திருமண மண்டபம் சொந்தங்களாலும் சுற்றத்தாராலும் நிரம்பி வழிய எஙகும் மேளதாளம்,நாதஸ்வரம் என்று மங்களகரமான இசை ஒலிக்க தமிழழகன்-யவ்வனா திருமணத்திற்கு நம் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர்.அதனை ஏற்று நாமும் உள்ளே சென்றால் அடடடடே!!!நம் கண்களை நிறைப்பதுபோல் பட்டுவேஷ்டி சட்டையில் மணமேடையில் மாப்பிள்ளைக்கே உரிய கம்பீரத்தோடு ஆணழகனாய் அமர்ந்திருந்தான் தமிழ்.
ஐயர் சொன்ன மந்திரங்களை கர்ம சிரத்தையாய் செய்துக்கொண்டிருந்த தமிழ் அங்கும் இங்கும் காலில் சக்கரம் கட்டியதுபோல் தன் வயதையும் மீறி பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருந்த அன்னையை கண்டான்.
‘உடம்பை ரொம்ப அலட்டிக்காதீங்க ம்மா’ என்று அவன் எவ்வளவோ சொல்லியும்,’என் ஒரே மகனோட கல்யாணத்துக்கு நான் வேலை செய்யாமல் வேற யாரு செய்வா..போடா டேய்..’
என்று அவனை அலட்சியப்படுத்தி விட்டு அவர் இஷ்டம் போல் எல்லாம் செய்தார்.
அதனை தற்போது எண்ணி பார்த்து ‘இவங்க இருக்காங்களே..’
என்று மனதில் செல்லமாய் சலித்துக்கொள்ள அப்பொழுது உள்ளே நுழைந்த பத்ரியையும் கணபதியையும் கண்டதும் முகம் மலர்ந்து சிரித்தான்.
அவர்கள் தான் என்று அடையாளம் தெரியாதபடி தலையில் பெரிய தொப்பியுடனும் அடர்த்தியான தாடியுடனும் அவர்கள் இருந்தாலும் முதல் பார்வையிலே கண்டு கொண்டவன் இங்கிருந்தே வரவேற்ப்பாய் தலையசைக்க அதனை ஏற்று அவர்களும் ஒரு வரிசையில் அமர்ந்துக் கொண்டனர்.
வாசுவை அருகில் அழைத்த தமிழ் ஏதோ சொல்ல அவனும் தலையாட்டிவிட்டு இறங்கி சென்று கூல்ட்ரிங்ஸோடு பத்ரி, கணபதியை அணுகினான்.
“ஸ்ஸ்..அண்ணா..இந்த தாடி தொப்பிலாம் தேவை தானா.. ரொம்ப கசகசன்னு இருக்கு..”
என்று கணபதி அவஸ்த்தையாய் சொல்ல,
“அவசியம் தான்டா..தேவையில்லாம எவன் கண்ணிலாவது பட்டால் வீண் பிரச்சனை..நம்மை எவனும் ஒன்னும் பண்ண முடியாது. ஆனால் நமக்குன்னு சொந்தம்,உறவுனும் யாரையும் காட்டியது கிடையாது.இப்போ
இதனை கொண்டு யவ்வனா தமிழ எந்த ஆபத்தும் நெருங்கிட கூடாதுனு தான் இந்த வேஷமெல்லாம்..!!நம்ம உலகத்தோட நிழல்கூட இவங்கமேல படக்கூடாதுடா..”
என்ற பத்ரியின் வார்த்தையில் இருந்த உண்மையை கணபதியும் உணர்ந்தான்.
நட்புக்கு ஜாதி மதம் மட்டுமல்ல..!!நல்லவன் கெட்டவன் என்பதுகூட தெரியாது.!! இருவர் பாதையும் பயணமும் வேறாக இருந்தாலும் நட்பென்னும் பூம்பாளம் இவர்களை எக்காலத்திலும் இணைத்தே வைக்கும் என்பதில் ஐயமில்லை.
“அண்ணா..அங்க பாருங்க..எட்டனா வருது..”
என்று கணபதி சொல்லவும் நமது போகஸ்ஸூம் அங்கே திரும்ப..வாவ்!!
மணப்பெண்ணிற்கான சர்வ அலங்காரத்தோடு உலகத்தின் மொத்த அழகையும் குத்தகை எடுத்தாற்போல் இருந்த யவ்வனாவை கண்டு நாமே அசந்துவிடும்போது தமிழின் நிலையை சொல்லவும் வேண்டுமோ..?!
மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவன் அதனை மறந்து அவளையே விழியகல பார்க்க அவன் கவனத்தை அய்யர் மீண்டும் தன்புறம் திருப்புவதற்குள் போதும் போதுமென்றானது.
தமிழின் அருகில் அவளை அமரச்செய்ததும் அவர்களை ஜோடியாய் பார்த்து,
“ஆஹா..என்ன பொருத்தம்..”
என்று அங்கிருந்த பலரின் பார்வை அவர்களை இரசித்தது.
ஓரப்பார்வையில் யவ்வனா அவனை விழுங்க லேசாக அவள்புறம் சாய்ந்தவன்,
“என்னடி சைட் அடிக்கிறியா…உன் ஆளு எப்படி இருக்கேன்..”
கண்சிமிட்டலோடு தன் ட்ரேட்மார்க் சிரிப்பை உதிர்க்க எத்தனை முறையானாலும் அவன் புன்னகையில் மீண்டும் அவள் மனம் மயங்கியது.
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிமிர்ந்து ஒரு விழுங்கும் பார்வை பார்க்க நம் தமிழ் மெர்சலாக அந்த அழகான தருணங்கள் அனைத்தும் கேமராவழி படமாக்கப்பட்டது.
நல்ல நேரம் நெருங்கியதும் கெட்டிமேளம் கொட்ட நடராஜன் கையால் எடுத்துக் கொடுக்கப்பட்ட தாலியை யவ்வனாவின் கழுத்தில் பூட்டி தன்னில் சரிபாதியாய் கொண்டான் தமிழ்.
அதன்பின்னான சடங்குகள் அனைத்தையும் அனுபவித்து இரசித்து இருவரும் செய்ய திருமண வைபோகம் இனிதே நிறைவேறியது.
பகலில் பார்வையால் காதல் செய்தவன் இரவின் தனிமையில் தன் இத்தனை நாள் காதலையும் மாரியாய் பொழிய பெண்ணவள் சற்று திணறித்தான் போனாள்.சின்ன சின்ன சீண்டல்களோடும் செல்ல அத்துமீரல்களோடும் சிணுங்களோடும் அவர்கள் தாம்பத்திய கவிதை இனிதே அரங்கேற காதல் களியாட்டங்கள் முடித்து அவன் கைவளைவில் விழித்துக் கிடந்தவளின் மனம் நிறைந்திருந்தது.
இருவருமே தூங்காமல் அந்த நிமிடங்களை இரசித்து இருக்க தீடீரென நினைவு வந்தவளாய்,
திடுதிப்பென்று காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கும் நரசிம்மனை கண்டு அவர் குடும்பமே திகைக்க என்ன சொல்வதென்று தெரியாமல் முருகானந்தம்,
“எந்திரிங்க ப்பா..இப்படிலாம் பண்ணாதீங்க..”
என்று அவர் தூக்கிவிட்டார்.
“நீங்க யார்னு தெரியாமல் உங்களை பகைச்சிக்கிட்டது தப்பு தான்..அதுக்கு என்னை இப்படி பழிவாங்காதீங்க ஐயா.. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்..”
என்று காட்டுமிராண்டியாய் முந்தி இவர்களை மிரட்டி உருட்டி வைத்திருந்தவன் இன்று இப்படி பம்முவதைக் கண்டு அவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் தான்.
என்னவென்று புரியாமல் யவ்வனாவை பார்க்க அவளோ,
“யாரு என்ன செய்தால்..நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலைங்க…”
என்று நரசிம்மனிடமே கேட்டாள்.
“தலைவரு ஜெயிலுக்கு போனதுமே எனக்கு பாதி பலம் போயிடுச்சு..உங்களுக்கு பத்ரி வேண்டப்படவரா இருப்பார்னு எனக்கு தெரிந்திருந்தாள் உங்க திசைப்பக்கம் கூட தலைவைத்திருக்க மாட்டோம்..எங்களை வரவைச்சு தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்பிண்ணி எடுத்துட்டாங்க..கடைசியா உடம்புல உசுர மட்டும் வைச்சு அத்தோட விட்டாரேன்னு சந்தோஷப்பட்டால்..இதோட பெரிய சோதனையா என்னை எந்த தொழிலும் செய்ய விடுவது இல்லம்மா..எந்த பக்கம் போனாலும் எதாவது செஞ்சிடுறாங்க..சாப்பாட்டிற்கு கூட கஷ்டம்..என் குடும்பமும் என்னால ரொம்ப கஷ்டப்படுது..தயவு செஞ்சு கொஞ்சம் கருணை காட்ட சொல்லுங்க ம்மா..நான் இனி என் பொழப்பை பார்த்துட்டு இருந்துப் பேன்..”
என்று கெஞ்சி நின்றவரை கண்டு பாவமாக தான் இருந்தது.மீண்டும் மீண்டும் மன்னிப்புக்கேட்டுவிட்டே அவர் அங்கிருந்து சென்றார்.
“பாவம்..விட்ருங்க தமிழ்..”
என்று அவள் கூறி முடிக்க அதுவரை அவள் சொல்வதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தமிழ்,
“ஹோய்..நான் என்ன பண்ணேன்..இதை பத்ரியிடம் தான் சொல்லணும்..”
என்று சொல்ல அவனை நிமிர்ந்து கூர்மையாய் நோக்கினாள்.
“இப்படி பார்த்தால் என்ன அர்த்தம்..??”
“நீங்க சொல்றதை நம்பலேனு அர்த்தம்..எனக்கு உங்களையும் தெரியும்..பத்ரி அண்ணனையும் தெரியும்..அடித்து தொம்சம் பண்ணினது வேணால் பத்ரி அண்ணனா இருக்கலாம்.. ஆனால் அவரை எதுவும் செய்ய விடாமல் வச்சு செய்யுறது நீங்களா தான் இருக்கும்..”
என்று அவள் கண்களை சுருக்கி சொல்ல தோளை குலுக்கி,
“இதென்னடி புது புரளியா இருக்கு..”
என்று அவன் அறியா பிள்ளைப்போல் கூறினாலும் அவள் ஏற்கவில்லை.
“சும்மா சமாளிக்காதீங்க தமிழ்..அந்த எம்.எல்.ஏ விசயத்துல நான் பார்த்துட்டேன்..சைலென்ட் ஆ ஸ்கெட்ச் போட்டு அந்த மனுஷனோட சொந்த கட்சியில் இருந்தே தூக்க வைச்சிட்டீங்க.. இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையை கலைச்சு விட்டீங்க..அப்படி தானே இந்த நரசிம்மனுக்கும்..”
என்று அவள் தீர்க்கமாக கூறினாள்.ஏனெனில் இந்த குறுகிய காலத்தில் அவள் உணர்ந்த ஒன்று தமிழ் எடுத்தவுடன் அடிக்க மாட்டான் ஆனால் அடிக்க நினைத்துவிட்டால் ஆணி வேரில் தான் கைவைப்பான் என்று..!! எனவே இது இவன் வேலை தான் என்று உறுதியாய் நம்பினாள்.
அவள் தலையை ஒற்றை கையால் அழுத்தியவன்,
“எப்படி தான் இந்த பொண்ணுங்க எல்லாம் பொண்டாட்டி ஆனதும் அப்படியே சி.ஐ.டியா மாறிடிறாங்களோ ப்பா..”
என்றவன், “ஆமா..நான் தான் காரணம்..அவன் பண்ணினதுக்கு அணுபவிக்கிறான்..”
என்று அலட்சியமாய் கூற,
“வேண்டாம் தமிழ்..செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிக்க கூடாது..உணர்ந்துட்டார்ல அத்தோட விட்ருங்க..”
என்று அவள் சொன்னபோது ஏனோதானோ வென்று தலையசைக்க அவன் தாடையை பற்றி தன்னை நோக்க செய்தவள்,
“எனக்காக ப்ளீஸ்..”
என்று கண்களை சுருக்கி கேட்ட அழகில் தலைவரின் மூட் மாறிவிட,
“சரிங்க மகாராணி..”
என்று நெற்றியோடு நெற்றி முட்டி உதட்டால் கவியெழுதினான் அந்த காதல் கள்வன்.