Try biriyani..

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஹா... ஹா... ஹா.................
பிரியாணி=ன்னு பேர் பார்த்தவுடனே,
என்னோட முருகேசன் லட்சுமி
சகோதரரைத்தான், நான்
நினைத்தேன் பா, பாத்திமா டியர்
கரெக்ட்டா, அவரே வந்துட்டாரு பா
But, இது எனக்கு, சம்பந்தமில்லாத
ஏரியா பா, பாத்திமா செல்லம்
அதானே, சகோதரருக்கு ஒரு
பார்சல் கொடுக்கலாமில்லே,
பாத்திமா டியர்?
சகோதரி நீங்க, நீங்க தான் என் தெய்வம், பாத்திமா சகோதரி என்னை ஏமாற்றுகிறார். ஒரு பார்சலை சண்டையிட்டவது வாங்கி தாருங்கள் சகோதரி.{ஒரு குறிப்பு நேற்று திருச்சி பஸ் ஸ்டாண்ட் எதிர் உள்ள முனியாண்டி விலாஸ் பிரியாணி செம சூப்பர். திருச்சி செல்லும் நண்பர்கள் மிஸ் செய்யதீங்க}
 

Joher

Well-Known Member
எங்க ஊரு அவியல் சொல்லட்டுமா????

கத்தரிக்காய் 2.. 3.... பிடித்தவர்கள் இன்னும் 1 சேர்த்துக்கலாம்
முருங்கைக்காய். 1
வாழைக்காய் 1
கேரட் 1
பீன்ஸ். 5... 6....
புடங்காய் 3 or 4 inches
வெள்ளரிக்காய் 3 or 4 inches
இளவங்காய் சென்னையின் வெள்ளை பூசணி small piece
சீனி அவரைக்காய் சென்னையின் கொத்தவரங்காய் 5.. 6..
சேனைக்கிழங்கு small piece
மாங்காய் சிறிது.....

எல்லா காய்களையும் முக்கால் inch length க்கு வெட்டிக்கொள்ளவும். ரொம்ப thin ஆக வேண்டாம்.......
கழுவி வைத்துக்கொள்ளவும்......

தேங்காய் எண்ணெயில் செய்தால் ரொம்ப வாசமாக இருக்கும்....

கடாயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து காய்களை போடவும்....... 2 or 3 பச்சை மிளகாய் கீறிப்போடவும்....... சிறிது வதக்கி மூடி போட்டு வேகவைக்கவும். அப்பப்போ கிளறி விடவும்...... 7 min அப்புறம் உப்பு மஞ்சள் பொடி
தேங்காய் கலவை (துருவிய பச்சை தேங்காய் ஒரு கை புடி, முற்றிய தேங்காய் நல்லா இருக்காது, மிளகாய் காரத்திற்கேற்ப, சின்ன வெங்காயம் 5.... 6...., சீரகம், 2 பல் பூண்டு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து mixie யில் reverse ல் ரெண்டு சுற்று சுற்றவும்..... coarse ஆக இருக்கணும்.....) எல்லாம் சேர்த்து வேகவிடவும்...... வெந்ததும் இறக்கி வைத்து கொஞ்சம் ஆறியதும் கெட்டியான ரொம்ப புளிக்காத fresh தயிர், கொஞ்சம் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்து பின் பரிமாறவும்.....

மாங்காய் சேர்க்காவிட்டால் சிறிது புளி கரைசல் சேர்க்கவும்.....
தயிர் consistency பார்த்து தேவைக்கேற்ப சேர்க்கவும்.......

Vegetables நாங்கள் எல்லா காயும் சேர்த்து தான் போடுவோம்......
சாம்பார் கூட சேனை மாங்காய் வாழைக்காய் தவிர்த்து எல்லா காயும் போட்டு தான் சாம்பார்........

நீங்கள் உங்களுக்கு தேவையற்றதை விட்டுவிடலாம்.......

பிடித்தால் உருளை கிழங்கு பலா கொட்டை எது வேணும்னாலும் சேர்த்து கொள்ளலாம்......

No க்கு ஏற்ப காய் அளவை கூடி குறைத்து கொள்ளவும்.......

கத்தரிக்காய் 3 4 போட்டால் கொஞ்சம் மகிந்த மாதிரி வரும்.......

முற்றாத பச்சை தேங்காய்
தேங்காய் எண்ணெய்
வீட்டில் செய்த புளிக்காத fresh கெட்டி தயிர் தான் taste கொடுக்கும்......
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Chicken biriyani...
பிரியாணி அரிசி 1/2கி
சிக்கன் 1/2கி..
வெங்காயம் 5எண்கள்
தக்காளி 5
ப.மிளகாய் 4/5
எண்ணெய் 7 தேக்கரண்டி
நெய் 2 ஸ்பூன்..
ஏலக்காய் -4
பட்டை சிறு துண்டு
கிராம்பு-5
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு..
இஞ்சி பூண்டு 4 ஸ்பூன்..
தயிர் 1கப் சின்னது.
புதினா கொத்தமல்லி ஒரு கை அளவு..
பிரிஞ்சி இலை 2

செய் முறை...

சிக்கனை சுத்தம் செய்து
கொஞ்சம் உப்பு தயிர் இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன் ஊர வைக்கவும்...


குக்கரில்..

எண்ணெய் சேர்த்து..
ஏலக்காய் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்..
வெங்காயம் மிளகாய் சேர்க்கவும்..
வெங்காயம் வதங்கியதும்
மிளகாய்த்தூள் சேர்த்து
பின்பு தக்காளி இஞ்சி பூண்டு சேர்க்கவும்
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்...
நன்றாக வெந்தவுடன்
புதினா கொத்தமல்லி சேர்த்து சிக்கனை சேர்க்கவும்...

2 நிமிடங்கள் பிரட்டி..
தண்ணீர் சேர்க்கவும்..
1/2 கிலோ அரிசி கப் வருமாயின் 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்..

தண்ணீர் கொதிக்கும் முன் அரிசியை கழுவி ஊரவைக்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும்..
உப்பு சரி பார்த்து
அரிசி சேர்த்து கொதிக்கவிடவும்
மூடியிட்டு 10 நிமிடங்கள் மட்டும் இருந்தால் போதும் விசில் போட தேவையில்லை... மிதமான தீயில்..

15 நிமிடங்கள் கழித்து இறக்கவும்..
நெய் சேர்த்து பிரட்டி விடவும்..
புளிப்பு சுவை விரும்பினால்..
1/2 எலுமிச்சை சாறில் கலரும் சேர்த்து மெதுவாக பிரட்டி விடவும்...


Variations.
Mutton 1/2..
இதே முறையில் மட்டன் சேர்த்து 1/2 கப்தண்ணீர் சேர்த்து 3/4 விசில் வைத்து வேகவிடவும்..
அரிசியை தனியாக தண்ணீர் கொதிக்க வைத்து சிறு உப்பு சேர்த்து
முக்கால் பதத்தில் வடித்து விடவும்..

வெந்த மட்டன் கலவையை தண்ணீர் வடிய எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைத்து பின்னர் வடித்த சாதம் சேர்த்து அரிசி உடையாமல் பிரட்டவும்...

For veg:..
Onion and tomato-4
தயிர் 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு 2 ஸ்பூன்..
கேரட் பீன்ஸ் உருளை சேர்த்து 150.
பட்டானி சிறிதளவு...

சிக்கன் மெத்தட் தான்
காய் போட்ட உடனே தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்..

Same recipe here .....தக்காளி போட்ட போடுவேன்..... எண்ணெய் கம்மியா ......
 

Sundaramuma

Well-Known Member
எண்ணெய் விட்டு சீரகம் மிளகு தாளித்து..
வெங்காயம் வதக்கவும்..
வதங்கியதும் தக்காளி மிளகாய்த் தூள்
உப்பு சேர்த்து வதக்கவும்..
கத்திரிக்காய் வேகவைத்து புளி கரைசல் சேர்க்கவும்..
வேர்கடலை எள்ளு பொடி சேர்த்து இறக்கவும்.

ட்ரையா வேனும் னா புளி கரைசல் பதிலாக..
புளியோதரை பொடி சேர்த்துப்பேன்..
அது சாம்பார்க்கு குட் காம்பினேஷன்
தேங்காய் அரைச்சு ஊத்துவேன்.....கத்தரிக்காய் கடைசியா தான் போடுவேன் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top