Advertisement

வசு மதி

 

 

1

காலை தென்றல் சுகமாக வீச அவளது தோட்டத்து பன்னீர் ரோஜாக்களின் வாசம் வீச மெதுவாக கண் மலர்ந்தாள் மது யாழினி. முதல் நாள் இரவு வெகு நேரம் கழித்து கண் அயர்ந்ததால் இன்று காலை எழ வெகு நேரம் ஆகி விட்டது.

மது யாழினி பிரபல தொழிலதிபர் மனிவாசகத்தின் ஒரே மகள். மனிவாசகத்தின் மனைவி பார்வதி, மதுவிற்கு பத்து வயதாக இருக்கும்போதே உடல் நலம் இன்றி மறைந்தவர்.

அதன் பின் அவளை வளர்க்கும் பொறுப்பு அவளுடைய அத்தை, மணிவசகத்தின் தமக்கை வசந்தியம்மாளிடம் வந்தது. அவர் கணவனை இழந்து,  தன்  அண்ணனின் நிழலில் வாழ்ந்து வந்திருந்தார்.

வசந்தியம்மாளுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தாலோ என்னவோ மது யாழினியை தன் மகள் போல் பிறியமுடன் வளர்த்தார்.

தந்தையிடமிருந்து நற்பண்புகளும், அத்தையிடம் இருந்து அன்பும் பெற்ற மதுவிற்கு அன்னை இல்லை என்பது ஒரு குறையாகவே இல்லை.

மது கண் விழித்து அவளின் வலப்புறம் இருந்த கண்ணனின் படத்தை பார்த்து “குட் மார்னிங் கண்ணா” என்று கண்ணனின் பாதங்களை தொட்டு கண்களில் ஒற்றினாள். பின் தன் அறையில் இருந்த ஆள் உயர கண்ணாடியில் முகம் பார்த்தாள் மது. . அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற அவளது கண்கள். இதுதான் நிலவின் நிறமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கும் நிறம். . தன் கைகளால் முகத்தை தடவி கொடுத்து சோம்பல் முறித்தவளாய் மனியைப் பார்தாள். ஏழைத் தொட்டிருந்தது. 

 

ஒரு சிறு அதிர்ச்சி கொன்டவளாய் வேக வேகமாக குளியலறைக்குள் நுழைந்தவள் அரை மணி நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்தாள். பின்னே அவளது தந்தை அவளுக்காக காத்திருப்பார் அள்ளவா? அவளது தந்தை எப்பொழுதும் அவளுடன் தான் காலை உணவு எடுத்துக்கொள்வார். மேலும் மனிவாசகத்திற்கு சர்க்கரை வியாதி வேறு.

பத்து நிமிடங்களில் சிகப்பு பட்டாம் பூச்சியாய் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தாள் மது.“குட் மார்நிங் அத்தை..” என்று தன் அன்பு அத்தையின் கன்னத்தில் ஒரு அன்பு முத்திரை பதித்த பின்  Dining Table-ல் வந்தாள்.

“என்ன அத்தை, அப்பா இன்னுமா எழவில்லை?”

“இல்லை மது குட்டி. அண்ணன் அறை மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விட்டார். உன்னிடம் சொல்ல வில்லையா?”

“இல்லையே அத்தை.” என்று யோசனையோடு புருவத்தை சுழித்தவள், “ஏதாவது முக்கியமான வேலையாக இருக்குமோ?, சரி அத்தை. நான் சாப்பிடுகிறேன். மிகவும் பசிக்கிறது.” என்றாள்.

“கண்ணு … என்ன முடிவு பண்ணிருக்க?” என்று துவங்கினார் அத்தை.

“எதைப்பற்றி?”

“அப்பா உன்னிடம் நேற்று சொன்னாரே, அந்த வரனைப் பற்றி தான்.” என்று பதில் உரைத்தாள் அத்தை.

அதுவரை ஒளிர்ந்த மதுவின் மதி முகம் கும் இருட்டானது. முகம் சுருங்கி சுண்னடக்காய் ஆனது.

“ஏன் அத்தை.. நிம்மதியாக சாப்பிடக்கூட விட மாட்டீர்களா?”

“ஹ்ஹும்… உன் அப்பா என்னவோ சரியாக சாப்பிடாமல், தூங்காமல், சதா உன்னைப் பற்றியே கவலை படுகிறான். எனக்கும் வயதாஹிக் கொண்டே வருகிறது. சேர்ந்தார் போல் 5 நிமிடங்கள் ஒரு இடத்த்தில் நிற்க முடிவதில்லை. உன் அப்பாவுக்கோ சுகர், BP என்று பலதும் வந்து வாட்டுகிறது… அதை எல்லாம் நீ எங்கே புறிந்து கொள்ளப் போகிறாய்?….“ என்று ஒரு பெரு மூச்சு விட்டார் மதுவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவரே.

 

“ஏன் அத்தை,  நான்  என்ன திருமணமே வேண்டாம் என்றா சொல்கிறேன். நல்ல வரன் வந்தால் சம்மதம் என்று தானே சொல்கிறேன். ” என்று கொஞ்சி கெஞ்சி அத்தையை நெகிழ வைத்தாள். ஆனால் அதை எதிர் பார்த்து இருந்ததால் “இம்முறை ஏமார்ந்து தலை அசைத்து விடக்கூடாது ” என்று முடிவுடன் பேச்சை தொடங்கியதால் இவரும் விடாமல் தொடர்ந்தார்.

 “அப்படி சொல்லித்தானே போன தடவை.. போலீஸ் மாப்பிள்ளை… திருடனுடன் பழகுபவன். எதற்க்கெடுத்தாலும் சந்தேகப்படுவான் என்றாய். வக்கீல் என்றால் வாதாடுவான் என்றாய் . டாக்டர் என்றால் இம் எனும் முன் மருந்தை நீட்டுவான் என்றாய் … சரி அதுவாவது போகட்டும், இந்த காலத்து பெண், ஸ்டைலாக தேடுகிறாள் என்று ஒருவனைக் கட்டினால் “ரோடு சைடு ரோமியோ” வை போல ஜொள்ளு விடுகிறான் என்றாய்.. பிசினஸ் மேன் வேண்டாம் என்கிறாய்… “ என்று அவளுடைய அத்தை அபிநயத்துடன் கைகளை ஆட்டி கண்களில் வருத்தம் காட்டி சொன்ன விதத்தில் மதுவிற்கு சிரிப்பே வந்தது.

திருமணத்தைத் தடுக்க அவள் போட்ட திட்டம் தான் இது. அதற்குள் சிற்றுண்டியை முடித்த மது கைகளை கழுவிக் கொண்டு அத்தையின் அருகில் வந்தாள். அத்தையை சமாளிக்க வேண்டும் அல்லவா..

“ஹ்ம்ம் உனக்கு சிரிப்பு வருகிறது. எனக்கு…” என்று கன்னத்தில் கை வைத்து புலம்பிய அத்தையை பின்னால் இருந்து அணைத்தவாரே ஒரு கையால் அவரின் வாயைப் பொத்தி” பாய் அத்தை… வந்து பேசலாம். என் ப்ராஜெக்ட் இன்னும் முடியும் தருவாயில் இருப்பதால் இன்றும் நேரமாகும் நான் ஆபீஸ்க்கு செல்கிறேன்.” என்று மின்னலென தப்பிச் சென்றாள் அவள்.

 

மது Btech படித்த கையுடன் கேம்பஸ் இன்டர்வியூவ்-வில் தேர்ந்தெடுக்கப் பட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இன்றோடு 2 ஆண்டுகள் முடிந்தன. தனியாக ப்ராஜெக்ட் செய்து ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்பதே அவளது ஆசை. ஆனால் அதற்கு முதலில் MBA படித்தாக வேண்டும். IT துறையிலும் குறைந்தது 2 ஆண்டுகளாவது அனுபவம் வேண்டும் என்பது அவளது எண்ணம். இன்றோடு MBA முடித்தாயிற்று. 2 ஆண்டுகளும் முடிந்தன. புதியதாக ப்ரொஜெக்ட்டும் கிடைப்பது போல் தெரிவதால் ஒரு சிறிய நிறுவனம் துவங்கும் எண்ணம் அவளுக்கு.

இப்பொழுது திருமணம் என்றால் புது நிறுவனத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதால் தான் மது திருமணத்தை தள்ளிப் போடுகிறாள். மேலும் அவளுக்கு வருபவன் எப்படி இருப்பானோ என்ற பயம் வேறு.

நன்கு பழகிய பின் தான் திருமணம் என்ற முடிவிற்கு வந்தாள். ஆனால் இதற்கு முன் வந்த மாப்பிள்ளைகளின் biodata  வைப் பார்த்து புகைப்படத்தை பார்க்கும் போதே அவளுக்கு பிடிக்காமல் போகிறது. பின் எப்படி பழகுவது!

என்றேனும் அவளின் மனதிற்கு பிடித்த ராஜகுமாரன் வருவானா? அப்படியே வந்தாலும் தன் “நிறுவனம் பற்றிய” கனவுகளோடு இவளை எற்ப்பானா? இந்த ஏக்கத்தோடு அலுவலகம் சென்று வேலையில் முழ்கினாள் மது.

           

அதோடு அப்பா ஏன் இன்று தன்னுடன் சிற்றுண்டி உண்ண வர வில்லை என்று யோசித்தவள், பேசாமல் அவருக்கே ஒரு போன் கால் செய்து பார்க்கலாம் என்று செய்தாள்.

 

மறுமுனையில் அழைப்பை ஏற்பது போலவே தெரிய வில்லை. சரி எதாவது மீட்டிங்கில் இருப்பாரோ என்னவோ. பிறகு செய்து பார்க்கலாம் என்று விட்டு விட்டாள்.

 

2

 

சிறிது நேரம் கழித்து அவளது கைப்பேசி அழைத்தது. அவளது அத்தை தான் அழைக்கிறார். முகத்தில் அன்னிச்சையாக மலர்ந்த புன்னகையுடனே அழைப்பை ஏற்றாள்.

“ஹெலோ…”    

“மதும்மா…, அப்ப்ப்ப் … அப்பாவிற்க்கு… என்ன என்று தெரிய வில்லை… ஏதோ… ஏதோ மயக்கம் வந்து.. கை கால்கள் அசைக்க முடிய வில்லை என்று மயங்கி விட்டாராம்….. என்னென்னவோ சொல்கிறார்களம்மா …” என்ற பின் அழுகுரல் கேட்க, “என்ன சொல்கிறீர்கள் அத்தை… எந்த மருத்துவமனை? ..”

“அ… அடையார்… அப்போல்லோ என்றார்கள்.” 

“நீ சீக்கிரம் போகிறாயா அம்மா… நானும் வந்து விடுகிறேன்…”

“சரி அத்தை… நீங்கள் மணியை கார் ஓட்ட சொல்லி அவனுடன் வாருங்கள்… நானும் வந்து விடுகிறேன்..” என்று அவள் கைபேசியை அனைக்கும் போது கண்ணீர்த்துழிகள் அவளது கைப்பேசியில் பட்டுத் தெரித்தன.

அவள் விடுமுறைக்கு ஈமெயில் செய்யக் கூட மனமில்லாமல் மேனேஜருக்கு இன்டெர்காமில் அழைத்து தெரிவித்து விட்டு மறுத்துவமனைக்கு செல்ல ½ மணி நேரம் ஆகி விட்டது.

ரிசப்ஷன் -ல்  கேட்டு ICU சென்ற போது, அவளைக் கண்டதும் ஒரு நர்ஸ் கேட்டாள், “ நீங்க தான் பேபி.. யா?”

அவளை மணிவாசகம் அப்படித்தான் அழைப்பார்.

“ஆமாம் ஸிஸ்டர். அப்பா…? இப்ப எப்படி இருக்கிறார்?” 

நர்ஸ் இவளுக்காகவே காத்திருந்தவள் போல மதுவுக்கு வழி காட்டும் வன்னம் முன்னே செல்ல, அவளின் பரபரப்பு கண்டு மேலுப் பீதி அடைந்தாள்.

 

நர்ஸ் பேசிக்கொண்டே நடந்தாள், “உயிரைக் காப்பாற்றி விட்டோம்… ஆனால் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! அவர் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார். அதைக் குறைத்தாலே போதும். என்ன, கொஞ்ச நாள் படுக்கையில் ஒய்வு எடுக்க வேண்டும். மன உழைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் கை கால்கள் நார்மல் ஆகும். மேலும் அவருக்கு அதிக மன உழைச்சல் குடுத்தீர்களானால் மறுபடியும் பிரட்ச்சனை வர வாய்ப்புகள் உண்டு. உங்களது அப்பாவைப் பார்த்துவிட்டு டாக்டரைப் பாருங்கள். அவர் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார்.” என்று சொல்லிவிட்டு போய் விட்டாள் அந்த நர்ஸ்.

தான் நிலத்தில் தான் இருக்கிறோமா இல்லை பூமிக்குள் சென்று விட்டோமா என்று அவளுக்கே ஒரு சந்தேகம் வர அந்த இடத்திலேயே மயங்கி விழப் பார்த்தவள், சற்றே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். தன் தந்தையைப் பார்க்கும் பரபரப்பு வர எழுந்து வேகமாக ICU என்று எழுதியிருந்த ஆரையினுள் சென்றாள்.

இடது காலையும் வலது கையையும் அசைக்க முடியாமல் செயற்கை பிராண வாயுவின் உதவியுடன் அயர்ந்து படுதித்திருந்தார் மணிவாசகம்.

அவரின் வலது கையை பிடித்தவாரே மௌனமாக கண்ணீர் விட்ட படி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் வசந்தியம்மாள்.

“அப்பா…” என்றபடியே ஒடி வந்த மது அவர் கண்கள் மூடியிருப்பதை உணர்ந்து மௌனமாக வந்து அத்தையை கட்டிக் கொண்டு அழுதாள்.

“அப்பாவுக்கு ஒன்றும் இல்லைடா கண்ணு… அப்பா அயர்ந்து உறங்குகிறார்.”

“அப்பா… அப்பாவிற்கு என்ன அத்..அத்தை?” என்று திக்கி திணரும் குரலிலேயே கண்களை துடைத்தபடி கேட்டாள் மது.

“பக்கவாதத்தின் முதல் நிலையாம். அதிக மன அழுத்தத்தினால் வந்ததாம். இம்முறைக் காப்பாற்றியாகி விட்டோம்.” என்று கண்களை சேலை தலைப்பால் ஒற்றிக்கொண்டாள் வசந்தியம்மாள்.

சற்று நேரம் கழித்து மணிவாசகம் கண் முளித்தார்.

“அப்பா…” என்று மதுவும். “அண்ணே…” இப்ப எப்படி இருக்கு அண்ணே..” என்று வசந்தியம்மாள் ஓடி வந்தனர்.

மணிவாசகம் “ப்… ப்.. பேபி… “ என்று ஈனக் குரலில் அழைத்தார் தன் மகளை.

“அப்பா … என்னப்பா…? உங்களுக்கு ஒன்றும் இல்லை அப்பா. நாம் ஒண்றிரண்டு நாளில் வீட்டிற்க்கு சென்று விடலாம் என்று டாக்டர் சொல்லி விட்டார்…” என்று அவள் வேக வேகமாக தன் தந்தையின் கரம் பற்றி தந்தைக்கு தெம்பூட்டினாள்.

“ந… நான் என்னைப்பற்றி.. கவலைப்படவில்லை.. உனக்குத்‌தான் ஒரு திருமணம் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது கண்ணம்மா…” என்று சொல்லி முடித்து விட்டு மூச்சு வாங்கினார்.

இப்போதைக்கு தந்தையை சமாதானப் படுத்துவது தான் தனது கடமை என்று உனர்ந்த மது, “நீங்க குணமான பின் நான் திருமணம் செய்து கொள்கிறேன்பா…”

இதைக்கேட்ட பின் மகளின் கரங்களில் இருந்து தன் கரத்தை விடுவிக்க நினைத்து தோற்றுப்போனார் அவளுடய தந்தை. தன்னை சமாதானப் படுத்த முயல்கிறாள் என்று நினைத்து விட்டார். தந்தையின் செயலிலேயே அவரின் மனம் வேதனைப் படுவதை உணர்ந்த மகள், “அப்பா நான் உன்மையிலேயே திருமணம் செய்து கொள்கிரேன்பா… நீங்கள் வருத்தப் படாதீர்கள்..” என்று தீர்கமாக கூறினாள் மகள்.

 

 

அவளின் சம்மதம் அவளின் கண்களில் தெரிய மணிவாசகம் மனநிறைவில் மீண்டும் தூங்கினார். அவரின் முகத்தில் ஒரு வித தெளிவும் நிம்மதியும் படர்வதை பார்த்து ஒரு முடிவுக்கு வந்தாள் மது. அது அவளின் தந்தைக்கு சாதகமான முடிவுதான்.

 

ஆனால், அவளது ஆசை என்னாவது. அப்பா எப்படியும் தன் தொழிலையும் சேர்த்து கவனித்துக் கொள்ளும் ஒருவனைத்தான் பார்ப்பார். அவன் என் ஆசைகளை ஏற்பானா இல்லை நீ என்னுடன் வேலையில் உதவினாலே போதும் என்று கூறிவிடுவானா!

தன் ஆசை, கணவு, எதிர்காலம் எல்லாம் தன் கண் முன்னே மடிந்து போகிறதோ என்ற கவலை ஒருபுறம் இருக்க, தந்தையின் உடல் நிலை பற்றிய கவலை மதுவை உறுகுளைய வைத்தது.

 

Advertisement