Thuli Maiyal Konden-11

Advertisement

kayalmuthu

Well-Known Member
சூப்பர் ud sis .
அரவிந்த் character பக்கா பக்கா...
மயூ பேபி வாய் தொறந்து பேசு மா.
Very nice ud
Correct way ல தான் ஸ்டோரி போகுது sis super
 

eanandhi

Well-Known Member
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”என்றதும் இன்னும் ஆத்திரம் கூட,



“உங்களோட சுயநலத்துக்காக,அந்த லாரிய இடிக்க பார்த்தீங்களே! அந்த டிரைவர்-க்கும் குடும்பம் இருக்கும்னு யோசிச்சு பார்த்தீங்களா!! என்ன மனுஷன் நீ?”மரியாதையை கைவிடவும்,காரை இடப்புறம் திருப்பி,அங்கிருந்த கிரவுண்டில் நிறுத்தினான்.



“உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்க? ரொம்பத்தான் ஓவரா பேசிட்டு இருக்க!! நானும் சின்னப்பொண்ணு,அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டோம்.விட்டுக்கொடுத்து தான் போவோம்னு பார்த்தா,நீ ரொம்பத்தான் துள்ளிட்டு இருக்க! என்ன நான் சுயநலவாதியா? ம்ம்ம்..என்னோட சுயநலத்துக்காக நான் என்ன பண்ணேன்னு சொல்லு. நீ சுயநலமா உன் குடும்பத்தை போட்டு டார்ச்சர் பண்ணதை விடவா நான் பண்ணிட்டேன்!! உன்னைப்பத்தி கதைகதையா நிறைய சொன்னாங்க!! சொன்னவங்க ரொம்ப லேட்டா சொல்லிட்டாங்க.



அதான்,அதனால தான் என்னால கல்யாணத்தை நிறுத்த முடியல.என் வொர்க்கர்ஸ்க்கு எல்லாம் இன்னைக்கு விருந்து சாப்பாடு போடணும்னு,எப்போ முடிவு பண்ணேன்னு தெரியுமா..நீ தான் எனக்கு முடிவு பண்ண அன்னைக்கு தான்!! இப்படி பல விஷயங்களை ப்ரீப்ளான் அதை செயல்படுத்த ஏற்பாடுகளையும் பண்ணியிருந்தேன்.



திடீர்னு நீ சொன்னவுடனே கல்யாணத்தை நிறுத்தியிருந்தா,என்னோட மானம்,மரியாதை அத்தனையும் டோட்டல் பிளாஸ்ட் ஆகியிருக்கும்.



எது நடந்தாலும் காது காதும் வைச்சபடி முடிச்சுக்கறதுக்கு, நான் ஒண்ணும் உள்ளூர் பொறுக்கி கிடையாது. நேஷனல் லெவல்ல பிசினெஸ் பண்ணிக்கிட்டு இருக்கவன்!!



என்னோட இந்த ஸ்டேட்டஸ் ஒண்ணும் என்னோட அப்பா,அம்மா சம்பாதிச்சு கொடுத்தது கிடையாது.என்னோட...நல்லா கவனி...என்னோட தனிப்பட்ட உழைப்பு!! அந்த ஸ்டேட்டஸ்க்கு ஒரு கறை மாதிரி உன்னை கல்யாணம் பண்ணி தொலைச்சிட்டேன்! கறை சட்டையில ஒட்டிடுச்சுன்னு உன்னை மொத்தமா தூக்கிப் போட்டுடறதா,இல்லை கறையை சுத்தம் பண்ணி உன் கூட வாழறதான்னு நான் முடிவு பண்ணணும்.அது உன்னோட கையில தான் இருக்கு..இல்ல இல்ல,உன்னோட வாயில தான் இருக்கு. என்னால இந்த டென்ஷனோட இனி ஒருநாள் கூட இருக்க முடியாது. ஜஸ்ட் ஸ்பீக் அவுட்”இறுதியில் அவன் சத்தம் காரையே அதிர செய்ய,



“டிவோர்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது”ஒற்றை பதிலில்,எந்தவிதமான விளக்கமும் கொடுக்காமல்,பதிலை சொல்லிவிட்டாள்.



அந்த பதில் அரவிந்திற்கு போதவில்லை.



“ஓகே.நீ டிவோர்ஸ் கொடுக்க வேண்டாம்!! நீ என்னோட வாழவும் வேண்டாம்..இப்போ நேரா வீட்டுக்கு போகலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டு உன்னை உன் வீட்டுலையே கொண்டு போய் விட்டுடறேன்.என்னோட இஷ்டமில்லாமல்,என்னை கட்டாய்யப்படுத்தி எதுவும் செய்ய வைக்க முடியாதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்.அதனால உன்னை ஊர்லையே தள்ளிவிட்டுட்டு வந்தாலும்,அவங்களால ஒண்ணுமே பண்ண முடியாது..



நான் இன்னொரு மேரேஜ் பண்ணிக்கிட்டாலும்,ஏன் லிவிங் டுகெதர் மாதிரி வாழ்ந்தாலும்,என்னை யாரும் எதிர்த்து ஒண்ணும் செய்ய முடியாது...இதுவொரு வழி.



அண்ட் இன்னொரு வழியும் இருக்கு. பழைய குப்பையெல்லாம் உன் மனசில இருந்து தூக்கிப்போட்டுட்டு,என்னோட முழு மனசோட வாழற எண்ணம் இருந்தா,நேரா ஆபிஸ் போகலாம்.சொல்லு திஸ் வே ஆர்?”என்று சொல்ல விருப்பமே இல்லாமல் நிறுத்த,காரில் சிறிது நேரம் மௌனம் மட்டுமே!!



அந்த மௌனம் அரவிந்திற்கு கடும் கோபத்தைக் கொடுக்க,வீட்டிற்கு செல்வதற்கு காரை திருப்ப,அவனே எதிர்பாராத தருணத்தில்,ஸ்டியரிங்கை திருப்பினாள்.



“என்ன பண்ற நீ”கத்தியவன்,பின்பே அவளின் செயலுணர்ந்து,அவள் கை மேல் தன் கையை வைத்து,வளைவிலிருந்து திரும்பி நேர் சாலைக்கு வந்த பின்பும்,அவள் கையை ஸ்டியரிங்கிலிருந்து எடுக்க விடாமல் மேலையே வைத்திருக்க,கையை அவள் இழுக்க முயற்சித்தும் பலனில்லை.



“வலிக்குது.விடுங்க..ப்ளீஸ்!”எனவும் விட்டவன்,காரின் வேகத்தை வெகுவாக குறைத்து,இருகைகளையும் கோர்த்து அமர்ந்திருந்தவளின்,வலது கையை கிட்டத்தட்ட பிடுங்கி,தன் இடது கையோடு இணைத்துக்கொண்டான்.



இரு கைகள் இணைந்த பின்னே,இல்வாழ்க்கையும் மலரும்!! மலரின் அகம் மலர மட்டும் நாளாகும்!!
Super mam
 

Mage

Well-Known Member
எனக்கும் இந்த அப்டேட் ரொம்பவே
பிடிச்சிருக்கு, நிஷா டியர்

இந்த அப்டேட் படிக்கும் பொழுது
எனக்கு சந்தியா ஞாபகம்தான்
வந்தது, நிஷா டியர்
(சந்தியாதானே?)

முதலில் அவள் கணவன் and
(அவன் பெயர் மறந்து விட்டது
ரிஷியா?) அண்ணன் குழந்தையுடன்
தாத்தான்னு சொல்லும் மாமனாரின்
தோட்டத்துக்கு போகும் பொழுது
and பாம்பேயில் இவனுக்கு
பொறாமை பொங்கி அவளை
வர வைச்சு அவளுடன் மீண்டும்
போகும் பொழுது கார் பயணம்
ஞாபகம் வந்தது
சந்தியா செம கெத்தான லேடி
I LOVE HER VERY MUCH, நிஷா டியர்
அது எந்த கதை பானு டியர் லிங் இருக்கா:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
அது எந்த கதை பானு டியர் லிங் இருக்கா:):):)
அந்த அழகிய நாவலின் பெயர்
"கண்களில் தோற்கிறேன்",
மகேஸ் டியர்
லிங்க் பத்தி நிஷா டியர்தான்
சொல்லணும்ப்பா
நான் ரொம்ப நாளைக்கு
முன்னாடி வேற சைட்டில்
படிச்சேன்ப்பா
அதனாலதான் ஹீரோ பேர்
எனக்கு மறந்து விட்டதுப்பா
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
அரவிந்த் அழகாக சூழ்நிலையை கையாள்கிறான். அனுபவம் பயன்படுகிறது. அரவிந்த் மாதிரி ஒருவர் தனது கடுமையான காலத்தை சவாலாகவும் நேர்மறையாகவும் எடுத்து வாழ்க்கையில் பலபடிகள் முன்னேறுவது ஒரு சிலர் மட்டுமே. பலர் கடுமையான காலங்களில் எதிர்மறையாக செயல்பட்டு தங்களது வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top