அருகே செல்லும்போதே குழந்தைகள் சத்தம் ஆரவாரமாய் கேட்டது. ஏதோ விளையாட்டு போட்டு நடக்கிறது போல என்று தோன்ற, ஒற்றை பந்தை வைத்து சுற்றி சுற்றி ஓடி என்னவோ விளையாடிக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் நிழலில் அமர்ந்து அதை வேடிக்கைப்பார்க்க, அண்ணாமலை எங்கே என்று தேடினான் சேகர்.
அவன் தேடுவதைக்கண்டு, “பின்னாடி தோட்டத்துல இருக்கான் போ!” என்றொருவர் சொல்ல, வந்தவர்களை அழைத்துக்கொண்டு அங்கே சென்றான் அவன்.
அங்கோ, பரதன், தேன்மொழி, ஐயப்பன், தாஸ் சகிதம் அத்தனை பேரும் நிற்க, “எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா?” என்று கேட்டபடி வந்தவன், “பட்டுக்குட்டி எங்க?” என்று கேட்க, “இதோ இங்க!” ஒரு வயது கொழுகொழு குழந்தை ஒன்றை தூக்கி கொஞ்சினாள் தேன்மொழி.
கீழே அண்ணாமலை அமர்ந்திருந்த, அவன் வெண்வேட்டியில் இருந்த மஞ்சள் கறையை சிரிப்பை அடக்கிக்கொண்டு சுத்தம் செய்ய உதவிக்கொண்டிருந்தாள் நிம்மதி.
“மறுபடியும் உன்மேலையே போயிட்டாளா?” என்ற நந்தாவுக்கு சிரிப்பு தாளவில்லை. தினமும் அவன் வேட்டி தான், அவன் பெற்ற மகளுக்கு காலை கடன் கழிக்கும் இடம். இன்று அந்த குட்டி தேவதை பூமிக்கு வந்து ஒரு வருடம் ஆன நன்னாள். அன்றும் கூட அவன் பட்டு வேட்டியில் தன் கடமையை செய்திருக்க, சலித்துக்கொண்டாலும், கோவமே வரவில்லை அண்ணாவுக்கு.
நிம்மதியுடன் நிம்மதியான வாழ்வு.
அவனின் பயங்கள் எல்லாம் பறந்து போய்விட்ட பிறகு, இந்த வாழ்வு ஏனோ மிக பிடித்தது.
படித்தவர்கள் கண்டு பயமில்லை,
பிடித்தவர்கள் கண்டும் பயமில்லை,
விட்டுச்செல்வார்களோ என்ற ஐயமில்லை,
எதிர்க்காலம் குறித்த கவலையில்லை.
அவன் எதிர்ப்பார்த்த வாழ்வு இது தான்…!
அத்தனையும் அவன் நிம்மதியால் சாத்தியமாகிற்று.
இதோ இப்போது நிம்மதியின் குட்டி செராக்ஸ் வேறு!
தனக்கென ஒரு குடும்பம் என்ற நினைவே அவனுக்கு தித்தித்தது. அந்த தித்திப்பு நுனி நாக்கில் தேனாய் கரைய, அவனிடம் முன்பை போன்ற கோவங்கள், வீம்புகள், பிடிவாதங்கள் எல்லாம் கரைந்து காணாமல் தான் போயிருந்தது.
அண்ணா இப்போது வேறொரு ஆளா தான் இருந்தான்.
“ரொம்ப ஈரமா இருக்கு, நீ இங்கேயே இரு, நான் போய் வேட்டி ஒன்னு கொண்டு வரேன்” என்று நிம்மதி எழுந்து தங்கள் வீட்டிற்குப்போக, “சரி!” என்றுவிட்டான்.
வேக எட்டுகளில் தங்கள் இடம் வந்தவள், ஆறு வீடுகளில் இரண்டாவதாய் இருந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றாள். அறைக்குள் சென்று பீரோவை திறந்து வேட்டியை எடுத்த நேரம், பின்னிருந்து அணைப்போடு, கன்னம் கடித்தான் அண்ணா.
“ப்ச், யோவ்… அங்கேயே இருன்னு சொன்னேன்ல?” அவனை அவள் விலக்க, தன் மீசை ரோமம் உரச அழுத்தமாய் அவளை உரசியவன், சட்டென தன்னை நோக்கி திருப்பினான். திறந்திருந்த பீரோவின் கதவுக்குள் கச்சிதமாய் பொருந்தி நின்றனர் இருவரும்.
தன்னை நோக்கி திருப்பிய வேகத்தில் அவள் முகம் தாங்கி வேகவேகமாய் இதலொற்ற ஆரம்பித்தவனை அவளால் தடுக்கவே முடியவில்லை.
சில நிமிடங்களுக்கு பின், ஏதோ ஒரு ஷணத்தில் அவனை விலக்கிவிட்டவள், தன் ஈர உதடை துடைத்தபடி, “யோவ், காஞ்ச மாடு கணக்கா என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க, “நீங்க தான் ரொம்ப பிகு பண்ணிக்குறியே, வேற என்ன செய்ய?” என்றான், அடுத்து என்ன செய்யலாம் என்ற எண்ணத்தோடு.
அவன் பார்வை புரிந்தவள், எடுத்த வேட்டியை அவன் கையில் திணித்துவிட்டு, “இது ஆகாது, நீ மாத்திட்டு வா… நான் போறேன்!” என்று நகர, “நீயும் புடவை மாத்துடி” என்று இழுத்துப்பிடித்தான் அவன்.
“அய்யய்ய… கையை விடு நீ!” அவள் உருவிக்கொள்ள, “ரொம்ப தாண்டி பண்ற… பாட்டு பாடி உசுப்பேத்தி உரசிட்டே சுத்துன காலமெல்லாம் மறந்து போச்சுல்ல?” என்றவன் கடுப்போடு வேட்டியை மாற்ற ஆரம்பிக்க, “அதான் புள்ள வந்துருச்சுல்ல?” என்றாள், நமட்டு சிரிப்பை அவனுக்கு காட்டாதபடி முகத்தை திருப்பிக்கொண்டு.
“இதான்டி பொம்பளைங்க குணம்… ஒன்னும் தெரியாதவனுக்கு எல்…லாம் காட்டிக்குடுத்துட்டு, கண்டுக்காம போய்டுவீங்க… நாங்க பின்னாடியே நாக்க தொங்க போட்டுட்டு சுத்தணும்.” கோவமாக பேசுபவனை கண்டு சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.
“பசிக்கு திங்குறதெல்லாம் கணக்குல வருமா? திருப்தியா தின்னு எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா?” அவன் ஏக்கமாக சொல்ல, “சரி சரி… பந்தி போடுற நேரம் ஆச்சு… போலாம் வா!” என்றாள் அவனிடம்.
கழட்டிய வேட்டியை கசக்கி வீசியவன், விறுவிறுவென வெளியேறப்போக, வேகமாய் அவன் கரம் பற்றி இழுத்தாள் அவள். உர்ரென்ற முகத்தோடு அவளிடம் வந்து மோதியவன், “என்ன?” என்று கேட்க, அவள் முகத்தில் சிரிப்பு.
அது இன்னமும் அவன் கோவத்தை கிளற, “விடுறீ” என முறுக்கிக்கொண்டு திரும்பியவனை சட்டென அணைத்துக்கொண்டாள் மதி. அப்போது அவளை தள்ளிவிடப்பார்த்தவனை, “மாமா…” என்று மதி அழைக்க, அண்ணா எனும் மெசினின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி நின்றது.
ஆனாலும் விறைப்பாய் அவன் நிற்க, அவன் நெஞ்சில் தன் நாடி வைத்து நிமிர்ந்துப்பார்த்தவள், கொஞ்சமாய் உதடு குவித்து ஒரு முத்தம் வைக்க, அவள் நெற்றியோடு அழுந்த முட்டிக்கொண்டவன், இறுக்கி அணைத்தான் அவளை.
“என்னை ரொம்ப சீண்றடி நீ”
“நீ பகல்ல போர் நடத்துனல்ல… அதுக்கு பழி வாங்கும் படலம் இது” என்று சொல்லி சிரித்தாலும், அவள் பேச்சில் துளியும் உண்மையில்லை.
அணைத்துக்கொண்டு நின்றவனை சும்மா நிற்க விடாமல் முத்தத்திற்கு தூண்டிவிட்டாள் அவள். நான்கு இதழ்களும் சந்தித்து ஆழமாய், அழுத்தமாய், நிதானமாய் கதை பேச ஆரம்பிக்க, கைகள் ஆங்காங்கே குசலம் விசாரிக்க, நேரம் கணக்கின்றி விரைய, இருவரும் தங்களை மறந்து முத்தத்தில் லயித்திருக்கும் நேரம், “அண்ணாஆஆஆ” என்ற அலறலில் அவசரமாய் பிரிந்து கதவின் பின்னே ஒன்டினர்.
மீண்டும், “அண்ணாஆஆ” என்று அலறல் அருகே கேட்டது.
“முதல்ல இந்த எருமைங்களுக்கு கல்யாணத்தை செஞ்சு வைக்கணும்!” அண்ணா முணுமுணுப்பாய் சடைத்துக்கொள்ள, வாசலில் நின்ற ஐயப்பன், “மதி…. அண்ணாவை வர சொல்லு, பந்தி போயிட்டு இருக்கு, எல்லாம் கேக்காங்க” என்றான்.
அறை கதவின் பின்னிருந்து வெளியே வந்தவள், “அவரா? இங்க இல்லையே!” என்றாள், அண்ணாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
“இல்லையா?” என்று அதிர்ந்த ஐயப்பன், ‘சரி’ என்று திரும்பும் நேரம், நிம்மதி நிம்மதியாய் மூச்சு விட, “செருப்பு கடக்கு” என்றான் அண்ணாவின் காலணியை கண்டு.
“ஓஓ…” என்றவன் அப்போதும் போகாது, “சரி நீ வா… என்ன பண்ற இங்க?” என்றான்.
அவள் அண்ணாவை பார்க்க, “டயர்டா இருக்கு, அப்புறம் வரேன்னு சொல்லு” என்று சைகை செய்தான்.
“டயர்டா இருக்கு, அப்புறம் வரேன்” அவள் அதையே சொல்ல, “தனியா ஏன் இருக்கவ? அங்கன வந்து ரெஸ்ட் எடு” அவன் அழைக்க, இவள் அண்ணாவை பார்க்க, “இங்க என்ன லுக்கு, போவ சொல்ரீ” என்றான் அண்ணா முணுமுணுப்பாய்.
“எப்படி?” அவள் முணுமுணுக்க, “என்ன உனக்கு நீயே பேசிக்குற?” என்று ஐயப்பன் கேட்க, “ஹான்!” என்று அவள் திகைத்து நிற்க, “எதாவது சொல்லி போவ சொல்ரீ” இங்கே அண்ணா திட்ட, வெளியே அவன் மீண்டும் அழைக்க, சற்று டென்சன் ஆனவள், “அய்ய்யோஒ… ரெண்டு பேரும் நிறுத்துங்க” என்றாள் சத்தமாய்.
“ரெண்டு பேரா? என்னந்த உளறுற?” ஐயப்பன் கேட்டதும், இங்கே அண்ணா அவளை கொடூரமாய் முறைக்க, “நான் அப்புறம் வரேன்… பாப்பா அழுதான்னா தூக்கிட்டு வா” என்றுவிட, “என்னவோ போ” என்றவன் சென்றுவிட, அப்போது தான் அவளுக்கு நிம்மதியான மூச்சு வந்தது.
அவன் போனதுமே, ரூம் கதவை சாற்றியவன், நொடிக்கூட விடாது அவளை கைகளில் அள்ளிக்கொண்டான்.
“பக்கம் பக்கமா வீட்டை கட்டிட்டு பகல்ல கதவடைக்க கூட முடில, ராத்திரில உம்மவ நம்மளை வச்சு செய்றா! இதுல எங்கடி நான் உன்னை பாக்க…” பேச்சு பேச்சாக இருந்தாலும் கைகள் என்னவோ அதன் வேலையை சரியாக தான் செய்துக்கொண்டிருந்தது.
“பட்டுக்குட்டி வந்த அப்புறம் உனக்கு நல்லா கறி வச்சு போச்சு டி”
“ஐயோ, வாயை மூடுய்யா”
சற்று முன் அவன் மாற்றிய வேட்டி எல்லாம் புடவையோடு கலந்து ஓரத்தில் கிடக்க, வியர்க்க விறுவிறுக்க விளையாடிக்கொண்டிருந்தான் அண்ணா.
“மெதுவாய்யா!”
“அட போடி… எவனாது வந்துடப்போறான்” அவன் வேகம் தான் கூடியது.
“வந்தா என்ன இப்ப… புருஷன் தானே நீ!” என்றவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
“புருஷனா இருந்து என்ன புண்ணியம்… சுதந்திரமே இல்லையே” என்றவனை நக்கலாய் பார்த்தவள், “ரொம்ப சுதந்திரமா தானே இருக்கீங்க” என்றாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன், “ச்சீ, அப்டி பாக்காத” என்று கன்னத்தில் இடிக்க, சிரிப்பு தான் அவளுக்கு.
“ஏய், ஃபீல் பண்ணுடி… சிரிக்குற!” என்றவன், அவள் அலறும்படி ஆட, கூடவே பல அடிகளும் அவளிடம் இருந்து கிடைக்க, கூடலை மீறிய ஒரு சந்தோஷ மனநிலை தான் இருவருக்கும்.
“உனக்கு ஏதாவது வேணுமா?” அவன் நிமிராமல் கேட்க, “எது?” என்றாள் கேள்வியாய்.
“எதாவது?”
“ம்ம்ம்… மீனு வேணும்!”
“அடப்போடி” அவன் சலிக்க, “ஹான், என்ன போடி? எனக்காக குத்தகை எடுக்கவே போனீல்ல? இப்போ சலிப்பா இருக்கா?” வேண்டுமென்றே சண்டை பிடிக்க பார்த்தாள்.
“அதான் போலீஸுக்கு சொல்லி கலைச்சு விட்டியே… பிறகென்ன?” அவன் அசால்ட்டாய் கேட்க, திகைத்தாள் இவள்.
“என்னடி பேச்சே காணோம்!? திருட்டுக்கழுத!” அவள் வெற்றிடையை நறுக்கென கிள்ளினான் அவன்.
‘ஸ்…ஆஆ’ நெளிந்தவள், “தப்பு தானே அது… அதான்… சும்மா” என்று சமாளிக்க, “என்ன வேணும்ன்னு சொல்லுடி… எதாவது குடுக்கணும் போல இருக்கு” என்றான்.
சற்று நேரம் அவள் யோசிக்க, அவள் முகத்தை அவன் விடாது பார்க்க, அவளுக்கு கேட்க ஒன்றுமே தோன்றவில்லை… ஒன்றைத்தவிர!!!
அதை அவள் சொன்னதும், அவளை அள்ளி எடுத்து மேலே போட்டுக்கொண்டவன், அவள் கேட்டதை உடனே கொடுக்கும் தாராள பிரபுவாய் மாறிப்போக, பட்டுக்குட்டியோடு, இன்னொரு செல்லக்குட்டியும் மறுவருடம் அவர்கள் கூட்டில் இணையும்!!!