Advertisement

மாற்றம் தந்தவன் நீ தானே!!!

மாற்றம் 1

THE BEST KIND OF PARENT YOU CAN BE IS TO LEAD BY EXAMPLE

                               -DREW BARRYMORE…

“மிஸ்..மிஸ்.. நான்.. நான்..” என்று மாணவர்களின் கூச்சல்களைக் கட்டுப்படுத்த படாதபாடுப் பட்டுக் கொண்டிருந்தாள் ரேணுகா..

“ஷு.. அமைதியா இருங்க.. ஒவ்வொருத்தரையா கூப்பிடுறேன்.. இப்படி கத்துனா, பக்கத்து கிளாஸ்ல இருக்கவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும்ல.. சைலண்டா இருக்கணும்..” என

“மிஸ் பிங்கர் ஆன் தி லிப்ஸ் சொல்லுங்க.. அப்போ தான் எல்லாரும் அமைதியா இருப்பாங்க..” அந்த நான்காம் வகுப்புத் தலைவன், பொறுப்பான லீடராகரேணுகாவிற்கு இலவச ஆலோசனை வழங்கினான்..

“நீங்க என்ன கிண்டர் கார்டன் ஸ்டுடென்ஸா, வாய்ல விரல் வைக்க சொல்ல.. கீப் சைலன்ட் சொன்னாலே, அமைதி ஆகிடனும்..” சிரித்துக் கொண்டே கூறியவள் மாணவர்களின் புறம் திரும்பி ஒவ்வொருவராக அழைத்தாள்.

“அபார்ட் பிரம் ஸ்டடீஸ், உனக்குப் பிடிச்சது என்ன? எக்ஸ்ட்ரா கரிகுலர் அக்டிவிடீசாஇல்லமொபைல கேம் விளையாடுறதா?” அந்த வகுப்புத் தலைவனையே முதலில் முன்னே அழைத்து அவள் கேட்க அவனோ

“மிஸ் எனக்கு ஸ்டடீஸ் பிடிச்சுருக்குன்னு நான் சொன்னேனா? அபார்ட் பிரம்ன்னுஏன் சொன்னீங்க?” என, ரேணுகாவிற்கு ஐயோஎன்றானது..

‘ஐயா ராசா தெரியாம படிப்பைப் பத்தி உன் கிட்டப் பேசிட்டேன்..’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், அவனிடம்

“சரி சார் சொல்லுங்க என்னப் பிடிக்கும்” என்றாள்

“ஸ்கூல்ல கேம்ஸ் பிரியடுல என் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கபடி, ரன்னிங் இதெல்லாம் விளையாடப் பிடிக்கும்.. வீட்டுல எனக்கு விளையாட ஆள் இல்லை.. அதுனால மொபைல்ல கேம் விளையாடப் பிடிக்கும்..”

“உனக்குஅக்கா அண்ணா யாரும் இல்லையா?”

“நோமிஸ்.. நான் ஒரே ஆள் தான்..” சோகமாக அவன் கூறினான்..

“ஓகே.. பக்கத்து வீட்டுல உன் வயசுப் பசங்க இருப்பாங்க தானே.. அவங்களோட விளையாடலாம்ல..”

“எங்க அம்மாஅவுட்டோர் கேம்ஸ்க்கு பிக் நோ சொல்லிருக்காங்க..”

“ஏன்?”

“என் வீட்டுப் பக்கத்துல இருக்க பசங்க எல்லாம் தமிழ் மீடியம்ல படிக்கிராங்கலாம்.. அவங்களோடசேர்ந்த நானும் தமிழ் தான் பேசுவேனாம்.. இங்கிலீஷ் பேச மாட்டேனாம்..”

“அப்படின்னு யார் சொன்னா?”

“அம்மாவும் அப்பாவும்..”

“ஓ.. சரி.. உனக்கு பிடிச்ச கேம் என்ன?”

“கொக்கொ மிஸ்..”

“சூப்பர்.. உனக்கு அது விளையாடத் தெரியுமா?”

“யஸ் மிஸ்..”

பின் ஒவ்வொருவராக அழைத்து ஒவ்வொருவரிடமும் கேள்விகளைக் கேட்டாள்.. அவர்கள் கூறிய பதிலில் இருந்து கையில் வைத்திருந்த நேம் லிஸ்ட் அடங்கிய பேடில் சிறு சிறு குறிப்பாக அவர் அவர் பெயருக்கு அருகில் எழுதினாள். இப்படியே ஒரு மணி நேரம் கழிந்தது.. அந்த வகுப்பு முடிந்து அவள் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்று, அந்த குறிப்பை ஒரு முறை சரி பார்த்துவிட்டு பைலில் வைத்தாள்.

“ரேணுகா மேம்.. உங்கள பிரின்சிபால் கூப்பிடுறாங்க..” பியூன் வந்து சொல்ல, பைலை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றவள், கதவைத் தட்டிவிட்டு

“மே ஐ கம் இன் மேம்?” என்றாள்

“யஸ்” என்றவர்ரேணுகாவைப் பார்த்துப் புன்னகைத்தார். பதிலுக்கு புன்னகைத்தவள் “குட் மார்னிங்” என்றாள்

“போர்த் ஸ்டேண்டர்ட் தானே இன்னைக்குப் போனிங்க? ரிப்போர்ட் ரெடியா?” என, அவரிடம் பைலை நீட்டினாள்.. அதை வாங்கிப் பார்வையிட்டவர் பத்து நிமிடங்கள் முழுதாகப் படித்துவிட்டு

“உங்களோட ஒபினியன் என்ன ரேணுகா?” என்று கேட்டார்.

“மோஸ்ட் ஆப் தி ஸ்டூடன்ட்ஸ் சிங்கிள் சைல்ட் மேம்.. சிலரோட ஆன்சர் கேக்குறப்ப அவங்க எந்த அளவுக்கு தனிமைல இருந்து கஷ்டப்படுராங்கன்னு புரிஞ்சுக்க முடியுது.. சிலரோடபேரண்ட்ஸ் ரெண்டு பேருமே வொர்கிங்ல இருக்காங்க.. தனிமை தான் மெயின் ப்ராபளம்.” என்றாள்

“யார் யாருக்கு கவுன்சிலிங் கொடுக்கணும்?”

“கவுன்சிலிங்ன்னு பார்த்தா பேரண்ட்சுக்கு தான் கொடுக்கணும்..” சிரிப்புடன்அவள் கூற, தலைமை ஆசிரியரும் சிரித்தவர்

“என்ன பண்றது..பணத்துக்குப் பின்னாடி போறதுனால பிள்ளைங்களை கவனிக்க முடியலை.. அவங்களையும் ஒன்னும் சொல்ல முடியாது. ரெண்டு பேரும் வேலைக்குப் போனா தான்இப்போ சர்வைவ் பண்ண முடியுது.”

“சரி தான் மேம்.. ஜாயின்ட் பேமிலியா இருந்தா தாத்தா, பாட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க.. இப்போ அதுக்கும் வழி இல்லை..”

“நெக்ஸ்ட் என்ன பண்ணலாம் ரேணுகா?” புரியாமல் அவர் கேட்க

“ஓபன்டே அப்போபேரண்ட்ஸ் கிட்டப் பேசுவோம் மேம்..  IQ டெஸ்ட் அதுக்குள்ள எடுத்துடலாம்..”

“கொஸ்டிண்ஸ் ரெடி செஞ்சுட்டு சொல்லுங்கரேணுகா..”

“ஓகே மேம்..” என்றவள் அவரிடம் விடைபெற்றாள்.

ரேணுகா.. இருபத்திரெண்டு வயது யுவதி.. BSC சைக்காலஜி படித்துவிட்டு ஒரு  வருடமாக இந்தப் பள்ளியில் கவுன்சிலிங் ஸ்டாபாக வேலை செய்கிறாள். தந்தை கணேஷன் பள்ளி ஆசிரியர்..தாய் லக்ஷ்மி குடும்பத்தரசி.. தம்பி பரத் இஞ்சினியரிங் இரண்டாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருக்கிறான்..

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவள் தாய் கொடுத்த டீயை குடித்துவிட்டு, சிறிது நேரம் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் லேப்பை ஆன் செய்துIQ கொஸ்டின்சை டைப் செய்ய ஆரம்பித்தாள்..

அப்பொழுது அவளின் போன் அடிக்க, எடுத்துப் பார்த்தவள் சிந்து என்கிற பெயரைப் பார்த்ததும் சந்தோசமாக அட்டன்ட் செய்தாள்.

“மிசஸ் மாமா.. எப்படி இருக்க? கேம்ப் எல்லாம் எப்படி போகுது?”

“செருப்படி தான் வாங்குவ.. மிசஸ் மாமா சொல்லாதேன்னு எத்தனை தடவடி சொல்லுறது.. எருமை மாடே..” சிந்து அந்த பக்கம் திட்ட, ரேணுகாவோ சிரித்துக்கொண்டே

“பாசமா எப்படி இருக்கன்னு கேட்டேன்.. நீ என்னடனா இப்படி திட்டுற?” சோகமாக சொல்வது போல் கூற

“மூடு.. உன் பாசம் பாயசம் எல்லாம் எனக்கு தெரியும்..” என்றவள்

“நீ கேட்ட லிங்க் வாட்சப்ல அனுப்பிருக்கேன்.. பார்த்துட்டியா?” என

“இல்லடி.. பாக்குறேன்.. உனக்கு எப்படி போகுது கேம்ப்?”

“ம் போகுது.. சாப்பிட கூட நேரம் இருக்க மாட்டுது.. ஒரு பக்கம் கடுப்பா இருக்கு, இன்னொரு பக்கம் நிறையா தெரிஞ்சிக்கிறோம்ன்னு சந்தோசமாவும் இருக்கு..”

சிந்து.. ரேணுகாவுடன் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மதுரையில் படித்தவள்.. சென்னை மெடிக்கல் கல்லூரியில் அவளிற்கு இடம் கிடைத்ததும், குடும்பத்துடன் அவர்கள் சென்னைக்குப் பயணப்பட்டனர். இப்பொழுது ஹவுஸ் சர்ஜனாக இருக்கிறாள்.

தோழியுடன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, அவள் அனுப்பிய லிங்கில் இருந்த விபரங்களை சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தாள்.. அதில் இருந்து சில குறிப்புகளை எடுத்தவள், லேப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்த கேள்விகளோடு அதையும் சேர்த்துக் கொண்டாள்..

மறுநாள் மற்றொரு வகுப்பில் மாணவர்களுடன் உரையாடி அவர்களைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக் கொண்டாள்.. இவ்வாறு அந்த வாரம் முழுவதும் அவளிற்கு குறிப்புகள் எடுப்பதும், IQ டெஸ்டிற்கான கேள்விகளை தயார் செய்வதிலும் சென்றது.. வியாழன் அன்று பள்ளியில்இருந்து வீடு வந்த ரேணுகா, ஹாஸ்டலில் இருந்து வந்திருக்கும் தம்பி பரத்தை கண்டு மகிழ்ச்சியுடன்

“ஹே பரத்.. எப்போடா வந்த? நீ நாளைக்கு வருவன்னு நினைச்சேன்..” என்றாள்

“கொஞ்ச நேரம் முன்ன தான்டி வந்தேன்..” என்றதும், அவன் அருகில் உட்கார்ந்து பேசப் போனவளை, சமையில் அறையில் இருந்து வந்த தாயின் வார்த்தைகள் தடை செய்தன..

“போய் கை கால் கழுவிட்டு வா.. என்ன பழக்கம் இது..” என்று கடிய

“அவனை ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்ததும் உட்கார்ந்துட்டேன்..” என்றவள் அறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகிவிட்டே வந்தாள்..

தம்பியோடு அளவாளவிக் கொண்டிருந்தவளின் கையில் காபியைக் கொடுத்த லக்ஷ்மி

“ட்ரெஸ் எல்லாம் அயன்செஞ்சு எடுத்து வெச்சுக்கோ.. நாளைக்கு சாயங்காலம் நாம கிளம்பனும்..” என்றார்

“அம்மா.. எனக்கு சனிக்கிழமை ஓபன்டே இருக்கு.. அதை முடிச்சுட்டு சனிக்கிழமை வரேன்னு முன்னமே சொன்னேன் தானே..”

“ஆமா பொல்லாத ஸ்கூல்.. வாங்குற ஆராயிரம் சம்பளத்துக்கு எக்ஸ்ட்ரா வேற வேலைப் பார்க்கனுமா? ஓபன்டேக்கு பாடம் நடத்துற டீச்சர்ஸ் மட்டும் போனா போதாதா?”

“ஸ்டுடெண்ட்சோட மனநிலை பத்தின அனலைசில் நான் தான் ரிப்போர்ட் பண்ணனும்.. அதை வெச்சு தானே பேரண்ட்ஸ், அவங்கப் பிள்ளைங்களைப் பத்திப் புரிஞ்சுக்க முடியும்..”

“பெத்தவங்களுக்குத் தெரியாதா, பிள்ளைங்களைப் பத்தி.. நீ ஏதோ பத்துப் பிள்ளையைப் பெத்து வளர்த்த மாதிரி அவங்களுக்கு அட்வைஸ் பண்ணுற..”

“ப்ச்.. நான் என்ன சொன்னாலும் நீங்க குதர்க்கமா தான் பேசுவீங்க.. சண்டே தானே மேரேஜ்.. சனிக்கிழமை ரிஷப்ஷனுக்கு அங்க வந்துடுறேன்..”

“அங்க எல்லாரும் உன் பொண்ணு எங்க எங்கன்னு என்னைக் கேப்பாங்க..”

“சொல்லுங்கமா.. அவளுக்கு வேலை இருக்குன்னு..”

“பொல்லாத வேலை.. உன் வயசுப் பிள்ளைங்க எல்லாம் ஐடி ல வேலை செஞ்சு லட்சம் லட்சமா சம்பாதிக்கிறாங்க..”

“ஐடில வொர்க் பண்ணுறது கூட ஈசி.. ஒரு குழந்தையை பாத்துக்கிறது தான் கஷ்டம்.. நமக்கும் குழந்தைக்கும் இடைல ஒருபுரிதல் இருக்கணும்.. அப்போ தான் அவங்களோட வீக்னெஸ் ஸ்ட்ரெஸ் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு என்னால சரி பண்ண முடியும்..”

“சும்மாநூத்துக் கிழவி மாதிரி பேசாதே.. சுய புத்தியும் கிடையாது.. சொல் புத்தியும் கிடையாது.. டுவலத்ல அவ்வளவு மார்க் எடுத்துட்டு இன்ஜினியரிங் படிக்க சொன்னா கேட்காமா சைக்காலஜி படிச்சுட்டு, இங்க நீ பால்வாடி ஆயா வேலைப் பார்த்துகிட்டு இருக்க..”

“நான்pg படிக்கிறேன்னு சொன்னேன்.. நீங்க தான் என்னை விடலை.. சும்மா என்னையே குறை சொல்லாதிங்க..”

“ஆமாMBA படின்னு சொன்னா, M.Sc படிக்கிறேன்னு சொல்லுற.. சைக்காலஜி படிச்சுருக்க.. அதோட சேர்த்து  MBA முடிச்சு HR ஆ போனா எவ்வளவு சம்பளம் வரும்.. அதை தான் வேணாம்ன்னு சொல்லிட்ட.. படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணலாம்ல.. அதையும் விட்டுட்டு குழந்தைங்க மனச படிக்கிறேன் கிழிக்கிறேன்னு உட்காந்துட்டு இருக்க.” அவர் கூற, கோபமாகத் தாயை இடையிட்டாள் ரேணுகா

“பணம் பணம் பணம்.. இதைத் தவிர உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதாமா? pg முடிச்சுட்டு நான் Phd பண்ணா தான் என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்துப்பாங்க.. ஒரு டிகிரியை வெச்சு என்னால சைகாட்டிஸ்டா எல்லாம் ஆக முடியாது.. MBA படிக்க எனக்கு இஷ்டம் இல்ல.. சும்மாவீட்ல இருக்கதுக்கு ஸ்கூலுக்காச்சும் போவோம்னு போறேன்.. உங்களுக்கு நாலு பேர்கிட்ட என் பொண்ணு அவ்வளவு சம்பாதிக்கிற இவ்வளவு சம்பாதிக்கிறான்னு பீத்திக்கணும்.. அது நடக்கலைன்னு கோபப்படுறீங்க..”

“ஆமாடி.. அறிவா இருக்கணும்னு தானே, மெட்ரிக்குலேஷன்ல சேர்த்து விட்டோம்.. பீஸ் எவ்வளவு ஒரு வருஷத்துக்கு.. நீ இப்போ சம்பளம்ங்கிற பேர்ல வாங்குற ஆராயிரத்தை உனக்கு ஒரு மாசம் ஸ்கூல் பீசா கட்டுனோம்.. அதை எல்லாம் திருப்பி தர வேண்டாமா நீ?”

“நானா உங்களை அவ்வளவு செலவு செஞ்சு படிக்க வைக்க சொன்னேன்.. கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்த்துருக்க வேண்டியது தானே..”

“இவ்வளவு வாய் அடிக்கிறியே.. இது எல்லாம் அங்க படிச்சதுனால தான்.. நீ தான் கை நிறைய சம்பாதிக்கல.. என் அண்ணன் பையன் பாரின்ல இருக்கான்.. அவனைக் கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும்னு பார்த்தா.. சொந்தத்துல கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிட்ட.. உன்னைப் பெத்து வளர்த்ததுக்கு, நீ ஒரு சந்தோசத்தைக் கூடக் கொடுக்கலை..

மரியாதையா நீ நாளைக்கு எங்களோட வந்து சேரு.. நீ வந்தாலும் எனக்கு அவமானம் தான்.. வாராடினாலும் அவமானம் தான்..”

“எப்படியும் அவமானம் தானே படப்போறிங்க.. நான் வராமையே அதைப் பட்டுக்கோங்க.. நான் ஓபன்டேயை முடிச்சுட்டு தான் மேரேஜ்க்கு வருவேன்.” என்றவள் தாயின் கோபமுகத்தைக் கண்டுக் கொள்ளாமல் அறைக்குச் சென்று மறைந்தாள்..

மகளை வசைப் பாடிக் கொண்டே இரவு உணவை தயார் செய்த லக்ஷ்மி,

“டேய் அவளை சாப்பிட வரச் சொல்லு.” என்று மகன் மூலம் ரேணுகாவை அழைக்கச் சொன்னார்.. அவனும் அறைக்குச் சென்று அக்காவை அழைக்கப் போக அவளோ படுத்துக்கொண்டே கதைப் படித்துக் கொண்டிருந்தாள்.. அவள் தலையில் நங்கென்று கொட்டு வைத்த பரத்

“அம்மா திட்டுன திட்டுக்கு இந்நேரம் தூக்குப் போட்டு செத்துருப்பன்னு நினைச்சேன். நீ என்னடான்னா ஹாயா உட்கார்ந்து கதைப் படிச்சுக்கிட்டு இருக்க.. வெக்கம் கெட்டவளே..” என்றான்..

தலையை ஒரு கையால் தேய்த்தவள்,  மறுகையில் இருந்த புத்தகத்தை வைத்து அவனை அடித்தாள் “எருமை.. அவங்க திட்டுனதுக்கு எல்லாம் தூக்குப் போட்டுகனும்னா நான் டெய்லி சாகனும்.. மத்தவங்களை சூசைட் பண்ணக் கூடாதுன்னு அட்வைஸ் பண்ற பொறுப்புல நான் இருக்கேன்.. நானே அதை செய்வேனா.. நெவர் எவர்..”

“ஆமா ஆமா.. உன் அட்வைசை கேக்குறதுக்கு சாவுறதே மேல்ன்னு அவன் செத்துருவான்..”

“ச்சீ பே..”

“சாப்பிட வா.. அம்மா கூப்பிட்டாங்க..”

“அம்மாக்கு என் மேல எவ்வளவு பாசம்.. திட்டித் திட்டி சாப்பாடு போடுறாங்க.. அதான் என் உடம்புல ஒட்டவே மாட்டுது..”

“நீ தான் அவங்கத் திட்டைத் தூசி மாதிரி  தட்டி விட்டுடுறியே.. உனக்கென்ன அவங்களை எதிர்த்து, எனக்குப் பிடிச்சதை தான் படிப்பேன்னு சைக்காலஜி படிச்சுட்ட.. நீ பண்ண அலம்பல்ல என்னோட அனிமேஷன் கனவு கனவாவே போகிடுச்சு.” என்றான் சோகமாக

“உனக்காக நான் பேசுனேன் தானேடா.. நீ அப்போ ஸ்ட்ராங்கா இல்லை.. அவங்க உன்னை ஈசியா பிரைன் வாஷ் செஞ்சுட்டாங்க.. நீயும் அவங்க சொன்னதுக்கு எல்லாம் ஓகே ஓகே சொல்லிக்கிட்டு இருந்த.. இப்போ என்னை சொல்லு.. நீ அனிமேஷன் தான் படிப்பேன்னு ஒத்தக்காலுல நின்னுருந்தா நானும் கொஞ்சம் பேசி அம்மாவை சம்மதிக்க வச்சுறுப்பேன்..”

“சரி விடு.. இனி ஒன்னும் பண்ண முடியாது.. வா சாப்பிட போகலாம்..” என்றவன் அக்காவுடன் வெளியேறினான்..

நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை

நமது உழைப்பு தெரியாமல் வளர்ப்பது தான் தவறு..

(unknown)

Advertisement