Wrongly update

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
களவு கொண்டனாடி தில்லையிலே

அத்தியாயம் – 16

மிதமான குளிர் காற்று தென்றலாகச் சிவகாமியின் மேனியை வருடிச் செல்ல, அதனைக் கண் மூடி ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டு இருந்தாள் சிவகாமி.

ஏனோ மனம் பல வித சுவைகளைக் கொண்டு இருந்தது அதாவது இனிப்பு உவர்ப்புக் காரம் கசப்பு என்று தான் அனுபவித்த நாட்களைக் கடந்து வந்த பாதையைத் தோழியுடன் பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ மனமும் சற்று லேசாக இருந்தது.

அன்று காலையில் நடந்தை எண்ணி கொண்டாள்….

விடிய விடிய கதை பேசிய தோழிகள் இருவரும் கண் அயர்ந்தது என்னவோ, உச்சிப் பொழுதில் தான். ஆதவன் இரு பெண்களையும் சற்று வன்மையாகத் தீண்டி வைக்க, அடித்துப் பிடித்து எழுந்தனர், தோழிகள்.

“ஐயோ! ரொம்ப நேரம் தூங்கிட்டோமோ....!”

“போச்சு போச்சு! எங்க அம்மா அடிச்சே கொல்லப் போறாங்க, போடி!”

“அடிப்பாவி! கதை கேக்கிறேன், காவியம் கேக்கிறேன்னு என் உயிரை எடுத்துட்டு, இப்போ என்ன குத்தம் சொல்லுற!”

இருவரும் மாறி மாறி, உன்னால் தான் நீ தான் என்று சண்டை பிடிக்க, கீழே இருந்து குரல் கொடுத்தார், அம்பலம்.

“ஏம்மா? நாச்சி வூட்டுக் குடும்பக் குத்து விளக்கே! பகலவன் பல்லக் காட்டுறான். வெரசா வாக! கடைக்குப் போகனும்.” என்றதும் இரு பெண்களும் அதிர்ந்தே விட்டனர் இவர் எப்போது ஊரில் இருந்து வந்தார் ஐயோ!..... என்று சிவகாமி பதற. .

அம்பலம் சொல்லிய தினுசில் சிரிப்பு வேறு வந்தது, பொன்மொழிக்கு.

அவள் சிரிப்பை அடக்குவதைக் கண்டு கொண்ட சிவகாமி, பக்கத்தில் உள்ள தலையணையில் தோழியை மோதிவிட்டு எழுந்து ஓட,

பொன்மொழியும் படுக்கையைச் சுருட்டிக் கொண்டு ஓடினாள். கீழே உள்ளவர்களைப் பார்க்க சங்கடம் இருந்தாலும், பதுங்கி பதுங்கி நாச்சியிடம் சென்றாள் பொன்மொழி,

சிவகாமி வசமாகச் சிக்கினாள் அம்பலத்தானிடம் வாக மகாராணி என்ன இம்புட்டு வெரசா முழுச்சுட்டிங்க

அதற்குச் சிவகாமி “ரொம்பக் கேலி பண்ணாதேள் நேத்து ரொம்ப நாழி ஆயிடுத்து தூங்க”

“ஏண்டி சிலுக்கு அவளை தன்னோடு இறுக்கி அணைக்க”

“என்ன அப்படி கூப்பிடாதேள்”

“விடுங்கோ அவ வர போரா” என்றவள் கையில் மீனாகத் துள்ள தனது காரியத்தைக் கணக் கச்சிதமாகச் செய்து முடித்தே விட்டார் அவர் செய்த அடாவடியில் சிலிர்ந்தவள்.

“அடாவடி அம்பலம்”

“அடிங்க” என்று மீண்டும் பிடிக்க வர வேகமாகப் பின் புறம் ஓடியே விட்டாள்.

பொன்மொழியோ “ஆச்சி மனுச்சுடுங்க. பேசிக்கிட்டே தூங்குனோமோ, ரொம்ப நேரம் ஆகிடுச்சு.”

“பரவாயில்லை சாமி. ஒரு நாள் தானே! காபி தண்ணி குடிச்சுப்புட்டு போக.”

“ஐயோ வேணாம், ஆச்சி. அம்மா தேடுவாங்க. நான் பிறகு வரேன்.”

“வெறும் வயித்தோட அனுப்பமாட்டேன், தாயி. ஓடு முகம் கழுவிட்டுக் காப்பித் தண்ணி குடி!” என்று விரட்ட,

அவளும் அவருக்குப் பணிந்து சில நிமிடங்கள் சிவகாமியை சீண்டி விட்டு, அவள் கொடுத்த காபியை ஒரே மடக்கில் குடித்து விட்டு ஓடிவிட்டாள்.

அதன் பின், அம்பலம் கடைக்குக் கிளம்ப என்று நேரம் சரியாக இருந்தது. மரியாரும் மருமகளும் இத்தனை வருடம் நடந்த நிகழ்வை, வேலை செய்து கொண்டே பேசினர்.

“ஆச்சிக்கு இம்புட்டு நேரம் பேச வரும்னு, மருமவ வந்த பிறவு தான் தெரியுது.” வேலை செய்யும் முத்து கூடக் கேலி பேசிச் சென்றான்.

இருவரும் மென்மையாகச் சிரித்துக் கொண்டனர்.

அது என்ன மாயமோ, இரு பெண்களுக்கும் அப்புடி ஒரு பிணைப்பு! பொதுவாக ஒருவரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலே பிடித்துப் போகும். காரணம் காரியம் இல்லாத பிடித்தம். அது போலத் தான் நாச்சிக்கு சிவகாமியை பிடித்தது போலும்.

ஓர் பெண்ணுக்கு எது தேவை? எப்பொழுது தேவை? என்பதைச் சரியாகக் கணித்து, அதனை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவகாமிக்குக் கொடுக்க, அதனை நன்றிக் கடனாகப் பார்க்காமல், ஆத்மார்த்த அன்பாக எண்ணி இணைந்தாள், சிவகாமி.

இலை மறை காய் மறை உறவு என்று சொன்னேன் அல்லவா? அது இது தான்!

சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை, அம்பலத்தானை பிரிந்து பொன்மொழி வீட்டில் தஞ்சம் கொண்ட சிவகாமியை, அவருக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டது, நாச்சி தான்.

சிவகாமி மனம் நொந்து இருப்பதைப் பார்த்தவர், மகனுக்கும் பாடம் எடுக்க எண்ணினார் போலும். இருவரையும் சில ஆண்டுகள் பிரித்து வைக்க எண்ணி, தனது உறவினர் ஒருவருக்கு அழைத்து, சிவகாமிக்கு மியலாடுதுறையில் வேலை வாங்கிக் கொடுத்து விட்டார்.

அது மட்டுமா! அவளுக்கு என்ன தேவை என்பதை மாதம் மாதம் முதல் வாரம் அவளை வந்து பார்த்து, கையில் திணித்து விட்டுப் போவார்.அந்த பையை பிரிந்துப் பார்த்து,நெகழ்ந்து போவாள், பெண்.

இருக்காதா பின்னே சோப்பு,சீப்பு,கண்ணாடியில் தொடங்கி, தீட்டுத் துணி வரை பாந்தமாக அடுக்கி வைத்துக் கொடுப்பார்.எது எது எந்த மாதம் வரை வரும் என்பதைக் கூடக் கணித்துச் செயல் படும் அவரை, அன்னைக்கு மேல் நேசிக்காமல் இருக்க முடியுமா என்ன?

கண்ணாம்பாவிடம் கிட்டாத நெருக்கம், நாச்சியிடம் கொண்டது விந்தை தான்! அதே போல், ஆறு பெண் பிள்ளைகளிடம் கிட்டாத ஓர் நெருக்கம், சிவாகாமியிடம் கிட்டியது விந்தையிலும் விந்தை தான்!

புரிதல் கொண்ட அன்பு இருந்தாலே இது சாத்தியம். தன் குலம் தழைக்க வந்தவளை, கொண்டாடி நின்றார் பெரிய நாச்சி! மாமியாருக்கு ஏற்ற மருமகளாக அவ்வீட்டைத் தாங்கி நின்றாள், சிவகாமி.

மச்சியில் உள்ள முல்லைக் கொடியிடம் தஞ்சம் கொண்டு, இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

ஏனோ மனம் இருவேறு சூழலில் சிக்கி நின்றது. நடந்த நிகழ்வுகள் கொடுத்த பட்டத்தின் தாக்கம் ஒருபுறம், தற்போதைய வாழ்க்கை ஒருபுறமென, யோசித்துக் கொண்டே இருந்தாள்.

மேகம் தனது காரிருள் போர்வை கொண்டு மூட, மெல்ல கீழே இறங்கி வந்தாள், சிவகாமி.

சற்று நேரத்துக்கெல்லாம் அம்பலம் வந்து விடுவார்.அவருக்கு இரவு உணவை தயார் செய்ய வேண்டுமென்று அடுக்களைக்குள் நுழைந்து கொண்டார்.

ஆச்சி வழமை போல் திண்ணையில் அமர்ந்து தூணில் சாய்ந்து கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.தெருவில் உள்ள சிலர் வந்து நாச்சியிடம் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

விரைவாக இரவு உணவை முடித்துவிட்டு, ஜோதியில் வந்து கலந்து கொண்டாள், சிவகாமி.

ஏனோ இன்று தனது மாமியார் சோர்ந்து இருப்பது போல் தெரிய,“என்ன ஆச்சு மாமி? ரொம்பச் சோர்வா தெரியிறேள்…”

“என்னனு தெரியல சிவா பாப்பா. ரவுல இருந்து,இந்த வலது கையும் எடது காலும் மதமதப்பா இருக்கு. ஜிவுன்னு இழுக்குது.”

அவர் சொல்லவும் பதறிய சிவகாமி…

“என்ன மாமி சொல்றேள்? காலையில சொல்லி இருந்தேள்னா மருத்துவரை பார்த்து இருக்கலாம் தானே! நீங்க இருங்கோ, நான் அவரை அழைச்சுண்டு வரேன்.”

என்றவள் அவரது பதிலை எதிர் பார்க்காமல், வேறும் காலோடு ஓடினாள்.

மூச்சுவாங்க வந்து நின்ற மனைவியைப் பார்த்து பதறிப் போன அம்பலம்,

“என்னத்துக்கு இம்புட்டு வேகமா வாறீக? என்ன செய்தி?”

அவரது கேள்விக்குப் பதில் கூடச் சொல்ல முடியாமல் மூச்சு வாங்கினாள், சிவகாமி.

அவளது செயலில் மீண்டும் பதறியவர்,“என்னடி? செத்த உட்காரு வா!” என்று கைகளைப் பிடித்து அமர வைத்தார்.

நெஞ்சை நீவிக் கொண்டவள், தன்னைச் சமாளித்துக் கொண்டு,

“ஏன்னா, மாமிக்கு கையும் காலும் மறத்துப் போறதாம். நேக்கு பயமா இருக்கு. வாங்கோ மருத்துவரை பார்க்கப் போகலாம்.”

“இரு இரு. நான் என் நண்பன் அழகு கிட்ட அம்மையைக் காட்டிகிட்டு இருக்கேன். ரொம்ப வருசமா வேலை செய்றாங்க தானே! அதேன் எலும்பு தேஞ்சு போச்சு.. ரெத்தம் ஓட்டம் சீரா இல்ல. அதும் போக வேலை செய்யக் கூடாது. மீறிச் செஞ்சா பக்கவாதம் வரும் சொன்னாங்க.”

அம்பலம் சொல்லி முடிக்க…

“எல்லாம் தெரிஞ்சும் ஏன் அவுங்கள வேலை செய்ய விடுறேள்? என்ன பார்த்துக்கிறீங்க நீங்க?”

“இருடி, சொல்லத் தான் முடியும். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. அது மாதிரி உங்க ஐத்த வேலை செஞ்சு பழகுநவுக! என்ன சொன்னாலும் கேட்டுக்கிட மாட்டாக! என்ன செய்யச் சொல்லுறீக!”

“அது என்னவோ நான் சொல்லுற பேச்சு, எங்குட்டு பொம்பளைங்க காது கொடுத்து கூடக் கேக்குறது இல்ல. நான் என்ன செய்ய..” பேசி கொண்டே கல்லாவில் இருந்து சில இருபது தாள்களைச் சட்டை பைக்குள் திணித்துக் கொண்டார்.

“அது என்ன அது? பேச்சோடு பேச்சா, ஓர் இக் வைக்கிறேள்! நீங்க சொன்னதை என்ன நாங்க செய்யாம விட்டோம்? சொல்லுங்கோ!” என்று பாய்ந்து வந்தவளை பதமாகப் பிடித்துக் கொண்ட அம்பலம்..

“உம்ம கிட்ட வரவு செலவு கணக்கு நிறைய இருக்கு. ஆற அமர தீர்த்துப் புடுறேன். ஆனா, இப்போ இல்ல, வாக.” என்றவர் மனைவியின் கை பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றார்.

இருவரும் விரைந்து செல்ல, அங்கே நாச்சி உடல் எல்லாம் தொப்பலாக வேர்த்துப் போய் அமர்ந்திருந்தார். ஓர் கை மற்றும் கால் நிரம்புகள் சுருண்டு வலியெடுக்க, அசைக்கக் கூட முடியவில்லை.

என்னதான் தைரியமான பெண் என்றாலும், வயதின் மூப்பு அவரைப் பயம் காட்டியது என்னவோ உண்மை!

அம்பலத்தானை பார்த்ததும்,“என் ராசா உங்க வாரிசை பார்க்காம கண்ண மூடிடுவேன் போலவே! என்னால முடியல சாமி.” என்றவர்,

அவரது கையில் சரிய, மாமி, ஓ வென்று அழுகையை ஆரம்பித்து விட்டாள்.

“ப்ச் என்னத்துக்கு அழறீங்க. ஒண்ணுமில்லை! நீங்க அழுது என்ன பயம் கட்டாதீங்க!” என்றவர் தனது தாயை அள்ளி கொண்டு, தனது அம்பாசிடார் காரை நோக்கி ஓடினார். பின்னால் சிவகாமியும் அழுது கொண்டே சென்றார்.

விரைந்து சென்று மருத்துவரை காணச் செல்ல, நாச்சியைப் பரிசோதித்தவர் வெளியில் வந்து அம்பலத்தைத் தனியாக அழைத்துச் சென்று,

“அம்பலம் இன்னும் கொஞ்ச நேரம் சென்று வந்தாலும் பக்க வாதம் வந்துருக்கும், ஆச்சிக்கு. நாதேன் சொன்னேல, பார்த்து வச்சுக்கிடுங்கனு.”

“நான் எம்புட்டுத் தூரம் சொல்லுறது, அழகு. காக்கையா கரையரேன் செவி கொடுத்தத்தானே!” என்று சலித்துக் கொண்டார்.

எத்தனை முறை சொன்னாலும், நாச்சி அவர் வேலை செய்வதை நிறுத்தவே இல்லை.

“பெரியவுக அப்புடித்தேன்! நாம தான் சூதானமா இருக்கனும் பார்த்துக்கிடுக. ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் போட்டு வழுச்சு விடுக.”

“அதுக்குன்னு யாராவது இருக்காகளா அழகு, உம்ம மருத்துவத்துல..”

“நம்ப நெற்குப்பை ஆச்சி சொல்லி இருக்காகளா, அவுக வெள்ளிக்கு வெள்ளி இங்கன வருவாக. அவுக கிட்ட பேசிப் பார்க்கிறேன்.”

“சரி அழகு, பேசிட்டு சொல்லுக. நம்ம கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் காருல கூட்டிக்கிடலாம்.”

அதன் பின் இருவரும், என்ன மருந்து உட்கொள்ள வேண்டும் என்று அனைத்தையும் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டவன், தாயையும் தாரத்தையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

நாச்சியை விட சிவகாமி தான் அதிகம் சோர்ந்து போனாள். தவற விட்ட ஆறு வருடங்கள், தன்னால் தானே மன உளைச்சல்! அதுவும் உடல் நிலையை பாதிக்கும் அல்லவா! அதுவும் இல்லாமல் சக்தி உலகம்மை திருமணமாகிச் சென்ற பிறகு, நாச்சி மட்டுமே தனியாக அனைத்தையும் சமாளித்தார். அதையெல்லாம் எண்ணி எண்ணி புலம்பிக் கொண்டு இருந்தாள்.

“என்னால தான் மாமி உங்களுக்கு இப்புடி ஆயிடுத்து. நான் தான் காரணம்! எல்லாம் என்னால, நேக்கு அறிவே இல்லை, மாமி.”

“சிவா பாப்பா, வயசு ஏறுது. இந்தக் குறைபாடெல்லாம் சகஜம் சாமி!” என்று வாஞ்சையாக கன்னம் வழித்தவரை, வெகு வருடங்கள் சென்று இறுக்க\க் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள், மருமாள்.

பொதுவாக பிள்ளைகள் ஒரு வயதுக்கு வளர்ந்து, பின் பெற்றோர்கள் கூட தொட்டுப் பேச மாட்டார்கள், அன்றைய காலத்தில்.

நாச்சியும் அப்புடித்தான் பெண் பிள்ளைகளிடம் நெருக்கமாக இருந்தாலும், கட்டி அணைத்து முத்தம் பதித்து, அது போல் எல்லாம் இல்லை.ஆனால் சிவகாமியிடம் முற்றிலும் இந்த விதிமுறைகள் தகர்ந்து விட்டது.

இதில் யார் கொடுத்து வைத்தவர்கள் என்று பிரித்தறிய முடியவில்லை. நாச்சி பெற்ற பிள்ளைகளுக்கூட இதில் சிறு பொறாமை குணம் உண்டு என்பது மறுக்கத்தகாதது.

நாச்சிக்கு ஒன்று என்றால் பெரிதாகப் பாதிக்கப் படப்போவது சிவகாமி தான் என்பது உறுதி.ஏனென்றால் சிவகாமியின் பலம் பலவீனம் அனைத்தும் அவரே! அதன் பின் தான் அம்பலத்தான். அதற்கும் பின் தான் பிறந்தகம். இப்பெண் என்ன வகையோ?

நான் தான் தன்னால் தான் என்று சிவகாமி மருகி நிற்க நாச்சியின் நிலைக்கு உண்மையான காரணமான இளைய மகன் சுப்ரமணியன் - வாசுகி இருவரும் மல்லு கட்டி கொண்டு இருந்தனர்.

அது சரி இத்தனை நாள் எங்கு இருந்தான் இவன்..............
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top