Saththamindri Muththamidu Final 3

Advertisement

Manimegalai

Well-Known Member
அம்மா தவறிய காரணமாக இன்றுதான் படிக்க முடிந்தது. ஒரு அழகான மனதில் என்றும் நிலைத்து நிற்கும் கதையை கொடுப்பதில் மல்லிகா உனக்கு நிகர் யாருமில்லை என்று நிருபித்து விட்டாயே. திருவுக்கு தந்தை கணவனின் கடமையை புரிய வைத்து ஒரு வெற்றி பெற்ற பிஸினஸ் ஆளாக காண்பித்த உன் நடையின் அமைப்பு அளவிட முடியாதது. துளசி கதாபாத்திரம் கருத்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை. நமது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை போல அமைந்துள்ளது. இந்தக் கதையை கொடுத்த மல்லி உனக்கு பலபல நன்றிகள்.
மிகவும் வருத்தமான சூழ்நிலை.
Take care சகோதரி..
 

emilypeter

Well-Known Member
very sorry emily, take care. a loss which cant be compensated by anything or anyone
very sorry emily, take care. a loss which cant be compensated by anything or anyone
very sorry emily, take care. a loss which cant be compensated by anything or anyone
Thank you ma. Kashtathilum than makkalukku pasiariya unavum, arivu valara kalvium kodutha (95vayathanalum) thayai ilantha varutham thanga mudiyathathu ondru than.
 

emilypeter

Well-Known Member
அடக்கடவுளே?
இப்படியாகி விட்டதே,
Emilypeter மேடம்
உங்களுடைய அம்மா இறந்ததற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மேடம்
எத்தனை வயதானாலும்,
அம்மா, அம்மா-தான்
எப்பொழுதும் அம்மாவின்
இழப்பை ஈடு செய்யவே
முடியாது, Emilypeter மேடம்
Your statement apsalutely correct
 

Seethavelu

Well-Known Member
அய்யோ........ நானா........... no chance..........

Yes...... எப்பவும் நினைக்கிறது தான்........ பெண் பிள்ளைகள் இருக்கும் எல்லா வீட்டிலும் இருப்பது தான்.......
திரு "என் பொண்ணு வீணா போய்டுவானு" சொல்லுவதற்காக...... பொண்டாட்டி???

வந்தாச்சு........ இது வந்து 7th ஜூன் ஊருக்கு போறதுக்கு முன்னே ரெடி பண்ணியாச்சு......... but epi அதிகமானதால் கொஞ்சம் extra fitting & editing......
அப்போ கூட மீனா-குட்டி திரு மிஸ் பண்ணிட்டேன்.........
மீனு குட்டி திருவை அக்கறையா பார்த்துக்கும் போது துளசி-குட்டி மீனு தான் ஞாபகம் வந்தாங்க.........

சோடா வாங்குவதில்லை...... எங்க ஊரு நன்னாரி சர்பத் & Chips தர்றேன்..... வீட்டுக்கு வாங்க.....

எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் friends..........
Thanks for your comments and compliments...........


நான் SJM-க்கு பிறகு ரொம்ப ரொம்ப ரசித்து படித்த கதை.........
மல்லியோட எல்லா கதையிலும் (except OVP) கல்யாணம் பண்ணுறதுக்கு தான் ஹீரோ தலை கீழா நிற்பான்.......... கல்யாணத்துக்கு அப்புறமும் கூட.......
ஆனா இதில் family-யோட entry........ so அந்த atmosphere-ல அப்படியே மூழ்கியாச்சு......

நிறைய பேர் நினைப்பாங்க......... இவளுக்கு short-ஆவே எழுத தெரியாதுன்னு...... May be..... my profession effect.......... (அதான் college-ல விளக்கி விளக்கி........ சொல்லி சொல்லி........... ஆனாலும் எங்க மண்டையில ஏறுது.........)
என்னோட Ph.D. supervisor only trained me how to write letters and other articles........
நாம எழுதுற எழுத்து எல்லாத்தையும் convene பண்ணனும்......... Should be self explanatory...... good formatting......
Whether I am writing in தமிழ் or English, still I am following his words.......

அடுத்து இப்படி என்ன எழுத வைத்த பெருமை மல்லிக்கே...........:D
பயப்படாதீங்க........... நாவல் எழுத மாட்டேன்.........

Thank you so much friends.........:D:D:D

next EAN-ல meet பண்ணலாம்.........:cool:
super
ரொம்ப பிடித்தது........ ரசித்தது.......... கடுப்பேற்றியது..........

பாட்டி-பேத்தி........:mad::cool:
என்ன இது சத்தமா சிரிக்கிற பழக்கம் பொம்பள பிள்ளைக்கு..........
அது கிடக்குதும்மா old lady...
இப்ப்டி இருந்த உறவு
துளசி தான் திருவின் உலகம் என்று தெரிந்து தன்னையே மாற்றி கொள்ளும் அகில்........
பேய்க்கதை சொல்ல போறேன்..... ஒரு பேயே பேய் கதை சொல்கிறதே...........
அடித்த அப்பாவை பாட்டி தள்ளியதாக அம்மாவிடம் சொல்லுமிடம்........
அம்மாவை அதட்டும் பாட்டியை அதட்டுமிடம்........
உங்கப்பாவை கொஞ்சுவாங்களா??? எங்கம்மா கொஞ்சிக்குவாங்க.........
உங்கப்பா முகத்துல தாடி தான் இருக்கு........
என்னை நல்லா பார்த்துப்பானு அவளோட சரியாகிவிட்டேன்......

மீனு-சித்தப்பா.........:D:D:D
தூக்கி கொஞ்சுறது.....
சித்தி பாட்டியை கலாய்க்கிறது..........
வளைகாப்பு போட்டோ scenes
2/4 wheeler driving பற்றி புலம்புறது.......
Me recalling those days........... ever loving & everlasting memories.........

திரு-ராதா-வெங்கி.........:D:D:D
ரொம்ப attachment.......
எத்தனை உறவு வந்தாலும் இந்த உறவு எப்போவும் தனி தான்........
அதுவும் திரு வெங்கி.......... Awesome.....
வண்டி ஓட்ட கத்துக்குடுத்தா எப்பப்போ தோணுதோ அப்பெல்லாம் கூப்பிட்டு திட்டுவான்.....:D
முறைச்சுகிட்டே romance பண்ணுற......:p

வெங்கி கூஜா தூக்கும் moments.........:p:p:p
நீங்க என் எப்பவும் இவங்ககிட்டேயே என்ன செய்யணும்னு கேட்கிறீங்க............. சோபனா கிட்ட கேட்கிறதில்லை........
எல்லோரும் இருக்கிறாங்க............ நீ தூங்குற.......... உன்னை அப்புறம் தாளிச்சு எடுப்பாங்க..........
ஒரு கணவனான மனைவியை சரியாக்க தெரிந்தவன்......
சோபனாக்கும் வாழ்க்கையை கற்று கொடுத்தவன்......

திரு cousin Bros MV........:p:p:p
அவர் பைத்தியக்காரர்........ இவ்வளவு அழகான பொண்டாட்டி இருக்கும் போது வீட்டுக்கு வராம மில்லுல இருக்கார்........

திரு attack.......o_Oo_Oo_O
உங்களை எல்லாம் பார்த்து என் பொண்ணும் வீணா போய்டுவா போல............:eek::eek::eek:

திரு-துளசி.......:mad:.:p:p:p
கடுப்பேற்றும் பல/சிரிக்க வைக்கும் சில scenes இருந்தாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது..........
மசால் வடை வச்சி எலியை பொறிக்குள் சிக்க வைப்பது போல் தண்ணி வேணும்-னு சத்தமா கேட்டு துளசி தண்ணியோட வந்ததும் கதைவடைக்கும் scene..........
அதான் துளசியின் காலையை திருநீர்வண்ணமயமாக்கிய நாள்......:D

துளசி........:cool::cool::cool:
திரு என்ற ஒற்றை வார்த்தையே அவளை வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வைக்கும்.........
காதல் அது இளம் பெண்களுக்கு தான் வரும் என்று யார் சொன்னது............ பெண்களுக்கு அதனை கடந்து வாழும் போதும், அதனையும் விட வாழ்ந்து முடிக்கும் போதும் இருப்பது தான் அதீதம்......... real words.......
கடை வரைக்கும் குதிக்க தான் வச்சீங்க......:D

திரு மீசை.........:p:p:p
இந்த மீசை பட்ட பாடு........

திருவின் சந்நியாசம்........:p:p:p
"Site அடிக்கிறா....... ஆனா கொஞ்சமாட்டா இவ .......... இவ கொஞ்சாம நான் இனி இவ பக்கத்துல போகவே மாட்டேன்........ சந்நியாசம் வாங்கற நிலைமை வந்தாலும் சரி.......... பார்ப்போம் இவளா நானான்னு.............. steady-யா இருக்கணும் திரு......... அவ பக்கத்துல நீ போயி நாலு மாசம் ஆச்சு......... தடுமாறிடாதே......... சொல்லியும் அவ உன் பக்கத்துல கூட வரலை.........." Epi 18..........
மல்லி எப்போவும் நமக்கு bulb குடுப்பாங்க...........
இப்போ terror திருவுக்கே..........

துளசி's third law proposed by திரு........;););)
"நீ என் பக்கத்துல வரவேண்டாம்........ கொஞ்ச வேண்டாம்......... எதுவும் வேண்டாம்.......... எப்பவும் போல இரு....... எப்போவாவது வா........... இல்லைனா கூட ஒண்ணுமில்லை... நானே வர்றேன்..... நானே உன்னை கொஞ்சுக்குவேன்........." Epi 20/2

இதோடு...........
துளசியால் திருவை பிடித்து வைக்க முடியும்னு நம்புன ஒரே ஜீவன் மேகநாதன்........

வெகு யதார்த்தமான துளசி குடும்பம்........ அப்பா அம்மா..... பிரசன்னா....... மீரா......
தகுதிக்கு மீறி பொண்ணு கொடுத்தால் என்னாகும் என்பதற்கான எடுத்துக்காட்டு.......

இன்னமும் பணத்தையே மதிக்கும் நாதன் சகோதரர்கள்........
பணத்துக்கும் மேல படிப்பு அழகுன்னு விழும் நிரு-மேகலா........

எல்லாத்தையும் சொல்லி திரு அத்தைகள் சொல்லலைனா அதுக்கும் துளசியை தான் காரணம் சொல்வாங்க........... பஞ்சாயத்து வைப்பாங்க.........
எனக்கு பிடிக்காத characters ரெண்டு இந்த கதையில்........
தன்னோட அண்ணன் வீடுன்னு இத்தனை உரிமை எடுக்கும் இவர்கள் அவங்க husband தங்கைகளுக்கும் இதே உரிமை கொடுக்கிறார்களா???

மொத்தத்தில்.........:cool::cool::cool:
ஒரு பெரிய family environment........... மிகவும் ரசித்தேன்..........

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்........... திரு-வெங்கி.......
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்........... திரு-நாகேந்திரன்........ திரு-தருண்.......

எப்பவும் 10000வாலா heroine பார்த்து விட்டு பேசாமலே சாதித்த துளசி பார்த்து சிரிப்பு தான் வருது.....

குழந்தை குட்டியோடு சந்தோஷமான திருவை பார்த்த சந்தோசம்....
என்னமோ நம் வீட்டில் நடந்தது போல....

Book எப்போ வருதுன்னு inform பண்ணுங்க......
all ur comments r very nice:)
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப ரொம்பவே, அருமையான
நாவல், இந்த "சத்தமின்றி முத்தமிடு"
நாவல், மல்லிகா செல்லம்
எனக்கு ரொம்பவும் பிடித்த
நாவலும் கூட, மல்லிகா டியர்

படிக்கிற வயசுல ஷெரினாவுக்கும் திருநீர்வண்ணனுக்கும்,
இந்த பாழாப்போன லவ்,
பொருத்தமற்ற காதல் வந்து
தொலைச்சிருக்க வேண்டாம்
(பொருத்தமற்ற லவ்-ன்னு,
நான் சொல்லலை-ப்பா,
மேகநாதன்-தான் நினைத்தார்)

பெருமாளின் தீவிர பக்தரான,
கோவிலில் தர்மகர்த்தா
பொறுப்பு வகிக்கும்,
இரண்டு தம்பி, இரண்டு
தங்கைகள்-ன்னு, பெரிய
குடும்பஸ்தரான மேகநாதனால்
மற்றவர்களுக்கு, முன்னுதாரணமாய்
இருக்க வேண்டிய தன் மூத்த
பையனின், இந்த இனம் விட்டு
இனம் கொண்ட காதலை
ஏற்றுக்கொள்ள முடியாமல்
காதலர்களை பிரித்து விட்டார்
அதுவும் வில்லத்தனமாக?
காதலியையும் அவளோட
அப்பா, தம்பியையும் கடத்தி,
தன் பேச்சைக் கேட்காவிட்டால்
இன்னும் வில்லத்தனம்
செய்வேன்-னு, பையனை மிரட்டி
தன்னோட இனத்திலேயே
தன்னோட ஜாதியைச் சேர்ந்த,
தன் வீட்டு வேலைக்காரனின்
மகளான,
மகனின் காதலியை விட
அழகியான,
வறுமையிலும் ஒளி வீசும்
வைரமான,
குணத்தில் கோடீஸ்வரியான
துளசியை,
மகனுக்கு கல்யாணம்
செய்து வைக்கிறார்

ஆனால் தன்னோட காதலைக்
கெடுத்து இஷ்டமில்லாத
பெண்ணை தனக்கு கல்யாணம்
செய்து வைத்த தந்தையிடம்,
ஒரு மகனால், 13 வருடங்கள்
பேசாமல் இருக்க முடியுமா?
திருநீர்வண்ணனால் மட்டுமே
முடிந்தது

தந்தைக்கு அடங்கிய மகனாக
நல்ல பெயர் எடுத்த திரு டியர்
தான், தொட்டு தாலி கட்டிய
மனைவியை, ஒரு கணவனாக
கண்டுகொள்ளவில்லை
மனைவி-ங்கிற, அவளுக்குரிய
மரியாதையை கொடுக்கவில்லை
ஏன்னா, என்னோட லவ்வை
சொல்லியும் பணம், மற்ற
வசதிகளுக்காகத்தானே
நான் கேட்டும், திருமணத்தை
நிறுத்தாமல் என்னை
கல்யாணம் செய்த
துளசியை, நான் ஏன்
மனைவியாக மதிக்கணும்?
கூடாது-ங்கிற எண்ணம்,
திருவிற்கு, மல்லிகா டியர்
 
Last edited:

rifa

Active Member
Wow,really superb.1st half thulsi role kanla kanneere wandadu,iyalba kanawanidam edir parpuhal,theyana timla thewayanadu kidaikkama pirahu adai wida kududalaha kidaithalum mana adai etkadu,satham indri oru alahi kadal illathai katti witteerhal mam.nice
 

narayana

New Member
Madam, you write and characterise persons so naturally it is really good. Sometimes I read your novels again just like that. You have brought the changes in thiru and how his acceptance and regard for his wife thulasi when explicitly expresses changes the way his own parents and brother treats her. very nice and so true. Thulasi confidence after thiru's change brought out very nicely. How ladies depend emotionally on others? thankyou for a nice story. I think I have read almost all .your books. Enjoyed reading.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top