கட்டிலில் விட்டத்தைப்பார்த்துக்கொண்டே படுத்து இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக போர்வையை போர்த்திக்கொண்டு எழுந்து குளியலறையை நோக்கி நடந்தாள். போன் ரிங்காகும் சத்தத்தில் அவளது நடை தடைபட்டது. டேபிளில் இருந்த தனது போனை எடுத்துப் பார்த்தவள் அது அணைக்கப்பட்டிருக்கவும் கண்களை சுழற்றி தேடினாள்.
பெட்டில் வேந்தனின் போன் இருக்கவும் அதனை எடுத்து பார்த்தாள் “ சத்யா காலிங்” என்று இருந்தது. “ இவளா” என்று அதிர்ந்தவள் “ பண்ணலன்னா தான் அதிசயம்!! சார் வந்து ஒரு நாள் ஆகிடுச்சே!! இதுவே அதிகம் லேட்தான்” என்று நினைத்துக்கொண்டே அதனை அட்டென்ட் செய்வதற்குள் கால் கட்டாகிவிட்டது. “ ச்சே கட் ஆகிடுச்சே !! இவளை இப்படியே விடக்கூடாதே” என்றவள் போனை ஆன் பண்ணி பார்க்க பேட்டர்ன் போட்டிருந்தது.
தனக்கு தெரிந்த பாஸ்கோடை போட்டுப்பார்த்தாள் ஓபன் ஆகவில்லை. “ வேற என்னவா இருக்கும் ?? திரும்பி கால் பண்ணுவாலா” என்று யோசித்துக்கொண்டிருக்க மீண்டும் கால் வந்தது.
தனது பாக்கெட்டில் போனை காணவில்லை என்றதும் பதட்டமானவன் “ ப்ச்” என்று தலையில் அடித்துக்கொண்டான். ஸ்ரீயின் செயினை தனது பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவன் அவளது அறைக்கதவை திறக்கப்போக உள்புறமாக தாழிட்டு இருந்தது. “இவளுக்கு எல்லாமே லேட்டாதான் வேலைசெய்யும்” என்றவன் மெல்ல கதவை தட்டினான். திறக்கும் அறிகுறியே இல்லாமல் இருக்கவும் குரலை செருமியவன் “ ஸ்ரீ கதவை திறடி” என்று மெல்லமாக சத்தமிட நோ ரெஸ்பான்ஸ்.
“ டைம் வேற ஆச்சு” என்று தனது கைகடிகாரத்தை பார்த்தவன் சத்தமாக குரல் கொடுக்க “ டீரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு இருக்கேன் வெயிட் பண்ணுங்க” என்று குரல் வந்தது.
“ போனை மட்டும் கொடுடி போயிடுறேன்” என்று மெல்லிய குரலில் கூற “ ஹான் இதோ வரேன் வரேன்” என்று குரல் கொடுத்தவள் ஆர அமர பொறுமையாக வந்து கதவை திறந்தாள்.
“ தள்ளுடி” என்றவன் அவளை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். “ ஸ்ஸ்ஸா” என்று தோள்பட்டையை தேய்த்துக்கொண்டே “ பார்த்து வரமாட்டீங்க எப்பவும் அவசரம்தான்” என்றுக்கொண்டே அவன் பின்னாலேயே வந்தாள்.
கட்டிலில் பெட்ஷீட் தலையனை என்று அனைத்தையும் கீழே எடுத்துப்போட்டு தேடியவன் போனை காணாமல் போகவும் “ எங்கடி என் போன்” என்று அவளிடம் ககேட்டான் அமைதியாக நின்றிருந்தாளே தவிர பதிலேதும் பேசவில்லை. “ விளையாடாத ஸ்ரீ இம்பார்ட்டன்ட் கால் வரும் பேசியே ஆகனும்” என்றான்.
“என்னைவிட இம்பார்ட்டன்ட் ஆஹ்” என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள். நிதானமாக இருந்து இருந்தாள் அதனை அறிந்து இருப்பான். அவனிருந்த பதட்டத்தில் எங்கே அதையெல்லாம் கவனித்தான்.
“ ஆமாம்டி தந்து தொலை” என்று சுள்ளென காய்ந்தான். “ அப்போ ஒரு ஹெல்ப் அதுக்கு ஓகே சொல்லுங்க தரேன்”என்றாள். அவன் பதிலேதும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க “ நான் வெளியே போகனும் கூட்டிட்டுப்போங்க” என்றாள்.
“ இதை ப்ளாக் மெயில் பண்ணாமலேயே கேட்டு இருக்கலாம்” என்றவன் கையை நீட்ட பெட்டின் அடியிலிருந்து போனை எடுத்து தந்தாள்.
அதனை வாங்கியவன் “ மார்னிங் ரெடியா இரு போகலாம்” என்றுவிட்டு வெளியேறிவிட்டான்.
இதேசமயம் “ அக்கா அக்காஆஆஆ ” என்று கனகாவின் அறையில் கத்திக்கொண்டிருந்தாள் லெட்சுமி.
“பார்வதி அவளை இங்கிருந்து வெளியே போகச்சொல்லு!! எனக்கு அவகிடட் பேச விருப்பமில்லை” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள் கனகா. பார்வதி வாயை திறக்கப்போக அவளை கையை நீட்டி தடுத்தவள் “ எங்களுக்கு காது கேட்கும்” என்றவள் “ அவகிட்ட சொல்லுற என்கிட்டே பேசினா என்னவாம்??” என்று முகத்தை சுறுக்கினாள்.
“ அதுதான் சேஃபா வந்துட்டேன் இல்லை பின்ன என்னக்கா?? உனக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது நான் மட்டும் ஹாஸ்டல்ல சுகமா இழுத்துப்போர்த்திக்கிட்டு தூங்கிட்டு இருக்க முடியுமா?? இதே என் நிலைமையில நீ இருந்தா இப்படிதான் இருப்பியா??” என்று கேட்க அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
“ அம்மா நீயாவது சொல்லேன் பாரு ரொம்ப பன்னுறா” என்று பர்வதத்தை சப்போட்டுக்கு அழைத்தாள். “ அம்மா நீ இதில் தலையிடாதே!!” என்று அந்தப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள் கனகா.
“ உங்க பஞ்சாயத்துக்குள்ள என்ன கழுக்காதீங்கடி,உங்களை மேய்க்க எனக்கு தெம்பில்லை” என்றவர் அமைதியாக இரவு உணவை தயாரிக்க சமையற்கட்டு பக்கம் சென்றுவிட்டார்.
“ அக்கா நாலு அடிக்கூட அடிச்சிககோ ஆனால் இப்படி பேசாமல் மட்டும் இருக்காதக்கா என்னால முடியாது ப்ளீஸ்” என்று கண்ணை சுருக்கி கெஞ்சினாள் லெட்சுமி. கனகா போர்வையை போர்த்துக்கொண்டு படுக்கப்போக போர்வையை இழுத்துப்பிடித்தவள் “ என்னடி ஓவரா பண்ணுற உனக்காகதானே வந்தேன்!! மதிக்கவே மாட்டேங்கற கல்நெஞ்சக்காரி இப்படி கதற விடுற” என்றாள்.
போர்வையை இழுத்து போத்திக்கொண்டு படுத்துவிட “ இது வேலைக்கு ஆகாது உன்னை என்ன பண்ணுறேன் பாரு??” என்று நினைத்தவள் போர்வைக்குள் கைவிட்டு அவளுக்கு கிச்சிகிச்சு மூட்ட அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள். “ சின்னப்பொண்ணு என்றுக்கூட பார்க்காம கொடுமையா பண்ணுற” என்றவள் “ மரியாதையா மன்னிச்சு விடு இல்லை!!” என்று மிரட்டினாள்.
“ இல்லைன்னா என்னடி பண்ணுவ??”
“ என்ன பண்ணுவேனா” என்றுக்கொண்டே அவளருகில் சென்றவள் கனகாவின் கண்ணத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“ இப்ப மன்னிச்ச்சிட்டேன் என்று சொல்லுடி” என்றிட “ முடியாது போடி” என்றவள் உள்ளங்கையால் தன் கண்ணத்தை துடைத்துக்கொண்டாள். “ ஏய்” என்று மாறிமாறி கண்ணத்தில் முத்தமிட “ போதும் விடுடி குரங்கே” என்றவள் தனது முகத்தை மூடிக்கொண்டாள்.
“ அதெல்லாம் முடியாது, இனி என்கிட்ட பேசாம இருப்பியா இருப்பியா ??” என்றவள் மீண்டும் மீண்டும் முத்தமிட “ மன்னிச்சுட்டேன் விடுடி மலைக்குரங்கே மூச்சு முட்டுது” என்றதும் தான் விட்டாள்.
“ ஹான் அந்தப்பயம் இருக்கட்டும் கோச்சிக்கற மூஞ்சிய பாரு” என்றவள் அவளை இறுக்கி அணைத்துக்கொள்ள “ அவுச்” என்ற சத்தத்துடன் கட்டிலில் துள்ளி அமர்ந்தாள் கனகா. “ ஓஓ சாரி சாரி தெரியாம பட்டுடிச்சி” என்றுக்கொண்டே மீண்டும் அவள் இடுப்பில் கைவைக்க மீண்டும் துள்ளி அமர்ந்தாள். “ ஏதோ தெரியாம” என்று மீண்டும் கூற “ படும்டி படும் என்கையும் தெரியாமல் ஒருமுறை பட்டுக்கட்டும்” என்று கொண்டே அவளை அடிக்க விரட்டினாள். “ முடிஞ்சா பிடி பார்க்கலாம் “ என்றுக்கொண்டே அறையைச்சுற்றி ஓடினாள்.“ நில்லுடி குரங்குக்குட்டி ராத்திரி நேரத்தில் சொல்லாம் கொல்லாம வருவியா” என்றுக்கொண்டே தலையணையை தூக்கி வீசினாள் கனகா. அதனை லாவகமாக பிடித்தவள் “ அதுக்குதான் இவ்வளவு நேரம் வச்சு செஞ்சியே பின்னே என்னடி” என்றுக்கொண்டே கட்டிலை சுற்றி ஓடினாள் லெட்சுமி.
பின்னாலேயே விரட்டிக்கொண்டு ஓடியவள் “ காலங்கெட்ட காலத்தில தனியா வராதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கேன்!! சொல் பேச்சு கேட்கிறதே இல்லை”
“ என் ஆளு இருக்கும் போது எனக்கென்னடி கவலை!! எல்லாம் அவன் பார்த்துப்பான்!! சீக்கிரம் என் ரூட்டை க்ளியர் பண்ணுடி மக்குப்பொண்ணே”
“ யாருடி மக்கு குரங்கே” என்றுத் துரத்திக்கொண்டிருந்தவளுக்கு லேசாக மூச்சிறைக்க ஆரம்பிக்க அதனை கண்டுக்கொண்டவள் தனது வேகத்தை குறைத்துக்கொண்டு தானாக அவளிடம் அகப்பட்டு கொண்டாள்.
“ நீதான்டி மக்கு வீட்டில் வயசுக்கு வந்த பொண்ணு இருக்காளே காலாகாலத்தில் அவளுக்கு ஒரு நல்ல வழி பண்ணுவோம் என்று இல்லாமஆஆஆஆ” என்று காதை பிடித்துக்கொண்டு கத்தினாள் லெட்சுமி.
“ ஒழுங்காக படிக்கற வேலைய பாரு எப்படா காலேஜ்க்கு மட்ட போடலாம் என்று சாக்கு தேட வேண்டியது பிச்சுடுவேன் பிச்சு” என்று அவளை விட்டவள் “ போய் மூஞ்சை கழுவிட்டு வாடி சாப்பிடலாம்” என்றவள் சமையற்கட்டுப்பக்கம் போக “ இருடி என் ஆளுக்கிட்ட சொல்லி உன் காதை திருகச்சொல்லுறேன்!! அப்பத்தெரியும் “ என்று காதைத் தேய்த்துக்கொண்டே பின்பக்கம் சென்றாள்.
“ என்னடி அங்க சத்தம்” என்று கனகா குரல் கொடுக்க “ இதோ வந்தட்டேன்” என்றவள் அவசரமாக கைகால் முகம் அலம்பினாள்.
அரைமணி நேரமாக இவர்கள் இருவரையும் சுவற்றில் சாய்ந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கு ஒன்றுமே பிடிப்படவில்லை.
“ என்ன பெரியம்மா இதெல்லாம் அவ லவ்வுங்கற நீங்க சும்மா இருக்கீங்க அக்காக்கூட யாரு என்னவென்று எதுவுமே கேட்கலை?? சின்னப்பொண்ணு அவ நீங்களாவது கேட்டு கண்டீங்க” என்று பரவதத்திடம் கேட்க “ பாரு வாடி சாப்பிடலாம் சும்மா கதை அளந்துக்கிட்டு” என்ற கனகா அந்தப்பேச்சை அத்தோடு இடை நிறுத்தினாள்.
“ அக்கா என்ன நீங்க என்ன கேசுவலா சாப்பிட கூப்பிடுறீங்க!! முதல்ல லெட்சுமியை கூப்பிட்டு கண்டிங்க” என்று சீரியஸாக பேசினாள். அவள் தலையில் நறுக்கென்று கொட்டிய லெட்சுமி “ முந்திரிக்கொட்டை எடுத்துக்கொடுக்கறியா” என்று சண்டைக்கு நின்றாள்.
“ ஸ்ஸாஆஆஆ உன் நல்லதுக்கு தான்டி சொன்னேன் மடகாஸ்கர்” என்றவள் தலையைத்தேய்த்து கொண்டே பதிலுக்கு அவள் தலையில அடித்தாள்.
“அவத்தார்குட்டி யாருமேல கைவைக்கிற” என்று கேட்டுக்கொண்டே இருவரும் மல்லுக்கு நிற்க “ இப்ப ரெண்டு பேரும் அமைதியாக வரல அப்பறம் சாப்பிட பழைய சோறுதான் பார்த்துக்கங்க” என்று பர்வதம் குரல்கொடுத்தார்.
“ என்னது பழையச்சோறா??” என்று ஒருச்சேர அதிர்ச்சியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்கள் அடிப்பிடித்து வந்து சாப்பிட அமர்ந்துவிட்டனர்.
“ தள்ளி உட்காருடி”
“ நீ தள்ளி உட்காருடி” என்று மாறிமாறி அப்போதும் அடித்துக்கொள்ள “ கொஞ்சமாச்சம் வயசுப்பொண்ணுமாதிரி நடந்துக்கோங்கடி சின்னப்பிள்ளைகளாட்டம்” என்று பர்வதம் அர்ச்சனை செய்ய இருவரும் சுருங்கிப்போன முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
இருவரது முகத்தையும் பார்த்த கனகா சத்தமாக சிரித்துவிட இப்போது மூவரும் ஒருசேர அவளை திரும்பி பார்த்தனர்.
“ இங்க என்ன படமா காட்டுறாங்க பல்ல காட்டுற சாப்பிட்டு போய் படுடி” என்ற பர்வதம் “ நீங்களும் அமைதியாக சாப்பிடனும்” என்றவர் ஒருவாறு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சாப்பிட்டு படுக்க சென்றுவிட்டார்.
கட்டிலில் சாய்வாக அமர்ந்த கனகாவிடம் மாத்திரைகளை நீட்டிய லெட்சுமி “ இப்போ எப்படி அக்கா இருக்கு பரவால்லயா??” என்று கேட்டுக்கொண்டே அவளருகில் அமர்ந்தாள். இங்க வா என்று சைகையால் அருகில் அழைத்தவள் கைகளை விரிக்க கலங்கிய விழிகளுடன் அவளை இறுக அனைத்துக் கொண்டாள்.
“ ச்சீ லட்டுக்குட்டி என்ன இது அழுதுவடிஞ்சிட்டு?? எப்பவும் வரதுதானே” என்று அவளை இறுக அணைத்துக்கொள்ள “ என்கிட்ட பேசாதே எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா?? அடிச்சு பிடிச்சு ஓடிவந்தா மூஞ்சைகாட்டுற போடி” என்று அவளது அணைப்பில் இருந்துக்கொண்டே சிணுங்கினாள்.
“ எனக்கு பயமாக இருக்கு அக்கா!! அதெப்படி திடீர்னு வரும் ஏதும் பிரச்சனையா என்கிட்ட மறைக்கிறியா??” என்று கேட்டாள்.
“ எந்த பிரச்சனையும் இல்லை காலையில் மாத்திரை போட மறந்துட்டேன் போல அதான்” என்று மழுப்ப பார்க்க “ மறந்துட்டியா எவ்வளவு சாதரணமாக சொல்லுற!! எங்களை பத்தி யோசிச்சு இருந்தா இப்படியெல்லாம் பேசுவியா நீ” என்று ஆரம்பிக்க “ யம்மா தாயே கொஞ்சம் நிறுத்து உன் புராணத்தை வேலை நியாபகத்தில் விட்டுட்டேன் இனி மறக்கலை போதுமா??” என்றாள்.
“மறந்துடடேன் நியாபகம் இல்லை அது இது என்று இனிமே ஏதாவது காரணம் சொன்ன பிச்சுடுவேன் படுவா” என்று கனகாவின் கண்ணத்தை வலிக்க கடித்தாள்.
“ சரிடி குரங்குக்குட்டி” என்று கண்ணத்தை தேய்த்துக்கொள்ள இருவரையும் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.
“ ஏய் போதும்டி மடகாஸ்கர்!! நீ என்ன கஜினியா மாறி மாறி பெர்ஃபாமென்ஸ் பண்ணுற இப்பதானடி முத்தமாரி பொழிஞ்ச அதுக்குள்ள கடிக்கிற குரங்கே”என்றிட “ ஏய் போடி இவளே என் அக்கா என் இஷ்டம்!! இதுல உனக்கென்ன கஷ்டம்” என்று பழிப்புக்காட்டியவள் கனகாவை இறுக அணைத்துக்கொண்டாள்.
“ ம்ம்க்கும் ரொம்பத்தான்” என்றவள் ஹாலில் டீவி பார்ப்பது போல் வெளியே வந்து அமர்ந்துக்கொண்டு காதை இவர்கள் பக்கம் கூர்மையாக்கி என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அக்கா பேசாம இவளை ஹாலில் படுக்க சொல்லிடுவோமா?? ஏன்னா எனக்கு ப்ரைவசி முக்கியம் அதான்!!” என்று கண்ணடித்துக்கூறினாள்.
கனகாவின் வீட்டில் இரு அறை ஒரு ஹால் ஒரு சமையலறை என்று அளவாகத்தான் வீடு இருந்தது. பரவதம் ஒரு அறையிலும் லெட்சுமி கனகா ஒரு அறையிலும் படுத்துக்கொள்வர். இப்போது கனகாவின் அறையில்தான் பார்வதியும் தங்கிக்கொள்கிறாள்.
“ விசம் விசம் என்னவெல்லாம் சொல்லுறா பாரு” என்று பார்வதி வாய்க்குள் முணுங்கியவள் “ செஞ்சாலும் செய்வா விசம் !!! நிம்மதிய கெடுக்கவே பஸ் ஏறி வந்துருக்கா” என்று அவசரமாக டிவியை அணைத்துவிட்டு வந்து கட்டிலில் இவர்களுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.
“ சப்போர்ட்டா இது சரி வராது!! நீங்களே கொஞ்சி குலாவுங்க நான் அம்மா ரூமுக்கே போறேன் போ” எனறு எழப்போக “ ஏன் நடுராத்தி வ்நது கதவை தட்டவா இங்கேயே படுடி” என்று கூறினாள்.
“ சரி ஏதோ கெஞ்சிக்கேட்கிறதால் உங்கூடவே படுக்கறேன்!! எனக்கு இதுல விருப்பம் இல்லை அம்புட்டுதேன்” என்றாள்.
“ எல்லாம் என் நேரம்டி!! ஆமாம் யாரு உனக்கு சொன்னது?? எப்படி வந்த?? யாரு உன்னை கூட்டி வந்தது??” என்றாள்.
“ முடிஞ்சதா??கொஞ்சம் மூச்சு விடுக்கா அடுக்கிட்டே போற!! அதுக்குத்தான் என் ஆளு இருக்கானே?? அவன் தான் சொன்னான்” என்றவள் “ மறந்தே போயிட்டேன் வீட்டை ரீச் பண்ணதும் கால் எடுக்க சொன்னான்!! வந்துடறேன் இரு!!” என்று போனை எடுக்க “ போன் ரிங்கானது “ அய்யோ அவன்தான் !! ஆயுசு நூறு இரு பேசிட்டு வந்துடுறேன்” என்று பார்வதியின் காதில் கேட்குமாறு சத்தமாக கூறியவள் போனை காதில் வைத்து” சொல்லுடா மகி என்ன ரொம்ப மிஸ் பண்ணியா பேபி ஐ மிஸ் யூ டூ பேபி”என்றவள் “ அச்சோ சோ ஸ்வீட் நானும்” என்று சிணுங்கினாள்.
“ ச்சை இந்த கொசு தொல்லை தாங்கலை” என்ற பார்வதி கையை தட்ட “இரு பேபி இங்கே ஒரே நாய்ஸ் பொல்யூஷனா இருக்கு” என்றுக்கொண்டே அறையைவிட்டு ஹாலுக்கு போனாள்.
“ கொழுப்பை பார்த்தியா இவளுக்கு!! டிஸ்பன்ஸாமே??” என்று நினைத்தவள் “ இத்தோட உன் லவ்வு ப்ரேக் அப் ஆகி புட்டுக்கிட்டு போக” என்று இன்ஸ்ட்டன்டாக ஒரு சாபத்தை விட்டாள்.
“ வீட்டுக்கு போனதும் சுததிப்போட்டுக்க பேபி ஒரே கொல்லிக்கண்ணு” என்றவள் “சில பேரு பேரை கேட்டாலே சனி மூனு ஜென்மத்துக்கு விடாது பேபி மிஸ் யூ பாய்” என்று போனை கட் பண்ணிவிட்டு அறைக்குள் வர தூங்குவது போல் கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.