“ரசம் வச்சுருக்கேன், மறுசோறுக்கு போட்டுக்கோ” அவள் சொல்ல, மெல்வதையும் பிசைவதையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன், “ஏன் தொன தொனங்குற?” என்றான் எரிச்சலாய். இதற்கு முன்னும் இவன் பேச்சு இப்படி தான் என்றாலும், இப்போது புதிதாய் அவளுக்கு முகம் வாடியது.
“சரி நான் பேசல, நீ தின்னு” முணுமுணுத்தாள்.
“நீ கிளம்பு, நான் பாத்துக்குறேன்” என்றவன், நீ போனால் தான் அடுத்த வாய் உண்பேன்’ என்பதை போல அமர்ந்திருக்க, மௌனமாய் எழுந்து வீட்டிற்கு வந்தவள், அவன் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
வாசலில் ஏதோ சத்தம் கேட்க, வேகமாய் போய் கதவை திறந்தவளை ஏமாற்றாமல் வெளியே நின்றிருந்தான் அண்ணாமலை. அங்கேயே இருந்த தொட்டியில் இருந்து நீர் எடுத்து கை கால் கழுவிக்கொண்டிருக்க, வேகமாய் உள்ளே சென்று துண்டை எடுத்து வந்து நீட்டினாள் மதி.
வாங்கிக்கொண்டு தன்னை சுத்தப்படுத்தியவன் நேரே வீட்டிற்குள் வந்து அவன் உடைகளில் ஒன்றை எடுத்து அங்கேயே மாற்ற, இவள் அடுப்படிக்குள் நுழைந்துக்கொண்டாள்.
“பசிக்குது’ந்த… சோறை போடு” சொல்லிவிட்டு சம்மணமிட்டு அமர்ந்துவிட்டான். அவள் சில நிமிடங்களில் தட்டுடன் வர, அதில் இருந்த மொருமொரு தோசைகளை கண்டு வியப்பாய் அவளை பார்த்தான். பாட்டி இருந்தவரை இதெல்லாம் உண்டது, எப்போது ஆண்களாக சமைக்க ஆரம்பித்தார்களோ, அப்போதிருந்து வெந்த சோறு மட்டுமே!
அவள் அடுத்த தோசையை கவனிக்க சென்றுவிட, ஆசையை மறைத்துக்கொண்டு வேகவேகமாய் கணக்கின்றி உண்டான். அதன்பின் அவளும் உண்டுவிட, அங்கிருந்த சின்ன எல்.ஈ.டி டிவியில் செய்தி ஒளிபரப்பாகும் சேனலை வைத்துவிட்டு சுவரோடு சாய்ந்துக்கொண்டான் அண்ணா.
அவன் கவனம் முழுக்க டிவியில் இருக்க, “கடைக்கு நாளைக்கும் போவனுமா?” என்றாள் அவள். அவன் திரும்பாமலே, “ஏற்கனவே இதுக்கு பதில் சொல்லிட்டேன்” என்றான்.
“இல்ல, அதான் நாலு பேர் இருக்காங்களே! என் அப்பாரும் இருக்காரு. நீ ரெண்டு நாளு ஓரடமா நின்னா தான் என்னவாம்?” உரிமையும் இறைஞ்சலுமாய் கலந்து அவள் கேட்க, “எதுக்கு?” என்றான் அவன்.
“குலதெய்வ கோவில் போகணும், சொந்தத்துக்கு கறிசோறு போடணும்” என்று சொல்ல, “நாளைக்கு பொழுது சாஞ்சு கறி சோறு போட தான் உன் அப்பாரு வேலை பாக்குறாரு. உன்கிட்ட சொல்லலையா என்ன?” என்றான் அவன், டிவியில் இருந்து கண்ணெடுக்காமல்.
“பாரேன் அந்த மனுஷனை. ஒத்த வார்த்தை சொல்லல என்கிட்ட? இருக்கட்டும்” கருவிக்கொண்டாள் அவள். அவன் அப்போதும் டிவியையே வெறிக்க, ‘அப்படி என்னத்தான் பாக்குறான்?’ என்று நினைத்தவளும் அதை பார்க்க, அதில் கெட்டித்தயிருக்கு கை கால் முளைத்ததை போல பேன்ட் சட்டையில் சிரித்தபடி நின்றாள் ஒருத்தி.
‘ஞாயித்துகிழமை ஆச்சுன்னா போதும் எல்லார் வீட்லயும் கமகமன்னு கறிக்குழம்பு வாசனை குடலை சுண்டி இழுக்கும் இல்லையா? நம்ம வீட்டுல தாத்தா, அப்பா, அண்ணா எல்லாம் காலைல நேரமே போய் கறிக்கடைல கியூ’ல நின்னு எலும்பில்லாம போடு, ஈரலை போடுன்னு கண்கொத்தி பாம்பா கவனிச்சு அந்த கறியை வாங்கிட்டு வந்து நம்ம அம்மா கைல கொடுப்பாங்க.
ஆனா இப்போ… ஒரு மொபைல் போதும்! என்ன வேணும், எப்போ வேணும், எவ்ளோ வேணும், எப்டி வேணும்ன்னு அதுவே நம்மகிட்ட கேட்டு பிரெஷ்’ஷா, விலை கம்மியா வீடு தேடி வந்து குடுக்கும்! மார்கெட்ல இந்த மாறி ஆப்’ஸ் நிறைய இருந்தாலும், ‘டேஸ்ட்பட்ஸ்’ (taste buds) ஆப்’க்கு முன்னாடி அதெல்லாம் தூசு தான்! இதுக்கு பின்னாடி இருக்க மாஸ்டர் மைன்ட் யாருன்னு தெரிஞ்சுக்கனுமா?
சாதனை பெண்கள் வரிசையில் இந்த வாரம் நாம் சந்திக்க வந்திருப்பது தொழிலதிபர் கௌசல்யா பாலகிருஷ்ணன் அவர்களை தான்! வணக்கம்!” என்று தொகுப்பாளர் கரம் குவிக்க, எதிரே இருந்த தயிர்ஜாடியும் அழகாய் சிரித்து கரம் குவிக்க, டிவி பொட்டென நின்றுப்போனது.
செய்தியில் லயித்திருன்தவன், ‘ப்ச்’ என்று சலிப்போடு அவள் புறம் திரும்ப, “நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு, என்னை பாக்கலைன்னாலும் சரி, வேற எவளையும் பாக்காம இருக்கலாம் ல?” என்றவளுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து நின்றது.
“லூசா நீ… சேதி தானே பார்த்தேன்! அந்த பொண்ணு ஏதோ தொழில் பண்ணுதுன்னு சொல்லவும்…” அவன் பேச, “ஹான், நாங்களும் தொழிலு தான் பண்றோம்! எங்களையும் பத்திரிக்கைல வந்து பேட்டி எடுத்துக்கிட்டு தான் போயிருக்காங்க… ம்க்கும்!” என்று நொடித்துக்கொண்டாள் மதி.
சிரிப்பு வர பார்த்தது அவனுக்கு. கமுக்கமாய் பாயை விரித்து குப்புற படுத்துவிட்டான். சிறிது நேரம் அப்படியே உட்காந்து பொருமியவள், பின் வெடுக்கென எழுந்து, “கொஞ்சம் வெள்ளைத்தோலா இருந்துட்டா போதுமே…! நான் கூட நிறமா தான் இருக்கேன்… அவ அளவுக்கு மேகப்பு பூசுனா உலக அழகி கூட என் காமாட்டுல தான் கிடப்பா, ஊருக்கே தெரிஞ்சாலும், கொண்டவனுக்கு புரியாதே!” என்று புலம்பிக்கொண்டே அடுக்களையில் ஓரவொதுங்க வைத்தாள்.
“முன்னாடின்னாலும் பரவால்ல… நேத்திக்கு பிறகு கூட கல்லு மண்ணா கடக்கான்னா என்ன மனுஷன் இவன்… இல்ல என்கிட்ட தான் எதாவது ஓட்ட ஒடசல கண்டானா?” அவள் சத்தமாகவே புலம்ப, “ஒய்… என்னடி அங்க சத்தம்?” என்றான் அவன்.
வேகமாய் அடுப்படியில் இருந்து எட்டிப்பார்த்தவள், “ஒன்னு இல்ல சாமி. என்பாட்டுக்கு வாய்க்கு வரத பேசிக்கிட்டு இருக்கேன்! அதுவும் ஆவாதுன்னா சொல்லுங்க, இறுக்கி மூடிக்குறேன்” என்றவள் வெடுக்கென லைட்டை நிறுத்துவிட்டு, பொத்தென அவன் அருகே முதுகு காட்டி படுத்தாள்.
படுத்துவிட்டாலும் அவள் வாய் மட்டும் பொருமுவதை நிறுத்தவே இல்லை.
“அங்கங்க பாரு… பொண்டாட்டியை கொஞ்சுறது என்ன, பூ வாங்கி தரது என்ன, யார் இருக்கா என்னன்னு கூட தெரியாம அவளை சீண்டி விளையாடுறது என்ன? என்னவோ கல்யாணம் முடிச்சு நாலு புள்ளையை பெத்து கட்டிக்குடுத்தவ பொழப்பு மாறி இருக்கு என் பொழப்பு. இங்க மட்டும் தான் எல்லா நூதனமும் நடக்கும்!” பேசிக்கொண்டே இடுப்பில் இருந்த முந்தியை இழுத்து மூக்கை உறிஞ்சிக்கொள்ள,
“ச்சை… சித்த அனத்தாம கட” என்றான் அவன்.
வெடுக்கென திரும்பியவள், “ஓ… நேத்து அனத்துனது மட்டும் இனிச்சுச்சோ?” என்று கேட்டுவிட, அவளையே அசையாமல் அவன் பார்க்க, அவன் பார்வையில் தான் அவளுக்கு படபடத்தது.
‘கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ?’ என்று எண்ணிக்கொண்டே அவள் மறுப்பக்கம் திரும்ப முயல. “நேத்து எப்படி அனத்துனியாம்?” என்றான் அவன்.
அவள் இடையோடு கைக்கொடுத்து தன்னை நோக்கி திருப்பியவன், “நீ தானே சொன்ன? அதே மாறி செஞ்சுக்காட்டு அப்போ!” என்றான் அவன்.
“அதெப்படி வரும்!? நேத்து என்ன என்னவோ ஆச்சு, அதுவும் வந்துச்சு” என்று அவனை பார்க்காமல் அவள் சொல்ல, “சரி அப்போ இன்னைக்கும் என்ன என்னவோ பண்ணலாம்… அனத்துறியான்னு பாப்போம்!” என்றவன் அதிரடியாய் ஆரம்பிக்க, அவனுக்கு கீழே துள்ளினாள் அவள்.
ஒரு முத்தத்தை கூட முழுதாய் அனுபவிக்க முடியாமல் அடுத்தடுத்த தாக்குதல் அவனிடம்!
முதல் நாள் போல ஊக்கை கழட்ட சிரமமே படவில்லை அவன். அவளுக்கு கொஞ்சமும் வேலையும் கொடுக்கவில்லை. அவன் கேட்க ஆசைப்பட்ட அவளின் ராகங்கள் சுருதி சேராமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
வியர்த்து விறுவிறுக்க அவன் சரிந்தபோது, அவன் நெஞ்சில் வந்து சாய்ந்துக்கொண்டவளை இறுக்கமாய் கட்டிக்கொண்டான் அண்ணா.
அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து முகம் பார்த்தவள், “யோவ்…” என்று சிணுங்கலாய் அழைக்க, அவள் இடையில் அவன் கரம் அழுத்தமாய் பதிந்து, ‘சொல்’ என சைகை காட்டியது.
“உனக்கு… உனக்கு என்ன… உனக்கு என்ன பிடிக்குமா?” கொள்ளை ஆர்வத்தோடு அவள் அவன் முகம் பார்க்க, அவனோ யோசிக்காமல், ‘இல்லை’ என்று மறுப்பாய் தலையாட்டினான்.
“ச்சீ… விளையாடாம சொல்லு” அவன் மார்பின் ரோமங்களில் விரல்களை விளையாட விட்டபடி இன்னும் ஆசையாய் அவள் கேட்க, இன்னும் திடமாகவே, “இல்ல” என்றான் அவன்.
அவள் முகம் தன்னியல்பாய் வாட, “சும்மா தானே சொல்ற?” என்றாள்.
“உன்னை பிடிக்கும்ன்னா ஏன் உன்ன இவ்ளோ நாள் வேண்டாம்ன்னு சொல்லிருக்க போறேன்?” அவன் திருப்பி கேட்டான்.
“அப்புறம் இப்போ ஏன் கட்டிக்கிட்டியாம்?”
அவள் கேட்டதும் தயங்காமல், “காசுக்காக!” என்றான் அவன்.
“ப்ச்…யோவ் இன்னுமா உனக்கு கோவம் போகல?” என்றவள் எழுந்து அவனை ஒட்டிக்கொண்டு முகம் பார்த்தபடி அமர்ந்தாள்.
அவன் பதிலே பேசவில்லை.
“கோவமா இருக்கவன் தான் இப்டி எல்லாம் பண்ணுவானா?” அவள் வெட்கத்தோடு அவள் நிலையை காட்டி அவனிடம் கேட்க, அதை சலனமின்றி பார்த்தவன், “கல்யாணம் கட்டுறதே இதுக்கு தானே?” என்றான். அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
“ஏன் லூசு மாறி பேசிட்டு இருக்க நீ!?” அவள் கேட்க, “இங்க பாரு… உன்னை எனக்கு பிடிக்காது! காசுக்காக கட்டிக்கிட்டேன். சந்தோசமா வாழலன்னாலும் என் கடமையை நான் செய்வேன்” என்றான் எழுந்து அமர்ந்து.
“புரில… கடமையா? எது இதுவா?” என்றாள் படுக்கையை காட்டி.
“ஆமா!” என்றான் தயங்காமல். பேச்சற்று சில வினாடிகள் இருந்தாள்.
“கடமையா ஒன்னும் நீ பண்ண தேவையில்ல… முகத்தை திருப்புறவன், பொழுதுக்கும் திருப்புறதோட சேர்த்து இரவைக்கும் திருப்பிக்கோ!” என்றவள் முடியை ஒருவித கோபத்துடன் அள்ளி முடிந்தாள்.
அவனோ, “சூரியன் உதிச்சதுல இருந்து, சூரிய அஸ்தமனம் வரைக்கும் தான் பகை பாராட்டனும்ன்னு கிருஷ்ணர் மகாபாரத்தத்துல சொல்லிருக்காரு” என்று சொல்ல, “*** மூடிக்கிட்டு போய்டு! இன்னொரு வாட்டி கிட்ட வா, கறி வெட்டுற கத்தி வீட்டு கூரைல சும்மா தான் கடக்கு” என்றவள், கடுகடுவென குளியலறைக்குள் சென்று மறைய, அவள் போனதும், உதட்டை இறுக மூடி சிரிப்பை அடக்கிக்கொண்டு உல்லாசமாக உறக்கத்திற்கு சென்றான் அண்ணாமலை.