எனக்கானவளே நீதானே…
18 
(வசமிழக்கும் வானம் நான்….)
இப்படியே பேசியபடியே இருந்தனர் எல்லோரும். உணவு வந்தது… பெரியவர்களை எடுத்து வைத்து… எல்லோரையும் உண்ண’ அழைத்தனர். ஏனோ இப்போதும் சற்று அமைதியில்தான் இருந்தது வீடு.
முதலில் புதுமண தம்பதிகளை அழைத்து உணவு கொடுக்க.. அவர்கள் உடன் பிள்ளைகள்.. ஐஸ் என ஒரு ஐந்தாறு பேர் மட்டும் உண்டனர்.. 
வீரா, இன்னும் ஏதோ நினைவிலிருந்தான். ரவி, கலகலப்பாக பேசியபடியே அவனின் பங்கையும் ஈடு செய்தாள்… எல்லோருக்கும் அவன் கோவம் புரிந்ததால் அமைதிதான்.
அதன்பின் மற்றவர்கள் உண்டனர்… கைலாஷ், லிங்கம், ராகவ் உண்டு.. அங்கே ஹோட்டலுக்கு சென்றனர்.. விழா குறித்து பார்வையிட… கூடவே, தேவையான ஏற்பாடுகள் செய்ய.
தாத்தாக்கள் இருவரும் சற்று… கண்ணசர தொடங்கினர்…
வீட்டில் பெண்கள் மட்டும் இருந்தனர்… அமைதியாக பேச்சு சென்றது… இந்த புது சொந்தங்களுக்கு… வீட்டு மனிதர்கள் என்ற எண்ணம் போல… பேசியே சலித்தனர்.
எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது.. ஐஸ், எப்போதும் போல விளையாட்டாய் எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்தாள். அழகான சாப்ட் சில்க் சரீயில், மின்மினியாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள்…
அஞ்சலி “ஏன் ஐஸ், உன் மாமா.. அக்கா.. கூட செல்பி எடுக்கலையா இன்னிக்கு அவங்கதானே ஸ்பெஷல்…” என்றார்… அந்த வளர்ந்த  சிறுபிள்ளையிடம்
அவளும் எப்போதும் போல “அய்யோ… எனக்கு அண்ணானா இருந்தவரை… நல்லா இருந்தார்… வீராண்ணா… இப்போ எதுக்கெடுத்தாலும் கோவபடுறார்… நான் மாட்டேன்ப்பா” என்றாள் முகத்தை சுருக்கி, கண்களை விரித்து… இலகுவாக அவள் சொல்ல….
அங்கு அப்படியொரு அமைதி சட்டென பரவியது… 
அப்போதுதான் ஐஸுக்கு, தான் பேசியது தவறோ… என தோன்ற இயல்பாய் அன்னையின் முகம் பார்த்தாள் ஐஸ்… 
கோதையின் முகமும் கோவத்தை காட்ட… பயந்தாள்.
ஐஸ்… உடனே “சாரி… சாரிண்ணா… சாரி, மாமா…” என திக்கியபடி சொல்ல…
வீரா, அவளை தனது கை அசைத்து ‘இங்கே வா’ என அழைத்தான்…. 
எழுந்து அவனருகில் வந்தாள்…. அவளிடமிருந்து மொபலை வாங்கினான்… “எப்போதும் நான் அதே வீராதான் ஐஸ்ம்மா… ஏன், இந்த வீரா மாமாவ பிடிக்கலையா…” என்றான் குரலில் என்ன இருந்தது… தெரியவில்லை. அவனின் சிறு பெண்… இப்படி சொல்ல கொஞ்சம் வருத்தமே அவனுக்கு.
பள்ளி பருவத்திலிருந்து இந்த ஐந்தாறு வருடமாக படிப்பு சொல்லி தந்தவன்… ‘எந்த குரூப்’ உனக்கு வரும் என ஆராய்ந்து சொல்லியவன்.. எப்படி பேச வேண்டும் என சொல்லி தந்தவன்… 
மேலும், அவளின் கண் முன் எப்படி உயர வேண்டும் என வாழ்ந்து காட்டியவன்… அவளின் ரோல் மாடல்… அவனை எந்த பெயரிட்டு அழைத்தால் என்ன… ஐஸுக்கு பிடிக்கத்தானே செய்யும்… 
எனவே, அவனின் குரலின் மாற்றத்தை உணர்ந்த பேதை பெண்ணும் “என்ன மாமா… சாரி, எனக்கு எப்போதும் உங்கள பிடிக்கும், ஆனா, இப்போ கொஞ்சும் பயம்… அதான்” என்றாள். அவன் கேட்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது போல, தயக்கம் இல்லை, பயமும்மில்லை… இப்போது, முன்பு போல இயல்பாய் பேசினாள்…
ஆனால், வீராக்கு…. அவன் கற்று தேர்ந்த எல்லாம் அடிவாங்கியது. உறவுகளிடம் என்னால் ஒன்ற முடியவில்லை என்றால்… அந்த வாழ்வு எப்படி முழுமை பெரும்… என ஐஸுவை ஐந்து நிமிடம் பார்த்தான்… ஆனால் நினைவு எங்கோ இருந்தது.
இங்கு சென்னை வந்த போதுதான்… வீரா, சற்று வீட்டு மனிதர்கள்… உறவுகள்… என பார்த்து பழக தொடங்கினான்… 
மற்றபடி திருவண்ணாமலையில் இருந்தவரை… அவனுக்கு இதெல்லாம் நின்று கவனிக்க அவகாசம் இல்லை… முக்கியமாக மனதில்லை.
இப்போதுதான் கொஞ்சம் எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தான்… அக்கா பிள்ளைகள் கூட அங்கே அமர்ந்து ஏதோ போனில் பார்த்துக் கொண்டிருந்தனர்.. தன்னை நெருங்கவில்லை என்பதும், ரவியும் பெரிதாக என்னிடம் நெருங்கி பேசவில்லை என்பதும் புரிந்தது….
‘ஒதுங்கியே இருந்துவிட்டேனோ…’ என தோன்றியது முதல்முறை.
ஒரு பெருமூச்சு வந்தது… ‘இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது… எந்த சந்தோஷ கொண்டாட்டமும் இல்லை இங்கே…’ என ஏதோ ஒரு இறுக்கத்தை உணர்ந்தான் அவன்….
மனம் கனத்தது… தன் அண்ணன் திருமணம் நினைவு வந்தது… எவ்வளவு கொண்டாட்டமாக… கோலாகலமாக நடந்தது… தன் அண்ணனும் எத்தனை ஆனந்தமாக நின்றான்… யோசனை ஓடியது…
தன்னவளை தேடினான்… இன்னும் கல்யாண புடவையிலேயே அமர்ந்திருந்தாள்… பெரியவர்கள் ‘சாப்பிட்டு மாற்றிக்க’ என்றதனால் அப்படியே அமர்ந்திருந்தாள்.
ஐஸ் போனை வாங்கி தான் எடுத்த போட்டோஸ் எப்படி வ்னதிருக்கிறது என பார்த்துக் கொண்டிருந்தாள்… வீரா இப்போதுதான் தன்னவளை ரசனையாக பார்க்க தொடங்கினான்… 
அழகான சிவப்பு பட்டு… கைநிறைய கண்ணாடி வளையல்… சின்ன மூக்குத்தி… குடை ஜிமிக்கை… நீண்ட பின்னல்.. அதில் இரட்டை சரத்தில் மல்லி பூ… அது எல்லாவற்றையும் விட… நான் அணிவித்த, என் பெயர் சொல்லும் புது மஞ்சள் சரடு… நெற்றியில் குங்குமம்… இதெல்லாம் பார்த்தவனது உதடுகள் லேசாக விரிய… நிமிர்ந்து அமர்ந்தான்… 
அங்கிருந்தே… பார்த்துக் கொண்டான்… ‘கன்னம் சிவந்திருக்கோ…’ என்ன அது… புதிதான தேஜஸ்… எப்படி இவ்வளவு நளினமாக தெரிகிறாள்… இத்தனைநாள் இதையெல்லாம் எங்கு வைத்திருந்தாள்… என அவளுடன் பேசிக் கொண்டிருந்த எல்லோரும் பின்னுக்கு தள்ளி அவளே பிரதனாமக் தெரிய… இளமையடிகள்… இம்மி இம்மியாய் அவளை தன்னுள் நிரப்பிக் கொள்ள…
பட்டென… ஏதோ சத்தம்…. ஐஸ்தான் போனை கீழே தவற விட்டுவிட்டு… தன் காதை மூடிக் கொண்டு…’அய்யோ’ என கத்திக் கொண்டிருந்தாள்…. திடுக்கென நிமிர்ந்தான் வீரா… லேசான சிரிப்புடன் மீண்டும் தன்னவளை இப்போது பார்க்க… 
அவளை சுற்றி… ‘தன் அக்கா, அம்மா, பாட்டி என எல்லோரும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்… பார்த்தவனுக்கு ‘அய்யோ பேசியே…. அவளை சாமியார் ஆக்கிடுவாங்களே… இவங்க’ என எண்ணி… அவளை அழைத்தான்.
வீரா “ரவி…… இங்க வா” என்றான்.
எல்லோரும் பார்க்க… அவளும் வந்தாள்… கூடவே தன் அக்கா பிள்ளைகளையும் அழைத்தான் எல்லோரும் வரவும்… எல்லோருடனும் ஒரு செல்பி எடுத்துக் கொண்டான்…
அவர்களை மற்றபக்கம் விடாது… ஏதேதோ பேசினான்… ஐஸுவை விட தன் அக்கா பிள்ளைகளிடம் பேச்சு கம்மிதான் எப்போதும் வீராக்கு…. இன்றுதான் இயல்பாய் பேசினான் என சொல்லலாம்.
வீராக்கு, அப்போதுதான் தோன்றியது தன்னால் எவ்வளவு பெரிய கொண்டாட்டம் தயங்கி தயங்கி நிற்கிறது என புரிந்தது… 
இப்போது எல்லோருடனும் ஒத்து பேசி, தன்னை தானே சகஜ நிலைக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தான் இப்படி பேசி…… எல்லோருக்கும் அது புரிய… அவனை பேச்சில் இழுத்தனர்…
ரவிக்கு அப்படியொரு நிம்மதி… தயங்கிய நின்றவள்.. அவனருகில் வர முடியாமல் அங்கு தூரத்திலேயே நின்றவள்.. இப்போது இவனின் ஒட்டுதல் இனிக்க… அவனை உரசியபடியே அமர்ந்து கொண்டாள்..
சுவாரசியமாக பேச்சு சென்றது… இன்றைய ஹீரோ… ஸ்போர்ட்ஸ்… படம்… யூடியூப் வரை.. பேச்சு செல்ல, நேரம் சென்றது. 
அப்போதுதான் வெளியே சென்ற ஆண்கள் வந்தனர்… இப்போதுதான் வீட்டு மனிதர்கள்… இந்த திருமணத்திற்கு எவ்வளவு அலைந்தார்கள் என புரிந்தது… வீராக்கு. 
லிங்கம், சொல்லிக் கொண்டிருந்தார்… எந்த நேரத்தில் mla வருகிறார்கள்… எப்போது கட்சி தலைமை வருகிறார்கள்… அதை தவிர… ஊரிலிருந்து வரும் சொந்தம்.. ஊழியர்கள், அவர்களுக்கான கவனிப்பு…  என்பன பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்…
அவர்கள் பேச பேச… வீராக்கு தோன்றியது என்னமோ.. ‘எதற்கு இத்தனை ஆர்பாட்டம்’ என்பதுதான்… நான் எதற்கு என் திருமணத்தை இப்படி கொண்டாட வேண்டும் என தோன்றியது… கூடவே, ஒரு திருமணம் என்பது இப்போதெல்லாம்… எப்படி மாறிவிட்டது எனதான் தோன்றியது.
இது ஒரு சமுதாய நிகழ்வு என தோன்றவில்லை… வீராக்கு. ஆக இவ்வளவு நேரமிருந்த விளையாட்டு தன்மை மீண்டும் மாறியது… ஆக, அவனை அவன் மாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறான்… நடக்குமா…
நேரம் சென்றது எல்லோரும் ஓய்வெடுத்து… மாலையில் வரவேற்பு விழாவிற்கு கிளம்பினர்.
பைரவி, அஞ்சலி… அர்ச்சனா மட்டும் மதியமே… ஹோட்டலில் புக் செய்துள்ள அறைக்கு சென்றனர்… அங்கேதான் பைரவிக்கு, மேக்கப் செய்ய ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
மற்ற எல்லோரும் தயாராகி சரியான நேரத்திற்கு… ரிசப்ஷன் ஹால் வந்தனர்.. 
பைரவியும் வந்தாள்… அழகான மெரூன் நிற… லெகங்கா… ப்ரீ ஹேர் அளவான ஒப்பனையுடன் அவள் வர… வீரா, ஒரு நொடி.. ஒரே ஒரு நொடி… தன்னை மறந்து அவளை ரசித்தான்… அவ்வளவுதான்… மீண்டும் கண்ணில் ‘எதற்கிந்த ஆர்பாட்டம்’ என்ற பாவம் வந்து ஒட்டி கொண்டது…
சாதாரனணமாக அவளை பார்த்தான்… அந்த ஸ்டேஜ் முழுவதும்… வெள்ளை ரோஜாவால் அலங்கரித்திருந்தனர்… சுற்றிலும் அலங்கார தோரணம்… வண்ண விளக்குகள்… அளவான ஒளி உமிழ… வீராவும் அதே மெரூன் வண்ண ஷெர்வானியில் நிற்க… அந்த புது சொர்க்கத்தின்… தேவதைகளாக நின்றனர் இருவரும்…. பார்த்தவர்களுக்கு கண்ணெடுக்க முடியவில்லை…    
என்ன இருந்தும் பைரவிக்கு, அவனின் பார்வை புரிந்தது… மீண்டும் என்ன செய்ய முடியும் என அமைதியானாள்… 
எந்த கலாட்டாவும் செய்யாமல் வீரா வரவேற்பில் நிற்பதே எல்லோருக்கும் நிம்மதி… எனவே… அழகான விழா, சற்று அவஸ்த்தையாக நடந்து கொண்டிருந்தது.
ஒவ்வருவராக வர தொடங்கினர்…. ராகவ்வின் ஒன்றுவிட்ட அக்கா, தங்கைகள்… அண்ணன், தம்பிகள் என எல்லோரும் உள்ளூர்… எனவே வரவேற்புக்கு சரியான நேரத்திற்கு வந்தனர்… 
அடுத்து… திருவண்ணாமலை ஊழியர்கள்… அங்கிருந்த சொந்தம் எல்லோரும் வந்திருந்தனர் லிங்கம் சார்ப்பாக… அதனை தொடர்ந்து, கட்சி ஆட்கள் என ஒருசிலருக்கே அழைத்திருந்தார் லிங்கம்… எனவே அளவான கூட்டம்தான் அவர்களுடையதும்,