Advertisement

                                             துருவங்கள் 2

 

அந்த ஐடி வளாகம் முழுவதும் பிஸியாக இருந்தது,அதில் ஒருவன் மட்டும் வேலை செய்வோரை தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தான்,

“டேய் மச்சி வா இன்னைக்கு நியூ ஜாயினி வந்திருக்கானு பார்த்துட்டு வரலாம்”என்று பிரகாஷ் வேலை செய்து கொண்டு இருந்த அவன் தோழனிடம்  நச்சரித்தான்.

‘பிரகாஷ் பிளிஸ் நான் இந்த எரர் அஹ கண்டிபிடிச்சு சார்கிட்ட சொல்லணும் இல்லையினா பாண்டியன் சார் என்னை மொறைச்சே கொல்லுவாரு’.

“டேய் அந்த கிராமத்து பைல்வான் இன்னும் ஹெட் ஆபிஸ் ல இருந்து வரல வா போயிட்டு வரலாம்”

‘ஆளா விடு,எனக்கு என் வேலை முக்கியம்’

“நீ இப்படீயெல்லாம் சொன்னா சரிபட்டுவரமாட்டா,என்று அவன் தோழன் போனை எடுத்துகொண்டு சென்றுவிட்டான்”.

‘பிரகாஷ் என் போன் கொடு,என்று அவனும் பின்னோடு சென்றான்’.

“டேய் மச்சி பாருடா எவ்ளோ அழகான பொண்ணுங்க இதை மிஸ் பண்ணுரையே ,புதிதாக சேர்ந்த பெண்களை சைட் அடித்துக்கொண்டு இருந்தான்”

‘பிரகாஷ் வா போகலாம் சார் வந்தாங்கனா,மாட்டிகிட்டு முழிக்கபோறது நாமதான்’

“அந்த கிராமத்து பைல்வான் என்னை பார்த்தாலே நடுங்குவான்,அவன்கிட்ட நான் முழிப்பிதுங்கி நிக்கபோறேனா,அவன் என்னோட தம்பி மாதிரி,நான் எது சொன்னாலும் சரிங்க அண்ணானு சொல்லுவான்”என்று அவன் போக்கில் பேசிக்கொண்டு இருக்க,அவனின் தோழன் அப்போ சார் நீங்க பிரகாஷ்க்கு தம்பியா என்று பிரகாஷின் பின்புறம் நின்றுயிருந்த பாண்டியனிடம் கேட்டான்”

“டேய் அந்த பைல்வான் தான் ஹெட் ஆபிஸ்க்கு போயிருக்கான் நீ என்னனா என் பின்னாடி பேசிட்டு இருக்குற,யாரு டா எனக்கு தம்பி” என்று பிரகாஷ் திரும்பி பார்க்க அங்கு பாண்டியன் நின்று பிரகாஷை நன்றாக முறைத்துக்கொண்டு இருந்தான்.

‘அய்யோ இந்த பைல்வான் சும்மாவே என்னக்கு ப்ரோக்ராம் கொடுத்து வேலை வாங்குவான் இதுல என் வாய் சும்மா இருக்கமா பைல்வான்கிட்ட மாடிவிட்டுச்சே’என்று தனக்குளே புலம்பிக்கொண்டே அவனிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக நின்றுகொண்டு இருந்தான்.

“கம் டு மை ரூம் பிரகாஷ்”சிங்கத்தின் கர்ஜினையுடன் சொல்லி சென்றான்.

“பிரகாஷ் இப்போ எதுக்கு சார் உன்னை அவரு ரூம்க்கு கூப்பிடுறாரு, ஸ்பெசலா உனக்கு ஏதோ கொடுக்க போறாரு போடா சார் கூப்பிட்டு அரைமணி நேரம் ஆச்சு”என்று அவன் பங்குக்கு கலாய்த்து அனுப்பினான்.

‘கடவுளே அந்த பைல்வான் இன்னை எந்த கஷ்ட்டமான வேலையும் கொடுத்துடகூடாது அப்படி மட்டும் என் வேண்டுதலா நிறைவேத்துனேனா அந்த பைல்வான பாதையாத்திரைக்கு கூப்பிட்டு வரேன் என்று வேண்டிக்கொண்டு ‘மே கமீன் சார்’ என அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

“இந்த பைல் அஹ எல்லாம் ப்ரோக்ராம் டிடைல்ஸ் இருக்கு ஆனா இது ஆடர் படி இல்லை சோ ஆடர் பண்ணி கொண்டுவா”என்று அவன் வேண்டுதலுக்கு ஆப்பு வைத்தான்.

‘சார் இந்த ப்ரோக்ராம் ஏற்கனவே அனிதா பண்ணிட்டாலே அப்புறம் எதுக்கு நான் தனியா பண்ண’

“ஹ்ம்ம் அந்த ப்ரோக்ராம் எனக்கு பிடிக்கல,அதனால நீங்க முதல இருந்து சரிபண்ணி கொண்டுவாங்க,லெட்ஸ் கோ”என்று அதிலும் ஆளுமை திறன் இருந்தது.

‘இன்னைக்கு அந்த கடவுள்தான் என்னை காப்பத்தனும்’என்று அவன் கொடுத்த பைலை தலையில் வைத்துகொண்டு அவன் இடத்திருக்கு சென்றான்.

“எஸ்க்யூ மீ மே ஐ கமீன்”

“எஸ் கமீன்”

“ஹாய் சார் ஐம் தெய்வப்ரியா,ப்ரம் சென்னை,ஐம் நியூ ஜாயின் திஸ் கம்பெனி,திஸ் மை பைல்”என பாண்டியனிடம் தன்னை அறிமுகப்படுத்திகொண்டு வேலைக்கான லெட்டரை கொடுத்தாள்.

“அவனோ அதெல்லாம் முழுதாக படித்துபார்த்து அவளிடம் ஆங்கிலத்தில் ஒரு சில கேள்விகளை தொடுத்து அவளின் வேலைக்கான கடிதத்தில் கையெழுத்து போட்டான்”.

“சார் மை கேபின்”

‘ஒன் செக்’என போனில் ஒருவனை அழைத்து அவளை அவளிடத்தை காண்பிக்குமாறு கூறினான்.

“தாங்க்யு சார்”

‘யூ ஆர் வெல்கம்”

‘தெய்வப்ரியா திஸ் யூ ஆர் பிளேஸ்’என்று அவளுக்கு இடத்தை காட்டிவிட்டு சென்றான்.

“அவளோ பக்கத்தில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் பிரகாஷ் கண்ணில் பட்டான். “ஹாய் ஐம் தெய்வப்ரியா,நியூ ஜாயினி என்று அவனிடம் நட்புக்கரம் கோர்த்தால்”

‘ஹாய் ஐம் பிரகாஷ் ப்ரோக்ராமர் அண்ட் யூ’

“ஐம் ப்ரோக்ராம் லீடர்”என்று அவர்களுக்குள் பேச்சு வார்த்தை உணவு நேரத்தை தாண்டியும் சென்றது,அவனோ இங்கு இருக்கும் அனைவரைப்பற்றியும் கூறினான்.

‘பிரகாஷ் ப்ரோக்ராம் ஆர்டர் பண்ணிடேங்களா’என்று இடையில் பாண்டியன் கேட்க

“அவனோ, சார் ப்ரோக்ராம் எரர் காட்டுது சார் ஈவ்னிங்குள்ள முடிச்சுடுவேன் சார்”

‘இன்னும் ஒரு மணி நேரம்தான் உங்களுக்கு டைம் அதுக்குள்ள ஆர்டர் பண்ணி கொண்டுவாங்கா ஓகே’

“என்னாச்சு பிரகாஷ்”ப்ரியா கேட்க

‘அவனோ காலையில் இருந்து அவள் வருமுன் நடந்ததை சொல்லி முடித்தான்’

“ச்சு இவ்ளோதான கொடு நான் பண்ணிகொடுக்குறேன்”என்று அவன் வேலையை அரைமணி நேரத்தில் முடித்துகொடுத்தால்.

‘ஆனா பாண்டியன் சார் தெரிஞ்சா இன்னும் அதிகமா வேலை கொடுப்பாரு ப்ரியா’

“அவருக்கு தெரியாது,நீ போய் கொடுத்துட்டு வா,இன்னைக்கு உனக்கு நான் பார்ட்டி வைக்குறேன் போ”என்று அவனை அனுப்பி வைத்தால்.

‘என்ன பிரகாஷ் இது நீங்களா பண்ணுனேங்களா’

“எஸ் சார்,ஏன் இந்த கேள்வி”

‘ஓகே மறுபடியும் மத்தவங்க வொர்க டிஸ்டர்ப் பண்ணுறதை பார்த்தேன் இன்னும் ஹெவி பனிஸ்மென்ட் தான் யூ மே கோ’என்று அனுப்பிவைத்தான்.

“சார் கண்டுபிடிச்சாரா”என அவனிடம் கேட்டால்.

‘தெரியல ஆனா கண்டிப்பா நான் பண்ணலைன்னு தெரிஞ்சுஇருக்கும்.

“தெய்வப்ரியா உங்களை ஹச்ஆர்.பாண்டியன் வரசொன்னாங்க”என்று வேறொரு குழுத்தலைவன் கூறிசென்றான்.

‘நான் சொல்லலா’ என் பார்வை பார்த்தான்.

“சார் வரசொன்னேங்கலாமே”

‘எப்போ இருந்து,அன்னைதெரசா ஆனேங்க, அந்த கேள்வியில் அவள் முகம், புரியாத பாவனையில் இருந்தது,

“நான் பனிஸ்மென்ட் கொடுத்து பிரகாஷ்க்கு ஆனா அவன் பனிஸ்மென்டா நீங்க முடிசுகொடுத்து இருக்கேங்க அதான் கேட்டேன்”

‘சார்’என்று இழுத்து அவன் முகம் பார்த்தால்.

“இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் ஓகே”

‘ஓகே சார்’ ,ம்ம் நீங்க போகலாம்.

“என்ன அந்த பைல்வான் உன்னை அதிகமா திட்டிட்டானோ சரி விடு இதெல்லாம் நமக்கு சாதாரணம் இதுக்கெல்லாம் கவலைபட்டா நாம கிணத்துல குதிக்கவேண்டியது தான் வா பார்ட்டி வைக்குறேன் சொன்னேள எந்த ஹோட்டல் போகலாம்”என அவளை அதில் இருந்து வெளிக்கொண்டு வந்தான்.

‘உன்னகெல்லாம் சூடு, சொரணை எல்லாம் இல்லையா டா’

“அதெல்லாம் இருக்குறவன் கவலைப்படனும்”

‘அடப்பாவி உன்னை’என்று அவளும் அவனும் இன்னும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.

“பாண்டியன் தன் வேலைகளை முடித்துக்கொண்டு,முக்கியமான கோப்புகளை அதன் இடத்தில் வைத்துவிட்டு அவன் வீட்டிற்க்கு புறப்பட்டான்”

‘சாய்பாபா அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் தன்னுடைய பைக்கை நிறுத்தி படிக்கட்டில் ஏறி தன்னுடைய அப்பார்ட்மெண்ட் முன் அவனுக்காக காத்திருக்கும் நண்பனை பார்த்து சிறிதாக புன்னகைத்து,வீட்டை திறந்ததும் முதல் ஆளாய் உள்ளே நுழைந்தான் பிரகாஷ் என்கிற பிரம்மமூர்த்தி.

‘சாப்பிட்டியா பிரம்மா’

“சாப்பிடலனா நீ செஞ்சு கொடுக்கபோறையா,அதெல்லாம் இன்னைக்கு பிரியா ட்ரீட் வச்சா”.

‘ஹ்ம்ம் அது எனக்கு முன்னாடியே தெரியும்’

“அவனோ கோவமாக இருப்பதுபோல் முறுக்கிக்கொண்டு அவனின் அறைக்கு சென்றுவிட்டான்”

‘அப்பொழுது பாண்டியனின் கைபேசிக்கு அழைப்பு வந்தது, “சொல்லுங்கப்பா,எப்படி இருக்கேங்க,அம்மா,அத்தை,மாமா,எப்படி இருக்காங்க’என்று வரிசையாக கேட்டான்.

“எல்லாரும் நல்ல இருக்காங்க தம்பி நீ எப்படி இருக்க,

‘இப்போதான் வேலை முடிஞ்சு வந்தேன்ப்பா,அப்பா, வள்ளிம்மா எப்படி இருக்காங்கப்பா’என்று கேட்டான்.

“வள்ளி உன்கூட பேச காத்துட்டு இருக்கு,அதான் உனக்கு போன் போட்டு சொன்னே”

‘இதோப்பா இப்பவே அவங்களுக்கு கூப்பிட்டு பேசுறேன்,எல்லாம் நல்லா இருக்காங்களாப்பா’ ஒருவித தயக்கமாய் கேட்டான்.

“எல்லாரும் சுகம் தம்பி,நீ வள்ளிக்குபோன் போடு”என்று அவர் அழைப்பை துண்டித்தார்.

‘வள்ளிமா எல்லாரும் நல்ல இருக்காங்கதானே’என்று அவன் மனையாளுக்கு உடனடியாக போன் போட்டான்.

“அத்தான் ஏன் பதட்டமா பேசுறேங்க,இங்க நாங்க நல்லா இருக்கோம்”

‘இல்ல அப்பா குரலு ஒருமாதிரி இருந்துச்சு அதான்,கேட்டேன்’

“அத்தான் விசனப்படதேங்க,இங்க எல்லோரும் நல்லா இருக்காங்க,நீங்க வேலை முடிஞ்சு இப்போதான் வந்திருபேங்க முதல சாப்பிட்டுங்க அதுக்கடுத்து எனக்கு போன் போடுங்க”என்றால்.

‘சரிங்க வள்ளிமா,சாப்பிட்டு கூப்பிடுறேன்’என்று அவனும் தன் மனையாளின் குரலில் வித்தியாசம் உள்ளதை அறிந்தான்,ஆனால் உடனே கேட்டாள் சொல்லிவிடும் அளவிற்கு வள்ளி இல்லை,அவளிடம் எப்படி கேட்டால் உண்மை வெளிவரும் என்று அறியாத அளவிருக்கு அவள் கணவனும் முட்டாள் இல்லை,தன்னை சுத்தபடுத்திகொண்டு,சாப்பாடு அறையில் அவன் காலையில் செய்து வைத்த இட்லியும் காரச்சட்னியும் எடுத்து சூடு செய்து சாப்பிட்டான்.

“இங்க பாரு தெய்வா சாப்பிட வரப்போறையா இல்லையா,என்று அவளின் அன்னை கோபமாக கேட்க”

‘எனக்கு உன் சாப்பாடு வேணாம்’

“பிடிவாதம் பிடிக்காத தெய்வா,அடுத்தநாள் ஆபிஸ்க்கு இதேதான் பேக் பண்ணி கொடுப்பேன் ஓகேனா இப்போ நீ சாப்பிடாத”என்று அவளின் சாப்பாட்டை எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்க போனார்”

‘சரி கொடுங்க ஆனா திரும்ப இந்த உப்புமா செய்யகூடாது என்று பிடிக்காத உப்புமாவை சாப்பிட்டுமுடித்தால்’

“அம்மா இன்னைக்கு ஆபிஸ்ல எனக்கு ஒரு ப்ரிண்ட்” கிடைத்தையும் அவனுக்கு உதவி செய்ததுமுதல் அவனிடம் திட்டு வாங்கியது வரை சொல்லிமுடித்தாள்.

‘தெய்வா மத்தவங்களுக்கு உதவி பண்ணு ஆனா நீயே அவனோட ப்ரொக்ராம முடிச்சுகொடுத்தது தப்பு இனிமே இப்படி பண்ணகூடாது சரியா’

“ஹ்ம்ம் சரிமா,ஆனா அந்த ஹிட்லர் ரொம்ப பண்ணுறான்”

‘இப்படி எல்லாம் பேசக்கூடாது தெய்வா அவரு உன் மேலதிகாரி அவருக்கு மரியாதையை கொடுக்கணும்’

“ம்மா நீ எனக்கு அம்மாவை இல்லை அவருக்கா”

‘யாரா இருந்தாலும் மரியாதையை கொடுத்து வாங்கணும்,போ போய் படுத்து தூங்கு நாளைக்கு ஆபிஸ் கிளம்பனும்’

“சரி குட் நைட்”என்று அவளின் அன்னையை கட்டிபிடித்து சென்றாள்.

‘அவரின் மனதில் “பழைய நினைவுகள் வந்து போனது”’.

“எதுக்கு மாமா,அத்தானுக்கு போன் பண்ணுனேங்க”என்று கோபம் படமுடியாத அளவிருக்கு அவள் மென்மையாக கேட்டாள்.

‘வள்ளி நீ அவனை பிரிஞ்சு இருக்கமுடியாம தவிக்குற அதான் அவனுக்கு சொல்லி உன்னை சென்னைக்கு கூப்பிட்டு போக சொல்லபோறேன்’என்று முடிவுடன் கூறினார்.

“வேணாம் மாமா இது அத்தானுக்கு தெரிஞ்சா அவங்க வேலையில நான் சுமையா மாறிடுவேன்”

‘என்ன வள்ளி அவனோட மனைவி நீ,எப்படி சுமையா இருப்பேனு சொல்லுற’ இதுக்குதான் தம்பிய வெளியூருல வேலை பார்க்க அனுப்பமாட்டேனு சொன்னே ஆனா நீ “என் அத்தானோட ஆசையும் அவருக்கு பிடிச்ச உத்தியோகத்தை பார்க்கட்டும்”என்கிட்டே சண்டை போட்டு அனுப்பி வச்சு ரெண்டு மாசம் ஆகல அதுக்குள்ள நீ ஒழுங்கா சாப்பிடாம இருக்குற,எனக்கு நீயும் என் மகனும் ரொம்ப முக்கியம் வள்ளி’என்று சொல்லி கொண்டு இருக்கும் போது பாண்டியனிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘வேணாம் மாமா எதுவும் சொல்லதேங்க,அத்தான் மனசு ஒரு நிமிஷம் கஷ்டப்பட்டாலும் என்னால தாங்க முடியாது’ என்று கண்ணீர் வழிய கூறி சென்றாள்.

“முடிவாக அவனின் அழைப்பை ஏற்றார்,என்ன தம்பி சாப்பிட்டாய”

‘என்னப்பா வள்ளியம்மா ஒரு மாதிரி பேசுறாங்க உடம்பு சுகமில்லையா,நான் வேணா ஊருக்கு வரவா’என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி வள்ளி நம்மவீட்டு கிணத்துல குளிச்சனால தொண்டைகட்டிகிடுச்சு,நீ உன் மனசுல்ல எதையும் நினைக்கமா வேலையை முடிச்சுட்டு வா சரியா தம்பி”என்றார்.

‘ப்பா உண்மையில வேற எதுவும் இல்லையில’சந்தேகமாக கேட்டான்.

“வேற ஒன்னும் இல்லை தம்பி”என அவரும் முடிந்த மட்டும் பேசிமுடித்து வைத்தார்.

பாண்டியனின் அறையில் விளக்கு இன்னும் எறிந்த நிலையில் இருந்தாய் அறிந்து உள்ளே நுழைந்தான் பிரகாஷ்.

“என்ன பாண்டியா இன்னுமா தூங்கல”

‘இதோ தூங்க போறேன்’என்று சோர்வுடன் கூறினான்.

“தங்கச்சிக்கிட்ட பேசுனியா”

‘ம்ம் இப்போதான் பேசினேன்,ஆனா மனசுல்ல இருக்குறத சொல்லமாட்றாங்க,அதான் அப்பாகிட்ட கேட்டா பதில் கிடைக்கும் நினைச்சா அவரு என் வள்ளியம்மவுக்கு மேல இருக்குறாரு’என்று அவன் பேசியதை கூறினான்.

“நீ உண்மையில வேலை பார்க்கதான் சென்னை வந்தியா பாண்டியா,என்று சரியாக கேட்டான்”பிரகாஷ்.

‘ஏன் இந்த திடீர் கேள்வி’

“இல்லை ஆபிஸ் ஏழு மணிக்கு முடிஞ்சுடுச்சு,ஆனா நீ மட்டும் லேட்டா வீட்டுக்கு வர,அதும் உன்னை அடிக்கடி ஐஜி ஆபிஸ்ல பார்த்தமாதிரி இருக்கு அதான் கேட்டேன்” என்று அவனின் முகத்தைப்பார்த்தான்.

‘நீ என்னை மாதிரியே வேருயாரையோ பார்த்துட்டு பேசுற,நேரா ஆபிஸ் முடிச்சு வீட்டுக்குத்தான் வந்தேன் போ போய் தூங்குற வேலைய பாரு’என்று அவனை அறையைவிட்டு வெளியே அனுப்பினான்.

“உன்னை எப்படிதான் என் வள்ளி தங்கச்சி சமாளிக்குதோ,என புலம்பிக்கொண்டே தண்ணிர் எடுத்துகொண்டு சென்றான்”.

‘பாண்டியனுக்கு தூக்கம் துர சென்றது,அவன் எப்பொழுது அவனின் வள்ளியின் தாலாட்டு பாட்டில் உறங்கி பழகியவனுக்கு இந்த இரண்டு மாதமும் உறக்கம் அவனை தாமதமாக தழுவியது,அவன் நினைவில் அவளுடன் இருந்த அறையில் வள்ளியின் மடியில் தலை வைத்து அவள் அவன் தலை கோதி அவனுக்கு பிடித்தபாடல் பாடி உறங்க வைப்பாள்,

“வரம் தந்த சாமிக்கு பதமான லாலி”

அந்த பாடலுக்கே அவன் அவளிடம் உருகிவிடுவான்,

“நீ என் மனைவியா கிடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சு இருக்கணும் வள்ளிமா”என அவளை நெஞ்சில் தாங்குவான்.

‘போனின் மெசேஜ் சத்தில் தன் நினைவில் இருந்து வெளி வந்தான்’ அதில் “நீங்கள் கேட்ட விபரம் கிடைத்துவிட்டது” என்று ஒரு புதிய எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது.

“பாண்டியன் அதை படித்து பார்த்து, கொஞ்சம் மகிழ்ச்சியாகவும்,கொஞ்சம் சோகமாகவும் இருந்தான்”

‘இனி என் குடும்பத்துக்கு எதவித ஆபத்தையும் நெருங்கவிடமாட்டேன்’என தனக்குதானே உறுதி எடுத்துகொண்டான்.

“காலையில் ஐந்து மணிக்கு அந்த பெரிய வீட்டின் வாசலை ஒரு ஆளாய் சாணி கரைத்து தொளித்து,கூட்டி பெருக்கி,அந்த வாசலுக்கு ஏற்றவாறு கோலமிட்டு அதில் கலர் பொடி கொடுத்துகொண்டு இருந்தால் வள்ளி”

‘ஏன் தாயி நான்தான் வீட்டு வேலை எல்லாம் பார்க்குறேன் அப்புறம் ஏன் இந்த காலைபொழுதுல நீ மெனக்கெட்டு எழுந்திரிக்கனும்,நானே பார்க்கமாட்டேனா’என அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் கேட்க.

“இது என் வீடு பெரியம்மா,இந்த வேலை எல்லாம் நான்தான் பார்க்கணும், நீங்கதான் என்னை அடுப்படி பக்கமே விடமாற்றேங்க,நான் பாதி வேலையாவது பார்க்கணும் இல்லையினா எனக்கு கிறுக்கு பிடிச்சுக்கும்”

‘அது சரி நீ,இந்த வீட்டுக்கே மகராணி அப்படி இருக்க,உனக்கு வேலை செய்யத்தான் ஐயா எங்கள வேலைக்கு வச்சுஇருக்காங்க இப்படி நீ பண்ணது ஐயாவுக்கு தெரிஞ்சா என் ஒரு நாள் சம்பளம் போயிடும் தாயி’

“அய்யோ பெரியம்மா அப்படி எதுவும் ஆகாது நீங்க கொள்ளபக்கம் செடிக்கு தண்ணிவிடுங்க நான் எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு வரேன்”

‘சரி தாயி நான் போய் தண்ணிவிடுறேன்’

“சாமி, எந்த குறையும் இல்லாம எல்லாரையும்,இந்த ஊரையும் நீதான் பார்த்துக்கணும்”என்று சாமியிடம்கூட அனைவருக்கும் வேண்டும் இவளுக்கு,கடவுள் வைத்திருக்கும் திட்டம் அறியவிலல்லை.

“இன்னும் பத்துநிமிசத்துல ஆபிஸ் போகலேன்னா அந்த ஹிட்லர் மொறைப்பானே”என சிக்னலில் நின்று தனக்குதானே பேசிக்கொண்டு இருந்தால்.

“இன்னும் அஞ்சு நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள மிஸ்.தெய்வப்ரியா வந்தா மீட்டிங் அட்டென் பண்ணலாம்,இல்லையினா அவங்கள மீட்டிங் ஹால்க்கு அனுப்பதேங்க”என்று பியுனிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.

‘அய்யோ போச்சு இன்னும் பிரியாவ காணாம்,இவன் வேற பொசுக்கு பொசுக்குனு கோவப்படுறான்,ப்ரியா சீக்கிரம் வா’என பிரகாஷ் சொல்லிக்கொண்டு இருக்க.

“மீட்டிங் ஆரம்பித்தது”

‘ஆனால் அங்கு ப்ரியா வரவேயில்லை’

                                   துருவங்கள் தொடரும்………..

 

Advertisement