உன்னை காதலிக்க நான் கொடுத்து வச்சுருக்கனும், ஹீரா.. யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் எனக்கு கிடைச்சுருக்கு. உன்கிட்ட காதல் சொன்ன போதும் நீ என்னைவிட்டு விலகி போன போதும் சரி உன்மேல துளிக்கூட கோபம் இல்லை ஹீரா. ஏன்னா நீ என் வாழ்க்கையில கிடைச்ச முதல் தவத்துக்கான பரிசு”

“ஹீரா, நான் உன்னை மட்டும் தான் காதலிப்பேன், காதலிக்குறேன், ஆனா என்னைவிட்டு எங்கயும் போக மாட்டேல…, உன்னை ஒரு முறை தொலைச்சுட்டு நான் அனுபவிச்ச வேதனைய இனியும் எனக்கு கொடுக்க கூடாது ஹீரா…,” அவன் உருக்கமாக பேச, அவன் பேசியதை கேட்டுகொண்டே இருந்தவள் கடைசியாய் அவன் “வேதனையை சொல்லும் போது” அவனின் மார்பில் புதைந்துகொண்டு.

“சாரி ரோஹித், உன்னை என்னைக்கும் கஷ்ட்ட படுத்தமாட்டேன்.., இனியும் உன்னை பிரிஞ்சு நான் இருக்க மாட்டேன் ரோஹித்.., நீ என்னை ஏன் இவ்ளோ காதலிக்குற ரோஹித். அதுக்கு நான் தகுதியானவளா.., உன் உயரம் எங்க. நான் எல்லாம்” அவள் வாயில் கை வைத்து.

“ நான் எந்த உயரத்தில் இருந்தாலும், உன் காதலுக்கு நான் கீழ தான். அது எல்லாம் என் தாத்தாவோடது. ஆனா என் ஹீரா காதல் எனக்கு சொந்தமானது.”

“இருவரின் காதலின் பாஷைகளின் நடுவில், இடைஞ்சலாய் ரோஹித்தின் அலைபேசி அழைக்க.. அவளை மார்பில் சாய்த்துகொண்டே அட்டென் செய்தான்.”

“ ஹல்லோ ஹூஸ் திஸ்..”

“பாஸ், நான் உங்க பி,ஏ. ராஜ் பேசுறேன்…”

“டேய் புது நம்பரா இருக்கு”

“பாஸ்.. என் போன்ல இருந்து உங்களுக்கு போன் போட்ட நீங்க எடுக்கல, அதான் வேற நம்பர்ல இருந்து உங்களை கூப்பிடுறேன்.”

“என்ன விசயம் ராஜ்”

“பாஸ் நீங்க கம்பெனிக்கு வந்தே ஒருவாரம் ஆகப்போகுது, அன்னைக்கு  பாதில விட்டுப்போன மீட்டிங்க்கு இப்போ வரைக்கு உங்களுக்காக வெயிட்டிங் பாஸ்.., சேர்மேன் சார் வேற உங்களை எங்க எங்கனு கேட்டு என்னை என் வீட்டு பக்கம் கூட விடலை.. பாஸ் என் பொண்டாட்டிய பார்த்து ஒரு வாரம் ஆகப்போகுது சார்.”

”இந்த ஒரு வாரத்துல உங்க அப்பாயின்மெண்டுக்காக பலர் காத்திருக்காங்க பாஸ். புது டீலீங் வேற பெண்டிங்ல இருக்கு.. நீங்க வந்து முடிச்சு கொடுத்துட்டு போங்க பாஸ்.” அழுதுவிடுபவன் போல பேச.

“டேய்.. இதுக்கு தான் கூப்பிட்டயா.., என்னால இன்னும் ஒரு மாசத்துக்கு எஙயும் வரமுடியாது. அந்த டீலர் போனா போகட்டும் என் வாழ்க்கையில் முக்கியமான மீட்டிங்க்ல நான் இருக்கேன். சோ அந்த மீட்டிங்க் விட இது தான் முக்கியம். தாத்தாகிட்ட சொல்லிடு சரியா” அவன் பேசிமுடித்தான்.

“ போனை கட் பண்ணிட்டாரா…. இதுக்கு தான் வேற நம்பர்ல இருந்து அவருக்கு கூப்பிட்டேனா” சலித்துகொண்டு ரோஹித் பற்றி யோசித்தான்.

”அப்படியென்ன முக்கியமான மீட்டிங், எனக்கு தெரியாம, ஒரு வேளை அந்த பொண்ணு கிடைச்சுருச்சோ, இல்லையினா இப்படி சந்தோஷமா பேசாமாட்டாரே.” அவன் குழம்ப. அய்யே இன்னும் கொஞ்ச நேரத்துல சேர்மேன் சார் போன் போடுவாங்களே என்ன சொல்லுறது அவருகிட்ட. அவன் நினைக்க அதே போல் அழைப்பு வந்தது.”

“என்ன ரோஹித்” அவள் கேட்க.

“ஒரு வாரமா கம்பெனிக்கு பக்கம் போகலேல அதான் ராஜ் போன் போட்டான்.”

“ரோஹித் ஒருவாரமா கம்பெனிக்கு போகலையா நீ” அவள் அதிர்ச்சியுடன் கேட்க.

“ நீயேன் இப்படி ஷாக் ஆகுற, ஒரு வாரம் போகலைன ஒன்னும் ஆகாது, விடு” அவளின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல், அவளின் கழுத்துப்பகுதியில் முகம் புதைத்தான்.

“பிளீஸ் ரோஹித்” என அவனை தடுத்து முகம் பார்த்தால்.

“என்ன டி”

“அந்த மீட்டிங் உன் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான மீட்டிங் ரோஹித் நீ போய் அதை நல்ல படியா முடிச்சுட்டு வா”

“உன்னைவிட அது எனக்கு முக்கியம் இல்லை டீ”

“ஆனா உன் வாழ்க்கைக்கும், உன் உழைப்புக்கு ரொம்ப முக்கியம், இன்க்ளுடு உன்கிட்ட வேலை பார்க்குரவங்களுக்கு முக்கியம் ரோஹித் “ என அவனின் மனதை மாற்றினால்.

“சரி போறேன், ஆனா மீட்டிங் முடிஞ்ச அடுத்த நொடி இங்க தான் இருப்பேன்.”

“உன்னைவிட்டு எங்கயும் போகமாட்டேன் ரோஹித், நானும் உனக்காக காத்திருப்பேன்”

“சரி வா குளிக்கலாம்” அவளை சேர்த்து இழுத்தான்.

“ரோஹித், நீ இங்க குளி, நான் அந்த ரூம்க்கு போறேன்.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், சேர்ந்து குளிக்கலாம்,” அவளை தூக்கிக்கொண்டு குளியல் அறைக்கு சென்றான்.

“ பத்து நிமிட குளியல், அரை மணி நேரமாக தொடர்ந்தது.  ஒரு வழியாக குளித்து முடித்து, அவனுக்கான உடையை தேர்வு செய்து, அவனிடம் கொடுத்துவிட்டு, சமையல் அறைக்கு சென்றால்.”

“பதினைந்து நிமிடத்தில் அவனுக்கு பிடித்த உணவுகளை செய்து முடித்துவிட்டு அவனை அழைக்க திரும்பும் போது, பின்னிருந்து அவளை கட்டிக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான்.”

“என்ன, இது ரோஹித்.. உன் கோர்ட் கசங்கிடும், முதலை என்னை விடு”

“கசங்குனா, வேற போட்டுக்கலாம், ஆனா என் காதலியை ஒவ்வொரு நிமிடமும் நான் கொஞ்சனுமே,” சொல்லிக்கொண்டே அவளை கொஞ்சினான்.

“போதும் ரோஹித், நேரமாச்சு, வா சாப்பிடு,”

“ நீயும், வா சேர்ந்து சாப்பிடலாம்” என அவளை பக்கத்தில் அமர்த்திகொண்டான், முதலில் அவனுக்கு பிடித்த ரசகுல்லாவை அவள் ஊட்டிவிட்டாள். பின், பன்னீர் பட்டர் குருமாவில், சப்பத்தியை தேய்த்து அவனுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே, அன்றைய மீட்டிங்க்கு அவனை தயார் படுத்தினால்.”

“உனக்கு எப்படி, இந்த மீட்டிங் பத்தி தெரியுது, கரெக்ட்டா சொல்லுற, நான் எப்படி பேசனும் முதல் கொண்டு அந்த மீட்டிங் எனக்கு சாதகமா முடியனும்னு நீ என்னை தயார் படுத்துறது, எனக்கு கொஞ்சம் புதுசா இருக்கு ஹீரா”

“எத்தனையோ மீட்டிங்க சக்ஸ்சஸ் புல்லா முடிச்சுருக்கேன், ஆனா இந்த மீட்டிங்க்கு என்னை விட நீதான் அதிக முக்கியத்துவம் தருகிற மாதிரி இருக்கு, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” அவளை பார்த்து கேட்க.

“அவளோ அதிர்ந்து நின்றால், ரோஹித் இப்படி கேட்ப்பான் என்று நினைவில்லாமல், அனைத்தையும் உளறியதை அவள் என்னவென்று சொல்லுவாள்”.

“அது… அது வந்து ரோஹித்..” அவள் திணற.

“எனக்கு தெரியும் ஹீரா” அவளுக்கு அதிர்ச்சியை வைத்தான்,

“என்ன தெரியும்”

“ நீ வேலை பார்க்கிற கம்பெனில நீ தான் எம்.டி யோட பி.ஏ, எனக்கு தெரியாதா என்ன” அவன் சொல்ல.

“அவன்  சொல்லி முடித்ததும் தான் அவளுக்கு நின்ற மூச்சு வெளிவந்தது”

“கரெக்ட் தான”

“ம்ம்ம், ஆமா ரோஹித்.. நான் இல்லாம அங்க எதுவும் நடக்காது. அதே மாதிரி என்னை கேட்க்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” அவள் ஏதோ நினைவில் சொல்ல.

“அவனோ, அப்படியா ஹீரா” அவளை தொட்டு நினைவுக்கு கொண்டு வந்தான்.

“ஆமா, ரோஹித்…, ஒகே,  நேரம் ஆச்சு பாரு கிளம்பு.. எங்க உன் லேப்டாப் பேஃக்.., எல்லாம் எடுத்துட்டயா”

”எதையும் மறந்துடுறதா, நல்லா பண்ணு, அப்புறம் மீட்டிங்க்ல பார்த்து அவங்களுக்கு புரியிற மாதிரி தெளிவா உன் ப்ரோஜெக்ட் பற்றி பேசு ஒகே” அவனுடன் பேசிகொண்டே வாசல் வந்தாள்.

“இந்த உன் கார் கீ” அவனிடம் கொடுத்தால்.

“அவனோ அவளை பார்த்துகொண்டே இருந்தான்.”

“என்ன ரோஹித் கிளம்பு டைம் ஆச்சுப்பா” அவள் சொல்ல.

“இப்படிதான் உங்க ஊருல காதலனை ஆபீஸ் வழியனுப்பி வைப்பாங்களா” அவன் எதற்கோ அடிபோட.

“வேற எப்படி, வழியனுப்பி வைப்பாங்க” அவள் தெரியாமல் கேட்டு வைக்க.

“இப்படி அருகில் வந்து, லேசா கட்டி அணைச்சு, அழுத்தமா முத்தம் கொடுத்து வழியனுப்பி வைக்கனும் டீ என் செல்ல காதலி” அவன் ஒவ்வொன்றையு சொல்லிக்கொடுத்து கடைசியில் தன் முத்தம் ஒன்றிற்க்காக அவன் காத்திருந்தது அவளுக்குள் அவன் மீது காதல் பொங்கியது.

“ம்ம்ம்… இனிமே இப்படியே உன்னை வழியனுப்பி வைக்கிறேன், இப்போ கிளம்பு,” அவனது கார் வாசல் தாண்டியும் பார்த்துகொண்டே இருந்தால்.

”அவனை முதல் முறை பார்த்தது அவளுக்கு நினைவு வந்தது”

“ஹீராவிற்க்கு, கடற்கரை என்றால், அவளுக்கு மிகவும் பிடிக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது கடற்கரை சென்று அங்கு கடல் அலையை ரசித்துகொண்டே இருப்பாள்.”

“இன்னொன்றும் இருக்கிறது அது. மனதில் எதாவதொன்று குழப்பமோ, கோபமோ, இல்லை வருத்தமோ இருந்தாள் மணலில் அமர்ந்துகொண்டே அந்த அலையிட்டம் தன் மனதை சொல்லிவிட்டு செல்வாள், ஏதோ தன் அன்னையிடமே அதை எல்லாம் சொல்லிவது போல ஒரு உணர்வு”

“இவள் இப்படி கடற்கரைக்கு வருவதை இவளறியாமல், ஒருவன் தன்னை ரசித்துகொண்டிருப்பதை அறியாமல் அவள் கடற்கரைக்கு வருவதும், போவதுமாக இருந்தாள்.”

“அப்படி ஒரு முறை தான் அவனை சந்தித்தாள்”

“கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்தால், அப்போது அந்த நிழல்குடையின் இறுக்கையில், ஒருவன் தலையை தாங்கிகொண்டே அமர்ந்திருப்பதை பார்த்தால், அவளுள் என்ன தோன்றியதோ, அவன் அருகில் செல்ல முற்படும் போது, ஏதோ ஒன்று அவளை தடுத்தது.  பின் அவனை அருகில் செல்லாமல் கடற்கரையை நோக்கி சொல்ல ஆரம்பித்தால்.”

“அவனை தண்டி நான்கடி எடுத்து வைத்திருப்பால், அடுத்த நொடி அவள் முன் அவளை மறிப்பது போல் வந்து நின்றான் ரோஹித். அவளுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது.”

“யாரோ ஒருவன், தன்னை மறிப்பது பயமாக இருந்தது. இருந்தும் அவன் ஏதோ சொல்ல வருவது அவளுக்கு தெரிந்திருந்தது.”

“உங்ககிட்ட பேசனும், அதுக்கு தான் இவ்ளோ நேரம் காத்திருந்தேன். பீளீஸ் பேசலாமா” அவன் கூறியது.

“அவளுள் சிறு தயக்கம், ஆனால் தனக்காய் ஏன் காத்திருக்கனும் இவன் என யோசனையாய் அவனை பார்த்தால், அவன் முகம் முன்பைவிட அதிக எதிர்ப்பார்ப்புடன் அவளை பார்த்துகொண்டிருந்தான். வருவாளா, மாட்டாளா என்று.”

“ம்ம்.. சரி அங்க உக்கார்ந்து பேசலாமா” கடல் மணலை பார்த்து சொன்னால்.

“ஒகே வாங்க” அவளுடன் நடந்து சென்று மணலில் அமர்ந்தான்.

“பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு அவளிடம் எதுவும் பேசாமல், அலையை பார்த்துகொண்டிருந்தான், இவளோ என்ன பேசப்போகிறான். அதுவும் என்னிடம்” அவள் யோசிக்க, அவளது யோசனையை கலைத்தான்.”

“உன்னை காதலிக்க ஆரம்பிச்சு இன்னையோட ஆறு மாசம் ஆச்சு. என் மனசுல இருக்கிற காதலை உன்கிட்ட இன்னைக்கு சொல்லலாம், நாளைக்கு சொல்லலாம்னு நினைச்சுட்டே இருப்பேன். ஆனா அதுக்கான தைரியம் எனக்கு வரலை.”

“எத்தனையோ மீட்டிங்க், பிரோஜெக்ட், கம்பெனி ப்ரப்லம்னு அசால்ட்டா சால்வ் பண்ண எனக்கு உன்கிட்ட எப்படி என் காதல சொல்லுறதுனு முழிச்சுட்டு இருந்தேன்,”

“என் தாத்தாகிட்ட சண்டை போட்டுட்டு நேரா இங்க தான் வந்தேன், அப்போ தான் உன்னை முதல் முறையா இந்த கடற்கரையில பர்த்தேன். அன்னைக்கு கொஞ்சம் நீ சோகமா இருந்த. ஆனா அடுத்த நிமிஷம் நீ கிளம்பும் போது தெளிவா ஒரு முடிவோட, எழுந்து போன.”

“எனக்கு அப்போ ஒன்னுமே புரியில, அடுத்த நாளும் உன்னை எதிர்பார்த்து நான் வந்தேன், ஆனா நீ வரலை… அதுகடுத்த நாளும் வந்தேன். அப்போவும் நீ வரலை. அப்புறம் மூனு நாள் கழிச்சு தான் நீ வந்த.”

“அன்னைக்கு, உன் முகம் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. ஏனோ எனக்கு சந்தோஷமா இருந்திச்சு. இப்படியே, நீ வாரத்துல இரண்டு நாள் இங்க வருவதை நான் நோட் பண்ணிக்கிட்டு உனக்காகவே அந்த இரண்டும் நாளும் உனக்கு முன்னாடியே வந்திருப்பேன்.”

“இதோ இப்போ உன்கிட்ட காதல் சொல்லுற நேரம் இப்படி வரும்னு நான் எதிர்ப்பார்க்கல, ஆனா இதுக்கு மேலையும் தள்ளிப்போடக்கூடாதுனு தைரியமா, உன்கிட்ட காதலை சொல்ல வந்துட்டேன்”

“ நான் உன்னை காதலிக்குறேன்”

“உன்னை உயிரா பார்த்துகிறேன், ஆனா இன்னும் இரண்டு வருசம் போன பின்னாடி நம்ம கல்யாணம், ஏன்னா இப்போ தான் புது கம்பெனி ஸ்டார்ட் பண்ணிருக்கேன், அதுனால உன்கிட்ட பேச நேரம் இருக்குமானு தெரியலை. ஆனா கண்டிப்பா உன் நினைப்போட தான் இருப்பேன்”

“உனக்கு ஷாக்கிங்கா தான் இருக்கும், ஆனா என் காதல் சொல்லுறதை தள்ளி போட முடியாதுல. உன் மனசுல என்னை பற்றி என்ன நினைக்குறேனு சொல்லு” ஆரம்பம் முதல் இறுதி வரை அவன் சொல்லிகொண்டே வர இடையில் தன்னை கடற்கரையில் பார்த்ததும், அடுத்து தன்னை தேடி அலைந்ததும், இதோ இப்பொழுது அவனின் காதலை சொன்னதும் வரை அவளின் மனநிலையை அவன் தெளிவாக அறிந்தான். இருந்தும் அவள் சொல்லும் வரை அவளின் முகத்தையே பார்த்திருந்தான்.”

” உங்க மேல எனக்கு காதல் இல்லைனு சொன்னா”

“ம்ஹூம் இருக்காது. நீ என்னை காதலிப்பேனு நான் நம்புறேன்”

“பார்க்கலாம்”

“எப்போ”

“அடுத்து இந்த கடற்கரைக்கு எப்போ வருவேனோ அப்போ”

“அதுவரை காத்திருக்க நான் தயார்”

“ம்ம்ம்… ஒகே”

“ நான் கிளம்புறேன்”

“அலைய ரசிக்காம கிளம்பிட்ட”

“அதுக்கு பதில தான் உங்களை ரசிச்சேனே….” அவள் ஒற்றை சொல்லால் அவளின் காதலை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றாள்.

“இருந்தாலும், அவள் மனதார தன்னை நேசிப்பாள் என அவன், அவளுக்காய் காத்திருந்தான்”

“ஆனால் அவள் வரவில்லை… கிட்டதட்ட ஆறு மாதம் கடந்து அவளை சந்தித்தான்.”

“சார், பாஸ் ஏதோ வெளியூர்ல முக்கியமான மீட்டிங்க்ல இருக்கிறார் சார். அதனால இந்த மீட்டிங்க அட்டென் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க சார்” சேர்மேனிடம் சொலிகொண்டிருந்தான் ராஜ்.

“ என்ன வெளியூர்ல மீட்டிங்கா, என்னை நம்ப சொல்லுறையா,”

“சார் நானே போன் போட்டு கேட்டேனே, பாஸ் அப்படி தான் சொன்னாங்க”

“ அவன் ஆபீஸ் வராம நீ உன் வீட்டுக்கு போக கூடாது” அவர் கோபமாய் சொல்லிவிட்டு போனை வைத்தார்.

“ம்க்கும் அப்படியே, என்னை போகவிட்டாலும், பாஸ் எங்க இருகீங்க சீக்கிரம் வாங்க பாஸ்” ராஜ் கடவுளிடம் கைகூப்பி வேண்ட. பின்னிருந்து அவன் தோள் மீது ஒரு கை விழுந்தது.

“மணி, எனக்கு தான் டீ வேண்டாம்னு அப்போ இருந்து சொல்லுறேனே பின்ன எதுக்கு என்னை இப்போ டிஸ்டர்ப் பண்ணுற.” அவன் சொல்லிகொண்டே திரும்பி பார்த்து அதிர்ந்தான்.

”பாஸ் நீங்களா, நல்ல வேளை இன்னைக்கு வந்து என்னை காப்பாத்தினேங்க. இல்லைனா இன்னிக்கும் நான் வீட்டுக்கு போயிருக்க முடியாது. பாஸ் என் சூழ்நிலையை புரிஞ்சு தான இன்னைக்கு ஆபீஸ் வந்தீங்க” அவன் ஆவலாய் கேட்க.

“இல்லை, என் மனசுக்கு பிடிச்சவ சொன்னதால தான் ஆபீஸ் வந்தேன். உன்னை காப்பாத்துறதுக்கு எதுக்கு நான் ஆபீஸ் வரணும்”

“ம்க்கும் வந்துட்டாலும், என்மேல உங்களுக்கு கரிசனம் வந்துருச்சோனு தப்பா நினைச்சுட்டேன் பாஸ், முதலை நீங்க வந்ததை, பெரிய சார்கிட்ட சொல்லனும்” என அவன் மொபைலை எடுக்க அதை பிடுங்கி வைத்துக்கொண்டான் ரோஹித்.

“வந்தவுடனே தாத்தாக்கிட்ட போட்டுக்கொடுக்காத ராஜ். அவருக்கு நான் வந்தது தெரியக்கூடாது. நான் மீட்டிங்க் முடிச்சுட்டு உடனே கிளம்பிடுவேன் நீ தான் மீட்டிங்க்கு வந்திருக்குற கெஸ்ட் எல்லாரையும் நல்ல முறையில வழியனுப்பி வைக்கனும், சரியா”

”அப்போ நான் எப்போ வீட்டுக்கு போக பாஸ், என் நிலையை கன்சல்ட் பண்ணுங்க”

“எனக்கு உதவி பண்ணா, நீ வீட்டுக்கு போகலாம், சரியா”

“என்ன உதவி பாஸ்,” அவன் கேட்க… ராஜ் காதில் ஏதோ கூறிவிட்டு, “சரியா” என கேட்க.

“ஒகே பாஸ்” அவன் கட்டை விரலை தூக்கி காட்டினான்.

”ஒகே இப்போ ஆபீஸ் மேட்டர்க்கு போகலாம்” அடுத நிமிஷம் அந்த கம்பெனியி முதலியாய் மாறி இருந்தான் ரோஹித்

“இப்போ மீட்டிங்க்கு தேவையான அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் பக்காவ இருக்கனும், ஏ.ஆர்.எம் இண்டஸ்ட்ரீஸ்ல ஒரு தப்பும் நடக்ககூடாது. மீட்டிங்க்கு வரப்போறவங்களுக்கு என்ன தேவையோ அதை நீ தான் பக்கத்துல இருந்து பார்க்கனும், பேமஸ் ஹோட்டல் புஃட் தான் அரேஞ்ட் பண்ணனும்” என ராஜ் என்ன வேலை செய்யவேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறிகொண்டே அவனது கேபின்க்கு சென்றான்.

“அவனது கேபினுக்கு உள்ளே நுழைந்ததும், அவன் கண்கள் வலது பக்கம் இருக்கு அரையடி உயரம் கொண்ட போட்டாவை பார்த்தது. அதில், ஹீராவிற்க்கு காதல் பரிசாய் அவளது கையில் மோதிரம் போடுவதும், ஹீரா அவன் போடும் மோதிரத்தை பார்க்காமல், காதலாய் அவன் முகத்தை பார்ப்பது போல் இருந்த போட்டாவை பார்த்துகொண்டே நுழைந்தான். அந்த போட்டோ எடுத்து ஒன்றறை வருடம் ஆகிவிட்டது. ஆனால் அதை அவன் ரசித்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு அலாதி.

“இந்த போட்டாவை, அவன் அவளுக்கு தெரியாமல், தூரத்தில் ராஜ் மூலம் எடுத்தான். ஹீராவுக்கு இந்த புகைபடத்தை பற்றி தெரியாமல் பார்த்துகொண்டான். ஏன்னென்றால் அவளுக்கு போட்டோ எடுப்பது துளிக்கூட இஷ்ட்டமில்லை. ஆனால் அவன் முதல் காதல் பரிசாய் அவளுக்கு தெரியாமல் இந்த போட்டாவை எடுத்து, அவனது பெர்சனல் கேபினில் மாட்டி வைத்தான்.”

“அவனது பெர்சனல் கேபினுக்குள், அவன் மட்டுமே நுழைய முடியும், ராஜ்கூடா நுழைய அனுமதிக்க மாட்டான்.”

”இவன், ஹீராவை ரசித்து காதலிக்க, அவளோ… அவனை பிரியும் வலியை கூட தாங்கமுடியாமல் அழுது கரைகிறாள்.”

“ஆனால் இவளுக்கு தெரியவில்லை, இரண்டாவது பிரிவு அவனை காயப்படுத்த தயாரக இருக்கின்றது.”

 

                                                    தொடரும்…………..

 

Advertisement