Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி

காதல் 15

மறுநாள் மாறன் ஊரிலிருந்து வந்தப் பொழுது, குகாவின் முகமே ஒரு மாதிரி இருந்தது..

“என்னமா? ஏன் ஒரு மாதிரி இருக்க? வலிக்குதா?” என்று அவன் அக்கறையாக கேட்க ‘இல்லை’ என்று தலையை ஆட்டியவள் “குளிச்சிட்டு சாப்பிட வாங்க..” என்றாள்..

அன்று முழுவதும் அவன், குகாவின் அருகிலேயே இருந்தான்.. அடிக்கடி அவளின் முகம் மாறுவதை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்..

“அம்மா, இவளை என்னன்னு கேளுங்க.. காலைல இருந்து அப்பப்ப ஒரு மாதிரி ஆகுறா? என்னன்னு கேட்டா ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு சொல்லுறா?” மாறன், சித்ராவிடம் சொல்ல

“என்ன குகா? என்ன பண்ணுது? எங்ககிட்ட ஒண்ணுமே நீ சொல்லல..”

“இல்லத்தை நல்லா தான் இருக்கேன்.. நேத்து சொன்னேன்ல அப்பப்ப அடிவயிறு வலிக்குதுன்னு அது தான்..” என்றவளின் முகம் அப்பொழுதும் ஒரு மாதிரி ஆகியது..

“ஹே என்னப் பண்ணுது உனக்கு? வலிக்குதா?” மாறன் பதட்டத்துடன் கேட்க

“இல்லங்க இது டெலிவரி பெயின் இல்ல.. நார்மலா..” என்று சொல்ல வந்தவள் “ஆ..” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்..

“குகா..”பெண்கள் இருவரும் அவள் அருகில் விரைந்து வந்தனர்.

“அம்மா…”

“குகா.. ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிடல் போவோமா?” மாறன் கேட்க

“இல்ல மாப்பிள்ளை கொஞ்ச நேரம் இருப்போம்.. பிரசவ வலி தானான்னு தெரியலை.. ஒருவேளை பிரசவ வலின்னா கொஞ்ச நேரத்துல வலி இன்னும் ஜாஸ்தி ஆகும் அப்போ ஹாஸ்பிடல் போவோம்” என்றார் சீதா..

“அவ அழுகுற மாதிரி இருக்கா.. நீங்க கொஞ்ச நேரம் கழிச்சுப் போவோம்ன்னு சொல்லுறீங்க..”

“டேய், அண்ணி சொல்லுறது சரி தான்.. இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாலும் உடனே குழந்தைப் பிறக்காது, நல்லா வலி வர வரைக்கும் அங்கையும் காத்துகிட்டு தான் இருக்கணும்.. கொஞ்ச நேரம் பார்த்துட்டு போவோம்..” என்றவர் அவளிற்கு குடிக்க கொண்டு வந்துக் கொடுத்தார்..

ஐந்து நிமிடங்கள் தான் வலியிருந்தது.. அதன்பிறகு சாதரணமாக தான் இருந்தாள்.. அரைமணி நேரத்திற்கு பிறகு அதே போல் வலி வந்து ஐந்து நிமிடங்கள் இருந்தது..

“காலைல இருந்து இப்படி தான் இருக்கா உனக்கு?” மாறன் கேட்க

“இல்ல.. காலைல இவ்வளவு பெயின் இல்ல.. இப்போ தான் கொஞ்சம் அதிகமா இருக்கு..”

“அம்மா இதுக்கு மேல வெயிட் பண்ணனுமா? வாங்க போகலாம்..” என்றவன், வேகமாக ராஜனின் கார் சாவியை எடுத்து காரை ஷெட்டில் இருந்து எடுத்தான்..

மருத்துவமனை சென்று அவளைப் பரிசோதித்த மருத்துவர், “இன்னும் நாலு மணி நேரம் ஆகும், டெலிவரிக்கு.. பெயின் ரொம்ப எல்லாம் இல்ல.. கொஞ்ச நேரம் நடங்க.. நடக்க நடக்க பெயின் கூடும்.” என்றார்..

“அம்மா இதுவே என்னால தாங்க முடியலை.. இன்னும் பெயின் வருமா?” குகா அழுகையுடன் கேட்க

“கொஞ்ச நேரம் தான் பொறுத்துக்கோ..” என்று பெண்கள் இருவரும் அவளிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்..

“சரி வா நட..” மாறன், அவளை அழைத்துக் கொண்டு காரிடாரில் நடந்தான்.. நடந்துக் கொண்டிருக்கும் போதே குகா,

“மாறன்..” என்று அழைக்க

“சொல்லுமா..”

“நீங்க எதுக்கு இப்போ சென்னைல இருந்து இங்க வந்தீங்க?” என்றாள் மொட்டையாக

“என்ன கேக்குற?” அவன் புரியாமல் அவளிடமே திரும்பி கேட்டான்..

நேற்று சீதா இவளை திட்டியதையும், அதற்கு சித்ரா கூறிய பதிலையும் கணவனிடம் சொன்னவள்

“சென்னைல இருக்கப்ப என்னை சரியா பாத்துக்கலைன்னு கில்ட்டி கான்ஷியஸ்ல தான் இப்போ நான் போன் பண்ணா, உடனே கிளம்பி வரீங்களா?” என்றாள்

“லூசா நீ?” என்று முறைத்தவன் “நட..” என்றான்

“ப்ச்..சொல்லுங்க மாறன்.. அத்தை சொன்னதுல இருந்து எனக்கு இது தோணிட்டே இருக்கு.. என்மேல உள்ள அக்கறைல தானே வரீங்க..”

“உனக்கே இதுக்கு பதில் தெரியும் தானே.. ஏற்கனவே வலில இருக்கன்னு பாக்குறேன்.. இல்லாட்டி அடி தான் வாங்குவ..”

“எனக்கு தெரியும்.. நீங்க என்னை எவ்வளவு லவ் பண்றீங்கன்னு.. இருந்தாலும்..” என்று அவள் இழுக்க..

“இதை நினைச்சு தான் காலைல என்னைப் பார்த்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்கியா? கில்ட்டியும் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல.. நீ இங்க கஷ்டப்படும் போது என்னால அங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்..” என்றதும், அவன் கையைப் பிடித்து முத்தம் வைத்தவள் “லவ் யூ..” என்றாள்

“லூசு.. ஒழுங்கா நட..”  

ஒரு மணி நேரம் அவளை மெதுவாக நடக்க வைத்தான்.. நடக்க நடக்க அவளிற்கு வலி அதிகரித்துக் கொண்டேயிருந்தது..

“என்னங்க பயமா இருக்கு..” இதையே தான் அவள் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தாள். லேபர் வார்டின் உள்ளே சென்றப் பின்பு “அம்மா… மாறன்..” என்று மாற்றி மாற்றி இருவரின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தாள்..

“இன்னும் கொஞ்ச நேரம் தான் குகா.. புஷ் பண்ணுங்க..” மருத்துவர் கூற

“நான் என் ஹஸ்பண்டை பார்க்கணும்.. அவரை வர சொல்லுங்க.. பிளீஸ்..”

“குழந்தைப் பிறந்ததும் அவரைப் பார்க்கலாம்.. இப்போ புஷ் பண்ணுங்க..” என்று மருத்துவர் கூறியதை அவள் காதில் வாங்கவே இல்லை. “மாறன்..” என்று அவள் கத்த, மருத்துவர் செவிலியரை அழைத்து மாறனை உள்ளே வர சொன்னார்.. அவனுடன் சீதாவும் உள்ளே வந்தார்..

“பயமா இருக்கு மாறன்.. என்னால முடியலை.. என்னை விட்டு போயிடாதிங்க..” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டவள்

“இவ்வளவு வலிக்கும்ன்னு நீ எனக்கு சொல்லவே இல்லை.. ஏன் சொல்லல.. இருங்க வீட்டுக்கு வந்து உங்களை வெச்சுக்கிறேன்.. உங்க ட்ரெஸ்சை எடுத்து சாக்கடைல போடுறேன்.. என்று தாயை மிரட்டினாள்..” அவள் சொன்னதை கேட்டு மருத்துவரே சிரித்து விட்டார்.. மாறனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், மனைவி வலியில் துடிப்பது மற்றொரு பக்கம் மிகவும் வருத்தமாக இருந்தது..

“இன்னும் கொஞ்ச நேரத்துல பேபி வந்திடும்டா.. டாக்டர் சொல்லுறதை கேளு.. நான் எங்கயும் போகல.. வெளியே தான் இருக்கேன்.. உனக்கும் பேபிக்கும் ஒன்னும் ஆகாது..” அவள் கையை அழுத்திவிட்டு மாறன் வெளியே செல்ல, சீதாவும் “பயப்படாம இரு..” என்றுவிட்டு வெளியே வந்தார்..

“ம்மா..” என்று குகா கத்தினாள்..

“குகா.. இப்படியே கத்திகிட்டு இருந்தா உங்க ஸ்ட்ரெந்த் எல்லாம் அதுலையே போகிடும்.. குழந்தையை புஷ் பண்ணுங்க.. அரை மணி நேரத்துல உங்க குழந்தையை பார்த்துடுவீங்க.. இதை மனசுல வெச்சிட்டே புஷ் பண்ணுங்க..” மருத்துவர் அவளிற்கு மெதுவாக ஒவ்வொன்றையும் சொல்லி, ஒருவழியாக அவளை குழந்தையை புஷ் செய்ய வைத்தார்.. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அவர்களின் மகன் பூமியில் அவதரித்தான்..

குழந்தையை பார்த்ததும் தான் எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.. குகா மயக்கத்தில் இருந்து விழித்ததும், மாறனையும் குழந்தையும் பார்தவளிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது..

“இவன் வெளிய வரதுக்குள்ள ரொம்ப படுத்திட்டான்ல” மகனை கையில் வைத்துக் கொண்டே மனைவியிடம் அவன் கூற, அவளும் சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையை ஆட்டினாள்..

மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தனர்.. சீதா மகளிடம் லேபர் வார்டில் அவள் தன்னை மிரட்டியதை சொல்லி சிரிக்க

“நான் அப்படி சொன்னேனா மா..” என்றாள் குகா அப்பாவியாக

“ஆமா சொல்லவே இல்ல..”

“ஏதோ வலில சொல்லிட்டேன்.. ஹீ.. சாரி மா..”

“பொழைச்சுப் போ..” என்றவர் பேரனை கொஞ்ச ஆரம்பித்தார்.

                         *****************

“ப்ரஜூ இதை மட்டும் எழுதிடுடா.. அவ்வளவு தான்..” கையில் நோட்டுடன் மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் குகா..

“அப்பா எப்போ வருவாங்க?” தாய் கூறியதை காதிலே வாங்காமல், அவன் வேறு கேள்வியை கேட்க,

“நீ இதை எழுதி முடி அப்பா வந்திடுவாங்க..”

“டோன்ட் லை.. இப்படி தான் ரொம்ப நேரமா சொல்லுறீங்க.. அப்பா வரவே இல்லை..” முகத்தை அவன் தூக்கி வைத்துக் கொள்ள

“என் செல்லம்ல.. நிஜமா இப்போ நீ எழுதி முடிச்சதும் அப்பா வந்திடுவார்..”

“நிஜமா?” கையை தாய் முன்னே நீட்டி அவன் கேட்க,

“நிஜம் தான்..” என்று அவன் கையில் தட்டினாள் குகா.

“சரி கொடுங்க மா எழுதுறேன்..” என்று சமத்தாக உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தான்.. நடுநடுவே “பினிஷ் பண்ணதும் அப்பா வந்திடுவார் தானே” என்று கேட்கவும் அவன் மறக்கவில்லை..

போன வருடம் தான் மாறனின் தந்தை சுதாகரன் ரிடையர் ஆகியிருந்தார்.. அவர் ரிடையர் ஆனதும், இருவரையும் மாறன் இங்கே அழைத்து வந்துவிட்டான்..

“இன்னும் அவன் வரலையாமா?” என்று கேட்டுக் கொண்டே சித்ரா அவரது அறையிலிருந்து வந்தார்.. அவரைப் பார்த்து குகா பேசாதிங்க என்று சைகை செய்ததை அவர் கவனிக்கவில்லை.. பாட்டியின் பேச்சை கேட்டவன் மீண்டும் “அப்பா எப்போ வருவார்?” என்று ஆரம்பித்தான்..

“அத்தை..” என்று சினுங்கியவள், அவன் அதற்கு முன்பு செய்த அலம்பலை சொல்லி “அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு எழுத உட்கார வெச்சேன் தெரியுமா? போங்கத்தை.. இப்போ மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்..”என்றாள் சோகமாக..

“அச்சோ சாரி மா.. நான் எதார்த்தமா கேட்டேன்..” என்றவர் பேரனை சமாதானப்படுத்தி எழுத வைத்தார்..

பின் மெதுவாக மருமகளிடம் “எப்போ வருவான்னு போன் பண்ணிக் கேளேன்..” என்றார்

“அரைமணி நேரத்துல வந்துடுவேன்னு சொன்னார் அப்போவே.. இன்னும் ஆளைக் காணோம்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

“ப்ரஜூ குட்டி..” என்று அழைத்துக் கொண்டே மாறன் உள்ளே நுழைந்தான்..

“அப்பா..” என்று பிரஜினும் வேகமாக தந்தையிடம் தாவினான்..

“ஹோம் வொர்க் செய்றீங்களா?”

“ஆமாபா.. இன்னும் ஒன்னு தான் இருக்கு..” என்றான் விரலை நீட்டி..

“சரி நீங்க எழுதுங்க.. அப்பா ட்ரெஸ் மாத்திட்டு வரேன்..” என்றவன், சித்ராவிடம் திரும்பி “அம்மா காபி சூட வேணும்..” என்றுவிட்டு அறைக்குச் சென்றான்..

‘நான் இங்க ஒருத்தி குத்துக் கல்லாட்டாம் உட்கார்ந்திருக்கேன்.. ஐயாவுக்கு நானெல்லாம் கண்ணுக்கே தெரிய மாட்டேன்.. அம்மாவும் பையனும் தான் தெரிவாங்க..’ குகா மனதினுள் கணவனைத் திட்டிக் கொண்டிருக்க, அறையிலிருந்து மாறன்

“குகா..” என்று அழைத்தான்..

‘என்னவாம் இப்போ.’ என்று நினைத்தவள் வெளியே “ஹான் வரேன்..” என்றவள் உள்ளே சென்றாள்..

“என்ன?”

“ஹீட்டர் வொர்க் ஆகலையா?”

“தெரியலையே.. நான் ஹீட்டர் யூஸ் பண்ணவே இல்ல ஒரு வாரமா..”

“குளிருது.. எப்படி குளிக்கிறது..” என்று அவன் மனைவியை முறைக்க

“என்னை எதுக்கு முறைக்கிறீங்க? அது வொர்க் ஆகாட்டி நான் என்ன பண்ண? அத்தை ரூம்ல போய் குளிக்க வேண்டியது தானே..” அவளும் முறைத்துக் கொண்டே சொன்னாள்..

“இருடி குளிச்சிட்டு வந்து உன்னை வெச்சுக்கிறேன்..” என்றவன் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு தாயின் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தான்..

இரவு உணவை உண்டுவிட்டு, மகனுடன் சிறிது நேரம் விளையாடியவன், ப்ரஜின் தூங்கியதும் அவனையும் தூக்கிக் கொண்டு “எனக்கு டயர்டா இருக்கு.. நானும் தூங்கப் போறேன்..” என்று படுக்க சென்றான்..

வேலைகளை முடித்து விட்டு குகா அறைக்குள் வந்த போது, மாறன் உறங்காமல் கேஸ் பைலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அதைப் பார்த்த குகா

“இது தான் நீங்க தூங்குற லட்சனமா? இன்னைக்கு தானே வந்தீங்க.. ரெண்டு நாளா அலைஞ்சிருப்பிங்க, ரெஸ்ட் எடுக்காம பைலைத் தூக்கிட்டு உட்காந்தாச்சு..” என்று கடிய,

“உனக்காக தான்டி செல்லம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. நீ வரவரை போர் அடிக்கும்ல அதான் இதைப் பார்த்துட்டு இருந்தேன்..” என்றவன் அவளைப் பிடித்து இழுத்தான்..

“ப்ச்.. மாறன்.. ப்ரஜூ தூங்குறான்.. சும்மா இருங்க..”

“அதெல்லாம் அவன் எழுந்துக்க மாட்டான்..” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.. மகன் படுத்திருந்த அறையின் கதவை சாத்தியவன் அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு இரண்டு நாள் பேசாத கதைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்தான்.. வெளியே இருந்துப் பார்பவர்களுக்கு பால்கனியில் ஆள் இருப்பது தெரியாது..

“குகா..” என்று அவன் ஒரு மாதிரி அழைக்க

“என்ன.. ஒரு மார்கமா கூப்பிடுறீங்க?”

“ப்ரஜூக்கும் நாலு வயசாகிடுச்சு..” அவன் இழுக்க

“சரி அதுக்கு என்ன?”

“அவனுக்கு ஒரு தங்கச்சிப் பாப்பா வேண்டாமா?”

“அதானே பார்த்தேன்.. அங்க சுத்தி இங்க சுத்தி, நீங்க இதை தான் கேட்பீங்கன்னு எனக்கு தெரியும்..”

“அதான் தெரியுதுல? அப்புறம் என்னடி..” என்றவன் அவளை இழுத்து முத்தமிட வர

“ப்ச்.. கொன்னுடுவேன் உங்களை..” என்று அவனைத் தள்ளிவிட்டாள் குகா..

“இப்பலாம் டிமிலிக்கு கூட பஞ்சம் ஆகிடுச்சி..”

“டிமிலி சொல்லாதிங்கன்னு அன்னைக்கே சொன்னேன்ல.. ப்ரஜூ முன்னாடி சொல்லிட்டு அவன் டிமிலினா என்னமா என்னமான்னு கேக்குறான்..”

“சொல்ல வேண்டியது தானே.. இது தான் டிமிலின்னு” என்றவன் அவள் இதழ்களை சிறைசெய்தான்.. அவனிடமிருந்து திமிறி விலகியவள்,அவனை இரண்டு அடிகள் அடித்து

“பையன்கிட்ட சொல்லுற விஷயமா இது..” என்றாள்..

“அப்போ என்கிட்ட சொல்லு..” என்றவன் மீண்டும் அவளின் இதழை நெருங்க..

“இவன் ஒருத்தனையே சமாளிக்க முடியலை. இவன் அப்படியே உங்களை மாதிரி என்னைப் படுத்தி வைக்கிறான்.. இதுல இன்னொன்னு வேறையா ஆளை விடுங்க..” என்றவள் எழுந்துக் கொள்ளப் போக, அவளை நகர விடாமல்

“நீ தானே மாசமா இருக்கும்போது எல்லாம், உங்களை மாதிரியே பையன் வேணும் வேணும்ன்னு சொன்ன. இப்போ என்னை மாதிரி இருக்கான்னு குறைப் பட்டுக்குற?” அவன் முறைத்துக் கொண்டே கேட்க

“அதெல்லாம் எல்லா பொண்ணுங்களும் மாசமா இருக்கும்போது நினைக்கிறது தான்.. பின்னாடி தான் அதோட விளைவுகள் புரியுது..”

“என்னை மாதிரி அவன் இருக்கான், உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும்ல..”

“ஒன்னும் வேண்டாம்.. என்னை மாதிரி நான் மட்டுமே இருந்துக்கிறேன்..”

“பிரஜின் சேட்டை செய்யுறான்னு சொல்லுற இல்ல.. இப்போ ரெண்டாவது பேபி அவனை விட சேட்டை செஞ்சா, அவன் சேட்டை கம்மி ஆகிடும்ல.. அதுக்கு தான் கேக்குறேன்..”

“என்ன பெரிய கோட்டை சின்னதா ஆக்க, அதை விட பெரிய கோடு போடுறதா நினைப்பா.. ஓடிடுங்க..”

“ஹே என்னடி.. நீ தானே போன வருஷம் ரெண்டாவது பேபி வேணும்னு கேட்ட இப்போ வேண்டாம்ன்னு சொல்லுற..”

“அகல்யா பொண்ணைப் பார்த்ததுல இருந்து, ஆசையா இருந்தது.. அப்போ நீங்க நோ தானே சொன்னீங்க..” போன முறை அகல்யாவின் குழந்தையின் முதல் பிறந்தநாளிற்கு சென்றப் போது அழகாக பிராக் அணிந்து, தலையில் குட்டிக் கிளிப்பு குத்தி, பார்க்க குட்டி தேவதை போல் இருந்தவளை குகா தூக்கிக் கொண்டே சுற்றினாள்..

“உன் பொன்னை எனக்கு கொடுத்துடுடி.. நீ வேற பெத்துக்கோ..” அகல்யாவிடம் இப்படி தான் அடிக்கடி அவள் கூறுவாள்.  மாறனிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றி கேட்டப் பொழுது, ”அம்மா தாயே.. ப்ரஜின் பிறக்கிற அப்போ நீ என்னை படுத்தின பாடே போதும்..” என்றான்.. இப்பொழுது அவனே இரண்டாவது பெண் வேண்டும் என்று கேட்டதும், குகா விருப்பம் இல்லாதது போல் கணவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.   

“அடிப்பாவி அதுக்காக இப்போ பழி வாங்குறியா? ப்ரஜூ பிறக்குறப்ப நீ செஞ்ச ஆர்ப்பாட்டத்துல தான் செகண்ட் பேபி வேணாம்னு அப்போ சொன்னேன்.. இப்போ ஆசையா இருக்கே..” என்றான் சோகமாக..

தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்தவள் “அப்போ நான் போடுற கண்டிஷனுக்கு எல்லாம் ஓகே சொல்லணும்..” என்றாள்

“நீ என்ன கண்டிஷன்னு சொல்லு.. அப்புறம் ஓகே சொல்லுவோமா வேண்டாமானு நான் யோசிக்கிறேன்..”

“அப்போ பொண்ணு கிடையாது..” குகா முறிக்கிக் கொள்ள

“டார்ச்சர் டி நீ..” என்றவன்.. “சரி ஓகே.. சொல்லு..”

“ம்.” என்று யோசித்தவள் “இப்போதைக்கு ஒன்னும் நியாபகம் வரலை.. தோனும் போது எல்லாம் சொல்லுறேன்.. அதுக்கு நீ ஓகே சொல்லணும்..”

“நேரம்.. சரி..”

“சரி இப்போ என்னைப் பத்தி ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்..”

“நான் என்ன கவிஞனா கவிதை சொல்ல?”

“சொன்னா தான் பொண்ணு.. இல்லாட்டி உனக்கு பண்ணு..”

“அம்மா தாயே.. மொக்கைப் போடாதே? இதுக்கு நானே மொக்கையா ஒரு கவிதை சொல்லிடுறேன்.” என்றவன் ஐந்து நிமிடம் யோசித்து விட்டு

“என்னவளாய் உனையேற்ற கனத்தில்

ஜனித்த நம் காதல்

காதலை கடந்த என் கடமை

அதையும் கடந்த உன் மாசற்ற அன்பு

அதற்கு ஈடாய் நானும் என் காதலும்

உன் காதலுக்கான மன்னனாய்

நிச்சயம் உனை காதல் செய்வேன் உன் கட்டளைப்படி கண்மணியே!”

என்றான்..

அவன் கூறியதைக் கேட்டு குகாவிற்கு, ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது..

“இவ்வளவு அழகா கவிதை சொல்லுவீங்களா நீங்க? சூப்பார இருந்தது மாறன்.. அஞ்சு நிமிஷத்துல எப்படி இவ்வளவு அழகா யோசிச்சீங்க?”

“உன்னைப் பார்த்தாலே கவிதை அருவி மாதிரி கொட்டுதுடா பேபிமா..” அவன் கண் அடித்துக் கூற,

“போடா..” என்றவள் அவனை அணைத்துக் கொண்டு

“அவ்வளவு பிடிக்குமா மாறன் என்னை?” என்றாள்..

“நீ சம்திங் ஸ்பெஷல்.. பல பொண்ணுங்க தங்களோட தப்பை ஒத்துக்காமா, சும்மா புருஷன் கூட சண்டைப் போட்டுகிட்டே இருப்பாங்க.. ஆனா நீ உன் மேல தப்பே இல்லாட்டியும், நம்ம சண்டைப் போட்ட நீயாவே வந்து என்னோட பேசிடுவ.. சாரி சொன்னாப் போதும் உன் கோபம் காணாமல் போகிடும்.. எவ்வளவு ஆபிஸ் டென்ஷன் இருந்தாலும், இந்த கிறுக்கி கிட்ட பேசினா அது காணாம போகிடும்..” என்று அவள் மூக்கைப் பிடித்து இழுத்தான்

“நீங்க கூட தான் சம்திங் ஸ்பெஷல்.. எத்தனை பேர் வைப்பும் வேலைக்குப் போறா, வீட்டு வேலையும் பாத்துகிறான்னு அவளுக்கு ஹெல்ப் பண்ணுறாங்க.. சிலர் கல்யாணம் ஆனக் கொஞ்ச நாள் மட்டும் ஹெல்ப் பண்ற மாதிரி சீன் போட்டுட்டு அப்புறம் எதுவும் பண்ண மாட்டாங்க.. ஆனா நீங்க இந்த அஞ்சு வருஷத்துல, ஊர்ல இல்லாத நாளைத் தவிர தினமும் எனக்கு ஹெல்ப் பண்றீங்க வக்கீல் வண்டுமுருகன்..”

“நான் உன்னைப் பத்தி எவ்வளவு உயர்வா சொல்லுறேன்.. நீ என்னை எப்பவும் சமையல்காரனாவே தான் பார்ப்பியா?”

“ஹாஹா.. ஆமா.. லைப்லாங் ப்ரீயா குக் பண்ண ஒருத்தர் கிடைச்சா விடுவோமா? அகல்யா சொல்லுவா, நீ சாப்பிடுறதுக்கெல்லாம் ஒரு சமையல்காரரைப் பார்த்து கல்யாணம் பண்ணு.. அப்போ தான் உனக்கு செட் ஆகும்ன்னு.. சமையல்காரர் கிடைக்காட்டியும்.. கிடைச்சவரை சமையல் காரரா மாத்திடுறேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. ஹீ அதே மாதிரி நடந்திடுச்சுல..”

“எல்லாம் நேரம்..”

“இப்படியே பேசிட்டே இருந்தா, என்னை மாதிரி பொண்ணு எப்படி கிடைக்கும்..” குகா முனுமுனுக்க, மாறன் அவளின் இதழை சிறை செய்தான்..

அவர்கள் வாழும் காலம் யாவும், மாறன் குகாவிற்கு சமைத்துப் போட்டே இழைத்துப் போவான்.. அதில் மாற்றம் இல்லை.. கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவது சகஜமே.. அதில் ஈகோ பார்க்காமல் குகா, மாறனைப் போல் உடனே பிரச்சனையை சரி செய்துக் கொள்பவர்கள் மிகவும் சிலரே..

கொஞ்சம் நீங்கள் விட்டுத்

தந்தால் சொர்க்கம் உங்கள்

வீட்டைத் தட்டும்…

கணவன் மனைவியே ஆனாலும், அவரவருக்கு என்று பெர்சனல் ஸ்பேஸ் கண்டிப்பாக இருக்கும்.. அதில் மற்றவர் நுழையாமல் இருந்தாலே பாதிக்கு மேல் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்..

அவரவர் எண்ணம் அவரவர்குண்டு

ஆதிக்கம் வேண்டாமே- ஒரு

தனிப்பட்ட சுதந்திரம்

இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே..

நன்றி..

 

      

Advertisement