Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி…

காதல் 6

“ஹனிமூன் எங்க போகலாம்ன்னு முடிவு செஞ்சுடீங்களா? டிக்கெட் போட்டுடுறேன்..” சுதாகரன் மகனிடம் கேட்டார்..

“இன்னும் முடிவு பண்ணலைப்பா.. போகலாம் மெதுவா..”

“டேய் கல்யாணம் ஆன புதுசுல போறதுக்கு பேர் தான் ஹனிமூன்.. மெதுவா போறது சனிமூன்டா.. நானெல்லாம் தாலி கட்டுன கையோட உங்கம்மாவை இழுத்துக்கிட்டு ஊட்டிக்கு போயிட்டேன்.. நீ என்னடா ஒரு வாரம் ஆகியும் எங்க போகலாம்ன்னு முடிவு பண்ணலைன்னு சொல்ற..” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கையில் காபி கப்புடன் குகாவும், ஸ்னாக்ஸ் தட்டுடன் சித்ராவும் வந்தனர்..

“போலீஸ் ஆபிசர்ன்னு தான் பேரு.. பிள்ளைகிட்ட என்ன பேசணும்னு தெரியலை..” திட்டிக் கொண்டே முறுக்கை கணவனிடம் கொடுத்தார் சித்ரா..

குகாவும் சிரித்துக் கொண்டே காபியை அனைவருக்கும் கொடுத்தாள்.

நால்வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அறைக்குச் சென்றனர்.. துணிகளை மடித்துக் கொண்டிருந்த குகாவிடம், மாறன்

“உனக்கு எந்த ஊருக்கு போகணும்னு எதாச்சும் ஆசை இருக்கா?” என்றான்.. அவள் புரியாமல் அவன் முகம் பார்க்க

“ஹனிமூனுக்கு எந்த பிளேஸ் யோசிச்சு வெச்சுருக்கேன்னு கேட்டேன்..” அவன் விலாவரியாக கூறவும் சிரித்துவிட்ட குகா

“அகல்யாவும், ரோஹிணியும் ஹனிமூன் பேக்கேஜ் தான் கிப்ட் பண்றதா சொன்னாங்க.. உங்க ரெண்டு பேருக்கும் கம்பர்டபிளா இருக்க ஊர் சொல்லுங்க டிக்கெட் போடுறோம்னு..” என்றாள்

“இதுல சிரிக்க என்ன இருக்கு? அவங்ககிட்ட நீ எந்த பிளேஸ் சொல்லிருக்க?” என்றதும் மேலும் சிரித்தவள்

“என் வீட்டுக்காரரைப் பார்த்தா ஹனிமூனுக்கு கூட்டிட்டு போற ஆள் மாதிரி தெரியலை.. சோ வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்..” என்றவளின் சிரிப்பு விரிந்தது..

“என்னைப் பார்த்தா அவ்வளவு அன்ரொமாண்டிக்காவா இருக்கு?” முறைத்துக் கொண்டே கேட்டான்..

“ஹாஹா..”

“போதும் சிரிச்சது.. சொல்லு.. ஹனிமூன் கூட கூட்டிட்டு போக மாட்டேன்னு நினைக்கிற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?”

“அதானே என்ன செஞ்சீங்க?”

“மேடம் நான் தான் கேள்வி கேட்டேன்.. அப்படியே என் பக்கம் திருப்பி விடுறீங்க?”

“நான் பதில் தான் சொன்னேன்.. வக்கீலுக்கு மூளை கொஞ்சம் கம்மி தான்..” என்றவள் துணிகளை எடுத்து வைத்துவிட்டு மாறனை பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு வெளியே சென்றாள்.

அவள் கூறியதன் அர்த்தம் இரண்டு நிமிடத்துக்கு பிறகே அவனிற்கு புரிந்தது..

‘அடிங்க.. இன்னைக்கு இருக்குடி உனக்கு..’ என்று மனதில் எண்ணிக் கொண்டவன் லேப்பில் வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

இரவு உணவு முடிந்து குகா அறைக்குள் வந்ததும், அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் மாறன்..

“எ.என்.. என்ன பண்றீங்க? வி.. விடு..விடுங்க..” என்றவளிற்கு வார்த்தை தந்தி அடித்தது..

“வக்கீலுக்கு மூளை கம்மின்னு யாரோ சொன்னாங்க.. அவங்களை சும்மா விட முடியாது..” என்றவன் அவளை கட்டிலில் கிடத்தினான்..

“என்ன?” என்றவளின் கண்கள் பயத்தில் விரிந்தன.

“சாப்ட்வேர் அம்மாக்கு  தான் மூளை கம்மி போல..” என்றவனின் புருவம் ஏறி இறங்கின..

“நான் சொன்னது புரிஞ்சுடுச்சா? அது சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்..” என்றவள் கட்டிலின் பின்னே நகர்ந்தாள்.

“விளையாடிடுவோம்..” என்றவன் அவளை நெருங்க.. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே

“நினைப்பு எல்லாம் எங்கையோ இருக்கு.. ஆசை தான் போடி..” என்றவன் அவளை இடித்துக் கொண்டு படுத்தான்.. அவனின் வார்த்தைகளில் கண்ணைத் திறந்தவள்

“போடியா?”

“ஆமாடி பொண்டாட்டி..” என்றவனின் கை அவள் இடையில் பதிந்தது..

“யோவ் வக்கீலு கையை எடு..”

“ஒரு வாரத்துலையே யோவ் வக்கீலுன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்ட.. இன்னும் கொஞ்ச நாள் போனா கெட்ட கெட்ட வார்த்தை வரும் போலவே..”

“ஆமாயா வரும்.. நீ முதல்ல கையை எடு..” என்றவள் அவன் கையை எடுக்கப் போக, அவனின் மற்றொரு கையால் குகாவின் இரண்டு கைகளையும் பிடித்தவன் அவள் இதழ்களில் யுத்தத்தை ஆரம்பித்தான்.. அவர்கள் வாழ்க்கையின் அழகானதொரு தருணம் அங்கே நடந்தேறியது..

அடுத்த நாள்  மாறனின் பெற்றோருடன் புதுமண தம்பதிகள் இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.. இரண்டு நாட்கள் மருமகளுடன் இருந்து வீட்டை ஓரளவுக்கு பழக்கப் படுத்திவிட்டே இருவரும் தூத்துக்குடிக்கு திரும்பி சென்றனர்..                

அவர்கள் சென்ற அடுத்த நாள் வீட்டில் இருவர் மட்டுமே இருப்பது  போர் அடிக்க, இருவரும் கிளம்பி மாலிற்கு வந்திருந்தனர்.. வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்குவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தனர்..

“ஸ்.. கையை விடுங்களேன்.. வலிக்குது.. எவ்வளவு நேரம் தான் பிடிச்சுட்டே சுத்துவீங்க..” பொருட்களை பார்வையிட்டவாறே கேட்டாள் குகா..

“அக்னி சாட்சியா வாக்குக் கொடுத்திருக்கேன்.. பிடிச்ச கையை விட மாட்டேன்னு..” என்றவனின் பிடி இன்னும் இறுகியது.

“ப்பா.. முடியலை.. நடுவுல ஒரு வாரம் இந்த அக்கறை காணாம போச்சே..” என்றதும் அவளை இடையோடு சேர்த்து தன் அருகில் இழுத்து அணைத்தவன்

“பாவம் பச்ச பிள்ளைன்னு நினைச்சு விட்டேன். இப்போ தானே தெரியுது நீ பச்சை பச்சையா பேசுற பிள்ளைன்னு..”

“ப்ச்.. மாறன்.. பப்ளிக் பிளேஸ்ல என்ன பண்றீங்க.. கையை எடுங்க..”

“யாருமே இல்ல இங்க.. அப்பறம் என்ன உனக்கு?”

“ஆள் இருக்காங்க இல்லை.. எதை எதை எந்த இடத்துல செய்யணுமோ அங்க தான் செய்யணும்..”

“ஐடில தானே வொர்க் பண்ற? டீச்சர் அம்மா மாதிரி பேசுற..”

“இது எல்லாம் காமன் சென்ஸ்.. டீச்சர் தான் இப்படி பேசணும்னு இல்லை..”

“அப்போ வா சீக்கிரம் ரூமுக்கு போவோம்..” என்றவன் வேகமாக நடக்க

“அடி வாங்குவீங்க.. ஷாப்பிங் பண்ணனும்.. ஹனிமூன் தான் கூட்டிட்டு போகலை.. ஷாப்பிங் செய்யவாச்சும் விடலாம்ல..”

“நீ தானே வேண்டாம்னு சொன்ன.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க தான் அங்க போவாங்க.. நம்ம வீட்லையே இருந்து பேசி புரிஞ்சுப்போம்ன்னு சொல்லிட்டு, இப்போ மாத்தி பேசுறியா?”

“ஒரு பேச்சுக்கு சொல்றது தான்.. நீங்க கம்பல் செஞ்சிருக்கணும்..”

“செஞ்சுடுவோம்.. செஞ்சுடுவோம்..” என்றவன் அவளை பார்த்து கண் அடிக்க

“உதை படுவீங்க..”

இருவரும் ஷாப்பிங் முடித்து, இரவு உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் போது பத்து மணி ஆகியிருந்தது..

இன்னும் இரண்டு நாட்களில் குகா வேலைக்குச் செல்ல இருப்பதால் மாறனும் அவளுடன் நேரத்தை செலவு செய்யவேண்டி, அவனின் கேஸ் வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்தான்..

இருவருமே சேர்ந்து தான் சமையலை கவனித்துக் கொண்டனர்.. மாறன் பேச்சிலர் லைப்பில் ஓரளவிற்கு சமைக்க கற்றுக் கொண்டிருந்தான்.. அவனை விட சுமாராக குகா சமைப்பாள்.. அவன் சாம்பார் செய்தால் இவள் பொரியல் செய்வாள்.. இப்படி வேலைகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்..

அன்று காலை மாறன் தாமதாமாக எழுந்துக் கொள்ள, குகாவே காலை உணவை செய்து கொண்டிருந்தாள்.  ப்ரெட் ஆம்லேட்டை செய்தவள் இருவருக்கும் ப்ளேட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள். கணவனுக்கான ப்ளேட்டை அவன் கையில் கொடுத்தவள், அவன் அருகில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்..

“இன்னைக்கு மாவு அரைக்கணும்.. ரெண்டு நாளா மாவு  இல்லாம ப்ரெட் ரோஸ்ட், ஆம்லேட்ன்னு செஞ்சு சாப்பிட்டாச்சு.. நாளைல இருந்து ஆபிசுக்கு வேற ரெண்டு பேரும் போகணும்.. இட்லி தோசை தான் மார்னிங் ஈசியா செய்ய முடியும்..  அரிசியையும், உளுந்தையும் மறந்துடாம ஊறப் போட்டுடு..” ஆம்லேட்டை உண்டு கொண்டே மாறன் குகாவிடம் கூற, குகா வேகமாக

“இன்னைக்கு கடைக்கு போயிட்டு வரலாமா?” என்றாள்

“ஏன் எதாச்சும் வாங்கனுமா? காய், மளிகை சாமான் எல்லாம் இருக்கே..”

“தோசை மாவு வாங்க தான்..”

“கடைல வாங்க போறியா?” என்றான் கேள்வியாக

“ஆமா..”

“கடைல வாங்குற மாவு எனக்கு சுத்தமா பிடிக்காது.. லீவ்ல வீட்டுல இருக்கப்ப நானே தான் அரைச்சு வெச்சுக்குவேன்..”

“அப்போ நான் அரிசியையும், உளுந்தையும்  ஊறப் போட்டு வைக்கிறேன்.. நீங்களே அரைச்சுடுரீங்களா?”

“நானா?”

“ஆமா நீங்க தானே சொன்னீங்க இதுக்கு முன்ன நானே தான் அரைச்சுப்பேன்னு.. இப்போ மட்டும் என்ன?”

“அடியே சமையல்ல தான் அரைக்குறைன்னா, மாவு கூட ஆட்ட தெரியாதா உனக்கு?” என்றான் அலுப்பாக..

“எனக்கு கிரைண்டர் சவுண்ட் பிடிக்காது.. ஒரு மாதிரி இரிட்டேடிங்கா இருக்கும்.. சம்டைம்ஸ் அழுகைக் கூட வரும்.” என்றாள் பாவமாக

“என்னது கிரைண்டர் சவுண்ட் கேட்டா அழுகை வருமா?” அதிர்ச்சியாக அவன் கேட்க

“ஆமா.. சின்னதுல இருந்தே இப்படி தான்..” என்றாள் சோகமாக

“குழந்தைங்க மிக்சி, கிரைண்டர் சவுண்ட் கேட்டா அழுவாங்க, ஏழு கழுதை வயசாகுது உனக்கு.. நீ எதுக்குடி அழுகுற?”

“ப்ச்.. எனக்காக இது கூட செய்ய மாட்டீங்களா?” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவள் கேட்க

“வேற வழி.. செஞ்சுத் தொலையிறேன்..” என்றவன் சாப்பிட்ட பிளேட்டை எடுத்துக் கொண்டு கை கழுவ சென்றான்..

இருவரும் தங்களின் வேலைக்கு திரும்பி சென்ற பின்பும் இது தான் தொடர்ந்தது.. முடிந்த அளவிற்கு மனைவிக்கு சமையலில் உதவி செய்வான் மாறன்.. அன்றும் அப்படி தான் மாறனிற்கு பிடிக்குமென்று ஆசையாக வத்தக்குழம்பு வைத்திருந்தாள்.

“வத்தக்குழம்பா? இதுவா? நான் ரசம்னு இல்ல நினைச்சேன்.” பாத்திரத்தை திறந்து பார்த்தவன் இவ்வாறு கூறவும், கடுப்பானவள்

“ரொம்ப பண்றீங்க.. ரசம் லைட் கலர்ல தண்ணி மாதிரி இருக்கும்.. இது இவ்வளவு திக்கா டார்க்கா இருக்கு. சும்மா கலாய்க்கணும்னு சொல்லக் கூடாது..” என்றாள்

“காரக்குழம்பு, வத்தக்குழம்பு எல்லாம் என்னோட பேவரட். இனிமே வத்தக்குழம்பு செய்ய போறேன்னு முன்னமே சொல்லிடு.. நானே செஞ்சு கொடுத்துடுறேன்.. நான் செஞ்சதை  சாப்பிட்டுப் பாரு அப்புறம் நீயே சொல்லுவ உன்னோட இந்த குழம்பை ரசம்னு.. வெஜ்ஜே இந்த கொடுமைல சமைக்குற.. நான் வெஜ் எல்லாம் எவ்வளவு கொடுமையா இருக்குமோ?” வேதனையுடன் அவன் கூறினான்..

“சரியான பெருமை பீத்த கலைஞன்.. நீங்க நல்லா தான் குக் பண்ணுவீங்க.. அதை அடிக்கடி ரிஜிஸ்டர் பண்ணனுமா?”

“உனக்கு இன்பீரியாரிட்டி காம்பிளக்ஸ்..”

“ஆமா ஆமா காம்பிளக்ஸ்..” என்றவள் இருவருக்குமான உணவை தட்டில் பரிமாறிவிட்டு வாயில் வைத்ததும் சுவையே ஒரு மாதிரி இருக்கவும்  

“புளி சரியில்லைன்னு நினைக்கிறேன். டேஸ்ட் என்னவோ போல இருக்கு..” என்றாள்.

“ஆஹான்.. ஆடத் தெரியாத சிலுக்கு, என் காலுல சுலுக்குனாலாம். அந்த கதையாவுல இருக்கு.. நானும் இதே புளில தான் போன வாரம் புளிக்குழம்பு செஞ்சேன்.. சூப்பரா இருக்குன்னு சப்புக் கொட்டி சாப்பிட்ட..” என்றதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.. இப்படி முகத்தைத் தூக்கி வெச்சுக்கக் கூடாது..”

“பனமரத்துக்கு அடியிலே பரிதிமாறன் மடியிலே..” என்று கூறியவள் கணவனின் மடியில் அமர்ந்துக் கொண்டாள் “நாங்களும் பழமொழி சொல்லுவோம்.”

“செத்த ஜோக் தங்கதுரை fan ஆ நீ? இது தெரியாம போச்சே..” அவன் கேலி செய்ய, சாதத்தை எடுத்து அவன் வாயில் திணித்தாள்..

“ஹே..” என்றவன், அவனும் அவளின் வாயில் சாதத்தை ஊட்டினான்..

இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டே அன்றைய உணவை முடித்தனர்..

சின்ன சின்ன சீண்டலும், சண்டையும், செல்ல முத்தங்களுமாய் அவர்களின் வாழ்க்கை ரம்யமாக இருந்தது..

                           ******************

கேபிடேரியாவில் அகல்யாவுடன் காபியைக் பருகியவாறே பேசிக் கொண்டிருந்தாள் குகா.. தோழியின் கேள்விக்கு பதில் சொன்னாலும் அகல்யாவின் மனம் முழுவதும் வேறு எங்கேயோ இருந்தது..

“என்ன மேடம் வாய் மட்டும் ஆன்சர் பண்ணுது? மைன்ட் எங்கயோ இருக்குப் போல? முப்பொழுதும் கவினின் கற்பனை தானா?” என்று கேலி செய்தாள் குகா..

“ப்ச் நீ வேற ஏன்டி.. கடுப்பேத்துற..” அகல்யா அலுத்துக் கொள்ள

“ஏன் என்னாச்சு? ரெண்டு பேருக்கும் எதுவும் சண்டையா?”

“எல்லாம் உன்னால தான்..” என்றாள் கோபமாக

“என்னாலையா? நான் என்னடி பண்ணேன்?” புரியாமல் குகா கேட்க

“உன்னை யாரு சீக்கிரம் குடும்ப இஸ்திரி ஆக சொன்னா?” பொரிந்தாள் அகல்யா.

“லூசு.. என்ன உளறுற.. என்னப் பிரச்சனைன்னு சொல்லாம.. நான் ஏன் மேரேஜ் செஞ்சுகிட்டேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது..”

“எங்க அம்மா என்னையும் கல்யாணம் செஞ்சுக்க சொல்லுறாங்க.. குகா, ரோகிணி ரெண்டு பேரும் மேரேஜ் செஞ்சு செட்டில் ஆகிட்டாங்க.. நீ இன்னும் இப்படியே சுத்திகிட்டு இருக்கன்னு திட்டுறாங்க..”

“இதுக்கு ஏன் எங்க மேல கோபப்படுற.. அத்தைகிட்ட கவினை லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியது தானே..”

“கவினுக்கு தங்கச்சி இருக்கு தெரியும் தானே.. அவளுக்கு முன்ன கவினுக்கு அவங்க வீட்ல மேரேஜ் செஞ்சு வைப்பாங்களா?”

“சரி வீட்ல விஷயத்தை மட்டுமாச்சும் சொல்லிவைங்க.. அவங்க சிஸ்டருக்கு முடிஞ்சதும் உங்களுக்கு செய்ய சொல்வோம்..”

“ப்ச்.. இதெல்லாம் நான் யோசிக்கலன்னு நீ நினைக்கிறியா?”

“பின்ன என்னடி?”

“கவின் ஒத்துக்கணும்ல.. வீட்ல சொல்வோம்ன்னு சொன்னா கேட்க மாட்ரார்.. கொஞ்சம் சமாளி.. ஆறு மாசம் டைம் கொடுன்னு கேக்குறார்..”

“நீ அத்தை கிட்ட சொல்லேன்.. ஆறு மாசம் வெயிட் பண்ணுங்கன்னு.”

“சொல்லிட்டேன்.. மாப்பிள்ளையை பார்த்து வைக்கவா, ஆறு மாசம் கழிச்சு மேரேஜ் வெச்சுப்போமான்னு கேக்குறாங்க.. நான் என்ன தான் சொல்றது.. வீட்லையும் டார்ச்சர், கவினும் டார்ச்சர் பண்றான்.. ஏன்டா காதலிச்சோம்ன்னு இருக்கு..” என்றவளுக்கு கண்கள் கலங்கியது..

“சரி அழுகாதே.. யாராச்சும் பார்க்கப் போறாங்க..”

“…”

“நான் வேணும்னா கவினோட பேசவா?”

“…”

“அகல்..” என்றவளின் தோளைத் தொட்டதும், தன்னை நிலைபடுத்திக் கொண்ட அகல்யா

“அயம் ஓகே. வா ப்ரேக் டைம் முடியப் போகுது.. கேபினுக்கு போவோம்..”

“எவிரிதிங் வில் பீ ஆல்ரைட்” குகா கூற அவளைப் பார்த்து சோபையாக புன்னகைத்தாள் அகல்யா..  

  

Advertisement