Advertisement

 

மாற்றம் 6

THE BEST SECURITY BLANKET A CHILD CAN HAVE IS PARENTS WHO RESPECT EACH OTHER..

-JANE BLAUSTONE

“மூணு நாள் ஆச்சு நீ ஸ்கூலுக்கு போய்.. இன்னைக்காச்சும் போறதா ஐடியா இருக்கா இல்லையா?” யாதவன் மனைவியிடம் கேட்க,

“எனக்குப் பிடிக்கலை..” என்றாள் ரேணுகா..

“என்னப் பிடிக்கலை?”

“ப்ச்.. சும்மா தெரியாத மாதிரி கேட்காதிங்க.. என்னால இனிமே அங்க வேலைக்குப் போக முடியாது..”

“அந்த ஸ்கூலுக்குப் போக மாட்டியா? இல்லை வேலைக்கே போக மாட்டியா?”

“ஏன் நான் வேலைக்குப் போனா தான் என்னை இந்த வீட்டுல இருக்க விடுவீங்களா?” என்றாள் இடக்காக..

“ரேணு.. லூசு மாதிரி பேசாதே.. நீயா தான் வேலைக்குப் போறேன்னு சொன்ன.. நான் உன்னை கம்பெல் பண்ணல..” என்றவனின் குரலில் சிறிது கோபம் எட்டிப் பார்த்தது..

“அப்பறம் என்ன? நான் தானே இப்பவும் போகலைன்னு சொல்லுறேன்.. விடுங்க..”

“ஒரு வேலையை எடுத்தா, அதைப் பொறுப்பா முடிக்கணும்.. இப்படி பாதில விடக்கூடாது.. அந்தப் பொண்ணுக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு, நீ வேலைக்குப் போகாம இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா?”

“..”

“கிளம்பு முதல்ல.. நான் உன்னை ட்ராப் பண்றேன்..”

“யாதவ்.. பிளீஸ்..” என்று அவள் கெஞ்ச

“கிளம்புன்னு சொன்னா கிளம்பு..” என்றவன், அவனின் அலுவலகத்திற்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.. அவள் ரெடி ஆகி வரவே அவளை பள்ளியில் இறக்கிவிட்டவன்

“எதையும் நினைக்காம, வேலையை ஒழுங்கா பாரு..” என்று கூறி விடைப் பெற்றான்..

பள்ளிக்குள் சென்றதுமே பிரேமா இவளின் உடல்நலனைப் பற்றி விசாரித்தார்.. பின்

“பக்கத்துல இருக்க ஸ்கூல்ல என்னை இன்னைக்கு கெஸ்டா கூப்பிடிருக்காங்க.. நீங்களும் என்னோட வாங்க..” என்று அவளையும் உடன் அழைத்துச் சென்றார்.. அவளின் மனநிலை அவருக்கு நன்றாகப் புரிந்தது.. அதை மாற்றுவதற்காகவே அவளை உடன் அழைத்துச் சென்றார்..

“ஹாய் ஸ்டுடென்ட்ஸ்.. குட் ஆப்டர்நூன்” என்றதும், மாணவர்கள் கோரசாக மதிய வணக்கம் சொன்னனர்..

“மதியம் இருக்குற கிளாஸ்ல இருந்து எல்லாரும் எஸ்கேப் ஆகிட்டீங்க..” என்று கூறி சிரிக்க, மாணவர்களும்“யஸ் மேம்” என்று சிரித்தனர்..

“யாருக்காச்சும் கிளாஸ் மிஸ் ஆகிடுச்சேன்னு வருத்தமா இருக்கா?” என்று கேட்க, சில மாணவர்கள் கையைத் தூக்கினர்..

“என்ன கேமேஸ் பீரியட் கட் ஆகுதா?” என்றதும் மறுபடியும் மாணவர்களின் மத்தியில் ‘யஸ் மேம்’ என்று சத்தம் எழுந்தது..

முதலில் அவர்களிடம் பொதுவாக பேசிக் கொண்டேப் போனவள், மெது மெதுவாக விஷயத்திற்கு வந்தார்..

“யார் யார் எல்லாம், ஸ்கூல்ல நடக்கிறதை வீட்டுல போய் அம்மா அப்பா கிட்டச் சொல்லுவீங்க?” பாதி பேர் கையை உயர்த்தினர்..

“50 பெர்சன்ட் தான் இங்க நடக்கிறதை வீட்டுல சொல்லுறீங்க.. மீதி 50 பெர்சென்ட் சொல்லுறதில்லை.. அதுக்கு ரீசன் என்ன?” என்று கேட்டவள், இரண்டு எட்டு நடந்தாள்.. பின் “சிலரோட பேரண்ட்ஸ்ரெண்டு பேருமே வொர்க் பண்ணுவாங்க.. அவங்க வரதே லேட் அதுனால சொல்ல முடியாம இருக்கும்.. இன்னும் சிலர், எங்க கிளாஸ்ல நடந்ததை சொன்ன, மிஸ் கிட்ட ஹோம்வொர்க் பண்ணாம திட்டு வாங்குனதையும் சொல்லனுமேன்னு பயந்துட்டு சொல்லாம இருப்பீங்க..

சரியோ தப்போ, நம்ம அம்மா அப்பா கிட்ட இருந்து எந்த விஷயத்தையும் மறைக்கக் கூடாது.. வொர்க் பண்ற பேரண்ட்சா இருந்தா, சண்டே லீவ் தானே, அன்னைக்கு ஒன் வீக் நடந்த எல்லாத்தையும்ஷார்டா சொல்லுங்க..

அவங்க கிட்ட இருந்து நீங்க எதை மறைக்கணும்னு நினைக்கிறீங்களோ, அதை செய்யவே செய்யாதிங்க.. மறைக்கணும்னு நினைச்சுட்டாலே அங்க நம்ம ஏதோ தப்பு பண்ணுறோம்ன்னு தான் அர்த்தம்..

இதுலபாதி பேருக்கு மேல ஓன் மொபைல் வெச்சுருப்பிங்க.. இந்த வயசுல நமக்கு மொபைல் தேவையான்னு கொஞ்சம் யோசிங்க.. எல்லா பிரச்சனையும் இப்போ உங்களுக்கு இந்த மொபைல்னால தான் வருது.. காலேஜ் போனதும் அதை தாராளமா யூஸ் பண்ணுங்க.. இப்போ ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் கிட்ட படிப்பு சமந்தமா எதாச்சும் டவுட் கேட்கனும்னா மட்டும் அதை யூஸ் பண்ணுங்க..” என்று நிறுத்தியவள் மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு“ரொம்ப மொக்கப் போட்டுடேனோ.. சரி இதோட ஸ்டாப் பண்ணிடுறேன்.. என்ன பிரச்சனையா இருந்தாலும் அம்மா அப்பா கிட்ட மறைக்காம சொல்லிடுங்க.. ஓகே” என்றாள்

                             *******************

இரவில் லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்த கணவனிடம் மிகவும் நெருங்கி நெருங்கி அமர்ந்துக் கொண்டவளை விசித்திரமாகப் பார்த்த யாதவன் “என்ன மேடம் கிட்ட கிட்ட வந்துட்டு இருக்கீங்க.. கியா மேட்டர்?” என

“மேட்டர் தான் மேட்டர்..” என்று மெல்ல முணுமுணுத்தாள்..

“என்ன?” என்று அவன் அதிர்ச்சியாக

“அச்சோ.. கேட்டுடுச்சா?” என்றாள் நாக்கைக் கடித்துக் கொண்டே

“கேட்டுடுச்சு கேட்டுடுச்சு.. வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சே உனக்கு..”

“இருந்துட்டு போகட்டும்..” என்றவள் அவன் லேப்பை பிடிங்கினாள்.

“வொர்க் இருக்கு ரேணு.. விளையாடதே..” அவள் கையில் இருந்து லேப்பை வாங்கினான்..

“அதெல்லாம் ஆபிஸ்ல பார்த்துக்கோங்க.. உங்களோட சரியா பேசியே ரொம்ப நாள் ஆச்சு..”

“டென் மினிட்ஸ் முடிச்சுட்டு வந்துடுறேன்..”

“ஒன்னும் வேண்டாம்..”  மறுபடியும் அவன் கையில் இருந்து லேப்பை அவள் பிடுங்க போக

“ரேணு.. கொஞ்ச நேரம்டா.. ப்ளீஸ்..”

“நான் எல்லாருக்கும் பக்கம் பக்கமா உபதேசம் பண்ணுறேன்.. வீட்டுல இருக்கவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்கன்னு.. ஆனா எனக்குன்னு வந்து வாய்க்குறாங்க..” என்று புலம்பியவள், ஹெட்போனுடன் பால்கனியில் சென்று அமர்ந்துக் கொண்டாள்..

பதினைந்து நிமிடத்தில் தனது வேலைகளை முடித்தவன், மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான்.. அவள் அவனைக் கண்டுக் கொள்ளவில்லை என்றதும், அவளின் ஒரு காதில் இருந்து ஹெட்செட்டை எடுத்து அவன் காதில் மாட்டிக் கொண்டான்..

தெய்வம் தந்த பூவே பாடல் ஓடிக் கொண்டிருந்தது.. அதை அவனும் ரசித்துக் கொண்டிருந்தான்.. அதன் பின், கண்கள் நீயே பாடல் ஓடியது..

“என்னங்க டீச்சரம்மா, ஒரே அம்மா குழந்தைங்கப் பாட்டா கேட்குறீங்க?” அவளைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டே அவன் கேட்க

“ம்” என்று அவனை முறைத்தவள் “கேட்க மட்டும் தான் முடியுது.. வேறஒன்னும் தான் நடக்க மாட்டுதே..” என்றதும், அவன் சிரித்து விட்டான்..

“அடியே.. இன்னைக்கு நீ என்ன ரொம்ப கிரீன் கிரீனா பேசுற? பேட் கேர்ள்”

“போடா லூசு..” அவனை அடித்துவிட்டு அங்கிருந்த அவள் எழப் போக, அவளை இழுத்து அவன் மேல் அமர வைத்துக் கொண்டவன்

“என்ன வேணும் இப்போ உனக்கு?” என்றான் சிரித்துக் கொண்டே

“சிரிக்காதடா.. கோபமா வருது.. “ மீண்டும் அவனை அடித்தாள்.

“ரேணு.. மேரேஜ் ஆகி ஆறு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள பேபி வேணுமா? ரெண்டு வருஷம் போகட்டுமே..”

“என்னது ரெண்டு வருஷமா?” அவள் அதிர்ச்சியாக

“ஆமா ரேணு.. நம்மளே இன்னும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கலை.. நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரட்டும்..”

“என்ன அண்டர்ஸ்டாண்டிங் வரலை.. நான் உங்களைப் புரிஞ்சுக்கலையா?” என்றாள் கோபமாக.

“லூசு மாதிரி பேசாதே.. பேரன்டிங் பத்தி பக்கம் பக்கமா பேசுற? ஊருக்கு தான் உபதேசம்.. இருபத்தி மூணு வயசுலையே அம்மா ஆகி என்னப் பண்ணப் போற? முதல்ல நம்ம பேபிக்கு மனசளவுல தயார் ஆகணும் ரேணு..”

“என்ன தயார் ஆகனும்.. நான் தினமும் எத்தனப் பிள்ளைங்களப் பார்க்குறேன்.. என் குழந்தையை எனக்குப் பார்த்துக்கத் தெரியாதா?”

“நீ நார்மலா தான் இருக்கியா? கொஞ்ச நாள் நான் உன்னோட மட்டும் இருக்கணும்னு நினைக்கிறன்.. குழந்தைவந்துட்டா, அதை கவனிக்கனும் அது இதுன்னு நம்ம ரெண்டு பேரும் டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியாது..

“எல்லாரும் ஒரே மாதிரி தான்.. அப்பால இருந்து புருஷன் வரை.. உங்க ஆசையை தான் என் மேல திணிக்கிறீங்க.. என் ஆசைக்கு மதிப்பே இல்லை..” கோபமாகக் கத்திவிட்டு அங்கிருந்துச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

“ரேணு..” என்று அவன் கத்தியதை அவள் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை..

Advertisement