அத்தியாயம் பதினொன்று:

விஸ்வநாதனிடம் பேசி விட்டாலும்கூட ஆனந்த்துடைய அப்பாவிற்க்கு ஒரு மாதிரியான தயக்கம் இருந்தது. ஆனந்த் இந்த விஷயத்தில் சற்று தீவிரமாக இருப்பதாக தோன்றியது

அதனால் தான் அவர் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார். மேலும் உஷாவோடு வரும் சொத்துக்கள் அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. அந்த ஒரு காரணமும் பெரிய காரணம் அவர் ஒத்துக்கொள்வதர்க்கு.

ஆனாலும் உஷாவிடம் சொன்ன அனைத்துக் காரணங்களுமே உண்மை. அவர் ஒரு ஹை கோர்ட் ஜட்ஜ். அப்படி இருக்கும் போது ஒரு நிதி நிறுவன மோசடியில் சிக்கியவருடைய பெண்ணை திருமணம் செய்வதில் அவருக்கு விருப்பம் இல்லை.

அந்த மோசடியில் அவருடைய தந்தை பெயர் அடிபட்ட சமயம் அவர் தான் அவருக்கு ஜாமீன் வழங்கினார். பின்பு உஷாவுடைய தந்தை எல்லோருக்கு பணத்தை குடுத்தது தெரியும். அவர் மேல் தவறில்லா விட்டாலும் அவர் எல்லோருக்கும் பணத்தை செட்டில் செய்தார், அதுவும் தெரியும்.

 ஆனாலும் அவருடைய பெண்ணை தன்னுடைய மகனுக்கு மணமுடிப்பது என்பது அவருடைய கேரியருக்கு ஒரு தடையாக வருமோ என்ற ஒரு பயம் இருந்தது. இன்னும் அவருக்கு ஒய்வு பெறுவதற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தது.

சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி என்பது சாதாரண பதவியில்லை. அது வக்கீலுக்குப் படித்த ஒவ்வொருவரின் கனவாகும்.

அதனால் தன் மேல் ஒரு சிறு கறை படிவதை கூட விரும்பவில்லை. அவருக்கு குழப்பம், நடப்பவையை ஆனந்திடமே விடுவது என முடிவெடுத்து வெளியே சென்று நின்று கொண்டார்.

அவன் கார் வருவதற்க்கு எதிர்பார்த்து காத்திருந்தார். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தன் மக்களுக்கு அவர் தந்தை தானே. அவர் காத்திருப்பதை பார்த்த அவருடை காப்பாளர்கள் அவசரமாக வந்தனர்.         

  அதற்குள் எதிர்பார்த்திருந்த ஆனந்த் எல்லோரையும் காக்க வைக்காமல் சீக்கிரமே வந்தான். பார்ப்பதற்கும் அழகாக ஹாண்ட்சமாக இருந்தான். புன்னகை முகமாக இருந்தான். பார்பவர்கள் பார்த்த உடனே மரியாதை கொடுக்கும் தோற்றத்துடன் எல்லோரும் நட்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் முகமாக  இருந்தான். அவனுடைய படிப்பிற்குரிய சர்வ லட்சனங்களும் பொருந்தியிருந்தன.

சொல்லப்போனால் கிரிக்கு எதிர்பதமாக இருந்தான். கிரி பார்பதற்க்கு அழகு என்பதை விட கம்பீரமாக இருப்பான். சிரிப்பு என்பதை அவன் முகத்தில் பார்க்கவே முடியாது. பார்பவர்கள் மரியாதை கொடுத்தாலும் ஒரு பயத்துடன் அவனிடம் இருந்து ஒதுங்கியே இருப்பர்.

ஆனந்த் easy approachable personality, ஆனால் கிரி hard unapproachable personality.

தந்தை வெளியே நிற்பதை பார்த்து அவசரமாக இறங்கி என்னவென்று கேட்க, அவர் விவரத்தை உள்ளது உள்ளபடியே உரைத்தார்.

கேட்டிருந்த ஆனந்த் திகைத்தான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு உஷாவை விட்டு யாரையும் பார்ப்பதற்கு விருப்பமில்லை. இதென்ன கடையில் பொருள் வாங்கும் சமாச்சாரமா ஒன்று இல்லை என்றால் மற்றொன்று வாங்குவதற்கு.

“அப்பா ஒரு எமர்ஜென்ஸி கேஸ். அதனால உடனே கிளம்பிட்டேன்னு சொல்லிடுங்க. வேற எதுவும் பேசாதீங்க. அவங்க எந்த பொண்ண காட்டினாலும் பாத்துட்டு வந்துடுங்க. காட்டலைன்னாலும் விட்டுடுங்க. நம்ம ஆளுங்க என்ன பேசுவாங்கன்னு நினைக்க வேண்டாம். பிடிச்சிருக்கு, பிடிக்கலைன்னு  எதுவும் சொல்ல வேண்டாம்.  இன்னொரு நாள் பையனை அனுப்பிவைக்கறேன்னு சொல்லிடுங்க. கிளம்பிடுங்க. நான் ஹாஸ்பிடல் போறேன்.,” என்று கூறி அவர் பேசுவதற்கு இடமளிக்காமல் யாரும் பார்க்கும் முன்னர் நிமிடத்தில் கிளம்பி விட்டான்.

 ஆனந்த் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தான். கிரி மாடி மேல் இருந்து அவன் வந்ததையும் உடனே சென்றதையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.

உள்ளே சென்று விஸ்வநாதனிடம் கூற, அவருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. பெண்ணை காட்டுவதா வேண்டாமா. தன்னுடைய பெண்ணா தன் சம்மந்தியுடைய பெண். அவர் என்ன சொல்வாரோ என நினைத்து முடிவை வர்ஷாவுடைய  பெற்றோரிடமே விட்டு விட்டார்.

பெண் விஷயமில்லையா. எல்லோருமே தயங்குவார்கள் வசதியானவர்களோ, வசதியில்லாதவர்களோ, யாருமே யோசிக்கும் விஷயம். வர்ஷாவுடைய அப்பா ஆனந்த்துடைய தந்தையிடமே நேரடியாக பேசிவிட்டார்.

“உங்க பையன் சம்மதிப்பான், அப்படின்னு நீங்க உறுதியா நினைச்சீங்கன்னா சொல்லுங்க. பொண்ண காட்றோம். உங்களுக்கு சின்னதா ஏதாவது சந்தேகம் இருந்தா கூட மாப்பிள்ளை வரும்போதே பார்த்துக்கலாம்.!” என்றார்.

ஆனந்துடைய தந்தையும் மாப்பிள்ளை வரும்போதே பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி கிளம்பிவிட்டனர்.

முடிவெடுத்தவர்கள் முக்கியமானவர்கள் என்பதால் யாரும் எதுவும் பேசவில்லை.

இப்படி ஆகும் என்று கிரி நினைக்கவில்லை, தான் யோசிக்காமல் எல்லா விஷயத்தையும் செய்கிறோமோ என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

அங்கே அவர்கள் சென்ற பிறகு ஒரு அமைதி நிலவியது. ருக்மணி அம்மாள் தன்னுடைய புலம்பலை ஆரம்பித்திருந்தார். ஆனால் ஏற்கனவே சாம்பவி உஷாவை பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று எச்சரித்து இருந்ததனால் அவள் பேரை தவிர்த்து அவளை தாளித்துக்கொண்டிருந்தார்.

ஏனோ உஷா இதை உணர்ந்தும் கூட அமைதியாக இருந்தாள். ஒரு அசாதாரணமான அமைதி அவள் முகத்தில் தெரிந்தது.

குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஏனோ கீழே வைக்கவே மனமில்லை அவளுக்கு. கிரியும் அதை பார்த்துக்கொண்டு தானிருந்தான்.

   நந்தினி அவளிடம் வந்து நாளை குழந்தைகளுக்கு புன்னியாதானம் செய்து பெயர் சூட்டும் விழா ஹாஸ்பிடல் சென்று விட்டு இன்று போல நாளையும் வருமாறு கூறினாள்.

“ப்ளீஸ் அக்கா………. நாளைக்கும் இதையெல்லாம் என்னால டாலரேட் பண்ணமுடியாது என்னை விட்டுடுங்கலேன். “, என்றாள்ருக்மணி பாட்டியை பார்த்துக் கொண்டே. இதற்கு என்ன சொல்வது என்று நந்தினிக்கு தெரியவில்லை. அவளுக்குமே புரிந்தது ருக்மணி பாட்டி எந்த நேரம் என்ன பேசுவார் என்று யாருக்கும் தெரியாது.

 உடன் இருந்த அருண், “இந்த குட்டிக்கு பேர் செலக்ட் பண்ணி கொடுத்தா விட்டுடறோம்.”, என்றான்.

“நானா.!”, என்றாள் உஷா சிறிது வியப்பாக.

அவளுடைய எக்ஸ்பிரஸனை பார்த்த கிரி, “ஏன் நீதான்.?. அதுக்கு எதுக்கு இந்த முழி முழிக்கற.”, என்றான்.   

“நீயே தான்.!”, என்றான் அருணும் சூழ்நிலையை லகுவாக்கும் பொருட்டு. “உனக்கு அழகான பேர் இருக்கு. அழகான பேர் இருக்கிறவங்க, அழகான பேர் வைப்பாங்கன்னு, ஒரு அறிவாளி சொல்லியிருக்கார்.”, என்றான்.

“அறிவாளியா யார் அது.?”, என்றாள் உஷா.

“நான் தான் அது. ஏன் என்னை பார்த்த உனக்கு அப்படி தோணலியா”, என்றான். ஏனோ அவனுக்கு உஷாவை மிகவும் பிடித்து விட்டது. அவன் சொன்ன விதம் அவளுக்கு மறுக்க தோணவில்லை

“யாராவது ஏதாவது சொல்வாங்க. “, என்றாள் தயக்கமாக. 

கிரியை துணைக்கு அருண் அழைக்க. கிரி, “அவங்க என் குழந்தைங்க. நான் சொல்றேன் அப்புறம் என்ன உனக்கு”, என்றான்.    

கிரிக்கு எதுவும் பிரச்சனையில்லை. ஆனால் வர்ஷாவை எப்படி எதிர் கொள்வது என்ற சங்கடம் இருந்தது.

அதை வர்ஷா உணர்ந்தாலோ என்னவோ கிரியிடம் வந்து, “ஒண்ணும் நான் நினைக்கலை மாமா. கஷ்டப்படுதிக்காதீங்க.!”, என்றாள்.

 ஆனாலும் கிரி அவளிடத்தில், “ஐ ஆம் சாரி.”, என்றான்.

பின்பு உஷாவிடம் பெயரை கேட்க, “பையனுக்கு. ‘நிரஞ்சன் கார்த்திக்’. பொண்ணுக்கு “ஸ்வாதி ரஞ்சனி” என்றாள்.

கேட்ட கிரி அப்படியே நின்றான். “எப்படி இவ்வளவு சீக்கிரம் செலக்ட் பண்ணின” என்றான்.

“ரொம்ப சிம்பிள் கண்டுபிடிங்கலேன். “, என்றாள் உற்சாகமாக. 

கிரி ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை, “தேங்க்ஸ்.!”, என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

“அது எங்கிட்ட நிறைய இருக்கு நீங்கலேன் வச்சிக்கோங்க”, என்றாள்.

நந்தினிக்கும் அருணிற்கும் புரியவில்லை பெயர் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் இவன் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறான் என்று புரியவில்லை. 

அவள் புரியாமல் உஷாவை பார்க்க, “இந்த குட்டி பொண்ணு என்கூட இருந்தப்பவே யோசிச்சிட்டு இருந்தேன். அதான் டக்குனு வந்துடுச்சு”, என்றாள்.

“பட்., அதுல இவன் இவ்வளவு பீல் பண்ணற அளவுக்கு என்ன ஸ்பெஷல்.”, என்றாள் நந்தினி.

“ரெண்டுலயுமே குழந்தைங்களோடா அம்மா பேர் வருது நந்து.”, என்றான் கிரி அவளை நோக்கி.

அப்போது தான் நந்தினி கவனித்தாள், ரஞ்சனியிலும். நிரஞ்சனிலும். நீரஜா இருந்ததை.

நந்தினி அவளை நோக்கி, “you are just fantastic.  உன்னை மாதிரி யாராவது இந்த குழந்தைங்களுக்கு கிடைச்சாங்கன்ன அவங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்காங்க” என்றாள்.

அதற்கு உஷா எந்த பதிலுமே அளிக்கவில்லை. “இதை மட்டும் தான் கண்டு பிடிச்சீங்களா.”, என்றாள் கிரியை நோக்கி.

“சரஸ்வதி ஸ்வாதி ஆனதும் தெரியுது”, என்றான். சரஸ்வதி அவளுடைய பாட்டியுடைய பெயர்.

பின்பு அவனை நோக்கி “போகலாமா.”, என்றாள். 

பின்பு ஹாஸ்பிடலுக்கு உஷாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான். நந்தினி அவர்களுடன் கிளம்ப, “நீங்க இங்க என்ன ஏதுன்னு பார்த்துட்டு வாங்க அக்கா. நாங்க கிளம்பறோம்”, என்றாள்.

அவள் பேசியதில் இருந்தே அவள் ஏதோ தனியாக கிரியிடம் பேச விழைவதை உணர்ந்த நந்தினி , அருணிடம் நாம் பிறகு செல்லலாம் என்று கூறிவிட்டாள்.

 கிளம்பி சிறிது தூரத்திலேயே காரை நிறுத்தச் சொன்ன உஷா கிரியிடம் எந்த பீடிகையுமில்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“இவ்வளவு நாள் இல்லாம இப்போ எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க.”

கிரி அமைதியாகவே இருந்தான்.

அவனுக்கு பொறுமை என்பது பழக்கமில்லாத ஒன்று. ஆனாலும் ஏனோ அமைதியாக இருந்தான்.

“என்னால ஏதாவது வேலை ஆகணுமா.” என்றாள்.

அவளுடையகணிப்பை நினைத்து வியப்பாக இருந்தது கிரிக்கு.

அவளை நோக்கி கேட்டான்.

“உன்னால ஏதாவது எங்களுக்கு வேலை ஆகணுமா.”, என்று அவளை நோக்கி எதிர் கேள்வி கேட்டான்.

“அது எனக்கு தெரியாது. உங்களுக்கு தான் தெரியும்”, என்றாள் உஷா.

“உனக்கு என்ன தெரியும்ன்னு சொல்லு, நான் எனக்கு என்ன தெரியும்னு சொல்லறேன்.”, என்றான்.

“ப்ச்.” என்று தன் அதிருப்தியை தெரிவித்த உஷா அமைதியாகவே இருந்தாள்.

“ப்ரத்யு நான் உன்னை பார்க்காதது தப்பு தான். நான் ஒத்துக்கறேன். ஆனா யு சுட் டிரஸ்ட் மீ.! எனக்கு இங்கே நடந்ததோ உன்னோட ஸிச்சுவேஷன்ஸ்ஸோ தெரியாது.சொல்லப்போனா நான் உன்னை சமாதனப்படுதறதுக்காக சொன்ன வார்த்தை உனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியாம போச்சு.”.

“ஏன் நீங்க தெரிஞ்சுக்களை.”.

“மறுபடியும் சொல்லறேன். நீ என்னை நம்பணும். என்கிட்ட இதுக்கு பதில் கிடையாது.”,

ஒரு நிமிடம் இறுக்கமாக கண்களை மூடித்திறந்தால் உஷா. ஏனோ கோபத்தையும் மீறி வருத்தம் தான் வந்தது.

“இப்போ எதுக்கு என்னை தேடி வந்தீங்க. அதை மட்டும் சொல்லுங்க.”, என்றாள்.

எந்த விஷயமும் கிரி மறைத்துப் பேசமாட்டான். மறைத்தோ பொய் சொல்லியோ வரும் பிரச்சனைகளை சமாளிப்பதை விட உண்மையை உரைத்தே பிரச்சனைகளை பார்த்து விடுவான். ஏனோ எந்த சால்ஜாப்பும் அவளிடம் கூற அவன் விழையவில்லை. உண்மையை கூற முடிவெடுத்தான்.  

“நான் லண்டன்ல ஒரு ஸ்டீல் இண்டஸ்ட்ரீய டேக் ஓவர் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு மணி மொபலைஸ் பண்ண பார்க்கிறப்போ, நிறைய பிராப்பர்டீஸ் உன் பேர்ல இருக்கு. எனக்கு அதை பார்த்தவுடனே கொஞ்சம் ஷாக் கூட ஏன்னா என் பேர்லையோ நந்தினி பேர்லையோ அவ்வளவு இல்லை,”.

“உன்னோட ஹெல்ப் இல்லாம எதுவும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சது. உண்மையா சொல்லனும்னா நான் அதுக்கு தான் உன்னை பார்க்க ட்ரை பண்ணேன்,”.

“எனக்கு இந்த மேட்டர் எல்லாம் ஒரு டூ மந்த்ஸ்ஸா தான் தெரியும். அப்போ வொர்க் என்ட் ஸ்டேஜ். சரி எப்படியும் நீரஜாவோட டெலிவரிக்கு வர்றதா பிளான். வந்து பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்”

 “கிளம்பறதுக்கு முன்னாடி  நான் அங்க அவங்களோட சேல் டீட் கூட போட்டுட்டேன். மணி எனக்கு பெரிய ப்ராப்ளமா தோனலை. ஏன்னா நம்ம பிசினஸ் டர்ன் ஓவர்க்கு அது ரொம்ப ஈஸி. ஆனா ஆடிடர்ஸ்ஸோட கன்ஸல்ட்  பண்ணும் போது பதில் எல்லாம் முன்னுக்கு பின் முரணா இருந்தது. இன்னைக்கு டீடைல்ஸ் பக்கவா இருக்கு. ஆனா லீகளா நிறைய பேப்பர்ஸ் மிஸ்ஸிங்.”

“அப்பாவை கேட்டா எனக்கு தெரியாதுங்கறார். அது ஒண்ணும் பிரச்சனையில்லை…………. யார் நம்மை கேக்க போறாங்க அப்படிங்கறார். இது ஒரு பாரீன் ப்ராஜெக்ட் எல்லாமே பக்கவா இருக்கணும். லாயரை பார்த்தால் நீங்க உங்க அப்பாவை கேளுங்க தம்பி அப்படின்றார்.”

“அவரை கொஞ்சம் மிரட்டி உங்களுக்கு எதுவும் ப்ராப்லம் வாராதுன்னு சொல்லி விஷயத்தை வாங்கறதுக்குள்ள.”

“அவர் தான் சொன்னார். பாட்டி உனக்கு சாதகமா நிறைய சொத்து விஷயம் பண்ணியிருந்தாங்க. ஆனா அவருக்கு அதிகம் தெரியலை. தெரிஞ்ச அப்பாவோ எதுவுமே சொல்ல மாட்டேங்கறார்.”

“எனக்கு தெரியும் கம்பனி சேர் பர்சன் பாட்டி தான் முதல்ல. எப்படி அப்பாக்கு ட்ரான்ஸ்பர் ஆச்சுன்றதுக்கு ப்ரோபர் டீடைல்ஸ் இல்லை. ஆனா எதுவுமே சரியா இல்லாமையே அப்பா இந்த ஆறு ஏழு வருஷத்துல கம்பெனிய யாரும் இமேஜின் கூட பண்ண முடியாத அளவுக்கு இம்ப்ரூவ் பண்ணியிருக்கார்.” 

“ரொம்ப நோன்டுனாலோ, இல்லை. வேற ஏதாவது சின்ன ப்ரோப்ளேம்ன்னு தெரிஞ்சாலோ. கம்பனி யோட ஷேர் டக்குனு விழுந்திடும். அப்பா வாய் தொறக்களை.”

“வேணும்னா சேல் டீட் கான்சல் பண்ணு. எவ்வளவு நஷ்டம்னாலும் பரவாயில்லைங்கறார்.”

“நிறைய பேப்பர்ஸ் மிஸ்ஸிங்.”              

“உனக்கு அதை பத்தி ஏதாவது தெரியுமா. நான் கேக்கறது முட்டாள் தனமா தெரியும். பட் ஸ்டில்  பாட்டியோட நீ தான் க்ளோஸ்.  ஐ நோ அந்த ஸ்டேஜ் ல நீ ரொம்ப யங். “

“உயில் பத்தி ஏதாவது தெரியுமா.?”, என்றான் தயக்கமாக.

சிறிது நேரம் அமைதியாக இருந்த உஷா, “ஒரிஜினல் காப்பி என் கிட்ட இருக்கு. எல்லா டாகுமெண்ட்சும் என்கிட்ட இருக்கு,”  என்றாள் அமைதியாக.

கேட்ட கிரிக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. பேச வார்த்தைகள் வரவில்லை.

“தெரிஞ்சுமா இவ்வளவு சிரமத்தில் இருந்த.”, என்றான். அவனையும் மீறி அவன் குரலில் அதிர்ச்சியும் ஆதங்கமும் இருந்தது.

ஒரு கனமான அமைதி நிளவியது.

“சிரமமா. என்ன சிரமம்.? எனக்கு பணம் இல்லை, அவ்வளவு தான். பட் ஐ ஹாட் பிபல் அரௌண்ட் மீ. என்னை எப்படி பார்த்துக்கிட்டாங்க தெரியுமா”.

“நீ அட்லீஸ்ட் அவங்களையாவது சௌகரியமா வெச்சிருந்திருக்கலாமே”.

“எங்க அப்பா அவர் தான் காரணம். நான் ஆரம்பத்துல அங்க சிரமப்பட்டப்பவே சொல்லிட்டார். என்னால முடிஞ்ச வசதிய தான் இங்க பண்ணி குடுப்பேன். ரொம்ப தனியா உனக்கு ஏதாவது செஞ்சேன்னா மத்த ரெண்டு குழந்தைங்களும் பீல் பண்ணுவாங்க. உங்க அம்மா பணத்தை நீ உபயோகிக்கலாம். ஆனா என் குழந்தைங்க அனுபவிக்கறதுல எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிட்டார்.”

“ ரொம்ப தன் மானம் பார்ப்பார். ஐ டின்ட் வான்ட் டு ஹர்ட் ஹிம். ஒரு வகையில நானும் அவர் குழந்தை தானே. அதனால அமைதியா இருந்துட்டேன்.”

“அங்கே என் கஷ்டமெல்லாம் உங்க ஞாபகம் மட்டும் தான். உங்களை மறக்கனும்னு நினைச்சு நீ வேண்டாம். வேண்டாம்னு சொல்லி எனக்கு தெரியாமலேயே அதிகமா நினைச்சுட்டு இருந்துட்டேன். லூசு மாதிரி. But I think now I have matured so much that I can withstand any disappointments “,என்றாள் ஆழமான குரலில் உணர்ந்து.

“ஒரு வகையில ஏன் நான் படிக்கலைன்னா. அது எனக்கு நானே குடுத்த பனிஷ்மென்ட் . கொஞ்ச நாள் அப்புறம் நீ வர மாட்டேன்னு புரிஞ்சது. யார் மேல ஏன் கோபத்தை காட்ட.  உன்னை ஹர்ட் பண்ணறதுக்காக என்னை நானே ஹர்ட் பண்ணிட்டேன். என்னோட முட்டாள்தனதுக்கு அது தேவைன்னு நினைச்சேன். மற்றபடி நான் ஏதாவது செய்யனும்னு நினைச்சா அதை யாராலும் தடுத்திருக்க முடியாது.”.             

ஒன்றும் பேசாமல் அவளுடைய கைகளை எடுத்து தன்னுடைய கைகளில் வைத்துக் கொண்டான்.

“ப்ளீஸ் ப்ரத்யு. நீ கட்டாயம் என்னை நம்பணும் எனக்கு நடந்தது எதுவுமே தெரியாது.”, என்றான்.

“அதையே பேசி பிரயோஜனமில்லை இப்ப என் கிட்ட என்ன வேணும் சொல்லுங்க.”, என்றாள்.

“நீ வேண்டும்.!”, என்று டக்கென நினைத்தான். அதையே உணர்ந்தான் கூட. இதை காதல் அது இது என்று வரையறுக்க முடியாது. அவள் அவனுடைய தேவை என்பது போல் உணர்ந்தான். அதுவும் தன்னுடைய குழந்தைகளுக்கு அவள் பெயர் சூட்டிய விதத்தில் மிகவும் உணர்ச்சிவசபட்டிருந்தான்.

ஆனால் அதை அவளை பார்த்து கூறுவதற்கு தைரியமில்லை. என்ன மாதிரி அவளை விட்டு விட்டு இன்று உரிமை எடுத்துக் கொள்வதற்கு தயக்கமாக இருந்தது. சொல்லபோனால் தனக்கு அந்த தகுதி இல்லாதது போல் தோன்றியது.

ஆனால் எதற்காக இல்லாவிட்டாலும் தங்களுடைய தொழிலுக்காக அவள் வேண்டும். அவனுடைய தந்தை நிறைய முட்டாள்தனங்களை செய்து வைத்திருந்தார். அதில் முக்கியமானது அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தது. என்ன தான் தாங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தாலும், அவள் தங்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டாள் என்றாலும் நாளை யாரால் கணிக்க முடியும்.

எவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரீஸ். எத்தனை பேர் முதலீடு செய்துள்ளார்கள். எத்தனை ஆயிரம் தொழிலாளர். இதனை நம்பி இருக்கிறார்கள். தங்களுடைய குழப்பத்தால் அவர்கள் நஷ்டமடைவதை என்றுமே அனுமதிக்க முடியாது. இவளையும் விட முடியாது.

என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். 

“ஹாஸ்பிட்டல்ல சித்தி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. சீக்கிரம் போகணும் ஏதாவது சொல்லுங்க.”, என்றாள்.

“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல்லை, நீ சொல்லு. “, என்றான்.

“என்னை கேட்டா. நான் என்ன சொல்றது”.

“என்னோட முடிவு எல்லாமே நீ தான் எடுக்கணும் நினைக்கிறேன். ”, என்றான் ஒரு வாராக தைரியத்தை திரட்டி.

இதைகேட்டவுடன் உஷாவால் கோபத்தை அடக்க முடியவில்லை.

“உங்களுக்கு  இப்படி பேசுறதுக்கு அசிங்கமா இல்லை. எந்த முகத்தை வெச்சிக்கிட்டு இப்படி டையலாக் பேசறீங்க. எந்த பேப்பர்ஸ் கேட்டாலும் குடுக்கறேன். எதுல கேட்டாலும் சைன் பண்ணறேன். என்னை ஆளை விட்டால் போதும். நான் இதுல ரொம்ப தெளிவா இருக்கேன். நான் இத்தனை வருஷமா சொன்னது தான் இப்பவும். நீங்க எனக்கு வேண்டாம். “, என்றாள்.

அவள் அவனை பார்த்ததில் இருந்து திரும்ப திரும்ப அதையே கூறவும், “என்னை வேண்டாம்னு சொல்லிட்டு, என்ன பண்ண போறே………… .” என்றான் எரிச்சலாக.

“என்னவோ பண்றேன். உங்களுக்கு அது தேவையில்லாதது……….”, என்றாள்.

“ஏன் உன் பின்னாடி எவனோ ஊர்ல சுத்துனானாமே, நந்தினி சொன்னா. அவன கல்யாணம் பண்ணிக்க போறியா. இல்லை, உன்னை மட்டும் தான் பார்ப்பேன்னு வாசல் வரைக்கும் வந்துட்டு போயிட்டானே. அந்த டாக்டர் அவனை கல்யாணம் பண்ணிப்பியா.”, என்றான் கோபத்தில்

கேட்ட உஷா மரியாதையை காற்றில் பறக்க விட்டு, “வாயை மூடுடா.!”, என்றாள்.

“நான் யாரை மட்டும் பண்ணிக்குவேன். உனக்கு அது தேவையில்லாதது. இத்தனை வருஷத்துல நான் யாரையுமே பார்த்தது கூட கிடையாது. என்னை பார்த்து நீ கண்டபடி பேசுறியா. இன்னும் ஏதாவது பேசுனே என்ன பண்ணுவேன்னு தெரியாது.  நீ வேண்டாம்னு சொல்லிட்டு நான் காலம் முழுக்க இப்படியே இருப்பேன்னு நினைச்சியா. கண்டிப்பா கிடையாது. நான் யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருப்பேன்.”. என்றாள் கோபமாக.

“அதையும் பார்க்கலாமா…….”, என்றான் கிரி. ஆனால் மனதிற்குள். பயம் என்றால் என்னவென்று தெரியாத கிரிக்கு பயம் எட்டி பார்த்தது. சொன்னாள் செய்வாள் அவள்.

“சும்மா என்னை மிரட்டக்கூடாது, எப்பவும் என்கிட்ட உனக்கான பதில் இதுதான். மீறி ஏதாவது பண்ணின என்னை உயிரோட பார்க்க முடியாது………….”, என்றாள்.

“அவ்வளவு வெறுப்பா உனக்கு என் மீது………….”, என்றான் ஆதங்கத்தோடு.

“நம்ம பேசுனா ப்ராப்லம் தான் வரும். நம்ம ஹாஸ்பிடல் போலாம்……….”, என்றாள் எங்கேயோ பார்த்துக்கொண்டு.

“உன் முடிவுல ஏதாவது மாற்றம் இருக்கா. ஏன் கேக்கரேன்னா இனிமே என்ன பண்ணனும்னு நான் முடிவெடுக்கணும்”

கேட்ட உஷா அமைதியாக இருந்தாள். ஒன்றும் பேசாமல் காரை ஹாஸ்பிடல் வாசலில் கொண்டு சென்று நிறுத்தினான்.

இறங்கிய உஷா, “நான் போறேன். இனி எதுன்னாலும் நம்ம நந்தினி அக்கா மூலமா பேசிக்கலாம். ப்ரோபெர்டிஸ்க்காக எங்க சைன் கேட்டாலும் போடுறேன். அதுக்காக நீங்க இனிமே என்னை பார்க்க வராதீங்க.!”, என்றாள்.

“ஒரு வேலை நீ வந்தா.?”, என்றான்.

“நானா. உங்களையா. சான்சே இல்லை”, என்றாள். 

“வந்தா எங்களோடவே இருந்தடரியா.”, என்றான் மறுபடியும்.

“அது முடியாது.”, என்று கூரியவளாக உள்ளே செல்லலானால்.

“முடியும். முடியணும்.!”, என்றான் கிரி மனதிற்குள். சிறிது நேரம் காரிலேயே அமர்ந்து யோசனையில் இருந்தவன், காரை விட்டிறங்கி ரிசெப்ஷன் நோக்கி சென்றான்.

உள்ளே நுழையும் போதே பார்த்தான், ப்ரத்யு யாரிடமோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதை. அந்த பக்கம் செல்பவர்கள் அவனுக்கு விஷ் செய்துவிட்டு போவதை பார்த்த கிரி யார் அவன் என்று விசாரிக்க அவர்கள் டாக்டர் ஆனந்த் என்றனர்.

உஷாவிற்க்கு கிரியைதான் தெரியும். சூர்ய கிரி வாசன் என்ற மனிதனை தெரியவில்லை.

சிறிது நேரம் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன் பார்ப்பதை உஷா உணர்ந்தாலும் அவனை திரும்பி பார்க்க வில்லை.

“ரிசெப்ஷனில் குழந்தைங்களுக்கு  பர்த் சர்டிபிகேட் அப்பிளை பண்ணனும்”, என்றான்.

அவர்கள் பார்ம் கொடுக்க. அதில் எல்லா டீடைல்சும் எழுதிய பிறகு கடைசியாக மதர்ஸ் நேம் என்ற இடத்தில் “அன்னலஷ்மி பிரத்யுஷா” என்று நிரப்பினான்.