தட்டுதடுமாறி வீட்டிற்குள் வந்த கணேசனோ அங்கே அறியாப்பிள்ளை போல் அமர்ந்திருந்த வேந்தனை கண்டதும் “ பண்றதும் பண்ணிடடு திருவிழாவில் காணாம போன பிள்ளைப்போல முழிக்கறத பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே அவனருகில் சென்று அமர்ந்தான்.
அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கவும் “ இவன் முழியே சரியில்லையே!! முதல்ல இந்த இடத்தை காலி பண்ணணும் அப்போதான் உசுரு தப்பும் “ என மைண்ட் வாய்ஸ் ஓட்டியவன் “ அக்கா பொண்ணை பார்த்திட்டல்ல கிளம்பலாம்ல” என்று லெட்சுமியிடம் கேட்டான்.
“ எங்கே கணேசா??” என்று அவர் கேசுவலாக கேட்கவும் “வீட்டுக்குத்தான் பின்னே இங்கேயேவா இருக்க முடியும்??”
“ கல்யாணம் முடியறை வரைக்கும் நாம எல்லாம் இங்கே தான் இருக்கப்போறோம் “ என்று சத்தமில்லாமல் அவன் தலையில் இடியை இறக்கினார் லெட்சுமி. “என்னது “ என்று அவரை அதிர்ச்சியாக கேட்டவன் எழுந்தேவிட்டான். “யாரைக்கேட்டு இதெல்லாம் முடிவு பண்ற நீ”
“ யாருகிட்டடா கேட்கனும்?? அவனே அமைதியாக உட்காந்திருக்கான், நீ என்னமோ புது மாப்பிள்ளை கணக்கா துள்ளுற ! ஒழுங்கா உட்காரு” என்று அவரை அடக்கி உட்கார வைத்தார்.
“ அய்யோ ஒரு நாளைக்கே அந்தப்பொண்ணு மேல பாய்ஞ்சிட்டான்! ஓரே வீட்டில் இருந்தா இனி என்னவெல்லாம் பண்ணப்போறானோ?? இதுக்குத்தான் நல்லப்பிள்ளை மாதிரி உட்கார்ந்து இருந்தானா??” என்று வேந்தனை பார்த்துக்கொண்டே சத்தமாக புலம்பிவிட “ யாரு யாரு மேல பாய்ஞ்சா?? என்னடா உளறுற” என்று லெட்சுமி கேட்டார்.
“மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா சொல்லிட்டேனே” என்று நினைத்துக்கொண்டவர் “ பாயஞ்சாங்கலா?? பந்தியிலே பாயாசம் இருக்கான்னு கேட்டேன்!! பசிக்குது அக்கா” என்று சமாளிக்க
“ அலையாதடா!! நம்மல என்னவென்று நினைப்பாங்க??” என்றார்.
“ நானா?? எல்லாம் என் நேரம்” என்றவன் திரும்பி வேந்தனிடம் “ மாப்ள பழைய பகையை மனசில்ல வச்சிட்டு பெரிய பிரச்சனையில மாட்டி விட்டுறாதடா!! உங்களை நம்பித்தான்டா வந்திருக்கேன்!! எனக்கு இன்னும் கல்யாணம் கூட நடக்கலடா” என்று அவனிடம் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான்.
“ என்ன மாமா சொல்லுற நான் என்ன பண்ணேன்” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும் “ இப்படி பாவமா மட்டும் பார்க்காதடா பயமா இருக்கு” என்றிட அதற்கு சத்தமில்லாமல் முத்துப்பல் தெரிய சிரித்தவன் “ மாமா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே”
“ என்னடா”
“ அங்கே தெரியுது பார்த்தியா ஒரு கதவு” என்று மேலே கை காட்டியவன் “ அது தான் பொண்ணு ரூமாம்”
“ அதுக்கு” என்று கணேசன் அவனை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டே கேட்க
“ அதுக்கு எதிரில் இருக்கற ரூம்தான் உனக்காம்!! அதை நான் எடுத்துக்கறேன்!! நீ” என்று திரும்பி
“ இந்தப்பக்கம் இருக்கற ரூமை எடுத்துக்கோ “ என்று அதற்கு சற்று தள்ளி இருந்த ரூமை கைகாட்டினான்.
“ டேய் நான் உனக்கு மாமன் டா”
“ அதை தானேயா நானும் பண்ண சொல்லுறேன்” என்றான்.
“ எதுக்கோ பலமா அடி போடுறான் உஷார் ஆகுடா கணேசா” என்று நினைத்தவன் “ உனக்கு இல்லாததா மாப்ள நீயே எடுத்துக்கோ”
“ ஹவ் சவீட்!! ” என்று கணேசனின் கண்ணத்தை கிள்ளினான்.
“ போ மாப்ள!! எனக்கு வெக்கமா வருது!!” என்றவன்
“ இருக்குடி உனக்கு” என்று மனதில் நினைத்துக்கொண்டவன் லெட்சுமியிடம் பக்கம் திருமபியவன்
“அக்கா ரூமுக்கு போகலாமா டயர்ட் ஆக இருக்கு” என்றான்.
“ அதுக்கு தான் நாங்களும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்”
“ இல்லை எனக்கு புரியலை”
“ கணக்குப்புள்ள வரணுமாம் அவருக்கிட்டதான் ரூம் சாவி இருக்காம்” என்று வேந்தன்தான் குரல் கொடுத்தான்.
“ இருக்கற பிரச்சனையில இவனுங்க வேற” என்று சலித்துக்கொண்டான் கணேசன்.
“ அதானே மாப்ள வீட்டுக்காரங்கன்னு ஒரு மரியாதையே இல்ல பாரேன் மாம்சு!! நடுவீட்டில் கூப்பிட்டு உட்கார வச்சிட்டு இவனுங்க பாட்டுக்கு வரானுங்க போறானுங்க!! வா மாம்சு நம்ம யாருன்னு காட்டலாம்” என்று கணேசனின் கையை பிடித்து இழுத்தான் வேந்தன்.
“என்னடா பண்ண போறே??”
“ வா மாம்சு போய் சாவிய வாங்கிட்டு வரலாம்”
“ அடச்சே இதுக்குதான் இந்த ஓவர் பெர்மானஸ் ஆஆ??”
“ பின்னே எவ்வளவு நேரம் உன்முகத்தையே பார்த்துட்டு இருக்கறது வா” என்று தோட்டத்து பக்கம் நடக்க ஆரம்பித்துவிட்டான்.
“டேய் போகாதடா” என்று பின்னாலேயே சென்றான் கணேசன். “ யோவ் கம்முனனு வாயா” என்றவன் சடடென நின்றுவிட “ வானரம் மனுசன ஏன்டா பாடா படுத்துற “ அறு கேட்டுக்கொணடே அருகில் வர “ மாம்சு என் சத்தம் அது” என்று கேட்க
“ அய்யோ யாராவது வாங்களேன்!!வேலு வேலு
சீக்கிரம் வாங்க!!” என்ற பார்வதியின் குரலில் அவசரமாக பாருவின் அருகில் சென்றனர்.
“ அக்கா எழுந்திருங்க!! என்னாச்சு!!” என்று கனகாவை மடியில் வைத்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தாள் பார்வதி.
அங்கே கண்கள் மேலே சொருகிப்போய் கையும் காலும் அடித்துக்கொண்டே படுத்திருந்தாள் கனகா. பார்த்தவுடன் புரிந்துவிட்டது வலிப்பு வந்திருக்கிறது என்று, “ வலிப்பு வந்து எவ்வளவு நேரம் ஆச்சு” என்று கேட்டுக்கொண்டே கனகாவின் நாடியே பிடித்து பார்த்தான் வேந்தன். அவர்தான் மாப்பிள்ளை என்று தெரிந்து இருந்ததால் “ தெரியலைங்க வந்து பார்க்கும் போது இப்படி இருந்தாங்க” என்று கூறிக்கொண்டே இருக்க அடுத்த நொடி கனகாவை தன் கைகளில் தூக்கியிருந்த வேந்தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.
கதவை அடைத்துவிட்டு அறைக்குள் நுழைந்த வேலு தலையை பிடித்து கொண்டே கட்டிலில் அமர்ந்து விட்டான்.
“ இவளை ” என்று சொல்லிக்கொண்டே வெளியே வர அங்கே அவன் கண்ட காட்சியில் இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது.
வலிப்பில் துடித்துக்கொணடிருந்த கனகாவை கண்டதும் “அச்சோ இதை எப்படி மறந்தேன்” என்று தலையிலடித்துக்கொண்டவன் வருவதற்கு முன் வேந்தன் கனகாவை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு செல்வதை பார்த்தவன் அவசரமாக அவனிடம் சென்றான்.
“ டேய் எங்கடா அவளைக்கொண்டு போற விடுடா அவளை” என்று கனகாவை அவன் கைகளில் இருந்து கிட்டத்தட்ட பிடுங்கபிடுங்கிக்கொண்டிருந்தான் வேலு. “சார் அவங்களை விடுங்க நிலைமை புரியாம பண்ணிக்கிட்டு” என்றவன் வீட்டிற்குள் செல்ல பார்க்க “ டேய் ஹாஸ்பிட்டலுக்குத்தான்டா கொண்டுப்போகனும் மடையா” என்று மல்லுக்கு நின்றான்.
“ அதான் சொல்லுறேன் இல்லை விடுங்க” என்று நின்றவாக்கிலேயே அவனை விலக்கிவிட நிலைத்தடுமாறி கீழே விழுந்திருந்தான் வேலு.
“ புரிஞ்சுககோங்க சார்” என்றவன் வீட்டிற்குள் சென்று விட்டான்.
உள்ளே நுழைந்ததும் கூடியிருந்த அனைவருக்குமே அதிர்ச்சிதான்.
“ என்ன அண்ணே இது!! இதை பார்க்கத்தான் எங்களை வரச்சொன்னிங்களா???” என்று மாறிமாறி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனுமே அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் சற்று தினறித்தான் போனார்.
“மாப்ள இந்தா” என்று அவனது சூட்கேஸை கொடுக்க அதனை பெற்றுக் கொண்டவன் கனகாவிற்கு தேவையான மருந்தை தேடி எடுத்தவன் அவள் கைகளில் மருந்தை செலுத்திவிட்டு தனது கைக்கடிகாரத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டான். அனைவரும் அவனையே ஏதோ அதிசயத்தை பார்ப்பதை போல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
கூட்டத்தை விலக்கிக்கொண்டே வந்த வேலு தரையில் அமர்ந்திருந்த ஷர்ட் காலரை பிடித்து தூக்கி நிறுத்தியவன் “ அறிவு இருக்காடா உனக்கு??? ஒரு உயிரோட அருமை தெரியுமாடா உனக்கு??” என்றிட அவனை பிடித்து கீழே தள்ளியிருந்தான் கணேசன் “யாரு மேலே கையை வைக்கிற ராஸ்கல்” என்று சீறிக்கொண்டே அவனருகில் செல்ல பார்க்க அவனை பிடித்து தடுத்திருத்திருந்தான் வேந்தன்.
“ மாம்சு அவருதான் ஏதோ புரியாம பண்றாருன்னா நீயும் ஏன் இப்படி பண்ற” என்று அவனது கைகளை இறுக்க பிடித்துக்கொண்டான் வேந்தன்.
“ விடு மாப்ள இவனை என்ன பண்றேன்னு பாரு” என்று எகிறிக்கொண்டிருந்தான் கணேசன். ஆவேசமாக எழுந்து நின்ற வேலு “என்னடா புரியாம செய்றாங்க?? ஒருத்தி உயிருக்கு போராடிட்டு கெடக்கா, நடுவீட்டில படுக்கப்போட்டு வித்தை காட்டிட்டு இருக்கீங்க!!என்ன மனுஷங்கடா நீங்க” என்று கொண்டே வேட்டியை மடித்துக்கட்டியவன்
“ இவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, ஒருத்தனும் உயிரோட இருக்கமாட்டீங்க” என்று கனகாவை பார்க்க வலிப்பில் துடித்துக்கொண்டிருந்தவள் துடிப்பு அடங்கி பேச்சு மூச்சில்லாமல் கிடந்தாள்.
அதனை கண்டு பதட்டமடைந்தவன் அவளை தூக்கப்போக அவன் கைகளை பிடித்து தடுத்திருந்தான் வேந்தன் . “ இவன் கிட்ட என்ன மாப்ள உனக்கு பேச்சு பாவம் பாத்து உதவ வந்தா , நம்ம மேலேயே கைவைககிறான்?? விடுடா அவ எப்படியோ போய் சாகட்டும் “ என்றுவிட “ என்னடா சொன்ன??” “ என்றனை அடிக்க பாய அவ்வளவுதான் விஷேச வீடு கலவரமாக மாறியது. சந்திரனால் கூட இருவரது சண்டையையும் நிறுத்தமுடியவில்லை.
“ வேலு விடுடா அவரை” என்ற சந்திரனின் குரலுக்கெல்லாம் அவன் செவிமடுக்கவே இல்லை.
கனகாவை அந்த நிலையில் கண்ட பிறகு அவன் நிதானத்திலேயே இல்லை.
அவள் விட்டு சென்றுவிடுவாளோ என்ற பயமே அவனை யோசிக்கவிடவில்லை.
மனதில் வைத்து புழுங்கிக்கொண்டிருந்த அத்தனை அழுத்தமும் இன்று கோபமாக வெளிப்பட்டக்கொண்டிருந்தது.
ஏதோ ஆவேசம் வந்தவன் போல் சண்டையிட்டு கொண்டிருந்தான்.
“ வேலு கொஞ்சம் அமைதியாக இருங்க அவங்களுக்கு ஒன்னுமில்லை”!! நான்” என்று வேந்தன் அவனை சமாதானப்படுத்த முயல அதுவரை ஒருவரை ஒருவர் விலக்கி தள்ளிக்கொண்டுதான் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்
“ உன் மாமனை போய் முதலில் அடக்குடா, என்னவெல்லாம் சொல்லுறான் பாரு!!” என்றவன் ஓங்கி வேந்தனுக்கு அறைந்து இருந்தான். அவ்வளவுதான் அந்த இடமே ஸ்தம்பித்துவிட்டது.
“ உன்னையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வச்சி இருக்கனும்டா வீட்டுக்குள்ள விட்டேனுள்ள என் தப்புத்தான்” என்றுக்கொண்டே அவன் ஷர்ட் காலரை பிடித்து எழுந்து நிற்கவைத்தவர் மாறி மாறி அவனுக்கு அறைய ஆரம்பித்துவிட்டார். “ஐயா கனகா” என்று கொண்டே அவரை ஏறிட்டு பார்க்க” உயிரோட தானே இருக்கா சாகலையில்லை??” என்றுக் கேட்டுக்கொண்டே அடிக்க
அத்தனை அறைகளையும் வாங்கியவன் கற்சிலைப்போல் நின்றானே தவிர தடுக்கவில்லை. “ மாமா அவர் ஏதோ அறியாமையில் தானே பண்ணினார், அதுக்கு இப்படித்தான் காட்டுத்தனமா அடிக்கனுமா விடுங்க” என்று வேந்தன் தடுக்கவும்
“விடுங்க மாப்ள இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது” என்று ஆத்திரம் தீரும் வரை அடித்தவர் “ ச்சை என் முன்னாடி இனி நிற்காதே!! எங்கேயாச்சும் போய் தொலைடா” என்றவர் தனது அறைக்குள் சென்று நுழைந்து கொண்டார்.
வேலு அதே இடத்தில் ஸ்தம்பித்து நின்றவன் “ சார் அக்கா முழிக்கறாங்க” என்று பாருவின் குரலில் தான் நிதானத்துக்கே வந்தான். அவசரமாக தன் கலங்கிய் கண்களை யாருக்கும் காட்டாமல் மறைத்துக்கொண்டவன் கனகாவிடம் போக ஓரடி தான் எடுத்து வைத்திருப்பான் பின் தயங்கி அதே இடத்தில் நின்றுவிட்டான்.
“ இவங்க பேர் என்ன??” என்றுக்கேட்டுக்கொண்டே அவளருகில் அமர்ந்தான் வேந்தன்.
“கனகா” என்று பாரு கூற “ மிஸ் கனகா, இப்போ ஓகேயா?? எழுந்து உட்காருங்க பார்ப்போம்!!” என்றுக் கூறினான்.
அவள் எழுந்து அமரவும் “ பிரித்தீங்ல ஏதும் இஷீஸ் இருக்கா?? நல்லா மூச்சு இழுத்துவிடுங்க” என்று அவளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவளை பரிசோதனை செய்ய மெல்லிய குரலில் அவனுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தாள் கனகா. அவளை முழுமையாக பரிசோதனை செய்தவன் “ யுவர் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் மிஸ் கனகா!! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க!!” என்றான்.
அவன் பேச்சு செயல் என அனைத்தையும் புருவம் சுருக்கி பார்த்த வேலு “ நீ டாக்டரா??” என்று கேட்டான்.” யப்பா சாமி இப்பாவாவது கேட்டியே!! இதுதான் உன் டக்கா” என்று நக்கலடித்தான் கணேசன்.
“ மாம்சு “ என்று வேந்தன் அதட்டவும் “ மாப்ள நீ வேணுமின்னா பொறுமையில எருமையா இருந்துக்கோ என்னால் முடியாதுடா” என்றவன் “ டேய் வளர்ந்து கெட்டவனே நல்லா கேட்டுக்க எம்.பி.பி.எஸ் கோல்ட் மெடலிஸ்ட் உன்னை மாதிரி தற்க்குறி இல்லை”என்றிட
“ டாக்டர் மாப்ளயா”
“ டாக்டரா”
“ அதானே பார்த்தேன்” என்று கூடியிருந்தவர்கள் ஆளாலுக்கு தங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டனர். “ தேங்க்ஸ் டாக்டர், நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” என்று வேலுதான் கூறினான்.
“ இது என் கடமை தானே !! ஒரு உயிரோட மதிப்பு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவனை அழுத்தமாக பார்த்து கொண்டே கூறினான். “ அவளுககு ஏதாவது ஆகிடுமோ என்கிற பயத்தில் கண்மூடித்தனமா நடந்துக்கிட்டேன் மன்னிச்சிடுங்க!!” என்று கைக்கூப்பினான். அவன் கையை பிடித்து கீழே இறக்கியவன் “ இதெல்லாம் எதுக்கு” என்று கேட்டுக்கொண்டே அவன் கையை பிடித்து கீழே இறக்கியவன் “ அவங்களை ரொம்ப பிடிக்குமோ “ என்று சோஃபாவில் அமர்ந்திருந்த கனகாவை கண்களால் சுட்டிக்காட்டி கேட்டான்.
அவன் அமைதியாக நிற்கவும் “ என் ரூம் கீ “ என்று கையை நீட்டினான். “ சாவி வீட்டில் இருக்கு” என்று அவன் கூற “ம்ம்ம் போய் கொண்டு வாங்க” என்றவன் கணேசனிடம் திரும்பி” மாம்சு போய் வாங்கிட்டு வா” என்றவன் அமைதியாக லெட்சுமியின் அருகில் சென்று அமர்ந்துவிட்டான். அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் வேலு. அவனது அமைதி என்னவோ செய்தது. அவன் செய்தவைக்கெல்லாம் பதிலுக்கு கோவப்பட்டு அடித்திருந்தால் கூட அவன் கவலைப்பட்டிருக்கமாட்டான். ஆனால் அலனது மௌனமே அவனை வதைத்தது.
வார்த்தைகள் மட்டும் தான் வலிமையைக் கொடுக்குமா மௌனமும் தரும் மென்று நிரூபித்துவிட்டானே.
அவசரப்பட்டு விட்டோமோ என்று காலங்கடந்து யோசித்தவன் அப்படியே நின்று கொண்டிருக்க
“ டேய் வளர்ந்து கெட்டவனே வாடா” என்று கணேசனின் குரலில் கலைந்தவன் தனது வீட்டை நோக்கி நடந்தான்.