Vizhiye Kadhai Solvayo-3

Advertisement

Ksmanya

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீவாணி
காலை எட்டரை மணிக்கு புது அலுவலகம் செல்வதற்கு அலுவலக பஸ்ஸிற்காக பிக்கப் பாயிண்டில் நின்றிருந்தேன்.இனி எட்டு மணிக்கே பஸ்ஸிற்கு காத்திருந்தது கூட்டத்தில் அடித்து பிடித்து ஏறி கஷ்டப்பட்டு அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.பிக்கப் பாயிண்டும் வீட்டின் அருகிலேயே இருந்தது.இவ்வளவு இருந்தும் பழைய அலுவலகம் இனி இல்லை என்பதில் சிறிது வருத்தமாகத்தான் இருந்தது.இத்தனை நாளாகப் பார்த்த வேலையும் பழகிய நண்பர்களை பிரிவது கஷ்டமான ஒன்றாக இருந்தது.சவிதாவும் என்னுடனே புது வேலைக்கு வருவது ஒன்றுதான் ஆறுதல் தரும் விஷயம்.இதைப் பற்றியெல்லாம் யோசித்தப்படி இருந்த போது பஸ் வந்து விட்டது.

பஸ்ஸில் ஏறியதும் முன்பே அதில் இருந்த சவிதா கையசைத்து என்னை அழைத்தாள்.அவள் அருகில் சென்று அமரவும்,
"அப்பா!இனிமே பஸ்ஸில கஷ்டப்பட்டு ஆபிஸ் போக வேண்டாம்.பஸ் சூப்பரா இருக்கு இல்ல ஸ்ரீ?!.."என்றாள் சவிதா.

"ஆமா! காலைல அர்ஜென்டா கிளம்ப வேண்டாம்...வம்சிய ஸ்கூலுக்கு ரெடி பண்ண டயம் கிடைக்குது..."

"ஆமா! நானும் அம்மாவுக்கு சமையலுக்கு ஹெல்ப் பண்ண முடியுது"

அப்போது பஸ் நின்ற போது அழகான உடையணிந்த ஒரு பெண் பஸ்ஸில் ஏறி நம் அருகில் வந்து,

"எக்ஸ்க்யூஸ்மீ!நா இங்க உட்காரலாமா?"என்றாள்.

"தாராளமா!"என்றபடி நகர்ந்து இடம் கொடுத்தாள் சவிதா.

"ஐம் நிஷா!ரிசப்ஷனிஸ்ட்... நீங்க?!"

"நான் சவிதா...இவ ஸ்ரீவாணி....எங்க போஸ்ட் என்னன்னு இனிமேதான் தெரியும்"

"ஓ...ஐ ஸி..."

"நீங்க எத்தனை வருஷமா அங்க வேலை பாக்குறீங்க?"என நிஷாவை கேட்டேன் நான்.

"நா த்ரீ இயர்ஸா வேலை பாக்றேன்"
"வேலை எப்படி?பாஸ் ரொம்ப ஸ்டிரிக்டோ?"என வினவினாள் சவிதா.

"வேலை ஜாஸ்தி தான்...ஆனா சம்பளம் நிறைய.... அப்புறம் வேற கஷ்டம் எதுவும் இல்லை.பாஸ் ரொம்ப கண்டிப்பு தான்.ஆனா அதே சமயம் ரொம்ப நல்லவர்.நா முன்னாடி வேலை பாத்த இடத்துல அந்த பாஸ் வழிசல் கேஸ்.ஏதாவது பேசனும்னா தொட்டுதான் பேசும்.வெரி இரிடேடிங்...ஆனா இந்த எம்.டி பெண்கள் விஷயத்துல நெருப்பு.எக்ஸ்ட்ராவா பேசினாலோ சிரிச்சாலோ வேலைய விட்டே தூக்கிடுவார்"என்றாள் நிஷா.

பார்த்தவுடன் பழகிய நிஷாவை எனக்கு பிடித்தது.சவிதாவிற்கும் அவளைப் பிடித்தது என்பது அவளின் அடுத்த பேச்சில் தெரிந்தது.

"பிரண்ட்ஸ்?"என தன் கையை நீட்டினாள் நிஷாவிற்கு.

"ம்... பிரண்ட்ஸ்..."என சவிதாவிற்கும் எனக்கும் கை குலிக்கினாள்.

பிறகு அவரவரின் வீட்டினர் சினிமா அரசியல் என எங்கள் பேச்சு எங்கெங்கோ சுற்றி வந்தது.ஒரு மணி நேர பிரயாணத்தின் பின் பஸ் பிரம்மாண்டமான கட்டிடத்தின் உள்ளே வந்து நின்றது.

வெளிநாட்டு கம்பெனிகளை நினைவுட்டும் வண்ணம் இருந்தது அது.கட்டிடத்தின் கண்ணாடி கதவுகள் காலை சூரியனின் ஒளியில் பளபளத்தது.

உள்ளே நுழைந்த புது சிப்பந்திகளை ரகுராம் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கம்பெனி மேனேஜர் ஜீ.எம்.நல்லசிவம் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.எங்களை அங்கிருந்த நாற்காலியில் உட்கார சொன்ன அவர்,

"வெல்கம் டூ தனா குரூப் ஆஃப் கம்பெனிஸ்! நீங்க எல்லாம் பழைய கம்பெனில என்ன ஜாப் பாத்தீங்களோ அதே போஸ்ட்தான் இங்கேயும்!சோ நீங்க இப்பவே உங்க வேலைய ஆரம்பிக்கலாம்.இன்னிக்கி மட்டும் உங்களுக்கு மதியம் வரை வொர்க் ஹவர்.லன்ச்க்கு அப்புறம் வெல்கம் பார்ட்டி இங்க இருக்கிற ஸ்டாஃப்ஸ் உங்களுக்காக அரேஞ்ச் பண்ணியிருக்காங்க..அது முடிஞ்சதும் நீங்க வீட்டுக்கு போலாம்..சோ பெஸ்ட் ஆஃப் லக் ஃபார் யுவர் ந்யூ ஜாப்..."

அவரின் பேச்சு முடிந்த மேல் மேனேஜர் எங்களின் வேலை இடத்தை காண்பித்தார்.அவரவர் இடத்தில் அமர்ந்ததும் சந்தீப் என்பவர் வேலை விவரங்களை விவரித்தார்.அது மதியம் வரை நீண்டது.பிறகு மதிய உணவு ஆனதும் அனைவரும் மேல் தளத்தில் இருந்த சிப்பந்திகள் அறைக்கு அழைத்துச் சென்றாள் காலையில் பஸ்ஸில் தோழியான நிஷா.அங்கேதான் வெல்கம் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நாங்கள் அனைவரும் அங்கே சென்றதும் அங்கே அறையின் மத்தியில் கேக் ஒன்று இருந்தது.புதிய சிப்பந்திகளான நாங்கள் எட்டு பேரும் சேர்ந்து அந்த கேக்கை வெட்டினோம்.பிறகு அனைவரும் ஒவ்வொருவராக நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.அதில் ஒருவர் யாராவது பாடத் தெரிந்தவர் பாடலாம் என கூறவும்,

"என் பிரண்ட் ஸ்ரீவாணி சூப்பரா பாடுவா"என்று என் பெயரை சவிதா கூறவும் திடுக்கிட்டேன் நான்.
அவளை அதட்டும் விதமாக,

"சவி!....."என்றேன்.
அதை காதிலேயே வாங்காமல்,

"ம்....பாடு ஸ்ரீ! ப்ளீஸ்!"என்று கெஞ்சினாள்.

என்ன பாடுவது என நான் யோசித்த போது எனக்கு வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்திய அந்த பாடலை பாடுவது என முடிவெடுத்தேன்.

தனஞ்செயன்
மதியம் வரை பேக்டரி குடோன் என வேலை சரியாக இருந்தது.இரண்டு மணி அளவில் ஆபிஸ் வந்த நான் லிஃப்டில் என் பகுதிக்கு சென்றேன்.என் அறைக்கு செல்லுமுன சிப்பந்திகள் அறையை தாண்டும் போது ஒரு இனிமையான குரலில் ஈர்க்கப்பட்டு என்னை மறந்து நின்றேன்.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

படபடவென கைதட்டல் அந்த அறையையே நிறைத்தது.தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அந்த பாடலை பாடிய பெண்ணை என்ன முயன்றும் என்னால் பார்க்க முடியவில்லை.அவளின் முதுகு புறம் மட்டும் காண முடிந்தது.அது அன்று புது கம்பெனி கார் பார்க்கிங்கில் தம்பதிகளுக்கு அறிவுரை கூறிய பெண்ணாக இருக்கலாம் என தோன்றியது.அருகில் சென்று பார்க்க எண்ணியப் போது என் போன் ஒலி எழுப்பியது.அது முக்கியமான காலாதலால் இதை அப்புறம் பார்க்கலாம் என முடிவெடுத்து போனில் பேசியபடி என் அறை நோக்கி சென்றேன்.ஆனால் மனம் மட்டும் பாடிய அவளிலேயே உழன்றது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top