Salasalakkum Maniyosai - final

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
hi @Kani-hema :)

வட்டார வழக்கு மொழி தான் படிக்கவே தூண்டியது
எனக்கு இது போல் பல தமிழ் வழக்கு படிக்க மிகவும் பிடிக்கும்
அதுவும் நீங்கள் அதை கதை முழுவதும் ஒருபக்கம் வட்டார வழக்கும்
இன்னொருபக்கம் நாம் பேசும் மொழி நடையும் கலந்து
பேச்சில் கொண்டுவந்தது மிக அருமை திறமை
போக போக கதையும் என்னை ஈர்த்தது
ஒரு நடைமுறை வாழ்க்கையில் யதார்த்தத்தை உணர்ந்து தன் வாழ்வை வெற்றிகரமாய் கொண்டு செல்லும் தம்பதியின் குணங்களும் அதன் போகும்

கண்மணி கேரக்டர் ஒரு பாஸிட்டிவ் கேரக்டர் தன்னை குறையாக உணராதவள் மிகைப்படுத்தி கொள்ளாதவள் நடைமுறை வாழ்க்கையின் யாதார்த்தை அர்த்தத்தை உணர்த்துபவளாய்

கார்த்திக் தனக்கு என்ன வேணும் என்று உணர்ந்து வாழ்பவன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பவன்

படிக்காத தனக்கு டாக்டர் கணவன் வாய்ததை அலட்டி கொள்ளாமல் அவள் கடைசிவரை வாழும் பாங்கு செம
அதுவும் வாழ்வில் காதலும் ஒரு அம்சம் அது பின்னி பிணைந்து இருக்க வழிமுறைகளை கையாண்டு கொண்டு போனவிதம் நல்ல இருந்தது.
அவளின் உறவினர்களாக வருபவர்கலின் அன்பும் அரவணைப்பும் யாதர்த்தமும் கிராமத்தின் கலாசாரத்தை விடாமல் காட்டியதும் நல்ல இருந்தது
வேண்டாத மருமகள் நின்ன குத்தம் உட்காந்தா குத்தம் என்று மகாதேவியின் அலட்டல்களை அனாசியமாய் சமாளிக்கிறாள்
தன் கணவனின் தாய் என்ற மரியாதையையும் அன்பையும் கடைசி வரை விடாமல் பாதுகாத்து

இந்த கதையின் மிக சூப்பர் கேரக்டர் மணிகண்டன் தன் மனைவியால் வாழ்வே ஆட்டம் கண்டாலும் கடைசிவரை தன் மனைவி மேல் வைத்த காதலையும் பாசத்தையும் கடமையும் கைவிடாமல் இருப்பது

கதையின் ஸ்பெஷல் கேரக்டர் அதீத நெகடிவ் அப்ரொசோடு எல்லோரையும் பார்கும் மகா இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் இருக்கலாம் மாறமாட்டேன் என்று குற்றஉணர்வும் வேணாம் குறுகிபோயிம் நிற்கவேணாம் என்று இருப்பவர்கள் தான் செய்யும் நல்லவையை கூட தன் நெகடிவால் மறைத்து கொள்ள விழைபவர்கள் ஏனென்றால் திருந்திட்டேன் என்று பறை சாற்றி கொள்வது மிக பெரிய வலி கொடுக்கும் மரணம் வரை தன் இயல்பை துலைப்பது எதையும் கொட்டி கொட்டி கொடுத்தாலும் இழப்போடு வாழ்வது

உறவுகள் என்பது பலம் என்ற பாசிட்டிவ் அப்ரோச்சோட கதை நகர்ந்த விதம் நல்ல இருந்தது கதை ஒரே விஷயத்தை சுற்றி வந்தாலும் இன்டெரெஸ்டிங்கா கொண்டு போனது பேச்சு நடை வாழ்த்துக்கள்:love:

ஹாய் மலர்

மிக அருமையான ஆழமான விமர்சனம். :)

முதல்ல இதுக்கு நான் நன்றி சொல்லிக்கறேன் :) நன்றி நன்றி :)

வட்டார வழக்கு மொழி படிக்க தூண்டியதுன்னு சொன்னீங்க. நன்றி :) ஆனா உண்மையில் இதை ஆரம்பிக்கும் போது ரொம்பவே கடினமா இருந்தது. இந்த மொழியை சரியா கொண்டுவரனுமேன்னு நிறையவே மெனக்கெடல். :)

இன்னொன்னு என்னால இது முடியுமான்னு. என் மேல நம்பிக்கை இல்லைன்றது தான் உண்மை. சரி முயற்சி செஞ்சு பார்ப்போமேன்னு தான் ஆரம்பிச்சேன். எல்லாருமே இதை அழகா ஏத்துக்கிட்டீங்க.


உங்க விமர்சனத்தில் எல்லாரோட கதாப்பாத்திரத்தையுமே ரொம்ப அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க.

மகாதேவிகள் மாறினா உண்மையில் அவங்க செய்யற ஒவ்வொரு நல்லதையும் கூட வேறு கோணத்தில் பார்த்திடுவாங்களோன்ற பயத்திலேயே மீதி காலத்தை கழிக்க வேண்டியதாகிடும்.

திரும்பவும் நன்றிகள் மலர்.

தாமதமா பதில் சொல்லியிருக்கேனே தவிர உங்க விமர்சனம் அப்படி ஒரு நிறைவு தருது. நன்றி :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
wow இந்த மொழிநடை ரசிச்சு படிச்சேன்பா...அருமையா எழுதிருக்கீங்க. மணியோசைய மிஸ் பன்னுவேன்.
நன்றி karthaka :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
மகாதேவி எல்லாம் மனம் திருந்தியிருந்தால் தான் நான் அதிர்ச்சியில் ஒருவேளை மூச்சடைத்து போயிருப்பேன் ஹேமா...அதெல்லாம் திருந்தாத கேஸு. அதோட பவுசை அதே கட்டிகிட்டி அழட்டும். நாம அந்த அம்மா பக்கமே போக வேண்டாம்.

அருமையான கணவன்,மனைவி, கார்த்திக்- கண்மணி ஜோடி ...
கண்மணியின் கிராமத்து பேச்சு அழகு, தன் டாக்டர் கணவனையே அவ கூறு கெட்ட மனுஷன் னு சொல்லுறதும் அதை அவன் ரசிப்பதும் கூட அழகோ அழகு...
கண்மணியை விரும்பி கல்யாணம் செய்த கார்த்திக் அவளை கண்ணின் மணியாய் போற்றி பாதுகாத்தது இன்னும் அழகு...
கண்மணியின் பிறந்த வீட்டு சொந்தங்களின் வெள்ளை மனது அழகோ அழகு...

சலசலக்கும் மணியோசை நீண்ட நாட்கள் எங்கள் மனதில் இனிமையான நாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ஹேமா.

நன்றி சுவிதா :)

ஆமாமா நீங்க சொல்றது சரிதான். மகாதேவி பவுசு மகாதேவிக்கிட்டையே இருக்கட்டும் :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை உறவுகளின் அன்பு பாசம் சூப்பராக எழுதி உள்ளீர்கள். மகாதேவி கெத்து என்றுமே மாறாது!!! கதையின் உள்ள கேரக்டர் எல்லாமே நம்ம பக்கத்துல உள்ளமாதிரி ஓர் உணர்வு ஏற்பட்டது. கண்மணி, கார்த்திக் காதல் என்றுமே குறையாது. கிங்கிணியை இனிமேல் படிக்கமுடியாதா:cry:

நன்றி வசந்தி :)

இனிமே அஷ்மியை படிக்கலாமே :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top