Advertisement

மாற்றம் 3

THE BEST INHERITANCE A PARENT CAN GIVE TO HIS CHILDREN IS A FEW MINUTES OF THEIR TIME EACH DAY

-M.GRUNDLER

வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்துக் கொண்டிருந்த யாதவனை, சிரித்த முகமாக வரவேற்றார் சாரதா.. எப்பொழுதுமேயாதவன் வீட்டிற்கு வரும்பொழுது சாரதாவின் முகம் புன்னகையுடன் தான் அவனை வரவேற்கும்..

பெரும்பாலானமனிதர்களுக்குஅது ஆணாக  இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும் அப்பாடா என்றிருக்கும். அவர்களுக்கு வேலையில் ஆயிரம் கவலைகள் எரிச்சல்கள் இருக்கும்.. வீட்டிற்குள் நுழையும் பொழுது வீட்டில் வசிப்பவர்களின் முகம் அவர்களை புன்னகையுடன் வரவேற்கும் போது, அந்தகவலைகள் சற்றே மறந்துவிடும்..

அதே எண்ணம் தான் சரதாவிற்கும்.. அவர் எப்பொழுதும் ஐந்து மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடுவார்.. யாதவன் வருவதற்கு சற்று தாமதமாகும்.. ஒரு சில நாள் ஆறு மணிக்கு வருவான்.. சிலநாள்ஒன்பது மணிக்குக் கூட வருவான்.. அவன்வரும்போது மலர்ந்த முகமாகவே அவனை வரவேற்பார்..

இன்று சற்றுக் கூடுதலாக அவரின் முகத்தில் பல்ப் எறிவது போல் யாதவனுக்குத் தோன்றியது.. அதைஅவரிடமே அவன் கேட்டான்..

“என்னமா.. முகத்துல ஆயிரம் வார்ட்ஸ் பல்ப் எறியுது?”

“நீ ரெப்ரெஷ் ஆகிட்டு வாடா.. சொல்லுறேன்..” என்றார் அதே புன்னகையுடன்

“அப்படி என்ன விஷயம்?”

“போடா..” என்றுஅவனை அனுப்பியவர், இருவருக்கும் குடிக்கத் தேநீர் தயாரிக்கச் சென்றார்..

“சொல்லுங்க சாரு..? என்ன மேட்டரு..”

“நீ ஆசைப்பட்டப் படியே ஒரு பொண்ணைப் பார்த்துட்டேன்டா..”

“என்னது நான் ஆசைப்பட்ட படியா? நான் எப்போ சொன்னேன்?” என்றான் குழப்பமாக

“நீசொன்னியே மூணு கண்டிஷன்..”

“அடப்பாவி அம்மா.. அப்போ லூசு மாதிரி பொண்ணுப் பார்த்துருக்கியா?” என்றதும்சிரித்தவர்

“சும்மா சொன்னேன்டா.. பொண்ணு சைக்கலாஜி படிச்சுருக்கா.. அதான் அப்படி சொன்னேன்..” என்றார்..

“ஒரு நிமிஷம் பயந்துட்டேன் மா..”

“அடுத்த மாசம் கல்யாணம்”

“அம்மா என்ன ஒவ்வொரு குண்டா போடுறீங்க?” அவன் அதிரிச்சி அடைய

“நீ தானேடா சொன்ன, உங்களுக்குப் பிடிச்சப் பொண்ணைப் பாருங்க மேரேஜ் செஞ்சுக்குறேன்னு..”

“ம்மா..” அவன் பாவமாக அழைக்க, தனது மொபைலில் இருந்த போட்டோவை மகனிடம் காட்டியவர்

“இந்தப் பொண்ணை நியாபகம் இருக்காடா?” என்று கேட்டார்..

அதை வாங்கிப் பார்த்தவனுக்கு எந்த நியாபகமும் இல்லை.. தாயிடம்‘இல்லை’என்று கூறினான்.

“தருண் மேரேஜ்ல பார்த்தோம்லடா.. தருணோட அத்தைப் பொண்ணு.. நமக்குக் கூடத் தாம்பூளப் பை கொடுத்தாளே..” சாரதா கூற, யாதவனுக்கு எதுவும் நியாபகத்தில் இல்லை.. யாரோ ஒருவர் தாம்பூளப் பை கொடுத்தார்.. அது இளம்வயது குமரியா இல்லை, நரை தள்ளாடும் கிழவியா என்று கூட அவனுக்கு தெரியவில்லை.

“தெரியலைமா..” அவன் கூறியதும், மகனை முறைத்தவர்

“நாலு இடத்துக்குப் போனா வயசு பையனா லட்சணமா, நாலு பொண்ணுங்கள சைட் அடிச்சோம்ன்னு இருக்காம, எனக்குன்னு வந்துருக்கியேடா..” என்று தலையில் அடித்துக் கொண்டார்..

“நீங்க திருந்த மாட்டீங்கமா.” என்று யாதவனும் தலையில் அடித்துக் கொண்டான்..

“நல்லா அடிச்சுக்கோ..” என்றவர், பின் ரேணுகாவைப் பற்றிய விவரங்களைக் கூறினார்..

“ரெண்டுநாள் டைம் எடுத்துக்கோ யாதவா.. உனக்கு பிடிச்சுருந்தா மேற்கொண்டு பேசுவோம்..” என்றவரிடம்

“உங்களுக்கு திடீர்னு எப்படி இந்தப் பொண்ணை எனக்குப் பார்க்கணும்னு தோணுச்சு?” யாதவன் கேட்க

“உன்னை மாதிரியா நான்.. எங்க போனாலும் வயசுப் பொண்ணுங்களைப் பார்த்தா நம்ம பையனுக்குப் பொருத்தமா இருப்பாளான்னு தான் என் மனசுல நினைப்பேன்.. அப்படி தான் ரேணுகாவைப் பார்த்ததும் நினைச்சேன்.. எதுக்கும் கேட்டுப் பார்ப்போம்னு தருணோட அம்மாகிட்ட கேட்டேன்.. அவங்களுக்கும் ரேணுகாவுக்கு வரன் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.. என் நாத்தனார் கிட்டக் கேட்டு சொல்லுறேன்னு சொன்னாங்க..

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஜாதகம் கேட்டு போன் பண்ணாங்க.. நானும் போட்டோ எடுத்து அனுப்புனேன்.. பொருந்திப் போனதும் போன் பண்ணாங்க.. அப்போ பேசும் போது தான் தெரிஞ்சது, நம்ம சிந்துகூடத் தான் ரேணுகா படிச்சுருக்கான்னு.

சிந்துக்கிட்டையும் விசாரிச்சேன் அவ கண்ணை மூடிகிட்டு யாதவை ரேணுக்குத் தாலிக் கட்டச் சொல்லுங்க அத்தைன்னு சொல்லிட்டா.. இருந்தாலும் உன் சம்மதம் முக்கியமில்லையா.. நீ யோசிச்சுட்டு சொல்லு..” என்றவர் மகனுக்கு தனிமை கொடுத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்று இரவு உணவை தயாரிக்கச் சென்றார்..

                              *********************

“எதாச்சும் சொல்லேன்டி.. பிடிச்சுருக்கா இல்லையா?” தனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருந்த ரேணுகாவைப் பார்க்கப் பார்க்க லக்ஷ்மிக்கு கோபம் ஏறிக் கொண்டே போனது..

“வயசுக்கு வந்த பிள்ளைன்னு அடிக்காம இருக்கேன்.. பதில் சொல்லு..”

“நேர்ல பார்த்துப் பேசுன பிறகு தான் என்னால ஒரு முடிவு சொல்ல முடியும்..” என்றாள் தாயைப் பார்த்துக் கொண்டே..

“தருண் கிட்டச் சொல்லுறேன்..” என்றவர் வாய்க்குள் எதையோ முனங்கிக் கொண்டே சென்றார்..

சிறிது நேரத்திலேயே தருணிடம் இருந்து ரேணுகாவிற்கு அழைத்தான்..

“சொல்லு தருண்..”

“என்ன ரேணு. யாதவோட பேசணும்னு சொன்னியாம்.. போன் நம்பர் தரவா பேசுறியா?” என

“இல்ல.. நேர்லபேசணும்..” என்றதும்

“மாமா மாதிரி யாதவ் இருப்பானோன்னு யோசிக்கிறியா?” அவன் சரியாகக் கேட்க

“ப்ச் அதெல்லாம் இல்ல..”

“நீஆசைப்பட்ட மாதிரி தான் யாதவ் இருப்பான்.. சாராதா அம்மாவும் ரொம்ப ப்ரெண்ட்லி.. இந்த சம்மந்தம் மட்டும் நடந்தா நீ ரொம்ப லக்கி..” என்றான்

“நீ என் மைண்டை டைவர்ட் பண்ணப் பாக்குற.. எந்த முடிவா இருந்தாலும் அவரோடப் பேசுன பிறகு தான் எடுப்பேன்..”

“சரி பொண்ணுப் பாக்க வர சொல்லுவோம்.. அப்போ பேசு..” என்றான்..

                                 ***************

யாதவனும் சாரதாவும், ரேணுகாவைப் பெண் பார்க்க இன்று வந்திருக்கின்றனர்.. அவர்களுடன் சிந்துவின் பெற்றோர்களும் வந்திருந்தனர்.. சிந்துவின் தாய் சாரதாவிற்கு ஒன்றுவிட்ட நாத்தனார்..

போட்டோவில் பார்த்து ரேணுவைப்பிடித்திருந்தது யாதவனுக்கு.. அவனுக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.. வரும் மருமகள் தனது தாயுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான்.. அதனால் தானே என்னவோ சாரதாவிற்குப் பிடித்தப் பெண்ணையே தனக்குப் பார்க்குமாறு கூறினான்.

அவருக்கும்ரேணுவைப் பிடித்திருந்தது.. குறை சொல்லும்படி எதுவும் இல்லை.. சிந்து வேறு ரேணுவிற்கு நற்சான்றிதழ் வழங்க அவனும் சரி என்று கூறிவிட்டான்.. அவனிற்குமே ரேணுவிடம் தனியாக சில விஷயங்களைப் பேச வேண்டியிருந்தது.. பெண்பார்க்கும் தினத்தன்று பேசிக் கொள்வோம் என்று நினைத்திருந்தான்..

அன்று காலையில் மதுரையில் இருந்த அவர்களின் வீட்டிற்கு வந்தவர்கள் குளித்து, காலை உணவை உண்டுவிட்டு ரேணுகாவின் வீட்டிற்குச் வந்திருந்தனர்.. பிங்க் நிற மெல்லிய சரிகை வைத்தப் புடவையில் தேவதைப் போல் இல்லாவிடினும், அழகாகவே இருந்தாள் ரேணுகா.

கணேஷன் வந்திருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்க, ரேணுகாவிற்கு எப்பொழுதுடா யாதவனுடன்பேசுவோம் என்றிருந்தது.. சிந்துவின் தந்தை தான் சிறிது நேரம் சென்றதும்

“ரெண்டு பேரும் தனியா பேசுறதா இருந்தா பேசுங்க” என, இதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக இருவரும் இருக்கையில் இருந்து எழுந்துக் கொள்ள, எல்லோரின் முகத்திலும் லேசாக சிரிப்பு வந்தது.. அதை கவனித்தவர்கள் அசடு வழிந்தவாறேசற்றுத் தள்ளி நின்றுக் கொண்டு பேச ஆரம்பித்தனர்..

முதலில் யாதவனே, தன்னைப் பற்றிய சிறு அறிமுகம் செய்துக் கொண்டு

“எங்க அம்மா மட்டும் தான் எனக்கு.. என்னோட ரெண்டு வயசுல இருந்து அவங்க தான் என்னைப் பாத்துக்குறாங்க.. ஆப்டர் மேரேஜ் தனிக்குடித்தனம் போகணும்னு நீங்க நினைக்கக் கூடாது.. இதுக்கு ஓகேன்னா நெக்ஸ்ட் ஸ்டெப் எடுக்கலாம்..” பட்டென்று தன் மனதில் நினைத்ததை கூறினான்..

“எனக்கும் ஜாயின்ட் பேமிலி தான் பிடிக்கும்.. பட் என்னோட கண்டிஷன், என்னோட ஆசையில நீங்க தடையா இருக்கக் கூடாது.. நான் செய்றதுல தப்பு இருந்தா நீங்க தாராளமா சொல்லலாம்.. பட் நீ எதுவுமே செய்யக் கூடாது.. ஹவுஸ் வைப்பா இருக்கணும்னு நினைச்சீங்கனா..” என்று அவள் இழுக்க, யாதவன் சிரித்துக்கொண்டே

“நிச்சயமா நான் அப்படி இருக்க மாட்டேன்.. மத்தவங்களோட விருப்பத்துக்கு நான் மதிப்பு கொடுப்பேன்..” என்றான்..

மேலும் சிறிது நேரம் அவர்கள் பேசிவிட்டு பெற்றோர்களிடம் சம்மதம் கூற, அடுத்தப் பதினைந்து நாளில் நிச்சயதார்த்தம் என்று முடிவெடுத்தனர்.. சிந்துவின் தாய் ரேணுவிடம்

“உனக்கு சமையல் தெரியுமா ரேணு?” என்று கேட்க

“ஓரளவுக்கு சமைப்பேன் ஆண்ட்டி” என்றாள்.

“எனக்கும் ஓரளவுக்குத் தெரியும். அதுனால ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் ஹெல்ப் பண்றேன்.” யாதவன் கூற, அனைவரும் வாய்விட்டே சிரித்துவிட்டனர்.. ரேணுகாவிற்கு இந்த ஒரு விஷயமே யாதவன் அவள் மனதினுள் நுழைய காரணமாக அமைந்தது.. வெட்கத்துடன் அவள் தலை குனிந்துக் கொண்டாள்.

                          *****************

நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்க, சாரதாஎன்ன கலரில் புடவை வேண்டும் என்று கேட்பதற்காக ரேணுகாவின் எண்ணுக்கு அழைத்திருந்தார்.. புதுஎண்ணில் இருந்து அழைப்பு வந்ததும், யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே எடுத்தவள்

“ஹலோ நான் சாரதா அத்தை பேசுறேன் மா..” என்றதும், சற்று பதட்டமானாள்.

“ஹான்.. சொல்..சொல்லுங்க..” என்று அவள் தடுமாற

“என்னாச்சுமா.. ஏன் இவ்வளவு பதட்டம் என்னோட பேச..”

“இல்ல.. சாரிஅத்தை.. திடீர்னுநீங்க கால் பண்ணதும் லைட்டா பதட்டமா இருக்கு..” என்றாள்

“அவ்வளவு டேரராவா இருக்கேன்?” என்று கூறி சிரித்தார்..

“இல்ல அத்தை.. அது..” என்று அவள் இழுக்க

“சும்மா சொன்னேன்டா.. எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் அத்தை.. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்டா.. ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது?”

“போகுது ஏதோ..”

“உன் நம்பர், உங்க அப்பா கிட்ட இருந்து வாங்குனேன்டா.”

“ஓ.. அப்படியா.. அப்பா சொல்லல.. மறந்துருப்பாங்க போல..”

“சரிடா.. நிச்சயத்துக்குஉனக்கு என்ன கலர் புடவை எடுக்க ரேணு?” அவர் கேட்க, ரேணுவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..

“என்ன அமைதி ஆகிட்ட..” சாரதா மறுபடி கேட்க

“இல்ல அத்தை.. எந்த கலரா இருந்தாலும் பரவாயில்லை..” என்றாள்

“ஆல்ரெடி உன்கிட்ட இருக்குற கலர்ல வாங்கிட கூடாதுல.. அதுக்கு தான் கேட்டேன்..” என்றவர்“நீ உன் புடவை கலர்ஸ் எல்லாத்தையும் ஒரு தடவ பார்த்துட்டு என்ன கலர் வேணும்னு யோசிச்சு வை. நாளைக்கு போன் பண்றேன்..” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்..

அடுத்த நாள் லக்ஷ்மிக்கு அழைத்தவர், இரண்டு நாட்களில் ஒரு விசேஷத்திற்காக அவர்கள் அலங்காநல்லூர் வர இருப்பதாகவும், அதனால் மதுரையிலேயே நிச்சயப் புடவையை ரேணுகாவை உடன் அழைத்துச் சென்று அவளிற்குப் பிடித்ததை எடுக்க சொல்லுவோம் என்று கூற, லக்ஷ்மியும் சரி என்றார்..

பெரும்பாலானவிசேஷங்களுக்கு சாரதா செல்ல மாட்டார்.. மிகவும் நெருங்கிய உறவாக இருந்தால் மட்டுமே அவர் செல்வார்.. அதனால் முதலில் அலங்காநல்லூர்ரில் நடைபெறும் உறவினரின் திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என்று அவர் நினைத்திருக்க, சிந்துவின் தாய் தான் அங்கே சென்றுவிட்டு ரேணுவையே அவளிற்குப் பிடித்ததை எடுத்துக் கொள்ள சொல்வோம் என்று யோசனைக் கூறினார்.. அதன் பொருட்டே சாரதாவின் மதுரை விஜயம்..

Advertisement