வாழ்க்கை
வரம் வாழத்தெரிந்தவர்களுக்கு...
சாபம் வாழத்தெரியாதவர்களுக்கு...
நிஜம் தான்...
அம்மாவே பையனோட வாழ்க்கை போனாலும் எனக்கு பிடிக்காத மருமகள் பையனோட சந்தோசமா இருக்கக்கூடாதுன்னு நினைப்பதெல்லாம் ரொம்பவே சகஜம் தான் இங்கே...
ஆனால் மித்ரன் மாதிரி அம்மாக்கு பதில் கொடுக்கும் பையன்கள் விரல் விட்டு எண்ணிடலாம்...
பையன் திருப்பி கொடுத்தாலும் நான் இப்படித்தான் அம்மா தான் மித்ரன் அம்மா...
தோற்றதால் ஈர்க்கவைத்தது போட்டோ... மனசை ஈர்க்கவைத்தது நேரடி சந்திப்பு...
பிடிக்காத profession என்றாலும் ஒருத்தருக்கொருத்தர் மனசுல பிடிச்சுட்டா போதும்... மற்ற பிடித்தமின்மை எல்லாம் காணாமல் போய்டும் னு prove பண்ணிட்டாங்க...
இங்கே நிறைய பெண்களுக்கு, தன்னோட வாழ்க்கைல கணவர் பக்கம் யாரும் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது... தன் பொண்ணோட வாழ்க்கைல அவள் கணவர் பக்கம் யாரும் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது... ஆனால் மகனுக்கு வர்றவ மட்டும் இவங்க எல்லாத்தையும் பொறுத்துபோகணும்... இதான் எழுதப்படாத சட்டம்...
மருமகள் கேள்வி கேட்டால் அடங்காதவ... திமிர் பிடிச்சவ...
மகன் கேள்வி கேட்டால் அவள் சொல்லிக்கொடுத்து தான் என் பையன் கேள்விகேட்கிறான்... ஏன்னா இவங்க பெத்த பையனுக்கு பேசத்தெரியாது...
பொல்லாத உலகம் இது
காரணமில்லாமல் காரியியமில்லை...
இதை ஆராய்வதே கிடையாது...