Advertisement

மாற்றம் 7

EACH DAY OF OUR LIVES WE MAKE DEPOSITS IN THE MEMORY BANKS OF OUR CHILDREN

                             -CHARLES R.SWINDOLL

“ஹே படுத்தாதேடி.. என்னால முடியலை..” கையில் ப்ளேட்டுடன் மனைவியின் பின்னாலேயே சுத்திக் கொண்டே கூறினான் யாதவன்..

“என்னை எத்தனை நாள் டார்ச்சர் செஞ்சுருப்பீங்க.. இப்ப அனுபவிங்க..” என்றவள்ஒருகையைப் புத்தகத்திலும், மற்றொரு கையைத் தனது மேடிட்ட வயிற்றிலும் வைத்துக் கொண்டே மெல்ல நடந்துக் கொண்டிருந்தாள்..

“உனக்கு பசிக்கவே இல்லை தானே.. என்னைபழி வாங்க தானே இப்படி பின்னாடியே சுத்த விடுற?” அவன் சந்தேகமாகக் கேட்க

“இப்ப தான் அதுவே உங்களுக்குத் தெரியுதா?” என்றாள் சிரிப்புடன்..

“ரேணு..” அவன் பாவமாக இழுக்க, புத்தகத்தில் இருந்து பார்வையை விலக்காமலே

“ரேணு தான்.. ரேணுக்கு என்ன வெச்சுருக்கீங்க?” என்றாள்

“நீ தான்டி என்னை வெச்சு செய்யுற.. உன் புருஷன் பாவம்டிவிட்டுடேன்..”

“அன்னைக்கு சண்டைப் போட்டு,என்னை அழுக வெச்சீங்க தானே.. அனுபவிங்க..”

“அடியே.. அதுக்கு அப்பறம் உன் பேச்சுக்குத் தானே சரின்னு சொன்னேன்.. அதோட பலனா தானே இப்போ நீ ஏழு மாசமா இருக்க..” என்றான் அவள் வயிற்றில் கை வைத்தப்படி.. அவனின் கையில் அடித்தவள்

“என் பெர்மிசன் இல்லாம, என்னையோ, என் பேபியையோ டச் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல..”என்றவள்

“என்ன சரின்னு சொன்னீங்க.. ரெண்டு வருஷத்தை ஒரு வருஷம் ஆக்குனீங்க.. அதுக்கு நான் எவ்வளவு போராட வேண்டியிருந்தது..” என்று முகத்தை சுழித்தாள்..

அவள் இரண்டாவதாக கூறியதைக் காதில் வாங்காமல் முதலில் கூறியதற்கு மட்டும்

“அப்படி தான் டச் பண்ணுவேன்.. என்ன பண்ணுவ?” என்றதும், கையில் இருந்தப் புத்தகத்தால் அவன் தலையில் அடித்தாள் ரேணுகா..

“ஸ்.. ஆ.. வலிக்குதுடி குந்தாணி..”

“அத்தை உங்க பிள்ளை, என்னை குந்தாணி சொல்லுறார்..” என்று அவள் கத்த,

“ஹே.. ரேணு.. சும்மா இரு..” அவன் கூறியும் அவள் கேட்காமல் மேலும் சத்தமாகக் கத்தினாள்..

“கத்தாதேன்னு சொல்லுறேன்ல.. எங்கயாச்சும் பிடிச்சுக்கப் போகுது ரேணு..” அவன் சற்று அதட்டவே, வாயை மூடினாள்..

அதன்பின் வாயாடாமல் அவன் கொடுத்த உணவை உண்டவள், மாடிப் படியை நோக்கி நடந்தாள்.. அவள் அருகில் வந்த யாதவன், அவள் கையைப் பிடித்துக் கொண்டு இறங்குவதற்கு உதவி செய்தான்..

“உடனே படுக்காதே.. கொஞ்ச நேரம் ரூம்லையே நடந்துட்டு இரு.. நான் சாப்டுட்டு வந்துடுறேன்..” என்றவன்தாயுடன்சேர்ந்து உண்டான்..

“எதுக்குடாரேணு கத்துனா?” சாரதா கேட்க,

“அந்த லூசுக்கு வேற வேலை இல்லை.. சும்மா என்னை உங்ககிட்ட மாட்டி விடுறேன்னு கத்திகிட்டு இருந்தா..”

“பிள்ளைத்தாச்சி பொண்ண, லூசுன்னு சொல்லாதேடா..” என்றவர் மகனின் தோளில் லேசாக அடித்தார்..

“அடிங்க அடிங்க.. எல்லாருக்கும் நான் இலப்பமா போயிட்டேன்ல..”

உணவை உண்டுவிட்டு அறைக்குச் சென்றான்.. அப்பொழுதும் ரேணு அந்தப் புத்தகத்தையே படித்துக் கொண்டிருந்தாள்..

“ப்ச்.. நானும் பார்த்துகிட்டே இருக்கேன்.. ஈவ்னிங்ல இருந்து புக்கும் கையுமா இருக்க.. கொடு” என்று அவளிடம் இருந்து அதைப் பறித்தான்..

அவள் படித்துக் கொண்டிருந்தது parenting with love and logic என்கிற புத்தகத்தை..

“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு யாதவ்.. கொடுங்களேன்.. பிளீஸ்..” கண்ணைச் சுருக்கிக் கொண்டு அவள் கெஞ்ச

“ஏதோ கதைப் புக்கைப் படிக்குற மாதிரி இல்ல கேக்குற..” என்றவன்“இதெல்லாம் படிக்காமையே நீ நம்ம பொண்ண நல்லா தான் வளர்ப்ப.. இன்னும் ரெண்டு நாள்ல உங்க ஊருக்குப் போயிடுவ.. அங்க போய் இதைப் படிச்சுக்கோ..” அவன் கூறிக் கொண்டிருக்கும் போது கணவனின் கையை எடுத்து வயிற்றில் வைத்தவள்

“இன்னைக்குநிறையா டைம் உதைச்சுட்டா..” என்றாள் சந்தோஷத்துடன்..

“அப்பா கூடவே இருக்கேன்ல அதான்..”

“ஆமா ஆமா..”

அவளை நெருங்கி அமர்ந்துக் கொண்டவன், அவள் கையைப் பிடித்துக் கொண்டு

“உங்க வீட்டுக்கு போனதும், ஒழுங்கா இரு.. டென்சன் ஆகாதே.. எனக்கு பயமாவே இருக்கு.. நீ சண்டைப் போட்டு, கெஞ்சி, கொஞ்சி, பேபி வேணும்னு ஒரே பிடியா இருந்து சாதிச்சுட்ட.. டெலிவெரி டைம்ல பார்த்து இருந்துக்கோ.. ரொம்ப சின்ன வயசு..” என்றதும் அவனை முறைத்தாள்

“கொன்றுவேன்.. இருபத்திநாலு வயசு உங்களுக்கு சின்ன வயசா.. எல்லாம்பிள்ளைப் பெத்துகிற வயசு தான்..” என்றவள்பின் நியாபகம் வந்தவளாக

“நான்வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒரு குட்டி ஜாயின் பண்ணான்னு சொன்னேன்ல நியாபகம் இருக்கா?” என

“ம் இருக்கு..” என்றான் யாதவன்..

“அவளுக்கு சரி ஆகிடுச்சுங்க.. இப்போ நார்மல் ஸ்கூல்ல சேர்க்கப் போறாங்க.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது.. பிறக்குற குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா பிறக்கணும்னு நினைக்காம, ஆம்பளைப் பிள்ளை தான் வேணும்னு இன்னும் சிலர் ஆசைப் படுறாங்க.. அப்படி இருக்க உலகத்துல ஆடிசம்னால பாதிக்கப் பட்ட தன்னோட பொண்ண கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்குற அம்மாவை நினைச்சா எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்றவளின் குரலிலும் அது அப்பட்டமாய் தெரிந்தது..

                                   ****************

ஐந்து வருடங்களுக்குப் பிறகு..

“பாரதி.. புக்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டியா?” என்றயாதவனின் கேள்விக்கு 

“எடுத்துட்டேன்பா..” என்று கூறிய பாரதி, பாட்டியோடு சேர்ந்து பூஜை அறைக்குச் சென்று கண்களை மூடி சாமி கும்பிட்டுவிட்டு, தந்தையிடம்

“அம்மா இன்னைக்கு வந்துடுவாங்க தானே?” என்றாள் ஏக்கமாக

“ஆமாடா.. வந்துடுவாங்க.. நீங்க ஸ்கூல்ல இருந்து வரும் போது அம்மா இருப்பாங்க..” மகளின் தலையை கோதியவாறே கூறினான்..

“ஓகே ப்பா..” என்றவள் தந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்து, பாய் சொல்லிவிட்டு பாட்டியுடன் பள்ளிக்குச் சென்றாள்.

ரேணுகாஆடிசம் குழந்தைகளைப் பற்றிய மாநாடு ஒன்றிருக்காக வெளியூருக்கு சென்றிருந்தாள்.. அவள் சென்று ஒரு வாரம் ஆகியிருந்தது.. தாயை இவ்வளவு நாள் யுகபாரதி பிரிந்ததில்லை.. அதனாலேயே அவள் தந்தையிடம் இப்படிக் கேட்டது..

அங்கே அவள் மாநாட்டில் பேசிக் கொண்டிருந்தாள்.. நிருபர் ஒருவர் ஆடிசம் குழந்தைகளைப் பற்றி கேள்விக் கேட்க

“ஆட்டிசத்தால பாதிக்கப் பட்ட குழந்தைங்க எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வீக் பாய்ன்ட் இருக்கும்.. நாம அதைக் கண்டுபிடிச்சு அவங்க லெவலுக்கு ஏத்த மாதிரி ட்ரைன் பண்ணனும்..

ஆடிசம்லநிறையா வகை இருக்கு.. ரெட் சின்றோம், பெர்வசிவ் டெவலப்மெண்டல் டிசாடர், அஸ்பெர்கஸ் சின்றோம்.. இதுல அச்பெர்கஸ் சின்றோம் உள்ள பிள்ளைங்க, நல்லா பேசுவாங்க.. லேர்னிங் மட்டும் கொஞ்சம் புரியாது.. 

இதுலஎல்லா வயசு உள்ளப் பிள்ளைங்களும் இருக்காங்க.. முதல்ல அவங்களுக்கு நம்ம சொல்லிக் கொடுக்க வேண்டியது, அவங்களோட அத்தியாவசிய தேவைகள்.. பிரஷ் பண்றது, டாய்லட் யூஸ் பண்றது, குளிக்கிறது.. இதை சொல்லிக் கொடுப்போம்..

அவங்கப் பிஹேவியர அடாப்டிவ், மால் அடாப்டிவ் ன்னு சொல்லுவோம்.. அடாப்டிவ் சில்றன்ஸ் நம்ம சொல்லிக் கொடுக்கிறதை மட்டும் சரியா செய்வாங்க.. மால் அடாப்டிவ் உள்ளவங்க, தன்னை தானே அடிச்சுக்கிறது, கிள்ளிக்கிறது, கையைக் கடிச்சுக்கிறது..இந்த மாதிரி ஆக்டிவிட்டிஸ் செய்றவங்க..

ஒரு சிலர் விசுவல் லேனரா இருப்பாங்க.. எல்லாத்தையும் விசுவலா சொல்லிக் கொடுத்தா அதை கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுப்பாங்க.. சும்மா வாய்ல சொல்லிக் கொடுத்தா, அவங்க அதை கேட்டுக்க மாட்டாங்க.. சிலர் ஆடிட்டரி லேர்னிங், டச்சிங் லேர்னிங்கா இருப்பாங்க.

அவங்கஎந்த மாதிரி லேர்ன் பண்றாங்கன்னு நம்ம தெரிஞ்சுகிட்டு அது படி சொல்லிக் கொடுக்கணும்..”

“இந்தக் குழந்தைங்களோட பேரண்ட்ஸ் எல்லாரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?” என்று ஒருவர் கேட்க

“நூத்துக்கு பத்து பேர் தான், மனசைத் திடப் படுத்திகிட்டு குழந்தைகளுக்கு ட்ரீட்மெண்ட்ல உதவி செய்றாங்க.. மீதி தொண்ணூறு பேர், நம்ம பிள்ளைக்கு இப்படி ஆகிடுச்சேன்னு விரக்தி ஆகிடுவாங்க..

இது வியாதி இல்லை.. குறைப்பாடு தான்னு மக்களுக்குப் புரிஞ்சாலே போதும்.. இந்த மாதிரி இருக்க குழந்தைங்களை, ஏதோ பைத்தியம் மாதிரி மத்தவங்க பார்க்குறதுனால தான் பெத்தவங்களுக்கு தன்னோட குழந்தைக்கு இந்த குறைப்பாடு இருக்குன்னு தெரிஞ்சதும் மனசொடஞ்சு போயிடுறாங்க..”

“இந்த குறைபாடு இருக்குன்னு எத்தன வயசுல கண்டுப்பிடிக்க முடியும்?”

“ஒன்றரை வயசுலையே இதை கண்டுப் பிடிச்சுடுலாம்.. சாதரணமா எட்டு  மாசத்துலையே குழந்தைங்க உக்கார ஆரம்பிச்சு, ஒரு வயசுல நடக்கவும், இரண்டு வயசுக்குள்ள பேசவும் ஆரம்பிச்சுடுவாங்க..

குறைபாடு உள்ள குழந்தைங்க ஒன்றரை வயசு வரை உட்காராம இருக்கும்.. இதை வெச்சே நம்ம கண்டுப்பிடிச்சுடலாம்.. சிலர் இதை பெருசா எடுத்துக்காம விட்டுடுவாங்க.. எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சு ட்ரீட்மெண்ட் கொடுக்குறோமோ, அவ்வளவு சீக்கிரம் அவங்களுக்கு குணம் ஆகிடும்..”

“சராசரியா எத்தனை வருஷம் ஆகும்?”

“டைம் லிமிட் நம்மால சொல்லவே முடியாது.. சிலருக்குரெண்டு வருஷத்துல சரி ஆகும்.. சிலருக்கு அஞ்சு வருஷம் கூட ஆகும்.. அதுவும் நம்ம சின்ன வயசுலையே கண்டுப் பிடிச்சா தான்.. பத்துப் பதினெஞ்சு வயசுல கண்டுபிடிச்சா ட்ரீட்மெண்ட் கொடுக்கிறது ரொம்ப கஷ்டம்..

சிலர் அவங்க பசங்களுக்கு இந்த குறை இருக்குன்னு தெரிஞ்சும் ட்ரீட்மெண்ட் கொடுக்காம இருக்காங்க.. அவார்நெஸ் ரொம்ப கம்மியா இருக்கிறது தான் இதுக்கு காரணம்..

நம்ம நாட்டுல நூத்துல ஒரு குழந்தைக்கு ஆடிசம் குறைபாடு இருக்கு.. ஒருவருஷத்துக்கு கோடிக்காணக்கான குழந்தைங்க இதுல பாதிக்கப்படுறாங்க..”

“எதுனால இந்த குறைபாடு வருதுன்னு நினைக்கிறீங்க?”

“ஜெனிடிகல் ப்ராப்ளம், நம்ம சுற்றுச்சூழல் பதிப்பு, இயற்கையை விட்டுட்டு கெமிகல்ஸ் பொருட்களை யூஸ் பண்ணுறது.. பேக்டிரில இருந்து வர ரசாயன கழிவு.. இப்படி பல பிரச்சனைகள் இதுக்கு காரணம்..”

“ரொம்ப நன்றி மேம்..” என்று நிருபர், கேமராவின் புறம் திரும்பி

“ஆடிசம் என்பது வியாதி அல்ல குறைபாடு மட்டுமே.. அதனால் பாதிக்கப் பட்ட குழந்தைகளை, நம்மில் ஒருவரைப் போல் பாருங்கள்.. மனநிலை குன்றியவர்களாகப் பார்க்காதீர்கள்.. முறையான சிகிச்சை இருந்தால் இதை விரைவிலேயே குணப்படுத்த முடியும்.. வெளிநாடுகளில் பல ஆராய்ச்சிகள் இதற்காக நடந்துக் கொண்டிருக்கிறது.. நமது நாட்டிலும் ஆராய்ச்சி செய்ய இந்திய அரசு உதவ வேண்டும்.. முடிந்த அளவிற்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்துவோம்.. நன்றி..” என்று கூறி முடித்தார்..

                                ***********

மாநாடு முடிந்து வீட்டிற்கு வந்தவள் மகளுடனும் மாமியாருடனும், ஒரு வாரக் கதையைப் பேசிக் கொண்டிருந்தாள்.. சாரதாயுகபாரதி பிறக்கும் சமயமே ரிட்டயர் ஆகியிருந்தார்.. நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அவரும் ரேணுகா வேலை செய்யும் ஸ்பெஷல் ஸ்கூலிற்கு சென்று தன்னால் ஆன உதவியை செய்வார்..

பாரதி lkg சென்றதும், யாதவன் சைல்ட் கேர் ஆரம்பிப்போமா என்று மனைவிடம் கேட்க அவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

“உன்னோடஆசை அது தான்னு சொன்ன.. இப்போ ஏன் வேண்டாம்ன்னு சொல்லுற?”

“நார்மலா இருக்க குழந்தைங்களப் பார்த்துக்க ஆயிரம் பேர் வருவாங்க.. ஸ்பெஷல் சில்ரென்சை பார்த்துக்க யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டுறதில்லை.. ரெண்டு வருஷம் அங்க வொர்க் பண்ணதுல, லைப் லாங் என்னால முடிஞ்ச ஹெல்ப்அவங்களுக்குப் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்..” என யாதவனும் அவளின் ஆசைக்குச் சரி என்று கூறிவிட்டான்..

அவன் அலுவலகத்தில் இருந்து வந்ததும், டின்னரை முடித்துக் கொண்டு நால்வரும் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க சென்றனர்.. பாரதியை, சாரதா அவருடன் படுக்க அழைத்துச் சென்றுவிட்டார்..

கணவனிடம் இன்று பேசியதை எல்லாம் கூறியவள்

“எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்.. தேங்க் யூ..” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஹே.. நான் என்ன பண்ணேன்..” அவன் ஆச்சரியமாக வினவ

“என்னோட எல்லா ஆசைக்கும் மதிப்புக் கொடுத்து, நான் வேலைக்குப் போகலைன்னு சொன்னப்பப் போன்னு என்னை என்கரேஜ் செஞ்சு இந்த ஸ்கூல்ல சேர்த்துவிட்டது..”

“இது ஒரு விஷயமா?”

“உங்களுக்கு இது பெரிய விஷயமா இல்லாம இருந்திருக்கலாம்.. இதையே எங்க அப்பா கிட்டக் கேட்டிருந்தா கேவலமா திட்டிருப்பார்.. ஆம்பளைங்க இப்படி தான் அவங்க நினைக்கிறதை தான் நம்மளைச் செய்ய விடுவாங்கன்னு எங்க வீட்டுல இருந்த வரை நினைச்சுட்டு இருந்தேன்.. அது அப்படி இல்லைன்னு நீங்க ப்ரூவ் பண்டீங்க..

இந்த வேலைல எனக்கு எவ்வளவு நிம்மதி கிடைக்குது தெரியுமா? எங்க ஸ்கூல்ல இருந்து ஒரு ஒரு குழந்தைங்க சரியாகி நார்மலா போகும்போது எதையோ சாதிச்சுட்ட திருப்தி.. டீச்சரா இருந்து ஸ்டுடென்ட்சுக்கும் பேரண்ட்சுக்கும் அட்வைஸ் சொல்லிக் கிட்டு இருந்த என்னை, இப்போஒரு டாக்டரா மாத்திருக்கீங்க.. இன்னும் ரெண்டு வருஷத்துல நான் டாக்டர் ரேணுகா ஆகிடுவேன்..”

ஆம் இப்பொழுது ரேணுகா, phd படித்துக் கொண்டிருக்கிறாள்.. வீட்டில் இருந்தப் படியே msc யை படித்தவள், பிரேமாவின் கைடன்சில் phd சேர்ந்தாள்..

“என் லைப்பல ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது நீங்க தான்.. லவ் யூ டு தி கோர்..” என்றவள் கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்..

கணவனின் துணையுடன் அவள் வெற்றியை நோக்கிச் செல்வாள் என்கிற நம்பிக்கையில் உங்களுடன் இருந்து விடை பெறுகிறேன்..

Advertisement