அவசரமாக கண்ணைத் தொடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் கட்டிலுக்கு அடியில் இருந்து தனது ட்ராவல் பேகினை தேடி எடுத்தாள்.
பையினை திறந்து தனது லேப்பை தேடிப்பார்க்க காணவில்லை.
அப்போதுதான் தனது லேப்டாப்பில் இருக்கும் பழுதினை சரிசெய்ய வேண்டி ஊரிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
“ ப்ச் இதை எப்படி மறந்தேன்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
“ இப்போ என்ன பண்ணறது?” என்று நகத்தை கடித்துக்கொண்டு யோசித்தவள் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக சிறிது நேரம் நடைப்பயின்றாள்.
ஏதோ நினைவு வந்தவளாக தனது எக்யூப்மெண்ட் பேகை தேடி எடுத்தாள்.
அதற்குள் பளபளவென நியூ மாடல் லேப்டாப் ஒன்று இருந்தது.
ஆம் அது ஜெனியின் லேப்டாப்தான்.
அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டு வந்தவளுக்கு அதனை அழிக்க மனம் வரவில்லை.
கனத்த மனதுடன் லேப்பை ஆன்செய்து பார்க்க வால்பேப்பரில் ஸ்ரே ஜெனி மற்றும் ஸ்ரீ மூவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம்தான் இருந்தது.
ஜெனியின் பிறந்தநாளுக்கு எடுத்த புகைப்படம் அது
ஜெனி நடுவில் அமர்ந்திருக்க ஸ்ரே அவளது கண்ணத்தில் கேக்கை பூசிக்கொண்டிருந்தாள்.
ஸ்ரீ ஜெனியின் கண்ணத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்.
.விபிதான் புகைப்படம் எடுத்தான்.
ஸ்க்ரீனை தனது புறங்ககையால் வருடிய ஸ்ரீக்கு கண்கள் கலங்கியது.
“ சோரி ஜெனி நல்லது பண்றேன்னு நினைச்சு நானே உன் வாழ்க்கையை அழிச்சிட்டேன்ல?” என்று திரையை பார்த்து சொல்லிக்கொண்டவள் தனது கண்களை அழுத்தமாக துடைத்துக்கொண்டாள்.
லேப்பில் சிப்பினை கனெக்ட் செய்து பார்க்க பாஸ்வேர்டு கேட்டது.
அவை அனைத்துமே குழந்தைகள் சம்மந்தமாக xxxx நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சி சம்மதமான கோப்புகளே ஆகும்
எதுவும் அரசு அங்கீகாரத்துடன் நடைபெறவில்லை மேலும் அவற்றில் சில ஆராய்ச்சி முறைகளுக்கு பல வளர்ந்து வரும் நாடுகளில் தடையும் விதித்து இருந்தார்கள்.
இவ்வளவு உயரிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக அதிநவீன ஆராய்ச்சிக்கூடமும் பெரும்பொருட்செலவும் கண்டிப்பாக தேவைப்படும்.
ஆனால் அது யாரென்றுதான் தெரியவில்லை.
அத்துடன் மேலும் சில கோப்புகள் நம்பர்களாக சிலது குறியீடுகாளாக என சீக்ரெட் கோடுகளில் எழுதி வைத்திருந்தார்கள்.
“ஒருவேலை பைனரி கோடிங்காக இருக்குமோ? ஆனால் கோடிங் இப்படி இருக்காதே?” என்று அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தாள்.
தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
அனைத்து கோப்புகளையும் சோதித்துக்கொண்டே வந்தவளுக்கு ஒரு மீடியா போல்டர் தென்பட்டது.
அதனைத்திறந்து பார்த்தவளுக்கு தன்கண்களையே நம்ப முடியவில்லை.
அனைத்துமே இந்த ஆராய்ச்சி சம்மந்தமான வீடியோக்கள் தான்.
அந்த ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் வீடியோ பதிவாக செய்து வைத்திருந்தார்கள்.
அதிலிருந்து ஒரு வீடியோ பதிவினை ஓடவிட கிட்டத்தட்ட 60 வயது மதிப்புமிக்க ஆராய்ச்சியாளர் தனது ரீசெர்ச் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார்.
அதாவது நமது நாட்டில் வருடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 2,600 க்கும் மேற்பட்ட பிறப்புகள் நிகழகின்றன.
இது சீனாவில் பிறப்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.
ஆனால் இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இத்தனை அதிகமான பிறப்பு விகிதம் இருக்கும் அதே சமயத்தில் ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட 13,400 குழந்தைகள் இறந்துக்கொண்டு இருக்கின்றனர்
இது சுமார் 4.9 மில்லியன் இறப்புகளுக்குச் சமம்.
இதன் பொருள் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 13,400 இறப்புகள் ஆகும் .
இந்த சர்வேயின்படி பார்த்தால் கால்பங்கு குழந்தைகள் இறப்பதற்கான முக்கிய காரணம் பிறப்பிலேயே சில குறைபாடுகள் இருப்பதால்தான்.
இதற்கு முக்கிய காரணம் திசுக்கள் சரியான வளர்ச்சி அடையாததே ஆகும்
இந்த மாதிரியான இறப்புகளையும் குறைபாடுகளையும் சரிசெய்வதுதான் எங்களது ஆராய்ச்சி நோக்கம்.
இது எப்படி சாத்தியம் என்றால் உடல் திசுக்கள், செல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வளர்கின்றன.
இதை ‘ஹைப்பர்பிளாசியா’ (Hyperplasia) என்கிறோம்.
உடல் வளர்ச்சி அடையும்போது, பல திசுக்களில் உள்ள செல்கள் மிக வேகமாக பிரிந்து வளரும்.
அத்தகைய செல்களை மனித உடலிலிருந்து பிரித்து எடுத்து குறைபாடுடைய உறுப்புகள் அல்லது பாகங்கள் மீது செலுத்திவதன் மூலம் இயற்கையாகவே அந்த திசுக்குறைபாடுகளை சரிசெய்வதுதான் எங்களது ஆராய்ச்சி.
அதற்கு எங்களது தேவைப்பட்டதெல்லாம் இன்னும் முதிர்ச்சியடையாத ஹைப்பர்மீசியா செல்கள் மட்டுமே.
அதனை மனித ஃபெட்டஸில் இருந்து பிரித்து எடுக்கலாம்.
அதாவது தாயின் கர்ப்பப்பையில் உதித்து ஒன்பது வாரமேயான கருக்களை ஃபெட்டஸ் என்பர்.
இந்த ஃபெட்டஸிலிருந்து பிரித்து எடுத்த ஹைப்பர்மீசியா செல்களை நம்சோதனைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியுமேயானால் இந்த ஆராய்ச்சி வெற்றிப்பெற்றுவிடும்.
ஆரம்பித்த சில வருடங்களிலேயா நாங்கள் அதனை செய்தும் முடித்துவிட்டோம் முதலில் சோதனை எலிகளில் உறுப்புகளில் நாங்களே சேதத்தை ஏற்படுத்தினோம் பின்னர் அந்த உறுப்புகளை ஹைப்பர்மீசியா செல்களை செலுத்தி அதனை வளரவும் வைத்தோம். சோதனை வெற்றிப்பெற்றது
அடுத்து இதனை மனித பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் அதற்கு எங்களது நாடு அனுமதிக்கவில்லை.
எனவே பிறநாடுகளில் இதனை அமுல்படுத்த முயற்சித்தோம்.
அனைத்துமே தோல்வியில்தான் முடிந்தது.
ஒருகட்டத்தில் ஆராய்ச்சி இத்தோட நிறுத்திவிடலாம் என்று நினைக்கும்போதுதான் எங்களுக்கு ஒரு விபரீத சிந்தனை தோன்றியது.
அதாவது எங்களது நிறுவனத்துக்கு நம்பிக்கையானவர்களின் மூலம் ஆசிரமங்களில் வசிக்கும் திசுவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளின் மீது இந்த ஹைப்பர்மீசியா செல்களை செலுத்தினோம்.
மனித உடலில் அவை வியக்கத்தக்க வகையில் எந்தவித ஒவ்வாமையும் இல்லாமல் குறைந்த காலக்கட்டத்திலே உறுப்புகளாக வளர ஆரம்பித்து அவை முழுமையும் பெற்றுவிட்டன
பிள்ளைகளின் குறைபாடுகள் முழுமையாக சரிச்செய்யப்பட்டு விட்டாலும் மாதம் ஒருமுறை அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு ஹைப்பர்மீசியா செல்களை செலுத்திதான் ஆகவேண்டும்.
எனவே பிள்ளைகளை ஆய்வுக்கூடங்களுக்கு அழைத்துவந்து பரிசோதித்து கொண்டே இருப்போம்.
அப்படி செல்களை செலுத்திக்கொண்டு இருக்கும்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்துவிட்டது.
எங்களது குழுவின் கவனக்குறைவால் வழக்கமாக செலுத்தும் செல்களின் அளவைவிட சற்று அதிகமான செல்களை செலுத்திவிட்டோம்
என்னதான் தெரியாமல் அப்படியொரு சம்பவம் நடந்துவிட்டாலும் அந்த தவறினால் நன்மையே விளைந்தது.
ஆனால் அது சொற்பக்காலங்களுக்குத்தான்ஹைப்பர்மீசியா செல்கள் மூலம் வளர்ந்த உறுப்புகள் இயற்கையாக வளர்ந்த உறுப்புகளைவிட சற்று திடமாகவே இருந்தன.
அதுமட்டுமில்லை ஆராய்ச்சி உட்படுத்தப்பட்ட பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை விடவும் சுறுசுறுப்பாகவும் புத்திக்கூர்மையுடனும் இருந்தனர்.
எனவே நாங்களும் மாம்மாதம் செல்களின் அளவை அதிகரித்துக்கொண்டே சென்றோம்.
பிள்ளைகளின் வளர்ச்சியும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்த செயல்முறையில் நாங்கள் கவனிக்கத் தவறியது என்னவென்றால் ஹைப்பர்மீசியா செல்கள் சாதாராணமான வளர்ச்சியை கொண்டிருந்தால் அவை உறுப்புகளாக மாறும் அதுவே அசாதாரண வளர்ச்சியை கொண்டிருந்தால் கேன்சர் செல்லாக மாறிவிடும்
டோசேஜ் அதிகமாக அதிகமாக அதுதான் நடந்தது.
பிள்ளைகளை புற்றுநோய் பாதிக்கத்தொடங்கியது
அதற்காக எந்த தீவிரமான கதிர்வீச்சு சிகிச்சைகள் அளித்தாலும் செல்களின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.
பிள்ளைகள் கடுமையான புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள்.
இதற்கு ஒரு தீர்வு வேண்டுமெனில் மீண்டும் ஆராய்ச்சியைத்தொடங்கவேண்டும் ஆனால் இம்முறை சற்று அதிக பணச்செலவு ஏற்படும்.
ஏனெனில் ஹெச்எம் செல்களை வளரவைப்பது எளிது ஆனால் அழிப்பது மிகவும் சிரமம்
எனவே எங்களது ஆராய்ச்சியை மற்ற நாடுகளுடன் சேர்ந்து ஒப்பந்தமுறையில் தொடங்கினோம்.
என்ன முயன்றும் குறிப்பிட்ட கால அளவுக்குள் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
ஒப்பந்தக்காலமும் ஒருக்கட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சோதனையை முடிக்க வேண்டும் இல்லையெனில் எங்களது நிறுவனத்தின் அனைத்து உரிமங்களும் எங்களது கண்டுபிடிப்புகளையும் அந்த பன்னாட்டு நிறுவனங்களால் பரிமுதல் செய்யப்படும்
இந்தசமயத்தில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. மின்கசிவு காரணமாக எங்களது லேப்பில் தீப்பிடித்துவிட்டது
அந்த விபத்தில் எங்களது ஆராய்ச்சி சம்பந்தமான அனைத்து குறிப்புகளும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட குழந்தைகளும் அழிந்துவிட்டனர்.
இந்த விபத்து ஒருவகையில் எங்களது நிறுவனத்துக்கு ஏற்பட இருந்த பெரும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க மிகப்பெரிய உதவினாலும் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எங்களுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை
மீண்டும் முதலில் தொடங்கவேண்டும் எனவே எங்களது நிறுவனம் ஆராய்ச்சியை இத்துடன் கைவிட முடிவெடுத்தது என்றதுடன் அந்த வீடியோ முடிவடைந்துவிட்டது.
அடுத்தடுத்து என ஏகப்பட்ட வீடியோக்கள் இருந்ததன. அவற்றை சிலவற்றை ஓட்டிப்பார்த்தவளுக்கு உருப்படியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை
“ சிப்ல எதுவுமே இல்லையே? இதனால என்னப்பிரச்சனை வரப்போகுது?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டவளுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது.
“ நமக்கு இருக்கற பிரச்சனையில்இது வேறையா? முதலில் அவன்கிட்ட இதைக்கொடுத்துவிட்டு நம்ம விசயத்தை சரிப்பண்ணனும்! தேவையில்லாம எதிலயும் தலையிட வேண்டாம் இதுவரைப்பட்டதே போதும்” என்றவள் எதுக்கும் இருக்கட்டும் என்று சிப்பிலிருந்த அனைத்து ஃபைல்களையும் ஜெனியின் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்துக்கொண்டாள்.
பின்பு சிப்பை எடுத்துக்கொண்டே வேந்தனகன் அறைக்குள் செல்ல முற்பட ஒருநொடி தயங்கியவள் உரகமையாக கதவைத்திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
வியர்க்கவிறுவிறுக்க குளிப்பதற்கு தேவையான போருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் வேந்தன்.
அதை கண்டவளுக்கு லேசான கோபம் துளிர்விட்டது.
“ இப்போதான் ஜிம்ல இருந்து வந்தீங்களா? எத்தனை முறை சொல்லியிருக்கேன்? வொர்க் அவுட் கூட ஒரு லிமிட் தான்! ஒன் ஹவர்க்கு மேல பண்ணாதீங்க என்று சொல்லுற பேச்சை கேட்கறதே இல்லை நீங்க” என்று கொண்டே அவனருகில் வந்தாள்.
அவளது பேச்சையும் தோரனையும் வித்தியாசமாக பார்த்தவன் “ என்ன பேச்செல்லாம் தினுசாக இருக்கு? மேடம் எதுவும் புதுசாக ப்ளான் பண்ணீட்டீங்களா?” என்று டவலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டே கேட்டான்.
இந்த கேள்வியை சிலமணி நேரங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கண்டிப்பாக அவளது பதில் வேறாக இருந்திருக்கும்
ஆனால் அதற்குள் தனது மனநிலை மாறியிருப்பதை நினைத்து அவளுக்கே விந்தையாகத்தான் இருந்தது.
மனித மனம் குரங்குபோல் ஒவ்வொன்றாக தாவிக்கொண்டே இருக்கும் என்பது உண்மைதான் என்று இப்போது ஸ்ரீக்கு நன்றாக புரிந்தது.
“ பிளான் பண்ணி மடக்கறதுக்கு நீங்க என்ன ஃபிகரா இல்லை நான்தான் ரோட்சைட் ரோமியோவா? நீங்க என் புருஷன் நான் உங்க பொண்டாட்டி இதுல என்ன பிளானிங்கு? வாடா புருஷான்னா பின்னாடியே வந்திட மாட்டீங்க” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினாள்.
வேந்தனின் புருவங்கள் ஆச்சர்யத்தில் நெளிந்ததன. முதன்முதலில் ஸ்ரீயை எப்படி பார்த்தானோ அந்தத்துடுக்குத் தனம் திரும்பி வந்தது போல் இருந்தது.
வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கத்தான் செய்தான்.
அவனது முகத்துக்கு நேராக சுடக்கிட்டவள் “ என்னப்பாஸ் அப்படி பார்க்கறீங்க? எங்கேயோ கேட்டமாறி இருக்கோ? நம்புங்கபாஸ் ஓன் டயலாக் உங்க மேல சத்தியமாக என் சொந்த டயலாக்?” என்று அவனது தலையில் கைவைக்கப்போக பின்னால் நகர்ந்து நின்றுக்கொண்டாள்.
“ அட பயப்படாதீங்க பாஸ் கிட்டவாங்க ஒன்னும் பண்ணமாட்டேன்! ஐம் எ வெரி குட் கேர்ள் உங்க கற்புக்கு நான் கியாரெண்டி” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தவள் பக்கென வாய்விட்டே சிரித்துவிட்டாள்.
“ லூசு மாதிரி கெக்கப்பெக்கன்னு சிரிக்காம எதுக்கு வந்தேன்னு சொல்லுறீயா? உன்னை பாக்கப்பாக்க காண்டாவுது” என்று தோளில் கிடந்த துண்டை கட்டிலில் தூக்கி எறிந்தான்.
“ இல்லை கற்புன்னு ஒன்னு இருந்தாத்தானே கியாரண்டி வாரண்டியெல்லாம் கொடுக்க! அதான் கடல்லயே இல்லையே? அதை நினைச்சேன் சிரிச்சேன்” என்று வாயில் கைவைத்து சிரித்தாள்
“ கொழுப்புடி உனக்கு! இப்பத்தானே அடிவாங்கின பத்தலையா உனக்கு” என்று தனது கையில் இருந்த ஐம்பொன் காப்பை மேலேற்றிக்கொண்டே அவளருகில் வர “ இருந்தாலும் ரொம்ப மோசம் நீங்க! கற்பமாக இருக்கற பொண்ணுன்னுக்கூட பாக்காம கைநீட்டிட்டுறீங்க இப்போ மிரட்டுறீங்க! போங்க உங்களுக்கு ஆசையாக ஒன்னு கொடுக்க வந்தேன் இப்போ கிடையாது டூ” என்று வேண்டுமென்றே சிணுங்கினாள்.
“ ஏய் பயத்தில் ஏதும் மண்டைக்கோளாறு வந்துட்டா? ஏன்டி இப்படி க்ரீஞ்சா பண்ணிட்டு இருக்கற” என்று பல்லைக்கடித்துக்கொண்டு கேட்டான் வேந்தன்
“ க்ரீஞ்சா? அவ்வளவு கேவலமாவ பெர்ஃபோர்ம் பண்ணுறோம்? இவனும் இப்படித்தான் பண்ணினான் நமக்கு நல்லா இருந்ததே?” என்று யோசித்தவள் அவனிடம் அதனை கேட்கவும் செய்தாள்.
“ இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும் ? உங்க டயலாக் தானே கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணுங்க” என்று இடுப்பில் கைவைத்து அவனை அண்ணாந்து பார்த்தாள்.
“ ஹெலோ மிஸ் ஸ்ரீ சந்திரன் ஊருக்குள்ள எல்லாரும் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிடமுடியாது அதுக்குல்லாம் ஒரு தனித்திறமை இருக்கனும்” என்று கெத்தாக காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.
“ என்ன இருந்து என்ன புண்ணியம் அறிவுக்கொஞ்சம் கூட இல்லையே?” என்று சலித்துக்கொண்டே கூறினாள்.
“ அடிங்க நானும் பாத்திட்டே இருக்கேன் வந்ததில் இருந்து கலாச்சிட்டு இருக்க என்னடி வேணும் உனக்கு?”
“ எனக்கு நிறைய வேணும் கேட்கறதெல்லாம் கொடுத்திடுவீங்களா” என்று ஒற்றை புருவத்தை உயர்த்திக்கேட்டாள்.
வேந்தன் அவளை புருவம் சுருக்கி பார்த்தான்
“ என்ன முடியாதா சரி நான் கொடுக்கறேன் நீங்க வாங்கிக்கோங்க போதும்!” என்று அவனது அருகில் ஓரடி எடுத்து வைக்க பின்னால் ஒரடி எடுத்து வைத்தான்.
“ பாருடா ” என்றவள் சரசரவென அவனருகில் வர ஒவ்வொரு அடிக்கும் பின்னால் நகர்ந்தவன் சுவற்றில் மோதி நின்றான்.
அவனது இருப்புறமும் சுவற்றில் கையூன்றி மூச்சுக்காற்று படுமளவுக்கு நெருங்கி நின்றாள். ஆனால் கிஞ்சித்தும் அவனை தொடவில்லை.
வேந்தன் நினைத்திருந்தால் அவளை தட்டிவிட்டு சென்றிருக்கலாம் ஆனால் விலகத் தோன்றவில்லை.
அப்படியே அவளது மூச்சுக்காற்றை சுவாசித்துக்கொண்டே நாசியில் அவளது மணம் நிறைந்துக்கிடப்பது அவனுக்கும் பிடித்து இருந்தது.
குனிந்து அவளது பிறைநெற்றியை பார்க்க பொட்டில்லாமல் வெறுமையாக இருந்தது. அப்படியே அவளது விழிகளை நோக்க அவளும் அவனைத்தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
பார்வையாலேயே நாசித்தீண்டி பார்வையைக்கீழிறக்கியவன் அவளது இளஞ்சிவப்பு இதழ்களில் பார்வையை நிலைக்கவிட்டான்.
சட்டென மறுபுறம் திரும்பி கொண்டான்.
இதற்கு மேல் சென்றால் கண்டிப்பாக தன்னிலை இழந்துவிடுவான் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது.
ஒற்றைக்கையால் அவனது முகத்தை தன்பக்கம் திருப்பியவள் “ என்னை பார்க்கக்கூட இப்போ பிடிக்கலையா? அந்தளவுக்கு என்மேல டாக்டருக்கு வெறுப்போ வந்துடிச்சோ?” என்று அவனது விழிகளை பார்த்துக்கொண்டே கேட்டாள்.
“ விடு ஸ்ரீ! வேணுமின்னே பண்ணாதே நானும் மனுசன்தானே எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு! எத்தனை நாளைக்குத்தான் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கறது” என்று அவளை விட்டு விலகப்பார்க்க அவனது டீசர்ட் காலரை பிடித்து நிறுத்தியவள் “ யாரு கண்ட்ரோல் பண்ணச்சொன்னது உங்க பொண்டாட்டிதானே?” என்றாள்.
“ இது அந்த ஃபீலிங் இல்லடி இது வேற”
“ எப்பப்பாரு அது நினைப்பாகவே இருப்பீங்களா? நானும் அதைச்சொல்லலை! கிட்டத்தட்ட” என்று கண்களை உருட்டி உருட்டி கணக்குப்போட்டவள் “ ஹான் நான் உங்களை விட்டுவிட்டு வந்து 1 மாசம் ஆகுது! நீங்க இங்கே வந்து முழுசாக 24 ஹவர்ஸ் ஆகிடுச்சு! இன்னும் ஒருவார்த்தைக்கூட கேட்கலை ஏன்டி விட்டுட்டு போனன்னு?”
“ என் வீடு என் ஊருன்னு சப்பைக்கட்டு கட்டாதீங்க என்ன? அத்தனை பேரு இருக்கும்போதுதானே கிஸ் அடிச்சீங்க அப்பறம் என்ன?” என்றாள்.
“ உன்னை நம்பி ரிஸ்க் எடுக்க இனி நான் தயாராக இல்லைமா நீயா வந்தா கூட்டிட்டு போற ஐடியாலதான் இருந்தேன்! ஆனால் விட்ட பாரு ஒரு அறை ஹப்பா! பார்க்க வத்தலும் தொத்தலுமா இருந்திட்டு என்னா ஸ்ரெந்த்து? ஸ்ட்ரோங் பாடிதான்!” என்று கண்ணத்தை ஒருமுறை தடவிக்கொண்டான்.
அதனைக்கேட்டு கலகலவென சிரித்தவள் “ டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் பாஸ் பீ கேர்ஃபுல்” என்றாள்.
“ எதுக்கு எதைடி மேற்கோள் காட்டுற மக்கு” என்று செல்லமாக அவளது தலையில் தட்டியவன் வாய்விட்டு சிரிக்க “ க்யூட்! இப்போ எப்படி இருக்கு? இந்த டொக் விழுந்த கண்ணத்தில் சிரிப்பை பார்க்க எவ்வளவு பெர்ஃபார்ம் பண்ணவேண்டி இருக்கு? வயசான காலத்துல எதுக்கு பாஸ் இப்படி கோபப்படுறீங்க? பிபி வந்திடும்னு தெரியாதா” என்று சலித்துக்கொண்டாள்.
“25+ ஆ ஹெலோ யாரை ஏமாத்த பாக்கறீங்க உங்க ரியல் ஏஜ் என்னன்னு எப்பவோ கண்டுபிடிச்சிட்டேன்! உங்களை யாரு முந்திரிக்கொட்டை மாதிரி சீக்கிரம் பிறக்கச்சொன்னது?அது உங்கத்தப்பு பாஸ்! அப்படி என்னால என்ன பிரச்சினை வந்திடுச்சு உங்களுக்கு? ம்ம்ம் சொல்லுங்க ஹான்” என்று சண்டைக்கு எகிறினாள் ஸ்ரீ.
அவளது கேள்வியை கண்டுக்கொள்ளாதவன்
“ என்னப்பேச்சு நடப்பதெல்லாம் புதுசா இருக்கு? என்னாச்சு நல்லநாளுலயே கிட்ட வரமாட்டியே அதிசயமாக இருக்கு?” என்று அவளது நெற்றிமுடியை ஒதுக்கி காதிற்குப்பின்னால் விட்டுக்கொண்டே கேட்டான்.
ஸ்ரீ வேந்தனின் கையைப்பிடித்து செயினை வைக்க “ ஓஹ் உன் ப்ளான் சக்ஸஸ் ஆகிட்டு அந்த சந்தோஷத்தில் தான் இவ்வளவு பேசுற? இப்போ என்ன நான் மூட்டையைக்கட்டிட்டுப் போகனுமா இல்லை ப்ப்” என்று பேசிக்கொண்டே இருக்க அவனது காலரைப்பிடித்து தனது உயரத்திற்கு இழுத்து மீதி வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டாள் ஸ்ரீ.
வேந்தனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்து பின்னர் நெகிழ்வாக மூடிக்கொண்டன.