“ வெயிட் மீதி கதைய நான் சொல்லுறேன்! நீங்க ஃபீல்டுக்குப் போன இடத்திலதான் வேந்தன் சாரை பாத்தீங்க அங்கதான் ரெண்டு பேருக்கும் பழக்கம், அப்படியே ரெண பேருக்கும சிஙக் ஆகிடுச்சு கரெக்டா?” என்று இடையில் ஒரு பெண்குரல் கேட்டது.
அந்தக்குரலுக்கு சொந்தமானவள் யாரென சட்டென இருவருக்கும் விளங்கிவிட்டது. ஸ்ரீயும் கனகாவும் ஒருசேர “ பார்வதி” என்று குரல் கொடுத்திருந்தனர்.
“ என்னாச்சு அக்கா? நான் சொன்னதுதானே நடந்தது ஸ்ரீமா?” என்று இருவருக்கும் ஒருக்கேட்டாள் பார்வதி.
“ அடியே உன் ஓட்டைவாயை வச்சிட்டு கொஞ்சம் சும்மா இருக்கமாட்டியா? அறிவுக்கெட்டவளே! எப்ப என்ன பேசனும் என்கிற ஒரு விவஸ்தை இல்லை?அதுசரி உன்னை யாரு புள்ளை இங்கன வரச்சொன்னது?உன்னையை காஃபி போடத்தானே சொன்னேன்? இங்கன எதுக்கு வந்தநீயி” என்று கனகா சரமாறியாக பாருவை திட்ட ஆரம்பித்துவிட்டாள்.
“ ஏன் அக்கா திட்டறீங்க? காஃபிப் போடச்சொன்னீங்களே பாலு எங்கே இருக்குன்னு சொன்னீங்களா? அதை கேட்கலாமுன்னு வந்தா ரெண்டு பேரும் தீவிரமாக என்னமோ பேசிட்டு இருந்தீங்க! எதுக்கு வம்புன்னு வெளியேவே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்! காத்துல அதுவா ரெண்டு வார்த்தை என் காதில் வந்து விழுந்தது! கதை நல்லா இருக்கேன்னு கேட்டுட்டு இருந்தேன், ஒரு ஆர்வத்தில் வாயை விட்டுட்டேன் அது தப்பா?” என்று நீட்டிமுழக்கினாள்.
“ ரெண்டு பேரும் பேசறதை எங்க அனுமதி இல்லாமல் கேட்டதே தப்பு! அதை ஒட்டு கேட்டது மட்டுமில்லாம தைரியமாக அதை எங்க முன்னாடியே சொல்லுற? எம்புட்டு கொழுப்புடி உனக்கு?” என்றாள் கனகா.
“ கேட்டது தப்புன்னா என்ன கேட்க தூண்டினது உங்க தப்பு” என்றாள் பாரு.
“ எப்பப்பாரு பப்பரப்பேன்னு இப்படி கதவை திறந்து போட்டுட்டு பேசவேண்டியது! அப்புறம் ஏன்டி வந்த? ஏன்டி கேட்ட? அப்படின்னு என்மேல பாய வேண்டியது இதே புழப்பாக போச்சு உங்களுக்கு! கொஞ்சம் அக்கம்பக்கம் பாத்துப் பேசுங்க ! இங்கே சுவத்தைக்கூட நம்பக்கூடாது பாத்துக்கங்க! அம்புட்டதேன் நான் சொல்லுவேன்” என்றாள்.
“ இதே வேலையா போச்சா? எத்தனை நாளு மகாராணி வரும்போது நாங்க இப்படி ரகசியம் பேசிட்டோம் இப்படி சலிச்சுக்கற”
“ நான் வந்து ரெண்டு நாளுதான் ஆகுது ஒத்துக்கறேன்! ஆனால் எனக்கே தெரியுற அளவுக்கு இருக்கு உங்க ரகசியம் அந்த லட்சத்தினத்தில பேசிக்கறீங்க நீங்க ரெண்டு பேரும்”
“வாயி ரொம்பத்தான் நீளுது புள்ளை உனக்கு! அப்படியே இடிச்சேன்னு வையி செவுத்தில பல்லி மாதிரி ஒட்டிக்குவ பாத்துக்க?”
“ உன்கிட்ட பேசினா கமல் படம் பாத்தமாதிரிதான் நான் திரியவேண்டி இருக்கும் நீ எக்கேடா கெட்டு போ” என்று அந்தப்பேச்சை அத்துடன் நிறுத்தியவள் “ ஸ்ரீமா நீங்க ஒன்னும் கவலைப்படாதீய நாம பிறவு பேசிக்கலாம்! இவளை வேலையை பாக்க சொன்னா எனக்கு ஒரு வேலையை வக்கிறா” என்று ஸ்ரீயிடம் கூறினாள்.
“ வாடி போவோம் இங்கே யாரு வாயை பாத்திட்டு நிக்கப்போறநீயி? எனக்குன்னு வந்து சேர்ந்து இருக்கப்பாரு” என்று பாருவிடம் கேட்டாள்.
“ புரியவேண்டியவங்களுக்கு புரியும்கா அதுக்கெல்லாம் ஜென் நிலையை அடைஞ்சு இருக்கனும்” என்று புத்தர்போல கையில் முத்திரை பிடித்து கண்களை மூடிக்கூறினாள்.
“ இப்படியே பேசிட்டு இருந்தா பைத்தியம் பிடிச்சுதான்டி திரியப்போற நீயி” என்று கூறிய கனகா நங்கென அவள் தலையில் கொட்டினாள். “ அம்மே மெல்லக்கா வலிக்குதல்லோ” என்று தலையை தேய்த்து கொண்டவள் “பைத்தியமா?நான் உங்களை அலெர்ட் பண்ணுறேன்கா அலெர்ட்டு! இப்போ புரியாம இருக்கலாம் பின்னாடி புரியும் அப்போ தெரியும் இந்த பார்வதியோட அருமை! அனுபவஸ்தங்ககிட்ட கேளுங்க என் அருமையை” என்று தன்பாட்டிற்கு பேசிக்கொண்டிருந்தாள்.
அந்தோ பரிதாபம் அவளது பேச்சை கேட்க கனகா அங்கு இருக்கவில்லை. எப்போதோ வெளியேறிச்சென்றிருந்தாள்.
“ போய்ட்டாங்களா சொல்லவே இல்லை?” என்றவள் அறையை விட்டு வெளியேறப்பார்க்க “ பாரு நில்லு!” எனறு அவளை தடுத்து நிறுத்தினாள் ஸ்ரீ.
“ நீ அக்காவுக்கு வேணும்னா புரியாமலே இருக்கலாம் ஆனால் எனக்கு புரிஞ்சிடுச்சு! என் வீட்டில் என்னோட ரூமில் நான் என்ன பேசறேன்னு தெரிஞ்சிக்கற ஆர்வம் யாருக்கு இருக்கப்போகுது? இவ்வளவு அவசரமாக வந்து தடுக்கற”
“ அவசரமாக வந்து தடுத்தேனா?தேவையில்லாததெலலாம் கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க ஸ்ரீமா?அதான் நீங்களே சொல்லிட்டீங்களே? யாரு கேட்கப்போறான்னு அப்புறம் என்ன ஃப்ரீயா விட்டு கல்யாண வேலையை பாருங்க!” எனறு அவசரமாக மழுப்பினாள். அவளது உடல்மொழியே சொல்லியது எதுவோ சரியில்லை என்று அதனை ஸ்ரீயால் நன்றாக உணரமுடிந்தது.
“ இல்லை இங்கே எதுவோ சரியில்லை! அது உனக்கும் தெரிஞ்சிருக்கு! சொல்லு நான் தெரிஞ்சுக்கனும்” என்று அழுத்தமாக கூறினாள்.
“ இப்போ அது தெரிஞ்சிக்கிட்டு என்னப்பண்ணப்போறீங்க? உங்கப்பிரச்சனையே தீக்க நேரமில்லாம ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கீங்க இதுல இது வேறயா?” என்று விட்டேற்றியாக கூறினாள்.
“ என்னடி இப்படி பேசுற? என்வீட்டு பிரச்சினையை நான் தெரிஞ்சுக்க வேணாமா?”
“ தெரிஞ்சு என்னப்பண்ணப்போறீங்க? என்னப்பண்ண முடியும் உங்களால?” என்று சற்று குரலுயர்த்தினாள்.
“ பாரு ஏன்டி இப்படி பேசுற?”
“ என்னப்பேசுறேன்? உங்க கழுத்தில் இருந்த செயினையே பாதுகாப்பாக வச்சிக்க முடியலை உங்களால அந்தளவுக்கு நிதானம் இல்லாம இருக்கீங்க! இந்த லட்சனத்துல இவ்வளவு பெரியவீட்டில் என்ன நடந்தா நமக்கென்ன?”
“ஏய் இது உனக்கெப்படி தெரியும்?அதையும் ஒட்டுக்கேட்டியா நீ?”
“ ஆமாம் அதுக்கென்ன இப்போ? ஏன் அவசரமாக வந்து தடுத்தே என்று கேட்கறீங்க? என்ன எல்லாத்தையும் சொல்லிடுவீங்களா நீங்க? சொல்லத்தான் முடியுமா? ஆறு அறிவு இருக்கற எந்த மனுசனும் நீங்க சொல்லுறதை நம்பமாட்டான்! மாறா உங்களுக்குத்தான் ஏதோ மண்டக்கோளாறுன்னு மெண்டல் ஆஸ்பிடல்ல போட்டுடுவாங்க! அதை முதலில் புரிஞ்சுக்கோங்க!” என்றிட ஸ்ரீ அவளை நன்றாக உறுத்துவிழித்தாள்.
“ என்ன?என்ன முறைக்கறீங்க? என்னையும் கொல்லப்போறீங்களா? அதை முதல்ல பண்ணுங்களா? அதை முதலில் பண்ணுங்க உங்கப்புண்ணியத்துல நிம்மதியாக போய் சேர்ந்துடறேன்” என்று தலைக்குமேல் கையெடுத்து கும்பிட்டாள்.
“ நான் ஒரு பைத்தியக்காரி நியாயத்துக்கு உங்களை ஜெயில்லத்தான் போடனும் மாறி மெண்டல் ஆஸ்பிடல்னு சொல்லுறேன் பாருங்க! என்ன சொல்லனும்?” என்று தன்தலையிலேயே மாறிமாறி அடித்துக்கொண்டாள்.
“ பாரு நம்புடி நான் ஜெனியை கொல்லலை, அந்த விஜி அவனை” என்று வாயெடுக்க அவசரமாக ஸ்ரீயின் வாயைத்தன் கைகளால் பொத்தியிருந்தாள் பாரு. வேண்டாம் எனும் ரீதியில் தலையை ஆட்டியவள் “ இங்கே சுவத்துக்கும் காது இருக்கும் எப்போ வேணுமின்னாலும் அது நமக்கு எதிராக மாறும் பாத்து வார்த்தையை விடுங்க!” என்று சுற்றிமுற்றி நோட்டமிட்டுக்கொண்டே கூறினாள்.
“ விடுடி!அப்படி யாரு என்னப்பண்ணிடுவாங்க! என் வீட்டில் யாருக்கு நான் பயப்படனும்! உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்? யாரு நீ? எதுக்குடி என் வாழ்க்கையில் வந்த நீ வந்தப்பின்னாடிதான் இவ்வளவு பிரச்சனையும் இப்படி கொஞ்சகொஞ்சமாக சாகடிக்கறதுக்கு அப்பவே என்னை சாக விட்றுக்கலாம்” என்று தரையில் மடிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
“ நம்புடி! என் கண்முன்னாடிதான் இருந்தா!அந்த சம்பவம் எப்படி நடந்தது என்று எனக்கே தெரியலை? அவளுக்கு என்ன ஆச்சு? எப்படி அங்கே வந்தா எதுவும் எனக்கு தெரியாது? இதுல அவ கர்ப்பமாக வேற இருக்கேன்னு சொன்னாள்! இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை! இதை யாருக்கிட்டப்போய் சொல்லமுடியும்?”
“ நானே குற்றவுணர்ச்சியில் தினம்தினம் செத்திட்டு இருக்கேன்! இத்தனை பிரச்சினைக்கு நடுவில் கழுத்தில் தாலி இல்லாமலேயே என் வயித்துல வேந்தனோட குழந்தை வளருது! அவன் அம்மா!அவன் பண்ணிட்டு இருக்கற வேலை! இதுக்கெல்லாம் உனக்கே தெரியுமில்லை? எல்லாத்தையும் தாண்டி வந்திருக்கான்!”
“ நான் அவ்வளவு அவமானப்படுத்தினத்துக்கு பின்னாடியும் வந்திருக்கான் எனக்காக எனக்காக மட்டும்!யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரி லவ்”
“அவன்தான் மாப்ளைன்னு தெரிஞ்சதும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அவனை கட்டிப்பிடிச்சு என்ன மன்னிச்சுடுங்க வேந்தன்னு கத்தனும் போல இருந்தது! ஆனால் இந்தகையாலயே அவனை அடிச்சு தள்ளிவிட்டு வந்தேன் தெரியுமா?” என்று மாறிமாறி தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள்.
“ அப்படியே போயிடுவான்னு நினைச்சேன்!ஆனால் அப்பக்கூட விடாம என் ரூமுக்கே வந்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கத்தான் பாத்தான்! நான் அடம் பண்ணவும்தான் ஸ்ரேவும் விபியையும் காட்டி மிரட்டினான்! “
“அப்போ பயத்தில் ஏதேதோ யோசிச்சு இருந்தாலும் எனக்கு அவனைப் பத்தி நல்லாத்தெரியும்! தன்னை நம்பிவர ஒரு உயிரை காப்பாத்த என்ன வேணுமின்னாலும் பண்ணுவான்! என்னை மிரட்டத்தான் எதுவோ ட்ரைப்பண்ணியிருக்கனும் அது இப்போதான் புரியுது”
“ இந்த பிரச்சினையெல்லாம் முடிவுக்கு கொண்டு வரத்தான் அவனை செக்கப்னு சொல்லி வெளியே கூட்டிட்டு போய் எல்லா உண்மையும் சொல்லிடலாம்னு நினைச்சேன்! நான் நிம்மதியாக இருக்கக்கூடாதுன்னு அந்த கடவுள் முடிவு பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன்! அதான் வேந்தன் செயின் காணாம போய் எங்களுக்கு பிரச்சினை வந்து என்னன்னமோ நடந்துப்போச்சு”
“ நாங்க வாழ்க்கையை ஆரம்பிச்சு கொஞ்சநாள் தான் இருக்கும் ஆனால் அவன் எப்பவும் சொல்லிட்டே இருப்பான் எனக்கு எங்க அப்பாவே மகனா வந்து பிறக்கனும் அவர் எபப்டியெல்லாம் என்னை பாத்துக்கிட்டாரோ பதிலுக்கு அப்படியே அவரை பாத்துபாத்துச்செய்யனும்னு அப்படிப்பட்ட குழந்தையை நானே கொல்லுவேன்னு சொல்லுற அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திட்டேன்! நான் பாவி பாவி” என்று புலமபிக்கொண்டிருந்தாள்.
“ நான் பண்ணவேலை மட்டும் தெரிஞ்சா அவன் ஃபிரெண்ஸே அவனுக்கு எதிராக திரும்பிடுவாங்க! அவன் உயிருக்கேக்கூட ஆபத்து வரலாம்! எனக்கெல்லாம் எங்கேயுமே பாவமன்னிப்பு கிடைக்காது” என்று கதறிக்கொண்டிருக்க பார்வதிக்கே அவளை பார்க்க ஒருமாதிரி ஆகிவிட்டது. அவளும் ஒருவகையில் அவளது துன்பங்களுக்கு காரணம் என்று அவளது மனசாட்சி உறுத்தியதும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கலாம்.
“ ஸ்ரீமா அழாதிங்க ஏதோ உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டுட்டேன்! இப்போ என்ன அந்த செயின் தானே வேணும் இந்தாங்க போங்க! உங்க வேந்தன்கிட்டையே கொடுத்து உங்க மனசில் இருக்கற எல்லாத்தையும் சொல்லி மன்னிப்பு கேளுங்க போங்க” என்று அவளது கையைப்பிடித்து வேந்தனின் சிங்கமுக பெண்டன்ட் இட்ட செயினை கொடுத்தாள்.
தன் கண்ணீரைத்தொடைத்துக்கொண்டு பாருவை ஏறிட்டு பார்த்தவள் அவசரமாக பெண்டன்டை திருகிப்பார்த்தாள். உள்ளே சிப் பளபளவென்று காட்சியளித்தது. “ இது உங்கிட்ட எப்படி வந்தது? நாங்க பேசினது உனக்கெப்படி தெரியும்?” என்றாள்.
“வேந்தன் சார்கிட்ட நீங்க உண்மையை சொல்லக்கூடாதுன்னு நான் தான் எடுத்தேன்! ஆனால் அது தப்புன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு! அவருக்கு உண்மை தெரியனும் அப்போதான் பலப்பேரோட முகத்திரை கிழிக்கமுடகயும்! இல்லைனா ஜெனிமாதிரி இன்னும் பல அப்பாவி உயிர்கள் எதுக்கு இறந்தோம்னே தெரியாம தன் உயிரை இழக்க வேண்டிவரும் அது நடக்கக்கூடாது” என்றாள்.
“ இன்னும் நிறைய உயிரா? எனன்டி உளறுற? முதல்ல என்ன நம்பலைன்ன? இப்போ பல உயிர்போகக்கூடாதுங்கற? எதுக்கு செயினை எடுத்த திருப்பிக்கொடுக்கற? என்னை சுத்தி என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியலை அப்படி தலையெல்லாம் சுத்துது!” என்று தலையை பிடித்துக்கொண்டு கத்தினாள்.
அப்படியே சம்மனக்காலிட்டு ஸ்ரீயின் அருகில் அமர்ந்தவள் “ இப்போ சொல்லுறேன் நல்லாக்கேட்டுக்கோங்க! இது உங்கவீடா இருக்கலாம்! இருக்கற ஆளுங்க உங்க ஆளுங்க இல்லை! உங்க நிழலைக்கூட சந்தேகப்படவேண்டிய இடத்தில் இப்போ இருக்கீங்க! யாரா இருந்தாலும் நம்பாதீங்க! ஏன் நானா இருந்தாலும் நம்பாதீங்க! நீங்க நம்பவேண்டிய ஒரே ஆள் உங்க வேந்தன் தான்! அவரைவிட்டு விலகனும்னு மட்டும் நினைக்காதீங்க! அது உங்களைச்சுத்தி இருக்கற யாருக்கும நல்லதில்லை!அவரை நெருங்கியே இருங்க போதும்!”
“ அவருக்கிட்ட உண்மையை சொல்ல உங்களால முடியாது பலத்தடங்கல்கள் வரும்! முயற்சிப்பண்ணுங்க! இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்! இதுக்குமேல இப்படியொரு வாய்ப்பு கிடைக்குமான்னு எனக்கு தெரியலை அதான் இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டேன்!இதுக்குமேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க வரேன்” என்று அவசரமாக கூறியவள் சுற்றிமுற்றி நோட்டமிட்டுக்கொண்டே வெளியேறிச்செனறுவிட்டாள்.
அவளது முதுகையே வெறிக்கப்பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஸ்ரீயினுள் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. அதற்கான பதில்கள் என்னவோ பூச்சியமாகத்தான் இருந்தன.
எப்படி அதனை கண்டுப்பிடிப்பது என்று யோசித்து பார்த்து விழிப்பிதுங்கி நின்றவளுக்கு விடையாக கிடைத்தது தன்கையில் இருந்த வேந்தனின் செயின்.
கண்டிப்பாக அது உதவிப்புரியும் என்று அவள் உள்மணம் அடித்துக்கூறியது.