UVVP Epilogue 01

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மூன்று மாதங்களுக்கு பிறகு.......

திருமணம் முடித்து ஷானுவுடன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் கணேஷ்.. தேன் நிலவிற்கு அனைவரும் குளிர் பிரதேசங்களை தேர்ந்தெடுக்க.. இவர்கள் இருவரும் புர்ஜ் கலிஃபா -விற்கே எங்கள் ஓட்டு என்று துபாய்க்கு பயணம்..

இரண்டு நாட்கள் ஆசை தீர அலைந்து அலுத்த ஷானு கேட்டாள் , "டன் ?.. நாளைக்கு நிச்சயம் தானே?"

"எஸ் பேபி" இரண்டு கட்டை விரலையும் தூக்கி..., அவனது கம்ப்யூட்டரில் ஒரு கண்ணை வைத்தவாறே...

மறுநாள்..

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வேறு தளம்......... இருவரும் ரூம் சர்வீஸ் செய்யும் ஆட்களாய் அடையாளம் தெரியாத அளவு உருமாறி இருந்தனர்.. அந்த ஹோட்டலின் அணைத்து கேமரா கண்களும் கணேஷ் வசம், ஏற்கனவே நடந்து முடிந்த, சாதாரண நடமாட்டங்கள் ரீ -ரன்னில் தொடர்ச்சியாய் ஓடிக் கொண்டிருந்தது.. ஒரு அறையின் முன் நின்று இரண்டு முறை தட்டி, உள் நுழைந்தான் கணேஷ்...

உள்ளே இருந்த ஷேக், "ஹேய் .. யாருயா நீ, நான் ஆர்டர் பண்ணவே இல்லை ?" [எனக்கு அரபி தெரியாது ஜீ.., சோ.. ஷேக்கு தமிழ் பேசறார்.. டாட்... ]

அரபு உடையில் இருந்த கணேஷ் பதிலேதும் சொல்லாமல், மூடியிருந்த பௌல்-லை மெல்ல திறந்து...அதில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து நொடிகளில் அதில் சைலன்சர் பொருத்தி, யோசியாமல் பேசுபவனை சுட்டான்...

அந்த அறையின் வெளியே, "do not disturb ", என்னும் அட்டையை மாட்டி உள் நுழைந்த ஷானு, [அவளுக்கும் மாறு வேஷம் தான் ], அவன் அலறல் கேட்காதிருக்க தொலைக்காட்சி சப்தத்தை அதிகரித்தாள் ..

ஷானுவிற்கு, திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் கணேஷ் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.. "விநாயக மூர்த்திக்கு ஜெயில், சந்திரகுமார் என்கவுண்டர், இதுதான் இந்த குற்றத்துக்கு சரியான தண்டனையா?, இன்னைக்கு இந்த CK ய புடிச்சுட்டோம்.. நாளைக்கு காசுக்கு ஆசைப்படற வேற ஒருத்தன், இவனை மாதிரி ரெடியாக மாட்டான்னு என்ன நிச்சயம்?"

"ஆனா. அதுக்கு நாம என்ன பண்ண முடியும்..?"

"டிமாண்ட் பன்றவனை தூக்கினா?, பிரெஷ் பீஸ் வேணும்னு கேக்கறவனையே தூக்கிட்டா?",

"கணேஷ், இது நம்ம வேலை இல்ல", என்றாள் சற்று பயமாய் ....

"ரைட்.. இன்னும் எழெட்டு மாசத்துல, மறுபடியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுது.. ரமணா டைப்-ல குழந்தை கடத்தல் டேட்டா கொடு, நானும் எனக்கென்ன-ன்னு பத்திரிகைல போட்டு, நம்ம பங்குக்கு நானும் கொஞ்சம் மக்களுக்கு BP ஏத்தலாம்.. சரிதானே ?", என்றான் கோபமாய்..

"அதுக்காக கொலை பண்ண முடியுமா?",

"அய்யய்ய ... இதையே தொழிலாவா செய்யப்போறோம்? இப்போ... C. K. , யாருகிட்ட அந்த குழந்தைகளை கைமாத்தி விடப் போறாங்கிற விஷயம் எனக்கு தெரியும் ... சோ எல்லாரையும் தீர்த்து கட்ட முடியலைனாலும் இவனை முடிச்சிடலாமே? ", சிறு முறுவலுடன் உரைத்தது கணேஷ்...ஷானு பிளாஷ் பாக்கில் இருந்து நிகழ்விடத்திற்கு வந்தாள் ..

"ஹூ தி ஹெல் ஆர் யூ ?", இறக்கும் தருவாயில் ஹீனமாய் கேட்ட ஷேக்-கிற்கு பதிலாய், கணேஷ் அலட்சிய தலை திருப்புதலை தர....

ஷானு பதிலுரைத்தாள் " மெரீனா தமிழன்டா ...."


தொ ட ரு ம் ..................
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழிகளுக்கு...:

"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் ".... இது என் முதல் புதினம்.. விளையாட்டா 6 - 7 அத்தியாயம் ... ப்ரெண்ட்ஸ் கூட பகிர்ந்தது..

அப்போ காவலன் செயலி யோட செயல்பாடு எதேச்சையா தெரியவர... இதோ இப்போ .. உங்க முன்னாடி .... நானும் ஒரு எழுத்தாளர்....

தொடர்ந்த உங்க ஆதரவுக்கு நன்றி... [ஆங் .. நாளைக்கு ரெண்டாவது எபிலாக்..... மறந்துடாதீங்க ]

என் இன்னொரு கதையான இரட்டுறமொழிதல்.. வர்ற வாரத்திலிருந்து கொடுக்க திட்டமிட்டு இருக்கேன்..

உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும் .. ஆசிகளையும் ... எதிர்நோக்கி....

லக்ஷ்மி கணபதி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top