அங்க நான் உள்ள போகும்போது நீயும் என்கூட தான வருவ?” என்றாள் பதட்டமாய்.
“நிச்சயமா நான் உன்கூட தான் இருப்பேன். நான் என் உடம்புக்குள்ள போறதை நீ பார்க்க வேண்டாமா?” என்றான் ஆசையாய்.
“நீ உயிரோட வர போறதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள் ஷன்மதி.
“ஆனா நான் உன்கூட வந்தாலும் என்னால எதுவும் பண்ண முடியாது. நீ தான் என்னை காப்பாத்தணும் உன்னையும் காப்பாத்திக்கணும்” என்றான் வேதனையாய்.
“அது பரவால்ல.நீ என்கூட இருப்பன்னா நான் அந்த நரகத்துக்கு கூட சந்தோஷமா போவேன்” என்று மென்மையாய் சிரித்தாள் ஷன்மதி.
“இன்னும் சொல்ல போனா அதுவும் ஒரு நரகத்துக்கு ஈடான இடம் தான் மதிம்மா. எனக்கு முதல்ல அங்க உன்னை கூட்டிட்டு போறதில்ல உடன்பாடில்லை. உன் உயிருக்கு ஆபத்தான இடம்னு தெரிஞ்சும் இப்போ உன்னை கூட்டிட்டு போறேன்னா.. நான் இல்லாம நீ எவ்ளோ தவிக்கிறேன்னு என்னால பார்க்க முடியலை. இதுல என்னோட சுயநலமும் இருக்கு. எனக்கு உன்கூட வாழணும். ” என்றான் விழியோரத்தில் நீர் தளும்ப.
“இவளோ ஆனப்புறம் என்ன நடந்தாலும் ஒன்னு உன்னோட தான் திரும்பி வருவேன். இல்லன்னா உன்னோட கை கோர்த்து மரணத்துலையும் ஒண்ணாகிடுவேன்.” என்றாள் மதி அவன் தோள் சாய்ந்து.
“ஏய்! எதுக்கு இப்போ இப்படி பேசிட்டு இருக்க? நீ சாகறதுக்கா இவ்ளோ ரிஸ்க் எடுக்க சொல்றேன். நீயும் நானும் சந்தோஷமா வாழணும் மதிம்மா” என்றான் ஆர்வத்தோடு.
“கண்டிப்பா அது நடக்கும்” என்று அவனின் நெற்றியோடு மோதினாள் ஷன்மதி.
“அப்புறம் மதிம்மா… அங்க உள்ள போனவுடனே உன்னை கொல்ல பார்ப்பாங்க. அதுலேர்ந்து ரெண்டு தடவை தப்பிச்சிட்டா.. மூணாவது தடவை நீ என்னோட இருக்கலாம்… அதோட அங்க… இதெல்லாம் நீ செஞ்ச கொஞ்ச நேரத்துல நான் உன் முன்னாடி உயிரோட நிப்பேன் மதி” என்று மேலும் அங்க செய்யவேண்டியவற்றை தெளிவாய் சொன்னான்.
“சரி அப்படியே பண்ணிட்றேன்” என்றாள் ஷன்மதி.
“மதி… போலாமா?” என்றான் ஷ்ரவன்.
“ஹ்ம்ம். போலாம்” என்று வெளியே வந்தவள் பூஜையறையில் சென்று திருநீறு இட்டு வந்தாள். அதோடு தன் தோழி கொடுத்த சாயிநாதனின் திருநீறையும் காதிதத்தில் மடித்து எடுத்துக்கொள்ள.
“என்ன சாமில்லாம் பலமா கும்பிடற போல இருக்கு?” என்றான் ஷ்ரவன்.
“ஆமா. எனக்கு சாமி நம்பிக்கை இருக்கு. யாரும் இதுவரைக்கும் சாமி இருக்கிறதை நிரூபிக்கலை. ஆனா சாய் அப்படி இல்ல. அவர் நம்ம கூட வாழ்ந்த ஒரு ஷக்தி. அவரை நம்பினா எல்லா நிச்சயமா எல்லா துன்பங்களும் பறந்தோடும்ன்றது என் நம்பிக்கை” என்றாள் சிரித்தபடி.
ஷன்மதி முறைக்க, “சரி சாரி. போலாமா? வா” என்று வெளியேறினாரகள்.
மூவரும் காரில் அமைந்து பயணத்தை ஆரம்பிக்க.
ஷ்ரவன் “நந்து.. நீ எங்ககூட கடைசி வரைக்கும் வருவ, அங்க முக்கியமான இடத்துக்கு அப்புறம் உன்னால வரமுடியாது. நீ அங்கேயே எங்களுக்காக காத்திருக்கனும்.” என்றான்.
“ஏன்டா என்னால வரமுடியாது.?” என்றான் நந்து.
“ஹ்ம்ம்.. அது என்னோட பாதியான ரெண்டு பேரால தான் அங்க உள்ள நுழைய முடியும்” என்றான் ஷ்ரவன்.
“அது என்னடா உன்னோட பாதி ரெண்டு பேரு… உன்னோட பாதின்னா மதி மட்டும் தான? அவ தான் உன் மனைவி? ” என்றான் நந்து, கார் கண்ணாடியில் பின்னே அமர்ந்திருக்கும் ஷ்ரவனை ‘மாட்டினியா?’ என்று விழிகளில் சைகை செய்து குறும்பாய் சிரித்து.
“ஆமா.. நான் மட்டும் தான உனக்கு பொண்டாட்டி? நான் தான உன்னோட பாதி? அப்போ இன்னொருத்தங்க யாரு?’ என்று ஷன்மதி முறைக்க.
“போதுமாடா? உன் நாரதர் வேலையா ஆரம்பிச்சிட்டியா?” என்று நந்துவை முறைக்க.
“ஹேய் நான் என்னப்பா பண்ணேன். நீ சொன்னதுல எனக்கு சந்தேகம் அதான் உன்னை கேட்டேன். இது ஒரு குத்தமாய்யா?” என்றான் அப்பாவியாய்.
நந்துவை முறைத்தபடி மதியிடம் திரும்பி “மதிம்மா. இவன் பேச்சை கேட்காத. நம்மளுக்குள்ள புகை மூட்டிவிட்றதே இந்த எருமைக்கு வேலை.” என்றான் ஷ்ரவன் மெதுவாய்.
மதி எதுவதும் பேசாமல் வெளியே வேடிக்கை பார்த்தபடி வர., “மதிம்மா… என்னோட பாதின்னா… தனக்குள்ள இடம் கொடுத்து என்னை பெத்தெடுத்த தாய். இன்னொன்னு வேரொருத்தியாய் வந்து எனக்குள்ள ஐக்கியமாகிற மனைவி. இதுல என்னோட அம்மாவை நான் எப்பவோ இழந்துட்டேன். இப்போ எனக்கு இருக்கிறது நீ தான். அதனால உன்னால மட்டும் தான் வரமுடியும்” என்றான் மதியின் தலையை லேசாக வருடியபடி.
அவனின் வார்த்தைகளில் திரும்பி பார்த்தவள். “ஐ ஆம் சாரி” என்று அவனை கட்டி கொண்டாள்.
“ஹ்ம்ம் ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. டேய்.. நான் என் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வந்திருக்கேன். என்னை கடுப்பேத்தாம ரெண்டு பேரும் அமைதியா வாங்க” என்றான் நந்து விளையாடும் குரலில்.
“சரிங்க சார்” என்ற ஷ்ரவன் அவன் விழிகளில் இருந்து மறைய.
‘கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விடமாட்டேனே’ என்று நந்துவை திட்டியபடி மீண்டும் அவன் கண்களூக்கு தெரிந்தான்.
“ஷ்ரவன். எனக்கு ஒரு சந்தேகம்? நானும் அந்த இடத்துல தான் இருந்தேன். அப்புறம் ஆக்சிடெண்ட்ல உன் உடலை எப்படி எடுத்திருக்க முடியும்?’ என்றாள் ஷன்மதி.
“மதி அங்க தான் நொடி பொழுதுல எல்லாமே நடந்தது. இதெல்லாம் அவங்க முன்னமே ஏற்பாடு பண்ணதுதான்” என்றான் ஷ்ரவன்.
“அப்படினா?’ என்றாள் ஷன்மதி ஒன்றும் புரியாமல்.
“உன் கூட கார்ல வந்தது நான் தான். ஆனா அங்க உடல் நசுங்கி இறந்தது நான் இல்ல. ” என்றான் ஷ்ரவன்.
“என்ன?” என்றாள் ஷன்மதி.
“ஆமாம். உன்னை தள்ளி விட்ட அடுத்த நொடி நீ மயங்கிட்ட. அவளோ வேகமா வந்த வண்டி என் கார் மேல மோதாம நிறுத்துச்சு. எனக்கு ஒன்னும் புரியலை. அடுத்த நொடி…” என்றான் ஷரவன்.