Advertisement

மாற்றம்4

NOBODY EVER BECOMES AN EXPERT PARENT. BUT I THINK GOOD PARENTING IS ABOUT CONSISTENCY.  IT’S ABOUT BEING THERE AT BIG MOMENTS, BUT IT’S ALSO JUST THE CONSISTENCY OF DECISION MAKING.  AND IT’S ROUTINE..

                                      -SEBASTIAN COE

“அடிப்பாவி என்னை மிசஸ் மாமா, மிசஸ் மாமான்னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, கடைசில நீ தான்டி எனக்கு மிசஸ் மாமா ஆகிட்ட..” போனில் தோழியிடம் கூறினாள் சிந்து.

சிந்து, அடிக்கடி ரேணுவிடம் கூறுவாள். ‘உன் கசின் தருண் சுப்பரா இருக்கார்டி.’ என்று.. ரேணுவும் அவளை அதை வைத்து கிண்டல் செய்வாள்..

தருண் அவளிற்கு மாமா, அவனை இவள் சைட் அடிப்பதால் அவனின் பெயரை வைத்து முதலில் ஓட்டிக் கொண்டிருந்தவள், பின் சற்று வித்தியாசமாக யோசிப்போம் என்று மாமாவின் மனைவி ஆகினாள், சிந்து மிசஸ் மாமா தானே.. அதனால் அவள் அவ்வாறு கூறி அவளைக் கலாய்பால்.

இப்பொழுது, சிந்துவின் மாமாவான யாதவனை, ரேணுவிற்குப் பேசி முடித்ததால் இவள்அந்தப் பெயரைக் கொண்டு தோழியைக் கேலி செய்கிறாள்.

“என்னடி சைலன்ட் ஆகிட்ட.. இனி நான் தான் உன்னை மிசஸ் மாமான்னு கூப்பிடுவேன்..” என

“போடி..”

“ஆஹான்.. வெட்கமா?”

“அடியே சும்மா இரு..”

“அத்தையும் அம்மாவும் வராங்க மதுரைக்கு..”

“ம் நேத்து போன் பண்ணாங்க.” என்றவர்களின் பேச்சு சைக்காலஜி பற்றி சென்றது.. சிந்துவிடம் சில சந்தேகங்களைக் கேட்டு அறிந்துக் கொண்டாள் ரேணுகா..

“ஓபன் டே எப்படி போச்சு?” சிந்து கேட்க

“அந்த கொடுமையை ஏன் கேட்குற.. என்னால முடியலை.. எல்லா பேரன்ட்சுமே அவங்க பசங்க ப்ர்ஸ்ட் வரணும்னு நினைக்கிறாங்க.. இது எப்படி நடக்கும்..”

“ஆல் பேரண்ட்ஸ் ஆர் சேம் இல்ல.. அப்ப இருந்து இப்ப வரை.. நம்மளும் futureல அப்படி ஆகிடுவோமோ?”

“ஹாஹா.. மே பீ.. ஏதோ ஒரு மூளைல நமக்கும் நம்ம பிள்ளை தான் எல்லாத்துலையும் முதல் ஆளா வரணும்னு ஆசை இருக்கும்.. அதை நம்ம தான் முலையிலயே கிள்ளி எறியணும்.. எல்லாராலயும் எல்லாத்துலயும் ப்ர்ஸ்டா வர முடியாது.. ஏதோ ஒண்ணுல திறமைசாலியா இருப்பாங்க.. அந்த ஒன்னு என்னன்னு நம்ம கண்டுப்பிடிக்கிறதுல தான் இருக்கு..”

“டீச்சரம்மா மொக்கைப் போட ஆரம்பிச்சுட்டா நான் போனை வைக்குறேன்.. பாய்..”

“போடி.. பாய்..” என்றுபோனை வைத்தவளின் எண்ணம் முழுவதும் அன்று பேரண்ட்ஸ் மீட்டிங்கிற்கு சென்றது..

முதலில் மீட்டிங் ஆரம்பித்ததும், தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் உரையாடினார்.. பின்னர் ரேணுகா மாணவர்களின் மனநிலையைப் பற்றியும், பெற்றோகளின்வளர்ப்புப் பற்றியும் சிறிது நேரம் பேசினாள்..

“IQ டெஸ்ட்.. இதை பல பேரண்ட்ஸ் பிள்ளைங்களுக்கு எடுக்க சம்மதிக்கிறதே இல்லை.. என் பிள்ளை என்ன அறிவில்லாதவனா, அவனுக்கு எதுக்கு IQ டெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கிறாங்க.. மெயினா இந்த டெஸ்ட் எதுக்கு எடுக்குறோம்னா குழந்தைகளோட ரீசனிங் எபிலிட்டி எப்படி இருக்குன்னு கண்டுப்பிடிக்க தான்..

ஒரு பிரச்சனை வந்தா அவங்க எப்படி அதை சமாளிப்பாங்க.. அதுக்கு எந்த மாதிரி predictions எடுப்பாங்க, logical ஆ எப்படி திங் பண்ணுறாங்க,short and long term memory, how they solve puzzles and recall information they have heard, எவ்வளவு வேகமா அவங்க முடிவு எடுக்குறாங்கன்னு, இந்த டெஸ்ட் வெச்சு நம்ம கண்டுப் பிடிக்கலாம்..

எல்லாரோட iq லெவலும் ஒரே மாதிரி இருக்கும்னு நம்மால சொல்ல முடியாது.. everyone can learn. அவங்க லேர்ன் பண்ணதை எவ்வளவு தூரம் நியாபகம் வெச்சுருக்காங்க அது தான் இம்பார்டன்ட்..

சிலருக்குஒரு தடவை சொன்னாலே புரிஞ்சிடும்.. சிலருக்குரெண்டு மூணு தடவை சொன்னா தான் புரியும்.. அது யார் யார்ன்னு கண்டுப்பிடிக்க இந்த மெத்தட் யூஸ் பண்ணோம்.. அண்ட் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட தனி தனியா சில questions கேட்டு அதுல இருந்து அவங்க மனநிலை எப்படி இருக்குன்னு செக் பண்ணோம்..

பாதிக்கு மேல இருக்க பிள்ளைங்களோட மனநிலை தனிமை தான்.. இந்த காலத்துல ரெண்டு பேரும் ஜாப்க்கு போனா தான் லைப்பை ரன் பண்ண முடியும்.. அதை நான் ஒத்துக்குறேன்.. பட் வீட்ல இருக்குற கொஞ்ச நேரம் நீங்க உங்கப் பசங்கக் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்..

நீங்க அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணாமா இருக்கிறதுனால தான் அவங்க மொபைல், லேப், டிவின்னு அவங்க பொழுதைப் போக்கிகிறாங்க.. இன்னும் நிறையாவே இருக்கு.. acutually அவங்களை நாங்க தனியா கூப்பிட்டுப் பேசுனதுக்கு ரீசன், அவங்களோட இன்ரெஸ்ட் என்னன்னு தெரிஞ்சுக்கத் தான்..

அவங்க ஆசையை வெச்சு எந்த எக்ஸ்ட்ரா கரிகுலர்ல போடலாம்ன்னு டிசைட் செஞ்சிருக்கோம்.. பட் சில பேரண்ட்ஸ் நாங்க சொல்லுற எக்ஸ்ட்ரா கரிகுலர்ல போடுங்கன்னு சொல்லுறீங்க.. படிப்பு தான் நம்ம கட்டாயப் படுத்தி அவங்களைப் படிக்க வைக்கிறோம்.. அட்லீஸ்ட் எதுலயாச்சும் அவங்க விருப்பபடி இருக்கட்டுமே” என்றவள் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

பின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஒவ்வொரு பாட ஆசிரியரையும் சந்திக்கச் சென்றனர்.. சிலர் மட்டுமே ரேணுகாவிடம் தனிப்பட்ட முறையில் வந்து தங்கள் பிள்ளையின் மனநிலையைப் பற்றிக் கேட்டனர்.. பலர் மைக் கிடைத்தால் இவள் என்ன வேண்டுமென்றாலும் பேசுவாள் என்கிற ரீதியில் அவளை கண்டுக் கொள்ளவே இல்லை..

அதை இப்பொழுது நினைத்துப் பார்த்தவள் பெருமூச்சுடன் எழுந்து சென்றாள்.

                                   **************

நிச்சயதார்த்தப் புடவையை எடுக்கத் தாயுடன், சாராதா கூறியக் கடைக்கு வந்தாள் ரேணுகா.. இவர்கள் வந்த பத்து நிமிடத்தில் சாரதாவும், சிந்துவின் தாயும் வந்தனர்.. சம்பிருதாய நல விசாரிப்புகளுக்கு பின், உடையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர்..

“இது நல்லா இருக்கான்னு பாரு..” என்று தன் கையில் இருந்த சேலையை ரேணுகாவின் மேல் வைத்துப் பார்த்தார் சிந்துவின் தாய்..

“நல்லா இருக்கு ஆண்ட்டி..” தன் மேல் வைத்தப் புடவையை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே கூறினாள் ரேணுகா..

“உனக்குப் பிடிச்சதை பாரு.. இதை எடுத்து சைடில வைக்கிறேன்..” என்றவர் வேறு சில சேலைளைப் பார்க்க ஆரம்பித்தார்..

சாரதாஅங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.. எதார்த்தமாகத் திரும்பிய ரேணுகா அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு

“என்ன அத்தை உட்காந்துட்டீங்க.. கால் வலிக்குதா?” என

“இல்லடா.. நீங்க செலக்ட் பண்ணுங்க.. சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்..” என்றார்..

அவர் கூறியதில் உண்மை இருப்பதாக ரேணுகாவிற்கு தோன்றவில்லை.. 

“வாங்க.. வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க..” அவரை அழைத்தாள்.

“அவங்க ரெண்டு பேர் இருக்காங்களடா..” என்றதும், அவளிற்கு ஓரளவிற்கு விஷயம் புரிந்துப் போனது..

“நானும் உங்க பையனும் சந்தோசமா இருக்கணும்னு உங்களை விட அதிகமா வேற யாரும் ஆசைப் பாடுவாங்களாஅத்தை?” என்றுக் கேட்க, சாரதா மெலிதாகப் புன்னகைத்தார்..

“எழுந்து வாங்க.. எனக்கு இப்படிப்பட்ட செண்டிமென்ட்ஸ் எல்லாம் பிடிக்காது..” என்றவள் கையேடு அவரை இழுத்துக் கொண்டுப் போனாள்..

அவர்கள் தேர்வு செய்துக் கொண்டிருக்கும் போது, சாராதவின் போன் அடித்தது.. யாதவன் தான் அழைத்திருந்தான்.. சற்றுத் தள்ளி நின்றுக் கொண்டு மகனிடம் பேசிவிட்டு வந்தவர், ரேணுகாவிடம்

“யாதவன் தான் போன் பண்ணான்..செலக்ட் செஞ்சதும், போட்டோ அனுப்ப சொன்னான்..” என்றார்.. அவளும்‘சரி’ என்று தலை ஆட்டினாள்..

மேலும் பத்து நிமிடங்கள் கடந்ததும் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

“போட்டோ எங்கே மா?” என்று

“டேய் இன்னும் எடுக்கலைடா..”

“இன்னுமா? எவ்வளவு நேரம்.. என் வருங்காலம் ரொம்ப கவலைக்கிடம் போலவே.”

“என் மருமகக் கிட்ட சொல்லவாடா?” அவர் மிரட்ட

“இன்னும் நான் அவளோட பேசவே இல்லை.. அதுக்குள்ள எங்க லைப்ல கும்மி அடிச்சுராத மம்மி..” என்று அலறினான்..

“ஒழுங்கா போனை வை.. எடுத்து முடிச்சதும், போட்டோ அனுப்புறேன்..”

ஒருவழியாக பச்சை நிறத்தில் சேலையை எடுத்தவர்கள், வேறு சில உடைகளை வாங்க சென்றனர்.. அரைமணி நேரம் கடந்திருந்தது.. பொறுமை இழந்த யாதவன் மறுபடியும் அழைக்க,

“இவனோட.. சும்மா சும்மா கூப்பிட்டுகிட்டே இருக்கான்..” என்றவர், ரேணுகாவிடம்

“உன் புடவையை போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பிடுமா..” என்றார்.. அவள்“பே” என்று முழிக்க

“என்னாச்சு?”

“அது.. அவர் நம்பர் என்கிட்ட இல்ல..” என்றதும், மகனின் எண்ணை அவளிடம் கொடுத்தார்..

“இல்ல நீங்களே அனுப்பிடுங்களேன்..” தயங்கியவாறே கூற, சாரதாவே மகனிற்குப் புகைப்படத்தை அனுப்பினார்.

இரவு உணவை ஹோட்டலில் முடித்தவர்கள் அங்கிருந்து நேராக ரயில்வே ஸ்டேஷனிற்கு புறப்பட்டனர்..

“அடுத்து எங்கேஜ்மென்ட்ல பார்ப்போம்..” சாரதா கூற

“அப்போ அவ உங்களையா பார்ப்பா அண்ணி..” சிந்துவின் தாய் கூற, ரேணுகா வெட்கத்துடன் தலையைக் குனிந்துக் கொண்டாள்.

அவர்கள் சென்னை நோக்கிப் பயணப்பட்டனர்..

வீட்டிற்கு வந்த ரேணுகா, உடையை மாற்றிவிட்டு கட்டிலில் படுத்துக் கொண்டே போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.. தருணிடம் இருந்து அவளிற்கு மெசேஜ் வந்திருந்தது.. ‘கால் மீ அர்ஜென்ட்’என்று..

அவன் அதை அனுப்பி ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது..

“அர்ஜென்ட்ன்னு மெசேஜ் போட்ருக்கான்.. இதுக்கு அவனே எனக்கு கால் பண்ணிருக்கலாமே” என்று யோசித்தவள் அவனின் எண்ணிற்கு அழைத்தவள் அதை அவனிடமே கேட்டாள்.

“லூசு.. மெசேஜ் செஞ்ச நேரத்துல நீயே கால் பண்ணிருக்கலாம்ல..” என

“உன் ஆள் சொன்னான்.. நீஉன் வருங்கால மாமியார் கூட வெளிய போயிருக்கிறத.. அதான் வந்ததும் இந்த மெசேஜ் பார்த்துட்டு நீயே கூப்பிடுவேன்னு இப்படி அனுப்புனேன்..”

“சரி சொல்லு என்ன விஷயம்.”

“யாதவன், ப்ரெண்ட்சுக்குக் கொடுக்க தனியா இன்விடேஷன் அடிக்கப் போறான்.. உனக்கு எவ்வளவு வேணும்னு கேட்டான்.. மொத்தமாஅடிச்சுடலாம்ன்னு பிளான் பண்றான்..”

“இதை பெரியவங்க மூலமா கேட்டுவிட்டுருக்கலாம்ல..”

“ஹலோ நானும் கல்யாணம் ஆன பெரிய மனுஷன் தான்.. அயம் குடும்பஸ்தன் யூ நோ..”

“போ.. லூசு..”

“சொல்லு உனக்கு எத்தனை வேணும்..”

“அப்பாக்கு தெரிஞ்சா கோபப்படுவார் தரு.. இதெல்லாம் என்கேஜ்மெண்ட் முடிஞ்சதும், அப்பாகிட்டக் கேட்கச் சொல்லு.. சில விஷயங்கள் பெரியவங்க மூலமா செய்றது தான் சரி..”

“டீச்சரம்மா கிட்டப் பேசுறேன்னு நான் அடிக்கடி மறந்துடுறேன்..” என்றவன்

“சரி இப்போ அவனுக்கு நான் என்ன சொல்ல?”

“ஆப்டர் என்கேஜ்மென்ட் இதைப் பத்தி பேசிக்கலாம்ன்னு சொல்லு..”

“ரொம்ப பாவம் என் நண்பன்..”

நிச்சய நாளும் வந்தது.. யாதவனும் ரேணுகாவும் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர்.. சிறியவர்களின் கேலியிலும், பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும் விழாநல்லபடியாக முடிந்தது..

அன்று இரவு தருணிடமிருந்து அழைப்பு வந்தது.. திருமணம் முடிந்து பத்து நாட்களில் அவன் மனைவியுடன் அமேரிக்கா சென்றுவிட்டான்.. ரேணுகாவின் திருமணத்திற்கு வருவானா? என்பதே சந்தேகம் தான்.. சிறிது நேரம் நிச்சயத்தைப் பற்றிப் பேசினார்கள்..

“உன் நம்பர் கேட்டான் யாதவன்.. கொடுத்திருக்கேன்.. எதுவும் பேசுனானா?”

“இல்லையே..”

“அவன் நம்பர் உனக்கு வாட்சப்ல அனுப்புறேன்.” என்றவன் அவளிற்கு அனுப்பினான்..

யாதவனின் காலுக்காக ரேணுகா ஆவலுடன் காத்திருந்தாள்.. அவனின் காலும் வந்தது.. பதட்டத்துடன் அதை எடுத்தவள் “ஹலோ” என்பதற்குள்ஒருவழியாகி விட்டாள்.

“ஹாய்.. எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன்.. நீங்க?” என்றாள் மெதுவாக

“நேத்து தானே பார்த்தோம்.. எப்படி இருந்தேன்னு நீயே சொல்லேன்..” என்றான் சிரிப்புடன்..  அவள் பதில் சொல்லாது அமைதியாக இருக்க

“ரொம்ப கேவலமா இருந்தேனோ.. சைலண்டா இருக்கிறதைப் பார்த்தா அப்படி தான் தோணுது”

“அச்சோ அதெல்லாமில்ல..” என்றாள் வேகமாய்

“அன்னைக்கு ரொம்ப தைரியமா பேசுன? இப்போ என்னடனா இப்படித் தந்தி அடிக்கிது”

“…”

“அடடா.. அவ்வளவு பயமா வருங்கால புருஷன் மேல.. பரவாயில்லைடா யாதவா.. உனக்கு இப்படி ஒரு அமைதியான பொண்டாட்டி கிடைச்சுருக்கு..”

“ஆரம்பத்துல சைலண்டா தான் இருப்பேன்.. போக போக..” என்றவள் இழுக்க

“போக போக.. வைலண்டா மாறிடுவேன்னு சொல்லவரியா?” என்று சிரிக்க, ரேணுகாவும் உடன் சேர்ந்துச் சிரித்தாள்.

இப்படியேதினமும் பேசிப் பேசி அவளை திருமணத்திற்கு முன் சகஜமாக பேச வைத்திருந்தான் யாதவன்..

ஒரு தாய் தந்தை தன் குழந்தைகளின் மீது

அன்பு செலுத்துவதைப் பார்த்து

‘ச்ச இவங்களுக்கு நான் பிள்ளையா பிறந்துருக்கலாம்’

என்ற ஏக்கம் வந்துவிடாத அளவிற்கு

என் பிள்ளைக்கு அன்னம் போல்

அன்பை ஊட்டி வளர்த்திட வேண்டும்.

  • எழுத்துப்பிழை மனோ பாரதி

Advertisement