Unnil Naan Thozhiyea....!!!-6-1

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 6-வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
nRjNTLtt4IA.jpg



மும்பை ஏர்போட்டில் இருந்து ஆறடி உயரத்தில் மிகவும் கம்பிரமாக பார்க்கும் அனைவரையும் ஈர்க்கும் அளவு அழகாக வந்து கொண்டு இருந்தான் ஜீவா.அவனை ரிசிவ் செய்ய ராக்கி வந்திருந்தான்.ராக்கி,ஹாய் ஜீவா என்ன தீடிரென்று மும்பை வந்திருக்க என கூற, ஏன் ராக்கி நான் உன்க்கிட்ட சொல்லிட்டுதான் வரனும்னு எதாவது இருக்க..?? என்று கேட்டுக்கொண்டுமுன்னே நடந்தான் ஜீவா.

ராக்கி,ஏன்டா இங்க வந்த.... எல்லாரும் இவனைத்தான் தலையில் தூக்கி வைச்சி கொண்டாடுவாங்க,என்னோட முதல் எதிரி நீதான் 2வது அந்த கார்த்திக் என நினைத்துக்கொண்டு மெதுவாக செல்ல..ஜீவா,ராக்கி சீக்கிரம் வா என கூற,இதோ வந்துவிட்டேன் என்று காரில் அமர வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஜீவா,ரொம்ப ஜாலியானவன் ஆனால் அது சில வருடங்களுக்குமுன் இப்பபோ இல்ல.ராக்கியின் பெரியப்பா பையன் தான் ஜீவா.அவன் அம்மா ஜாணவி இறந்த பிறகு அவன் யாரிடமும் பேசபிடிக்காமல் யு.எஸ்.ஏ சென்று விட்டான் தனது எம்.பி.ஏ. படிப்பிற்க்காக.இப்பொழுது இங்கு வந்தற்க்குகாரணம்.அவன் அப்பா அம்மா இறந்ததில் அவனுக்கு ஏற்ப்பட்ட சந்தேகமே.....

கார், ஜீவாவின் வீட்டின் முன் வரவும்,காரில் இருந்து இறங்கிய ஜீவாவை பார்த்து கிரண்,வாடா தங்கம் வா எப்படி இருக்க உன்ன பார்த்து எவ்வளவு நாளாச்சி.உங்க அம்மா போனதுக்கு அப்பறம் எங்களுக்கு எல்லாமே நீதான்ப்பா.இப்படி எங்கள விட்டுடு ரொம்ப தூரத்துல போய் இருக்க.இனிமே நான் உன்ன எங்கயும் விடமாட்டேன் ஜீவா என்று கிரண் கூற சிறு புன்னகையுடன் கிரண் கால்லில் விழுந்துஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு தனது தாத்தா ராஜ லிங்கத்தை பார்க்க அவர் அறைக்கு சென்றான்.

ராஜலிங்கம் ஜீவா இந்த வீட்டை விட்டு சென்றதில் இருந்து வெளியில் செல்வதை நிருத்திகொண்டார்.ஆனால் வீட்டில் நடப்பதை அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.ராஜலிங்கம் ஜீவாவின் முகத்தை பார்த்து கண்ணீர் விட்டுகரைய,தாத்தா நான்தான் வந்துடேன்ல ஏன் அழுறிங்க,இனிமே நான் உங்கள விட்டு எங்கயும் போகமாட்டேன் அழுகாதிங்க என ஜீவா கூற நீ எப்பவும் சந்தோஷ்மா இருந்தா அதுவே எனக்கு போதும் ராசா என்று சொல்ல.சரி தாத்தா நான் போய் ப்ரெஸ்ஸா ஆகிட்டுவாரேன் என்று கூறி விட்டு தனது அறைக்கு சென்றான்.

தனது அறைக்கு சென்ற ஜீவா அந்த அறையில் எந்த பொருள்களும் மாறாமல் அப்படியே இருந்தது போல் அவனது தாயின் நினைவும் அப்படியே இருப்பது போல் தோன்ற கட்டிலில் படுத்து கண்ணைமூடி அதை ரசித்து கொண்டு அப்படியே தூங்கியும் போனான்.

காலையில் சூரியன் நிலாவை வழி அனுப்பி வைத்து விட்டு அழகாக உதயாமாகியது.ஹனியும் நித்தியும் மும்பை வந்து ஒரு வாரம் ஆகிருந்தது.நித்தி அன்று ஹனியிடம் இந்த வீட்டிற்க்கு விஸ்வா அண்ணன் சொன்னதாலதான் நம்ம இரண்டு பேரும் இங்க வந்தோம் இப்ப இங்க நம்ம பிரச்சனை பண்ணி வெளில போய்ட்டோம் தெரிஞ்சா அங்க யாரும் நிம்மதியா இருக்கமாட்டாங்க.கார்த்திக் எப்படிதான் நமக்கு தெரிச்சிடுச்சு.ஆனால் மத்தவங்க நம்ம மேல பாசமாதான் இருக்கங்க.இல்ல நித்தி என்று கூற வந்த ஹனியை,ஹனி செல்லம் விடுங்க இதற்க்கு மேலயும் இத பத்தி பேச வேண்டாம் என்று கூறினால் நித்தி.

அதன் பிறகு வந்த நாள்களில் ஹனியும் நித்தியும் கார்த்திக்கை தவிர அனைவரிடமும் நன்றாக சிரித்து பேசிக்கொண்டுதான் இருந்தனர்.சூரியா, கீழே அமர்ந்து பேப்பரை படித்துக்கொண்டுஇருக்கும் போது நித்தியும்ஹனியும் கீழே வந்தனர்.சூரியா இரண்டு பேரையும் கூப்பிட்டு, இங்க வந்து 1வாரம் ஆச்சு ஆனால் 2 பேரும் எங்கயும் வெளில போய் சுத்தி பார்த்த மாதிரி தெரியல அதனால 2 பேரும் இன்னைக்கு மால்க்கு போய்டுவாங்க என்று கூறினார்.நித்தி சரி அண்ணனா இன்று சொல்ல ஹனி அவளைமுறைத்து பார்த்தாள்.

சூரியா, ஏன் ஹனி உனக்கு போக பிடிக்கலையா என்று கூற,அதலாம் ஒன்றும் இல்லை அண்ணனா போய்டுவாரோம் என்று கூறினாள் ஹனி.நித்தி மதுலாவை பார்க்க சென்றாள் அங்கு மதுலா, எந்த நித்தி காபி என்று இரண்டு கப்களை கொடுத்து இத ஹனிக்கிட்ட குடு என்று சொல்லிவிட்டு சென்றாள்.நித்தி,ஹனி இந்த காபி என்றுநீட்டினாள்.ஹனி,உன் காபி வேண்டாம் நீயே வச்சுக்கோ என்று சொல்ல,ஹனி என்னால 2 கப் காபியையும் குடிக்க முடியாது என்றாள் நித்தி.

எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு ஹனி அந்த இடத்தை விட்டு போக,அவள் கையை பிடித்து ,ஏய் ஏன் எப்ப கோவம இருக்க நான் என்ன பண்ணுனேன் என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் நித்தி.நீ என்ன பண்ணல என்று கூறிய ஹனியை பார்த்து முதல நான் என்ன பண்ணுனேன் சொல்லு என்று நித்தி கூறினாள்.கௌதம் அட லூசுகளா முதல அந்த காபியை என்கிட்டயாவது குடுத்துடு நீங்க உங்க சண்டைய போடுங்க.

சூரியா,ஹனி அப்படி நித்தி என்ன பண்ணுனா என்று கேக்க,ஹனி இல்ல அண்ணனா இன்னைக்கு நீங்க வெளில போய்டுவாங்கனு சொன்னதும் இவ சரினு சொல்லிட்ட அத நான் தப்பு சொல்லல ஆனா நான் இரண்டு நாளா கூப்பிடுறேன் வரமாட்டேன் சொல்லிட்ட இந்த குரங்கு. சூரியா சிரிக்க, இல்லஹனி நான் இன்னைக்குபோலாம்னு உன்கிட்ட சொல்லலாம்னுதான் இருந்தேன் அதுக்குள்ள அண்ணனா சொலிட்டங்களா அதான் சரி னு சொல்லிட்டேன் என்று சொன்னாள் நித்தி.நம்பிட்டேன் என்று சொன்னா ஹனியை பார்த்து நம்பிதான் ஆகனும் என்று நித்தி கூறினாள்.

அதன் பிறகு அனைவரும் கிளம்பி சாப்பிட வந்தனர்.சூரியா,கார்த்திக்கை பார்த்து கார்த்திக் இன்னைக்கு எதாவது வேளை இருக்க சாய்ங்காலம் என்று கேக்க இல்லை அண்ணா என்று கார்த்திக் கூறினான்.அப்ப சாய்ங்காலம் நம்ம நித்தியையும் ஹனியையும் ஷாப்பிங் கூப்பிடு போ என்று சூரியா கூறியதை மறுக்க முடியாமல் சரி என்று சொன்னான்.ஆனால் ஹனி, இல்லை அண்ணா எதுக்கு எல்லாருக்கும் சீரமம் நாங்க காலேஜ்ல இருந்து அப்படியே முத்து அண்ணா கூட போய்டுவாரோம் என்றவளை பார்த்து கார்த்திக் ஏன் எங்க கூட வந்தா இவங்க அழகு குறைஞ்சு போய்டுமோ என்று மனதில் திட்டினான்.

சூரியா,இல்லம்மா இதுக்கு முன்னாடி நீங்க இரண்டு பேரும் வெளில எங்கயும் போனது இல்ல அதுனால இன்னைக்கு மட்டும் அவன் கூட போங்க என்று சொன்னார்.நித்தி,இல்லஅண்ணா என்று சொல்ல வர.... கார்த்திக் இரண்டு பேரையும் பார்த்து சாய்ங்காலம் காலேஜ்ல இருங்க நான் வந்து உங்களை கூப்பிடுக்கிறேன் என்று முறைத்து கொண்டு சொல்லி விட்டு சென்று விட்டான்.ஹனி, இவரு பெரிய துரை இவரு முறைத்ததும் நாங்க பயந்துடனுமா என்று நினைத்து கொண்டாள்.

அதன் பிறகு சூரியா கம்பெனிக்கு சென்றுவிட நித்தியும் ஹனி காலேஜ்க்கு சென்றுவிட்டனர்.சூரியா அறையில் சங்கர் ,சார் அவனை நம்ம இடத்துலதான் வச்சிருகோம் சார்.ஆனால் அவன் வாய்யை திறக்கமாட்டிக்கான் சார் என்று கூற சூரியா நம்ம ஸ்டைல்ல விசாரனைய ஆரம்பிங்க நான் இன்னும் ஒரு ஒரு மணி நேரத்துல வந்துரேன் என்று சூரியா கூற சங்கர் ஒகே சார் என்று சொல்லி விட்டு சென்றான்.

ஜீவா,காலையில் எழுந்து குளித்து விட்டு ஜாணவி படத்தின் முன் சென்று அம்மா,நீங்களும் அப்பாவும் சேர்ந்து உருவாக்குனா கம்பெனிக்கு நான் இன்னைக்கு போறேன் அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணி அனுப்புங்க அம்மா என்று சொல்லிவிட்டு கீழே சென்றான்.

கிரண்,என்ன ஜீவா அதுக்குள்ள கிளம்பிட்ட எங்க போற என்று கேக்க,இன்னைல இருந்து ஆபிஸ்ஸ பார்க்கலாம்னு இருக்கேன் சித்தப்பா என்று கூறினான் ஜீவா.அதைக்கேட்டு ஆதிர்ச்சியடைந்த கிரணை பார்த்து ஏன் சித்தப்பா என்ன ஆச்சு என ஜீவா கூற அதலாம் ஒன்னும் இல்லை ஜீவா தீடிரென்று சொன்னியா அதான்,நீ போறது முதல தெரிஞ்சு இருந்தா பெரிய விழாவே வச்சுருப்பேன்ல ஜீவா என கிரண் கூறினான்.

ஜீவா,அதாலம் ஒன்னும்வேண்டாம் சித்தப்பா அது எங்க அப்பா உருவாக்குன கம்பெனி அதுக்கு போறதுக்கு இதலாம் தேவை இல்ல சித்தப்பா.இது என்னோட கடமை சித்தப்பா.நான் போய்டுவாரேன்.என்று சொல்லிவிட்டு சென்றான்.கிரண்,என்ன சொன்னா.... உன் கடமையா அது என் பையன் ராக்கிக்குடா அந்த கம்பெனி.உங்க அப்பாதான் அதை உருவாக்குனான். ஆனால் அவன் தான் செத்துபோய்டான்ல அப்பறம் என்னா...நீ உறவு வச்சுக்கலாம் னு வந்தியா விடமாட்டேன்டா விடமாட்டேன்.என்று புலம்பிக்கொண்டு இருந்தான்.

ஆபிஸ்க்கு சென்ற ஜீவா, மனோகரை கூப்பிட்ட,குட் மார்னிங் சார் என்ற மனோகரை பார்த்து குட்மார்னிங்,எனக்கு இன்னும் 15 நிமிடத்தில் கம்பெனியின் அத்தனை விவரங்களும் எனக்கு வந்துருக்கனும்.இன்னும் 1 மணி நேரத்துல நம்ம கம்பெனி எம்லாய்ஸ்லாம் நான் மீட் பண்ணணும் அதுக்கு அரேஞ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு நீங்க கிளம்பலாம் என்பதை போல் பார்க்க மனோகர் சரி சார் என்றுசொல்லி விட்டு கிளம்பினான். அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா பைல்களையும் பார்த்தவனுக்கு எந்த பைலும் சரியாக இல்லை என்றும் எதுவரை தனக்கு கம்பெனியை பற்றி அனுப்பிய அனைத்து தகவல்களும் பொய் என்பதை தெரிந்துக்கொண்டான்.

மீட்டிங்கில் அனைவரும் ஜீவாக்காக காத்துக்கொண்டும் மிகவும் குழப்பத்திலும் இருக்க. கதவை படார் என்று திறந்துக்கொண்டு வந்த ஜீவாவை பார்த்து அனைவரும் பயத்தில் இருந்தனர். அவனின் பார்வையை வைத்துநமக்கு பெரிய ஆப்பு காத்துகிட்டு இருக்கு என்பதையும் தெரிந்துகொண்டனர்.அவனை பார்த்து குட் மார்னிங் சார் என்று அனைவரும் கூற ,பாரவயில்லை குட் மார்னிங்ல நல்லதான் சொல்லுறிங்க ஆனால் என்ன கம்பெனியோட பைல்ஸ்யும் கம்பெனியையும் தான் ஒழுங்க ரன் பண்ண தெரியல உங்களுக்கு என்று நக்கலாக சொன்னான் ஜீவா.

சாரி முதல் நான் என்னைபத்தி சொல்லிறேன்.என் பெயர் ஜீவா ராகவன். இந்த கம்பெனியோட எம்.பி.எதாவது தப்புனு தெரிஞ்சுனா இரக்கமே பார்க்கமாட்டேன்.நான் போடுற ருல்ஸ பாலோ பண்ணுறதா இருந்தா இந்த கம்பெனில இருங்க இல்லைனா இப்பவே இந்த கம்பெனிய விட்டு போலாம். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சீக்கிரம் முடிவை எடுங்க,மீட்டிங்க் முடிசிருச்சு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

நித்தியும் ஹனியும் காலேஜ்ற்க்கு வந்திருந்தனர்.ஏய் ஹனி நம்ம ப்ராஜட் பண்ணி விண் பண்ணிருவோம்னு நினைக்கிறியா என்று கேட்ட நித்தியை பார்த்து ஏய் லூசு நம்ம அதுக்கு தான் மதுரையில இருந்து இங்க வந்துருக்கோம்.நீ தான் இதை பண்ணியே ஆகனும்னு சொன்ன இப்ப என்னனா இப்படி பேசுற என்ன ஆச்சி உனக்கு என கூறினால் ஹனி.இல்ல செல்லம் பாதி பேரு இந்த ப்ராஜட் கண்டிப்பா விண் பண்ணும்னு சொல்லுறாங்க ஆனால் சில பேரு நம்ம முன்னாடி சொல்லலேனாலும் பின்னாடி இது சக்ஸஸ் ஆகாதுனுசொல்லுறாங்க அதான் ஒரு மாதிரி இருக்கு என்றவளை கையில் இருந்த நோட்டை வைத்து நித்தியின் தலையிலே அடித்தாள் ஹனி.ஐய்யோ வலிக்கு ஹனி என்று கூறினால் நித்தி,

அடுத்தவங்க என்ன சொல்லுறதலாம் எப்ப இருந்து கேக்க ஆரம்பிச்ச எவன் என்ன சொன்னால் என்ன நம்ம பெஸ்ட்ட நம்ம குடுப்போம் சரியா வா என்று சொன்னா ஹனியை பார்த்து நித்தி, நீ எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் என்று அவளை அனைத்துக்கொண்டாள் .அடச்சி முதல வா என்று அவளை கூப்பிட்டுக்கொண்டு கைடை பார்க்க சென்றாள் ஹனி.

சூரியா, என்ன சங்கர் சொல்லுறானா இல்லயா..என்று கேக்க. இல்லை சார் என்றான் சங்கர். அவர்கள் பிடித்து வைத்திருந்தவனின் முன் சேரை இழுத்து போட்டு அமர்ந்தான் சூரியா.

அவனை பார்த்து உனக்கு இரண்டு சான்ஸ் தாரேன் அதுக்குள்ள உண்மையை சொல்லு.இல்லைனு வை பட்டுனு போட்டு போட்டுனு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன் புரியுதா என்று சூரியா கூற, அவன், இங்க பாருங்க எனக்கு காசு குடுத்தாங்க நான் அந்த பிள்ளையை ஆஸிடண்ட் பண்ணுனேன்.ஆனால் அந்த பிள்ளை தான் தப்பிருச்சுலா அப்பறம் ஏன் என்னை அடிக்கிறிங்க.பாருய்யா ரொம்ப புத்திசாலியா பேசுறோம் நினைப்பு சரி சொல்லு யாரு காசு குடுத்தா சொல்லு என்று சூரியா கேக்க அவன் எனக்கு தெரியது என்று கூறினான்.





 

Chittijayaram

Well-Known Member
Hi mam, nice epi jeeva super ah erukan semaya pesaran, adiradiya actions edupan nu ninaikaraen, ips sir ku rumba kovam varudu, Surya kuda nalla pesaran, yaaru pa anda adiaalunga, mam small request yaaru Yar kuda pesaramga nu puriyala and spell mistake eruku mam, nice epi mam, happy reading.
 

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
Hi mam, nice epi jeeva super ah erukan semaya pesaran, adiradiya actions edupan nu ninaikaraen, ips sir ku rumba kovam varudu, Surya kuda nalla pesaran, yaaru pa anda adiaalunga, mam small request yaaru Yar kuda pesaramga nu puriyala and spell mistake eruku mam, nice epi mam, happy reading.
tqq sis....ama semma adiradithan.yennoda mistake ah kureikka try pannuren......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top