அத்தியாயம் -12

மேலே வந்தவன் நேராக ஜிம்மிற்குள் நுழைந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து ஸ்ரீயும் ஜிம்மிற்குள் நுழைய அவளை கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அறையில் மூளையில் விட்டவன் அவளுக்கு ஓங்கி அறைந்திருந்தான்.

ஸ்ரீ கண்ணத்தை பொத்திக்கொண்டு கீழே விழுந்து விட்டாள். அவளருகில் அமர்ந்தவன் “ என் செயின் எங்கடி” என்றான்.

“ இங்கே தான்” என்று சொல்லிக்கொண்டே தனது கழுத்தை தொட்டுப்பார்க்க கழுத்து வெறுமையாக இருந்தது “ரூம்ல இருக்கும்னு நினைக்கிறேன்!! என்னாச்சு வேந்தன்” என்றாள்.

“ ரூம்ல நீ வச்ச டூப்புதான் இருக்கும் நான் கேட்டது என்னோட செயினை”

“ என்ன உளறுறீங்க நான் என்ன பண்ணேன்”

“ என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு ஸ்ரீ, செயின் உன்கிட்ட தான் இருந்துச்சு உன்னைத்தான்டி எப்படி வெளியே போச்சு, நீ என்ன பச்சகுழந்தையா தெரியாம தொலைச்சிட்டேன் என்று சொல்ல”

“ அய்யோ வேந்தன் இப்பவரை நீங்க சொல்லுறீங்க என்றே எனக்கு புரியலை!! புரியற மாதிரி சொல்லுங்க!! நான் எதுக்கு அதை மாத்த போறேன்”

“ ஓஹ் அப்ப உனக்கு ஒன்னும் தெரியாது, நீ ஒரு இன்னசன்ட் நான் தான் முட்டாப்பய இல்லை சொல்லுடி ஹான்”  என்று கர்ஜித்தான்.

அவனது இந்த ருத்ர அவதாரத்தில் சற்று மிரண்டவள் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு “ எனக்கு எதுவும் தெரியாது நான்ஆஆஆ ஹக்” என்று கழுத்தை பிடித்துக்கொண்டு திணறினாள். “ விடுங்க விடுங்க” என்று அவனிடம் இருந்து விடபட போராடினாள். அவளது குரல்வலையை பிடித்து நெறித்தவன் கண்கள் சொருகி மூச்சு திணறவும் சற்று தளர்வாக பிடித்தவன் “இன்னும் கொஞ்சம் அழுத்தினேன் பொய் மட்டுமே பேசிக்கிட்டு இருக்குற  இந்த குரல்வளை அப்படியே நொறுங்கிடும்!! உண்மையை செயினை யாருக்கிட்ட கொடுத்த?”

“நான் யாரடமும் கொடுக்கலை,எனக்கு எதுவும் தெரியாது!! விட்டுடுங்க ப்ளீஸ்” என்று கையெடுத்துக்கும்பிடவும் “ ச்சே” என்று அவள் கழுத்தை விட்டவன் “ ஏன்டி என் உயிரை எடுக்கற?? உன்னை உண்மையாக நேசிச்ச பாவத்துக்கு நான் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனும்” என்றவன் குரல் உடைந்து வந்தது.

“ நம்புங்க நம்புங்க என்று சொல்லிட்டே இருக்கல்ல, அவன் யாருனனு மட்டும் சொல்லிடு உன்னை முழுசா நம்புறேன்”

“ நான் எடுக்கலை ” என்றவளை கைநீட்டி தடுத்தவன் “ இதுக்கு மேலே உன்கிட்ட பேசி பயனில்லை,மேரேஜ்க்கு இன்னும் 29 நாள் இருக்கு, 29ஆவது நாள் முகூர்த்தத்துக்குள்ள செயின் என் கைல இருக்கனும், இல்லைன்னா நான் கிளம்பி போய்க்கிட்டே இருப்பேன்,இந்த கல்யாணம் நடக்கறதும் நடக்காததும் உன்கைலதான் இருக்கு”

“ஹப்பாடா விட்டது தொல்லை என்று சந்தோஷப்பட்டுக்காத நான் இங்கிருந்து போகும் போது உனக்கு சொந்தம் என்று சொல்லிக்க இங்கே ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டாங்க” என்று சற்று நிறுத்தியவன் “என் குழந்தைக்கூட உனக்கு துணையா இருக்காது” என்றதும் வாயில் கைவைத்து நின்றுவிட்டாள்.

“ உனக்காகவும்  என் குழந்தைக்காகவும்தான்  தான் வந்தேன் ஆனால் எனக்கு எதிராக ஏதாவது பண்ணுற என்று மட்டும் தெரிஞ்சா நான் தான் உங்களுக்கு எமன்” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

“ இதை நீங்க சொல்லலைனா தான் நான் ஆச்சர்யப்பட்டு இருப்பேன் வேந்தன், பொண்டாட்டியை கொண்ணவன் அம்மாவை வீட்டைவிட்டு தொறத்தினவ கூடவெல்லாம் சகவாசம் வச்சிக்கிட்டா அந்த புத்தி தானே வரும் வேறெனன்ன உங்கக்கிட்ட இருநது எதிர்பார்க்க முடியும்” என்று ஆதங்கமாக கூறினாள்.

 “ ஏய் மரியாதையா பேசு, உனக்கெல்லாம் அவங்களை பத்தி பேச  தகுதியே கிடையாது, கேவலம் காதலை வச்சு ஏமாத்தினவதானடி நீ” என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிவீசினான்.

“நான் உங்களை ஏமாத்தினேனா?? வாய் இருக்கு என்கறதுக்காக இஷ்டத்துக்கு பேசாதீங்க வேந்தன் பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க”

“ என்னடி மிரட்டி பார்க்கறியா, இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன், நான் நினைச்சா உன் வீட்டில் இல்லை இந்த ஊரில்கூட  ஒரு புல் பூண்டு முளைக்காது, மொத்தமாக அழிச்சிடுவேன், பயப்படாத உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன் ஆனால் உன் கண்ணு முன்னாடி எல்லாமே நடக்கும், மரியாதையாக கொடுத்திடு”

“  உங்களுக்கு வேண்டியதை நான் கொடுத்திடுறேன் ஆனால் இப்ப என்கிட்ட இல்லை!! கண்டிப்பாக கண்டுபிடிச்சு கொடுத்துடுவேன்!! செயினை கொடுத்த அடுத்த நிமிஷமே நீங்க இங்கிருந்து கிளம்பிடனும், என் வாழ்க்கையில் இனி உங்களை நான் பார்க்கவே கூடாது,இதை உங்க மிரட்டலுக்கு பயந்து போய் ஒன்னும் சொல்லலை, ஏன்னா என் குடும்பத்தில் இருக்கற ஒருத்தரையும் உங்களால ஒன்னும்” என்று தன்தலையில் கைவைத்து பிடுங்குவது போல் சைகை செய்தாள்.

“ அப்படி வாங்க மேடம் வழிக்கு!! ஆனால் சும்மா சொல்லக்கூடாது சூப்பர் ப்ளான்டி!! உன் கிரிமினல் புத்தியை காட்டிட்ட பாத்தியா?? நீயே எடுத்து வச்சிட்டு டீலிங் வேற பேசுற செம்ம”  என்று நக்கலாக கைத்தட்டி சிரித்தான்.

“ உங்கக்கிட்ட என்னை ப்ரூவ் பண்ணிக்கனும் என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை, நம்பினா நம்புங்க” என்று கண்ணைத்தொடைத்துக்கொண்டு எழுந்து வெளியேற போக “ இது வச்சு நான் என்ன பண்ணுறது நீயே வச்சுக்கோ” என்று செயினை தூக்கி எறிய அது அவளது காலடியில் வந்து விழுந்தது.

குனிந்து அதனை எடுத்தவள் “ பெட்டி படுக்கையோட ரெடியா இருங்க!! உங்கப்பொருளை திருப்பிக் கொடுத்துவிட்டு பேசிக்கறேன்” என்றவள் வெளியேறிவிட்டாள்.

அவளது முதுகையே வெறிக்க பார்த்து கொண்டு நின்றிருந்தான் வேந்தன். என்னதான் வீராப்பாக பேசினாலும் அவனது காதல் கொண்ட மணம் தவிக்கத்தான் செய்தது. பல்வேறு உணர்வுகளின் பிடியில் தத்தளித்துக்கொண்டிருந்தான். அவளது ஒரு துளி கண்ணீரையே அவனால் சகித்துக்கொள்ள முடியாது ஆனால் இன்றோ வார்த்தைகளாலேயே அவளை வதைத்துக்கொணடிருக்கிறான். தன்குழந்தையை தானே கொல்வது என்றெல்லாம் அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவன் தனது. கைகளில் இருந்த குயினின் க்ரௌன் டிசைன் மோதிரத்தை. பாரத்துக்கொண்டிருந்தான்.  தொலைந்துவிட்டால் என்று நினைத்தவள் கிட்டத்தில் இருந்தும் ஏனோ தூரமாகிக்கொண்டே போவதுப்போல் உணர்ந்தான். எத்தனை சந்தோஷமாக ஆரம்பித்த வாழ்வது இப்போது அனைத்துமே கானலாக தெரிந்தது. எழக்கூட தோன்றாமல் அப்படியே தரையில் அமர்ந்திருந்தான்.

நேறாக தனது அறைக்கு வந்த ஸ்ரீக்கு வர அங்கே அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள் கனகா. அவசரமாக தனது கண்ணீரை தொடைத்துக்கொண்டவள் “ அக்கா நீங்க ஏன் வந்தீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து இருக்கலாம்ல!! இப்போ உடம்புக்கு பரவால்லயா??” என்று கேட்டுக்கொண்டே முன்னால் வர அங்கே வேந்தனின் புகைப்படங்களை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த கனகாவை பார்த்ததும் அவளுக்கு பேச்சே வரவில்லை. அப்படியே சிலையாகி நின்றுவிட்டாள். ஸ்ரீ கண்ணீரை துடைப்பதை எதிரில் இருந்த கண்ணாடி வழியாக பார்த்துவிட்டாள்.

அனைத்து புகைப்படங்களையும் நிதானமாக பார்த்தவள் திரும்பி ஸ்ரீயை ஒரு பார்வை பார்த்தாளே தவிர வேறெதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் இருந்த இடத்திலேயே அடுக்கி வைத்துவிட்டு அறையை சுத்தம் செய்யத்தொடங்கினாள். அவளது அமைதி என்னவோ செய்தது. ஏதாவது கேட்கமாட்டாளா என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது முகத்தை கூட ஏறிட்டு பார்க்காமல் சுத்தம் செய்து முடித்தவள் வெளியேறிப்போக அவளது கையைப்பிடித்து தடுத்த ஸ்ரீ” இப்படி யாரோ போல பண்ணாதீங்க ஏதாவது கேட்டு என்னை திட்டக்கூட செய்ங்க ஆனால் இப்படி அமைதியாக இருக்காதீங்க அக்கா ப்ளீஸ்” என்றாள்.

“ நான் யாரும்மா உங்களை கேள்விக்கேட்க நான் யாரோதானே உங்களுக்கு” என்றவள் அப்போதும் அவளது முகத்தை பார்க்கவில்லை. எங்கோ பார்த்துக்கொண்டே பேசினாள்.

“ இப்படியெல்லாம் பேசாதீங்க அக்கா!! சாரிக்கா”

“ அய்யோ நான்தாம்மா உங்கக்கிட்ட சாரி கேட்கனும் தேவையில்லாம உங்க விசயத்தில தலையிட்டுட்டேன்!! நான் ஒரு பைத்தியககாரி என் இடம் தெரிஞ்சு இருந்து இருக்கனும், வரம்பு மீறி உள்ளே வர பார்த்தேன் பாருங்க என் தப்புத்தான்!! மன்னிச்சிடுங்கம்மா” என்று கையேடுத்துக்கும்பிட்டாள்.

அவளது கைகளை பிடித்துக்கொண்டவள் “ நீங்களே என்ன புரிஞ்சிக்காம பேசறீங்களேக்கா!! நான் வேணுமின்னே மறைக்கல வேந்தன் தான் மாப்பிள்ளை என்று எனக்கு தெரியாது நம்புங்க அக்கா” என்றாள். கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக்கொண்டே இருந்தது.

“ தயவுச்செய்து அழாதீங்கம்மா என்னால பார்க்கமுடியலை” என்று வெறுமையான குரலில் கூறினாள். “ என்னால முடியல அக்கா என்னை சுத்தி என்ன நடக்குது என்றே எனக்கு புரியலை பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு” என்றுக்கொண்டே தலையைப்பிடுத்துக்கொண்டே அமர்ந்துவிட்டாள்.

“ அப்பவே வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாங்க நான் தான் கேட்காம எல்லாத்தையும் பண்ணேன், இப்போ என்னாலதான் எல்லோருக்கும் பிரச்சனை!! நானெல்லாம் இருக்கறதே வேஸ்ட்” என்று ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தாள்.

“ யாருக்கு பிரச்சனை?? என்ன பண்ணீங்க?? இந்த வேந்தன் யாரு??முதல்ல என்ன பிரச்சனை என்று சொல்லுங்க” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக “ ஸ்ரே அப்பவே சொன்னா நான் தான் கேட்கலை, இப்போ நானே அவளை கொன்னுட்டேன் நான் பாவி கொலைகாரி” என்று  இத்தனை நாட்கள் தேக்கி வைத்திருந்த அழுத்தத்தின் காரணமாக வெடித்து அழுதாள்.

கனகாவிற்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஆனால் இது அதற்கான நேரமில்லை என உணர்ந்தவள் “ ஸ்ரீம்மா இங்க பாருங்க என்ன ஆச்சு முதல்ல தெளிவாக சொல்லுங்க யாரு ஸ்ரே என்ன நடந்தது என்று சொல்லுங்க அப்போதானே ஏதாவது தீர்வு கிடைக்கும்”  என்றாள். “ நம்ம என்ன பண்ணாலும் இனி பயனில்லைக்கா எல்லாமே கைமீறி போயிடிச்சு!! நான் நினைச்சத விட மோசாமானவனா இருக்கான் அக்கா, மொத்தமா ஏமாந்துட்டேன்” என்றவள் தனது கடந்த காலத்தை சொல்லத்தொடங்கினாள்.

வர்மா ஆர்ட்ஸ் அன்ட் சைன்ஸ் காலேஜ் என்ற பெயர்ப்பலகை கம்பீரமாக வானுயர்ந்து நின்றது. தமிழகத்தின் பிரசித்திபெற்ற கட்சியின் இளைஞரணி தலைவர் மற்றும் துணைமுதல்வர் விஜய்வர்மா அவர்களின் முன்னிலையில் அந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா விமர்சையாக நடந்துக்கொண்டிருந்தது.

அடுத்ததாக நடைபெற்ற தேசிய அளவிலான நேஷனல் ஜர்னலிஸ்ட் கான்ஃப்ரன்ஸில் சிறந்த ஆவணப்படத்திற்கான( Documentary film) போட்டியில் வெற்றிபபெற்று நமது கல்லூரிக்கே பெருமை சேர்த்துள்ளார் இரண்டாமாண்டு மாணவி ஸ்ரீ சந்திரன். அதுமட்டுமல்ல நடக்கவிருக்கும் சர்வதேச அளவிலான பத்திரிக்கையாளர் மாநாட்டில் தனது குழுவுடன் சிறப்புரை ஆற்றவும் அவருக்கு வரவேற்பு அழைக்கப்பட்டுள்ளது. அதனை பாராட்டும் விதமாக பதக்கமும  கௌரவசான்றிதழ் அளித்து கௌரவிக்க நமது துணைமுதல்வர் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் என்றதும் கனத்த கரகோஷத்துடன் மேடையேறினான் விஜய் வர்மா.

பதக்கத்தை பெறவதற்கென ஸ்ரீயும் மேடையேற கீழிருந்து அவளது நண்பர்கள் கத்தி ஆராவாரம் செய்தனர். இளவட்டங்கள்  என்றால் கேட்கவும் வேண்டுமா உற்சாகமாக கூச்சலிட  “ டேய் சும்மா இருங்கடா” என்று கைகளாலேயே சைகை செய்தவள் மேடையேறினாள். “ என்னைவிட நீங்க பாப்புலரா இருக்கீங்க மிஸ் , எனக்கு போட்டகயா வநதிட மாட்டீங்களே” என்று விஜய் வர்மா கேட்க அதற்கு புன்னகையையே பதிலாக அளித்தாள்.

“ சிரிச்சா அழகா இருக்கீங்க மிஸ்” என்று கூறி கைகுலுக்கினான். ஸ்ரீ இயல்பாகவே இல்லை என்பது அவளது கைநடுக்கத்திலேயே தெரிந்தது.  “ என்னாச்சு ஏதோ அன்கம்பர்ட்டப்புளா இருக்கீங்க போலிருக்கு, எனி ப்ராப்ளம்??” என்று கூட்டததை பார்த்து பயப்படுகிறாளோ என்று நினைத்து  மெல்லமாக கேட்டான். சற்றும் தயங்காமல் “ ஐ டோன்ட் டிசர்வ் திஸ் அவார்ட் சார், இஃப் யூ டோன்ட் மைண்ட் என் டிபார்ட்மெண்ட் இன்ஜார்ஜ் இந்த அவார்ட ரிசீவ பண்ணிப்பாங்க” என்றாள். “ பட் வொய் மிஸ் ?? யுவர் த ஹீரோ ஆஃப் த ஃபங்ஷன், வாட் ஹாப்பென்ட்” என்றான்.

“ சார் இந்த கிரிடிட்ஸ் எல்லாம் என்னோட டீம்க்குத்தான் கிடைக்கனும், நான் ஜஸ்ட் அவங்களை லீட் தான் பண்ணேன் ஆனால் உழைப்பெல்லாம அவங்களோடது அதை நான் ரெஸ்பெக்ட் பண்ணனும் என்று நினைக்கிறேன் அதனாலதான் சொல்லுறேன் ஐ டோண்ட் டிசர்வ் திஸ்னு ப்ளீஸ் சார் அவங்களுக்குத்தான் இந்த மரியாதை கிடைக்கனும்” என்றாள்.

“ ஸ்ரீ வாட் ஈஸ் திஸ் யூ ஆர் இன்சல்ட்டிங் ஹிம்” என்று பக்கத்தில் இருந்த பேராசிரியர் அதட்ட “ இட்ஸ் ஓகே மேம் ஐ டோன்ட் மைண்ட்” என்று கூறியவன் “ நீங்களே உங்க டீமை கூப்பிடுங்களேன் மிஸ் அவங்களையும் பார்க்கலாம் “ என்றிட “ தேங்க்யூ சோ மச் சார்” என்று விரிந்த புன்னகையுடன் கூறியவள் மைக்கிடம் சென்று ஒவ்வொருவர் பெயரையும் அனௌன்ஸ் செய்தாள்.

“ ஸ்ரேயா ஸ்ரீனிவாசன் ஃப்ரம் சினிமாட்டோகிராபி டிபார்ட்மெண்ட், ஜெனிஃபர் லாரன்ஸ் ஃப்ரம் ஃபோட்டோகிராபி டிபார்ட்மெண்ட்,வெங்கடேஷ் பிரசாத் ஃப்ரம் ஜெர்னலிசம் டிபார்ட்மெண்ட் ப்ளீஸ் கம் டு த ஸ்டேஜ்” என்று சொல்ல கீழே நின்றிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.

“ என்னடா இப்படி திடீர்னு கூப்பிட்டா முன்னமே தெரிஞ்சு இருந்தா பார்லர் போயிட்டு வந்து இருக்கலாம் இப்போ என் ஃபேஸ் டல்லா இருக்கும்ல” என்று வெங்கடேஷின் காதை கடித்தாள் ஸ்ரே. “ வாயை மூடிட்டு சும்மா இருடி வாட்டர் டேங்க்” என்று அவளை அடக்கினாள் ஜெனி.

“ வாங்க என்று சொல்லுறேன்ல “ என்று வாயசைத்துக்கூறியவள் அவர்களையே உறுத்து விழித்தாள். “ வந்துதொலைங்கடி இன்னமும் எதுக்கு போஸ் குடுத்திட்டு இருக்கீங்க??வாத்தி வச்சு செய்யப்போறாரு” என்று புலம்பிக்கொண்டே மேடையில் ஏறினான் வெங்கடேஷ். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக இருப்பெண்களும் மேடையில் ஏற மூவரும்தான் பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றனர்.

பட்டமளிப்பு விழா நிறைவடையும் தருவாயில் இருக்க கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையும் வழங்கிமுடித்ததும் விஜய் வர்மாவை உரையாற்ற அழைத்தனர். மைக்கிடம் நிமிர்ந்து நின்றவன் தனது ஆளுமையான குரலில் பேசத்தொடங்கிட அரங்கமே அவனது கவர்ச்சியான பேச்சில் மயங்கிக்கிடந்தது என்றே கூறலாம். ஆக்ரோஷமாக அரசியல் வீரவசனங்கள் எல்லாம் பேசவில்லை. எதார்த்தமாக பேசினான். அதவே அனைவரையும்‌ கவர்ந்தது. ஏற்கனவே அவனின் மின்சாரமில்லா விசிறியாக இருந்தவர்கள் இப்படி சொக்கவைக்கும் அழகனின் கைகளாலேயே விருது வாங்கி இருக்கிறோம் என்று  ஜெனியும ஸ்ரேவும் என்று பெருமைப்பட்டுக்கொண்ட வாயில் வாட்டர்ஃபால்ஸ் விட்டு அவனது உரையை கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதில் பதட்டமாக கையை பிசைந்து கொண்டு இருந்தது என்னவோ வெங்கடேஷ். “ ஸ்ரீ என்னடி பண்ணி வச்சிருக்க?? இதனால எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என்று தெரியும் தானே??” என்று ஸ்ரீயின் பக்கத்தில் ஜொள்விட்டுக்கொண்டிருந்த ஸ்ரேயை தாண்டி கேட்டான் வெங்கடேஷ். “ தெரியும்டா விபி ஃபீரியா விடு பாத்துக்கலாம்” என்று கண்ணடித்துக்கூறினாள். அவன் முறைக்கவும் “ முதலில் உன் ஆளைப்பாருடா அப்புறம் சீப் கெஸ்ட் நடந்து இல்ல மிதந்து தான் போக வேண்டியதா இருக்கும் “ என்று ஸ்ரேவை கண்களால் சுட்டிக்காட்டி அந்தப்பேச்சை மாற்றினாள்.

“ அன்ட் ஃபைனலி கங்கிராட்ஸ் ஃபார் யுவர் டாக்கிரிமெண்டரி ஃபிலிம் மிஸ் ப்யூட்டிஃபுல்!! யூ ஹாவ் எ கிரேட் லீடர்ஹிப் குவாலிட்டி“ என்று பாராட்டியவன் அத்துடன் தனது உரையை முடித்துக்கொண்டான். கடைசியாக கெஸ்ட்டை வழியனுப்ப செல்ல ஸ்டூடன்ட் ப்ரெசிடென்ட் என்ற முறையில் ஸ்ரீயும் வாயிலுக்கு சென்றாள். “ இஃவ் யூ வான்ட் எனி ஹெல்ப் டோன்ட் ஹெசிடேட் டூ கால் மி மிஸ் ப்யூட்டிஃபுல் ஆல் த பெஸ்ட்” என்று கைகுலுக்கியவன் விடைப்பெற்று சென்றுவிட்டான்.

ஒரு வழியாக விழா முடிவடைய ஒரு மாணவன் வந்து பிரின்சிப்பல் ஸ்ரீயையும் வெங்கடேஷையும் அழைப்பதாக் கூறினான். “ம்ம்ம் வரோம்” என்றவள் முடியவே முடியாது என்ற விபியை வம்படியாக இழுத்துக்கொண்டு பிரின்சிப்பல் அறையை நோக்கி சென்றாள்.

“ சூப்பரா இருந்தார் இல்லடி!! கியூட்டா ஹான்சமா!!” என்று விஜய் வர்மாவின் தாக்கத்திலேயே நின்றிருந்தார்கள் ஜெனியும் ஸ்ரேவும்.

~ தொடரும்