Advertisement

                      காதல் தோழா 1

 

”என் காதல்….

அவளுடைய சொந்தமாய்..…

என் காதல்…..

அவளுக்கு மட்டுமாய்..….

என் காதல்….

அவளுக்கு என்றும் முதல் தோழானாய் இருக்கும்…”

“முடியாது… முடியாது…., யாரை கேட்டு முடிவு செஞ்சேங்க… நீங்களா ஒரு முடிவு செஞ்சு, என்கிட்ட இப்போ வந்து சொன்னா நான் கேக்கனுமா…., என்னால ஒரு போதும் இதுக்கு சம்மதிக்க முடியாது…, என்னை கேட்டுருக்கனும், ஒரு வார்த்தை சொல்லாம நீங்க இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கேங்க…, என்னால ஒத்துக்க முடியாது…,” தெருவே அதிர, கத்திகொண்டு இருந்தாள்… ஹேத்தான்சிகா.

“இங்க பாரு,ஹேத்துமா.. அப்பா உனக்கு எது செஞ்சாலும், நல்லதுக்கு தான் அதை புரிஞ்சுக்கோமா…, அம்மா சொன்னா கேக்கமாட்டீயா…, உனக்கு பிடிச்சதை மட்டும் தான், நானும், அப்பாவும் செய்வோம், புரிஞ்சு நடந்துக்கோம்மா…, நாங்க வாக்கு கொடுத்துட்டோம், உனக்கு தெரிம்ல நம்ம குடும்பத்துல வாக்கு கொடுத்தா அதை கண்டிப்பா நிறைவேத்தி கொடுக்கனும், இல்லைனா, அப்பா எல்லோர் முன்னாடியும், தலைகுனிஞ்சு நிக்கனுமா.. சொல்லு..” சித்ரா, மகளிடம் கெஞ்ச…

“ நீங்க வாக்கு கொடுத்ததுக்கு என் வாழ்க்கை பழியாகனுமா.., என்னால முடியாது.., அவரை யாரு என்னை கேக்காம அவங்களுக்கு வாக்கு கொடுக்க சொன்னது. எனக்கு பிடிச்சதுல இருந்து, எல்லாமே நீங்க செஞ்சு கொடுத்தா, இதுல நான் விட்டுகொடுக்கனுமா…, “

“சித்து…, அவளுக்கு இஷ்டம் இல்லைனா விட்டுரு, கம்பெல் பண்ணாத.., அவளுக்கு அவ சந்தோஷம் தானே முக்கியம், நான் தலைகுனிஞ்சா அவளுக்கு சந்தோஷம் தானே.., விடுமா.., நீ, அவகிட்ட கெஞ்சாத.., எனக்கு பிடிக்கலை.., நான் அவங்ககிட்ட சொல்லிடுறேன்..இதுல என் பொண்ணுக்கு சம்மதம் இல்லைனு” கொஞ்சம்  சோர்வாக, மனைவியிடம் சொல்லிச்சென்றார்.

“இப்போ உனக்கு சந்தோஷமா.., என்னைக்கும் அவர் இப்படி பேசினது இல்லை, ஆனா உன்மேல வச்ச நம்பிக்கையை இப்படி உடைப்பேனு நாங்க எதிர்பார்க்கல…, பாரு, அவரு எவ்ளோ சோகமா போறாருனு.., போ, என் கண்ணு முன்னாடி நிக்காத…” என்றும் கோவப்படாத அன்னையே இன்று அவள் மீது கோவம் கொள்ளவது அவளுக்கு புதிது தான்..

“ஏங்க இப்படி அமைதியா இருக்கேங்க.., அவளுக்கு இது பிடிக்குனு நாமலா முடிவு செஞ்சோம், ஆனா இப்படி பேசுவானு நமக்கு தெரியாதே…, இதுகெல்லாம் நீங்க வருத்தப்படலாம…, அவங்ககிட்ட நான் பேசுறேன் பக்குவமா சொன்னா புரிஞ்சுக்குவாங்க…, நீங்க வருத்தப்படதேங்க.., நீங்க வருத்தப்பட்டா எனக்கு, கவலையா இருக்கும்.., “ கணவன் மீது உயிரே வைத்து இருக்கும் சித்ரா, கணவனின் சிறு வருத்ததை பொறுத்துகொள்ள மாட்டார்.

” அவளுக்கு பிடிச்சது எது, பிடிக்காதது எதுனு பார்த்து, பார்த்து செஞ்சேன்.., இப்போவும், அவளுக்கு பிடிச்சதது தான் செய்ய இருந்தேன். இது அவளுக்கு பிடிக்காம போகுனு எனக்கு தெரியாது. அப்படி தெரிஞ்சிருந்தா, இதை பேசிருக்கவும், மாட்டேன்.. வாக்கு கொடுத்திருக்கவும் மாட்டேன்.., நானே அவங்ககிட்ட பேசுறேன் சித்ரா. நீ, என் மகளை திட்டாத.. அவளுக்கு தெரியாம நாம செஞ்சதுல கோவம் அவ்ளோ தான். அவளுக்கு பசிக்கும், போய் சாப்பிட வை. நான் வெளிய போயிட்டு வரேன்.” மனைவியிடம் சொல்லிகொண்டு வெளியே புறப்பட்டார் அன்புசெல்வன்.

“கணவனின், பேச்சை கேட்டு, மகள் மீது உயிராக இருக்கும், தந்தை எந்த பெண்ணுக்கு கிடைக்கும், அப்பாவின் பேச்சை கேட்டு நடக்கும் மகளுக்கிடையே, மகளின் பேச்சை கேட்டு நடக்கும் தந்தையை இப்பொழுது மட்டும் இல்லை, அவள் பேச ஆரம்பித்த பொழுதில் இருந்தே பார்த்துகொண்டிருக்கிறார் சித்ரா. தன் பரம்பரையின் ஒரே வாரிசான ஹேத்தான்சிகாவின் மீது அன்புசெல்வனுக்கு அதித பாசம் இருக்கிறது, எப்போது இருக்கும்.”

“அறையில்…, தான் வளர்க்கும் பூனையுடன், அம்மா,அப்பாவிடம், கோவப்பட்டது, பின் அவள் மேல், அவளின் அன்னை கோவப்பட்டது, பின் அவர்கள் இருவரும் பேசிகொண்டதை கேட்டதும் அவளுக்கு, தந்தையின் மீது தேவையில்லாமல் கோவப்பட்டது தவறோ எனத் தோன்றியது. அதை தான் அவளின் செல்லக்குட்டியான, யாழியிடம் சொல்லிகொண்டிருந்தாள்..,”

“அப்பா ரொம்ப வருத்தமா வெளிய போனார்..,யாழி. அவரு வருத்தப்பட்டு இப்போ தான் முதன் முதலா பார்க்குறேன்.., ஆனா எனகிட்ட சொல்லாம எப்படி முடிவு பண்ணலாம், சொல்லு…, எனக்கு என்ன செய்யுறதுனு தெரியலை யாழி. சொல்லு நான் என்ன பண்ணட்டும். அப்பாகிட்ட எனக்கு சம்மதம்னு சொல்லிடவா.., ஆனா என் காதல்…. அவள் தலையில் கை வைத்து, என்ன செய்வது எனத்தெரியாமல் அந்த பூனையை பார்த்து கொண்டிருந்தாள்.”

“அவளுக்கு யாழி என்றால், அவளின் தந்தைக்கு அடுத்து உள்ள பாசமான குட்டி தேவதை, இன்பமோ, துன்பமோ,சண்டை, என எல்லாமே அந்த பூனையுடன் தான் அவளுக்கு, அவள் அந்த பூனையுடன் செய்யும் அட்டகாசத்தை சித்ராவே கோவம்படும் அளவுக்கு இருக்கும். ஏன்னென்றல் ஒரு நாளைக்கு அந்த பூனையின் உணவு நேரம் அவர்களுடன் தான் , டைனிங்க் டேபிளில் அவர்கள் அமர்ந்து சாப்பிடுவார்களோ இல்லையோ, முதல் ஆளாய்  யாழி அமர்ந்திருக்கு, இது சித்ராவுக்கு பிடிக்காது இதனால் ஹேத்துவிடம் சொன்னால், என் யாழியும் என்கூட தான் இருக்கும், சாப்பிடும், அவள் அன்னையிடமே சண்டை போடுவாள். ஹேத்துவை, சிறு அளவுக்கு கோவப்படுத்தினால், கோவப்படுத்தியவரை, யாழிக்கு பிடிக்காது. அவர் மீதோ இல்லை அவரின் பொருள் மீதோ… அதுவின் செயல் மிகவும் மேசமாக இருக்கும், (அதாங்க பாத்ரூம் போயிடும்), இதனால் பாதிக்கப்பட்டது, ஹேத்துவின் அத்தை மகன் தான் மிகவும் பாதிக்கப்பட்டான். அதனாலே அவன், அந்த பூனையுடன் எந்த வம்பும் வைத்துகொள்ள மாட்டான்.”

“ அந்த பூனைக்கு என்ன தோன்றியதோ…, அவளின் தலையில் இருந்து கையை தன் முன்னங் காலால் தள்ளிவிட்டு, பக்கதில் இருக்கும் அவள் தந்தையுடன் மட்டுமே எடுத்துகொண்டே, போட்டோவில் தன் நாவினால், நக்கிகொடுத்தது, அதில் அந்த பூனை குறிப்பாக அவளின் தந்தையின் மீது நக்கிகொண்டிருந்தது. இதை பார்த்த ஹேத்து, பூனையின் செய்கை, அவளின் தந்தையின் முடிவுக்கு சம்மதம் சொல்ல வைத்தது…”

“சரி சொல்லுறேன், ஆனா இப்போ செஞ்ச மாதிரி என் அப்பாவ நீ லிக் பண்ணக்கூடாது, அவரு எனக்கு மட்டும் தான் அப்பா, உனக்கு இல்லை..,” அந்த பூனையிடம் கூட தன் தந்தை தனக்கு மட்டுமே சொந்தம் என பாசத்துடன், பேசினால்.

“இரவு உணவு அருந்தும் வேளையில்… அவளின் தந்தையிடம் பேச ஆரம்பித்தாள். “ அப்பா.. எனக்கு இதுல சம்மதம், நீங்க பார்த்த மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்ணிகிறேன். நீங்க என்னைக்கும்,யார்கிட்டயும் தலைகுனிஞ்சு நிக்க கூடாது. எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்ப்பா.., நீங்க சோகமா இருக்காதீங்கப்பா, பிளீஸ்ப்பா.. உங்ககிட்டயும் அம்மாகிட்டயும் காலையில சண்டை போட்டதும், உங்களை எதிர்த்து பேசுனதுக்கு, சாரிப்பா…,அவள், அன்புசெல்வனிடம், கையை பிடித்து அவளின் தவறுக்கு மன்னிப்பு கேட்டும், அவளின் சம்மத்தை சொன்னதும். அன்புசெல்வனுக்கு சந்தோஷம் என்றாலும், ஒருவேளை, தனது மனவருத்தை பார்த்து தான், சம்மதம் சொல்லிருக்கிறாள். அவளுக்காய் மனதுக்கு பிடித்து சம்மதம் சொல்லவில்லை என சரியாக புரிந்துகொண்டார்.

“ஹேத்துமா, அப்பாவோட மனவருத்ததுக்காக, உன் சம்மதம் எனக்கு வேண்டாம். உன் மனசு என்ன சொல்லுதோ அப்போ வந்து சொல்லு, அதுவும் முழுமனதுடன் சம்மதம் சொல்லனும் என்கிட்ட.., சரியா. இப்போ சாப்பிட்டு, நிம்மதியா தூங்கு, அப்போ தான் யோசிக்கமுடியும். இப்போ சாப்பிட்டு தூங்க போ…, நாளைக்கு தெளிவான முடிவ என்கிட்ட சொல்லு அப்போ நான் சந்தோஷமா அதை ஏத்துகிருவேன், சரியா. முதல சாப்பிடு.” அவளின் நிலையை அவளுக்கே புரியவைத்து சொன்னார்.”

“என்னங்க, இன்னும் யோசனையா இருக்கேங்க, மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டேங்களா.., கல்யாணத்தை நிறத்த சொல்லி…,” அன்புவின் யோசனையான முகத்தை பார்த்து, சித்ரா கேட்க…

“இல்லைமா, இன்னும் அவங்ககிட்ட சொல்லல…, ஆனா என் பொண்ணோட மனமாற்றத்துக்கு யாரு காரணம்.., அதான் யோசிக்குறேன்.., ஒன்னு நம்ம கிஷோரா இருக்கனும், இல்லை யாழியா இருக்குமோனு யோசிக்குறேன். இருந்தாலும், ஹேத்து நாளைக்கு முழுமனசோட சொல்லனும், இந்த கல்யாணத்துல சம்மதம்னு.. அப்போ தான் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்.., இல்லைனா.. என் பொண்ணோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.”

“ கிஷூ தான், இங்க இல்லையே, யாழிக்கு அவ பேசுறதே புரியாது, அப்போ எப்படி??., “ சித்ராவும் யோசிக்க.

“(இவர்களுக்கு தெரியாது, ஹேத்து சிறு கோபமாகவோ, வருத்தமாகவோ இருந்தாளும், அது அந்த பூனையின் கண்ணுக்கு தப்புவது இல்லை)

”பார்க்கலாம், நாளைக்கு என் பொண்ணு என்ன முடிவோட இருக்கானு, இப்போ தூங்க போகலாம் வாம்மா.. சித்ராவை அழைத்துகொண்டு அவரின் அறைக்கு சென்றார்.”

”அன்புசெல்வன் – சித்ரா, பெரியேர்களால் நிச்சயக்கப்பட்டு, நடந்த கல்யாணமாக இருந்தாலும், அன்றும், இன்றும் காதலர்களாக ஒருவரை, ஒருவர் புரிந்துகொண்டும் வாழும் தம்பதிகள்…., இவர்களுக்கு ஒரே செல்ல மகள், ஹேத்தான்சிகா. அன்புசெல்வனின் பாசமான தங்கைகூட, மகளுக்கு அடுத்து தான். அன்புசெல்வன், சென்னையில் வசிக்கும் பாதி பணக்கார்களில் இவரும் ஒருவர். இவரின் தொழில், லாரி சர்வீஸ் மற்றும்,  மூன்று ஹோட்டலுக்கு , சொந்தக்காரர். அன்புசெல்வனுக்கு ஒரே தங்கை, சகுந்தலா. இவரின் கணவர் ரவிக்குமார், சொந்தமாக மூன்று சூப்பர் மார்க்கட் வைத்து நடத்துகின்றார். இவர்களுக்கு ஒரே மகன் கிஷோர். சகுந்தலா தம்பதியர்க்கு ஹேத்துனா செல்லம், அதே மாதிரி, சித்ரா –அன்பு செல்வனுக்கும் கிஷோர், குடுபத்தில் மூத்த மகன் போல, அவன் எது சொன்னாலும், நம்புவார்கள், ஆனால் அவர்களின் செல்ல மகள், அன்பு மகளை பற்றி புகார் கூறினாலும் அவர்கள் நால்வரும் நம்பவேமாட்டார்கள். அப்படி ஒரு பாசம், நம்பிக்கை அவள் மீது. கிஷோர், ஹேத்துவை விட நான்கு வயது பெரியவன், பெரியவன் என்ற மரியாதை எல்லாம் அவனுக்கு கொடுக்கமாட்டாள் ஹேத்து. அவனும் விரும்பமாட்டான்.”

“அவன் காதல்

என் கனவு என்று நினைத்திருந்தேன்…

அவன் காதல்

கடந்த காலமாகிவிட்டது, என எண்ணிருந்தேன்…

அவன் காதல்

இன்றோ என் வாழ்வின் முடிவுரையா????”

“அம்மாக்கு இப்போ எப்படி இருக்கு அங்கில்”

“ நல்லா இருக்காங்கப்பா, ஏன் இன்னும் கவலையா இருக்க…, அம்மாக்கு ஒன்னும் இல்லை சரியா.., நீ இப்படி கவலைப்பட்டா அம்மாக்கு தானே கஷ்ட்டம், அம்மா முன்னாடி இப்படி இருந்தா அவங்களுக்கு மறுபடியும், பிபி ஏறிடும், சுகர் கூடிடும், அப்புறம் என்ன நடக்குனு உனக்கு சொல்ல தேவையில்லை.., இந்த நிலை தான்.” அவர் சொல்ல.

“சாரி அன்கில், அம்மா முன்னாடி நான் இப்படி இருக்கமாட்டேன்.., அவங்களுக்கு சரியாகிடும்ல அங்கில்”

“சீக்கிரம் உன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு…, அம்மா இருபத்தினாலு மணி நேரத்தில அம்மா சரியாகிடுவாங்க” அவனின் அன்னையின் நிலையை சொன்னார்.

“ என் கல்யாணம், புரியலை அங்கில்”

“இங்க பாருப்பா ரகு அவங்க உன் கல்யாணத்துக்காக தான் உயிரை கையில பிடிச்சுட்டு இருக்காங்க.  அவங்க உடம்பு சரியாகனும்னா எல்லாம் உன் கையல தான் இருக்கு. அம்மாவ பார்த்துக்க” அவனின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார்.

“அம்மா, இங்க பாருங்கம்மா.., ஏன்மா உங்க உடம்ப இப்படி கெடுத்துகிறேங்க.., நீங்க நல்லா இருந்தா தான் நானும்,அப்பாவும் நல்லா இருக்க முடியும், நீங்க மட்டும் இல்லையினா நாங்க இல்லம்மா…, அப்பாவுக்கு, உங்க உடல் நிலையை பற்றி இன்னும் நான் சொல்லலமா.. அவருக்கு தெரிஞ்சா உடைஞ்சு போயிருவாங்க…, நீங்க நல்லபடியா குணமாகி வாங்கம்மா…, நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். கல்யாணம் தானேம்மா பண்ணிக்கனும், கண்டிப்பா நீங்க பார்க்குற பொண்ணை கல்யாணம் செஞ்சிகிறேன்மா…, என்னை தவிக்கவிடாதேங்கம்மா…, எழுந்து வாங்கம்மா.. பிளீஸ்மா.., “ கௌசல்யாவின் கையை பிடித்துகொண்டு சிறுகுழந்தை போல் அழுதுகொண்டிருந்தான்.. அவன் வாழ்வில் இன்றுதான் முதல் முறையாக அழுகிறான்..

“ராஜரத்தினம் – கௌசல்யா… இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் கல்யாணம் செய்துகொண்டாலும், அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்… அப்படி ஒரு அன்யேன்யம் அவர்களுக்குள். இவர்களின் ஒரே மகன் ரகுநாத், முதுகலைப்பட்டம் பெற்று, சொந்தமாக கார் சோ ரூம் வைத்திருக்கின்றான்.. இவன் உழைப்பில் உருவான இந்த கார் சோ ரூம்,  மூன்றாவது ப்ராஞ்ச் வரை உருவாகியுள்ளது.., அதுமட்டுமில்லாமல் இவர்களின் சொந்த தொழிலாக, நூல் ஆலையும் உள்ளது. இதை கவனித்துகொள்ள அவனது தந்தை மட்டும் தான், இவனோ என்றாவது ஒரு நாள் மட்டுமே அந்த தொழிற்சாலைக்கு சென்று வருவான் அதுவும் அவன் அன்னையின் வற்புறுத்தலுக்காவே செல்வான்…,”

“இப்பொழுது அவனது கல்யாணம் பேச்சை ஆரம்பித்து ஒராண்டு ஒடிவிட்டது… ஆனால் அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பித்துகொண்டிருக்கான், ரகுநாத்.., இந்த வேளையில் தான் அவனது அப்பாவும் தொழிற்சங்கம் மீட்டிங்கை அட்டென் செய்வதற்க்கு, கோவை சென்றுள்ளார். அந்த வேளையின் இடையில் தான் கௌசல்யாவிற்க்கு இந்த உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது…,”

“லேசாக.., கையின் அசைவில் மகனின் தலையை கோதினார் கௌசல்யா.., அவரின் தலைகோதும் சுகத்திற்க்கே தினமும், தந்தையும்,மகனும் சண்டை போட்டுக்கொள்ள்வார்கள். கௌசல்யாவின் அன்புக்கு,பாசத்திற்க்கும் சொந்தம் கொண்டாட யாரும் வரகூடாது என இருவரும் நினைக்க., அவர்களுக்கு மேல கௌசல்யாவின் பாசத்திற்க்கும்,அன்புக்கும் நான் தான் முதல் சொந்தம் என அவர்களுக்கு மேல சண்டை போடவரும் ஒருவரும் இருக்கிறனர்…”

“ அவரின் அசைவில் முழித்துகொண்டான்..,. “அம்மா…, எப்படி இருக்கும்மா இப்போ…, தண்ணீர் குடிக்குறேங்களா…, இல்லை ஜூஸ் குடிக்குறேங்களா, என்ன வேணும் சொல்லுங்கம்மா…”

“ அவனின் பதற்றத்தை பார்த்த கௌசல்யா…, அவனை அருகில் வா  சகையில் கையை அசைக்க… “ என்னம்மா” அன்னையின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான்..

“ரகு…, அம்மா எது சொன்னாலும் கேட்ப்பியாப்பா…”

“ சொல்லுங்கம்மா, என்ன செய்யனும்”

“ நான் பார்த்த, பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கனும் செய்வியா…,”

“கண்டிப்பாம்மா, கல்யாணம் தானே பண்ணிக்கிறேன்மா.., எந்த பொண்ணு பார்த்தாலும் நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன்மா…, உங்க ஆசையை விட எனக்கு வேற என்னமா முக்கியம்” அவரின் கையில் கை வைத்து கூறினான்.

“இதுல உனக்கு மனப்பூர்வமா சம்மதம் தான… ரகு”

“எனக்கு சம்மதம்மா…”

“ நல்லா யோசிச்சுட்டேன்ப்பா… எனக்கு இந்த கல்யாணத்துல முழுசம்மதம், நீங்க பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிறேன்ப்பா…,” பேப்பர் படித்துகொண்டிருந்த அன்புசெல்வனிடம், கூறினால்.

“திடீரென்று, மகளின் பேச்சை கேட்டதும், அவர் பேப்பர் படிப்பதை நிறுத்திவிட்டு,, மகளின் சம்மததை கேட்டது சந்தோஷம் வந்தது… “சரிம்மா.. நான் மாப்பிள்ளை வீட்டுல பேசுறேன்”

“ அப்பா… நீங்க சந்தோஷமா இருக்கேங்களா…,”

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா…”

“ எனக்கும் அது தான் வேணும்ப்பா.., நான் ஃப்ரண்ட்ஸ பார்த்துட்டு வரேன்ப்பா அம்மா.., நான் போயிட்டுவரேன்.”

“சரிம்மா.., பார்த்து போயிட்டு வா…,”

“சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு ஹேத்து…”

“சரிம்மா”

“என்னங்க, அதான் நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டால இன்னும் என்ன யோசனையா இருக்கேங்க…” அவரிடம் கேட்டார் சித்ரா.

“என் பொண்ணு, என் சந்தோஷத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு போறா.., உனக்கு தெரியுதா.. சித்து…” மகளின் மனநிலையை சரியாக சொன்னார்.

“அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுது, அவளுக்கு எது சந்தோஷம் நமக்கு தானே தெரியும், எப்படி சம்மதம் சொன்னாலும் மாப்பிள்ளை ரொம்ப நல்லாவரா தெரியுறாருங்க… சீக்கிரம், அண்ணிக்கும், அண்ணாக்கும் சொல்லுங்க இல்லைனா, உங்களை திட்டமாட்டாங்க, என்னை தான் வீடு தேடி வந்து திட்டிட்டு போவாங்க…,” சகுந்தாலா, ரவியை நினைவில் வைத்து சொன்னார்.

“ஆமாம் சித்து…, என் தங்கச்சிக்கு சொல்லலைனா…, என்னைவிட்டுட்டு உன்னை தான் திட்டுவா…, அவங்ககிட்ட சொல்லிட்டு அப்படியே, மாப்பிள்ளை வீட்டிலையும் சொல்லனும்…, நல்ல நாள் பார்க்கனும்,” அவர் ஒரு லிஸ்ட் சொல்லிகொண்டே போக…, “என்னங்க…, இன்னும் மாப்பிள்ளை வீட்டுல இருந்து  நம்மபொண்ண பார்க்கவே வரலை அதுக்குள்ள நீங்க அடிக்கிகொண்டே போறேங்க…, முதல அண்ணிக்கு போன் பண்ணுங்க…”

“சரி சித்து… இதோ..”கையில் போனை எடுத்துக்கொண்டு, அவரின் தங்கைக்கு அழைத்து, ஹேத்துவிற்க்கு, மாப்பிள்ளை பார்த்தை சொல்ல…, அவரும் மகிழ்ச்சியில் நாளை வீட்டிற்க்கு வருவதாக சொல்லிவிட்டு வைத்தார்..

“எங்களுக்கும், என் பொண்ணுக்கும் உங்க குடும்பத்தையும், மாப்பிள்ளையும் பிடித்து இருக்கிறது…, எப்போ பொண்ணு பார்க்க வரேங்கனு சொல்லுங்க.., அதுக்கு ஏத்தமாதிரி, நாங்க எல்லாமே ரெடி செஞ்சு வைக்குறோம்மா..”

“எல்லாமே சிம்பிளா இருந்தா போது அண்ணா… எங்க வீட்டுல இருந்து அஞ்சு பேரு, மாப்பிள்ளையும் சேர்த்து தான், அண்ணா.., வந்து பொண்ணு பார்த்து, சின்னதா ஒரு மோதிரம் மட்டும் நம்மக்குள்ள மாத்திக்கலாம் அண்ணா.. கல்யாணத்துக்கு முன்னாடி, உங்க பக்கம் உள்ள சொந்தம், எங்க பக்கம் இருக்குற சொந்ததை அழைச்சு இவங்க தான் பொண்ணு, மாப்பிள்ளை அறிமுகப்படுத்திட்டா போதும்…, சரியண்ணா…, நாங்க வர்ர வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வரோம் அண்ணா…, ரொம்ப சந்தோஷம், அண்ணா..உங்க பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வருவதுக்கு.”

“எனக்கும் சந்தோஷம் தான்மா…, சரிம்மா, அதுக்கான வேலைய பார்க்கனும்,” அவரும் சொல்லிகொண்டு அழைப்பை வைத்தார்…

 

                                       காதல் தொடரும்…….

 

Advertisement