Uyirin ularal - episode 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஜெயப்பிரகாஷ் ஆண் அழகன்
நல்ல பாம்பு கூட பார்க்க நல்லா அழகாத்தான் இருக்கும்
அபிநேஹா அய்யோ பாவம்
எதுக்குடா ரிஷி அவளைத் திட்டுறே
நீ ரொம்ப ஒழுங்கா?
 

B.subhashini

New Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 14

ரிஷி ஆந்திராவில் இருந்து இறங்கிய மாதிரி வீடு வந்து சேர்ந்தான்.

" ரிஷி, என்னப்பா நான் உடனே கிளம்பி வர சொன்னால் நீ நான்கு நாள் கழித்து வந்திருக்கிறாய் ? முகமெல்லாம் வாடி போய் இருக்கிறது. என்னப்பா ? நீ ஏதாவது சொல்ல நினைக்கிறாயா ? " என்று கேட்டார் கற்பகம்மாள்.

" இல்லம்மா, வேலை அதிகம். அதனால் நான் ரொம்ப டயட்டா பீல் பண்ணுறேன் அம்மா. அம்மு கல்யாண வேலையை ஏதாவது ஈவென்ட் ஆர்கனைசரிடம் கொடுத்துவிடலாமா? " என்று கேட்டான் ரிஷி.

அந்த தாயுக்கு எதுவோ புரிந்தது, ஆனாலும் இதில் அவர் செய்ய ஒன்றும் இல்லை. எல்லாம் இரண்டு பேரும் இழுத்துப்போட்டு கொண்டது, என்று நினைத்தவர் " உன் விருப்பம் " என்று தலையாட்டி வைத்தார்.

ஊட்டியில் இருந்து வரும் நேரத்தை ரிஷிக்கு மெசேஜ் செய்துவிட்டாள் அபி. சரியாக அந்த நேரத்திற்கு அவளை அழைக்க சென்றிருந்தான் ரிஷி.

கையில் இருந்த லக்கேஜை வாங்கியன் அவளை தோளோடு அணைத்து கொண்டு நடந்துவந்தான்.

" சின்னத்தான், குழந்தைகள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது ரொம்ப சந்தோசபடுமாம், ஏன்னு சொல்லு " என்று கேட்டாள்.

" தெரியவில்லை, நீயே சொல்லு " என்றான் இவன்.

" ஏன்னா அப்போதான் அந்த குழந்தையின் அம்மா குழந்தையை விழுந்து விழுந்து கவனிப்பார்களாம், அப்புறம் கேட்டது எல்லாம் கிடைக்குமாம் " என்றாள் அபி ஒரு நமட்டு சிரிப்புடன்.

" அந்த குழந்தைக்கு தெரிவதில்லை, அந்த குழந்தைதான் அந்த தாயுக்கு உலகம் என்று" என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அபிக்கு குழப்பமாக இருந்தது. " இவனுக்கு என்ன வந்தது, இவன் ஒருபோதும் இப்படி பீலிங்ஸை வெளிக்காட்ட மாட்டானே, அதுவும் நேற்று பார்த்துவிட்டு, இன்று பல நாள் பிரிவு போல பொது இடத்தில் வைத்து முத்தம் எல்லாம் தருகிறான் " என்று அவள் யோசித்துக்கொண்டு வர லக்கேஜை காரில் வைத்துவிட்டு காரை எடுத்தான் ரிஷி.

காரை ஓட்டிக்கொண்டிருந்த ரிஷியிடம் " சின்னத்தான் பேசாமல் என்னை இறக்கிவிடேன், அங்கே பார் நடந்துபோகிறவன் கூட வேகமாக போகிறான் " என்றாள் அபி சலித்துக்கொண்டு.

" வேகமாக வீட்டிற்கு சென்று என்ன செய்ய போகிறாய் அம்மு" என்றான் ரிஷி அதே வேகத்துடன்.

அவனை ஆச்சரியமா பார்த்த அம்மு கியரில் இருந்த அவன் கரத்தில் தன் கையை வைத்தாள். " சின்னத்தான் காஃபி ஷாப்புக்கு போகலாமா, எனக்கு காஃபி குடிக்க வேண்டும் போல இருக்கு " என்றாள் அபி.

"ம் " என்றான் ரிஷி.

காஃபி ஷாப்பில் வாங்கிய காஃபி ஆறி, ஆடைபடிந்து போய் இருந்தது. அதை தொடுவார் இல்லை. எங்கே இருந்து தொட. கையைவிட்டால் அல்லவா காஃபியை எடுத்து குடிக்க முடியும். ரிஷியின் பிடியில் அபியின் கை விரல்கள் தப்புமா என்பது போல இருந்தது.

" நீ தானே விழுந்து விழுந்து மாப்பிளை தேடினாய், இப்போ ஏன் என்னவோ போல இருக்கிறாய் ? ஏற்கனவே நான் பயந்து போய் இருக்கிறேன், இதில் நீ வேற, பேசாமல் நீ மறுபடியும் ஆந்திரா போ, என் கல்யாணத்திற்கு நீ வர வேண்டாம்" என்றாள் அபி கோபத்தில்.

" நான் தான் உன்னிடம் கேட்டேனே" என்றான் அவன் மொட்டையாக.

" என்ன கேட்ட " என்று அபி கேட்டும் ரிஷி பதில் சொல்லாமல் இருந்தான்.

" நந்து போகலாம் " என்றாள் அபி.

பதில் ஏதும் பேசாமல் எழுந்துகொண்டான் ரிஷி.

" நந்து, ப்ரியா எங்கே ?"

" தெரியாது, ஊரில் இல்லை போல "

" உன் லவர் எங்கே என்று உனக்கே தெரியாதா " என்றாள் அபி காரில் அமர்ந்தபடி.

அவளை உறுத்து பார்த்தவன் பதில் ஏதும் சொல்லாமல் காரை எடுத்தான். சொல்லி என்ன லாபம் என்று நினைத்தான்.

இருவரும் வீடு வந்து சேர்ந்ததை பார்த்த பானுவுக்கு பத்திக்கொண்டு வந்தது, ஆனாலும் அடக்கிக்கொண்டாள். அடுத்தவாரம் இந்நேரம் ஜெய்பிரகாஷின் மனைவியாகிவிடுவாள்,. சனியன் விட்டது என்று இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள் பானு.

********

அன்று மாலை வீடே இரண்டுபட்டது. மூன்று அண்ணியுமே வீட்டில் இருந்தனர். " ஒரு பேயையே சமாளிக்க முடியாது, ஆனால் இன்றோ மூன்று பேயும் ஒன்று சேர்ந்து நிற்கிறதே ! என்ன விசேஷமாக இருக்கும் " என்று ரிஷி யோசிக்க அவனது இரண்டு அண்ணன்களும் வந்து சேர்ந்தனர்.

" டேய் ரிஷி, நீ ஏன் வாய்ப்பார்த்து கொண்டிருக்கிறாய், வேலையை பார். ஜெய் தன் குடும்பத்துடன் வரப்போகிறார். அன்று பூ மட்டும்தான் வைத்துவிட்டுபோனார்கள், இன்று மோதிரம் மாத்தலாம் என்றார்கள், உன் அண்ணிமார்கள் எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டார்கள், போ...போய் கிளம்பி வா, அம்பிகா அம்மு எங்கே ? என்று கேட்டார் ரிஷியின் மூத்த அண்ணன்.

" அவள் ஆபீஸ் வரைக்கும் போயிருக்கிறாள், சீக்கிரம் வந்துவிடுவாள் " என்றான் ரிஷி.

" முதலில் இந்த வீட்டு ஆம்பிளைகள் அவளை அம்முன்னு கூப்பிடுவதை நிறுத்துங்கள், அவளுக்கு பெயர் இல்லையா என்ன ? சும்மா அம்மு அம்முன்னு. கேக்கிற அவள் கணவன் என்ன நினைப்பார் " என்றாள் அம்பிகா.

"அது என்ன அண்ணி அவளை மட்டும் யாராவது ஏதாவது நினைத்துவிடுவார்களா ? ஏன் நம்ம ரியாவையும் ( அம்பிகாவின் மகள் ) தான் நாம் குட்டி குட்டின்னு கூப்பிடுகிறோம், அவள் வளர்ந்து விட்டால் எல்லோரும் அவளை குட்டின்னு கூப்பிடுவதை நிறுத்திவிடுவோமா ? நம் வீட்டு பெண் எப்போதும் நமக்கு நம் வீட்டு பெண்தான்." என்றவன் எழுந்து போய்விட்டான்.

அபின்னு கூப்பிட்டா அவ அண்ணன்னு கூப்பிடுவேன் என்று மிரட்டுறா, இவர்களுக்கு அம்முன்னு கூப்பிடக்கூடாதாம். லூசுகளா, போய் எல்லோரும் எங்கேயாவது போய் தொலைய மாட்டேங்குதுங்க. என்று முனங்கிகொண்டே போனான்.

ரிஷி ஏதோ பொறுப்பை உணர்ந்து நடக்காதது போல உணர்ந்தார்கள் அவனின் அண்ணன்கள். பின்னே இருக்காதா என்ன ? ரிஷியின் தற்போதைய வேலை என்ன ? மாப்பிளையை இன்னும் இவன் நேரில் மீட் பண்ணவில்லை. ஒரு கல்யாணம் என்றால் எத்தனை வேலை இருக்கும். முதலில் அடித்து வந்த இன்விடேஷன் கார்டை பார்த்தானா ? ஏதோ மூன்றாம் வீட்டு நபர் போல வரான், போறான். நல்ல வேலை இவன் வந்து விசாரிப்பான் என்று இருக்காமல் நாமே விசாரித்துவிட்டோம். மாப்பிளை அம்பிகாவின் உறவுக்கார பையன் என்பதால் அவள் அப்பா மூலம் விசாரித்துவிட்டோம். அம்பிகாவை நம்ப முடியாவிட்டாலும் அவள் அப்பாவை நம்பலாம்.

இவன்தான் இப்படி ஏனோ தானோ என்று இருக்கிறான் என்று பார்த்தால் கல்யாணபெண் அதுக்கு மேலே இருக்கிறாள். கல்யாணத்திற்கு இன்னும் ஒருவாரம் தான் இருக்கு, ஆனால் இவள் இன்னும் ஆபீஸே கதியென்று இருக்கிறாள் என்று நினைத்தவர்கள் அவளை வரும்மாறு தகவல் கொடுத்தனர் எதுக்கு என்று சொல்லாமலே.

மேலே சென்ற ரிஷி டீவியை ஆன் செய்துவிட்டு நொடிக்கு நூறு சேனலை மாற்றிக்கொண்டே இருந்தான்.

அவன் போன் ரீங் ஆனது.

" ஹலோ " என்றான்

" டேய் ரிஷி கீழே வாடா, மாப்பிளை வீட்டில் எல்லோரும் வந்துட்டாங்க " என்றார் மூத்த அண்ணன்.

" நான் வந்து என்ன செய்ய போகிறேன், நீங்க பேசிகிட்டு இருங்க, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. ஒரு பத்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் " என்றான் ரிஷி.

" என்னமோ போ, சீக்கிரம் வா, அபியை வேற ஆளை காணோம்."என்றவர் போனை வைத்தார்.

வேண்டா வெறுப்பாக கிளம்பினான் ரிஷி. கீழே இறங்கிவரும் போது ஜெய் பிரகாஷை பார்த்துக்கொண்டே வந்தான். ஜெய் பார்க்க ஆள் ஜம்முன்னு இருந்தான். ஆண் அழகன் என்று சொல்லலாம், நல்ல உயரம், வசீகரமான முகம், அழகான கண்கள், அந்த கண்கள்.... என்று எண்ணியவனின் மனதில் என்னவோ நெருடியது.

உனக்கு வேற வேலையே இல்லை, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று மனதை அடக்கினான். ஆனாலும் அவனால் மனதின் நெருடலை அலட்சியம் செய்ய முடியவில்லை. மறுபடியும் படியேறி மேலே சென்றான். அவன் நிற்பது கீழே உள்ளவர்களுக்கு தெரியாத இடத்தில் நின்றுகொண்டு ஜெய்யை ஆராயத்தொடங்கினான். ஒரு ஐந்து நிமிடம் பார்த்திருப்பான், மனம் சொல்வது உண்மைதான், ஆனாலும் இன்னும் யாராவது அதே போல உணர்ந்தால் கன்பார்ம் செய்துவிடலாம் என்று எண்ணியவன் போனில் ஜானுவை பிடித்தான்.

" ஹாய் ரிஷி சார் சொல்லுங்க, காலையில் நீங்க லேட். அம்மா வந்திருந்தார்கள் என்னை பிக்அப் பண்ண, அபி நீங்கள் வந்துகொண்டு இருப்பதாக சொல்லவும் கிளம்பிவிட்டேன் " என்றாள் விளக்கம் சொல்வது போல.

" நோ ப்ராப்லம், நான் ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டேன். இப்போது நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், எங்கே இருக்க ?" என்றான்.

" நான் என் பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் வந்தேன், என்ன செய்யணும் என்று சொல்லுங்க " என்றாள் ஜானு.

" காலையில் தானே வந்த, உனக்கு டயர்டா இல்லையா ? அடுத்து ஷாப்பிங் கிளம்பிட்ட" என்று சிரித்தவன்

" உன்னுடன் எத்தனை பிரெண்ட்ஸ் இருக்காங்க?" என்று கேட்டான்.

" என்ன செய்ய சார், எல்லோரையும் மேய்ன்டன் பண்ணனுமே, நாங்க ஒரு நான்கு பேர் இருக்கிறோம் " என்றாள் ஜானு சிரித்துக்கொண்டே.

" ஓகே குட், நான்கு பேரும் எப்படி, மாடர்ன் கேளா, இல்ல நார்மலா ?" என்று கேட்டான் ரிஷி.

" என்ன ரிஷி சார், வண்டி வேற ரூட்டுல போகுது, அபி என் சின்னத்தான் குனிந்த தலை நிமிர மாட்டார் என்பாள், நீங்க என்னன்னா மாடனா, நார்மலா என்று பெண்களை பற்றி லிஸ்ட் எடுக்கிறிங்க ?" என்றாள் கிண்டலாக.

சிரித்தவன் " கண்டிப்பா அபி அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாளே ? நான் சாமியார் இல்லையே உன் பிரெண்ட் போல "என்றான் ரிஷி.

" ஓகே ஓகே, மூன்று பேரும் மாடர்ன் இல்லை அல்ட்ரா மாடர்ன், சொல்லுங்க என்ன செய்யணும் நானும் என் பிரெண்ட்ஸும் " என்று கேட்டாள் ஜானு.

" ஒன்றும் இல்லை ஒரு சின்ன தியாகம் செய்யணும், உங்கள் ஷாப்பிங்கை தள்ளிவைத்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வரவேண்டும், வந்து அம்முக்கு ரீங் போட வந்திருப்பவர்களுடன் இருந்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு ஒரு ஆளுக்கு மார்க் போடவேண்டும், மார்க் போட தெரியுமா? " என்று கேட்டான் ரிஷி.

" யாரை பார்த்து என்ன வார்த்தை கேட்டிங்க ? மார்க் போடதெரியுமாவா ? அது தெரியாமல் இருந்தால் பெண்கள் இனத்திற்கே நாங்கள் களங்கம் இல்லையா ? ஆனால் ரிஷி சார் எங்களை விட உங்கள் அம்மு நல்லா போடுவா மார்க், ஆனால் என்ன ? வெளியே சொல்ல மாட்டா" என்றாள் ஜானு.

" அவள் எதை தான் சொல்லுவா, சரி எந்த இடத்தில் இருக்கிறீர்கள் ? இங்கே வர எவ்வளவு நேரம் ஆகும் ?"

" ஒரு பிப்டீன் மினிட்ஸ் "

" ஓகே கம் பாஸ்ட் "

" ஒரு நிமிஷம், யாருக்கு மார்க் போடணும் என்று சொல்லவில்லையே "

" ஜெய் பிரகாஷ், மாப்பிளை ஆக போகிறவரை "

" வாட் எனிதிங் ப்ராப்ளேம் "

" நத்திங், ஜெஸ்ட் ஸ்மால் க்ளாரிபிகேஷன்"
என்று போனை வைத்தான்.

கீழே வந்தவன் ஜெய்ப்ரகாஷிடம் தன்னை அறிமுக படுத்திகொண்டு அவனுக்கு எதிரே அமர்ந்தான்.

எதுக்கு என்றே தெரியாமல் கிளம்பிவந்த அபி அங்கு குழுமி இருந்தவர்களை பார்த்து கண்ணில் மிரட்சியுடன் உள்ளே வந்தாள்.

" அபி போய் ரெடியாகிட்டு வா, உனக்கு ரீங் போட வந்திருக்கிறார்கள் " என்றாள் பானு.

" அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், எங்கள் மருமகள் எப்படி இருந்தாலும் அழகிதான்" என்றார் மாப்பிள்ளையின் தாய்.

அனைவரும் ஏதோ ஜோக்கை கேட்டது போல சிரிக்க " நான் பிரெஷ் ஆகிவிட்ட வருகிறேன் " என்று அங்கிருந்து விட்டால் போதும் என்று கிளம்பினாள் அபி.

ரிஷிக்குள் அடக்கமுடியாமல், சொல்லமுடியாமல் உள்ளே ஏதோ உணர்வு பரவ, நார்மலா இருப்பது போல நடிக்க மிகவும் கஷ்டப்பட்டான்.

ஜெய்யையே பார்த்துக்கொண்டு இருந்தவன் " பாவி பயலே வருங்கால மனைவி என்று கொஞ்சமாவது பார்வையில் ஆசையோ, காதலோ இருக்கா பார், பின்னே எதுக்கு இத்தனை பேரையும் அழைத்துக்கொண்டு வந்து மோதிரம் போடுகிறேன் என்று சீன் போடுகிறான் " என்று யோசித்தான்.

தன் அறைக்கு போன அபி பிரெஷ் ஆகிவிட்டு திரும்பி வந்தாள். முகத்தை கழுவி இருந்தாள், பவுடர் கூட போடவில்லை, போட்டிருந்த அதே உடையுடன்தான் திரும்பி வந்தாள் ஆனால் கூடுதலாக துப்பட்டா இடம்பிடித்திருந்தது. இந்த உடைக்கு துப்பட்டாவா ? அதுவும் வெளியே இத்தனை பேரை பார்க்கும் போது போடாத துப்பட்டா வீட்டில் இருக்கும் போதா ? ஒரு வேளை வருங்கால உறவுகள் என்றா ? இருக்காதே அவ்வளவு அடக்கம் ஒடுக்கம் எல்லாம் அடுத்தவர்களுக்கு முன்னால் காட்டமாட்டாளே ? " என்று யோசித்துக்கொண்டிருந்தான் ரிஷி.

ஆனால் அங்கு நின்றிருந்த மூன்று தேவியருக்கும் யோசனையே வேறாக இருந்தது. "இந்த அபி வந்து எங்கே அமர்வாள். ஒரு பெரிய சோபாவில் ரிஷி இருக்கிறான், மற்றோரு சோபியாவில் ஜெய் இருக்கிறான், இவள் கண்டிப்பாக ஏதாவது ஒன்றில்தான் இருக்க வேண்டும் எதில் இருப்பாள் " என்று கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களை ஏமாற்றாமல் அபி ஜெய் இருந்த சோபாவில் போதிய இடைவெளி விட்டு போய் அமர்ந்தாள்.

மூன்று விஷக்கிருமிகளும் சிரித்துக்கொள்ள, ரிஷியின் முகத்திலும் சிறு புன்னகை.

சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்த்தாள் ஜானு தன் தோழிகளுடன். அவளுடன் வந்திருந்த தோழிகள் அனைவரும் உடையில் சற்று சிக்கனம் காட்டியிருந்தனர், காற்றில் அலைபாய்ந்து கேசம், உதட்டை கூர்ந்து பார்க்க வைக்கும் சாயம் எல்லாவற்றையும் விட வளைவு சுளிவுகளை எடுத்து காட்டும் சிக்கென்ற உடை. மேலாடை என்று அவர்களிடம் யாராவது கேட்டால் " ஏய் டோன்ட் யூஸ் பேட் வட்ஸ் " என்பார்கள்.

" சரியான ஆட்கள் தான் மார்க் போட" என்று நினைத்துக்கொண்டான் ரிஷி.

வந்த நான்கு பெண்களும் ரிஷியின் அருகில் போய் அமர்ந்தனர். அதன் பின் அங்கு என்னென்னமோ பேச்சு நடந்தது. அது யார் காதில் விழுந்தது.

ஜெய்யின் அருகில் இருந்தாலும் அபியின் கண் ரிஷியை நெருங்கி இருந்த பெண்ணின் காலை விலக்ககூட தோன்றாமல் இருந்த ரிஷியின் மேல் இருந்தது.

ரிஷியின் பார்வையோ சோக பதுமையாய் இருந்த கல்யாண பெண்ணின் மேல் இருந்தது.

" சரி பேசினால் பேசிக்கொண்டேதான் இருப்போம், நல்ல நேரம் முடிவதற்குள் மோதிரத்தை மாற்றிவிடலாம் " என்றார்கள் அங்கே இருந்த பெரியவர்கள்.

மாப்பிளை எழுந்து நிற்க பெண்ணும் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம். இருவரிடமும் மோதிரம் நீட்டப்பட்டது.

ஜெய் மோதிரத்துடன் ரெடியாக நிற்க, பாக்சில் இருந்து மோதிரத்தை எடுக்க அபியின் கை நடுங்கியது. அவள் உதடுகள் துடிக்க கண்ணீர் வெளியே வர தயாரானது.

அபி மிரண்ட மானாக கண்ணை உருட்டிக்கொண்டு ரிஷியை பார்த்தாள், கையால் எதையோ அடக்கியபடி வில்லில் பூட்டிய நானாக நிமிர்ந்து நின்ற ரிஷியும் அவளை கண்கொட்டாமல் பார்த்தான்,

" அபி சீக்கிரம், வெட்கப்படாமல் போடு " என்றாள் பானு நக்கலுடன்.

அபியோ ஜெய்க்கு விரலை காட்டவும் இல்லை, அவனுக்கு மோதிரத்தை போட கையை உயர்த்தவும் இல்லை.

" என்னாச்சு " என்று எல்லோரும் நிற்க ரிஷி எழுந்து வந்து அபியின் பின்னே நின்றான்.
யாருக்கும் தெரியாமல் அவளின் கையை பிடித்து அழுத்தினான். அதுக்கு அரணாக ஜானுவும் அவளின் தோழியும் அபியை சுற்றி நின்றனர்.

" பயப்படாமல் போடு, நானிருக்கிறேன் " என்றான் ரிஷி அபியின் காதோரத்தில்.

விரல்கள் நடுங்க தன் வலது கையை நீட்டினாள் அபி. ஜெய் தன் கையிலிருந்த மோதிரத்தை அபிக்கு போட்டுவிட்டான். அடுத்து அபியின் முறை. அவளின் இடதுகை ரிஷியின் கையை தேடி அழுத்த பிடித்துக்கொண்டது, வலதுகையால் மட்டுமே மோதிரத்தை எடுத்து ஜெய்க்கு தயங்கி தயங்கி போட்டாள் அபி.

அங்கு கூடியிருந்த அனைவரின் பார்வையும் அபி மற்றும் ஜெய்யின் மேல் இல்லை. ரிஷி மற்றும் அபியின் கை மேலே இருந்தது. ரிஷி தன் கையை விலக்க முயலவில்லை, ஆனால் அபியின் பிடி நொடிக்கொருமுறை இறுகி கொண்டே போனது.

" அது ஒன்றும் இல்லை, சின்ன வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், ரிஷி எங்கள் அபிக்கு அண்ணன் மாதிரி " என்றாள் அம்பிகா யாருக்கும் தெரியாமல் அபியை முறைத்தபடி.

"நீ முறைத்தாலும் சரி, அடித்தாலும் சரி நான் கையை விடமாட்டேன் " என்று நினைத்துக்கொண்டு பிடியை விடாமல் நின்றாள் அபி.

" அம்மு அத்தானை விடம்மா, போ, போய் மாப்பிளை பக்கத்தில் உட்கார் " என்றார் கற்பகம் அம்மாள்.

கலங்கிய கண்களுடன் கற்பக அம்மாவை ஏறிட்டாள் அபி.

போ என்றான் ரிஷி.

மனமில்லாமல் அபி ஜெய்யுடன் போய் அமர்ந்தாள்.

ரிஷி மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றான்.

ஜானு தன் தோழிகளுடன் ரிஷியை தேடி வந்தாள்.

ரிஷி ஜெய்க்கு போட்ட மார்க்கும், ஜானுவும் அவள் தோழியும் போட்ட பார்க்கும் ஒரே மாதிரியாக இருந்தது. தன் மனதில் ஏற்பட்ட நெருடல் சரியே என்பதை ரிஷி உணர்ந்தான்.

" ஏய் ஜானு சூப்பர் எக்ஸ்பிரியன்ஸ் தெரியுமா ? வாட் அ லவ் சீன் ? சினிமாவில் தான் பார்க்க முடியும் அதுவும் பாலிவூட் சினிமாவில் தான் பார்க்க முடியும் இப்படி ஒரு லவ் ஸ்டோரியை. லவ்வர் கையை பிடித்துக்கொண்டே, இன்னொருவனுக்கு ரீங் போடும் பெண். ஆனால் அந்த பெண் அதான் உன் பிரெண்ட் ரொம்ப பாவம். " என்றாள் ஜானுவின் பிரெண்ட் ஒருத்தி.

" பாவம் தான் ஆனாலும் லவ் பண்ண தெரிந்த இருவருக்கும் அதை சக்ஸஸ் பண்ண தெரியவில்லை, அடுத்து என்ன நடக்கும் ஜானு " என்றாள் மற்றவள்.

"வேறன்ன, அந்த ஜெய்யுடன் திருமணம்தான் நடக்கும், நீங்கள் நினைப்பது போல அந்த இருவரும் லவ்வேர்ஸ் இல்லை. ரிஷி அபியோட அத்தை பையன், அவளுடைய கார்டியன். அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் பேசி வைத்திருக்கு, அபி கல்யாணம் முடிந்தவுடன் அவர்களுக்கு திருமணம் நடக்கும்.

அப்புறம் எப்பவுமே அபி அப்படிதான், ஏதாவது பிரச்சனை என்றாள் ரிஷியைத்தான் தேடுவாள், அதனால்தான் அப்படி அவர் கையை பிடித்துக்கொண்டு அந்த ஜெய்க்கு மோதிரம் போட்டாள்.

அவளுக்கும் நமக்கு தெரிந்தது போல ஏதாவது தெரிந்திருக்கலாம், பார்ப்போம் எல்லாம் நல்லதாக முடியவேண்டும் " என்று முடித்தாள் ஜானு.

அன்று இரவு அனைவரும் சென்றவுடன் ரிஷி, அபியை மொட்டை மாடிக்கு அழைத்தான். இந்த முறை அபி மறுக்கவில்லை.

அங்கே மாடியில் ரிஷி கோபத்தோடு அங்கேயும், இங்கேயும் அலைந்துகொண்டு இருந்தான். அபி அங்கே போனதுதான் தாமதம்

" முட்டாள் அடி முட்டாள், உன்னை படிக்கவைத்ததற்கு அந்த காசை நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம்" என்று வெடித்தான்.

ரிஷி தனக்கு ஏதாவது புத்திமதி சொல்லுவான் என்று எதிர்பார்த்து வந்திருந்தாள் அபி, ஏனென்றால் வீட்டில் இருந்த எல்லோரிடமும் அவள் ரிஷியின் கையை பிடித்துக்கொண்டு ஜெய்க்கு மோதிரம் போட்டதாக போதிய மட்டும் திட்டும், புத்திமதியும் வாங்கிக்கொண்டுதான் வந்திருந்தாள். ஆனால் ரிஷியோ வந்தவுடன் ஏனென்றே தெரியாமல் வாயுக்கு வந்தபடி திட்ட ஆரம்பிக்க ஒன்றும் புரியாமல் நின்றாள் அபி.
Excellent
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top