அத்தியாயம் -11

அறைக்குள் நுழைந்த லெட்சுமிக்கு தூங்கிக்கொண்டிருந்த பார்வதியின் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது. “ நிம்மதியா தூங்குறியா தூங்கு தூங்கு!! இதுதான் நீ நிம்மதியா தூங்க போற கடைசி ராத்திரி!! கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று நினைத்துக்கொண்டவள் கனகாவின் மீது கால்களை போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள்.

அறைக்குள் வந்த வேந்தன் லேப்டாப்புடன் கட்டிலில் அமர்ந்தான். ஸ்ரீயின் செயினை எடுத்து அதிலிருந்த சிங்கமுக பெண்டன்டை தனியாக கழட்டி அதன் தலையை திருகினான். பெண்ட்ரைவ் ஒன்று அதிலிருந்து தனியாக வந்தது. அதனை தனது லேப்டாப்பில் கனெக்ட் செய்து பார்க்க சிஸ்டம் ஆக்சஸ் டெனிடு என்று வந்தது.

மீண்டும் பாஸ்வேர்டு போட்டு லாகிங் செய்து பார்த்தான் லோடிங் ஆகிக்கொண்டிருந்தது. சிஸ்டம் ஹாக்கிங் ஈஸ் ஆன் ப்ரோசஸ்ஸிங் என்று அலெர்ட் வரவும்

“ வாட் த *****” என்று அதிர்ந்தவன் பெண்டன்டை எடுத்து பார்த்தான். அது உண்மையான செயின் இல்லை என்று தெரிந்தது. லேப்பில்  கேன்சல் செய்து பார்ததான் அவனது சிஸ்டத்தை யாரோ ஹாகா செய்து இருந்தார்கள். என்பது சதவீதத்திற்கும் மேல் லோடாகி இருந்தது.

அவசரமாக லேப்பை ஷட் டவுன் பண்ணியவன் அதை சுவற்றில் தூக்கி எறிந்து உடைத்துவிட்டான்.

பின்பு தனது மொபைலை எடுத்து கீர்த்தி என்ற என்னுக்கு அழைத்தான். அழைப்பை ஏற்கவில்லை. அடுத்து சத்யா எனற எண்ணுக்கு அழைக்க ஒரே ரிங்கில் அழைப்பை எடுத்தவள்

“ வேந்தன் என்னடா பண்ணிட்டு இருக்க நம்ம எல்லரோட லோக்கேஷனையும் யாரோ உன் ஐபி அட்ரஸில் இருந்து ட்ரேஸ் பண்ணுறாங்க, சீக்கிரம் உன் ப்ரோஃபைலை லாக் பண்ணு ” என்று பரப்பரத்தாள்.

“ சத்யா சத்யா ஃபரஸ்ட் நான் சொல்லுறதை கேளுடி” என்றவன் “ இம்மீடியட்டா எல்லாரையும் லாக் அவுட் பண்ணி டிவைஸ க்ராஷ் பண்ண சொல்லு!! யாரோ என் சிஸ்டம ஹாக் பண்ணிட்டாங்க” என்றான்.

“ வாட்!! வேந்தன் ஆர் கிட்டிங்!! விளையாடிட்டு இருக்கியா நீ?? அசால்ட்டா ஹாக் பண்ணிட்டாங்க என்று சொல்லுற” என்று அடிக்குரலில் சீறினாள்.

“ லிசன் இதுக்கெல்லாம் இப்போ டைம் இல்லை, ஃபர்ஸ்ட் மத்தவங்களை அலர்ட் பண்ணு ப்ளீஸ்”

“ இப்போ எப்படிடா முடியும் கேப்டன் கிட்ட என்ன சொல்லுறது?? நம்ம பண்ணிக்கிட்டு இருக்கறது சாதரண விசயம் இல்லைனு உனக்கு தெரியும்ல, ஹவ் கேன் யூ பி சோ கேர்லெஸ்?? கொஞ்சம் மிஸ் ஆனாலும் நம்ம லைஃபே போயிடும்டா”

“ ஐ க்னோ இட்ஸ் டாம் சீரியஸ் பட் திஸ் ஈஸ் நாட் த ரைட் டைம், ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட்”

“ ஆல்ரைட்! ஃபைன் பட் யூ வில் டேக் த ரெஸ்பான்ஸிபிலிட்டி”

“ கீவ் மீ சம் டைம் ஐ வில் ஃபைண்ட் இட்”

“ உன்கிட்ட இருந்து இதை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல வேந்தன்!! உன்னால நம்ம இத்தனை வருஷ உழைப்பு வீணாக போயிடிச்சு” என்றவள் போனை கட் பண்ணி விட்டாள்.

தலையைப்பிடுத்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான். எப்படி கண்டுபிடிப்பது யார் செய்து இருப்பார்கள் என்ற சிந்தனையே மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.

“ ஸ்ரீயா இருக்குமோ” என்று யோசித்த கணத்தில் மறுபடியும் போன் ரிங்கானது. எச்சிலை கூட்டி விழுங்கியவன் போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க “ வாட் ஹாப்பென்னிங் வேந்தன், எப்படி ஆக்சஸ் கிடைச்சது” என்று கம்பீரமான ஒரு ஆண்குரல் பேசியது.

“ இட்ஸ் மை ஃபால்ட் கேப்டன்,மை  பெண்ட்ரைவ் ஈஸ் மிஸ்ஸிங் ,கொஞ்சம் டைம் கொடுங்க யாருனு கண்டுபிடிச்சுடுறேன்”

“  எக்ஸ்க்யூஸ் கேட்கற நிலைமையில நாம இல்லை வேந்தன்!!” என்று அந்தப்பக்கமிருந்து குரல் கண்டனமாக வந்தது. அந்த தோரனையே வேந்தனுக்கு கிலியை உண்டாக்கியது.

இமைகளை மூடி திறந்தவன் “ சாரி கேப்டன் இனி இப்படி நடக்காது!! ட்ரஸ்ட் மீ” என்று குற்றவுணர்ச்சியுடன் கூறினான்.

“ ஹவ் கேன் ஐ ட்ரஸ்ட் யூ வேந்தன்!!  உன்னோட கேர்லஸ்னால நம்ம மொத்தப்பேரும் மாட்டியிருப்போம்”

“ இதுதான் லாஸ்ட் இனிமே இப்படி நடக்காது, நம்புங்க கேப்டன்”

“ நடக்க கூடாது!! ஃபைல்களை ரெக்கவர் பண்ணனும் மேக் இட் ஃபாஸ்ட்” என்றவன் காலை கட் பண்ணிவிட தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தான்.

“ ஷீட்” என்று கோவத்தில் போனை தூக்கி எறிய அது சுவற்றில் பட்டு சில்லுசில்லாக தெறித்தது. அதனையே வெறித்து பார்த்தவன் கோவம் மொத்தமும் திரும்பியது என்னவோ ஸ்ரீயின் பக்கம்தான். இப்போது அவனது சிந்தையில் மொத்தமும் ஸ்ரீதான் நிறைந்து இருந்தாள். ஆனால் அதில் சிறிதும் காதல் இல்லை. மொத்தமும் ஏமாற்றிவிட்டாளே என்ற வன்மம் மட்டும் தான் இருந்தது.

இதற்கிடையில் தனதறையில் கையில் ஸ்ரீயின் செயினை வைத்து புன்னகைத்துக்கொண்டிருந்தது ஒரு உருவம்.

விடியற்காலை சூரியன் தனது கதிர்களை ஒய்யாரமாக பரப்பி வெளிச்சத்தை வாறி இறைக்க ரம்மியமாக பொழுது மலர்ந்தது. விடியற்காலை சேவல் கூவுவதற்கு முன்பே எழுந்து உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தான் வேலு. அதுமட்டுமே அவனுக்கு வலிநிவாரணி.

தனது வீட்டின் மொட்டை மாடியில் இதற்காகவே சிறிய எடைகளையும் உபகரணங்களையும் வைத்திருந்தான். ஒருமணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தவன் வியர்வையை துண்டினால் துடைத்துக்கொண்டே அங்கிருந்த திண்டில் அமர்ந்தான். சிறிது ஆசுவாசமடைந்தவன் அப்போதும் மனது ஒரு நிலையில்லாமல் இருக்கவும் அப்படியே சம்மனமிட்டு அமர்ந்து தியானம் செய்தான்.

கண்களை மூடி கவனத்தை ஒருபுள்ளியில் குவிக்கப்பார்க்க அவனது கவனம் சென்றது என்னவோ அவனவளை நோக்கித்தான்.

வழக்கமாக அனைத்து கிருத்திகைக்கும் காலையிலேயே கோவிலுக்கு சென்று வழிப்பட்டு விட்டுத்தான் அடுத்த வேலைக்கே செல்வான். அன்றும் அதுபோல் காலையிலேயே ஊரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல பூசாரியை தவிர கோயிலில் யாருமில்லை.

“ என்னடா அம்பி வழக்கம் போல சுவாமி பேருக்குத்தான் அர்ச்சனையா” என்றுக்கொண்டே அர்ச்சனைத்தட்டை அவனிடமிருந்து வாங்க வளையலணிந்த இன்னொரு கையும் அவரிடம் அர்ச்சனை தட்டை நீட்டியது.

திரும்பி பார்க்காமலேயே யாரென்று தெரிந்துவிட்டது. உதட்டில் தோன்றிய சிரிப்பை இதழ்கடித்து அடக்கியவன் சந்நிதியை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான். ஆனால் கனகாவோ அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ உள்ளுணர்வு தோன்ற அவளை திரும்பி பார்த்தான் சட்டென சந்நிதானத்தை நோக்கி திரும்பிவள் கண்ணை இறுக்க மூடிக்கொண்டாள். “ அய்யோ போச்சு போச்சு” என்று மெல்லமாக முணங்க அது அவனுக்கும் கேட்டது.

உதட்டை கடித்து சிரிப்பை அடக்க நினைத்தான் முடியாமல் போக இதழ்பிரித்து சத்தமில்லாமல் புன்னகைத்துக்கொண்டான்.

மஞ்சள் நிற தாவணி அணிந்து நீண்ட கூந்தலை தளர பிண்ணி மல்லிகை சரம் வைத்திருந்தாள். கூந்தலில் இன்னமும் நீர் வடிந்துக்கொண்டிருந்தது. குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள். பதட்டத்தில் உதட்டை கடித்து அவள் நின்றிருந்த காட்சி அழகிய ஓவியம் போல் அவன் மனதில் பதிந்தது. குனிந்து தன்னை பார்த்தான். அவனும் மஞ்சள் நிற கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தான். அவளை உச்சி முதல் பாதம் வரை ரசித்தவன் “ போதும் அடங்குடா” என்று மானசீகமாக தலையில் கொட்டிக்கொண்டவன் கண்ணை மூடி கடவுளை பிரார்த்திக்க தொடங்கினான்.

“ முருகா முருகா இன்னைக்கு எப்படியாவது நான் நினைச்சதை சொல்லிடனும் “ என்று மனதிற்குள் ஆயிரம் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்க “ கனகா கனகா கண்ணை திறந்து பாரு” என்ற வேலுவின் சத்தத்தில் கண்ணை திறக்க பூசாரி அர்ச்சனை தட்டை நீட்டினார். “ என்னம்மா இன்னைக்கு வேண்டுதல் எல்லாம் பலமா இருக்கு ஏதும் விசேசஷமா??” என்றார்.

“ அதெல்லாம் ஒன்னுமில்லை பூசாரி ஐயா தங்கச்சிக்கு பரிட்சை அதான் வேண்டிக்க வந்தேன்” என்று வாயிற்கு வந்ததை அடித்துவிட்டாள். “ நல்ல பொண்ணும்மா நீ பரிட்சை எழுதபோறவளே இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருப்பா நீ காலையிலேயே கிளம்பி வந்துருக்கே” என்றவர் சந்நிதானத்துக்குள் நுழைந்துக்கொண்டார்.

இவர்கள் சம்பாஷனையை கேட்டவன் “ நல்லாதான் சமாளிக்கறா கேடி” என்று நினைத்துக்கொண்டவன் பிரகாரத்தை சுற்றிவர பின்னாலேயே கனகாவும் சுற்றினாள்.

சுற்றி முற்றி பாரத்தாள் விடியற்காலை இருட்டு விலகிக்கொண்டிருந்த சமயம் ஆள் அரவமே இல்லாத இடம். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “ ஏங்க வேலு நில்லுங்க” என்றாள். திரும்பி என்னவென்பதுபோல் புருவததை ஏற்றியிரக்கி அவன் கேட்டத்தோரணையில் மூச்சடைத்து நின்றுவிட்டாள். அவள் அப்படியே சமைந்து நிற்கவும் “ அதானே பார்த்தேன் நீயாவது வாயை திறந்து பேசறதாவது” என்று நினைத்தவன் “ என்னம்மா தங்கச்சி சொல்லும்மா” என்று வேண்டுமென்றே கூறினான். “ இங்க பாருங்க நான் பலமுறை சொல்லிட்டேன் அப்படி கூப்பிடாதீங்க என்று திரும்ப திரும்ப அதையே சொல்லி வெறுப்பேத்தாதீங்க நல்லாவே இல்லை”

“ எனக்கு நல்லா இருக்குமா” என்று சீண்டினான்.

“ இதோ பாருங்க எனக்கு உங்களை பிடிச்சி இருக்கு!! என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா என்று கேட்கத்தான் வந்தேன் ஆனால் நீங்க இப்படி சொல்லுறீங்க இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கங்க என்று கேட்டால் நல்லாவா இருக்கும் சொல்லுங்க??” என்று இடுப்பில் கைவைத்து கேட்டாள்.

அவனுக்கு மார்பளவுதான் இருந்தாள். குனிந்து அவளை பார்த்தவன் “நல்லா இருக்காதுதான் இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு பார்ப்போம்” என்றான். “ அதுக்கு” என்று வாயெடுப்பதற்குள் “ என்னப்பா பார்க்கனும்” என்ற பூசாரியின் குரலில் மூட்டைக்கண்களை விரித்தவள் குடுகுடவென ஓடிவிட்டாள். “ ஏய் சொல்லிட்டு போம்மா” என்றவன் சத்தம் காற்றில கரைந்தது.

மான்குட்டிப்போல் துள்ளிக்குதித்து ஓடியவள் நினைவில் இன்றும் அவனிதழில் இளநகை தோன்ற கண்களை பட்டென திறந்தான்.

“இது வேலைக்கு ஆகாது” என்றவன் மாடியில் இருந்து கீழே இறங்கி சந்திரனின் வீட்டில் பின்புறமிருந்த மல்யுத்த மைதானத்தை சுற்றி மெதுவாக ஓடித்தொடங்கினான்.

ஆர்ம்கட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டிருந்தவன் “ இதுதான் உன் அழகின் ரகசியமா??” என்ற குரலில் நின்றான். சோம்பல் முறித்துக்கொண்டே கணேசன் தான் வந்துக்கொண்டிருந்தான். “ என்னங்கையா” என்றவன் பவ்வியமாக அவனருகில் சென்று நின்றான்.

“ ரொம்ப நடிக்காதடா நெடுமாறா உன் மூஞ்சிக்கு செட்டாகலை” என்றவன் “ வா உட்கார்ந்து பேசுவோம்” என்று கொண்டே அவனது தோளில் கைப்போட்டுக்கொண்டு அங்கே மரத்தடியிலிருந்த திண்டில் அமர்ந்தான்.

வேலு கணேசனையும் தனது தோளில் இருந்த கையையும் ஆச்சர்யமாக பார்க்க “ என்னடா நேத்து எகிறிட்டு வந்தான் இன்னைக்கு ஒட்டிட்டு வரான்னுதானே யோசிக்கற” என்றான்.

“ பெத்த புள்ளமாதிரி மாதிரி தூக்கி வளர்த்த பையன்டா அவன் மேல கைவைச்சா பொறுக்க இருக்க முடியுமா அதான் பொங்கிட்டேன்!! இப்போ ஓகே ரிலாக்ஸ்” என்றான்.

“ ஆமாம் பத்து பேற அடிக்கவே வொர்க் அவுட் பண்ணுவியா சிக்ஸ்பேக்லாம் வச்சிருக்க” என்று தடித்து நின்ற அவன் புஜத்தில் குற்றினான். “ ஹே கல்லு மாதிரி இருக்குடா ரெகுலரா ஜிம் போவியா”

“ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க ஐயா வீட்டிலேயே ஆரோக்கியமாக இருக்க சிம்ப்ள் வொர்க் அவுட் பண்ணுவேன் அவ்வளவுதான்”

“ நான்கூட வழக்கமா வாயிலேயே எக்சர்சைஸ் பண்ணுவேன்!! என்னன்னு கேட்கறியா சாப்பிடுறதுதான்” என்று ஏதோ பெரிய ஜோக்கை சொன்னது போல் சிரிக்க ஆரம்பித்து விட்டான். “ சும்மாவாச்சும் சிரிடா!! எப்பப்பாரு உர்ருன்னு இருக்க” என்றான்.

“ நீங்க அப்படியொன்னும் சாப்பிடற மாதிரி தெரியலைங்கய்யா உங்களுக்கு தொப்பையே இல்லை!! கையில நல்லா மசில் இருக்கே!!”

“ டேய் காலையில் இன்னும் சாப்பிடலை அதனால தொப்பைக்கு குட்டி பிரேக் அவ்வளவுதான்” என்க வேலு நம்பாத பார்வை பார்க்கவும் “ விடுடா நெடுமாறா நானெல்லாம் நல்லா சாப்பிட்டு தின்னது செமிக்க ட்ரெட் மில்லுல ஓடற கேட்டகிரி!! இந்த மசில் எல்லாம் ஆடிங் பெனிஃபிட்!! இப்ப வருவான் பாரு ஒரு பிட்னஸ் சைக்கோ!! அவன் தான் உனக்கு கரெக்ட்”என்றான்.

“ ஆமாம் இங்க ஜிம் இல்லையா?? சும்மா போர் அடிக்குது நானும் ரெண்டு ரவுண்டு ஓடிட்டு வரேன்”

“ மாடில ஹோம்ஜிம் இருக்கு சக்தி ஐயா வச்சு இருக்காரு”

“ அப்ப இது “ என்று மைதானத்தை சுட்டிகாட்டிக் கேட்டான்.

“ இது வெற்றி ஐயா வச்சி இருக்காரு!! அவங்களுக்கு மல்யுத்தம்னா ரொம்ப பிடிக்கும் அதான்!! ஆசான் வச்சு  கத்துகிட்டாங்க அப்ப ஏற்பாரு பண்ணது, இப்ப உடற்பயிற்சி பண்ண யூஸ் பண்ணுறாங்க ஐயா”

“ அது என்னடா எல்லோரையும் ஐயா நொய்யான்னுகிட்டு, சின்னப்பையன் தானே நீ அண்ணே என்று சொல்லுடா”

“ வேணாங்கையா அது சரியா இருக்காது” என்றான். மனதில் ஒருவன் முகம் ஆக்ரோஷமாக வந்து சென்றது.

“ என்ன எளவோ ஆனால் என்ன மாமான்னுதான் கூப்பிடனும் ஓகேயா??” என்றான்.

“ என்னடா இவன் புதுசா சொல்லுறான் என்று பாக்கறியா ?? என் மாப்ளயை விட சின்ன பயலாத்தான் நீ இருப்ப!! அவனோட வானர கூட்டத்தால் வந்த புழக்கம் இது மாற மாட்டேங்குது, கல்யாணத்துக்கு வருவானுக பாரு, அப்பறம் நீயும் ஷட்டர்பாக்ஸ் ஆகிடுவ!! இனி மாமான்னே கூப்பிடு ஓகேயாடா‌ மாப்ள” என்றான்.

சரி என்பதைப்போல் தலையாட்டி வைத்தான். “அதோ வந்துட்டான் பாரு ஃபிட்னஸ் பைத்தியம்” என்று ட்ரக் ஷீட்டுடன் வந்த வேந்தனை சுட்டிக்காட்டியவன்

“ வணக்கம்டா மாப்ள!! என்ன நல்லத்தூக்கம் போல” என்று குரல் கொடுத்தான். “ யோவ் கம்முன்னு !! காலங்காத்தால” என்று எறிந்து விழுந்தவன் கிரவுண்டை சுற்றி ஓட ஆரம்பித்து விட்டான்.

“ மாப்ள மேல ஹோம்ஜிம் இருக்காம் அங்க போயா” என்றிட அவன் காதிலேயே வாங்காமல் ஓட ஆரம்பித்து விட்டான்.

“ இவனுக்கு திடீர்னு என்னடா மாப்ள ஆச்சு” என்று ஓடிக்கொண்டிருந்த வேந்தனை சுட்டிக்காட்ட அவன் தெரியாலை என்பதைப்போல் தோளை குலுக்கினான்.

 அதே நேரம் தனது அறையிலிருந்த பால்கனியில் நின்று அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீ.

சுவற்றில் கையூன்றி அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனுக்கு கைகாட்ட மேலே ஏறிட்டு பார்த்தான். மரக்கிளை கணேசனையும் வேலுவையும் மறைத்துவிட வேந்தன் மட்டுமே இருப்பதாக நினைத்தவள் பேச வேண்டும் என்பதுபோல் சைகை செய்தாள்.

“ வரேன் “ என்று வாயசைத்துக்கூறியவன் “ ஜிம் எங்கே இருக்கு மாம்சு” என்றான்.

“ மாடியில கார்னர்ல இருக்கு” என்று வேலுதான் கூறினான். “ நீயும் வறியா” என்றிட “ எனக்கு வேலை இருக்குங்கயா நான் வரேன்” என்றவன் அவசரமாக இடத்தை காலி செய்துவிட்டான்.

“ நல்லாத்தானே இருந்தான் திடீர்னு என்னாச்சு இவனுக்கு??” என்று கணேசன் பேசிக்கொண்டே திரும்ப சுற்றி ஒரு யாரையும் காணோம். தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தான்.

 “ அடப்பாவிகளா தனியாக புலம்பவிட்டு போய்ட்டீங்களேடா”

~ தொடரும்