அத்தியாயம்-22
அம்மணி ஆட்டை திருடிய கள்வனாய் திருதிருவென முழித்தாலும்,
“உண்மையாவே எனக்கெல்லாம் மறந்திடுச்சு..”
என்று சின்ன குரலில் சொல்ல,
“இன்னொரு வாட்டி பொய் சொன்னே,..பல்லை கழட்டி கைல கொடுத்திடுவேன்..”
என்று அவன் கையோங்கவும்,
“அய்யோ நிஜமா தான்..”
என்று அவசரமாய் தடுத்து நேற்றில் இருந்து நடந்ததை கூறினாள்.அவள் கூறுவதை எல்லாம் பொறுமையாய் கேட்டவன்,
“அப்புறம் ஏன் என்னை தெரியலையான்னு கேட்டதுக்கு ஆமான்னு சொன்ன..”
என்று கேட்டான்.
“நீங்க என்மேல கோபமா இருப்பீங்கன்னு தெரியும்..பயமா இருந்துச்சு அதான்..”
என்று அவள் மெண்று விழுங்க,
“அய்யோடா..இவங்க ரொம்ப பயந்தவங்க தான்..”
என்று நக்கலாய் கூறியவன்,
“பயம் இருக்கிறவ அப்படி ஒரு காரியத்தை ஏண்டி செஞ்சே..”
என்றான் கோபமாய்.
“அப்போ என் சூழ்நிலை..”
என்றவள் பின் நினைவு வந்தவளாய்,
“கவின்,மது நல்லா இருக்காங்க தானே..அவங்களை காப்பாத்திட்டீங்கல்ல..”
என்று அவரமாய் கண்களில் எதிர்பார்ப்போடு நம்பிக்கை நிறைந்த குரலில் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“இல்லைன்னு சொன்னால் என்ன யவ்வா செய்வே..”
என்று கேட்கவும் துணுக்குறவள் மறுத்து தலையசைத்து,
“ம்ஹூஹும்..இருக்காது..அவங்களுக்கு ஒன்னும் ஆகியிருக்காது.. மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது..ஆனால் நீங்க நிச்சயம் எப்படியும் பிள்ளைங்கல காப்பாத்திடுவீங்கன்னு தெரியும்..அந்த நம்பிக்கையில் தான் அதை துணிந்து செஞ்சேன்..”
என்று உறுதியாய் சொன்னவளை முறைத்து பார்த்த தமிழ்,
“அவங்களை காப்பாற்ற தெரிஞ்ச எனக்கு உன்னை பாதுகாக்க தெரியாதாடி..இப்போ வக்கனையா பேசுறீயே..இதே நம்பிக்கையோட உன் பிரச்சனையும் என்னிடம் சொல்லறதுக்கு என்னடி…உனக்கொன்னுனா நான் சும்மா இருப்பேனா…”
என்றான் ஆதங்கத்தோடு…
அவனது உரிமையான கோபத்தில் சிலிர்த்தவள் அவன் கண்களை பார்க்க முடியாமல் அலைபாயும் விழிகளோடு,
“என் விசயமே வேற தமிழ்.. நான் ஏன் இதெல்லாம் செஞ்சேன் தெரியுமா..”
என்று அவள் ஆரம்பிக்கும் போதே,
“தெரியும்.. “என்று அவன் சொல்லவும் அவள் ஆச்சரியமாய் பார்க்க,
“நீ சொன்னா மாதிரி உன் மேல கொலவெறில தான் இருந்தேன்..உன்னை தேடி கண்டுப்பிடித்து உண்டு இல்லன்னு ஆக்கிடுற முடிவுல தான் இருந்தேன்..உன் வீட்டை தேடி கண்டுபிடித்தேன்..ஆனால் அப்புறம் தான் தெரிஞ்சிது..யாருக்காக இதெல்லாம் செய்றேன்னு கூட உனக்கு தெரியாதுனு..”
என்றவன் அவள் சென்ற பிறகு நடந்த அனைத்தையும் விவரித்தான்.
*
*
“அண்ணா..என்னால சத்தியமா நம்ப முடியல..இது தற்செயல்ன்னு..”
இன்னமும் ஆச்சரியம் விலகாமல் கேட்ட கணபதியிடம்,
“நாம ஒன்னு நினைச்சு செஞ்சால் கடவுள் நம்மை வைத்து வேறு திட்டம் போட்டிருக்கார்.. நினைத்து பார்..யவ்வனா ஏன் நம்ம கண்ணில் படணும்..? நாம ஏன் அவளுக்கு அடைக்கலம் தருணும்..?இத்தனை வருடங்களாய் எதுக்குமே நம்மை எதிர்பார்க்காத தமிழ் இப்போ ஏன் நம்ம உதவியை தேடி வரணும்..? எல்லாம் அவன் விதிச்ச விளையாட்டு தான்.. நாம வாழ்க்கையில் யாரையுமே தற்செயலா சந்திக்கிறது இல்லை கணபதி ஒவ்வொருத்தரை சந்திக்கவும் ஒரு காரணம் இருக்கும்…”
என்று சொற்பொழிவு ஆற்றும் ஞானியாய் மாறி பத்ரி கூற அவன் வார்த்தைகளில் உள்ள உண்மையை அவனும் அமோதித்தான்.
“ம்ஹும்..அப்போ தமிழ் எட்டனாவை அழைத்துக்கொண்டு போயிடுவான்ல..”
“ஆமாடா…ஆஊன்னா சிக்கிரம் அவளை வீட்டை விட்டு அனுப்பினாள் தான் எனக்கு நிம்மதின்னு சொல்லிடே இருப்பியே…இப்போ உனக்கு நிம்மதியா…”
என்று இதழில் தேங்கிய புன்னகையோடு பத்ரி கேட்க அவன் முகத்திலும் ஒரு சின்ன புன்னகை..
“ஆமா..இனிமே என்னை நொய்.. நொய்ன்னு பேசியே டார்ச்சர் பண்ண ஆளு இருக்காது..”என்றவன்,
“ஆனால் இந்த கட்டிடத்தை வீடாக கொஞ்ச நாள் உணர வைத்தாள்..இனி மறுபடியும் பழய மாதிரி ஆகிடும்ல..அந்த வாயாடி இருந்தாலும் தொல்லையா தான் இருக்கு இல்லேன்னு நினைச்சு பார்க்கும் போது ஒரு மாதிரி கஷ்டமா தான் இருக்கு..”
என்று உணர்ந்து கூறியவன் பின் பேச்சை மாற்றும் பொருட்டு,
“அண்ணா..பேசாமல் நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோயேன்..வர்ர அண்ணி நம்ம வீட்டை வீடா பார்த்துபாங்கல்லே…”
என்று கண்சிமிட்டலோடு சொல்ல அவன் பின்னந்தலையிலே ஒன்று போட்ட பத்ரி,
“உளராம உருப்படியா எதாவது வேலை இருந்தால் பாரு போ..”
என்று அதட்டினான்.
“என்ன தப்ப சொல்லிப்புட்டேன்.. கல்யாணம் பண்ணிக்காட்டி போங்க..காலம் பூரா முரட்டு சிங்கிளாவே இருக்க நீங்க நினைச்சால் யாரு மாத்தமுடியும்..”
என்று முனங்கியப்படி அலைபேசியை எடுத்துக் கொண்டு நகர,
“என்னடா முனங்குற..”
என்ற பத்ரியின் மிரட்டலில்,
“ஒன்னுமில்லண்ணா..உருப்படியா எதாவது செய்ய சொன்னீங்கல்ல..அதான் அந்த எம்.எல்.ஏ கேஸை முடிக்க வழி பண்றேன்..”
என்று பவ்யமாய் கூறினான் கணபதி.
“ரொம்ப நல்லது..அதோட அந்த அல்லக்கைங்க நரசிம்மன்,விநாயகம் அவனோட அண்ணன் மூணு பேரையும் இங்க வரவை நான் பார்க்கனும்..”
“ண்ணாஆ….அந்த சில்றைங்க-கிட்டலாம் நீ ஏன்னா பேசிக்கிட்டு..தட்டி தூக்கிடலாம் விடுங்க..”
“என்ன வேணாலும் பண்ணிக்கோடா..ஆனால் அதுக்கு முன்னாடி அவனுங்க இங்க வரணும்…பத்ரி தங்கச்சியை மிரட்டி டார்ச்சர் பண்ணானுங்கல்ல..உண்மையான டார்ச்சரை நான் காட்டுறேன்..”
என்று பத்ரி சொல்ல அவன் ஒரு முடிவோடு இருப்பதை உணர்ந்து கணபதியும் அதனை ஏறுக்கொண்டான்.
சற்று நேரத்தில் யவ்வனாவோடு தமிழும் வர அவளுக்கு நினைவு திரும்பிவிட்டதை அறிந்ததும் இருவருமே மகிழ்ந்தனர்.
விடைபெறும் தருவாயில் அவளின் கண்கள் கலங்க,
“நன்றிங்குற ஒருவார்த்தை ரொம்ப சின்னதுன்னா நீங்க செஞ்சதுக்கெல்லாம்!!
மனசால ரொம்பவே நொந்து போயிருந்தேன்..அதிலிருந்து மீண்டு இத்தனை நாள் நான் உயிர்ப்போட வளையவர நீங்க எல்லாரும் தான் காரணம் அண்ணா..”
என்று உருக்கமாய் சொன்னவள் தன்னை சமாளித்துக்கொண்டு,
“இப்போ போறேன் தான்..ஆனால் இவரை மாதிரி கிடையாது நானு..உங்களை பார்க்க நான் அடிக்கடி வருவேன்”
என்று தமிழை காட்டி சொல்லி,
“வரலாம் தானே..”
என்று எதிர்பார்ப்போடு கேட்க விரிந்த சிரிப்போடு,
“இதென்னடா கேள்வி..தாராளமா..”
என்றான் பத்ரி.அடுத்து கணபதியை நோக்கி அவள் பேசும்மும்,
“செண்டிமென்ட்டால்லாம் பேசிடாத..”
என்று அவன் அவசரமாய் மறுக்க முறைத்தவள்,
“ஆமா பேசறாங்க..”என்று நொடித்துக்கொண்டு,
“ஒரு ஃப்ரீ அட்வெய்ஸ்..அப்பப்போ சிரிங்க பாஸ்.. சிரிக்காமல் இருந்தால் இளமையிலே முதுமை வந்திடுமாம்..பாருங்க..இப்போவே அங்கிள் மாதிரி ஆகிட்டிங்க..”
என்று வழக்கம்போல் அவனை வாரிவிட்டு அவன் பதில் கூறும்முன் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு வருவதாக கூறி ஓடிவிட்டாள்.
“அவளுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்திடா.. நீ தப்ப எடுத்துக்காத..”
என்று யவ்வனாக்காக தமிழ் பேச,
“அவ இப்படி பேசலைன்னா தான் ஆச்சரியம்”
என்று இலகுவாக எடுத்துக் கொண்ட கணபதி பின்,
“எல்லாம் சரி..ஆனால் ஒருவிசயத்தை பத்தி நீ சொல்லவே இல்லையே..”
என்றான் கேலியாக..
“என்ன அது..”
“உனக்கு யவ்வனா என்ன வேணும்னு?”
என்று புருவம் உயர்த்தி கேட்க,
“என்ன வேணும்னா..இனி என் வாழ்க்கை மொத்தம் அவ தான் வேணும்.. “
என்று சொல்லும் போது அழகாய் ஓர் புன்னகை அவன் இதழில் ஒட்டிக்கொண்டது.
“நினைச்சேண்டா…”என்று சிரித்த பத்ரி,
“அவளை பத்திரமா பார்த்துக்கடா..அவளை கஷ்டப்படுத்தினேன்னு தெரிஞ்சிது மவனே என்னோட இன்னோரு முகத்தை பார்ப்ப…”
என்றான் மிரட்டலாய்..
“அடப்பாவி..என்னோட இப்போ அந்த மேடம் முக்கியமாகிட்டாங்களோ..”
என்று அட்டகாசமாய் தமிழ் சிரிக்க,
“ஆமா..இத்தனை வருஷம் ஆளு அட்ரெஸ்ஸே இல்லாம காணாமல் போனவன் தானேடா நீ…உனக்கெல்லாம் முக்கியத்துவம் தர முடியாது..”
என்று கூறியவன் குரலில் விளையாட்டு மட்டுமே இருக்க நண்பனின் தாக்குதலில் போலியாக, “எல்லாம் என் நேரம்..”
என்று வருத்தபட்டான்.
அந்த வீட்டில் இருந்த ஒருத்தரை விடாமல் அனைவரிடமும் விடைப்பெற்ற பின்பே வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
“பைக்கில்லா வந்த..”
நிறுத்தி வைத்திருந்த தனது ராயல் என்ஃபீல்டை சாவி போட்டு இயக்கி கொண்டிருந்தவனிடம் பத்ரி கேட்டான்.
“ஆமா….”என்று அவன் தோள் குலுக்கவும்,
“எவ்வளவு தூரம் பைக்கிலே போவ..பைக்கை இங்க விட்டுவிட்டு காரை எடுத்திட்டு போயேன்..பசங்கல அப்புறம் உன் பைக்கை கொண்டு வந்து தர சொல்றேன்..”
என்று சொல்ல
“இல்ல பத்ரி..எனக்கு என் பைக்தான் கம்ஃபட்டபுள்..அதோட என் முத பொண்டாட்டி இது..யாரு கையிலும் தர மாட்டேன்..”
என்று கண்சிமிட்டினான்.
அது சரி..நம்மூரில் பாதி பசங்களிற்கு அப்படி தானே..! நம் தமிழ் மட்டும் என்ன விதிவிலக்கா..!
இவர்கள் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த யவ்வனாவிற்கு இன்ஸ்டெண்டாய் ஒரு பொறாமை அவன் பைக்கின் மீது வர,
“உன் கூடலாம் போட்டி போட வைக்கிறானே..”
என்று மனதில் நொடித்துகொண்டாள்.
“ஹலோ..பார்த்துக்கொண்டே நின்றாள் எப்படி..வா வந்து ஏறு..”
அவள் ஏறியபின் தமிழ் வண்டியை கிளப்ப பத்ரி கண்ணில் இருந்து மறையும் வரையும் அவள் கையசைத்தாள்.
தமிழின் கரும்புரவி அவன் கையில் சீறி பாய மிகவும் உற்சாகமாய் காணப்பட்டான்.அவன் இங்க வரும்வரைகூட எதிர்ப்பார்க்கவில்லையே திரும்ப செல்லும்போது அவனவள் அவனை சேர்ந்திடுவாள் என்று..!இத்தனை நாள் வெறுமையாய் இருந்த அவன் வாழ்க்கை ஒரெ நாளில் வண்ணமயமாகும் என்று..!
“முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ”
அவள் பட்டும் படாமலும் அமர்ந்திருப்பதை உணர்ந்த தமிழ்,
“எப்போவேனாலும் குத்திச்சிடலாங்குறா மாதிரியே ஏன் உட்கார்ந்திருக்க..ஒழுங்கா தான் உட்காறேன்..”
என்று தமிழ் சொல்ல,
“ம்ம்ம்.. நான் உட்கார்ந்து உங்க பொண்டாட்டிக்கு வலிச்சிட கூடாதுல..அதான்..”
என்று அவள் உதட்டை சுழித்து சொன்ன அழகை ரியர் வியூ மிரரில் ரசித்தபடி,
“ஆஹான்..கவலப்படாத என் என்ஃபீல்டிற்கு எதையும் தாங்கும் இதயம்..”
என்று சீண்டியவன் வேண்டுமென்றே வேகதடையில் ஏற்றி இறக்க இதை எதிர்ப்பார்க்காத யவ்வனா தட்டுதடுமாறி அவன் இடுப்பை சுற்றி இறுக்க பற்றிக் கொண்டான்.
“ச்சு..ச்சு..பார்த்து யவ்வனா..இதுக்கு தான் சொன்னேன்..”
சிரிப்பை ஒரு கன்னத்தில் ஓரங்கட்டிவிட்டு நல்லப்பிள்ளையாய் சொன்னாலும் அவனை உணர்ந்தவளாய்,
‘யமகாதகன்.. ‘என்று செல்லமாய் மனதில் திட்டிவிட்டு கூச்சத்தோடு கையை விலக்கிக் கொள்ள,
“அட..பிடிச்சுக்கோம்மா நான் தப்பா நினைக்க மாட்டேன்..”
என்று அவன் பெருந்தன்மையாய் சொல்ல கண்ணாடியில் தெரிந்த அவன் பார்வையின் கள்ளத்தனத்தை கண்டு அவள் முகம் சிவக்க இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக யவ்வனா பதில் பேச திண்றி அமைதியானாள்.
அந்த பயணத்தை இருவரும் அனுபவித்து வர இருவருக்கும் அது அப்படியே தொடர்ந்துக் கொண்டே இருக்காதா என்ற ஆசை இருந்தாலும் அவர்கள் சேர வேண்டிய இடமும் வந்து விட்டது.அது தான் யவ்வனாவின் வீடு..
திடுதிப்பென்று வந்து நின்ற யவ்வனாவை கண்டு அந்த குடும்பமே இன்ப அதிர்ச்சியில் ஆழ சொன்ன சொல் மாறாமல் தங்கள் மகளை கொண்டு வந்து நிறுத்திய தமிழ் அவர்கள் கண்ணுக்கு கடவுளாகவே தெரிந்தான்.
பிரிவு துயராற்றி தேறிவரவே வெகு நேரமானது.அவர்களது பாசப்பிணைப்பை காணும்போது அவன் கண்களும் கலங்கி தான் போனது.
காடு மேடெல்லாம் சுற்றி இறுதியில் தன் கடலை சேர்ந்த நதியாய் தன் வீட்டை சேர்ந்ததும் ஆசுவாசமானாள் யவ்வனா.
சற்று நேரத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்,
“சரி விடுங்க..அதான் வந்துட்டேனே.. நான் அப்போவே என்ன சொன்னேன்..உங்க மகளால நாலு பேருக்கு ஆபத்து வரலாமே தவிர என்னை யாராலும் எதுவும் செய்யமுடியாதுன்னு சொன்னேன்ல..அதனால என்னை பத்தி கவலை படாமல் வீட்டிற்கு வந்திருக்கவங்கல கவனிங்க..”
என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு, “சாப்பிடுறியா இல்லையாம்மா..ஏன் இப்படி முகமெல்லாம் வத்தி போயிருக்கு..இரு உங்களுக்கு அப்புறம் இருக்கு..”
என்று அன்னையை மிரட்டியபடி கிட்சனில் நுழைந்தவள் தங்கையை,
“ஸ்கூல் இல்லையாடி இன்னைக்கு..வீட்டில் இருக்க..”
விசாரித்து தம்பியிடம்,
“பெரிய மனுஷா நீ தானே அக்காங்கிட்ட என்னை போட்டு கொடுத்த..நீயே ஃபோன் பண்ணி நான் வந்திட்டதை சொல்லு..அப்புறம் இந்த செமெஸ்டர் ஆரம்பித்திருக்குமே ஃபீஸ் கட்டிட்டியா..”
என்று படபடப்பாய் பேசிக்கொண்டே இயல்பிற்கு அவள் திரும்பியதோடு தன் வீட்டினரையும் அடுத்ததை சிந்திக்க வைக்க அதனை கூடத்தில் அமர்ந்தபடியே கவனித்த தமிழுக்கு தன்னவள் மீது இன்னும் காதல் பொங்கியது.விளையாட்டு பெண்போல் வலம் வந்தாலும் அவளது மன முதிர்ச்சியையும் அவளது பொறுப்புணர்ச்சியை காண்கையில் பெருமையாக கூட இருந்தது.
காஃபி அருந்தியபடி முருகனந்த்தோடு பேசிக்கொண்டிருந்த தமிழ் சற்று நேர்த்தில்,
“அப்போ நான் கிளம்பறேன் சர்..”என்று அவன் எழும்பவும்,
“இருங்க தமிழ்..சாப்பிட்டு போகலாம்…ஏன் அதுக்குள்ள கிளம்பறீங்க…”
முருகானந்தம் சொல்ல அவன் கிளம்பறேன் என்று சொல்லவுமே அங்க வந்திருந்த யவ்வனா ‘ஏன் உடனே போறான்..’ என்பதுபோல் முகம் சுணங்க பார்த்தாள்.
“இல்ல சர்..இருக்கட்டும்..கொஞ்சம் வேலை இருக்கு.. நான் வரேன்”
என்றவன் யவ்வனாவிடம் ஒரு தலையசைப்போடு விடைப்பெற்று வெளியேர அவன் எதுவும் சொல்லாமல் செல்லவும் அவளுக்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.
‘வந்த வேலை முடிந்ததுன்ற மாதிரி போய்ட்டால் அவ்வளவு தானா..’
என்று மனம் சிணுங்கியது.வேறென்ன எதிர்ப்பார்க்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.அப்படியே நின்றுவிட்டாள் அவள் யவ்வனா அல்லவே..அப்பாவிடம் சொல்லிவிட்டு வேகமாய் வெளியேவர
அவள் வருவாள்.. என்று அறிந்தே காத்திருந்த தமிழ் அவள் வந்ததும் கிளம்புவது போல் பாவ்லா செய்தான்.
“தமிழ்.. நில்லுங்க..”என்று வேகமாய் வர,
“என்னாச்சு யவ்வனா..”என்றான் அறியாதவன் போல்..
“என்னை விட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் போனால் என்னங்க அர்த்தம்..”
முறைப்போடு கேட்டவளை புரியாததுபோல் பார்த்தவன்,
“என்ன சொல்லணும்…”
என்று சொல்லி அவளை மேலும் கடுப்பாக்கினான்.
“நம்மளை பத்தி கேட்கறேன்..”
என்று பல்லை கடித்தபடி அவள் கேட்டதற்கும்,
“ஏன் நமக்குள்ள என்ன..”
என்று அப்போதும் அப்படியே பேசியவனின் தலையிலே ஒன்று போட துடித்த கையை கட்டுப்படுத்திக் கொண்டு,
“ஒன்னுமே இல்லங்க.. நான் தான் ஏதோ லூசு மாதிரி உளரிட்டேன்..நீங்க கிளம்புங்க சாமி..”
என்று காய்ந்தவள் திரும்பி நடக்க அவள் கோபத்தை ரசித்து சிரித்தவன் அவளை நகரவிடாமல் கையை பிடித்து நிறுத்தவும் திடுக்கிட்டாள்.
“என்ன செய்றீங்க தமிழ்..நாம தெருவில் நிற்கிறோம்..”
சுற்றும் முற்றும் பார்த்தபடி கையை உருவ அவனும் புன்னகையோடு உடனே விட்டுவிட்டான்.
“நமக்குள்ள என்னான்னு சொல்லி தான் உனக்கு தெரியனுமாடி..”
கிசுகிசுப்பாய் கேட்டவன் பார்வையில் கரைப்புரண்டோடிய காதலை கண்டு அவளுக்கு தடுமாற அவளை மேலும் சிவக்க வைப்பது போல்,
“அப்படி சொல்லி தான் ஆகணும்னா சொல்றேன்..”
என்று இழுத்தவன்,
“பத்து வருஷத்துல மூணு பிள்ளைங்கன்னு நான் கற்பனைக்கு சொன்னதை நாம ஏன் நிஜமாக்க கூடாது..”
கண்சிமிட்டலோடு சொன்னவனின் குரல் குழைந்துவர வெட்கத்தில சிவந்த முகத்தை மறைக்க முடியாமல் திண்றியவள் உள்ளே போக முனைய,
“பதில் சொல்லிட்டு போம்மா..”
என்று தடுத்தவனையும் மீறி திரும்பி நடந்தவள் பின் சட்டென்று நின்று,
“ஏன் தமிழ்..அதுக்கு உங்களுக்கு பத்தூஊஊ வருஷம் தேவையா..??ரொம்ப ஸ்லோ தமிழ் நீங்க..”
என்று கிண்டலடித்தவள் அவன் பதில் சொல்லுமுன் உள்ளே ஓடிவிட அவள் சொன்ன தோரணையில் தமிழுக்கு தான் வெட்க முறுவல் பூத்தது.
“ஆதி அந்தமும் மறந்து