Velviyil Veezhntha Maname - Epilogue

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

மகிழ்வுரை - இது
நெகிழ்வுரை!
தெளிவுரை - இது
புதுவுரை!

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை!
குடும்பம் கோவிலானால்
கோவில் திருவிழா காணும்!
திருவிழா நகருழா போனால்
நகரம் பெருவிழா காணும்!
பெருவிழா மகத்துவமானால்
மகத்துவம் மாமாங்கம் வெல்லும்!

அன்பின் கூட்டில்
அகிலமும் அடங்க
அடி வைத்த வீட்டில்
ஆதியும் சுகமே!
அந்தமும் நலமே!


நன்றி பொன்ஸ். அழகான சிறு கூட்டில் சின்னச் சிட்டுக்களின் ஆரவாரம். அதுவே நம் வாழ்வின் ஆதாரம்.
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Hi amma

அன்பை புரிந்து கொள்ளாத குமரியாய் இருந்து- அதே
அன்பால் புகுந்த வீட்டை ஆளும் அரசியாய் வினி அவளுக்கு துணையாய் சிவன்

மாசற்ற அன்பை அள்ளி தரும் செல்வி
முரட்டு தனமாய் காதலை வெளிப்படுத்தும் முகிலன்

போராடி மணமாலை தாங்கிய மலர்
பார்வைக்கு அமைதியாய் மனதில் ஆழமாய் மலரை தாங்கிய அருண்

தங்கைக்கு தோள் கொடுக்கும்
தமையனாய் சந்திரன் குடும்பத்தினர்

இவர்களுக்கு ஆலமரமாய் பொன்னம்மா
இவர்களின் விழுதுகளாய் அடுத்த தலைமுறை என்று வேள்வியிள் வீழ்ந்த மனம் -அழகான குடும்ப பதிவு...
சூப்பர் சகோதரி. ஒரு கதை சுருக்கமே அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி பொன்ஸ் அவர்களுக்கு,
தங்களின் மூன்றாவது நாவல் வேள்வியில் வீழ்வது மனமே பற்றி சில வார்த்தைகள் சகோதரி.
நல்ல நாவல் சகோதரி. தன்னம்பிக்கை, ஒற்றுமை, கூட்டு குடும்பத்தின் பெருமை, விவாசயம், பெண்களின் முன்னேற்றம் என்ற நல்ல விஷயங்களே அதிகம் பகிர்ந்து நாவல் சகோதரி. நாம் எதை நோக்கி ஓடிக்கொண்டு எதையேல்லாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணரும் வகையில் இருந்தது சகோதரி, இந்த பொன்னாம்மா குடும்பத்தை பார்க்கும்போது {படிக்கும்போது}.
சிவனேந்திரன் – விசாலாட்சி, கார்முகிலன் – செல்வி, அருண் – மலர் என்று முக்கியமான மூன்று அண்ணன் – தம்பிகள் மூலம் இந்த நாவலில் பயணம் செய்யும் போது அங்கங்கே வரும் சில {பல} நல்ல விஷயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புக்கிறேன் சகோதரி.
நாவல் ஆரம்பமே நம் கலச்சாரத்தை விரும்பி போர் தொடுத்து வென்ற இளைய தலைமுறையிடம் இருந்து ஆரம்பிப்பது அருமை. நம்மின் மலரும் நினைவு போல் காசு சேர்த்து சைக்கில் வாடகை என்று செல்வது அருமை. பெண்ணின் திருமண எற்பாடு, அந்த பெண்ணின் மனஉணர்வுகள், அவர்களின் பொருளாதர நிலை உயர்வு என சொல்வது அருமை. விலை குறைவால் விவசாயின் மனகுமறல் என தொட்டு சென்றவிதம் அருமை. அதற்கு தீர்வுகளும் அருமை. இளைய தலைமுறையின் தற்கொலை முடிவு அதனை சாடிய விதம், மாற்று ஜாதிய திருமணசங்கடம் என்பதை மென்மையாக சொன்னவிதம் அருமை. செல்வியின் இயல்பில் குடும்ப ஒற்றுமை, சில இடங்களில் குபீர் சிரிப்பு {மதுரை போர்ட்டர் சண்டை} என கலகலபுக்கும் பஞ்சம் இல்லை.
நாவலில் சில இடங்களில் பளீச் என்று சொன்ன உண்மைகள், குடும்ப ஒற்றுமைக்கு முழுக்க முழுக்க ஆண்களே காரணம். பெண் கொடுக்கும் போது நம்மைவிட வசதி பார்க்கணும், பெண் எடுக்கும் போது நம்மை விட ஒரு படி கீழே இருக்கனும். கணவனுக்கு ஏற்றர்போல் மாறி விடு என சொல்லி சொல்லி வளர்க்கும் பெண் பிள்ளைகள். நம் கஷ்டத்தை குழந்தைகள் அறியமுடியாமல் செய்யும் தவறு என்று போகிற போக்கில் சொன்னது அருமை சகோதரி.
வினியின் மனமாற்றத்தை சற்று விவரித்து இருக்கலாம், சிவனின் பாகத்தை சற்று அதிகபடுத்தி இருக்கலாமே என்று தோன்றியது சகோதரி. நாவலில் வரும் பதிவுகள் அனைத்திலும் நல்ல நல்ல கருத்துகள் அதிகம் சகோதரி. அதனை சற்று குறைத்து இருக்கலாமே எனவும் தோன்றியது.
காதலுக்கு இரு மனம் இணைத்தால் போதும். ஆனால் கல்யாணத்துக்கு இரு குடும்பங்களின் சங்கமம் தேவை. மனைவியின் மனம் அறிந்து நடப்பது கணவனின் கடமை. கணவனின் மனம் கோணாமல் நடப்பது மனைவியின் கடமை. அண்ணன் – தம்பிகளின் ஓற்றுமை. நம் கலச்சாரம் நம் மண்ணின் உயிர் மூச்சு, அதனை தொலைத்து விடாதீர்கள் என்ற நல்ல விஷயங்களை ஒருவித பாசிட்டிவாக சொன்ன நாவலுக்கு என் வாழ்த்துகள் சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top