அடுத்து வீரா, பைரவியை நாடி சென்றான்… அழகான பாவாடை தாவணி… சத்தியமாக எதிர்பார்க்கவில்லை வீரா… நல்ல டிசைனர் பட்டில்… பாட்டில்கிரீன் பாவாடை… நீல நிற தாவணியில் அதே பச்சை வண்ண டிசைனர் ப்ளௌஸ் அணிந்து நெற்றி சுட்டி வைத்து நின்றாள்.. நான்தான் இளவரசி என பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை அவ்வளவுதான்.. மற்றபடி நான் இளவரசிதான் என தோரணையாக நின்றாள்… கூட்டத்தில்..
விளக்குள் ஒளியிலும்.. தனக்கான விழா என்பதால் அது தந்த மினுமினுப்பிலும்… ஜொலித்த பைரவியை பார்த்தவன் கொஞ்சமாக அதிர்ந்துதான் நின்றான்…
இங்கு நான் வந்திருக்க கூடாதோ… இது.. இந்த விழா… இவள்… ‘இது.. விழா தேவையில்லை’ என்ற எண்ணத்தை மாற்றுகிறாளே… தவறாக வந்துவிட்டேனோ…
பாவம் அந்த போராளியின் மனம் நொந்தே போனது… தேவதைகளும் இளவரசிகளும் இருக்கும் இடத்தில் எனக்கு என்ன வேலை… நான் போராளி… போராளி அழுத்திச் சொல்லிக் கொண்டான்… ஒன்றுக்கு நான்கு முறை…
என்ன இருந்தாலும்… அந்த தூரத்தை நெருங்கிதானே ஆகவேண்டும்… அவளுக்கு மிக அருகில் வந்துவிட்டான்… பைரவி திமிராக நின்றிருந்தாள் அவனே வந்து வாழ்த்து சொல்லட்டும் என ஒர கண்ணால் அவனை பார்த்தபடியே தன் நட்பு வட்டத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்…
வீரா “ஹாய்…. ஹாபி பர்த்டே..” என்றான்… தன்னை முடிந்தவரை கட்டுபடுத்திக் கொண்டு… அவள்மேல் ஏதோ தனக்கு இருக்கு என தெரியும் அவனுக்கு… ஆனால் அவ்ளின்பக்கம் சாயாமல் தக்கிக் கொண்டான் இத்தனைநாள்… ஆனால் இன்று….
ரவி “தேங்க்ஸ்..” என்றாள்… ஏதோ ஒரு அலட்சியமான உடல்மொழியுடன்… அவன் கண்களை பார்க்காது, அலட்சியமாக சொன்னாள்…
வீராவுக்கு அது பிடிக்கவில்லை, போன ஷனம்… தானே… சர்க்கரையில் விழுந்த எறும்பு அவன்… இன்னும் கிறுகிறுத்து தானே நிற்கிறான்…
எனவே, தன் கட்டத்துக்குள் அவளை நிறுத்த நினைத்தான் போல… அந்த ஷணம் ஏனோ.. எப்போதும் அவளின் அலட்சியத்தை உணராதவன் இன்று எதையோ எண்ணி.. எங்கோ சென்றவனுக்கு… இந்த அலட்சியம் கோவத்தை கொடுக்க…
நான் யார்.. இவள் யார்… என்ன இடம் எல்லாம் மறந்தான் “எதுக்கு இவ்வளோ செலவு…. எதுக்கு இவ்வளோ ஆடம்பரம்… அன்னிக்கு அத்தனை பேருக்கு சாப்பாடு எடுத்துட்டு வர சங்கட பட்ட… இப்போ சும்மாவே இவ்வளோ பெரிய பார்ட்டி தர….
அன்னிக்கு இன்னும் பத்து பேருக்கு சேர்த்து சாப்பாடு போட்டிருந்தா… நல்லா இருந்திருக்கும்… இன்னும் பத்து வருஷம் சேர்த்து வாழ்ந்திருப்ப…” என இன்னும் ஏதோ சொல்ல வந்தான்…
பைரவி அவனின் பேச்சுக்கு, கைகாட்டி நிறுத்தினாள்… சுற்றிலும் நண்பர்கள்… ஆண் பெண் பேதாமில்லா நண்பர்கள்… பக்கத்து வீட்டு பிள்ளைகள்.. கொஞ்சம் சுற்றம்… நிறைய நட்பு எல்லோரும் வேடிக்கை பார்த்தனர் இவர்களை…
பெரிதான குரலில் பேசவில்லை… கோபமான சின்ன குரலில்தான் பேசினான் வீரா… ஆனால், பைரவியின் அருகில் நின்றிருந்த கூட்டம் இதை கேட்டு சற்று அமைதியாக, அதை தொடந்து அங்காங்கே இருந்த குழுக்களும் அமைதியாக, அந்த முன்பக்க தோட்டமே அமைதியகியது…
பைரவிக்கு முகம் மாறவில்லை… ‘நிறுத்து’ என உயர்ந்த கையை கீழே போட்டவள் ஏதோ பேச தொடங்க.. என்னவென்று பார்க்க வந்த சுந்தரம் தாத்தா… உள்ளுக்குள் லேசாக சிரித்துக் கொண்டார்..
அவனின் முழங்கையை பிடித்தவர் “வீரா… வீரா..” என சிரித்தபடியே அழைத்தார்… வீரா இப்போதுதான் இந்த உலகுக்கு வந்தான் தாத்தாவின் புன்னகை முகம் அவனின் அவமானத்தை சொல்ல… பைரவியிடம் தணல் பார்வை வீசி தாத்தாவை பார்த்தான்
தாத்தா “நோ….. நோ…. வீரா, உண்மையான வீரர்கள்… போர் களத்திலும் கட்டிலிலும் மட்டும்தான் உணர்ச்சிவசப்பட வேண்டும்” என்றார் சிரித்தபடியே ரகசியமாக அவனிடம் பேசியபடியே… தனியே அழைத்து சென்றார்…
அதற்குள் பைரவி “விடுங்க பிரண்ட்ஸ்… தான்தான் உலகத்தை திருத்த வந்தவன்னு நினைப்பு… அப்போ.. அப்போ.. இப்படிதான் பொங்கிடுவார்…. வாங்க விளையாடலாம்” என இயல்பாக சொல்லி… ஒன்றுமில்லை விழயம் என எல்லோரையும் அமைதிபடுத்தினால் அந்த கன்னி தமிழ்….
அங்கு வீராவின் முகம் இன்னும் தெளியவில்லை, தாத்தா “வீரா… இது எல்லோருக்குமான உலகம்…
ஏன்… நீயே உன் தலைவன் பிறந்தநாளை கொண்டாடமாட்டியா… அப்படிதான் இது…
உனக்கு சரியென படுவது… அடுத்தவனுக்கு தவறாக தெரியும்… வீரா “ என கூறிப்பிட்டு நிறுத்தினார் அவன் முகம் பார்த்து…
வீராக்கு என்ன உணர்வு என பிரித்தறிய முடியாத நிலையில் நின்று அவரை பார்த்தான், தாத்தா… “ரொம்ப நேர்மையா இருக்காத வீரா….
நேர்மையான மரங்கள்தான் முதலில் வெட்டுவார்கள்… தெரியும்தானே…” என்றார் அர்த்தமாய்…
மீண்டும் அவரே “உன்னை போல மத்தவங்களும் இருக்கணும் என எதிர்பார்ப்பது எவ்வளோ பெரிய முட்டாள்தனம் வீரா…
உன்னை மாற்றிக்க சொல்லலை… பழகிக்க சொல்றேன்… இது இப்படிதான்னு பழகிக்க வீரா…” என்றவர் அவனின் தோளில் தட்டி… அந்தபக்கம் சென்றார்… அமர்ந்து கொண்டான்… ஏனோ கோவப்பட தோன்றவில்லை… கோவம் என்பது இயலாமையின் வெளிப்பாடுதானே… வீரா அதை இப்போது உணர்த்து கொண்டான்…
அவரின் பொறுமை… இதோ இப்போது சொல்லி சென்றாரே அந்த வார்த்தை அதற்கு மதிப்பளித்து அமர்ந்து கொண்டான்… அப்படி பட்டென நகர்ந்தால்… அவரை அவமானபடுத்துவது போல என எங்கோ மனதின் ஒரு இடம் அவனுக்கு சொல்லியது…
இதே தன் வீட்டில் செய்திருந்தால்… தன்னை அந்த ஷணமே வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருப்பார்கள் என்ற உண்மை அவனை சத்தமில்லாமல் மண்டையில் ஏற… தன்னை அந்த இடத்துக்குள் நுழைத்துக் கொண்டான்..
சில அவமானங்களும்… வார்த்தைகளும்… நம்மை செதுக்கும் உளிகள்… அதை அவ்வபோது ஏற்போம்.. நம்மை நாமே செதுக்கிக்கொள்ள…
நேரம் கடக்க, ஐஸ் வந்தாள் பள்ளியிலிருந்து அவள் வருகைக்காக எல்லோரும் காத்திருந்தனர்… அவள் வந்து, உடை மாற்றி வந்தாவுடன் கேக் கட் செய்தாள் பைரவி…
நண்பர்கள் எல்லோரும் அழகு தமிழில்
“நீண்ட.. நீண்ட.. காலம்
நீ.. நீண்டு வாழா வேண்டும்…
லால்ல… லால்ல.. லா..
ல… ல்ல… லால்ல..
நீண்ட.. நீண்ட.. காலம்
நீ.. நீண்டு வாழா வேண்டும்…
அன்பு வேண்டும்… அறிவு வேண்டும்
பண்பு வேண்டும்.. பரிவு வேண்டும்…
எட்டு திக்கும் புழக வேண்டும்…
எடுத்துகாட்டு ஆகவேண்டும்…” என எல்லாரும் பாடினர்… வீராவுக்கு ஆச்சிரியமாக இருந்தது… அமைதியாக அமர்ந்திருந்தான் இருந்த இடத்திலிருந்து எழாமல்…
ஐஸ் இவனுக்கு தேவையானதை கொண்டு வந்து கொடுத்து வீராவின் அருகில் அமர்ந்து கொண்டாள்… “என்ன வீரா ண்ணா… என்ன பிரச்சன… என்ன சொன்னீங்க அக்கா கிட்ட…
ஐஸ் “எல்லாம் இந்த ரவுடியலாதான்… அம்மா கூட ஸ்பெஷல் கிளாஸ் வேண்டாம்… பஸ்ட் பஸ்ல வந்திடுன்னு சொன்னாங்க…
இவதான்… அதெல்லாம் வேண்டாம்… எல்லாம் முடித்து வரட்டும், நான் வெயிட் பண்றேன்… இதுக்காகவெல்லாம் கிளாஸ் கட் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டா… ரொம்ப நல்லவ..” என பொருமியபடியே அந்த கேக்கை உண்டாள் சின்னவள்…
வீராக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை… மொத்தமாக குற்றவுணர்விலிருந்தான்… “ம்….கூம்…” என கேட்டுக் கொண்டான்.. ஏதும் பேசமுடியவில்லை.
கொஞ்ச.. கொஞ்சமாக கூட்டம் உண்டு கிளம்பியது… இவன் ஐஸ்க்கு பாடம் சொல்லி தருகிறேன் என ஹாலில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான்… யாருடனும் பேசாமல்…
எல்லோரும் சென்றவுடன் தாத்தா, வந்தார் இருவரையும் பார்த்து “வாங்க நீங்க ரெண்டுபேரும், நானும் மட்டும்தான் பாக்கி… சாப்பிடலாம் வாங்க ” என்றார்.
ஐஸ் “தோ.. தோ…. டூ மினிட்ஸ்” என்றாள்…
தாத்தா அதற்குள் ‘நீ ஏன் வெளியே வரல… அந்த பிரபா உன்னை கேட்டாங்க… நீ வரலையான்னு… உள்ள வந்து பார்த்தாங்களா” என ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார் வீராவிடம்…
அதற்குள் ஐஸ், எல்லாவற்றையும் எடுத்து வைத்து வந்தாள்… உண்ண சென்றனர்.. மூவரும்… அங்கே பரிமாறும் இருவர் மட்டும் இருந்தனர்… கூடவே கோதையும் பைரவியும் இருந்தனர்…
வீரா, நான்வெஜ்சை முழுதாக ஒருவெட்டு வெட்டினான்.. கோதை பார்த்து பார்த்து பரிமாறினார்.. தன் மகளை ஏதோ சொன்னான் என தெரியும் ஆனாலும் அவனிற்கே செய்தார்…
பைரவிக்கு கோவம்… இப்போதுதான் யாருமே இல்லையே என “இன்னும் நிறைய போடும்மா… ஏன் காச வேஸ்ட் பண்றேன்னு கேட்டார்… போடு…. நான் ஆடம்பரமா இருக்கேனாம்… போடு…
அதோ அந்த மட்டன் ஜாப்ஸ் எடுத்து வைச்சில்ல… போடு… போடு…” என தொடங்க….