Advertisement

                  நினைவுகள் 18

 

”அந்த பார்க்கில் வாசுதேவ் மட்டும் அமர்ந்திருந்தான்…..  “இன் என் சுகி….என் தம்பியோட காதலியா……என் தம்பி காதலிச்ச பொண்ணவா, நான் காதலிச்சேன் அய்யோ….கடவுளே….என்ன சோதனை….”கண்ணீ்ர் சிந்த…….அவன் அருகில் ஒரு அசரீரீ போல்…  ‘அழாத வாசு….நீ தான் அவளை முதல காதலிச்ச……அது தெரியாமதான், நான் காதலிச்சுட்டேன் வாசு…..நீ தான் என்னை மன்னிக்கனும்.’ விணுவின் ஆத்மா ஒலிக்க……ஆனால் அதை கேட்கத்தான் வாசுவால் முடியவில்லை…… “அந்த நேரம் பார்த்து…வானம், மழை பொழிய ஆரம்பிக்க….. அந்த மழையுடன் நனைந்துகொண்டே…அவன் கண்ணீரும் கரைய….மழையில் நடந்துகொண்டே….வீட்டிற்க்கு சென்றான்…..

‘தேவ் வந்தானாம….இங்க…..’

“இல்லை மாமா…அவர் இன்னும் வரலை…ஏன் மாமா” நந்தன் வாசுகியை கேட்க…

‘ஒண்ணும்மிலைமா…..ஆபீஸ்ல இருந்து அப்போவ கிளம்பிட்டானு அருண் சொன்னா….அதான்..வீட்டுக்கு வந்தானு கேட்டேன்மா வாசுகி…’

“ஓஓ….அவருக்குகாக தான் நான் காத்திருக்கேன் மாமா….வாங்க சாப்பாடு எடுத்து வைக்குறேன்..சாப்பிடுங்க….

‘இல்லைமா பசி இல்லை…..பால் மட்டும் குடும்மா…அத்தை எங்க…’

“அத்தை மாத்திரை போட்டு, தூங்க போய்ட்டாங்க மாமா…இருங்க பால் எடுத்துட்டுவரேன்….”

‘நந்தனுக்கு பால் சூடு செய்து…அவருக்கு கொடுத்தால்….நந்தன் பாலை குடித்துவிட்டு…அவளிடம்…காலியான டம்ளரை கொடுத்துவிட்டு அவர் அறைக்கு சென்றார்….’

“ஆனால் வாசுகியோ…தேவ்வின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தால்…..அவனும் வந்தான்….. வீட்டின் அழைப்பு மணி அடிக்க….வாசுகி கதவை திறந்து….அங்கு நின்றவனை பார்த்து அதிர்ந்தால்…..  ‘என்ன வசி இப்படி நனைஞ்சு போயிருக்கேங்க…..என்னாச்சு உங்களுக்கு…..’வாசுகி.. அவனை கேட்க……ஆனால் அவனோ அவளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளை தாண்டி சென்றான்….. “

‘என்ன வசி… நான் கேட்டுட்டு இருக்கேன் நீங்க… பதில் பேசாமா போனா என்ன அர்த்தம்….வசி….’வாசுதேவ்வை…மறைத்து நின்றுக்கேட்டால்….

“வாசுதேவ்வோ….மீண்டும் அவளை தாண்டி அவர்களின் அறைக்கு சென்றுவிட்டான்……வாசுகியோ என்ன செய்வதென்று தெரியாமல் அவன் போவதையே பார்த்துகொண்டிருந்தால்…..”

‘அவளும் சாப்பிடாமல்….டேபிள் மீதுள்ள சாப்பட்டை எடுத்து உள்ளே வைத்துவிட்டு, அவனை காண சென்றாள்…. ’

”வாசுதேவ்வோ…..குளியல் அறைக்கு சென்று….வேறு உடை அணிந்து கொண்டு வெளியே வந்தான்…..சரியாக..இவளும்…அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தால்…உள்ளை வந்தவளை கண்டுகொள்ளாமல்….மெத்தையில் படுக்க தயாரானான்……..” … ‘வசி…ஏன் அமைதியா இருக்கேங்க…..எதாவது… பிரச்சனையா….சொல்லுங்க வசி….’..வாசுகி, அவனின் தோள் மீது கை வைத்து கேட்டால்….’ ..”அவளை திரும்பி பார்த்துவன்… ஒரு பிரச்சனையும் இல்லை.. நான் தூங்குறேன்….”…..வாசுகியிடம் கூறிவிட்டு…அவன் உறங்க ஆரம்பித்தான்….

‘எந்த பிரச்சனையும்..இல்லையினா….ஏன் இப்படி அமைதியா இருக்காரு…… சரி நாளைக்கு, மாமாகிட்ட பேசலாம்….அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு….’ வாசுகி முடிவெடுத்துக்கொண்டு….மறுப்பக்கம் சென்று உறங்க போனால்…..’

“இருள் சூழ்ந்த அறையில்…..வாசு நின்றிக்க…….அவனுக்கு  எங்கோ அழுகை சத்தம் அவன் காதில் விழுந்தது…….அந்த சத்ததை கேட்டுக்கொண்டே…. நடந்தான்…..முழங்காலில்…முகத்தை புதைத்துகொண்டே….ஒரு பெண் அழுவதை பார்த்தவன்….அவளை நோக்கி  மெல்ல நடந்தான்….அவள் அருகில் சென்று தோளை தொட்டான்…. அப்பெண்ணோ….. அவனை திரும்பி பார்த்து…. “ஏன் வசி….என்கிட்ட மறைச்சேங்க….உங்க காதலுக்காக என் காதலை பிரிச்சுட்டேங்களே…..இப்போ உங்களுக்கு சந்தோஷமா…..சொல்லுங்க வசி இப்போ சந்தோஷமா…..எனக்கு, என் தேவ் வேணும்….அவரைக்கொடுங்க….. இல்லைனா….தேவ் போன இடத்துக்கே நானும், போய்டுவேன்…..” வாசுதேவ்வின் சட்டையை பிடித்துகொண்டு வாசுகி கதற……. ‘இல்லை…சுகி…. நான் மறைக்கல…..எனக்கு என்ன நடந்ததுனு தெரியாது…சுகி…நீயும், தேவ்வும்…. காதலிச்சது எனக்கு தெரியாது….சுகி என்னை நம்பு…..’…. “பொய் சொல்லாதேங்க வசி…..நான் போறேன்…என் தேவ் போன இடத்துக்கே நான் போறேன்….” வாசுகி…அருகில் இருந்த கத்தியை எடுத்து அவளது கழுத்தை அறுத்து கொண்டால்…..வாசுதேவ்வின் முன்னிலையிலே……”..சுகி…..சுகி…வாசுதேவ் கதற… அவன் முன்… “.வாசு….என் அம்மு என்கிட்ட வந்துட்டா….இனி என் ஆத்மா நிம்மதியா இருக்கு்ம்…போறோம் வாசு…..போறேன்…வசி..”.. விணுவும்,வாசுகியும்… வானதை நோக்கி அவர்களின் ஆத்மா போவதையே பார்த்துகொண்டிருந்தான்… ‘வேணாம்…சுகி..போகாத……சுகி….சுகி….’ வாசுதேவ் கத்திக்கொண்டே எழுந்தான்…..

‘எழுந்ததும் தான் தெரிந்தது…..அனைத்தும் கனவில் நடந்த்தது…என்று…..திரும்பி வாசுகியை பார்த்தான்….அவளோ….நிம்மதியாக….தூங்கிகொண்டிருந்தால்….. மெதுவாக எழுந்து அவன் அறையின் வெளியே சென்று, சோபாவில் அமர்ந்து ஒரு நிமிடம் தான் கண்ட கனவினை நினைத்து  பார்த்தான்……ம்கும்…அவனால் அவள் பிரிவைகூட தாங்கமுயாதவன்….தனக்கு தெரிந்த உண்மை மட்டும் அவளுக்கு தெரிந்துவிட்டால் , அவள் என்னை பிரியக்கூட தயங்கமாட்டால்…. இப்போ என்ன செய்வது…..இன்று வந்ததும் அவளிடம், பேசாமல் இருந்ததை என்னால் தாங்க முடியவில்லை…..இன்னும் எத்தனை நாளுக்கு அவளிடம் பேசாமல் இருக்க முடியும்….’வாசுதேவ் சிந்திக்க….அவனுக்க எதுவும் தோன்றவில்லை…..யோசிக்க,யோசிக்க….அவனுக்கு எந்த பக்கம் போனால் தன் மனைவியின் ஆக்ஸிடண்டை கண்டுபிடிக்க முடியும்…..எங்கே போய், யாரிடம் கேட்ப்பது….வாசுதேவ்….யோசித்தான்….

”தூக்கம் வராமல் நடந்தவன்….தாகம் எடுக்க…..கீழே இறங்கி….பிரிட்ஜில் இருந்த தண்ணீர் குடித்துவிட்டு…..அவன் அறைக்கு போனான்…., தேவ்வின் அறையை கடந்து போகும் போதும்…அப்பொழுதான் கவனித்தான்….தேவ்வின் அறையை… தேவ் இறந்த பொழுது… அவனின் அறையிலேயே இருப்பான்…..தேவ் அன்கு இருப்பது போல உணர்வு அவனுக்கு இருக்கும் தேவ்வின் அறையில் இருக்கும் போது……வாசுகியை கண்ட போது…அவளை பற்றிய நினைவிலேயே தேவ்வின் அறைக்கு…செல்லவதில்லை….மறந்துவிட்டான்…..இன்று…தான் அவனுக்கு எல்லாம் உண்மையும் தெரிந்ததும்….அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை……ஆனால் இப்பொழுது தேவ்வின் அறையின் முன் நின்று யோசித்தான்….. “தேவ்வுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும்…. எனக்கு தெரியாததை அவன் எழுதி வைத்திருக்ககூடும்….அப்படி இருந்தால் சுகிக்கு எப்படி ஆக்ஸிடென் நடந்தது என அவனுக்கு தெரியுமா…..இல்லை… ஒரு சின்ன க்ளுவாது எனக்கு கிடைச்சா போதும்….அதை வச்சு கண்டுபிடிச்சுடுவேன்….” தனக்கு தானே நம்பிக்கை வைத்துகொண்டு… தேவ்வின் அறையை திறந்தான்…..”

‘உள்ளே நுழைந்ததும்…..அவனுக்கு உடம்பெல்லாம் புல்லரிப்பு ஏற்ப்பட்டது….. இருக்கைகளையும் தடவிக்கொண்டு…..தேவ்வின் அறையை பார்த்தான்…..  ‘அழகாக அடுக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் அதன் இடத்திலேயே இருந்தது……சிறு தூசிக்கூட அவன் அறையில் இருக்காது அவவளவு சுத்தமாக வைத்திருப்பான் தேவ்…அதை நினைத்துகொண்டே…தேவ்வின் கப்போர்ட்டை திறந்தான்…..அதில் வாசுக்கும்,தேவ்வுக்கும்…ஒரு மாதிரி எடுத்த ரேமண்ட் சார்ட்டும், ஒவ்வொரு…விழாக்களில் அவர்கள் இருவரும் அணியும் கோர்ட்டுக் அழகாக தொங்கிக்கொண்டிருந்தது……இதெல்லாம் பார்த்த வாசுதேவ்….தம்பியின் நினைவில் அழுக ஆரம்பித்தான்….. “ஏன் தேவ்…என்கிட்ட சொல்லிருந்தான் சுகிய உனக்கிட்டேயே சேர்த்திருப்பேனே…இப்போ நான் என்ன பண்ணப்போறேன்…..” வாசுதேவ்….வருத்தப்பட்டான்…..’

“ஒவ்வொரு….இடமாக தேடினான்…தேவ் எழுதிய நாட்குறிப்பேட்டை….. தேவ்வின் அறையில் அனைத்து இடத்திலும் தேடினான்….எதாவது கிடைக்குமா என்று….ஆனால் அவனுக்கு ஒரு துரும்பு கூட கிடைக்கவில்லை”  மெத்தையில் அமர்ந்து நிதானமாக யோசித்தான்….தேவ் எங்கெங்கு தனது பொருளை வைப்பான்…அவனுக்கு மிகவும் பிடித்த பொருள் என்றால் அதை எங்கு வைப்பான்….வாசுதேவ் யோசிக்க….அவனுக்கே தெரியவில்லை….. “மீண்டும் தேவ்வின் அறையில் தேடினான்….அப்பொழுதுதான்….அவனுக்கு தேவ்வின் காலேஜ் போட்டோ கிடைத்தது….அதில் சரண்,கதிர்,தேவ், மூவரும்.. ஒருவரின் மேல் ஒருவர் கை போட்டபடி நின்றிருந்தனர்……அதை பார்த்ததும் வாசுவிற்க்கு அதிச்சியாக இருந்தது… “சரண்…தேவ்வோட ஃப்ரண்டா….ஆனா ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல…” அப்பொழுது தான் வாசுக்கு ஒரு நாள் சரணை… (அர்ஜுன்)வேறொருவனுடன் ஹோட்டலில் நின்று பேசியது நினைவு வந்தது….. அதனுடன்….சுகியை அந்த திருமூர்த்தி்யிடமிருந்து காப்பாற்றி அழைத்து வந்தது….நியாபகம் வந்தது……  “ எதுக்கு சரண் என்கிட்ட உண்மையை மறைச்சான்….தேவ்கூட ஃப்ரண்டா இருந்ததை…..ஏதோ இருக்கு… என்னனு நான் கண்டுபிடிக்கிறேன்…..ஆனா இந்த பையன்…சுகிக்கு ஆபத்து இருக்கு….வாசுகிய பத்திரமா பார்த்துக்கோங்கனு சொன்னானே…என் நிச்சயதார்த்தம் அன்னைக்கு……இவனும் தேவ்வோட ஃப்ரண்டா…..நாளைக்கு இவங்க ரெண்டு பேருக்கிட்ட கேட்டா தெரிஞ்சிரும்…..பார்ப்போம்…..’ வாசு ஒரு முடிவுடன் அவன் அறைக்கு சென்றான்….

“எங்க கல்யாணம் எல்லோருக்கும் தெரிஞ்சு போனாதால….என்னை, வெற்றிண்ணா..வீட்டைவிட்டு வெளிய அனுப்பிட்டாரு…….அடுத்து கொஞ்ச நாள், கலையோட வீட்டுக்கும்  தெரிஞ்சு…அவளையும் வெளிய அனுப்பிட்டாங்க…. நான்…கலையை அழைச்சுட்டு சரண் வீட்டுக்கு போன்னேன்…கொஞ்ச நாள் சரண் வீட்டுல இருந்தோம்….ஆனா சரணுக்கு தொந்தரவா இருக்ககூடாதுனு கொஞ்ச நாளுல, தனி வீடு பார்த்து வந்துட்டோம்….காலேஜ்ல ஃபைனல் இயர் முடிய….எனக்கு நாலுமாசம் இருந்திச்சு…… வாசுகியும், தேவ்வும்…ஒருத்தர்.. ஒருத்தர் மனசுக்குள்ளேயே காதலிச்சாங்க…….ஆனா வெளிய அதை காட்டிக்கிட்டதில்லை… நாங்களும்…அவங்களுக்கு இடையில வரலை…..ஆனா சக்தி மட்டும்…தேவ்,வாசுவோட காதலை சேர்த்துவைக்க அவ்வளவு போராடினான்…. தேவ்கிட்ட பேசி பார்த்தான்…சக்தி…ஆனா தேவ், சக்தியை திட்டி அனுப்பிட்டான்,…..”

‘ஆனா….சக்தியிடம் கோவமா, தேவ் பேசறதை பார்த்து நானும், சரணும் என்னனு விசாரிச்சோம்… “என்ன தேவ், எதுக்கு சக்தி மேல கோவப்படுற…”.. ‘ஒண்ணுமில்லை…சரண்…’.. “என்ன தேவ்….எதுனாலும் சொல்லு….”.. ‘வாசுக்கிட்ட பேச சொல்லி என்க்கிட்ட வந்து சொல்லுறான் கதிர்….உன் தம்பிக்கிட்ட சொல்லி்வை….இனிமே என்கிட்ட வாசுவ பற்றி பேசாவேண்டாமுனு’…தேவ் கோவமுடன் சொல்லிச்சென்றான்….. “சக்தி உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன் தேவ்,வாசு, விசயத்துல தலையிடாதேனு…சொன்னா கேட்க்க மாட்டியா…..இப்போ பாரு அவன் உன்மேல கோவப்பட்டு போறான்…. இனியும் நீ வாசுகூட இருந்ததை நானே பார்த்தேன் உன்னை கொன்றுவேன்….போடா… வெற்றி அண்ணாவுக்குகூட நீயாவது இருக்கனும்…. அண்ணா உன்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சியிருக்காருனு உனக்கே தெரியும்ல….போ சக்தி … இது அவங்க வாழ்க்கை….இதுக்கிடையில நீ வரக்கூடாது….புரியுதா…..” கதிர் அவனுக்கு புரியும்படி கூறிச்சென்றான்..’

“நான் சொன்னதுல இருந்து சக்தி…வாசுகிட்ட பேசுறதில்லை….அதுகடுது நான்…சக்தியை பார்க்குறதில்லை…..அவனும்…வாசுகிட்ட பேசலைனு நான் நினச்சுகிட்டேன்…ஆனா…சக்தி எப்படி இறந்தானு எனக்கும் அவ்வளவா எனக்கு தெரியாது….ஆனா அவன் இறந்துட்டாதா எனக்கு சொன்னதேன் என் அண்ணா தான்….அதுகடுத்து அவரு சக்தி எப்படி இறந்தானு..தீவிராமா விசாரிக்க ஆர்ம்பிச்சாரு….எனக்கும் இது சாதாரணாமா எடுத்துகிட்டேன்…..சக்தி இறந்ததில்லை இருந்து வெற்றி அண்ணா, என்னையும்,கலையையும் வீட்டுக்கு அழச்சாங்க…..ஒரு தம்பிய இழந்த்துட்டேன்….உன்னையும் இழக்க விரும்பலைனு சொல்லி அவரு எங்களை அழைச்சுட்டு போனாங்க….ஆனா…  சக்தி இறந்ததுக்கு காரணம்…வாசுகி தான் யார் சொன்னாங்களோ…. அன்னையில இருந்து…..வாசுகிய கொல்லனும்….முடிவு பண்ணிட்டாரு….. எனக்கு இந்த விசயம்…கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சது… அவருகிட்ட பேசினேன்… சக்திய கொன்னது வாசுகி இல்லைனு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவரு என் பேச்ச கேட்கவேயில்லை…..அதுகடுத்து அவருகிட்ட சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்துட்டோம்…..அர்ஜுன்….. இப்போ வரைக்கு…..வாசுக்கு, நடந்த ஆக்ஸிடன் பற்றியும்,சக்தியோட இறப்பு எப்படி நடந்துச்சுனு எங்களுக்கு இப்போ வரைக்கு தெரியாது அர்ஜூன்…….”

‘சாரி…கதிர்…உங்க தம்பி இறந்த்ததை நான் நியாபகம் படுத்துனதுக்கு…..’

“விடுங்க்க அர்ஜூன்…..என்ன பண்ணமுடியும்….சக்தி எனக்கு ஒரு குழந்தை மாதிரி….அவனுக்கு என் வெற்றியண்ணானா ரொம்ப பிடிக்கும்…..நான் வீட்டை வீட்டு வெளிய போகும் போதுகூட பார்த்து இருக்க சொன்னா….அவனோட இழப்பு என்னைவிட என் பெரியண்ணனதான் அதிகமா பாதிச்சுருச்சு….அதனால தான் வாசுகிய கொல்ல சதித்திட்டம் போடுறாங்க……அதை எப்படியாவது தடுக்கணும்…..”

‘கண்டிப்பா….கதிர்…..வாசுக்கு எதுவும் ஆகாது’

“நீங்க, சரணுக்கு எப்படி ஃப்ரண்ட்ஸ் ஆனீங்க….அர்ஜூன்…உங்களை பற்றி அவ்வள்வா எனக்கு தெரியாது”

‘என்னை பற்றி.. உங்களுக்கு…அவ்வளவா தெரியாது ஆனா உங்க ஃப்ரண்ட்ஸிப் பற்றி…சரண் பேசாத நாளே இல்லை…….எப்படி பேச்செடுத்தாலு….அவன்  உங்க ஃப்ரண்ட்ஸிப்ல வந்து தான் நிறுத்துவான்……..’

“இப்போ அவன் எங்க இருக்கான்…அர்ஜுன்…”

‘சரண் வாசுகியை சந்தித்த முதல் தான் கலையிடம்…. அவர்களின் கடந்த காலங்களை தெரிந்துகொள்ள தான்….தான் இங்கு வந்ததையும்.. பின்.. தாங்கள் இருவ்ரும் சேர்ந்து ஒரு கம்பெனி நடத்துவதாகவும் கூறினான்….’

“ஒகே கதிர்….உங்களுக்கு தெரிஞ்ததை சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ்….. நான் கிளம்புறேன்….இன்னும் கொஞ்சம் தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு….கதிர்…. நான் போயிட்டுவறேன்…..வரேன்  கலை சிஸ்டர்…..உடம்ப பார்த்துக்கோங்க….”

‘ம்ம்…சரிங்க….’.. “ஒகே..அர்ஜூன்….என்னக்கு எதாவது தெரிஞ்சா நான் சொல்லுறேன்……”

‘ஒகே….கதிர்….உங்க அண்ணா அடுத்து என்ன செய்யப்போறாங்கனு எனக்கு தகவல் கொடுங்க….’

“ஒகே அர்ஜுன்..”கதிரிடம் விடைபெற்று சென்றான்….அர்ஜூன்…

’காலையில்….எழுந்ததும் குளித்துவிட்டு….ட்ரெஸ் மாற்றிக்கொண்டு..பெட்டியில் .ட்ரெஸை எடுத்து வைத்தான்……அனைத்தையும் முடித்துவிட்டு…. மெதுவாக வாசுகியின் பக்கதில் போனான்…..தூங்கும் அழகில் அவளை பார்த்ததும்…. அவனுக்கு…..அவள் மீதுள்ள காதலை நினைத்துப்பார்த்தான்…… ‘கொஞ்சம் நாள் மட்டும் தான் நமக்கு இந்த பிரிவு…..அதுகடுத்து எல்லாம் உண்மையும் நானே உனக்கு புரியும்படி சொல்லுவேன்…..அதுவரை எனக்காக காத்திருப்பியா…சுகி’ அவன், வாசுகியுடன் மனதுக்குள் பேசிகொண்டான்….

“சுகி…..சுகி….எழுந்திரு….சுகி….”வாசுகியை எழுப்பிகொண்டிருந்தான்….வாசுதேவ்…

‘வசி…அதுக்குள்ள எழுந்தீட்டேங்களா…..இருங்க வசி காஃபி எடுத்துட்டுவரேன்… ஆபிஸ் கிளம்பிட்டேங்களா….வசி…..’

“ம்ம்ம்…கிளம்பிட்டேன்….நீயும் குளிச்சுட்டு வா….அப்புறம்….சேர்ந்து காஃபி குடிக்கலாம்…போ” அவளை குளிக்க அனுப்பினான்….அவளும்…என்னறும் இல்லாத நாளாய் அவன் இன்று பேசுவதை பார்த்தவல்…..உடையை எடுத்துகொண்டு… குளிக்க்ச்சென்றால்….. அவள்  வருவதற்க்குள் இருவருக்குமான காஃபியை ரெடிசெய்த்து வைத்தான்….. வாசுகி குளித்து முடித்து தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்தால்…. வெளியே வந்தவளை பார்த்த வாசுதேவ்…..சிரித்துகொண்டே அவளுக்கு காஃபி கொடுத்தான்…. இவன் செய்வதை பார்த்தவல்…  ‘அவன் அருகில் சென்று, கழுத்திலும், நெற்றியிலும், கை வைத்துப்பார்த்தால்… வசி உங்க உடம்புக்கு எதுவும் ஆகலையே…..’… “ஏன்…என் உடம்புக்கு என்னா…”… ‘இல்லை…. நேத்துதிருந்து நான் கேட்ட கேள்விக்கு எதுவும் சொல்லாம இருந்தேங்க இப்போ….என்னை காலையில எழுப்பிவிடுறது,காஃபி கொடுக்குறதும் பார்த்தா கொஞ்சம் ஆச்சர்யாமா இருக்கு….அதான் கேட்டேன்”..

‘உன்கூட சேர்ந்து குடிக்கிற கடைசி காஃபி சுகி….அதான் நானே போட்டு, எடுத்து வந்திருக்கேன்…..இதுகடுத்து என்னைவிட்டு நீ பிரிஞ்சு போனாலும் போயிடுவ…..என்னால தாங்க முடியுமானு தெரியலை சுகி…..எனக்கு கிடைச்ச நேரத்தையெல்லாம் உன்கூட இருக்கனும் நினைக்கிறேன்……’அவளின் கண்களை பார்த்து அவளுடன் மனதுக்குள் பேசிக்கொண்டான்….

“என்ன வசி…..நான் பேசிட்டு இருக்கேன் நீங்க என்னாடான….என் கண்னவே பார்த்துட்டு இருக்கீங்க……உங்களுக்கு என்னாச்சு……வசி..”

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை சுகி…..நீ இப்போ கிளம்பு…..நாம ஒரு இடத்துக்கு போகனும்…..கிளம்புவியா….சுகி..’

“என்ன வசி…கிளம்புனு, சொன்னா கிளம்ப்போறேன்….இதுக்கு ஏன் என்கிட்ட கெஞ்சிக்கேக்குறேங்க…….இப்போ என்ன கிளம்பனும், இதோ இரண்டு நிமிசம் வசி….ரெடியாகிட்டு வரேன்…” வாசுகி….தயாரானால்…

‘என்ன, ஏதுனு… கேக்காம இப்படி நான் கூப்பிடுற இடத்துக்கு வரேனு சொல்லுற…அளவுக்கு நம்பிக்கை என்மேல இருக்குதே……அதுவே போதும் சுகி…’

“போகலாமா வசி……நான் ரெடி..” இரண்டு நிமிடத்துக்குள் தயாராகி வந்தால்….

‘ம்ம்ம்… போகலாம் சுகி..’

” இருவரும்….கீழ் இறங்கி வந்ததை பார்த்த, நந்தனும்,ராதாவும்….வாசுதேவ் கையில் பெரிய பெட்டி இருப்பதை பார்த்த ராதா. “என்ன ராஜா…. இப்போவாது, வாசுவ கூப்பிட்டு…ஹனிமூன் போகனும் தோணுச்சே…. ரெண்டு பேருமே பார்த்து போயிட்டுவாங்க….’ மகனின் வாழ்வு இனியாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்…நினத்துகொண்டார்…ராதா…. ஆனால் நந்தனோ…..அதற்க்கு எதிர்மறையாக நினைத்தார்…. ‘வாசுக்கு எல்லாம் உண்மையும் தெரிந்திருக்குமோ…..உண்மை தெரிந்தால் வாசுகியை அவள் வீட்டில் விட போகிறானோ…’அவர் பயந்துகொண்டார்…”

‘என்ன ராஜா….என்கிட்ட சொல்லிருக்கலாமே, இரண்டு பேருமே….வெளியூர் போறாதா….இப்போ பாரு உங்களுக்கு எதுவும் வாங்கிகொடுக்க முடியாமா போயிருச்சு……’ராதா வருத்தப்பட….

“அம்மா………சுகி, அம்மா, அப்பாவ பார்க்கனும் சொன்னா….அதான் அவளை வீட்டுகொண்டுபோய் விடப்போறேன்…..அத்தையும்,மாமாவும்…சுகிய பார்க்கனும் சொன்னாங்க…..அதான் அவளை, அங்க விடப்போறேன்….”அவன் சொல்லியவுடன்….அங்கிருந்த மூவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகாவும் இருந்தது……. முதலில்…..வாசுகிக்கு…. அவளோ, அவன் கூறிய பொய்யை நினைத்தும்……அடுத்து அவள், அம்மா, அப்பா, வீட்டிற்க்கு அனுப்பி வைப்பதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது…… இரண்டாவது….. ராதாவிற்க்கு…. “ஓ…சரி ராஜா….நான்கூடா நீங்க ஹனிமூன் போறீங்கனு நினச்சேன்…..எத்தனை நாள் வேணா இருந்திட்டு வாம்மா…..ஆனா கொஞ்சம் சீக்கிரம் வாம்மா நீ இல்லையினா எனக்கு கஷ்ட்டாமா இருக்கும்……சரியா….” ராதா வாசுகியிடம் வருத்ததை தெரிவிக்க…….. வசுவோ… ‘ராதாவிடம் தன் கண்ணீரை மறைத்துகொண்டு…..சிரிப்புடன் தலையாட்டினால்…..’…மூன்றாவதாக… நந்தன் .. “ஆனால், அவருக்கு…வசு சிரித்துகொண்டே கீழ் இறங்கி வந்ததை பார்த்ததும்….அவளுக்கு இன்னும் உண்மை தெரியவில்லை….என்றும்…. இப்பொழுது வாசுதேவ்…, வசுவை…அவளது அம்மா வீட்டிற்க்கு செல்லவேண்டும் என அவன் சொன்னதும்……அதை கேட்டு வசு….அதிர்ச்சியாய் வாசுதேவ்வை பார்த்ததும்…..அவருக்கு புரிந்துவிட்டது……வாசுதேவ்…வசுவிடம் எதுவும் கூறவில்லையென்று……’

“அப்பா,அம்மா…சுகிய வீட்டுல விட்டு வரேன்…..அப்படி நான் ஆபிஸ் கிளம்பிடுவேன்ம்மா…. போயிட்டுவரேன்…… வா சுகி போகலாம்”  ‘போயிட்டுவரேன் அத்தை, போயிட்டுவரேன் மாமா…..வசு…ராதாவிடமும், நந்தனிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு….வாசுதேவ்வின் பின்னால் சென்றால்….”

‘என்னங்க….ராஜாவுக்கு என்னாச்சு….இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்குறான்…உங்களுக்கு எதுவும் தெரியுமாங்க…..’ ராதா…நந்தனிடம் வாசுதேவ்வை பற்றி கேட்க….

“தெரியலை.. ராதா….வேலையில ஸ்ட்ரெஸா  இருப்பான்மா….இந்த டைம்…வேலை கொஞ்சம் அதிகமா இருக்குனு அருண் சொன்னான்….அதை பத்தியே யோச்சிட்டு இருப்பான்…ராதா….நான் குளிச்சுட்டு வரேன்….எனக்கு சாப்பாடு எடுத்து வைம்மா….ஆபீஸ்க்கு நேரம் ஆச்சு……ராதா….” அவர் கூறிவிட்டு சென்றார்..

‘காரில் அமைதியாக இருந்தனர் இருவரும்…….முதலில் யார் பேசுவது என வாசுதேவ்வுக்கு தயக்கமாக இருந்தது…….நான் பேசினான் அவள் கோவப்படுவாளா…..இல்லை….பேசாமல் இருந்தாலும் கோவம்படுவாளா…என்று… வாசுதேவ் யோசிக்க…….அவளோ … ”நான் , அம்மா, அப்பாவ பார்க்கனும் எப்போ சொன்னேன்….இவரு எதுக்கு பொய் சொல்லி என்னை, அங்க அழைச்சுட்டு போறாங்க……என்ன,ஏதுனு தெரியாம இவருகூட வந்திருக்கேன்…..அவரா சொல்லுற வரைக்கும் நான் ஒரு வார்த்தைகூட… பேசமாட்டேன்……”…. அவளுக்குள்ளேயே பேசிகொண்டால்…..

‘வாசுதேவ்வோ….எப்படி ஆரம்பிப்பது எனத்தெரியாமல்……காரை ஓட்டிக்கொண்டு வந்தான்…. காரின் ரேடியோவில்..வாசுதேவ் மனநிலையை சரியாய் புரிந்துகொண்டதோ என்னவோ அவனுக்கு ஏற்ற பாடல் ஓடியது..

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு”

அந்தh பாடலில் ஒவ்வொரு வரியும் அவனது மனநிலையை குறிப்பிட்டு சொல்வது போல்….அந்த பாடல் இருந்தது……..அவள் கேட்டாலோ இல்லையோ அவன் கேட்டுகொண்டே வந்தான்…..அவர்கள் குடியிருக்கும் தெருப்பக்கம்…..  காரை வளைத்தான்……. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளது வீடு வந்துவிடும்…..என்ன செய்வது….. எனத்தெரியாமல்…அவளை பார்த்தான்…. ஆனால் வசுவோ….அவனை துளிக்கூட கண்டுகொள்ளவில்லை……

‘அவர்கள் வீட்டின் முன் காரை நிறுத்தினான்….அவளுக்கு இறங்குவதற்க்கு மனமில்லை….இப்படிய்யே என்னை….வேறெங்காவது அழைத்து சென்றால் என்ன, என வசுக்கு தோன்றியது……….இவர்களின் கார் சத்ததில் வெளிய வந்த மலர்….. “அத்தை,மாமா….இங்க வாங்க….யாரு வந்தருக்கங்கனு….பார்க்க வாங்க….என்னங்க….”..அந்த தெருவே அதிரும்படி கத்தி அனைவரும் அழைத்தால்…… ’சுகி வீடு வந்திருச்சு…..’வாசுதேவ் அவளிடம் சொன்னான்…. “மெதுவாக….அவள் கீழிறங்கி….அவனை பார்க்காமல்…பின் சீட்டில் இருந்த ட்ராவல் பெட்டியை அவளே எடுத்தால்……அவன் எடுத்துகொடுப்பதற்க்குள்….” ‘ஹே வசும்மா….வா..வா…வாங்க அண்ணா…. உள்ள வாங்க’ அந்த வீட்டின் மருமகளாய் அழைத்தால்……மலர்விழி…..

“வசுவோ அவளை கண்டு சிறு புன்னகையுடன்….உள்ளே வந்தால்….. வாசுதேவ்வோ…..கொஞ்சம் தயக்கமாய் வந்தான்…… “ ‘ வாங்க…மாப்பிள்ளை, வாம்மா வசும்மா….’…..”ஹே வசும்மா…..எப்படி இருக்கடா…..அங்க போனதும் இந்த அம்மாவ மறந்துட்டல……வாங்க மாப்பிள்ளை…..”என வாசுகியின்…அம்மா, அப்பா,பெரியப்பா,பெரியம்மா….எல்லோரும் வரவேற்றனர்……. ‘வாங்க, மச்சான், வசு, வாம்மா…’ என இலக்கியன் அவர்களை வரவேற்க……..எல்லொருக்கும் சிறு தலையசைப்புடன்…..அதை ஏற்றுக்கொண்டான்….வாசுதேவ்…”

‘வசும்மா….நேத்துதான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தாரு…..அப்போ தான்….உன்னை  பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ….உன்னை கேட்டதா சொல்ல சொன்னேன்….. ஆனா மாப்பிள்ளை….உன்னை கூப்பிட்டே வந்திட்டாருமா……’ யசோதா வசிவிடம் சொன்னார்.

“நான் கிளம்புறேன்….மாமா…,அத்தை போயிட்டுவரேன்…..சுகிய பார்த்துக்கோங்க… அவளை நானே வந்து கூப்பிட்டு போறேன்….அதுவரைக்கு சுகிய பத்திரமா பார்த்துக்கோங்க….அத்தை…..வரேன்….இலக்கியன்…வரேன்…மலர்….என்ன மாப்பிள்ளை அதுக்குள்ள கிளம்புறேங்க….சாப்பிட்டு போகலாமே கிருஷ்ணன்… சொல்ல…. இருக்கட்டும் மாமா…..ஆபீஸ்க்கு லேட் ஆகுது……முக்கியமான வேலை இருக்கு போயிட்டுவரேன்…..”அனைவரிடமும் சொல்லிவிட்டு வாசுகியை பார்த்தான்….ஆனால் அவளோ அவனை பார்க்காமல் தலைகுனிந்தே நின்றிருந்தால்…… “ஹே வசு….அண்ணா உன்னை பார்க்கிறாங்கா…” மலர் சொன்னதும்,…. வசு… அவனைப்பார்த்தால்…. “போய்வருகிறேன்” அவன் கண்ணசைவிலேயே சொல்லிவிட்டு சென்றான்….. வசுவோ… ‘ம்ம்…தலையசைத்தால்..’… அவன் காரை ஸ்டார் செய்ததும்…..மனம் கேட்க்காமல்….அவனை பார்க்க வாசல் சென்றால்……. ஆனால் அவனோ காரை வேகமாக செலுத்திக்கொண்டு…… நேராக வெற்றியின் ஆபீஸ்க்கு சென்றான்…..

 

                                      உன்நினைவுகள் தொடரும்………….

Advertisement