uyirai tholaithaen ud 23

Advertisement

preethi sri

Well-Known Member
மிகவும் நன்றி நண்பர்களே ஒரு புதிய எழுத்தாளரை ஊக்குவித்து கதையை நிறைவு செய்ய வைத்ததற்காக :love::love::love:
என்னுடைய தவறை சுட்டி காண்பித்ததற்கும் நன்றி :):)
அமைதியாக கதையை வாசித்து செல்லும் நல்ல உள்ளங்கள் இப்போதாவது ஒரு இரு வரிகள் கூறிவிட்டு செல்லுங்கள் ....(y)(y)(y)


இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களில் கதை நிறைவடைந்து விடும் .:):)




விக்ரம் பாட்டுக்கு தன் மனதில் இருந்ததை அஜயிடம் சொல்ல

அஜய் மனதில் டேய் யார் பொண்டாட்டிய யார்ரா கல்யாணம் பண்ணறது என் பொண்டாட்டிய என்கிட்டயே வந்து செம அழகுன்னு சொல்லிட்டு இருக்க மவனே மரியாதையா ஓடிடு இல்லன்னா வாய ஒடைச்சுடுவேன்
ரெண்டு வருஷம் நறக வேதனையை அனுபவவிச்சு இப்ப தான் அவளை பாத்தேன் அதுக்குள்ள வந்து என்ன கடுப்பேத்துறியே டா
நா முன்னாடியே அவள உன்கிட்ட அறிமுகப்படுத்தி இருக்கணும் என்மேல தாண்ட தப்பு நா என்ன கனவா டா கன்டேன் அவன் உன் சொந்த காரியா இருப்பான்னு நீ அவளை சைட் அடிப்பன்னுஎன்று மனதில் விக்ரம் ஐ திட்டி தீர்த்தான்
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிட்டு போற மாதிரி இதனை வருத்தம் படாத பாடு பாட்டு இப்பதான் அவ என்ன பாக்குற அது பொறுக்கலையா டா உனக்கு
ஹர்ஷ என்னடானா ஆபீஸ் ல அவளுக்கு ப்ரக்கெட் போடாதவங்களே இல்லன்ற நீ என்னடான்னா என் பொண்டாட்டிகிட்ட உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு கேக்க சொல்ற என்னடா நெனச்சுட்டு இருக்கீங்க


என் அஜி டா அவ மிச்செஸ் அஜய் என்று கூறிக்கொண்டான்

இது சரி வராது என்று

டேய் விக்ரம் உன்கிட்ட அஜி பத்தி சொல்லி இருக்கேன் இல்ல நீ பார்த்ததில்லை என்று கூற ஏன்டா இப்ப இதப்பத்தி சொல்ற என் லவ் ஆஹ் பத்தி பேசுடான்னா உன் லவ் அ பத்தி பேசிட்டு இருக்க

அஜய் பல்லை கடித்து கொண்டு
விக்ரம் அவ தான் அபிஜித்ரா என்னோட லவர் என்று கூற


விக்ரம்

ஐயையோ என்று வாய்விட்டு அலறினான்


அஜயின் கண்ணில் தெரிந்த ரௌத்திரத்தை பார்த்து அஜய் எனக்கு சத்தியமா தெரியாது டா அது நீ விரும்ப பொண்ணுன்னு நல்ல வேல இப்போ போய் கேட்டிருந்தா எவ்ளோ பெரிய தப்பியிருக்கும் நல்ல வேல என்ன மன்னிச்சுடுடா என்று கூற

விக்ரம் நீ அபியை காதலிக்குரிய என்று கேட்டுவிட்டான்

இல்லடா இட்ஸ் அ கைந்து ஆப் அட்ட்ரக்ஷன் தான் எனக்கு புடிச்சு இருந்தது அப்பறோம் அத்தை பொண்ணுங்கற உரிமை அவ்ளோ தான் அந்த பொண்ணு விலகி போகும் போது கூட எனக்கு தெரில டா
என்ன மன்னிச்சுடு உன்கிட்டயே வந்து என்று உண்மையான குற்ற உணர்வுடன் கேற்க


அஜய் அவன் தோல் தட்டி புன்னகைத்தான் அஜய் மனதில் அப்பா புருஞ்சுகிட்டான் என்று ஆசுவாசப்பட

விக்ரம் நல்ல வேல அவன் உன்ன அடிகளை டா என்று மனதில் நிம்மதி அடைந்தான்
அவனுக்கு தான் தெரியுமே கல்லூரி காலத்தில் கூட எந்த பெண்ணையும் பாக்காதவன் அதன் பிறகு கூட பெண்களை எட்ட நிறுத்தி பழகியவன் ஆனால் அவனே ஒரு பெண்ணை பார்த்து காதலித்து சம்மதம் வாங்கி அதை அவளிடம் குறி தனது காதலியாக இல்லாமல் மனைவியாக அல்லவா அவன் அறிமுகம் செய்து வைத்தான் அப்படி இருக்கும் பொழுது அவன் காதலை எண்ணி வியக்காமல் விக்ரமால் இருக்க முடியவில்லை


அவன் ஒரு ஜாலி பேர்வழி கலாரசிகன் அவனிடம் போய் ராமனா இரு என்றால் வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவன் என்று கூறுபவன்
அவனுக்கு அபியின் மீது ஈடுபாடிருந்தது ஆனால் சொல்லும் படியான காவிய காதல் இல்லை திரிஷா இல்லன்னா திவ்யா என்று கூறும் ரகம் அவன்


ஒரு வழியாக மண்டபத்தில் இருந்து அனைவரிடமும் கூறிவிட்டு விடை பெற அபி நீ எதுல போற என்று கேட்டான் விக்ரம்

ஆட்டோல

லொட்ஜ் ல தான் ரூம் போட்டு இருக்கேன் என்று கூற

அஜய் அவளை முறைத்து பார்த்து கொண்டிருந்தான்
இவளுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல லொட்ஜ் ல ரூம் போட்டு நைட் ஏதாவதுன்னா இவ என்ன பண்ணுவா என்னத்த படுச்சு கிலுச்சான்னு தெரியல பொண்ணுங்களுக்கு இன்னைக்கு சொந்த வீட்லயே சேப்டி இல்ல இந்த லட்சணத்துல லொட்ஜ் ல தங்கரன்னு நா இருக்கும் போதே சொல்றா என்ன தைரியம் என்று அவளை பார்க்க


அபியோ எதுக்கு என்ன மொறச்சுட்டு இருக்கான்

நாளைக்கு கல்யாணம் முடிச்சுட்டு போய்டுவேன்

உன்ன போக விட்டாதன என்று அஜய் மனதில் நினைத்து கொண்டான் அஜயும் கிளம்ப விக்ரம் அஜயிடம் டேய் நீ போற வழி தான அபியே இறக்கி விட்டுட்டு போ டா என்று கூற


ஐயையோ இவன் எப்படியும் முடியாதுன்னு தான் சொல்லுவான்னு
மனதில் நினைக்க அவசரமாக இல்ல விக்ரம் நானே போய்குவேன் என்று வாய்திறக்க அதற்குள் அஜய் அவளை நெருங்கி நின்று அவள் கையை இறுக பற்றி இருந்தான்


வந்து வண்டில ஏறு டி என்று ஒவ்ஒரு வார்த்தையையும் அழுத்தமாக கூற வெகு நாட்களுக்கு பிறகு தன்னவனின் ஸ்பரிசத்தில் வாய் முடி நின்றாள் இருவரும் சொல்லி கொண்டு விடைபெற விக்ரம் உதட்டில் உறைந்த புன்னைகையுடன் வழி அனுப்ப அஜய் அவனை குறும்பு கண்களுடன் பார்த்தான்

அபி இவர்கள் பார்வை பரிமாற்றத்தை வைத்து ஏதோ இங்க நடக்குது
பாவா விக்ரம் கிட்ட ஏதாவது சொல்லி இருப்பாரோ என்று மனதில் நினைக்கும் முன்னாடி கார் கதவை அஜய் திறந்து விட்டான்


இருவரும் எதுவும் பேசவில்லை


அஜய் நா உங்க கிட்ட பேசணும் ப்ளீஸ் நா சொல்றத கொஞ்சம் கேளுங்க என்று கூற வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியவன்

எதுக்கு எதுக்கு நீ சொல்றத நா கேக்கணும்ன்ற வண்டிய நிறுத்துனா மறுபடியும் ஏதாவது காரணம் கண்டு புடிச்சு விட்டுட்டு ஒட்டாவா இல்ல கற்பழிப்பு கேஸ் ஏதாவது பைல் பண்றதுக்கா

அப்டி தான சொல்லிட்டு போன எப்பிடி டி உன்னால இப்டி சொல்ல முடிஞ்சுது

நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க என்று கண் கலங்க


என்ன பாத்தா என்ன கேனையன் மாதிரி தெரியுதா உன் மனசுல என்ன நெனைக்கிறியோ அத தா செய்வ காதலிப்ப நீயா ஒரு காரணத்தை உருவாக்கிட்டு விட்டுட்டு போய்டுவ ஆனா நீ சொல்றத நா கேக்கணும்

இம்ம்..

நீ சொன்னதும் போதும் நா கேட்டதும் போதும் என்ன பாத்து என்ன சொன்ன யு நீட் அ லஸ்ட்ன்னு

ஆனா நா என்னால முடியலே நீ என்ன சொன்னாலும் உன்ன வெறுக்க முடியல டி

நா இப்பவும் உன்ன மனசார விரும்பறேன் டி நீ இல்லாத இந்த ரெண்டு வருஷம் நரகம் உன்ன திரும்பி பாக்கற வரைக்கும் என் உயிர் என்கிட்டே இல்ல டி

நா உன்ன மட்டும் தான் காதலிக்கறன்ரத ப்ரூவ் பண்ண எனக்கு தெரியும்

பண்ண வா டி சொல்லு என்று அவள் தாடையில் கைவைத்து அழுத்த அவள் கண்களில் தெரிந்த வலியில் அவன் கைகளை தளர்த்தினான்

அப்படியும் அவன் கோவம் மட்டு பட மறுக்க ஸ்டெரிங்கில் அழுந்த குத்தி தன்னை நிலை படுத்தினான் இரண்டு வருட கோவம் வலி வேதனை என அவளிடம் மொத்தமாய் காட்டிட அவள் அரண்டு தான் போனாள்

அவனின் இந்த கோவம் அபிக்கு மிகவும் புதிது இந்த தோற்றம் அவன் கோவத்தின் அளவை பறைசாற்ற தான் கூறிய வார்த்தை எந்த அளவுக்கு அவனை காயப்படுத்தி இருக்கிறது என்று தன்னை தானே நொந்து கொண்டாள்

என்னால முடியல டி நீ இல்லாம நா நானா இல்ல இந்த ரெண்டு வருஷம் உயிரோட இருந்தேன் ஆனா பினம்மா என்று அவன் கூற என்ன முயன்றும் அவன் கண்களின் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை
அதை கண்டு அவள் துடிக்க


ப்ளீஸ் ஜெய் வேணாம் என்று அவன் முகத்தை தன் கைகளில் ஏந்த

உண்மையா உன்ன காதலிச்சத தவற வேற என்ன டி நா பாவம் பண்ண ஒருத்தன் உண்மையா காதலிக்க கூடாதா டி இப்படித்தான் போட்டு படுத்துவியா என்னோட நிம்மதி சந்தோஷம் அத்தனையும் போச்சு டி

கண்களின் வழிந்த நீரை துடைக்க

எங்கிட்ட பேசாம இருந்த சரி எங்கம்மா உனக்கு என்னடி பண்ணாங்க நீ தான் என் மனைவின்னு சொன்ன உடனே உன்ன மருமகளா பாக்காம மகளா தான பாத்தாங்க அடலீஸ்ட் அவங்க கிட்டயாவது பேசி இருக்கலாம் இல்ல

கட்டிக்க போறவன் கிட்ட சொல்ல முடியாதளவு அப்படி என்னடி பிரச்சனை உனக்கு

விக்ரமுக்கு தெரிஞ்சு இருக்கு நீ எங்க இருக்கன்னு ஆனா உன்னைய உயிரா நெனச்சு உனக்காக மட்டும் இருக்க என் கிட்ட நீ சொல்லமாட்ட
நீ என்ன தப்பா சொன்னது கூட பொய் அது உன் மனசுல இருந்து வந்த வார்த்தை இல்ல நீ என்கிட்டே சண்டை போடறதுக்கு முன்னாடியே வேலைய ரிசைன் பண்ணிட்டு தான் வீட்டுக்கு வந்து இருக்க


அன்னைக்கு நா வருவேன்னு நீ எதிர் பார்க்கல அது தான் உண்மை
ஒருவேளை அன்னைக்கு நா வராம இருந்து இருந்தா நீ சொல்லாம கொள்ளாமபோய் இருப்ப


சோ நீ போகணும்னு ஏற்கனவே முடிவு பண்ணிட்ட
அந்த சண்டை போட்டது என்ன தப்பா பேசுனது எல்லாமே ட்ராமா என்று ஆழ்ந்து மூச்சை விட்டு தன்னை நிலை படுத்தி கொண்டான்


நீ போகணும்னு நெனச்ச சரி நா என்ன ஆவன்னு யோசிக்கல இல்ல
உன்ன தவற வேற ஒரு பொண்ண நா எப்பிடி மனசுல நினைப்பேன்
இத்தன நாள் நீ என்கூட இருந்தும் என்ன புருஞ்சுகள இல்ல


அன்னைக்கு நீ கேட்டியே நீங்க உண்மையா என்ன காதலிக்கறிங்களான்னு இப்ப நா கேக்கறேன் நீ உண்மையா என்ன காதலிச்சியா டி என்று முடிக்கும் முன்

அபியின் இதழ்கள் அஜயின் இதழை சிறைபிடித்திருந்தது

வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?



அவன் விலக நெனைக்க அதுமுடியாமல் அவளின் கரங்கள் அவனின் பின் தலையை அழுந்த பிடித்து தனக்குள் மேலும் புதைக்க மெல்லிய பெண்ணிடத்தில் இப்படி பட்ட வன்மையை அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை
அவனின் கரங்கள் அவளை தொடாமல் இருக்க இதயத்தில் எழுந்த வலியை மறைத்து அவளின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று பெண்ணுக்கு உண்டான அனைத்தையும் துறந்து அவனின் கரங்களை எடுத்து அவள் வெற்றிடையில் பதிக்க அவளின் ஸ்பரிசம் அவனுள் ராசாயன மாற்றத்தை தோற்று விக்க இத்தனை நேரம் இருந்த மனவலிமை தூள் தூளாக உடைந்தது இரண்டு வருட பிரிவை இந்த இதழ் ஒற்றலில் காட்டிஇருந்தனர் தங்களை மறந்து வேறு ஒரு உலகில் சஞ்சரித்தனர்



ஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பார்த்தும்மா, அபிஜித்ரா பார்த்து
அஜய் பையன் நொம்பவே
பாவம்மா

அவன் மேல இம்புட்டு லவ்வு
இருக்கிறவ ஏன் அவனை
அம்போன்னு வுட்டுப்போட்டு
போனே, அபி?
இந்த ப்ரீத்தி பொண்ணு
சொல்ல மாட்டாங்களாம்
நீனாச்சும் சீக்கிரமா வந்து
சொல்லு, அபி
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ இந்த அழகிய "உயிரைத்
தொலைத்தேன்"-ங்கிற நாவல்
முடியப் போகுதா?
நீங்கள் புதிய எழுத்தாளர்ங்கிறதே
தோணாத அளவுக்கு ரொம்பவும்
அழகாக ஒரு காதல் கதையைக்
கொடுத்திருக்கீங்க, ப்ரீத்தி டியர்

என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் இன்னும் இது போல
நிறைய நல்ல நல்ல கதைகளை
எழுதி பேரும் புகழும் பெற்று
சீரும் சிறப்புடன் வாழ்வாங்கு
வாழ்கவென மனமார
வாழ்த்துகிறேன், ப்ரீத்தி ஸ்ரீ டியர்
 
Last edited:

preethi sri

Well-Known Member
பார்த்தும்மா, அபிஜித்ரா பார்த்து
அஜய் பையன் நொம்பவே
பாவம்மா

அவன் மேல இம்புட்டு லவ்வு
இருக்கிறவ ஏன் அவனை
அம்போன்னு வுட்டுப்போட்டு
போனே, அபி?
இந்த ப்ரீத்தி பொண்ணு
சொல்ல மாட்டாங்களாம்
நீனாச்சும் சீக்கிரமா வந்து
சொல்லு, அபி
seekaram solliduvaen banu ma
 

preethi sri

Well-Known Member
அச்சோ இந்த அழகிய "உயிரைத்
தொலைத்தேன்"-ங்கிற நாவல்
முடியப் போகுதா?
நீங்கள் புதிய எழுத்தாளர்ங்கிறதே
தோணாத அளவுக்கு ரொம்பவும்
அழகாக ஒரு காதல் கதையைக்
கொடுத்திருக்கீங்க, ப்ரீத்தி டியர்

என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் இன்னும் இது போல
நிறைய நல்ல நல்ல கதைகளை
எழுதி பேரும் புகழும் பெற்று
சீரும் சிறப்புடன் வாழ்வாங்கு
வாழ்கவென மனமார
வாழ்த்துகிறேன், ப்ரீத்தி ஸ்ரீ டியர்
romba nanri banu ma:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top