uyirai tholaithaen UD5

Advertisement

preethi sri

Well-Known Member
hi makkalae ud 5 pottutaen .. comments sonna anaivarukkum nanri ...
padinga indha UD kum comments sollunga ... idhu dha energy tonic .


1559905426713.png

நம் கதாநாயகி கல்லூரியை அடை வதற்குள் அவளை பற்றி பார்ப்போம் அபிஜித்ரா பாலகிருஷ்ணன் சின்மயி இன் புதல்வி அப்பா அம்மா இருவரும் வங்கியில் வெவ்வேறு கிளைகளில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றனர் .

ஒரே கிளையில் பனி புரிந்த போது பாலு தன் காதலை அவர் மனைவி மையுவிடம் கூறி திருமணம் செய்து கொண்டார். இப்போது டி வி எஸ் நகரில் வசிக்கின்றனர் அவ்வீட்டின் interior டிசைன் முழுக்க அபி ஆசைப்பட்டு செய்தது அவளுடைய தேர்வில் அவர்கள் பெற்றோர் கூட அசந்து தன் போனார்கள் அதில் அத்தனை கலைரசம் சுரந்தது.



அபிஜித்ரா பெயர்க்கு ஏற்றார் போல் அணைத்து செயல்களிலும் ஜித்தன் தான் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இந்த எந்த குணமும் இல்லாத நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று பாரதி கண்ட புதுமை பெண் .

பிடிவாதம் கோவம் சாகசம் பிரார்க்காக தன்னை எந்த சூழ்நிலையிலும் மாற்றி கொள்ளாத குணம்

ஒருவரை பார்த்த சில நிமிடங்களில் சுலபமாக கணித்துவிடுவாள் தன் முடிவை யாருக்காகவும் மாற்றி கொள்ளாத குணம் கடின உழைப்பு இது தான் அபி 10 வகுப்பில் ஸ்கூல் first எடுத்து ஆர்ட்ஸ் குரூப் எடுத்து இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து proficiency வின்னர் ஆக இருந்து காலேஜ் படிக்கும் போது சி எஸ் படித்து முடித்தால் பின் அம்மாவின் கண்டிப்பால்

விரிவுரையாளர் ஆக வேண்டும் என்று விரும்பியதால் அவளும் சரி என்று கூறி ( உலக மக அதிசயம் ) phd முடித்தால் இன்று பீளமேட்டில் உள்ள பிரபல கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறாள்

அப்பா செல்லம் என்பதால் அவள் எடுக்கும் அணைத்து முடிவுகளுக்கும் அவர் பக்கபலமாக இருப்பார் ஆனால் அவள் என்ன செய்ய வேண்டும் என்று இவரே முடிவு எடுக்க மாட்டார் நல்ல நண்பராக துணை நிற்பார்

கல்லூரி செல்லும் வழியில் அபியின் மனதில் முழுக்க அஜயின் நினைவுகள் மாத்திரமே நிறைந்திருந்தது . இவன் ஏன் என்ன இப்டி பாத்தான் ந சொன்னதுல ஒரு வார்த்தை கூட அவன் கவனிக்கவே இல்ல இவன் யாரு என்ன சைட் அடிக்க ஏதோ என்ன பொண்ணு பார்க்க வந்த மாப்புள்ள மாதிரி இந்த பார்வை பாத்து வைக்கிறான் என்று தாளிக்க அவள் மனமோ இப்போ பொண்ணு பாக்க வந்த சரி சொல்லிடுவியா என்று அவளை எதிர் கேள்வி கேட்டது

தன் மனம் போன போக்கு அவளுக்கும் சற்று வியப்பாக இருந்தது அவன் என்ன அவ்ளோ அழகாவா இருக்கான் என்று ஒரு மனம் கேட்க ந எங்க அவனை பாத்தேன் இவ தா ஸ்கூல் புள்ள ரஹைம்ஸ் சொல்ற மாதிரி சொல்லிட்டு வந்துட்டாளே என்று புலம்பியது . அப்போ நீ பாக்கல என்று கேட்ட மனதிடம் நோ நானாவது அவனை பாக்கறதாவது என்று திருப்பிக்கொள்ள

அப்போ ஏன் அவனை பாத்த உடனே உன் மண்டைல பளீர்னு லைட் அடிச்சுது. நீ யாருக்காவது இவ்ளோ நேரம் வெயிட் பண்ணி இருக்கியா என்று கேட்க.

ஆன் அது அவனை invite பண்ண வந்த அது என்னோட ஒர்க் என்று மழுப்பலாக பதில் கூற சரி

அப்டியே இருந்தாலும் இவ்ளோ நேரம் ஒருத்தன் வெயிட் பண்ண வெச்ச நீ இந்நேரம் பொங்கி இருப்பியே என்று கூற.

அபி கிட்ட ஒரு ஒர்க் குடுத்த அது செறிய முடியானும் அது மட்டும் தான் வேற ஒன்னும் இல்ல என்று கூறி மனதை அடக்கி விட்டால்.

சிஃனலில் ஒருவன் ப்ளூ கலர் ஷர்ட் போட்டிருக்க சட்டென அஜய் நினைவு வர

அவள் மனசாட்சி இப்போ நீ எதுக்கு அவனை பாத்த என்று கேட்க இல்ல அஜய் போட ஷர்ட் மாதிரி இல்ல என்று கூற இப்போது அபி mind வாய்ஸ் ஏன் அபி நீ யோகியாம அவனை செமையா சைட் அடிச்சிட்டு என்கிட்டய இந்த சரடு விடுற எதுக்கு இந்த பில்ட் அப்பு என்று கேட்க சரி சரி ஏதோ கொஞ்சம் handsome ah மேன்லியாஹ் இருந்தான் ஒத்துக்கரன்.

நீ உள்ள போ என்று அதை துரத்த கல்லூரி வரவும் சரியாக இருந்தது இரண்டாவது ஹௌர் கிளாஸ் இருந்ததால் அதில் தான் இப்போது அவளின் முழு கவனமும் இருத்தது

பேராசிரியை கிளாஸ்க்கு வரலைனா பீல் பண்ற பசங்க இங்க மட்டும் தாங்க அதுக்கு கரணம் அபி சூப்பரா கிளாஸ் எடுப்பாங்க அதனாலேயே என்னவோ மத்த கிளாஸ் விட இவளோட கிளாஸ் ல பசங்க செம அன்டன்டிவ் ஆஹ் இருப்பாங்க

இப்படியே அன்று மலை நெருங்க அபியும் விட்டை அடைந்தாள் ஆனால் பாவம் அஜய்கு தான் அன்று இரவு முழுவதும் அபியின் நியாபகமாக இருந்தது அஜி ( அஜய்க்கு அவள் எப்போதும் அவனின் அஜி ) செம அழகு டி நீ ஏன் செல்லக்குட்டியே one ஹௌரா வெயிட் பண்ண வெச்சுட்டேன் சாரி டி என்று மனதில் ஆயிரம் முறை மன்னிப்பு வேண்டினான்



ஒரு வழியாக அந்த கல்லூரி ஆண்டு விழாவும் வர chief கெஸ்ட் ஆகா அஜய்யும் சென்றான்

ஆனால் ஏனோ தான் ஒரு கெஸ்ட் என்பதை மறந்து ஏதோ ஒரு முதலாம் ஆண்டு மாணவன் போல் கல்லூரிக்கு சென்றான்

அவன் பேச்சுக்கு பாராட்டுகள் குவிந்தது இளம் வட்டம் மத்தியில். வழக்கம் போல் மாணவிகள் சைட் அடிக்க ( ரேமன்ட் மாடல் போல இருந்தா ஏன் சைட் அடிக்க மாட்டாங்க )மாணவர்கள் கடுப்பாகி போனார்கள் அனாலும் அவன் கான்செப்டும் கருத்தை சொன்ன விதமும் அனைவரின் கவனத்திலிருந்து தப்பவில்லை



ஆயிரம் தொழில் அதிபர்களின் முன்னாடி பேசு பவனுக்கு இது எல்லாம் ஒரு விஷயமா

அவன் இவ்வாறு வருவதே சற்று தன் டென்ஷனை relief செய்து கொல்வதற்கு தான்

அஜய்யும் அவனுடைய அஜியை கவனிக்க தவறவில்லை அன்று பார்த்ததை விட இன்னும் அவள் அவன் கண்களுக்கு அழகாக தெரிந்தால் ஹல்ப்வைட் கலர் புடவை உடுத்தி முடியை பின்னி இன்னும் அழகாக இருந்தால் புடவையின் கலர் அவள் முகத்தில் பட்டு தெறிக்க முகத்தை இன்னும் பிரகாசமாக காட்டியது கோல்டன் கலர் பார்டர் அவள் கழுத்தை இன்னும் அலங்கரிக்க செய்தது மெலிசான தங்க சங்கிலி காதில் சறிய பெண்டேன் வெள்ளை கல் வைத்த தோடு வெள்ளை முத்து பதித்த வளையல் என்று அவன் ப்ரஹ்மச் சரியத்துக்கு சவால் விடுத்தாள்.



அவன் செல்லும் பொழுது அஜி தான் சென்ட் ஆப் செய்தாள் வழக்கம் போல் நன்றி மீண்டும் வருக மிஸ்டர் அஜய் என்று கூறும் பொழுது என் மனதினுள் வந்துவிட்டாயடா என்று கூறியது ஏனோ அவளையும் அறியாமல் மனம் அவன் பின்னே சென்றது.



சொல்லப்படாத காதல் முடிக்க படாத ஓவியம்

அதை பார்க்க மனவலி தான் மிஞ்சும் ரசிக்கவும் முடியாது வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியாது

என்பது அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை தெரியும் பொழுது சூழ்நிலை எப்படி மாறுமோ இல்லை எந்த நிலையில் அவர்கள் காதல் கை கூடுமோ.......


உயிரை தொலைத்தேன்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top