இப்போ பாரு, நான் அப்படியேதான் இருக்கேன்… எல்லாம் உங்களுக்காகத்தான்…” என்றான் அந்த சப்பாத்தியை உண்டபடியே… முகம் கலையாக மின்னியது…
“டேய்…..” என்றார்.. கல்யாணி
ப்பா… அன்னையின், கண்ணை பறித்தது…. அவனின் ஒளி முகம். என்னதான் இருந்தாலும்… நினைப்பதை, புரிந்து நடக்கும் மனைவி அமைவதெல்லாம்…. வரமாக ஒருசிலருக்குதான் கிடைக்கும்… அதில் வீரா, கொஞ்சம் பாக்கியம் செய்தவன் போல….
காதலான…. புரிந்து கொண்ட மனைவி… கூடவே, ஏன் எதற்கு என கேள்வியும் கேட்கும் அறிவு… எதையும் எடுத்து சொல்லும் துணிவு… என ரவி கொஞ்சம் ஸ்பெஷல்தான் வீராக்கு… அதன் வீச்சு அவனிடம் தெரிய… கல்யாணி ரசித்துக் கொண்டிருந்தார் மகனை.
அவனும்… முகம் ஒளிர தன் அன்னையை வம்பிழுத்தபடியே உண்டான். முடித்து… மேலே சென்றான்…
கதவை திறந்து பார்க்க… தன்னறை… இத்தனை அழகா எனத்தான் தோன்றியது வீராக்கு… ‘விடிவிளக்கின் ஒளியில் தேவதை உறங்குமென இப்போதுதான் பார்க்கிறேன்…’ வீரா மனத்தில் காதல் வசனம் ஓட….
மனமெல்லாம் நிறைந்து இருந்தது…. எத்தனை இருந்து என்ன… நான் வருகையில் வீட்டில் ஒருத்தி எனக்காக இருக்கிறாள்.. உடல் பொருள் ஆவி எல்லாம் எனக்கெனவே…. கண்ணில் வைத்து காத்திருப்பாள் என்பதுதானே வாழ்வை நிறைக்கும் ஒரு விஷயம்… இன்று அவனின் வாழ்வில் அதை உணர்ந்தான் வீரா..
அதை மனதில் கொண்டே அடித்து பிடித்து ஓடிவந்தான்…. மிதமான acயில் பாதங்கள் போர்வைக்கு வெளியே தெரிய… நிமிர்ந்து படுத்து அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்… பைரவி.
மென்மையான பஞ்சு பாதங்களை வருடிய கைகள்… அதில் லேசாக அழுத்தம் கொடுத்து… விரல் வரை பிடித்து விட்டன… இன்னும் விழிப்பு இல்லை அவளிடம்..
பின் கொலுசின் வரிவடிவை தடவும் விரல்கள்… ரவி, லேசாக திரும்பி படுக்க…
இப்போது கெண்டைகால் நோக்கி கைகள் பயணிக்க… கனவிலிருந்து ரவி… பட்டென எழுந்தாள்…
அவளின் கால்மாட்டில்… தன்னை தவிக்கவிட்டவனின் வரிவடிவம் தெரிய…. எழுந்து அமர்ந்தாள். அவள் சுதாரிக்கும் முன்… தன்னவளை அனைத்திருந்தான் வீரா, ஆவேசமாய்…
ப்பா… திமிறி அவனிடமிருந்து தன்னை பிரித்தெடுத்தவள்… அவனை முறைக்க, முடியவில்லை… மீண்டும் கண்களில் நீர் சேர்ந்தது… வீரா அருகில் வர…. “சட்..” என சத்தம்….
வீரா, தன் கன்னத்தை… தன் இடகை நடுவிரலிலும், சுட்டு விரலாலும்… தடவிய படியே தன்னவளை பார்க்க… அவளின் உதடு பிதுங்குவது தெரித்தது…. வீராக்கு.
“என்ன டா” என்றான் ஆண்மையின் ஏக்கமான குரலில். அவள் அடித்ததற்கு ஏதும் கோவபடாமல்… இன்னமும் ஏக்கமாக கேட்டான்.
ஆசையாய் வந்தான் அவளருகில்… ‘எத்தனைநாள் தவிக்க விட்டுவிட்டேன்… என்னவளை, நின்று பேச கூட இல்லை… ஏதோ காரியவாதி போல… வேலையை பார்த்து வந்துவிட்டேன்…’ என அவனுக்கு உருத்திக் கொண்டே இருந்தது….
அதனால் தன்னவள் அடித்தது வலிக்கவில்லை போல… அவளின் வரிவடிவம் அழுகையை காட்ட… வாஞ்சையாய் வார்த்தை வந்தது… “ரவிம்மா” என்று.
ரவி அவன் நெஞ்சில் சாய்ந்து “சாரி… சாரி… வீரா…” என்றாள் அழுதபடியே…
ஒன்றும் சொல்லவில்லை… பொறுமையாக அவளின் முதுகை நீவி விட்டவன்… தலை கோத தொடங்கினான்…
வீராக்கு தோன்றியது… எங்கே ‘பேசாமல் இருந்துவிடுவாளோ… இல்லை ஒதுங்கி போய்விடுவாளோ’ என வரும்போதெல்லாம் ஒரே யோசனை…
இப்போது அவளின் கோவம் பட்டென ஒரே அடியில் வெளிவந்தது சற்று நிம்மதியை தந்தது…. மெல்ல அவளை தோளில் சாய்க்க…. இன்னும் அவனை அடித்தாள் பாவை.
மெல்ல ஓய்ந்து, நிமிர்ந்து அவனின் கன்னம் வருடியது ரவியின் விரல்கள்… அந்த விரல்களை பிடித்துக் கொண்டான்… “என்ன அடிச்சிட்டு, சீன் போட்றீயா” என்றான் கொஞ்சம் காரமாக….
அப்படியே உன் பின்னாடியே ‘சொல்லுடா தங்கம்.. புஜ்ஜுன்னு…’ கொஞ்சிக்கிட்டே சுத்துவேன்னு நினைச்சியா” என்றான் தனது மீசையை நீவியபடியே…
ரவி அவனை தள்ளி விட “இருடி…” என அவளின் இடையை இழுத்து பிடித்தவன்… திமிர திமிர அவளுக்கு முத்தமிட்டான்.
பின் “இட்ஸ் வீரா, டார்லிங்…. இப்படி எதிர்பார்க்காம…தான்… வீரா இருப்பான்…” என்றபடி அவளின் கழுத்தில் முகம் புதைக்க… அவன் முதுகில் அடி விழுந்தது… எங்கே அவனுக்கு வலித்தது… அவள், சுவை தவிர.. வேறு தெரியவே இல்லை…
“போடா.. போடா… வராத பக்கத்தில்… போடா” என அவள் திமிறி, அவனை தள்ள… வீரா… “சரி… சரி… கூல்……” என்றபடி எழுந்தான்.
“நான் ரெப்ரெஷ்ஷாகி வரேன் ரவி….” என்றான், அவளின் நைட்டியை சரி செய்தபடியே…
ஒன்றும் சொல்லாமல் அவனிடமிருந்து விலகினாள் ரவி. அடுத்த பத்து நிமிடத்தில்… வீரா, எப்போதும் போல, ஷார்ட்ஸ் டி-ஷர்ட்டில் வந்து அவளருகில், கட்டிலின் ஓரத்தில் கால் நீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
ஏதும் பேசவில்லை, மெல்ல அவளின் இடை பற்றி, தன்னோடு இழுத்து அமர்ந்து கொண்டான்… அமைதியான நிமிடம் அது… ஏதேதோ சொல்ல தோன்றியது வீராக்கு… அவளுக்கும், அவன் வாயிலிருந்து ஆசையாய் கேட்க தோன்றியது… ஆனால், எப்போதும் போல, யார் தொடங்குவது… என நிமிடங்கள் நகர்ந்தது…
வீரா, மெல்ல அவளின் கைகளை பற்றியபடியே “ரொம்ப கஷ்ட்டபடுத்துரனா” என்றான். ஆழமான குரல்… அவளையும் உயிர் வரை தீண்டியது…
மொத்தமாக ஐந்து நிமிடம் ஏதும் சத்தமில்லை ரவியிடமிருந்து…
மெல்லிய குரலில் “ம்….. இல்ல… நான்தான் ரொம்ப உங்களுக்கு அடிக்ட் ஆயிட்டேன்… அதான் போல…. நிறைய எதிர்பார்க்குறேன்… நீ… நீங்க சரியாதான் இருக்கீங்க” என்றாள்.
ரவியின் நாணம்… அழகாக… மௌனம் பேச… வீரா, இன்னும் ரசித்தபடியே “தேங்க்ஸ்….” என்றான்.
ரவி அவன் தோளில் சாய்ந்திருந்தவள்… எழுந்து, அவனை பார்த்து மீண்டும் அடிக்க… வீராவும், ஒரு சின்ன இதழ் முத்தம் தந்தான்… கூடவே “இனி அடிச்ச… இப்படிதான்” என்றான்.
அவனையே உற்று பார்த்து “எப்படி வீரா…. உங்க வேகத்துக்கு… நீங்க சின்ன வயசுல…. போராடினதுக்கு…. ஒரு திருடனா தானே (நக்சலைட்டாதானே) மாறியிருக்கணும்… எப்படி… இப்படி… வீரா…” என்றாள் சிரியாமல்….
ஒன்றும் சொல்லவில்லை வீரா… அமைதியாகினான்… அவனை பார்த்து பார்த்து… ரவி லேசாக சிரிக்க… “வேணாம் டி… ஏதாவது செய்வேன்… பேசற மூட் போயிடும்” என்றான் அமைதியாக..
அமைதியாகினாள் ரவி…
பின் வீரா “அப்படியா இருந்தேன். இருக்கலாம்… கொஞ்சம் வேகம் தான்… கண்மண் தெரியாத புரிதல்தான்…. இருக்கலாம்…
ஆனா, தாத்தா… இல்லைன்னா… நானில்ல ரவி… அவருக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல கூடாது… குரு தட்ஷனையா ஏதாவது செய்யணும்… தெரியல… ஆனா, செய்யணும்” என்றான் பொறுப்பாய்.
ரவியும் “ம்….” என சொன்னாள், அவ்வளவுதான் ஏதும் பேசவில்லை… வீராவின் கண்களில் அவனின் வாழ்க்கை, படமாக ஓடியது… சற்று நேரம் அதில் லயிதான் அவன்.
மெல்ல ரவி “என்ன… சார்… ப்ளாஷ்பாக்கா…” என்றாள்.
“ம்….” என்றான் பெருமூச்சு விட்டு.
தன்னை மீட்டுக் கொண்டு… “ஆனாலும் எப்படி, நான் கல்யாணத்துக்கு… கேட்டதும் சரின்னு சொல்லிட்ட…
எப்படிடி… நான் அவ்வளோ இம்ப்ரெஸ்… பண்ணியிருந்தேன்னா….” என்றான் குறுகுறுப்பு கண்ணில் அப்பட்டமாய் தெரிந்தது…
ரவி “நான் அப்போவே என்னை பத்தி சொல்லிட்டேன்…. நீங்கதான் சொல்லணும் இனி” என்றாள்.
மீண்டும் பட்டென அவனின் தோளில் தட்டினாள்… ரவி. இப்போதும் சொன்னதை செய்தான் வீரா… இப்படி ரவியை நிறைய வெட்கப்பட வைத்தான்…
பின் தானே மீண்டு… “சொல்றதுக்கு ஒண்ணுமில்ல….” என்றவன் அப்படியே அவளின் மடியில் படுத்துக் கொண்டான்… “உன்னை பார்த்ததும் பிடிச்சுது… அப்புறம் உன் பேச்சு… அவ்ளோ போல்டா நீ பேசும் போதும்…
அத்தனை அருமையாய் நீ கம்பனை ரசிக்கும் போதும்… நான் உன்னை ரசிக்காமல் இருந்தால்… நான் ரசனையே இல்லாதவன் தானே….
சொல்லு… “ என்றான் அவளின் கன்னம் தீண்டி…
“ம்… நல்லா பேசுறீங்க…” என்றாள்.
“ம்.. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்த பாரு… ஒரு பார்வை… அந்த சின்ன பொண்ணு கிட்ட நான் அவ்வளவு தோத்து போயிட்டேன்டி…
அதவிட… அன்னிக்கு சொன்ன பாரு… வாய் சொல் வீரர்ன்னு… அதில் இன்னும் தோற்றுவிட்டேன்…
அங்க, கொஞ்சமா என்னை மாத்திட்ட… நீ…
ஏனோ, அப்பதான் பேசறது ஈஸி… ஒரு வேலை செய்து பார்த்தாதான் தெரியும்… அதோடு கஷ்ட்டம்…ம்ன்னு, அப்போத்தான் தோணிச்சு… சின்ன பொறி…” என்றபடி… அவளின் வயிற்றில் முத்தமிட்டான்…
அவளின் கைகளை எடுத்து தனது கன்னத்தில் வைத்தபடியே… “இப்படி என்னோட முக்கியமான நேரங்கள்… உன்னிடமிருந்து வந்ததா நான் பீல் பண்றேன்….
ரவிக்கும் அப்போதைய நேரம் நினைவு வந்தது… மெல்ல தலையசைத்தாள்… வீரா, ஏதும் கேட்கவில்லை… மெல்லிய சாரலாய்… அங்கு காதல் தூர தொடங்கியது…
வீரா “இன்னும் ஏதும் எக்ஸ்ப்ளைன் வேணுமா” என்றான் விவகாரமாய்…
ரவி, என்ன…. என யோசிக்க… “அந்த ஷால்… மொவேமென்ட்… அந்த வீடியோ கால் டைம்…. அதுக்கெல்லாம் விளக்கம் சொல்லனுமா” என்றான் சிரித்தபடியே…
பட்டென அவன் தோளில் அடி விழ… இப்போதும் சொன்னதை செய்தான் வீரா…
அந்த, இரவும்…. விடியலும்… இவர்களின் அமர்க்களத்தை… சற்று நேரம் வேடிக்கை பார்த்து, பொறுமையாகவே… தங்களை பிரித்துக் கொண்டது போல… இன்று சூரிய உதயம் காலை ஆறு நாற்பதுக்கு தான் உதித்ததாம்… தினசரியில் இருந்தது…
“நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்…
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா…
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்…
நீ என்னை தாலாட்டும் தாய்யல்லவா…
ஏதோ… ஏதோ… ஆனந்த ராகம்…
உன்னால் தானே… உண்டானது…
கால்போன பாதைகள்… நான் போன போது…
கை சேர்த்து… நீதானே… மெய் சேர்த்த மாது….”
காலையில் சற்று நேரம் சென்றே… கிளம்பி, கீழே வந்தனர்… பின் மெல்ல மெல்ல வீட்டினரிடம் பேசி, உண்டு… என பொழுது போகியது…
மாலையில் எல்லோரும் ரமணாஸ்ரமம் சென்று வந்தனர்… வீராக்கு அது மிகவும் பிடிக்கும்… அதுவும் அந்த த்யான மண்டபம்… மிகுந்த இஷ்ட்டம் அவனுக்கு.
நீண்டநாள் சென்று… அங்கே போய் அமர்ந்து கொண்டான் வெகு நேரம்… வீரா. குடும்பமே சென்றதால்… எல்லோரும், வேறு எல்லா இடமும் சுற்றி வந்தும்… இவன் வெளிவரவில்லை…
முன்பிலிருந்து பழக்கம் என்பதால்… ரமணர் பயன்படுத்திய பொருட்கள் இருக்கும் அறையின் உள்ளே… சென்று பார்க்க அனுமதி தந்தது… மேனேஜ்மென்ட்.
அதனையும் பார்த்து வந்தனர்… அப்போதுதான் வீரா வந்தான். பைரவி இப்போது அவனை அதிசியமாக பார்த்தாள்.., “த்யானம் வருமா உங்களுக்கு” என்றாள்.
“அதென்ன வருமா…. போய் அமைதியான இடத்தில் உட்கார்ந்தா வரனும்… மனசு… அமைதியை விரும்பாமா இருக்குமா… அதுவும் வைப் பக்கத்தில் இருக்கும் போது… இது ரொம்ப முக்கியமில்லையா…” என்றான்.
“நம்பும்மா…. நம்பிக்கை அதானே எல்லாம்…” என்றான் அவளின் தோளில் கைபோட்டு… கையை எடுத்து விட்டு எல்லோருடனும் சேர்ந்து நடந்தாள் ரவி… அவளை பின் தொடர்ந்தான் வீரா.
ரவிக்கு மலை சுற்ற வேண்டும் என ஆசைதான்… நேரம் இல்லையே… அடுத்த முறை என்னுடன் வரவேண்டும் என்றாள் வீராவிடம் ‘பார்க்கலாம்’ என்றான் சிரித்தபடியே.
இரவு, வீடு வந்து, உண்டு… சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பதினொரு மணிக்கு… சென்னை நோக்கி பயணம் தொடர்ந்தது… இருவருக்கும்.
காரில் வர வர…. பள்ளியில் வீரா செய்த சாகசங்களை சொல்லி ‘அப்படியா… அப்படியா…’ என கேட்டுக் கொண்டே வந்தாள்…
“ஆமாம்டி… நீ இப்படி கண்ண விரிச்சி கேட்பேன்னு தெரிஞ்சிருந்தா… இன்னும் நிறைய போராடியிருப்பேனே…” என்றான் கண்சிமிட்டி…
கல்லூரி குறித்து சொல்லிக் கொண்டிருந்தான் வீரா…
அதன் பிறகு… IAS படிப்பு குறித்து சொல்லிக் கொண்டே வந்தான்… இப்போதுதான் முழுதாக…. நான்கு மணி நேரம் பேசிக் கொண்டனர் இருவரும்…
புரிதல் என்பது… ஒருவகை நெருக்கம் எனில், இது போல ஒருவரை ஒருவர் ஒட்டி… உரசி… பழங்கதை பேசி… அறிவது என்பது… அலாதியானது தானே… இருவரும் அந்த அலாதி இன்பத்தை நுகர்ந்து படி வந்தனர்… சென்னைக்கு.
நேரே வீரா, வீட்டிற்கு சென்றனர் இருவரும்… பெற்றோரை தொந்தரவு செய்யவில்லை இருவரும்… மெல்ல காலை பத்து மணிக்குதான் எழுந்து வந்தனர்.
அதன்பிறகு… பைரவி குறிப்பு… பேச்சு… என பார்த்துக் கொண்டாள்…
வீரா, தாத்தாவுடன் பேசிக் கொண்டே…. அவளை எப்போதும் போல ரசித்துக் கொண்டிருந்தான்.
ராகவ் ஊருக்கு செல்லவில்லை இன்னும் விடுமுறை மீதமிருக்கிறது… எனவே விஸ்ராந்தியாக பேப்பர் பார்த்தபடியும்… கோதையுடன் பேசியபடியும் நேரத்தை கழித்தார்.
ஐஸ், ஈவ்னிங் வந்தாள்…. இப்போதுதான் வீடு ஆட்டம் கண்டது… தன் அக்காவை ‘குண்டாகிட்ட’ என்றாள்.
தன் மாமாவிடம் வந்தாள் அடுத்து… “மாமா…. “ என்றாள் கலவரமாக…
வீரா “என்ன டா… என்ன வேண்டும்” என்றான்… ஒரு தந்தையின் வாஞ்சையான குரலில்.
“இன்னிக்கு, உங்க ட்ரீட்………..” என்றாள் அன்றுபோல் இன்றும் ஆசையாக… தன் மனைவியை பார்த்தான் இப்போது… அவளும் அவனை பார்க்க… எல்லோரும் இவர்களை பார்க்க…