“நான் என்ன எதிர் பார்க்கிறேன்? அவனை இங்க இருந்து அனுப்பணும்னு நினைக்கிறேன். ஆனா, அவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்னும் நினைக்கிறேன். இப்ப எதுக்கு என்னை பாக்காம போனான்? நான் அழகா இல்லையா?”, என்று குழம்பி போனாள் . ஆனால் அவளுக்கு என்ன தெரியும்? அவள் மேல் பொங்கிய காதலின் அழுத்தத்தை மறைக்க முடியாமல், கோழை போல் அவள் கண்களில் இருந்து மறைந்தான் என்று.
அடுத்து வந்த மணி நேரங்களில், அவள் புறம் பார்வையை திருப்பாமல் இருக்க பாடு பட்டான் முகில். அந்த நேரங்களில், அவன் பார்வைக்காக ஏங்கிய ராதிகா, அது கிடைக்காததால் உள்ளம் வாடினாள்.
அவள் மன போராட்டத்தை அறியாமல், “அண்ணா, அண்ணியை பாத்தீங்களா? உங்க பொண்டாட்டின்னு சிம்பாலிக்கா சொல்றாங்களாம். தாலியை எடுத்து வெளியே போட்டுருக்காங்க பாருங்க. ஆனா, அது தான் நீங்க கட்டின தாலியா?”, என்று கேட்டாள் அகிலா.
“ஆமா”, என்று சிரித்தான் முகில்.
“ஆமா மாமா, நான் காலைல அந்த பாசியை கொடு, நான் போட்டுக்குறேனு சும்மா கேக்குறேன், முறைச்சிட்டு தர மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டா”, என்றாள் வித்யா.
இந்த நிகழ்வுகளை கேட்கும் போது, முகிலுக்கு சந்தோசமாக இருந்தது. “இவங்க சொல்றதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? அவ என்ன விரும்புறானு தான அர்த்தம்?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
அங்கே இருந்து ஒரு விரலை ஆட்டி “கொன்னுருவேன்”, என்று மிரட்டினாள் ராதிகா. அவள் செய்கையில் மயங்கினான் முகில் வேந்தன்.
“அவ கிட்ட இன்னைக்கே பேசணும். மன்னிப்பு கேட்டா, மன்னிச்சிருவா. இன்னும் எத்தனை நாள் என் பொண்டாட்டியை கண் முன்னே வச்சிக்கிட்டு, யாரோ மாதிரி பாக்க?”, என்று நினைத்து கொண்டான்.
அடுத்து வித்யாவும், அகிலாவும் அவனிடம் ரகசியமாக பேசி கொண்டே வந்தார்கள்.
அவர்கள் அங்கே ரகசியம் பேச, இங்கே மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது ராதிகாவுக்கு.
“இன்னைக்கு இவனை இங்க இருந்து, போக சொல்லணும். கண் முன்னாடி இவனை வச்சிட்டு நான் கஸ்ட பட முடியாது”, என்று நினைத்து கொண்டு கண்களில் காதலை தேக்கி அவனை பார்த்தாள் ராதிகா. “இங்க இருந்து போயிட்டான்னா, எப்படி நான் இவனை பாப்பேன்?”, என்று தனக்குள் கேட்டு கொண்டாள்.
வீட்டுக்கு வந்தவுடன், அவனிடம் பேச காத்திருந்தாள் ராதிகா. ராம் ஹாலில் அமர்ந்திருந்தான். முகில் அறைக்குள் சென்றான். ராமை ஒரு பார்வை பார்த்து விட்டு, முகிலிடம் பேச அவன் அறைக்குள் சென்றாள்.
ராம் அவளை பார்த்து கொண்டு தான் இருந்தான். “எப்பா, இப்பவாது பேச போறாளே”, என்று நினைத்து சிரித்து கொண்டான்.
நேராக உள்ளே சென்ற ராதிகா, கதவை பூட்டி தாள் போட்டாள். அங்கே சட்டையை கழற்றி விட்டு பணியனோடு அமர்ந்திருந்தான் முகில்.
வீராப்பாக அவன் முன்னே சென்றவள், அவனுடைய தோற்றத்தை கண்டு திகைத்தாள்.
“நான் சும்மாவே இவனை ரசிப்பேன். இப்ப இப்படி இருந்தா, என்ன செய்ய?”, என்று நினைத்து கொண்டு தலை குனிந்தாள்.
வந்த அவ வேகத்தையும், அடுத்து தன்னை கண்டு வெட்கி தலை குனிந்ததையும், கண்டவன் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “என்னங்க வேணும்?”, என்று கேட்டான்.
“என்கிட்ட மட்டும், யார் கிட்டயோ பேசுற மாதிரி பேசுறதை பாரு?”, என்று நினைத்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்து விட்டு “நீங்க, இங்க எதுக்கு தங்கி இருக்கீங்க? ஒழுங்கா உங்க ஊருக்கு போய்ருங்க”, என்று சொன்னாள்.
“நான், என் பொண்டாட்டியை கண்டு பிடிக்காம, எப்படிங்க போறது?”, என்று சிரித்தான்.
“உங்களை பார்த்தா பொண்டாட்டியை கண்டு பிடிக்க வந்த மாதிரி தெரியலை. அகிலா கூடவும், வித்யா கூடவும் சிரிச்சு கடலை போடுறீங்க, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?”, என்று கடின குரலில் கேட்டாள்.
அவள் கேள்வியில், மெதுவாக அவளை நெருங்கினான் முகில். “இப்ப எதுக்கு பக்கத்தில் வரான்?”, என்று முழித்தாள் ராதிகா.
கண்கள் மின்ன, அவளை இன்னும் நெருங்கினான் முகில்.
அவளுடைய மூச்சு காற்று படும் படி அருகில் வந்து நின்று, “ஏன் நேவா இப்படி பேசுற?”, என்று கேட்டான்.
“நான் ஒண்ணும் நேவா இல்லை. நான் ராதிகா”
“சரி, ஏன் ராதிகா இப்படி பேசுற? என்னை சந்தேக படுறியா?”
“நீங்க ஏன், அவங்க கிட்ட அப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க?”
“அவங்க கூட பேசினா, உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது?
“ஏன்னா, அவங்க என்னோட தங்கச்சிங்க, அதனால தான்”, என்று இழுத்தாள் ராதிகா.
“ராம் கூட தான், அவங்க கூட பேசுறான். அவன் மேல உனக்கு கோபம் ஏன் வரலை?”, என்று கேட்டான் முகில்.
பதில் சொல்ல தெரியாமல் முழித்தவள், “இப்ப எதுக்கு பேச்சை மாத்துறீங்க , நீங்க இங்க இருந்து போங்க முதலில்..”, என்றாள்.
“என்னை பாக்க, உனக்கு அவ்வளவு வெறுப்பா இருக்கா? சரி இங்க இருந்து போறேன்”, என்றவன் அவளுடைய தாலியை கையில் பிடித்து கொண்டு, “இதை கழட்டி தா, நான் போறேன்”, என்றான்.
“இதை எதுக்கு, நான் கழட்டனும்?”, என்று சொல்லி அதிலிருந்து, அவன் கைகளை விலக்கினாள்.
“சரி கழட்ட வேண்டாம். நான் போறேன்”, என்றவன், “நீ போலீஸ் தான? போறதுக்கு முன்னாடி இன்னொரு ஒரு தப்பு செய்ய போறேன். அதனால, நீ என் மேல கேஸ் போட்டுக்கோ”, என்று சொல்லி கொண்டே இன்னும் நெருங்கி வந்தான்.
“என்ன தப்பு?”, என்று கேட்டாள் ராதிகா. அவனுடைய அருகாமையில் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.
“அது வந்து, இந்த கமிஸ்னர் ராதிகாவை, கட்டி புடிச்சு முத்தம் கொடுக்க போறேன்”, என்று சிரித்தான் முகில்.
“என்னது?”, என்று அதிர்ச்சியானாள் ராதிகா.
“வேண்டாம், கிட்ட வராதீங்க”, என்ற படியே பின்னே நகர்ந்தாள். அவள் பின்னால் போக போக இன்னும் அவளை நெருங்கினான்.
“வாய் வேண்டாம்ணு சொல்லுது, ஆனா உன் முகம் அப்படி சொல்லலையே”, என்ற படி மேலும் நெருங்கினான் முகில்.
“வேண்டாம், அப்புறம் நான் கத்துவேன். பக்கத்துல வராதீங்க சொல்லிட்டேன்”
“என்ன ராதிகா நீ? இங்க எல்லாரும் ராதிகா ஐ. பி. எஸ்னு புகழ்ந்து கொண்டாடுறாங்க. எல்லா பேப்பர்லயும் உன்னை பத்தி எழுதுறாங்க. டிவி ல எல்லாம் உன்னை காட்டுறாங்க. ஆனா, நீ ஒருத்தன் உனக்கு முத்தம் கொடுக்க வந்தா, இப்படி நடுங்குற?”, என்று கேட்டு கொண்டே இன்னும் முன்னேறினான்.
அதுக்கு மேல் இடம் இல்லாமல் கதவில் சாய்ந்தாள் ராதிகா. “வேற எந்த பொறுக்கியாவது, இப்படி பக்கத்துல வந்தா, அவனை அடிச்சு துவைச்சிருப்பேன். உன்னோட அருகாமையை எப்படி டா என்னால வெறுக்க முடியும்?”, என்று தனக்குள் கேட்டு கொண்டு அமைதியாக நின்றாள்.
அவள் அமைதியை உணர்ந்த முகில், அதுக்கு மேல் தன்னை கண்ட்ரோல் செய்ய முடியாமல், அவளை கட்டி அணைத்தான். அவள் கைகள் அவளை அறியாமலே அவன் முதுகில் அழுந்தியது. அவளுடைய நெருக்கத்தை உணர்ந்தவன், அவள் முகம் முழுவதும் முத்தங்களை பதித்தான். இறுதியாக அவள் முகத்தை பார்த்தான். கண்களை மூடி அவன் தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள் ராதிகா. அவள் உதடுகள் துடித்து கொண்டிருந்தது.
“என்னுடைய தொடுகைக்காக தான துடிக்கிற? இனி துடிக்க விடமாட்டேன்”, என்ற படியே அவனுடைய இதழ்கள், அவள் இதழ்களை கவ்வி கொண்டது.
இனி இவனை சந்திக்க வாய்ப்பே கிடைக்காது என்று அவள் கலங்கி கொண்டிருக்கும் போது, இப்போது அவனுடைய அத்து மீறல் அவளின் புண் பட்ட இதயத்துக்கு மருந்தாக இருந்தது.
அவனுடைய ஆழ்ந்த இதழ் முத்தத்தை ரசித்தாள் ராதிகா.
ஏற்கனவே சேலையில் பார்த்து, பித்து பிடித்து போய் இருந்தான் முகில். இப்போது ஏற்பட்ட நெருக்கம் அவன் சித்ததையே தொலைத்தது. தன்னை நோக்கி இறுக்கி கொண்டான். அவள் இடுப்பில் அவன் கைகள் பதிந்தது.
அங்கு சேலை இல்லாத வெற்றிடையில் பதிந்த அவன் கைகள், அதன் மென்மையை அனுபவிக்க அங்கும் இங்கும் அலைந்து சில இடங்களை இறுக்கி பிடித்தது.
அவன் செய்கையில், இன்னும் அவனுடன் புதைந்தாள். அவள் காதில், “காலைல இருந்து வேண்டிக்கிட்டு இருந்தேன் டி, உன்னை பக்கத்துல பாக்க கூடாதுன்னு. எப்படி இருக்க தெரியுமா சேலைல? அப்படியே எனக்கு சொக்குது. எங்கயாட்டும் உன்னை தூக்கிட்டு போய், என் கைக்குள்ளே வச்சிக்கணும்னு. அப்படி தவிச்சு தான் உன்கிட்ட இருந்து விலகி போனேன். ஆனா, நீயா வந்து இப்படி என்கிட்ட மாட்டுற? பசியில் இருப்பவனுக்கு பச்சை தண்ணி கிடைச்சாலே சந்தோச படுவான். நீ பாயாசமாவே வந்து நீக்குற? உறிஞ்சு குடிக்காம விடுவேனா?”, என்று சொல்லி கொண்டே அவளுடைய உதடுகளை மறுபடியும் சிறை செய்தான்.
ஏற்கனவே அவன் செய்கையில் மயங்கி நின்ற ராதிகா, அவன் பேச்சில் இன்னும் மயங்கினாள்.
“அவங்க கூட பேசுறேன்னு உனக்கு கோபமா? உனக்கு தங்கச்சினா, அவங்க எனக்கும் தங்கச்சி தான் டி லூசு. உன் பொறாமையை சீண்டி விட தான், அவங்க என்கிட்ட சிரிச்சு பேசுறாங்க. அப்பவும் அக்கா இப்படி செஞ்சா மாமா, அண்ணி இப்படி சொன்னாங்க அண்ணனு தான், ரெண்டு பேரும் என்கிட்ட பேசுவாங்க.
அவங்க கூட நான் பேசினாலே தாங்காம பொறாமை படுற நீ, ஏண்டி இன்னும் என்னை விட்டு விலகி இருக்க? நம்ம வாழ்க்கையில் நடந்தது எல்லாம் விதி ராதிகா. எல்லாத்தையும் மறந்துறலாமே ப்ளீஸ்”, என்றான்.
எதுவுமே சொல்லாமல், அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்த ராதிகா, இன்னும் அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தினாள்.
அவள் செய்கையை சிரிப்புடன் ரசித்தவன் , “சரி வா, உடனே ஊருக்கு கிளம்புவோம்”, என்றான் முகில். அடுத்த நொடி, சிலைக்கு உயிர் வந்தது போல் திடுக்கிட்டு, அவனிடம் இருந்து விலகினாள் ராதிகா. என்னவென்று அவளை பார்த்தான் முகில்.
“நான் எதுக்கு உங்க கூட வரணும்?”, என்று மயக்கம் தெளிந்தது போல கேட்டாள் ராதிகா.
அவள் கேள்வி புரியாமல் “நீ என்னோட பொண்டாட்டி நேவா. நீ என்கூட தான இருக்கணும்?”, என்றான்.
“நான் உங்க நேவா இல்லை. நான் ராதிகா மும்பை கமிஷனர்”, என்று சொன்னாள்.
ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்தது போல், காதல் மயக்கத்தில் சொல்லாமல் கம்பீரமாக சொன்னாள்.
“சரி நீ ராதிகா தான். நான் இந்த ராதிகாவை விரும்புறேன் போதுமா? வா போகலாம்”, என்றான் முகில்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நேவா. இப்ப ராதிகா, அடுத்து யாரோ?”, என்று இளக்காரமாக கேட்டாள் ராதிகா.
அவளை பார்த்து பல்லை கடித்தான் முகில். “ரொம்ப பேசாத ராதிகா. இப்ப நான் என்ன செய்யணும் சொல்லு? உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா? சொல்லு கேக்குறேன். நீ என்ன எதிர் பாக்குற?”
“அதெல்லாம் வேண்டாம். இந்த வீட்டை விட்டு போய்ருங்க. என் வாழ்க்கையை விட்டும் தான்!”
“கொஞ்ச நேரம் முன்பு, என் தொடுகையில் கரைந்தவளா, இப்படி சொல்றா?”, என்று நினைத்து கொண்டு, “சரி இப்ப நான் போகணும், அவ்வளவு தான? நான் போறேன். நீ வெளிய போ, நான் கிளம்புறேன்”, என்று சொல்லி கதவை திறந்து விட்டு, அவன் பேகை எடுத்து உடைகளை எடுத்து உள்ளே வைத்தான்.
அப்போதும் வெளியே போகாமல் அங்கயே நின்றாள் ராதிகா. “சமாதான படுத்துவான்னு பாத்தா, கிளம்புறான். இனி வரவே மாட்டானோ?”, என்று நினைத்து கொண்டே அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
திரும்பி பார்த்த முகில், அவள் நிற்பதையே பார்த்தான். “எவ்வளவு ஆசையை வச்சிட்டு நடிக்கிறா பாரு?”, என்று நினைத்து கொண்டு “நீ வெளிய போ, எனக்கு கண்டவங்க முன்னாடி டிரஸ் மாத்த முடியாது”, என்றான்.
“நானா டா கண்டவ?”, என்று அவன் சட்டையை பிடித்து கேள்வி கேக்கும் ஆவலை புதைத்து விட்டு வெளியே வந்தாள்.
கிளம்பி வந்த முகிலை பார்த்து எல்லாரும் அதிர்ச்சியானார்கள்.