Thiru.Selvam-Part-3

#1
குருவே சரணம்​

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழிக்கு 11.௦௦ மணி அளவில் தீடிரென்று பிரசவ வேதனை வந்தது . அருகில் இருந்த சில பெண்கள் அவளை அம்பாசடர் காரில் ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு வந்தனர் .போன் வந்த நேரத்தில் செல்வம் பதறி அடித்து ஓடி வந்தான் , மதிய உணவு நேரம் வந்ததும் கருப்பும் வந்தான் . வியர்வை வழிய வழிய வார்டின் அருகிலேயே இங்கும் அங்குமாக நடந்து கொண்டு இருந்தான் . நர்ஸ் ஒருவர் அருகில் வந்து ஃபார்ம் ஒன்றில் சைன் வாங்கி கொண்டு சென்றார் , அப்படியே டிஷ்யூ பேப்பர் ஒன்று கொடுத்து வியர்வையை துடைக்க சொன்னாள் . சரியாக ஒரு மணி அளவில் , “கங்கிராஜுலேஷன் !!!, பாய் பேபி வாஸ் பார்ன் ” என்ற சத்தம் அருகில் ஒரு ஸ்பீக்கரில் இருந்து ஒலித்தது . திடுக்கிட்டு திரும்பினான் , அந்த ஒலி கேட்டதும் , அவனால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை , கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் நிரம்பியது . வார்டில் இருந்து வெளியில் வரும் டாக்டரிடம் ஓடி வந்து, அவன் “மனைவியை பார்க்கலாமா என்றான் ”, டாக்டர் ஒரு மணி நேரம் கழித்து தான் பார்க்க முடியும் என்று கூறி குழந்தையை அவனிடம் கொடுத்தார் . அவன் அந்த குழந்தையை வாங்கி கொண்டான் , அவனது குழந்தையை பார்க்கும் போது அவனுக்கு ஒரு கண நேரம் அவனது தந்தை ஞாபகம் வந்தது .
சிறிது நேரத்தில் மயக்கம் தெளியவே , செல்வம் மலர்விழியின் அருகில் சென்று அமர்ந்தான் . இது தான் நேரம் என்று அவள் தனது தந்தை மற்றும் மாமனார் மாமியாரை அழைக்கும்படி கூறினாள் . அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது நண்பன் மூலமாக போன் போட்டு அனைவரையும் வரும்படி கூறினான் .
அன்று கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரமென்பதால் , குன்னக்குடியில் முருகன் கோவிலில் கோலாகலமாக இருந்தது . அன்றைய தினம் குன்னக்குடி வைத்தியநாதன் தனது சொந்த ஊரில் முருகன் கோவிலில் கச்சேரி செய்து கொண்டு இருந்தார் . வீட்டிற்கு வந்தவளுக்கு பேரானந்தம் , தனது கணவன் காளையனுக்கு தெரியப்படுத்தினாள் , அவனுக்கும் சந்தோஷமாக இருந்தது ஆனாலும் சிறிது நேரத்தில் வருத்தம் சூழுந்து கொண்டது . தமது உறவினர் படை சூழ வேனில் சென்னைக்கு புறப்பட்டனர் .
பெற்றோர் இருவரும் வந்த போதிலும், செல்வம் காளையனோடு முகம் கொடுத்து பேசவில்லை. பேர குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் காளையன் அதை மறந்துவிட்டான், சிறிது நாட்கள் சென்னையிலேயே தங்கினார்கள். ஊருக்கு திரும்பி போக தயாரானார்கள். அதுவரை சந்தோஷமாக இருந்த மலர்விழியின் முகம் வாடியது . இதை நன்றாகவே கவனித்தார் மலர்விழியின் தந்தை . செல்வத்தின் அருகில் சென்று கனிவுடன் – “ அவள் தாயில்லா பொண்ணு , இந்த கொஞ்ச நாளா தான் சந்தோஷத்தை நான் பார்க்குறேன் , நல்லா பாத்துக்கங்க .”
வீட்டிலிருந்த அனைவரும் சென்ற பிறகு வீடு வெறிச்சோடி காணப்பட்டது , மலர்விழியின் முகம் வாடி இருந்ததை கண்கூட பார்த்தான் செல்வம் . குழந்தை அழுது கொண்டு இருந்தது , அது கூட தெரியாமல் இருந்தாள் . அறையினுள் சென்ற செல்வம் சிறிது நேரம் யோசித்துவிட்டு தனது நண்பனுக்கு மீண்டும் போன் செய்து அம்மாவையும் அப்பாவையும் வர சொன்னான். இரண்டு நாட்களில் மீண்டும் திரும்பி வந்தனர் . இருவருக்கும் ஏக குஷி , ஆனாலும் செல்வம் முகம் குடுத்து தந்தையிடம் பேசுவதில்லை .
இப்படியே நாட்கள் கடந்தன , செல்வத்தின் மகன் அருண் என்கிற முருகன், நாளொரு மேனியும், பொழுதொரு வன்னமுமாக வளர்ந்தான். தன் பேர குழந்தையுடன் விளையாடும் காளையனால், தன் மகனின் மனதை ஈர்க்க முடியவில்லை. செல்வம் வேலைக்கு செல்வதும் , ட்யூஷன் எடுப்பதும் , மேலே படிப்பதும் என பிஸி ஆக இருந்தான் . அவனிடத்து தந்தை ஆவலாக கண் முன்னே வந்து நின்றாலும் , முகம் குடுத்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை . இது காளையனுக்கு வேதனையாகவே இருந்தது , அம்மாவுக்கும் கண்ணீர் வரும் , மனைவி யாருக்காக பேசுவது என்று தெரியாமல் தவிப்பாள் . இன்றைக்கு மாறுவான் , நாளைக்கு மாறுவான் என்று நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம் . காளையன் மனவேதனையில் உச்ச கட்டத்தில் , மொட்டை மாடியில் நிலவை பார்த்து கொண்டே உறங்கினர் . காலையில் எழுந்ததும் , காளையன் உறங்கி கொண்டு இருப்பதை பார்த்த செல்வத்திற்கு தான் முதலில் சந்தேகம் வந்தது , அருகில் வந்தான் , அன்று தான் செல்வத்தின் மனம் சற்று இளகியது , அவனது மனம் மாறி என்ன பயன் , வருத்தத்திலேயே காளையன் உறங்கும் போதே இறந்தும் போனார் . அதிர்ச்சியில் என்ன பேசுவது , என்ன செய்வதென்று தெரியாமல் நினைவு இழந்து போனான் .
சிறிது நேரத்தில் கருப்பு வந்து எல்லா காரியங்களும் முடிக்க உதவினான் , யார் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் என்றும் தெரியவில்லை . அவனை தேற்றிவிட்டு தாளாளரும் , அவரது தாயும் சென்றார்கள் , அடுத்தது முதல்வர் வந்தார் , ஒருவர் பின்பு ஒருவராக வந்தார்கள் . ஒருவார காலத்திற்கு பிறகு செல்வம் நினைவு சரியாகவே இல்லை . இது செல்வத்தின் தாய்க்கும் , மலர்விழிக்கும் வருத்தத்தை கொடுத்தது . ஒவ்வொரு முறையும் தனது தந்தையை பார்க்கும்போது செல்வத்துக்கு அந்த பயங்கர இறப்புதான் ஞாபகம் வந்தது , அதனால் செல்வத்தால் தந்தையிடம் பேச முடியவில்லை .
காளையன் , செல்வம் தன் மேல் வைத்திருந்த கோபம் காரணமாக எல்லா சொத்துக்களையும் தனது மனைவியும் , அவளுக்கு பிறகு பேரன் பேரில் எழுதி வைத்து இருந்தார் . செல்வத்திற்க்கும் அந்த சொத்தின் மேல் ஆர்வமும் இல்லை . காளையன் மனைவிக்கோ , கண்ணில் இருந்து நீர் தான் வந்தது . அந்த சொத்து மாற்றும் ரிஜிஸ்டர் பேப்பர்ல கை நாட்டு வைக்க கூட அவர்களால் முடியவில்லை . ஒரு பெண்ணிற்கு தாலியை விட இந்த சொத்து பெரிதாகி விடுமா என்ன .
செல்வத்தின் அம்மா ஈசி சேர் ஒன்றில் சாய்ந்து இருந்தாள் , திடீரென்று அவருக்கு காளையன் கூறியது நினைவு வந்தது , அதாவது ஊருக்கு வரும் முன்னர் ஜோசியர் ஒருவரிடம் சென்று இருந்தார் காளையன் , ஆஞ்சநேய பக்தரான ஜோசியர் உண்மையான பண்டிதராகவே இருந்தார் , அவர் அனைவரின் ஜாதக கட்டங்களையும் பார்த்து விட்டு , “உங்கள் நால்வரின் ஜாதகங்களை பார்த்தாலும் குலதெய்வ வழிபாடு தவறியதன் காரணம் தான் தென்படுகிறது , அது மட்டும் இல்லாமல் உங்கள் வம்சத்தில் வந்த முன்னோர்கள் பெற்ற சாபமும் 5 தலைமுறையாக மாறி மாறி வருகிறது , அதாவது குறிப்பிட்ட காலம் வரை உங்களை ஒரு தீய சக்தி ஒன்று குல தெய்வ வழிபாடு செய்ய விடாமல் தடுக்கிறது , உங்கள் கண்களை மறைத்து விட்டது , இது தான் குடும்பத்திற்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வருவதற்கு காரணம் , ஆனால் கவலை பட தேவை இல்லை உங்கள் பேரனின் ஜாதகமானது உங்கள் குடும்பத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு போய் சேர்க்கும் . இந்த வருடம் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும் …ஜெய் ஆஞ்சநேய ” என்று ஜோசியர் கூறியதை மலர்விழியிடம் நினைவு கூறினார் .
செல்வம் வீட்டிற்கு வந்தவுடன் , மலர்விழி சாமர்த்தியமாக பேசி அவன் சம்மதத்தை பெற்றாள் . அவ்வாரே ஒரு வாடகை கார் புக் செய்து அனைவரும் குலதெய்வ வழிபாடு செய்ய "சொறி முத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர் . போகும் வழியில் பலத்த காற்று வீச தொடங்கியது . கார்மேகம் சூழ ஆரம்பித்தது . அவர்கள் அநேகமாக சென்னையில் இருந்து இப்பொழுது மதுரை பை பாஸ் சாலையில் சென்று கொண்டு இருப்பார்கள் . யாரும் எதிர்பாராத வண்ணமாக இருபத்தைந்து கார்கள் அவர்களை பின் தொடர்ந்தது .
பேரிடி ஒன்று இடித்தது. போகும் வழியில் ஒரு பெரிய மர கிளை ஒன்று கீழே விழுந்தது , பின் தொடர்ந்து சென்றவர்கள் கார்களை நிறுத்தினர் , அந்த மர கிளையை எடுக்க முயற்சித்தனர் . அதில் கருப்பு நிற அம்பாசடர் காரில் இருந்து கருப்பு நிற சட்டையும் கருப்பு நிற வேட்டியும் , கருப்பு நிற குளிங் கிளாஸ்சும் கையில் அந்த காலத்து காஸ்ட்லி பைப் சிகரெட்டுடன் கார் கதவை திறந்து வெளியே இறங்கி வந்தான் "காளி" என்கிற "காளிங்கராயன்".
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement