அத்தியாயம் –17

மதியம் 3 மணிப்போலத்தான் பஸ் என்பதால் ஸ்ரீ நிதானமாக தனது லக்கேஜ்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். ஸ்ரே அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.

ஜெனி காலையிலேயே எங்கேயோ கிளம்பிச்சென்றுவிட்டாள். சம்பிரதாயத்துக்குக்கூட பாத்துப்போ என்று ஒருவார்த்தைக்கூறவில்லை.   கடந்த ஒரு மாதகாலமாக எங்கே செல்கிறாள், எப்போது வருவாள் என எதுவும் சொல்வதில்லை.

ஸ்ரீயும் ஸ்ரேவும் தானாக சென்று பேசினாலும் ஒதுங்கிச்சென்றுவிடுவாள். ஒரே அறையில் இருந்தாலும் அவளது நடவடிக்கைகள் இருவருக்கும் புதிராகத்தான் இருந்தது.

ஓரளவுக்கு அனைத்து பொருட்களையும் அடுக்கி முடித்தவள் “ ஸ்ரே விபிக்கு ஃபோன்பண்ணு பஸ்க்கு டைம் ஆச்சு கிளம்பனும்” என்றுக்கொண்டே தனக்கு வேண்டிய ஃபைல்களை சரிப்பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.

“ ஹே மறந்துட்டியா அம்மு இன்னைக்கு ஐசுவுக்கு அரங்கேற்றம் பண்ணுறாங்க அவனால வரமுடியாது நாமதான் ஆட்டோப்பிடிச்சு போகனும்” என்று கூற“ ஐசுன்னா விபி சிஸ்டர்தானே? அவ சரியான பயந்தாங்கொள்ளியாச்சேடி? அரங்கேற்றம் பண்ணுற அளவுக்கு ஸ்டேஜ் ஃபியர் போயிடிச்சா?” என்று ஆச்சர்யமாக கேட்டாள்.

“ அது இந்த ஜென்மத்தில நடக்காது!இன்னும் அப்படியேதான் இருக்கா” என்று சலித்துக்கொண்டாள் ஸ்ரே.

“ என்னடி ரொம்ப சலிச்சுக்கற? உன் நாத்தனார்தானே நீ போகலையா?என்மூஞ்சியை பாத்திட்டு உட்கார்ந்து இருக்க?” என்றாள்.

“அங்கே அவன் மொத்த ஃபேமிலியும் இருக்கும்டி எப்படி போறது? டவுட் வந்துடாது? அதுமட்டுமல்லாம உன்னை சென்ட் ஆஃப் பண்ண வரவேண்டாமா?” என்றுக்கூறினாள்.

 “ஏன்டி நான் என்ன கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கா போறேன் கும்பலாக வந்து டாட்டா காட்டி வழியனுப்ப! அதெல்லாம் தேவையில்லை நானே ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன் நீ கிளம்பு, நான் பாத்துக்கறேன்”

“அதெல்லாம் நீ சொல்லக்கூடாது, நீ ஏன் சொல்லுற? நான் அப்படித்தான் வருவேன்” என்று சொல்லிக்கொண்டே அலமாரியைத் திறக்க அனைத்து பொருட்களும் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து சிதறின.

“ ஸ்ரே கப்போர்டை கொஞ்சம் க்ளீனா வச்சிருக்கக்கூடாது? உன்னை வச்சிட்டு ஒரு ஊறுகாய் கூட போடமுடியாதுடி” என்று அனைத்து பொருட்களையும் எடுத்து அடுக்கினாள்.

பொருட்களுக்கு நடுவே லெட்டர் ஒன்று தென்பட அதனை எடுத்து திறந்து பார்த்தாள்.

ஜெனிக்குத்தான் வந்திருந்தது. “*******” என்று பிரபல ஆஸ்திரேலியா புகைப்படக்கலைஞரின் இன்டர்ன்ஷிப் ப்ரோக்ராமிற்கு செலக்ட் ஆகியிருப்பதாகவும் இன்டர்ன்ஷிப் முடிந்ததும் அவரது அசிஸ்டன்டாக சேர்ந்து கொள்ளலாம் எனவும் இருந்தது. இன்னும் ஓரிரு மாதங்களில் கிளம்பி வரவேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது.

“ என்னடி அடிக்கடி ஃப்ரீஸ் ஆகி நின்னுடற?லெட்டர்ல அப்படி என்ன எழுதியிருக்கு?” என்று அதனை வாங்கிப்பார்த்தவளுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“ இவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கு நம்பக்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாலாப்பாத்தியா? சரியான ஈகோயிஸ்ட்” என்று ஜெனிக்கு திட்டினாள்.

“ அவ விருப்பப்படி என்னவோ பண்ணிட்டு போகட்டும் விடு ஸ்ரே ! எந்த நேரத்தில் ஸ்டர்ன் ஆகி நிக்கப்போற என்று சொன்னேனோ தெரியலை! அப்பத்திலிருந்து ஷாக் மேல ஷாக்கா கொடுத்திட்டு இருக்கறா” என்றாள்.

“ அசால்ட்டாக சொல்லுற அப்ப இது முன்னாடியே தெரியுமா உனக்கு? ” என்றிட “ டைம் ஆச்சு நான் கிளம்பறேன் பாத்து இருந்துக்கோ” என்றிட “பேச்சை மாத்தாதே!  உன் மூஞ்சி சரியில்லாத போதே நினைச்சேன் ஏதாவது இருக்கும்னு ! அவ அவாய்ட் பண்ணாலும் நீ விடமாட்ட ஆனால் இப்பல்லாம் நநீ அவளை கண்டுங்கறதே இல்லை! உன் பேச்சை கேட்கலைன்கற கோவம்னு நினைச்சா இதுதான் ரீசனா?”என்றாள். ஸ்ரீ பதிலேதும் சொல்லாமல் மௌனமாக  இருக்க “ சரி மூஞ்சை அப்படி வச்சுக்காதே சகிக்கலை! வா நானே ட்ராப் பண்ணுறேன்” என்றாள். ஸ்ரீ மறுத்துப்பேச வாயெடுக்க “ இன்னைக்கு ஒருநாளாவது என் பேச்சை கேட்டுத்தொலைடி” என்றவள்  வம்படியாக அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அவர்களின் ஹாஸ்டலில் இருந்து பஸ் ஸ்டாப்புக்கு 30 நிமிடத்தில் சென்று சேர்ந்துவிடலாம். ஆட்டோவில்தான் இருவரும் பயணம் செய்துக்கொண்டிருந்தனர். இன்னும் இருபது நிமிடங்களை கடந்துவிட்ட நிலையில் “ அண்ணா அந்த காஃபில் ஆட்டோவை கொஞ்சம் நிறுத்துங்களே ஒரு சின்ன வேலை இருக்கு” என்று வண்டியை நிறுத்தினாள்.

“இங்க என்னடி வேலை உனக்கு! கடைசி நேரத்தில்தான் எல்லாம் பணணுவியா?” என்றிட “ முக்கியமான ஒருத்தரை பாக்கனும்டி!வா உடனே வந்துடலாம் “ என்றாள்.

“உனக்கு வேண்டகயவங்கத்தானே நான் எதுக்கு? நான் வரலை நீ போ நான் ஆட்டோவிலேயே வெயிட் பண்ணுறேன்” என்றிட“ உனக்குத்தான் டீன்னா பிடிக்குமே வா இங்கே நல்லா ஸ்பெஷல்டீ சூப்பராக இருக்கும்”  என்று அவளது கையை பிடித்துக்கொண்டு காஃபி ஷாப்புக்குள் நுழைந்தாள்.

“ காஃபின்னா அது கனகாக்கா காஃபிதான் மத்ததெல்லாம் கழனித்தன்னி மாதிரி தான்இருக்கும் இதுல ஸ்பெஷல் கழனித்தன்னி வேறையா விடு ஸ்ரே” என்றுக்கொண்டே உள்ளே நுழைந்தவளுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி.

அங்கே வெள்ளைவேஷ்ட்டி சட்டையில் அமர்ந்து காஃபிக்குடித்துக்கொண்டிருந்த வெற்றியை கண்டவளுக்கு தன்கண்களையே நம்பமுடியவில்லை.

“வெற்றி அண்ணா” என்று முகம்மலர கூறியவள் சுற்றம் மறந்து ஓடிச்சென்று அவனை கட்டிக்கொள்ள “ ஹே மெதுவாம்மூ பாத்து” என்றவன் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

“ உங்களை பார்க்காமலேயே போயிடுவேன்னு நினைச்சேன் தெரியுமா? என்னைவிட உங்களுக்கு ஊர்தான் முக்கியமாக போச்சில்லை? போங்கண்ணா எனக்கு ரொம்ப கோவம் உங்கமேல” என்று அவனது அணைப்பில் இருந்தப்படியே குறைப்படிக்க “உங்க ஊருல இப்படித்தான் கோவத்தை காட்டுவீங்களா? நல்லா இருக்குமாஅண்ணன் என்ன சும்மாவா இருக்காங்க ஊர்தலைவர் அம்மு ஏகப்பட்ட வேலையிருக்கும் நீதான் புரிஞ்சிக்கனும்”என்று ஸ்ரே அவர்கள் அருகில் வந்தாள்.

“ ஊர்த்தலைவர் இல்லை உலகத்துக்கே தலைவர் ஆனாலும் எங்க அண்ணனுக்கு நான் தான் ஃபர்ஸ்டாக  மத்ததெல்லாம் நெக்ஸ்ட்! சரிதானே அண்ணா” என்று ஆர்வமாக வெற்றியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஆமோதிப்பாக தலையை ஆட்டியவன் அவளது தலையை வருடினான்.

“ஆமாம் நீங்க மட்டும்தான் வந்தீங்களா அப்பா வரலை? எங்கே அவரு?” என்று சுற்றிமுற்றி சந்திரனை தேட சட்டென வெற்றியின் முகம் இறுகிவிட்டது.

“ அறுவடைல கொஞ்சம் வேலை அதிகம் அதான் ரெஸ்ட் எடுக்கறார்” என்று சொல்ல ஸ்ரீயின் முகமே சுருங்கிவிட்டது. அதனை வெற்றிக்கு காட்டாமல் முகத்தை சகஜமாக வைத்துக்கொண்டாள்.

“ ஓஹ் சரி! நீ வா ஐஸ்கிரீம் சாப்பிடலாம்! உட்காரு உங்கிட்ட நிறைய பேசனும்” என்று அமரச்சொல்ல“ அது முடியாதம்மூ நம்ம ஹாஸ்பிடல் பெர்மிஷன் விஷயமாக மினிஸ்டரை பார்க்க வேண்டி இருக்கு அவசரமாக கிளம்பனும்” என்று சொல்ல இப்போது வெளிப்படையாகவே தனது திருப்தியின்மையை காட்டினாள்.

“ மேடம் கான்ஃபிரன்ஸை சிறப்பாக முடிச்சிட்டு ஊருக்கு வாங்க! நானும் ஃப்ரீ ஆகிடுவேன்! அப்பறம் போதும் போதும்ங்கற அளவுக்கு கூடவே இருக்கேன் ஓகேவா?” என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டினான்.

“வாயை திறந்தாலே ஊருப்பேச்சுத்தானா போங்கண்ணா ரொம்ப மோசம் நீங்க” என்று சிணுங்கினாள். “ அட அம்முக்குட்டிக்கு கோபம் வருது பாருடா! ஆனால் இந்த அம்மு நல்லாவே இல்லையே” என்று அவளைப்போலவே  முகத்தைச்சுருக்க கலகலவென சிரித்து விட்டாள்.

“ நான் இந்த மாதிரி ஒன்னும் பேசலை இன்னும் பெட்டராக ட்ரை பண்ணுங்க” என்று கூற “ அம்மு சொன்னா சரிதான் பண்ணிடுவோம்” என்றிட இருவரும் இணைந்து சிரித்துக்கொண்டார்கள்.

இருவரையும் ஒருவித நெகிழ்ச்சியுடன் ஸ்ரே பார்த்துக்கொண்டிருக்க“ எப்படிம்மா இருக்க ஸ்ரே! நல்லா படிக்கறியா?” என்று பரிவுடன் அவளது தலையை வருடினான்.

“ நல்லா இருக்கேன்னா! நீங்க எப்படி இருக்கீங்க?” என்றிட “ ம்ம்ம் “ என்றவன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க பேரர் வந்து ஒரு கிஃப்ட் பாக்ஸை வைத்துவிட்டு சென்றார்.

“ ஹெலோ நீங்கப்பாட்டுக்கு வச்சிட்டு போறீங்க யாரோட பாக்ஸ் இது?” என்று கேட்க “ அம்மு கிஃப்ட் உனக்குத்தான் அவன் அனுப்பினான்” என்று சொல்ல அந்த அவன் யாரென்று சொல்லாமலே புரிந்துவிட்டது.

“ அந்த அவனுக்கு பேரு இல்லையா என்ன? யாருண்ணா அனுப்பி இருக்காங்க சொல்லுங்க” என்று வேண்டுமென்றே கேட்டாள்.

அவன் மௌனமாக இருக்க  “பேரைக்கூட சொல்லமாட்டீங்களா? என்னை மாதிரி தானே சக்தி அண்ணாவும் உங்க” தம்பி என்று சொல்லதற்குள் கைநீட்டித்தடுததவன்

“ அம்மு நீ எவ்வளவு முயற்சி பண்ணாலும் சில விஷயங்களை மாத்த முடியாது! இதை அப்படியே விட்டுவிடு! அதுதான் எல்லாருக்கும் நல்லது” என்று அந்தப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி விட்டான்.

அவர்கள் ஆர்டர் செய்திருந்த காஃபி வந்திருக்க “ சரி நீங்க சாப்பிட்டு கிளம்புங்க! பாத்து கவனமாக இரு அம்மு!” என்று விடைப்பெற்று சென்றுவிட்டான்.

மீண்டும் ஸ்ரீயின் முகம் சோர்ந்துவிட “ சிங்கப்பூர்ல இருந்து வந்த கிஃப்ட் பிரி அம்மு! வொர்த்தா இல்லையான்னு பாக்கலாம்!” என்று அவளது கவனத்தை திசைத்திருப்பினாள்.  அது நன்றாக வேலையும் செய்தது. ஆர்வத்துடன் பாக்ஸை பிரித்து பார்த்தாள்.

லேட்டஸ்ட் வகை உயர்தர கையடக்க கேமரா ஒன்று அழகாக பெட்டிக்குள் அமர்ந்திருந்தது. சுலபமாக லட்சங்களை விழுங்கி இருக்கும்.

அதனை கையில் எடுத்து பார்க்க கூடவே “Small Gift  For my princess Ammu” என்று ஒருத்துண்டு சீட்டும் இருந்தது.

எழுதுவதில் கூட வார்த்தைக்கு சக்தியிடம் பட்சம்தான் போலும்.  “ ஒரு ஃபோன் பண்ணிக்கூட விஷ் பண்ணலை என்னதான் வேலையோ ?” என்று அவள் மணம் சுனங்கத்தான் செய்தது.

“ ஹே **†*** மேக்ஸ் கேமரா” என்று ஒரு பிரபல கம்பெனி கேமரா மாடலை சொன்னவள் “ உன் ஷார்ட் ஃபிலிம்க்கு ஆப்டா இருக்கும் இதுல இருக்க ஃபியூச்சர்ஸ் பிக்சர்க்கு தனி லைஃபே கொடுத்திடும் செம்ம கிஃப்ட் , கேமராவை ஆன் பண்ணு” என்றாள் ஸ்ரே.

ஸ்ரீயும் ஆர்வமாக கேமராவை ஆன் செய்து போட்டோ எடுக்க முயற்சிக்க திறை கருப்பாகவே இருந்ததே தவிர படம் வரவில்லை. அவளும் மாறிமாறி பட்டென்களை அழுத்திக்கொண்டே “ என்னடி ஒன்னுமே வரல ஸ்க்ரீன் ப்ளாக்காகவே இருக்கு?” என்றுக்கொண்டே கேமராவை போகஸ் பண்ண “ உனக்கெல்லாம் ஒன்னுமே வராதுடி” என்றாள் ஸ்ரே

“ வைமா” என்று கேமராவை நோண்டிக்கொண்டே கேட்க “ எப்படி வரும் அதுக்கு முதல்ல லென்ஸ் கேப்பை கழட்டனும அப்பத்தான் ஏதாவது தெரியும்” என்று ஸ்ரீக்கு முன்னாலிருந்து நின்னு லென்ஸ் கேப்பை கழட்டினாள்.

சட்டென ஃப்ளாஷ் அடித்தது.

“ ஹீஹீ ஒரு ஆர்வத்தில் மண்டைமேல இருந்த கேப்பை மறந்துட்டேன்டி” என்று அசடு வழிந்தாள் ஸ்ரீ.

“உன் உணர்ச்சி வசத்தைக்கொஞ்சம் அடக்கும்மா! இதே ஆர்வத்துல போன அப்புறம் படம் ஓஹோன்னு போயிடும்” என்று கிண்டலடித்தாள் ஸ்ரே.

“ போடி நான் ஃபோட்டோ எடுக்கப்போறேன்” என்றவள் “ முதல்முதல்ல தெய்வக்கடாட்சமாக ஏதாவது எடுக்கனுமே” என்று யோசித்து தூரத்தில் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் தெரிந்த முருகன்படத்தை போட்டோ செய்தாள்.

“ என்னடி பிக்சர் பிரேக் ஆகுது ஏதும் ஃபால்டா” என்று லென்சை துடைத்துப்பார்த்தாள். படம் சரியாக வரவில்லை.

“ ஆடாத தெரியாதவன் ஸ்டேஜ குறை சொன்னானாம்” என்று ஜெனி கவுண்டர் கொடுக்க ஸ்ரீ கடுப்பாகிவிட்டாள்.

“ என்னடி தெரியலை எனக்கு! அதெல்லாம் நல்லாவே படம் எடுப்பேன் நானு” எனறு வீம்பாக கூறினாள்.

“கிழிச்ச! படம் நல்லா வருனும்னா க்ளோஸ்அப்ல போய்தான் எடுக்கனும் சூம்பண்ணக் கூடாது” என்றாள் ஜெனி.

“ரெண்டும் ஒன்னு தானே என்ன வித்தியாசம் இருக்கு” என்று ஸ்ரீ புரியாமல் கேட்க “ க்ளோஸ்அப்னா ஆப்ஜெக்ட் பக்கத்தில் போய் எடுக்கறது! சூம்னா ஓரு ஸ்பெசிஃபிக் ப்ரேமை பெருசாக்கி காட்டுறது அதில் பிக்சர் தெளிவாக வராது” என்று பொறுமையாக விளக்கமளித்தாள்.

“ஓஹ் அவ்ளோதானே பாத்துப்பண்ணிக்கலாம் விடு” என்றவள் டேபிளில் இருந்த அலங்காரப்பொருட்களை விதவிதமாக படம் எடுத்து காட்ட ஸ்ரே தலையிலேயே அடித்துக்கொண்டாள்.

“ ஸ்ரீ சொல்றேன்னு தப்பாக நினைக்காத எனக்கு கேமரா பத்தி ஒன்னும் தெரியாது தான்! ஆனால் நீ அதை பிடிச்சுயிருக்க விதமே சரியில்லைனு சொல்லுற அளவுக்கு தெரியும்டி தயவு செய்து மானத்தை வாங்கிடாதடி” என்று கூற “ என் க்ரீயேட்டிவிட்டியை பார்த்து கண்ணு வைக்காதடி” எனறு கூறினாள்.

“ என் ப்ரஃபசர் எப்பவும் சொல்லுவாரு கேமரா ஹான்டலிங் ஈஸ் அன் ஆர்ட் அப்படின்னு! அது உனக்கு சுத்தமா இல்லைடி! இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒரு ஃபோகஸ் பண்ணத்தெரியாம நம்ம மானம் போகனுமா! இதுக்காகவா நீயும் ஜெனியும் மாறிமாறி பொன்னியின் செல்வன் நந்தினி குந்தவை மாதிரி தீப்பொறி பரக்க பார்வையாலேயே சண்டைப்போட்டீங்க?நல்லா யோசிச்சுக்கோ?”என்று கூறினாள்.

நேரத்தில் விடைப்பெற்று கிளம்பிச்சென்றுவிட்டான்.

அதனைத்தொடர்ந்து இருப்பெண்களும் பஸ் ஸ்டாப்பை வந்துச்சேர்ந்தனர். மேகம் மெலிதாக மழைச்சாரல்களை தூவிக்கொண்டிருந்தது.

பஸ் வருவதற்கு இன்னும் 10 நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் மூவரும் வெயிட்டர்ஸ் சீட்டில் அமரந்திருந்தனர். ஸ்ரீ நடுவில் அமர்ந்திருக்க அவளது அருகில் ஸ்ரே அமர்ந்துக்கொண்டாள்.

ஸ்ரேயின் கையைப்பிடித்துக்கொண்ட ஸ்ரீ “ நான் போய்த்தான் ஆகனுமாடி எனக்கு மனசே கேட்கலை” என்று மீண்டும் அதே பழையபல்லவியை ஆரம்பிக்க “ எவடி இவ” என்று ஸ்ரே எழுந்தே நின்றுவிட்டாள்.

“ ஸ்ரே கொஞ்சம் நேரம்டி கூடவே இறேன்” என்று ஸ்ரீ நலிந்துப்போன குரலில் கூற அமைதியாக சென்று அவளருகில் அமர்ந்தாள்.

“ எனக்கு ஏதோ தப்பாக இருக்குடி! எப்படி சொல்லுறது? இனிமே உங்களையெல்லாம் பாக்கவே முடியாதோ என்று பயமாக இருக்குடி” என்று அவள் தோள்களில் சாய்ந்து கொண்டு கூற விழிகளில் இருந்து மெல்லிய நீர்ப்படலம் அவளது கன்னத்தை நனைத்தது. ஸ்ரேவுக்கும் கண்கள் கலங்கத்தான் செய்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஒன்றாகவே இருந்திருக்கிறார்கள். என்னத்தான் பிரிவு சிறியதாக இருந்தாலும் அது தரும் வலி கொடியதாகத்தானே இருக்கும்.

ஸ்ரே ஸ்ரீயின் கையை அழுத்திப்பிடித்து விடுவிக்க ஸ்ரீ அவளை இறுக அணைத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்தில் ஸ்ரீக்கிளம்ப வேண்டிய பஸ் வந்துவிட   “ பஸ் வந்துட்டு நீ கிளம்பு! பாத்து இருந்துக்கோ ஸ்ரீ! ரீச் ஆனதும் போனடி” என்று கணத்த மனதுடன் விடைக்கொடுத்தாள்.

ஸ்ரீயும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துக்கொண்டவள் அவளது உருவம் புள்ளியாகி மறையும்வரை  ஜென்னலூடே எட்டிப்பார்த்துக்கொண்டேதான் சென்றாள்.

பஸ் ஊர் எல்லையைத்தாண்டி ஹேவேசில் போய்க்கொண்டிருக்க கனத்த இடியுடன் பெருமழை பொழிய ஆரம்பித்துவிட்டது. இந்தப்பயணம் பலப்பேர் வாழ்க்கையையே திருப்பிப்போடப்போகிறது என்று தெரியாமல் மழையை ரசித்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.