UUU 3 - 10

Rudraprarthana

Well-Known Member
10618

உறவு - 10. 1

"ஜஸ்ட் வாட்ச் இட் பேப்" என்ற விஷ்வாவின் வார்த்தையை சாதாரணமாக எடுக்க முடியாமல் அவன் கைபேசியை பெற்று அதில் விழிகளை ஓட விட்டாள்.சரியாக பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் முழுக்க முழுக்க நிறைந்திருந்தது ப்ரீத்தி மட்டுமே..!!

ஆம் அவளே தான்..!!

அதுவும் நிறை மாதமாக நேற்று முன்தினம் விஷ்வாவை முதன்முறையாக இதே வீட்டில் சந்தித்த போது எடுக்க பட்டிருந்த காட்சிகள் தான்.

அவனும் அவளும் மட்டுமே பேசிக்கொண்டிருந்த போது எடுக்கபட்டிருந்தது அதுவே அவளுக்கு முதல் அதிர்ச்சி என்றால் அடுத்தடுத்து அவள் வாயிலாக வீடியோவில் சொல்லபட்டிருந்த செய்தி பேரதிச்சியே...!!

எதிர்பாரா அதிர்ச்சியில் மூச்சடைத்து போயிருந்தவளுக்கு அது எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ளவே பல நிமிடங்கள் எடுத்தது.

வீடியோவில் தெரிந்த காட்சியை விட அதில் அவள் பேசிய வார்த்தைகளை கேட்டவள் முகம் குப்பென வியர்த்துவிட விழிகள் தெறிக்க கைபேசியை பிடித்திருந்த கரம் நடுங்க, பிடிமானம் இன்றி நின்றிருந்தவளின் கால்கள் மெல்ல வலுவிழக்க தொடங்கியது. அதை எதிர்பார்த்த விஷ்வதேவ் உடனே அவளை தோளோடு சேர்த்து அணைத்திட,

இது..!!! இது ...!!! என்று இதழ்கள் தந்தியடிக்க அதை பற்கள் கொண்டு கட்டுபடுத்தி கொண்டு தலை திருப்பி அவனை பார்த்தவளுக்கு வார்த்தைகள் வராமல் சதி செய்ய அதேநேரம் அவளையும் அறியாமல் கண்களில் இருந்து கங்கை பெருக்கெடுத்து இருந்தது.

அதை கண்ட விஷ்வா, 'ஈஸி ஈஸி டார்லிங்..!!' என்றிட,

ப்ரீத்தியின் மனமோ ஆழி பேரலையில் சிக்கிய நிலையில் புரட்டி போடப்பட்டிருக்க மூச்சு காற்றிற்கும் தவித்து திணறி கொண்டிருந்தவளுக்கு காணொளியில் கூறபட்டிருந்த வார்த்தைகளை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதது.

கொண்டிருந்த அதீத அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போயிருந்தவளின் மூளை முழுதாக வேலை நிறுத்தம் செய்திருக்க தொப்பென நாற்காலியில் விழுந்தவள் பார்வை கைபேசியை விட்டு அகலவில்லை.

திணறலான மூச்சுக்களை எடுத்து விட்டவாறே, "இது நா...ன் நான் இல்லை" என்று சொல்வதற்குள் மீண்டும் திணறியவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு எச்சில் கூட்டி விழுங்கி வறண்டு போயிருந்த இதழ்களை நாவால் ஈரபடுத்திக்கொண்டே, "நா... நான், நான் தான் ஆனா நான் இப்படி பேசவே இல்லை, நான் இப்படி பண்ணலை ஆனா..." என்றவள் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கண்களை மூட அடுத்த கணமே கண்களில் இருந்து சூடான நீர் இறங்கியது.

ப்ரீத்தியின் அதிர்ச்சியை எதிர்பார்த்திருந்த விஷ்வதேவ் இதழோரம் துடித்த புன்னகையுடன் பின்னங்கழுத்தை வருடியவாறே, 'நோ மை ஸ்வீட்ஹார்ட்' என்றவாறே எழுந்தவன் அவளை நெருங்கி,

"என்ன ஸ்வீட்டி இது..?? சின்னபுள்ள மாதிரி கண்ணை கசக்கிற உன்னை எவ்ளோ பிரேவ் கேர்ள்ன்னு நெனச்சி இருந்தேன் என்று அவள் முகத்தை ஏந்தி நான் இருக்க வரை உன் கண்ணுல கண்ணீரே பார்க்க கூடாது" என்றவாறு தன் இதழ்களால் அவள் கண்ணீரை துடைத்தவன் இன்னுமே அவள் இயல்பிற்கு திரும்பாததை கண்டு அவளை நாற்காலியில் இருந்து எழுப்பி நிறுத்த ப்ரீத்திக்கு அதிர்ச்சியில் கால்கள் பூமியின் கீழ் நழுவும் உணர்வு, அதை கண்டவனின் புன்னகை மேலும் விரிய ப்ரீத்தியை தன் கைகளில் ஏந்தி கொண்டு அங்கிருந்த மெத்தையில் முதலில் தான் அமர்த்தவன் பின் அவளை தன் மீது அமர்த்தி கொண்டு அவளிடையில் கரங்களை படரவிட்டு அணைத்தவன் மெல்ல அவள் தோள் வளைவில் தாடையை பதித்து திகைப்பில் இருந்து மீளாத அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டான்.

அவன் எதிர்பார்த்ததற்கும் சற்று அதிகமாகவே ப்ரீத்தி அதிர்ந்திருப்பதை எதிர்பாராதவன் மெல்ல ஒரு கரத்தை இடையில் இருந்து எடுத்து அவள் முதுகை வருடி கொடுக்க தொடங்கினான், சில நிமிடங்களுக்கு பின் அவள் உடல் மொழியில் மாற்றம் உணர்ந்தவன் இப்போது மீண்டும் அவள் தோள் வளைவில் தாடையை பதித்து அவள் கரத்தில் இருந்த கைபேசியை பார்த்தான்.

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தவளுக்கு விஷ்வா இதழ்கள் கொண்டு தன் கண்ணீரை துடைத்ததோ, அவளை தூக்கி சென்றதோ, அவன் மீது அமர்த்தியதோ, வருடியதோ, பேசியதோ எதுவுமே அவள் சிந்தையை சென்றடையவில்லை மனமெங்கும் ஒரே புள்ளியில் குவிந்து போயிருக்க எங்கிருந்து அவளும் உணர..??

"மைக்ரோகேம்ல (கண்களில் அணியக்கூடிய கண்ணாடியில் பொருத்தபட்டிருக்கும் சிறிய ரக கேமரா ) எடுத்தது க்ளாரிட்டி எப்படி இருக்குமோன்னு சந்தேகமாவே இருந்தது டார்லிங் ஆனா பாரு ப்ரொபெஷனல் கேமரா இது பக்கத்துல கூட வர முடியாது போல அந்த அளவுக்கு உன்னோட சின்ன சின்ன எக்ஸ்ப்ரெஷன் கூட எவ்ளோ டீடைலிங்கா இருக்கு பாரேன்" என்றான்.

பல நிமிடங்களுக்கு பின் அதிர்ச்சியில் இருந்து மீண்டவளுக்கு அப்போதுதான் அது அவள் பேசிய வார்த்தைகள் அல்ல என்பதை புத்தி எடுத்துரைக்க கண்களை அழுந்த துடைத்தவள் மறுநொடியே 'வாட் தி ஹெல் இஸ் திஸ்..??' என்று கர்ஜனையுடன் கைபேசியை தூக்கி அடிக்க அதுவோ எதிரே இருந்த சுவரில் பட்டு சுக்கு நூறாக உடைந்து போனது.

நொடிக்கும் குறைவாக கண்களை சுருக்கிய விஷ்வதேவிடம் அதே மாறாத புன்னகை, இன்னுமே அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன், "எது டார்லிங்" என்று அவள் செவி உரசி கேட்கவும் தான் அவன் மூச்சு காற்றின் வெப்பமும் அணைப்பும் அவள் இருக்கும் நிலையை ப்ரீத்திக்கு உணர்த்தியது.

மின்னலென அவன் கரங்களை விலக்கி அவன் பிடியில் இருந்து விலகி நின்றவள் மறுநொடியே 'யூ ப்ளடி பாஸ்****ட்' என்றவாறு அவன் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கி நிறுத்தியவள் அவனை அறைய முற்ப்பட அதற்குள் அவள் வலக்கரத்தை தடுத்து அதை லாவகமாக அவள் முதுகுக்கு பின்னே வளைத்தவன் மறுகரத்தால் அவளை இடையோடு அணைத்து அவள் கன்னத்தில் தன் அதரங்களை அழுத்தமாக பொருத்தியவன் மெல்ல அதை நகர்த்தி அவள் செவியோரம் கிறங்கும் குரலில்,

"ஏன் டார்லிங் புடவையை மாத்திட்ட இப்போ பார் எனக்கு வசதியாவே இல்லை" என்று அவளிடையில் கோலமிட்டு கொண்டே காலை முகூர்த்தத்திற்காக கட்டி இருந்த சேலையை மாற்றி இப்போது சுடிதாரில் இருப்பதை சுட்டி காட்டி கேட்டவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து,

'சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க, ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா... ' என்று பாட தொடங்கியவன் பாடலை நிறுத்தி மீண்டும் அவள் செவியோரம் அதரங்களை பொருத்தி ஜன்னல் வேண்டாம் டார்லிங் நாம பெரிய வாசல் வச்சி தைக்கலாம் அதுதான் வசதி என்றிட

அதுநேரம் வரை 'விடுடா என்னை' என்று திமிறி கொண்டிருந்தவள் அவன் பாடலில் மேலும் சீற்றம் கொண்டாள்.

ஆனால் அவளது ஒவ்வொரு திமிரளுக்கும் அவன் இதழ்களின் ஊர்வலமும் அணைப்பும் இறுகி கொண்டே போக புதிதாக பிரசவித்து இருந்தவளுக்கு இடையை சுற்றி இருந்த அவன் கரத்தின் பாரம் தாங்க முடியாத வலியை கொடுக்க இப்போது விடுபடும் முயற்சியை கைவிட்டவள் , 'எதுக்காக இப்படி பண்ற..??' என்று ஆவேசத்தோடு வார்த்தைகளை துப்பினாள்.

'ஏன் பேபி பிடிக்கலையா' என்று குரல் கரகரக்க கேட்டவனின் கரத்தில் இப்போது அவள் ஷால் சிக்கி இருப்பதை கண்டவள்

'நான் என்ன கேட்கிறேன் நீ என்ன..??' என்று பற்களை கடித்து திரும்பி அவனை பார்த்தவள் 'முதல்ல என்னை விடுடா' என்று சீற,

'அப்போ பிடிச்சிருக்கா..??' என்றவனின் இதழ்கள் இப்போது அவள் பின்னங்கழுத்தில் அழுத்தமாக பதிய,

ப்ரீத்தியின் முகம் கோபத்தில் செவ்வானமாக சிவக்க தொடங்கியது,

'காட்டட்ட்ட் ஸ்டாப் இட்..!!! என்று அவன் அருகாமையை வெறுத்து இதழ்கள் துடிக்க வெடித்தவள் கண்களை இறுக மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவாறே அவன் புறம் திரும்பி அமைதியான குரலில் 'ப்ளீஸ் லீவ் மீ' என்றாள் இறுதி முயற்சியாக.

இப்போது ஒற்றை புருவம் ஏற்றி அவள் முகம் பார்த்து 'அதுக்குள்ளே சரண்டர் ஆகிட்ட' என்றவன் "உன்கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன் ஸ்வீட்டி டோன்ட் டிஸ்சபாயின்ட் மீ" என்று மீண்டும் அவளை இறுக அணைத்திட,

"டோன்ட் டெஸ்ட் மை பேஷேன்ஸ் தேவ்...!! ஐ சே லீவ் மீ...!!!"

இன்று அவளை வதைத்தது வரை போதும் என்ற முடிவிற்கு வந்தவன் 'லீவ் மீ' என்ற அவள் இதழ்களில் இறுதியாக முத்தம் வைத்து அவளை விடுவித்தவன்,

"வாவ் ஸ்வீட்டி வாட் அ சர்ப்ரைஸ்..!! உன்னை மாதிரியே உன்னோட வாய்ஸ்சும் செம சாப்ட்" என்று கண் சிமிட்டியவன், "நீ ஏன் இப்படியே பேசி பழக கூடாது" என்றிட,

அதுநேரம் வரை அவன் பிடியில் சிக்கி இருந்த வலகரத்தின் மணிக்கட்டு கன்றி போயிருக்க இடக்கரத்தால் அதை நீவி விட்டவள், 'எதுக்காக இப்படி பண்றே..??' என்றிட,

"ஏன் பேபி இந்த ஸ்டைல் உனக்கு பிடிக்கலையா..?? ஐ தாட் யு என்ஜாயிட் இட்" என்று புருவம் நெறிபட அவளை பார்த்தவன்,

"ஷால் ஐ ட்ரை சம்திங் டிபெரென்ட்.." என்றவாறே அவளை நெருங்க

'ப்ளீஸ் ஸ்டாப் இட் தேவ் என்னோட பொறுமையோட விளையாடாத' என்று தலையை இரு கரங்களாலும் பிடித்து கொண்டவள்,

"நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்...?? ஏன் என்னை உயிரோட சித்ரவதை பண்றே..?? இப்படி ஒரு காரியம் பண்ண உனக்கே அசிங்கமா இல்லையா..??" என்றவள் அங்கு நொறுங்கி கிடந்த கைபேசியை சுட்டி காட்டி 'என்ன கன்றாவிடா இது..???' என்று கேட்க

"ச்ச்சி போ டார்லிங்..!! அதை எப்படி நானே என் வாயால சொல்றது, நீ பண்ணின காரியத்தை நெனச்சா எனக்கு வெட்கம் வெட்கமா வருது" என்று தலை சாய்த்து சுண்டு விரல் நகத்தை கடித்து கொண்டு வெட்கபட்டவனை கொன்று கூறு போடும் வெறியே கிளம்பியது ப்ரீத்திக்கு.

"டோன்ட் ப்ளே வித் மை எமோஷன் தேவ்" என்றவளுக்கு அதில் இருந்த குரல் தன்னுடையதாக இருந்தாலும் அது வேறு ஒருவரை வைத்து டப் செய்யப்பட்டது என்று புரிந்திருந்தாலும் இன்னுமே அதை ஜீரணிக்க முடியாமல் ,அதுநேரம் வரை எவ்வாறு இது சாத்தியம் என்று குழம்பி நின்றவளுக்கு அப்போது தான் அவன் திட்டம் போட்டு செய்திருப்பது புரிய இப்போது கண்களில் நிறைந்திருந்த நீரை துடைத்தவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து, "யு சாடிஸ்ட்.., என்னடா இது..?? எதுக்காக இப்படி பண்ணின..??"

'பிகாஸ் ஐ லவ் யு பேப்.. ஐ டோன்ட் வான்ட் டு லூஸ் யு அட் எனி காஸ்ட், எனக்கு நீ வேணும் நீயின்றி அமையாது என் உலகு ஸ்வீட்ஹார்ட்' என்று இரு கரங்களையும் விரித்து உருக்கமாக காதல் வசனம் பேச,

'லவ்..!! லவ்..!! லவ்..!! ப்ளடி **** என்று மேலும் சில வார்த்தைகள் கொண்டு அர்ச்சித்தவள் ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் எது எதுடா உன் லவ்..??' என்று அவனை பார்த்தவளுக்கு வீடியோவில் கேட்ட வார்த்தைகளில் ஆற்றாமை பொங்கியது இதழ்கள் துடிக்க 'யு சீப்' என்று அவனை பார்த்தவள்,

"தேர்ட் ரெட்டேட் பொறுக்கியான உன்னை போய் மாப்பிள்ளை, ****, மண்ணாங்கட்டின்னு சொல்லிட்டு இருக்கவங்களுக்கு இப்போவே போய் நீ யாருன்னு புரியவைக்கறேன்டா" என்று ஆவேசமாக அங்கிருந்து நகர,

அதை கண்டவனின் முகத்தில் இப்போதும் மாறாத புன்னகை..!! கரங்களை கோர்த்து நெட்டி முறித்தவன் நிதானமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சில பொருட்களை எடுத்து மேஜையில் வைத்தவன் அவள் கதவில் கை வைக்க போகும் நேரம் 'ஒன் செக் பேப்' என்று சொடக்கிட்டு அழைத்தான்.
 
Last edited:

Rudraprarthana

Well-Known Member
உறவு - 10.2

'ஒன் செக் பேப்..!!' என்ற அவன் குரலில் கோபத்தோடு திரும்பியவள் முன் கையில் இருந்த கைபேசியை விஷ்வா உயர்த்தி பிடிக்க அதில் முன்னர் அவள் கண்ட வீடியோவை மீண்டும் ஓட விட்டிருந்தவன் கண்களால் அவளை கீழே பார்க்குமாறு சைகை செய்தான்.

அவளும் பார்வையை தழைக்க அங்கு நாற்காலி எதிரே இருந்த சின்ன மேஜையில் மேலும் நான்கு கைபேசிகள் வீற்றிருக்க அனைத்திலும் அவள் குறித்த வீடியோ ஒளிபரப்பபட்டிருந்தது. அதை கண்டவள் மனம் ஏதோ தவறாக நிகழ போவதை உணர்ந்து வேகமாக அடித்து கொள்ள அவள் கால்கள் அன்னிச்சையாக விஷ்வாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் முன்னே வந்து நின்றது.

"என்ன ஹனி நாம தான் போனை உடைச்சிடோமே அப்புறம் எப்படி இத்தனைன்னு பார்க்கிறியா...??" என்று அட்டகாசமாக சிரித்தவன், உன்னை பத்தி தெரிஞ்சும் என்னோட போனை கொடுக்க நான் என்ன முட்டாளா..?? அது உன் கையில கொடுக்குறதுக்காகவே வாங்கின ஓர் பழைய.... என்று ஆரம்பித்தவன்,

"ஓஒ பேபி இப்போ இதுவா முக்கியம் நாம நம்ம மேட்டருக்கு வருவோம்" என்று மேட்டரில் அழுத்தம் கொடுத்து கூறியவன் மீண்டும் கைபேசியை உயர்த்தி பிடித்து,

"பிக்சர் க்ளாரிட்டி மட்டும் இல்ல இங்க பாரு டார்லிங் உன்னோட லிப் மூவ்மென்ட்டும் வாய்சும் என்ன கச்சிதமா சின்க் ஆகுது இது நானே எதிர்பார்க்காதது" என்றவனின் குரலில் ஏகத்திற்கும் நக்கல் வழிந்தோடியது அதை கண்டு பல்லை கடித்து கொண்டு ப்ரீத்தி நிற்க,

'இருக்காதா பின்னே..!! எத்தனை மாசம் ட்ரைனிங் எடுத்து ஒவ்வொரு சின்ன சின்ன வோக்கல் நோட் கூட விடாம அவங்களை ப்ராக்டிஸ் பண்ண வச்சது எதுவும் வீண் போகலை, ஒருவேளை உனக்கு சாட்டிஸ்பாக்ஷன் இல்லைன்னா சொல்லு செல்லம் கொடுத்த பேமெண்ட்டை ரிடர்ன் பண்ண சொல்லறேன்' என்றிட,

ப்ரீத்தியோ மார்பின் குறுக்கே கரங்களை கோர்த்து கொண்டு அவனையே வெறித்து பார்த்தவள் சில கணங்களுக்கு பின் வெகு நிதானமான குரலில்,

"ஆர் யு சிக், நீ என்ன சைக்கோவா..?? அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கியா...??" என்றவளின் ரத்தம் கானொளியில் அவன் செய்து வைத்திருந்த கேவலமான செயலை எண்ணி கொதித்து கொண்டிருந்தது.

ஆம் கேவலமான சித்தரிப்பு தான்..!!

நாதனின் வீட்டில் அவனை முதல் முறை சந்தித்த போது ப்ரீத்தி அவனிடம் கோபம், அழுகை, வெறுப்பு, ஏமாற்றம், ஆற்றாமை என்று பல உணர்வுகளோடு பேசிய பேச்சுக்களை தான் அணிந்து வந்த குளிர்கண்ணாடியில் பொருத்தபட்டிருந்த கேமரா மூலம் வீடியோ எடுத்திருந்தான் விஷ்வா. ஆனால் அதில் அவள் பேசிய பேச்சுக்களை முழுதாக நீக்கி எங்கு வெட்டவேண்டுமோ அங்கு வெட்டி எங்கு ஓட்ட வேண்டுமோ அங்கு ஒட்டி என்று அவள் உணர்வுகளை ஒன்று சேர்த்து இருந்தவன் பின் அதை அவன் வசதிக்கு ஏற்ப திரைக்கதை அமைத்து வாய்ஸ் ஆர்டிஸ்ட் மூலம் ப்ரீத்தியின் குரலில் பேச வைத்திருந்தான்.

கானொளியில் இருந்தது இது தான்..!!

பல வருடங்கள் கழித்து அன்று தாய்நாடு திரும்பிய விஷ்வாவிடம் ப்ரீத்தி சென்று சென்னையில் இருக்கும் அவன் அத்தை பார்வதியின் வீட்டிற்கு விஷ்வா அடிக்கடி வந்து சென்ற போது அவன் அழகிலும் ஆளுமையிலும் மயங்கி அவன் மீது ப்ரீத்தி காதல் கொண்டு விட்டதாகவும் பல நாட்கள் இருவருக்குமான பேதத்தை மனதில் கொண்டு அவனை மறக்க முயற்சித்தவளுக்கு முடியாது போக இறுதியாக அவளை ஏற்று கொள்ளும்படி பல முறை விஷ்வாவிடம் கெஞ்சியதாகவும் ஆனால் படிப்பிலும், ஆராச்சியிலும், மக்கள் சேவையில் மட்டுமே மூழ்கி இருக்கும் விஷ்வா தனக்கு அவள் மீது எந்த விருப்பமும் இல்லை தன்னால் அவளை ஏற்று கொள்ள முடியாது என்று மறுத்ததாகவும்...,

அவன் மீது வெறித்தனமான காதல் கொண்டிருப்பவளால் அவன் மறுப்பை தாங்க முடியாமல் போக எப்படியேனும் அவனை அடைய வேண்டும், தன்னுடனே தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற வெறியோடு அன்று நாடு திரும்பி பார்வதியின்அறையில் இருந்த விஷ்வாவிற்கு ப்ரீத்தி வேலையாள் மூலம் மயக்கமருந்து கலந்த பானத்தை கொடுக்க செய்து விஷ்வாவை மயக்கமுற செய்து அவன் மயங்கிய பின் அவனிடம் இருந்து விந்தணுக்களை அவளே சேகரித்து அவனுக்கே தெரியாமல் செயற்கை முறையில் குழந்தை கருத்தரித்து இப்போது நிறைமாதமாக இருக்கும் நிலையில் விஷ்வா அவளை ஏமாற்றி கெடுத்து கைவிட்டு விட்டதாகவும் அவள் குழந்தைக்கு விஷ்வா தான் தந்தை என்றும் அவனை அவள் திருமணம் புரியவில்லை என்றால் அவனை கோர்டிற்கு இழுத்து அவன் பெயர், புகழ், அந்தஸ்த்து அனைத்தையும் மண்ணோடு மண்ணாக புதைத்து விடுவதாகவும் ஒன்றும் அறியாத புகழ்பெற்ற மருத்துவனான விஷ்வாவை அவள் மிரட்டுவது போல ஒரு கதையை உரிய ஏற்ற இறக்கங்களுடன் ப்ரீத்தியே கூறுவது போல திரைக்கதை அமைத்து அதை டப்பிங் ஆர்டிஸ்ட்டை வைத்து அச்சு அசலாக ப்ரீத்தியின் குரலில் பேச வைத்து விஷ்வா பக்கவான வீடியோ தயாரித்து இருந்தான்.

இத்தனை கேவலமாக அவளை சித்தரித்து இருப்பதை கண்டவளுக்கு முதலில் கண்ணீர் பெருக்கெடுத்து பின் ஆத்திரமாக உருமாறி இருந்தது.இறுதியில் அவனை கொல்லும் வெறியே பிறந்ததில் ஆச்சர்யம் இல்லையே..!!

இப்போதும் அவள் கேட்கும் கேள்விகள் எதையும் காதில் வாங்காமல் அவள் உதட்டசைவிலேயே பார்வையை பதித்து இருந்தவனை கண்டவளின் உஷ்ணம் இன்னும் அதிகமாக, "ஏன், ஏன்டா இப்படி பண்ற...?? நா உனக்கு என்ன பாவம் பண்ணேன் உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா..??? எனக்குத்தான் உன்னை யாருன்னே தெரியாதா நான் போய் உன்னை என்று கண்களை இறுக மூடி திறந்தவளுக்கு மனம் கூசி போக, யு பெர்வெர்ட் ஏன்டா இப்படி பண்ண..???"

"லவ் !! உன்மேல இருக்க லவ் டார்லிங்..., everything is fair in love and war இல்லையா, ஒருவேளை என்னோட காதலை புரிஞ்சிக்காம இப்போ மாதிரியே நீ என் கூட வாழமாட்டேன்னு முரண்டு பிடிச்சா நான் என்ன பண்ண என்று அச்சத்துடன் கேட்டவன் நீ இல்லாத வாழ்க்கையை என்னால நெனச்சி கூட பார்க்க முடியாது செல்லம் எனக்கு நீ வேணும் அதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்"

"டேய் லவ்ங்கிற பேருல நீ என்னை அசிங்கபடுத்திட்டு இருக்க" என்ற போதே அவள் குரல் உடைய தொடங்க முயன்று தன்னை நிலை படுத்தியவள், இது பொய்ன்னு ப்ரூவ் பண்ண முடியாதுன்னு நினைக்கிறியா...??" என்று கேட்க

"ஷுர் ஷுர்" என்று இரு கரங்களையும் தட்டிவிட்டு கொண்டே எழுந்து நின்றவன் அவளை நெருங்கி,

"கண்டிப்பா முடியும் பேபி... இன்பாக்ட் என் பொண்டாட்டிக்கு இப்படி ஒரு கெட்ட பெயர் வரும்ன்னா அதை எல்ல்லாம் பார்த்துட்டு நான் சும்மா கைகட்டிட்டு இருப்பேன்னு நெனச்சியா ஸ்வீடி" என்று கேள்வியை கேட்டு தலையை இருபுறமும் இல்லை என்பதாக பதிலையும் அவனே கொடுத்தவன், கண்டிப்பா என்னோட டார்லிங்க்கு அப்படி ஒரு நிலைமை வர விடமாட்டேன் ஆனா என்ன ஒன்னு நீ கதவுல கை வைக்கிற நொடி இந்த விடியோவை பேஸ்புக், யூடியுப், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், எல்லாத்துலையும் அப்லோட் பண்ணின கையோடு உன்னை கூட்டிட்டு சைபர் க்ரைம் ஆபிஸ்க்கு போவேன் என்று கழுத்தை இரு விரல்களால் பற்றிக்கொண்டு, ட்ரஸ்ட் மீ ஸ்வீட்ஹார்ட்" என்றான்.

'என்ன ஒன்னு நாம இங்க இருந்து போக எப்படியும் குறைஞ்சது மூன்றில் இருந்து நாலு மணி நேரம் ஆகிடும் இல்லையா..??? இதுல என்ன பிரச்சனைன்னா இப்போ இதை நான் சோஷியல் மீடியால போட்டு ஹஷ்டேக் சேவ் மென்னு போட்ட அடுத்த சில நிமிஷதுலையே விஷயம் தீயா பரவி எனக்கு ஆதரவா எல்லாரும் களம் இறங்கிடுவாங்க' என்று கூற ப்ரீத்தியின் முகத்தில் செம்மை கூடியது.

"பின்ன என்ன டார்லிங் இப்படி ஒரு அப்பாவி கன்னி பையனை நீ மயக்க மருந்து கொடுத்து செடியூஸ் பண்ணி எனக்கே தெரியாஆஆஆஆஅம..." என்று தெரியாம என்பதை இழுத்து நிறுத்தி ஒற்றை கண் சிமிட்டி அவளை பார்க்க ப்ரீத்திக்கு நெருப்பில் குளித்த நிலை தான்..!!

அதான் செல்லம் இப்படி ஒரு அப்பாவியை ஏமாத்தி, மிரட்டி, குழந்தையை பெத்துக்கிட்டு கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட நீதான் 'ஹாட் ஆப் தி டவுனா இருப்ப',

"என் மேல இருக்க வெறித்தனமான காதலுக்காக இப்படி ஒரு புதுமையை பண்ணின உன்னை தேடி அதுக்குள்ள மீடியா கூட்டம் அலைமோதும், நேஷனல்ல இருந்து இன்டர்நேஷனல் வரை எல்லா சேனலோட விவாத பொருளே நீதான்..!! ஆனா நீ இதை எல்லாம் பொய்ன்னு ப்ரூவ் பண்ண குறைஞ்சது ரெண்டு நாள் ஆகும் அதுக்குள்ளே..." என்று உதட்டை பிதுக்கி அவன் கரங்களை விரித்தவன்,

"அது மட்டுமா பேபி உன்னால ஏமாற்றபட்ட அப்பாவி ஜீவனான நான் யார்..??, என்ன பண்றேன்னு தொடங்கி எப்படியும் ஒரு வாரத்துக்கு எனக்கும் என் ஹாஸ்பிட்டலுக்கும் ப்ரீ பப்ளிசிட்டி கிடைக்கும் அதை எப்படி விட முடியும் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று சீட்டி அடித்தவன், பின் அவள் முகம் நோக்கி குனிந்து வேணும்ன்னா நாம முதல்ல ஒரு ஆன்லைன் கம்ப்ளெயின்ட் பைல் பண்ணிடலாமா ஸ்வீட்டி பட் அதுக்கு முன்ன பிரஸ்ட் வீடியோவை அப்லோட் பண்ணிடுறேன் இ...." என்றவன் முன் தன் கரத்தை நீட்டியவள்,

"போதும்" என்று அழுத்தமாக கூறி, "என் வாய்ஸ் எப்படி ரெண்டு நாள்ல ப்ராக்டிஸ் பண்ண முடியும், இதுல உனக்கு ஹெல்ப் பண்ணது யா...." என்று முடிக்கும் முன்னமே

"ச்சை புத்திசாலி பொண்டாட்டி கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்க முடியாது போல" என்று சலித்து கொண்டவன், யாரோன்னு கெஸ் பண்ண உனக்கு யார்ன்னு... என்று அவன் முடிக்கும் முன்னமே,

'துரோகி' என்றாள் விழிகள் சிவக்க

"அப்படி எல்லாம் சொல்ல கூடாது செல்லம், முதல்ல எனக்கு தங்கச்சி அப்புறம் தான் உனக்கு பிரெண்ட்" என்று கர்வத்தோடு கூறியவன் ஆமா இப்போ நீ என்னை ஒரு கேள்வி கேட்டிருக்கனுமே, இன்பாக்ட் அதை நான் எதிர்பார்த்தேன் என்று அவன் கேட்க,

இதழ் வளைய அவனை பார்த்தவள், "எதையும் உன்னோட ஐடில இருந்து அப்லோட் பண்ண மாட்ட எல்லாமே போலி அக்கவுண்ட் தான், யாராவது கேட்டாலும் என் மனைவியை அசிங்கபடுத்த முயற்சி பண்றவங்களை சும்மா விடமாட்டேன் தண்டிச்சே தீருவேன்னு வீராவேசமா இன்னும் நாலு நாளைக்கு ஒரு மீடியா விடாம கூப்பிட்டு வச்சி பேசி உன் ஹாஸ்பிட்டலுக்கு ப்ரீ பப்ளிசிட்டி பண்ணுவ ரைட்" என்று எள்ளலுடன் அவனை பார்க்க,

அதை கேட்டவனிடம் அட்டகாசமான புன்னகை, இருகரங்களையும் தட்டி ஆர்பரித்தவன் "வாவ் டார்லிங்..!! செம டியூனிங்ல இருக்க, இது இது தான் உன்கிட்ட புடிச்சது, என் பொண்டாட்டி எவ்ளோ ஷார்ப் என்று அவளை செல்லம் கொஞ்சியவன், இப்போ புரியுமே உனக்கு என் காதலோட அளவு" என்று கேட்க,

இரு கண்களையும் இறுக மூடி மனதை ஒருமுகபடுத்தியவள் பல நிமிடங்களுக்கு பின் விழிகளை திறந்து எந்த பக்கம் சென்றாலும் அவளுக்கு முன் சென்று நிர்ப்பவனிடம் வேறு வழி இன்றி அவன் வழிக்கு செல்வதே உசிதம் என்ற முடிவுக்கு வந்தவள்,

'சொல்லு இப்போ நான் என்ன செய்யணும்' என்று கேட்க,

"இப்போதானே என் பொண்டாட்டி ஷார்ப்ன்னு சொன்னேன், ஏன் ஸ்வீட்டி நான் என்ன சொல்வேன்னு உனக்கே தெரியாதா..??" என்று அவள் கன்னத்தை பிடிக்க முற்ப்பட அவன் கரத்தை தட்டி விட்டவள்,

'இன்னும் இருபது நிமிஷத்துல ரெடியா இருப்பேன், கிளம்பலாம்' என்று கூறியவள் அதே வேகத்தோடு கதவை திறந்து வெளியே சென்று அங்கு காத்திருந்தவர்களிடம் அவள் விஷ்வதேவுடன் கிளம்பபோவதாக கூறி அடக்கப்பட்ட ஆவேசத்தோடு தன் அறையினுள் நுழைந்தாள்.

ஹாய் ஹனீஸ்....

இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். உங்கள் கருத்தை அறிய ஆவலோடு நான்...

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
Vishwa...... அடேய் நானே கொஞ்சம் கதி கலங்கிட்டேன்.....
யப்பா..... யமனுக்கு யமன் உலகத்துல உண்டு.....
சரண்ன பண்ண டார்ச்சர் க்கு இது தேவை தான்.....
இருந்தாலும் பாவம் ப்ரீத்தி பாவம் தான்....
Vishwa bhaai கொஞ்சம் பார்த்து பதமா பதற வைங்க.....
 
n.palaniappan

தடுக்குல புகுந்தா கோலத்துல புகுற மாதிரி
360degree move
 
Rudraprarthana

Well-Known Member
Vishwa...... அடேய் நானே கொஞ்சம் கதி கலங்கிட்டேன்.....
யப்பா..... யமனுக்கு யமன் உலகத்துல உண்டு.....
சரண்ன பண்ண டார்ச்சர் க்கு இது தேவை தான்.....
இருந்தாலும் பாவம் ப்ரீத்தி பாவம் தான்....
Vishwa bhaai கொஞ்சம் பார்த்து பதமா பதற வைங்க.....
கண்டிப்பா உண்டு பேபி.... சொல்றேன் சொல்றேன் நன்றிகள் :love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement