நினைவுகள் 5
“வசு எழுந்திரு இன்னும் என்ன தூக்கம் ஆபீஸ் கிளம்பவேணாமா மலரும் கண்ணனும் கிளம்பிட்டாங்களாம் வசு”என்று ஜானகி எழுப்பிக்கொண்டுஇருந்தார்.
மலர் “எதுக்கு டி இப்போ வேலைக்கு வரலேன்னு சொல்லுற”
வசு “எனக்கு பிடிக்கல”
கண்ணன் “அதுதான் ஏன்”
“அவள் எப்படி கூறுவாள் அவன் இவளை பார்த்து கண் அடித்தை”
வசு “அது வந்து….அந்த கம்பெனி பாஸ் அஹ பார்த்த கொஞ்சம் பயமா இருக்கு”என்று மாற்றிக்கூறினால்.
“ஹாஹா வசு உனக்கு பாஸ் அஹ பார்த்தா பயமா ஹாஹா என்று கண்ணனும்,மலரும் சிரித்துக்கொண்டுஇருந்தனர்”.
மலர் “உனக்குத்தான் டி எல்லோரும் பயபடுவாங்க,ஆனா முதல்முறைய ஒருத்தன பார்த்து பயப்புடுறா”.
கண்ணன் “சும்மா இந்த சாக்கு சொல்லமா ஒழுங்கா நாளைக்கு கிளம்பி இரு நாங்க வந்து உன்னை பிக்கப் பண்ணிக்குறோம் சரியா”
மலர் “ஆமாம் வசு எதையும் நினைக்கமா இரு ஓகே போகலாம் வாங்க” என்று அந்த காபி ஷாபில் இருந்து கிளம்பினர்.
“மலர்,கண்ணன்,வசு, இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை ஒருவர் கேட்டுகொண்டுஇருந்தார்.அவரோ உன்னை அவ்ளோ சீக்கிரமா நான் விட்டுவேனா” என்று எழுந்து சென்றார்.
கண்ணன் “ஜானுமா வசு கிளம்பிடாலா”என்றபடிவந்தான்.
“வசு கண்ணன் வந்துட்டான் கீழிறங்கி வா”
“வசு கண்ணாடி முன் தன்னை தயார்ப்படுத்திகொண்டால்,திடிரென்று என்ன நினைத்தாலோ அவளுக்கு அவளே பேசிக்கொண்டால்”
“இன்னைக்கும் என்னை பார்த்து கண்ணாசிமிடுனா அங்கேயே அவனுக்கு அடிதான்”என்றாள்.
ஜானகி “இன்னும் என்ன டி பண்ணுற”என்றபடி வந்தார்,ஒருமிடம் அவள் அழகில் வியந்து நின்றார்,அவளோ அம்மா நான் கிளம்பிட்டேன் வாங்க போகலாம்” என்று ஜானகியின் அருகில் வந்து நின்றாள்.
ஜானகி “ அழகா இருக்க வசு,அப்பிடியே உன் பெரியம்மா மாதிரியே இருக்க என்று அவள் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.
“சரி வா கண்ணன் வெயிட் பண்ணுறான்”கையோடு அழைத்துகொண்டு சென்றார்.
வசு “சரி மா போயிட்டுவரேன்” என்று கண்ணன், மலருடன் அவள் கிளம்பினால்.
மலர் “இன்னைக்கு 1st கம்பெனில வொர்க் பண்ணபோறோம் கோவிலுக்கு போட்டு போகலாம் கண்ணன்”
வசு “ஆரம்பிச்சுட்டா இவ,ஏன் டி இப்போ டைம் ஒன்பது ஆகபோகுது மலர் முதல் நாளே நாம லேட் அஹ போகனுமா,ஈவ்னிங் போகலாம் மலர்”.என்றால்.
நந்தன் “ராதா தேவ் ஆபிஸ் கிளம்ப்பிடானா”என்றார்.
தேவ் “ஐ அம் ரெடி டாட்”என்றபடி வந்தான்.
ராதா “வா ராஜா உனக்கு டிபென் எடுத்துவைக்கிறேன்”
நந்தன் “தேவ் இன்னைக்கு இவ்ளோ ஹாப்பி அஹ இருக்க”
தேவ் “நான் தேடின ஒன்னு எனக்கு கிடைக்கபோது டாட்”என்று கொஞ்சம் மெதுவாக கூறினான்.
நந்தன் “என்ன தேவ்”
தேவ் “ஒன்னுமில்லை டாட்,புது ப்ரொஜெக்ட் வொர்க் இன்னைக்கு ஆரம்பிக்கபோறோம்,அருண்தான் ஹெட் அஹ இருக்கபோறான்”என்று கம்பெனி விசயமாக சாப்பிகொண்டுடே பேசினார்கள்.
தேவ்வும் நந்தனும் ஆபிஸ் கிளம்பினர்.
கண்ணன் ,வசு,மலர், மூவரும் ஆபிஸ் வந்தனர்.
“ரிசப்ஷனிட்கிட்ட அவர்கள் அப்பாயின்மென்ட் லெட்டர் அஹ கொடுத்தனர்”
ரீசப்சனிட் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எம்.டி முக்கியமான மீட்டிங்ல இருக்காங்க”என்றார்.
வசு “ஓகே சார்”
மலர் “வசு நம்மகூட செலக்ட் ஆனாவங்கள காணோம்”
வசு “தெரியல இனிமே வருவாங்களா இருக்கும்”
ரீசப்சனிஸ்ட்,மலர் ,கண்ணன் இருவரையும் அழைத்து,இரண்டாம் தளம் செல்லவேண்டும் என்று கூறினார்”.
வசு “அப்போ நான்”
ரீசப்சனிஸ்ட் “சார் உங்களை அவர் ரூம்க்கு வரசொன்னார்.
மலர் “வசு நீ மறந்துடாய சார் உன்னை பர்சனல் பிஏனு சொன்னங்க”
வசு “ஓ ஆமாம் டி, ஓகே ஆல் தி பெஸ்ட் மலர் ,கண்ணன்”என்று அவர்களுக்கு வாழ்த்துகூறினால்.
மலரும் கண்ணனும் “வசுவிற்கு வாழ்த்துகூறி அவர்கள் இடத்துக்கு சென்றனர்.”
ரீசப்சனிஸ்ட் “மேடம் உங்கள சார் வரசொன்னார்”என்றார்
வசு “எந்தப்பக்கம் போகணும்”என்று கேட்டுகொண்டு தேவ்வை சந்திக்க சென்றாள்.
“வசு,தேவ்வின் அறையை நெருங்க தேவ்விற்கு இதயம் துடிக்க ஆரம்பித்தது”.
வசுவிர்க்கும் இதயம் துடிக்க,அவள் தேவ் அறையின் முன் நின்று “மே கமின் சார்”என்று கதவை நாக் செய்தால்.
தேவ் “சுகி,என்று கூறிக்கொண்டு,”எஸ் கமின்” என்றான்.
வசு “குட் மோர்னிங் சார்,அண்ட் திஸ் மை பைல்”என்றாள்.
தேவ் “வெரி குட் மோர்னிங் வாசுகி”என்று பைலை வாங்கி பார்த்தான்.பைலின் ஒவ்வரு பக்கத்தையும் திருப்பும்போது அவளையும் அவள் செய்கையும் பார்த்துகொண்டுஇருந்தான்.
தேவ் “ஓகே வாசுகி அதோ அங்க இருக்குறது உங்க கேபின்,தென் இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுக்காக நீங்களும் என்கூட மீட்டிங் வரணும் ஓகே” என்று அடுத்தடுத்த வேலையை அவளிடம் கூறினான்.
“வசுவோ ஒருநிமிடம் அதிர்ந்து பிறகு,அவன் சொன்னதை செய்ய ஆரம்பித்தால்”
தேவ் “வாசுகி இன்னைக்கு ஒரு டெண்டர் கோட் பண்ணனும் வாங்க”
வசு “ஓகே சார்”என்று அவள் கேபினில் இருந்து வந்தால்.
“தேவ் சொல்ல சொல்ல அவள் குறிப்பு எடுத்துகொண்டால்”
தேவ் “வாசுகி இந்த டாக்மென்ட்ல அருண்கிட்ட சைன் வாங்கிட்டு வாங்க”என்று அவளை அனுபிவைத்தான்.
“ஓகே சார்”
“தேவ் மனதில் சந்தோசமாக இருந்தான்,ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை”
“சுகி என்று மிகவும் மெல்ல அழைத்தான்”தேவ்.
வசு கதவின் அருகே செல்லும் போது அவன் “சுகி”என்று அழைத்ததும் அவள் நின்று திரும்பி பார்த்தால்.
வசு “சார் கூப்பிட்டேன்களா”
தேவ் “இல்லை நீங்க போங்க”என்றான்.
“இதுதான் என் சுகி அப்புறம் எதுக்கு டி என்னை தெரியாத மாதிரி நடிக்கிற,இனி என் காதல எப்படி உனக்கு புரிய வைக்கணும்னு எனக்கு தெரியும் சுகி”
அருண் கேபினில் “புது ப்ரொஜெக்ட் டிஸ்கசன் போயிகொண்டு இருந்தது,அதில் ஒவ்வருவரும் புது புது யுத்திகள் கூறினார்கள்”.
அப்பொழுது வசு வந்தால்.
வசு “சார்”
அருண் “வாங்க வாசுகி என்ன விஷயம்”
வசு “பாஸ் உங்ககிட்ட இந்த பைல் அஹ சைன் வாங்கிட்டு வரசொன்னார்”
அருண் “இங்க கொடுங்க,ஒன் மினிட் ப்ரிண்ட்ஸ்”
வசு அங்கு மலரையும்,கண்ணனையும் தேடிக்கொண்டு இருந்தால்,
கண்ணன் “மலர் இது புரியவே இல்லை” என்று ஒரு பைலை காட்டி பேசிக்கொண்டு இருந்தான்.
மலர் “எனக்குமே புரியல கண்ணா சார்கிட்ட கேட்கலாம்”
வசு “என்னமோ இவங்கதான் இந்த ப்ரொஜெக்ட்ல முதல் ஆளா செய்யபோரமாதிரி ரொம்ப டிஸ்கஸ் பண்ணுதுங்க சரி இல்லையே”என்றாள்.
அருண் “இந்தாங்க சைன் பண்ணிட்டேன் அப்புறம் சார் அஹ எப்போ மீட் பண்ணனும் எப்போ ப்ரீயா இருப்பாங்க வாசுகி”என்றான்.
வசு “தெரியல சார் நான் சார்கிட்ட கேட்டுசொல்லுறேன்”என்று கூறி வெளியேறினால்.
“ஓகே வாசுகி”
கண்ணனும் ,மலரும் தங்களது சந்தேங்களை கேட்டு,அவர்களுக்கு பயிற்சிகொடுத்தான்.
வசு “சார்,அருண் சார் உங்கள எப்போ மீட் பண்ணலாம் கேட்டேங்கா”
தேவ் “ஓகே நானே பேசிக்கிறேன்”
இப்படியாக அந்தநாள் முடிவுக்கு வந்தது,
மலர் ,கண்ணன் இருவரும் வசுவிர்க்கா காத்துக்கொண்டு இருந்தனர்.
வசு “கையில் இருக்கும் வாட்ச் அஹ பார்க்க,தேவ்வின் முகத்தை பார்க்க,இப்படியாக இவள் செய்தால்.
தேவ் “வாசுகி இந்த பைல் அஹ உங்க கேபின்ல இருக்கட்டும்,என்று கூறி நிமிர்ந்து பார்த்தான்.
“அவள் செய்ததை பார்த்துவிட்டு,அவனும் கடிகாரத்தை பார்த்தான்”
“ஓ மேடம் கிளம்ப நேரமாச்சா”
தேவ் “ஓகே வாசுகி நீங்க கிளம்புங்க,நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு வெளிய, அதனால உங்க வீட்டுல சொல்லிடுங்க அப்புறம் உங்க ப்ரிண்ட்ஸ்கிட்டயும் சொல்லிடுங்க ஓகே நீங்க போகலாம்” என்றான்.
வசு “ஓகே சார்” என்று தன் கைபையினை எடுத்துக்கொண்டு தேவ்விடம் கூறிக்கொண்டு வெளியேறினால்.
தேவ் அவள் போவதையே பார்த்துகொண்டு இருந்தான்.
மலர் “டேய் கண்ணா வசு வந்துட்டா வா”
கண்ணன் “ஒருவழியா வந்துட்டால”
வசு “சாரி டி,சாரி டா”என்றுபடி வந்தால்.
மலர் “வசு கோவிலுக்கு வேற போகணும் மறந்துடாய இவ்ளோ லேட் அஹ வர்ற”
வசு “நான் என்ன டி பண்ணட்டும் நாளைக்கு செய்யவேண்டிய வேலையையும் சேர்த்து முடிச்சுட்டுவந்தேன் டி”
கண்ணன் “சரி வா கோவில்லுக்கு போகலாம்”
மலர் “வேணாம் இன்னொருநாள் போகலாம்”என்று மூவரும் வீட்டிற்க்கு கிளம்பினார்கள்.
சசி “என்ன சொல்லற சரண்”
சரண் அவளை முதலில் பார்த்ததில் இருந்து கூறினான்.
சசி “நம்ம விணுக்கு,அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு சோகம் நடந்திருக்க கூடாது சரண்”
சரண் “எல்லாம் விதி”
சசி “இப்போ என்ன செய்யபோற”
சரண் “தேவ்கிட்ட உண்மைய சொல்லபோறேன் சசி”
சசி “வேணாம் சரண் சொன்னா கேளு”
சரண் “இல்லை சசி இப்போ தேவ்கிட்ட நடந்த உண்மைய சொல்லபோறேன்”என்று காரை நோக்கி சென்றான்.
சசி அவனை தடுத்தபடி வந்து நின்றான்.
சசி “சரண் வேணாம் சொன்ன கேளு”
சரண் “பாவம் டா தேவ்”
சசி “அப்போ அந்த பொண்ணு”
சரண் “என்ன சொல்லுற சசி”
சசி,சரணிடம் ஒருவாறாக கூறி சமாதானம் செய்தான்.
தேவ்விடம் இருந்து சரணுக்கு அலைப்புவந்தது.
சரண் “சொல்லு தேவ்”
தேவ் “சரண் உன்கிட்ட பேசணும் எப்போ ப்ரீயா இருப்ப”
சரண் “நான் இப்போ ப்ரீயா அஹ இருக்கேன் தேவ் எங்க மீட் பண்ணலாம் சொல்லு”
தேவ் “********ஹோட்டல் அஹ மீட் பண்ணலாம்”
சரண் “ஓகே தேவ்”
சசி “தேவ் எதுக்கு உன்னை மீட் பண்ணனும் சரண்”
சரண் “அவன் புது ப்ரொஜெக்ட்ல நானும் இன்வால் ஆகிருக்கேன் சசி அதுக்குதான் போன் பண்ணிருகான்”என்றான்.
சசி “ஓகே சரண் நான் கிளம்புறேன்,அதையே நினைக்காத சரியா வா போகலாம்” என்று இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
ஜானகி “என்னங்க யசோதா அக்காவும்,ராமன் மாமா எப்போ வராங்க”என்று கேட்டார்.
ராமகிருஷ்ணன் “தெரியல ஜானகி”
ஜானகி “நம்ம இலக்கியனுக்கு அவங்கதான முன்னாடி நின்னு செய்யணும் அதான் கேட்டேன்”
கிருஷ்ணன் “நானும் அதைதான் விரும்புறேன் ஜானகி”
ஜானகி “வசு அவங்கள ரொம்ப மிஸ் பண்ணுறாங்க,முதல் நாள் ஆபிஸ் கிளம்பும்போது யசோ அக்கா மாதிரி இருக்கேனு சொன்னே அதுக்கு அவ என்னை முறைச்சு பார்த்துட்டு போறாங்க”.
கிருஷ்ணன் “பின்ன இருக்காத,அவகிட்ட சொல்லாம ஊருக்கு போனாங்க, அந்த கோவம் இப்போ வரை போகல”
ஜானகி “என்ன இருந்தாலும் வசு அவங்க பொண்ணுதானே அதான் அக்காவ மாதிரியே கோவம் வருது”
கிருஷ்ணன் “ஆமாம்”
ஜானகி “நாளைக்கு ராதா அண்ணி வீட்டுக்கு போய் நிச்சியத்துக்கு நேருல அழைச்சுட்டு வரணும்”
கிருஷ்ணன் “நல்லவேளை ஞாயாபகப்படுத்தின ஜானகி காலையில நீயும் நானும் போய் அழைச்சுட்டு வரலாம்”
ஜானகி “சரிங்க”
ராதா “என்னங்க தேவ்க்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்கணும்”
நந்தன் “பார்த்துட்டா போச்சு ராதா,அதுக்கு நம்ம பையன் ஒத்துக்கணும்”
ராதா “அவன் ஏன் இப்படி பண்ணுறான் தெரியலங்க”
தேவ் “என்ன மா, யாருக்கு பொண்ணு பார்க்கணும்”என்று வந்தான்
ராதா “உனக்குத்தான் ராஜா”
தேவ் “சரி மா,ஆனா இப்போ வேணாம் நான் சொல்லுறேன் அப்போ பாருங்க”
ராதா “என்ன ராஜா சொல்லுற”.
தேவ் “சப்ரைஸ் மா” என்று மாடியேறி சென்றான்.
“ராதா தேவ்வை அழைக்க அழைக்க அவன் சென்றுவிட்டான்”.
“என்னங்க இந்த பையன் இப்படி சொல்லிட்டு போறான்,உங்களுக்கு எதாவது புரிஞ்சுதா”என்றார்.
நந்தன் “என்னக்குமே ஒன்னும் புரியல ராதா,பாப்போம் அவன் சப்ரைஸ் அஹ”
சரண் “தேவ் உனக்கா ஹோட்டல் அஹ வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ எங்க இருக்க”
தேவ் “சாரி சரண் இதோ டென் மினிட் ல அங்க இருப்பேன்”என்று உடை மாற்றிக்கொண்டு கீழிறங்கி வந்தான்.
ராதா “எங்க கிளம்பிட்ட தேவ்”
தேவ் “சரண் அஹ மீட் பண்ணபோறேன் அங்கயே டின்னெர் முடிச்சுட்டு வந்துடுவேன் மா”என்றான்.
“பார்த்துபோயிட்டுவா தேவ்”
“பை மா”
சசி “சரண் தப்பித்தவறி தேவ்கிட்ட உளறிடாத சரியா,என்று ஆயிரம் முறை கூறிவிட்டு சென்றான்.
சரண் “சரி டா பார்த்துகிறேன் நீ கிளம்பு”
சசி, வெளியேற,தேவ் உள்ளே நுழைந்தான்.
தேவ் “சாரி சரண் கொஞ்சம் லேட்”
சரண் “பரவாயில்ல தேவ்,உனக்கு என்ன ஆர்டர் பண்ண”என்று இருவரும் சாப்பிட்டுக்கொண்டு தங்களது ப்ரொஜெக்ட் பத்தி பேசினர்.
சரன் “அருண் வரலையா தேவ் அவன்தானே உன் பிஏ,அவன் இல்லாம நாம பேசகூடாது”
தேவ் “நோ சரண் அருண் அஹ ப்ரொஜெக்ட் ஹெட் அஹ ப்ரொமோட் பண்ணிருக்கேன் அதான் அவன் கொஞ்சம் பிஸி அஹ இருக்கான்”
சரண் “வாவ் சூப்பர் தேவ்”அப்போ உன் புது பிஏ யாரு”
தேவ் “வாசுகிராமகிருஷ்ணன் புது கேண்டிடைஸ் டா”என்றான்.
சரண் “ஓ ஓகே டா”கிளம்பலாம்.
தேவ் “ஓகே டா நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம்”
சரண் “நோ தேவ் நாளைக்கு நான் புது கம்பெனி ஆரம்பிக்க பாண்டிச்சேரி கிளம்புறேன் வரதுக்கு ஒரு மாசம் ஆகும் அதுனால நீயே பார்த்துக்கோ,
தேவ் “ஓகே சரண்”
சரண் “தேவ் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆனா இப்போ முடியாது நான் திரும்பிவருபோது கண்டிப்பா பேசியே ஆகணும் தேவ்”
தேவ் “சரி டா பார்த்துபோயிட்டு வா”
சரணை வழியனுப்பிவைத்தான் தேவ்.
தேவ் “இந்நேரம் சுகி என்ன பண்ணிட்டு இருப்பா”என்று யோசித்துக்கொண்டு காரை இயக்கினான்.
“சாப்பிகொண்டுஇருந்த வசுவிற்கு புரையேறியது”
ஜானகி “பார்த்து சாப்பிட்டு வசு “என்று அவள் தலையில் தட்டிகொடுத்து தண்ணிகொடுத்தார்.
வசு “யாரோ நினைக்கிறாங்கமா”
ஜானகி “ஒழுங்கா சாப்பிட்டு தூங்கு வசு நாளைக்கு உனக்கு ஆபிஸ் இருக்கு”
“சரிமா”
ஜானகி “வசு உங்க ஆபிஸ்ல ஒரு நாள் லீவ் கேட்டுவா அண்ணனுக்கும், மலருக்கும், நிச்சயார்த்த ட்ரெஸ் எடுக்கணும்.”
வசு “பார்க்குறேன் மா,நான் பாஸ்க்கு பிஏ மா அதுனால லீவ் தருவாங்களானு தெரியல”என்றால்.
ஜானகி “கேட்டு பார்த்தா தான் தெரியும் வசு நீ வந்தா தான் மலர் வருவா”
வசு “பாருக்கிறேன் மா”என்று எழுந்து சென்றாள்.
வசு “அம்மா நாளைக்கு நான் லேட் அஹ தான் வருவேன் எம்.டிகூட வெளிய மீட்டிங் இருக்கு”
ஜானகி “நேரத்துல வந்துடு வசு”
வசு “சரிமா போன் பண்ணுறேன்”
தேவ்,தனது ஐபேட் ல் அவனுக்கு பிடித்த பாடலை ரீபிட் மோடில் வைத்தி கேட்டுக்கொண்டுஇருந்தான்.
“எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தில் பொம்மையடி
உன்னை பார்த்த பின்பு நான்
பால்நிலவின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி
மடியில் சாயும் போது
தாயும் நீயடி”
“அவ உயிரோட இருக்கானு எதை வச்சுசொல்லுற”
“இதோ அவ ப்ரிண்ட்ஸ்கூட இருக்கும் போது எடுத்த போட்டோ”என்று அவனிடம் காட்டினான்.
“இப்போ அவ தேவ் கம்பெனில வேலை பார்க்குறா அதுமட்டுமில்லை அவ தேவோட பர்சனல் பிஏ”என்றான் மற்றவன்.
“விடமாட்டேன் அவள,என் தம்பிய கொன்னுட்டு அவ சந்தோசமா இருக்கிறாளா வரேன் டி உன்னை துடிக்க துடிக்க கொல்லாம விடமாட்டேன்”
சுகிக்கு ஏற்ப்படபோகும் ஆபத்தை தேவ் அறிவானா????
உன்நினைவுகள் தொடரும்……….