Advertisement

அத்தியாயம் 7

வெகு நேரமாக ஆறுதல் வார்த்தைகள் கூறியும் அனு அழுகையை நிறுத்தாமல் “நான் உங்களுக்கு வேண்டாம்” இதையே திரும்ப திரும்ப கூற அதில் கோபம் வரப்பெற்ற அஜய்

“அப்போ நான் உனக்கு வேண்டாம் இல்ல.. சரி நீ இப்படி அழுது நடந்ததையே நினைச்சுட்டு முழு பைத்தியம் ஆகிடு.. நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போய்டுறேன்.. நம்ம குழந்தையும் என்னை மாதிரி அனாதை ஆகட்டும்.” என்று அவன் கூற வேகமாக அவன் வாயில் கை வைத்தவள்

“ஏ.ஜே அப்படி சொல்லாதிங்க… நம்ம குழந்தைக்கு அப்படி எதுவும் ஆகக் கூடாது. பேச்சுக்குக் கூட இப்படிச் சொல்லாதிங்க.” என்று அழ

“வேற என்ன சொல்ல? இப்படியே இருந்தா நான் சொல்றது தான் நடக்கும்.” தீர்மானமாக சொல்ல

“ஏ.ஜே… ஆனா எனக்கு என்னாச்சு? எனக்கே தெரியல என்னை யாரோ அப்படி செஞ்சுருக்காங்க.. அது கூட தெரியாம நான் இருந்துருக்கேன்.. உங்க காதலுக்கு நான் தகுதி ஆனவ இல்லை.”

“அனுமா… அந்த வயசுல உனக்கு என்னடா தெரியும்.. சின்னப் பொண்ணுனுக் கூடப் பார்க்காம இப்படி செஞ்சுட்டு அவன் ஏதோ ஒரு இடத்துல சந்தோசமா இருந்துட்டு இருப்பான்… நீ அதையே நினைச்சுட்டு இப்படி ஆகணுமா? எல்லாத்தையும் மறக்க ட்ரை பண்ணு. இனி இதைப் பத்தி பேசாதே.”

“ஆனா இனி நீங்க என்னோட இருக்க மாட்டீங்க தானே.. அன்னைக்கு நான் ரொம்ப கண்ட்ரோல் செஞ்சுட்டு இருந்தேன்.. ஆனாலும் முடியலை அதான் அப்படி உங்களை பேசிட்டேன்.. உங்கள போய் எல்லா ஆண்களோடையும் கம்பேர் செஞ்சு செக்ஸ்க்காக தான் அலையுறீங்க அப்படி இப்படினு சொல்லிட்டேன். உங்ககிட்ட சாரி சொல்லணும் சொல்லணும்னு நினைப்பேன் ஆனா என்னால அது முடியல.. இப்போ அதுக்கான காரணமும் உங்களுக்கு தெரிஞ்சுடுச்சு.. அதுனால என்கிட்ட நீங்க நெருங்க மாட்டீங்க… உங்க லைப் வேஸ்ட்டா போகிடும் தானே… நீங்க வேற யாரையாது…” என்று அவள் சொல்ல வர அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் அஜய். கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கணவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளை தன்னிடம் இருந்து விலக்கியவன்

“என்னடி மனசுல பெரிய ஹீரோயின்னு நினைப்பா?? வேற பொண்ணக் கல்யாணம் செஞ்சுக்கோங்கனு சொல்ற… உடல் உறவு மட்டும் தான் வாழ்க்கையா? அப்போ மிருகத்துக்கும் மனுஷனுக்கும் என்னடி வித்தியாசம்? நீ முழு பைத்தியமே ஆனாலும் உன்னைத் தவிர வேற யாரும் எனக்கு வேண்டாம். இன்னொரு தடவை இப்படிப் பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”

அவன் பேசியதை கேட்டவள் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.. கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.. அதைப் பார்க்கப் பார்க்க அஜயின் கோபம் சற்று குறைந்திருந்தது. அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றி

“லவ்யூ அனு.” என்று கூற அவளும் அவன் கன்னத்தில் முத்திரையை பதித்தாள்

“இனி இப்படிப் பேச மாட்ட தானே?” அஜய் கேட்க

“முதல்ல நான் பேச வரதை காது கொடுத்து கேட்டீங்களா? நான் எப்போ உங்களை வேறப் பொண்ண கல்யாணம் செஞ்சுக்கோங்கனு சொன்னேன்… வேற யாரையாது கல்யாணம் பண்ணியிருந்தா நீங்க இப்படி பீல் பண்ணிருக்க மாட்டீங்கன்னு சொல்ல வந்தேன்.. உங்களுக்கு நினைப்பு தான் ரெண்டாவது கல்யாணம் வேற கேட்குதா?” அவன் நெஞ்சில் குத்த

“ஸ் வலிக்குதுடி…” என்றவன் “உன்னை மேரேஜ் செஞ்சதால தான் நான் சந்தோசமா இல்லைன்னு யார் சொன்னா? நீ இருக்கதால தான் நான் ஹேப்பியா இருக்கேன்.” என

“லவ் யூ ஏஜே.” என்றாள்… அவளை படுக்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்தான் அஜய்.. அவன் கையை பிடித்தவள்

“நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகதுல அஜய்.” என்றாள் கலக்கத்துடன்

“உனக்கே ஒன்னும் இல்லாதப்ப நம்ம பாப்பாக்கு மட்டும் என்ன ஆகப்போகுது.. கவுன்சிலிங் மூலமா இதை சரி செஞ்சுடலாம்னு டாக்டர் சொன்னாங்க.. நீ இதையே நினைக்கிறதுனால தான் இப்படி ஆகுது. அதை எல்லாம் மறந்துடு… முக்கியமா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடு.. மனசுக்குள்ளயே வெச்சு யோசிச்சு யோசிச்சு டிப்ரெஸ்ட் ஆகாதே.”

“ம்…”

“ப்ராமிஸ்?” என்று அவன் கை நீட்ட

“ப்ராமிஸ்…” அவன் கை மீது தனது கையை வைத்தாள்…

சில வருடங்களுக்கு பின்

“ரித்விக் சேட்டை செய்யாத.. அடிவாங்க போற… நில்லுடா.”  நான்கு வயது மகன் ரித்விக்கை பிடிக்க முடியாமல் நிறைமாத வாயிற்றுடன் கத்திக் கொன்டிருந்தாள் அணுக்ரஹா

“போ..”

“போ வான்னு சொன்ன வெளுத்துடுவேன்.. நில்லுன்னு சொல்றேன்ல”

“அனு ஏன் இப்படி மார்னிங்கே கத்துற? அவன் விளையாடிட்டுத் தானே இருக்கான்.. ஒரு இடத்துல உட்காரு நீ முதல்ல.” வழக்கம் போல் மகளை ஜானகி அதட்ட

“எப்பவுமே என்னை மட்டும் திட்டுங்க.. ஹோம் வொர்க் பண்ணாம சுத்திக் கிட்டே இருக்கான்.. அஷ்விய பாருங்க சமத்தா எழுதிட்டு இருக்கா” தனது அண்ணன் மகள் அஷ்விதாவைக் காட்டி கூற

“ஆமாம் பெரிய ஹோம் வொர்க்.. இந்த வயசுல நீயும் இப்படி தான் சுத்தீட்டு இருந்த.. அஜயும் ஷ்யாமும் தான் உன்னோட வேலையையும் சேர்த்து பார்ப்பாங்க.”

“ஆமா இப்படியே சொல்லுங்க.. சும்மாவே இவன் என்னை மதிக்க மாட்டான்.. இதுல பாட்டி தாத்தா அத்தை மாமா அப்பானு எல்லாரும் அவனையே தூக்கி வெச்சு கொஞ்சுங்க… என்னமோ பண்ணுங்க.. பேரெண்ட்ஸ் மீட்டிங்க்கு என்னை உங்க மாப்பிள்ளை போக சொல்லட்டும் அப்போ இருக்கு.” என்றவள் அறைக்கு சென்றாள்

சிறிது நேரத்தில் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த அஜய் மனைவி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து மகன் எதுவோ செய்து விட்டான் என்பதை உணர்ந்தான்…

“என்னடா அனுமா உன் பையன் என்ன செஞ்சான்?” என்றான் சிரித்துக் கொண்டே

“ஆமா என் பையன்.. நான் சொல்றதை தான் கேட்குறான் பாருங்க. பொதுவா பசங்க எல்லாம் அம்மா  கட்சியா இருப்பாங்க இது மட்டும் வித்தியாசமா அப்பா கொடுக்கா இருக்கு.. வெளிய வரப்போற இந்த பிள்ளையாவது என் பேச்சை கேட்குமோ என்னவோ?” என்றாள் வயிற்றில் கையை வைத்து..

“என் பொண்ணும் எங்கக் கட்சி தான்டி அனு பேபி.” என்றான் அவள் கையின் மீது கையை வைத்து

“போடா.” என்றவள்

“ஏ.ஜே நமக்கு பொண்ணு பிறந்தா அவளுக்கும் எனக்கு நடந்த மாதிரி ஏதாவது ஆகிடுச்சுனா?”

“ஹே” என்றவன் அவளை அடிக்க கையை ஓங்கி விட்டான் அஜய்.

“நாலு வருஷமா இதை மறந்துட்டு தானே இருந்த.. இப்போ என்னாச்சு உனக்கு? என்ன பேசுறோம்னு யோசிக்காம பேசுற?”

“இல்லைங்க நான்…”

“நிறுத்துடி.” என்றவன் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்…  

தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்று தாமதமாகவே அனுவிற்கு புரிந்தது.. அவளை பழையபடி மாற்றுவதற்கு வீட்டில் உள்ள அனைவரும் எவ்வளவு போராடினார்கள் என்பதை அவள் அறிவாள்… ஆறுமாத கவுன்சிலிங்கும் கணவனின் அன்பும் அரவணைப்புமே அவளை நடமாட வைத்தது.. அவனின் கோபம் நியாயமானது தான் என்று உணர்ந்தவள் அஜயின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.. அவளின் மகளும் தந்தையைக் காண ஆர்வம் கொண்டாள் போலும்.. அஜய் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் அனுவிற்கு வலி வந்துவிட வயிற்றை பிடித்துக் கொண்டவளிற்கு நடக்கவே முடியவில்லை.. நான்கு எட்டு வைத்தவள் தரையில் அமர்ந்துவிட ரித்விக் விளையாடிக் கொண்டே உள்ளே வந்தான்..

“ரித்து..” என்று கூப்பிட

“போமா.. ஹோம் வொர்க் செய்ய மாட்டேன்.” என்றான் அவளைப் பார்க்காமல்

“ரித்வி பாட்டியை கூப்பிடு.”

“சரிமா.” என்றவன் ரூமை சுத்தி சுத்தி ஓட

“ரித்வி அம்மாக்கு வலிக்குதுடா.. பாப்பா அம்மா வயித்துல இருக்காள்ல அவளுக்கும் வலிக்கும்… போய் பாட்டியைக் கூப்பிடு.” என்றாள் வலியை பொறுத்துக் கொண்டு

“அம்மா… அழறீங்களா?” என்று அதுவரை ஒருமையில் அழைத்துக் கொண்டிருந்தவன் தாயிடம் வேகமாக வந்து பன்மையில் கேட்டவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்.. அதில் அவளிற்கு மேலும் அழுகை வர

“நீங்க அழாதிங்க.. நான் பாட்டியை கூப்பிடுறேன்.” என்றவன் வேகமாக ஜானகியை அழைத்துவர அரைமணி நேரத்தில் அனுவை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.. அஜய்க்கு தகவல் தெரிவிக்க அவனும் சிறிது நேரத்தில் வந்துவிட்டான்.. சில மணி நேர தவிப்பிற்கு பிறகு அவர்களின் இரண்டாவது மகவு இந்த பூ உலகைப் பார்த்தது…

மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தவளை வீட்டிற்கு ஆரத்தி சுத்தி வரவேற்றனர்.. இப்பொழுது எல்லாரும் ஒரே வீட்டில் தான் இருந்தனர்… அனுவின் ஆசைக்காக இதற்க்கு அவன் சம்மதம் கூற அனுவோ கணவனின் சுயமரியாதை தான் முக்கியம் என்று இங்கு வர மறுக்க இறுதியில் அஜய்தான் அனுவை கஷ்டப்பட்டு இங்கு அழைத்து வர வேண்டியதாயிற்று..

மருத்துவமனையில் குழந்தையைப் பார்க்கும் போது அனுவிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினான்.. இன்று அவனுடன் பேச வேண்டும் என்று மகளை தூங்கவைத்துவிட்டு காத்திருந்தாள்… அறைக்கு வந்தவனோ அவளை கண்டுகொள்ளாமல் உடையை மாற்றிவிட்டு மகள் அருகில் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு படுத்துக் கொண்டான்..

“அஜய்”

“ஏ.ஜே.”

“அலெக்ஸ் பாண்டியா…” என்று அவள் வித விதமாக கூப்பிட்டும் பதில் இல்லாமல் போக

“சாரி அஜய்.. நான் பயத்துல அப்படி சொல்லிட்டேன்.”

“ப்ளீஸ் அஜய்… சாரி.”

“பேசுறத எல்லாம் பேசிட்டு சாரி சொல்றதே உனக்கு வேலையா போச்சு”

“இல்ல ஏஜே.”

“கடுப்பேத்தாம படு”

“உங்களோட பேசணும் எழுந்திருங்க” என்று அவனை கட்டாயப் படுத்தி எழுப்பினாள்..

“சாரிங்க.”

“ரித்விக் வயித்துல இருந்தப்பவே நாம இதைப் பத்தி பேசிட்டோம்.. பொறக்குறது பொண்ணா இருந்தா எப்படி வளர்க்கணும்னு..” என்று அஜய் கூற

“இல்ல திடீர்னு ஏன் அப்படி கேட்டேனு தெரியல… இனி அப்படி பேச மாட்டேன்.. ப்ளீஸ்.”

“அந்த காலத்துல குழந்தைங்க கிட்ட இதை சொல்லக் கூடாது அதை சொல்லக் கூடாதுன்னு எல்லாத்தையும் மறைச்சு மறைச்சு தான் பல சின்ன பொண்ணுங்களுக்கு இந்த நிலைமை.. குட் டச் பேட் டச்பத்தி கண்டிப்பா நாம சொல்லணும்…

நம்ம கவர்ன்மென்ட் இப்படி தப்பு பண்றவங்களுக்கு தான் தையல் மேஷின் பணம் எல்லாம் கொடுத்து அவன் செய்த தப்பை திருத்தவிடாது.. டெல்லில யூகேஜி படிக்கிற பொண்ணை அந்த ஸ்கூல் பியூன் பாலியல் தொந்திரவு கொடுத்துருக்கான்.. இந்தியால அஞ்சுல இருந்து பன்னிரெண்டு வயசுக்குள்ள இருக்க குழந்தைகள்ல பத்துல ஒருத்தர் sexually abused ஆக்கப் படுறாங்க.. எயிட்ஸ்ல மூணாவது இடத்துல இருக்கோம்.. டீனேஜ் பிரேக்னேன்சி நம்ம நாட்டுல அதிகமாகிட்டே இருக்கு…

இவ்வளவு பிரச்சனை நாட்டுல இருக்கப்ப இதை கண்டுக்காம நடிகர்களுக்காக சண்டை போட்டுட்டு இருக்க இளைய தலைமுறை… ஒன்பது மாசக் குழந்தையை கூட விட்டு வைக்க மாட்றாங்க.. செக்ஸ் education ரொம்ப தேவை.. பசங்களுக்கு மட்டும் அது தேவை இல்ல ஆசிரியர்கள் மாணவர்கள்னு ஆரம்பிச்சு எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்..

ஆனா நமக்கு எப்படி சொல்லி தர்றாங்க.. பயாலாஜில ரீப்ரோடக்டீவ் சிஸ்டம் பத்தி ரெண்டே ரெண்டு பேஜ் வரும் அதையும் எடுக்காம…  ரீட் செஞ்சு தெரிஞ்சுக்கோங்கனு சொல்லிட்டு போய்டுவாங்க.. அடிப்படை தகவல் கொடுத்தா அதையும் நடத்த மாட்டாங்க..

செக்ஸ் education அப்படின்றது ஒரு பையனும் பொண்ணும் சேர்றது மட்டும் இல்ல குழந்தைக்கு குட் டச்னா என்ன பேட் டச்னா என்னனு சொல்லிக் கொடுத்து யாராது இப்படி பண்ணும் போது இதை வீட்டுல வந்து சொல்லனும்னு அப்படின்ற தைரியத்தையும்  சொல்லிக் கொடுக்கிறது.. child abuse பண்றவங்க மாட்டுனா மூணுல இருந்து பத்து வருஷம் சிறை தண்டனை இருக்கு.. அதே மாதிரி யாரு கம்பிளைன்ட் கொடுக்குறாங்களோ விசாரணை எல்லாமே ஒரு பிரைவேட் இடத்துல தான் நடக்கும்.. உங்க இன்பர்மேஷன் வெளிய வராது அப்படிங்கிற நாலேஜை அவங்களுக்கு கொடுக்கணும்..

அப்போ தான் ஒரு அவார்நெஸ் இருக்கும்.. தைரியமா கம்பிளைன்ட் பண்ண முன் வருவாங்க… இதுமட்டும் இல்லாம நாற்பத்தி மூணு சதவீதமான பெண்களுக்கு பீரியட்ஸ் டயத்துல என்ன பண்ணம்னு ஒரு ப்ரோபர் அவார்நெஸ் இல்ல.. சிட்டியும் இதுக்கு விதி விலக்கில்ல.. பெண்களுக்கு மட்டும் இதை சொல்லக் கூடாது இது நடக்கும் போது அவங்க வலி என்னனு ஆண்களுக்கும் தெரியனும். அப்ப தான் அவன் ஹஸ்பண்ட் ஆகும் போது தன்னோட மனைவி இந்த மாதிரி நேரத்துல மூட் ஸ்விங் ஆவாங்கனு புரியும்.. அது அவங்க ரெலேஷன்ஷிப்ப ஸ்ட்ராங் செய்யும்.. மத்த சப்ஜெக்ட்ஸ் மாதிரி செக்ஸ் education அப்படிங்கிறதுக்கு ஒரு ப்ரோபரான சப்ஜெக்ட்டா இருக்கணும்..

நம்ம நாட்டுல ஒன்பதாவதுலையே பத்தாவது பாடம் நடத்துறதும் பதினொன்னாவதுலயே பன்னிரென்டாவாது பாடம் நடத்தி மாநிலத்துல எங்க ஸ்கூல் தான் முதல் இடம்னு காமிக்கணும்னு தான் நினைக்கிறாங்களே ஒழிய இந்த கல்வியினால மாணவர்கள் என்ன கத்துக்கிட்டாங்கனு நினைக்கிறதில்ல.. இதுல மலேசியால ஒரு அரசியல்வாதி சொல்லுறான் பத்து வயசு பொண்ணை கற்பழிச்சா அவனையே அந்த சின்ன பொண்ணு கல்யாணம் செஞ்சுக்கணுமாம்.. தன்னோட மகளா பார்க்க வேண்டிய ஒருத்திக்கிட்ட அவன் கேவலமா நடந்துக்குவான் இதுல அவனையே கல்யாணம் செஞ்சுக்கணும்.. இப்படி பட்ட அரசியல் வாதிகளை முதல்ல சுட்டுக் கொல்லணும்.. முன்னாடி எல்லாம் பெண்கள் தான் வெளியே போக பயப்படுவாங்க இப்போ ஒரு வயசு குழந்தையை கூட வெளிய விட பயப்படுறாங்க.” என்று நீண்ட விளக்கம் அழித்தவனின் கருத்தை அனுவும் ஆமோதித்தாள்..

“அஸ் அ பேரென்டா நம்ம பொண்ணுக்கு நாம சொல்ல வேண்டிய எல்லாத்தையும் சொல்லணும் அஜய்.. மாற்றம் வேணும்னு நினைச்சா அதை முதல உன்னிடம் கொண்டு வான்னு சொல்லுவாங்க.. நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு என்னோட நிலைமை வர விடாம நாம பார்த்துப்போம் மத்த குழந்தைகளுக்கு?” என்றவள்

“நம்மாள முடிஞ்சவரை இதுக்கான அவார்னேஸ்ஸ மக்களுக்கு கொடுக்கணும்..” என்றாள்

“கண்டிப்பா அனு… ஸ்கூல் காலேஜ்ன்னு இதைப் பத்தி நாம பேசணும்.. முடிஞ்ச வரை child abusemnt நம்ம நாட்டுல குறைக்க இளைஞர்கள் தான் முயற்சி செய்யணும். சின்ன வயசுல இருந்து பசங்களுக்கு நல்லதை சொல்லி வளர்க்கணும்… ரீசேன்ட்டா ஒரு பேச்சாளர் வீடியோ பார்த்தேன்.. முதல்ல குழந்தைங்க உங்ககிட்ட இது வேணும் அது வேணும்னு கேட்ட நோன்னு சொல்லி வழங்க… இப்போ அவங்க கேக்குறத எல்லாம் நீங்க சரி சரின்னு சொல்லி வாங்கிக் கொடுத்தா பின்னாடி அவன் பெரியவன் ஆனதும் காதல் வந்து ஒரு பொண்ணுகிட்ட சொல்லும்போது அவ நோ சொன்ன அவனுக்கு அது மிக பெரிய ஏமாற்றமா இருக்கு.. அது தான் அவனை தப்பு செய்ய தூண்டுதுன்னு சொல்லியிருந்தாங்க..

அதே மாதிரி நீ முதல் ரேன்க் வாங்குனா சைக்கிள் வாங்கி தரேன் போன் வாங்கித் தரேன்னு இப்படி சொல்ல வேண்டியது இதையே தப்பு செய்யுறவங்க அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு தப்பு செஞ்சுட்டு இதை உங்க அம்மாட்ட சொல்லாதே சாக்லேட் வாங்கி தரேன்னு சொல்லி ஏமாத்துறாங்க.. பெற்றோர்கள் ஒரு நோக்கத்தோட செய்றதை தப்பு செய்யுறவன் வேற நோக்கத்திற்கு பயன்படுத்தி அந்த பிஞ்சுகளோட வாழ்கையை அழிச்சு ரணப்படுத்திடுறான்”

“ரித்து அஷ்வி இந்த குட்டியை  நாம நல்லா வளர்ப்போம் அஜய்.”

“ஆமா அனு கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிக்கனும் அரவணைக்க வேண்டிய நேரத்துல அரவணைக்கனும்.. தப்பு செஞ்சாலும் அதை ஒத்துக்கணும்.. பாரென்டிங் ரொம்ப முக்கியம். நாம அதை படிக்கணும் அனு”

“உங்களை மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நான் ரொம்ப புண்ணியம் செஞ்சுருக்கணும். என்னோட எல்லாமும் நீங்க தான்..” என்றவள் அவனின் இதழை சிறை செய்தாள்..

“லவ் யூ அனு” என்றவன் இப்பொழுது அவள் செயலை தனாதக்கி கொண்டான்..

உன் ஒற்றை சிரிப்பில்

உடைந்ததடா என் துன்பங்கள் யாவும்…

சிரித்துச் சிறையெடுக்கும் கலையைக்

கற்றுக் கொடுத்தது யாரோ?

உன் புன்னகைப் பூக்குவியலில்

நான் மறந்தேன் என் வாழ்வின்

ரணமாய் கடந்துச் சென்ற பக்கங்களை..

 

அனுவின் வாழ்க்கையில் இருந்த நெருப்பானப் பக்கங்களை நீக்கி அவள் வாழ்வை குளிர் பனியாக குளிர வைத்த அஜயின் அன்பில் அவள் நனைந்துக் கொண்டே இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை..

முற்றும்…..

 

Advertisement