Thiru.selvam-Part-5

Advertisement

srihari

Member
குருவே சரணம்​

செல்வத்திற்கு வகுப்பில் முழு மனது இல்லை என்பதை அவன் முகமே காண்பித்தது . இதை தாளாளரின் தாயார் கவனித்தார் . அவனை வீட்டிற்கு அழைத்து, அவனது பிரச்னையை பற்றி தெரிந்து கொண்டார் . அவர்களுக்கு தெரிந்த டாக்டரிடம் போனில் விசாரித்தார் . அந்த டாக்டரும் வந்து பரிசோதித்து சில மருந்துகளை எழுதிக்கொடுத்தார். அதை மறக்காமல் சாப்பாடுக்கு பின் சாப்பிட சொன்னார். சில காலம் செல்வம் அருகில் இருந்தபடியே பார்த்துக்கொண்டான்.
தாளாளர் , முதல்வர் மற்றும் பல ஆசிரியர்கள் அந்த மீட்டிங்கில் இருந்தார்கள் . 10 ம் வகுப்பு கணக்கு ஆசிரியர் ரத்தினம் பேச ஆரமித்தார் “ தனது மகன் வேலை பார்க்கும் கம்பெனியில் , தனது மகனை இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று கூறி விட்டது . “பையன் தனியாக அனுப்ப என் மனைவிக்கு விருப்பமில்லை , வீட்ல புலம்பிகிட்டு இருக்கா , பையன் கூட அமெரிக்கா போகணும்ன்னு பிடிவாதம் பன்றா , நான் மட்டும் தனியா இந்த வயசுல இங்க என்ன பண்ண போறேன் , அவங்க கூட நானும் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் ”
ஒரு மாதம் கழிந்தது , ஆசிரியர்கள் அனைவரும் ரத்தினத்திற்கு ட்ரீட் வைத்தார்கள் . இப்போ 10ம் வகுப்பு கணக்கு யாரு எடுப்பான்னு தெரியல , தாளாளரும் , முதல்வர் கலந்து ஆலோசித்து செல்வத்தை கணக்கு ஆசிரியராக போட தீர்மானித்தார்கள் . அடுத்த நாளில் இருந்து செல்வம் 10ம் கணக்கு நுணுக்கங்களை மாணவர்களுக்கு புரியும்படியாக பிரித்து எழுத ஆரம்பித்தான் .
செல்வம் , முதல் நாள் வகுப்பில் உடன் பாடத்திற்குள் போகாமல் , மாணவர்களின் மனநிலை அறிந்து கொள்வதற்காக , அவர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்தான் . மாணவர்களும் மகிழ்ச்சியாக பதில் கூறி கொண்டிருந்தார்கள் . அவன் சென்ற ஆண்டு சந்தித்த அதே மாணவர்களை தான் இப்போதும் சந்தித்து இருக்கிறான் என்றாலும் , அவர்களுக்கு அந்த 10ம் வகுப்பு படிப்பின் அழுத்தத்தில் இருந்து விடுபட்டதுபோல் உணர்ந்தார்கள் . செல்வம் நடத்தும் நுட்பம் அனைவருக்கும் எளிமையாக இருந்ததால் , அந்த ஏரியாவில் இருக்கும் மற்ற பள்ளிகளில் படிக்கும் அணைத்து 10ம் வகுப்பு பசங்களும் தாங்கள் ட்யூஷன் சேர விரும்புவதாக கூறினார்கள் , தனது மாணவர்களுக்கு அது தேவைபடவில்லை , வகுப்பிலேயே கிளாரிட்டியாக எல்லோருக்கும் புரியும்படியாக எடுத்தான் .
செல்வம் சிறு வயதில் கணக்கு பட்டம் மட்டும் பெறவில்லை , அதோடு அவன் மாவட்ட அளவில் அத்லெடிக் ஆவான் . அது தெரிந்த முதல்வர் செல்வத்தை கூப்பிட்டு , அடுத்த இரண்டு வாரத்தில் “ஸ்போர்ட்ஸ் டே” வர இருக்கிறது , பி.டீ மேடம் மட்டர்னிட்டி லீவுல் இருப்பதால் , “ஸ்போர்ட்ஸ் டே” மொத்த ஏற்பாடுகளும் செல்வத்திடம் ஒப்படைக்க பட்டது . நல்ல குணம் கொண்ட ஒருவன் இருக்கும் இடத்தில தீய குணம் உள்ள ஆட்கள் இருப்பார்கள் அல்லவா, செல்வத்திற்கு சிறிது காலமாக அவரது வகுப்பு மட்டும் அல்லாது அணைத்து மாணவர்களின் மதிப்பு கூடுவதை கண்டு “சுகந்தி” என்ற ஆசிரியை பொறாமை கொண்டாள் . இப்படியே சென்றால் இன்னும் சில நாட்களில் இப்போ இருக்கும் முதல்வர் பணிக்காலம் முடிந்தவுடன் , செல்வம் அல்லவா முதல்வர் ஆகிவிடுவான் . இது போதாதென்று இப்போது முதல்வர், செல்வத்திடம் ஒரு புதிய பொறுப்பு வேறு கொடுத்து இருக்கிறார் . செல்வம் செய்யும் அணைத்து தீர்மானம் மற்றும் செயல்களிலும் குறை சொல்ல ஆரம்பித்தாள் . இது அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருந்தது , இருந்தாலும் மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் ஒன்றும் சொல்ல முடியவில்லை . ஏற்கனவே முதல்வருக்கு அந்த சுகந்தி மேல் கோபம் இருந்தது , ஆனாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை . காரணம் அவள் தாளளரின் “ஜாதிக்காரர் ” எனபதால் மற்றும் அவளது சொந்தக்காரர் தான் அந்த ஜாதி கட்சியின் தலைவர். ஏதாவது ஆக்சன் எடுக்க போயி , பள்ளியின் செயல்பாடுகள் தடையாக கூடாது என்று அவர் பொறுமை காத்தார் .
செல்வத்தின் ட்யூஷனில் படிக்கும் ஒரு மாணவிக்கு சரியாக கணக்கு போட முடியவில்லை. அவள் பெயர் சந்திரா. அவளை செல்வம் சில நாட்களாகவே கவனித்து வந்தான் . ஒரு நாள் அவளுக்கு கூடுதலாக கணக்கு கொடுத்து போட சொன்னான் , அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது . அவள் பிரச்சனை என்ன என்பதை அறிய ஆவலுடன் பேசிக்கொண்டு இருந்தான் . நேரம் போனது தெரியவில்லை . அவள் அவளது வீட்டருகே இருக்கும் சூழ்நிலைகளை பற்றி கூறினாள் . இதற்கிடையே அவளது தாய்மாமன் குடித்துவிட்டு போதையில் தகாத வார்த்தைகளை பேசி கொண்டு தள்ளாடி தள்ளாடி வந்தான் . அந்த பெண்ணிற்கு என்ன செய்ய்வதென்று தெரியவில்லை . அவள் கண்களில் இருந்து நீர் பொங்கியது . செல்வத்திற்கு அருவருப்பாக இருந்தது , அக்ராஹாரம் என்பதால் தெருவில் உடனே மக்கள் கூடி நின்று ஏதேதோ பேச துவங்கினர் .
செல்வம் அந்த தாய்மாமனை சமாதானப்படுத்த முயன்றான் , ஆனால் அவனோ முரட்டுத்தனமாக செல்வத்தை அடிக்க வந்தான் . செல்வம் பளார் …பளார் …என அறைந்தான் …அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை அவன் மேல் ஊற்றினான் . தண்ணீர் அடித்த வேகத்தில் பாலன்ஸ் தாங்காமல் கீழே விழுந்தான் . அவளை ஆட்டோவில் ஏற்றி வைத்தான் . அந்த அக்ராஹார மக்களுக்கு நேர்ந்த தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டான் . செல்வத்தின் குணம் பற்றி பல வருடமாக அவர்களுக்கு தெரியும் என்பதால் இதை அவர்கள் பெரிது படுத்தவில்லை . அந்த குடிகார தாய்மாமனை திட்டிவிட்டு தலையில் அடித்துக்கொண்டு சென்றார்கள் .
அந்த கூட்டத்தின் மத்தியில் இருந்த சுகந்திக்கு இது பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது . இந்த சம்பவத்தை கொண்டே ஒவ்வொரு முறையும் சுகந்தி செல்வத்தை தொந்தரவு செய்து வந்தாள் . ஆனால் செல்வமோ எதையுமே கண்டு கொள்ளவில்லை , மற்றவர்களுக்கு இது புதிராக இருந்தது , ஒரு நாள் தன் மகனை பார்ப்பதற்கு அயராத உடல் வலியிலும் மலர்விழி பள்ளிக்கூடத்திற்கு வந்தாள், அவள் அந்த சுகந்தி பேசுவதை கேட்டு ஆத்திரம் அடைந்தாள். அவள் மீது பாய்ந்து சரமாரியாக சொற்போரில் இறங்கினாள். இது கடைசியில் கைகலப்பில் முடிந்தது. இதை செல்வம் எதிர்பார்க்கவில்லை.
அடுத்த நாள் அந்த ஜாதி கட்சிகாரரின் வீட்டில் கரெஸ்பாண்டெண்ட், முதல்வர், செல்வம், செல்வத்தின் மனைவி, சுகந்தி அனைவரும் வரவழைக்கப்பட்டனர். வீடே மயான அமைதியாய் இருந்த்து. மலர்விழி தன் விழி கனைகளை சுகந்தி மேல் தொடுக்காமல் மட்டும் விடவில்லை. அந்த ஜாதி கட்சி தலைவர் வந்தார். பஞ்சாயத்து நடந்தது, அந்த ஜாதி கட்சி தலைவர் வந்தனாவின் சிறு வயது தோழனாவான். "சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து பல இன்னல்களுக்கு ஆளாகி இப்போது ஜாதி கட்சி தலைவராக இருக்கிறேன்" என்றார். பூகம்பம் போல் வெடிக்கும் என்று இருந்த பிரச்சனை புஷ்வாணம் ஆகி விட்டது.
ஸ்போர்ட்ஸ் டே வந்தது , செல்வத்தின் மேற்பார்வையில் மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நன்றாக முடிந்தது. குழந்தைகள் சுட்டி தனம் செய்வதும் செல்வம் மற்றும் சிலபல ஆசிரியர்கள் அவர்களை சமாளிப்பதும் பார்த்து மலர்விழி வயிறு குலுங்க சிரித்தாள். இரவு நேரத்தில் செல்வம் சஸ்பென்சாக ஒரு மாபெரும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். டின்னர் அங்கே முடித்துவிட்டு வீடு திரும்பினார்கள். அவர்gal உறங்க சென்றனர். காலை சூரியன் உதித்தது, மலர்விழி உறக்கம் கலையவில்லை. செல்வம் வழக்கம் போல் காலை வாக்கிங் சென்று வந்தான். வாசல் கதவில் சொருகி இருந்த பால் பாக்கெட் மற்றும் நியூஸ் பேப்பர் எடுத்து உள்ளே நுழைந்தான்.
உள்ளே ரூமில் இருந்து “அம்மா ” என்று அலறல் சத்தம் கேட்டது …

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top