Thiru.Selvam- Part1

#1
2
குருவே சரணம்​

எனக்கு அறிவும், ஆற்றலும், எனது பள்ளி முதல் கல்லூரி வரை வழி நடத்திய ஆசிரியர்களுக்கு மற்றும் வாழ்க்கையின் பயணத்தில் தைரியத்தை அளித்த ட்யூஷன் ஆசிரியர் திரு.சிவகுமர் (சிவா ஹிந்தி வித்யாலயா,அண்ணா நகர், மதுரை). இந்த கதை சமர்ப்பிக்கிறேன்.

செல்வம் மலர்விழியுடன் சென்னை மாநகரை அடைந்தான். எழும்பூரிலிருந்து வெளியே வந்தால், பேரதிர்ச்சி. ஆட்டோ ஏறலாம் என்றால், ஒவ்வொரு இடத்திற்கும் யானை விலை குதிரை விலை, அருகில் இருந்த ஹோட்டலில் ரூம் எடுத்து, கைப்பையை வைத்து குளித்து விட்டு, ஒவ்வொரு ஸ்கூலாக செல்வம் வேலை தேடி அலைந்தான். கிராமத்தில் ஏற்கனவே வாத்தியாராக வேலை பார்த்த அனுபவம் இருந்தாலும், அவன் எதிர்பார்த்தபடி உடனடியாக அரசு பள்ளியில் வேலை கிடைக்கவில்லை, காரணம் வங்கியில் வொகேஷனலாக பணி புரியும் ஊழியர்களை போலவே இவனும் வேலை பார்த்து கொண்டு இருந்தான், வித்யாசம் என்ன வென்றால், இது ஊருக்குள்ளயே தீர்மானம் ஆகிவிடும், அரசு பதிவேட்டில் ஒன்றும் இருக்காது. அவன் தனது ஊர் ஆசாமிகளால் ஏமாற்ற பட்டிருக்கிறான் என்று தெரிந்து, என்ன செய்வதென்று தெரியாமல், தேனாம்பேட்டை சிக்னலில் வியர்க்க வியர்க்க, மிகவும் களைப்போடு நின்று கொண்டு இருந்தான் .
அவன் கண்களில் நான்குமுனை சிக்னல் சிகப்பு-பச்சை-ஆரஞ்சு என்று மாறி மாறி வருவதை பார்த்து கொண்டு இருந்தான். ஒரு பக்கம் ஜீப்ரா க்ராஸ்ஸிங்கில், ஒரு வயதான மூதாட்டி தள்ளாடி தள்ளாடி நடந்தார் . ஒரு கட்டத்தில் அவருக்கு மயக்கம் வரவே , நடுரோட்டில் மயங்கி விழுந்தார் . திருப்பத்தில் இருந்து ஒரு பள்ளி வாகனம் திரும்பி வேகமாக வந்து கொண்டு இருந்தன . செல்வத்தின் கண்களில் தென்படவே , அவன் விரைந்து ஓடினான் , அந்த பேருந்து அருகில் வந்து பிரேக் போடவும் , அந்த மூதாட்டியை செல்வம் காப்பாற்றவும் சரியாக இருந்தது . பேருந்து உள்ளே இருந்த குழந்தைகள் முன்னும் பின்னுமாக , சிறிய அடிகள் பட்டன .
அவர் அருகில் இருக்கும் பள்ளி தாளாளரின் தாயார் . மிகவும் எளிமையானவர் . தகவல் அறிந்த சில நிமிடங்களில் அந்த பள்ளி தாளாளர் , ஹாஸ்பிட்டல் வந்துவிட்டார் .
அன்றைய தினம் ஏகாதசி என்பதால் , பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது இப்படி மயக்கம் வந்து விட்டது என்று அந்த மூதாட்டி கூறினார் . டாக்டர்கள் செல்வத்தை அழைத்து “இவர் மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னா , இவளோ பிரஷர் , சுகர் இருக்கிற உங்க அம்மாவை காப்பத்திற்க முடியாது ”.
அந்த தாளாளரும் செல்வமும் , ஒருவரை ஒருவர் அறிமுக படுத்தி கொண்டனர் . செல்வம் டீச்சர் வேலை தேடி கொண்டு இருப்பதை அறிந்து தனது கார்டை கொடுத்தார் . திங்கள்கிழமை காலை 9.௦௦ மணிக்கு வரும்படி கூறிவிட்டு மீண்டும் அம்மாவை காண அறை உள்ளே சென்றார் . செல்வம் கார்டை எடுத்து கொண்டு ரூமுக்கு கிளம்பினான் , தனது மனைவியிடம் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான். அன்று வெள்ளிகிழமை என்பதால் இரு தினங்கள், அதவாது சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை தாண்டுவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது .
அடுத்த நாள் காலை பள்ளிக்கு விரைவாக சென்றுவிட்டான் . மிக சிறிய கட்டிடம், 10ம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது . நேரம் ஆக ஆக மாணவர்கள் கூட்டம் அதிகமானது . சரியாக 9.௦௦ மணி அளவில் மணி ஒலித்தது .
வாரம் ஒரு முறை திங்கள்கிழமை அசெம்பிளி நடக்கும், அதில் முதல்வரும் தாளாளரும் உரை நிகழ்த்துவார்கள். அசெம்பிளி முடிந்தபின், தாளாளர் செல்வத்தை முதல்வரிடம் அறிமுகம் செய்து வைத்தார். முதல்வர் செக்ரட்டரியை கூப்பிட்டு ஏதோ கூறினார், சில நிமிடங்களில் அந்த செக்ரட்டரி கொண்டு வந்த புத்தகத்தை கையில் வாங்கி கொண்டு செல்வத்தை கூப்பிட்டு “இந்தாங்க இதுல இருக்குற ஏதாவது ஒரு பாடம் நீங்க கிளாஸ் எடுக்க வேண்டி இருக்கும் ” செல்வம் அந்த புத்தகத்தை பார்த்தான் அது கணிதம் என்பதை பார்த்து , உடனே “எஸ் சார் ” என்றான் , இருவரும் ஒரு வகுப்புக்குள் சென்றார் அங்கே செல்வம் டிரிக்னோமெட்ரியில் இருந்து சில கணக்குகளை செய்தான் , மற்றும் அல்லாது மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துவைத்தான் . செல்வம் மீண்டும் முதல்வர் அறைக்கு சென்றான் . முதல்வர் செல்வத்தின் பைலை பார்த்துவிட்டு , “Mr . செல்வம் , உங்க ஊர்ல கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல வேல செஞ்சாலும் , அதுக்கு செர்டிஃபிகேட் ஒன்னும் இல்லை , பி.எட் செர்டிபிகேட் கிடையாது , நீங்க சிட்டில இப்படியே இருந்துட முடியாது , பி.எட் இல்லாம நீங்க ரொம்ப நாள் வேலை பாக்க முடியாது , அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம் , நீங்க பாடம் எடுத்த ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் நல்ல பீட்பாக் குடுத்துருக்காங்க , உங்க பைலை பார்த்தேன் , 10th 12th, காலேஜ் எல்லாத்துலயும் கணக்குல நல்ல மார்க் ஸ்கோர் பண்ணிருக்கீங்க , அப்புறம் ஏன் நீங்க ஏற்கனவே வேலை பார்த்த எடத்துல கணக்கு எடுக்காம , கெமிஸ்ட்ரி எடுத்திருக்கீங்க ”. செல்வம் மெளனமாக இருந்தான் … செல்வத்தின் மனம் அவனது கிராமத்திற்கு சென்றது, அவன் வந்தனாவுடன் உரையாடியது நினைவுக்கு வந்தது….
 
Sainandhu

Well-Known Member
#2
ஆரம்ப பதிவு நல்லா இருக்கு......
வாழ்த்துக்கள் ஶ்ரீஹரி....:)
 
#5
:D :p :D
உங்களுடைய "திரு.செல்வம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஸ்ரீஹரி டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement